2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து கொள்ள அனுமதி

 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வுகள் நடத்துதல் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டன. 

ஈகைப் பெருநாளை முன்னிட்டு பள்ளித் தேர்வுகளின் தேதியை மாற்றி அமைக்கக் கோரி பார்வை ( 3 ல் கண்டுள்ளபடி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களால் அரசுக்கு கோரிக்கைகள் வழங்கப்பட்டு உள்ளது.


 அதன்படி , தேர்வு கால அட்டவணையில் பின்வருமாறு மாற்றம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

பார்வை ( 1 ) யில் காணும் தேர்வு கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்ட 4 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளை 104.2024 மற்றும் 12.04.2024 ஆகிய தேதிகளுக்கு பதிலாக 04.04.2024 மற்றும் 06.04.2024 ஆகிய தேதிகளில் பள்ளி அளவிலேயே நடத்திக் கொள்ள சம்பந்தப்பட்ட உருது பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கிட சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் உரிய அறிவுரைகள் வழங்குமாறு சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (TAB) - வழங்குவது சார்ந்த DEE செயல்முறைகள்

 IMG_20240328_195339

அனைத்து அரசு/ நகராட்சி/ ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (TAB)...


மூன்று சுற்றுகளாக சார்ந்த அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) மூலமாக வழங்கப்பட உள்ளது... 


DEO (DEE) -களுக்கு இயக்குநர் (DEE) செயல்முறைகள்....

 TAB for dee teachers - Proceedings - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழ் பாட வினாத்தாள் எளிது

 1222016

பத்தாம் வகுப்புக்கான தமிழ் பாடத்தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட்டு நிறைவடைந்தது.


இதையடுத்து 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,107 தேர்வு மையங்களில் 9.08 லட்சம் மாணவர்கள் எழுதவிருந்தனர். இவர்களில் 16,314 பள்ளி மாணவர்கள், 1,319 தனித் தேர்வர்கள் என மொத்தம் 17,633 பேர் நேற்று தேர்வெழுத வரவில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.


இதேபோல், சென்னை மாவட்டத்தில் மட்டும் 288 மையங்களில் 66 ஆயிரம் பேர் வரை தேர்வில் கலந்து கொண்டனர். முன்னதாக தேர்வெழுத வந்த மாணவர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர தமிழ் பாடத்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு பெற்ற சுமார் 4,000 மொழி சிறுபான்மைமாணவர்கள் கன்னடம், மலையாளம் உட்பட போன்ற பிறமொழிகளில் தேர்வெழுதினர். இதற்கிடையே தமிழ் பாடத்தேர்வு வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



வினாத்தாளில் ஒன்று மற்றும் 5 மதிப்பெண் பகுதிகளில் தலா ஒரு வினா மட்டும் பாடப் பகுதிக்கு உள்ளிருந்து கேட்கப்பட்டன. மற்றபடி இத்தேர்வில் சராசரி மாணவர்கள்கூட நல்ல மதிப்பெண் பெற முடியும் என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


தொடர்ந்து 10-ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தேர்வு மார்ச் 28-ம் தேதி நடைபெற உள்ளது. ஏப்ரல் 8-ம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடைய உள்ளன. மே 10-ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.


வினாத்தாளில் எழுத்துப் பிழையால் மாணவர்கள் குழப்பம்


மதுரை: தமிழகத்தில் நேற்று தொடங்கிய தமிழ் மொழிப் பாடத் தேர்வுக்கான வினாத் தாளில் பகுதி 111-ல் பிரிவு 2-ல் எவையேனும் 2 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும் என்ற பகுதியில் 33-வது வினாவில், “நெடுநாளாகப் பார்க்க பண்ணியிருந்த உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வந்தால் அவரை விருந்தோம்பல் செய்வதைக் குறித்து எழுதுக” என்று வினா இருந்தது.


இதில் ‘எண்ணியிருந்த’ என்பதற்குப் பதிலாக தவறுதலாக ‘பண்ணியிருந்த’ என இருந்தது. இதனால் மாணவர்கள் தடுமாற்றம் அடைந்தனர். பின்னர் எழுத்துப்பிழை என்பதை அறிந்து விடையளித்துள்ளனர்.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கட்டாய கல்வி திட்டத்தில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 3-வது வாரத்தில் விண்ணப்பம்

 கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல் 3-வது வாரத்தில் தொடங்க உள்ளது.


இலவச கட்டாய கல்வி உரிமை (ஆர்டிஇ) சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் உள்ள 25 சதவீத இடங்களில், வறுமை நிலையில் உள்ள குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். அந்த வகையில், தமிழகம் முழுவதும் உள்ள 8,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது 1-ம் வகுப்பில் சேர்பவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணமின்றி இலவசமாக படிக்கலாம்.


தமிழகத்தில் 2013-ல் அமலான இந்த திட்டத்தின்கீழ் இதுவரை 4.60 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற்று படித்து வருகின்றனர். இவர்களுக்கான கல்விக் கட்டணமாக தமிழக அரசு சார்பில் தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் சராசரியாக ரூ.370 கோடி வழங்கப்படுகிறது.

இதற்கிடையே, வரும் கல்வி ஆண்டில் (2024-25) இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல் 3-வது வாரத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.


பொருளாதாரத்தில் நலிந்தவர்கள்: இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது: ஆர்டிஇ திட்டத்தின்கீழ் சிறுபான்மை பள்ளிகள் தவிர்த்து, மற்ற அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ பள்ளிகளிலும் இலவசமாக மாணவர் சேர்க்கை பெறமுடியும்.


வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம். வாய்ப்பு மறுக்கப்பட்டோர் பிரிவில் ஆதரவற்றவர்கள், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர், 3-ம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகள், துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோரது குழந்தைகளின் விண்ணப்பங்கள் குலுக்கல் நடத்தாமல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.


பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் வருமானம், இருப்பிடம், சாதிச் சான்றிதழ்களை சமர்ப்பிப்பது அவசியம். எனவே, சேர்க்கைக்கு தேவையான ஆவணங்களை முன்கூட்டியே தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தேர்தல் பணி விலக்கு கோருபவர்கள் உடல்நிலை ஆராய மருத்துவக்குழு

 

தேர்தல் பணி விலக்கு கோருபவர்கள் உடல்நிலை ஆராய மருத்துவக்குழு அமைக்கப்பட்டது - தேனி ஆட்சியர்...

IMG-20240327-WA0013

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை - அங்கன்வாடி குழந்தைகள் விவரம் - EMIS வலைதளத்தில் தலைமை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டிய பணிகள்...

 IMG_20240327_091959

தற்போது EMIS இணையதளத்தில் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் விவரங்கள் தலைமை ஆசிரியர் Individual Login ல் கொடுக்கப்பட்டுள்ளது...


முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை - அங்கன்வாடி குழந்தைகள் விவரம் - EMIS வலைதளத்தில் தலைமை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டிய பணிகள்...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

6th to 9 th Standard Annual Exam Time table & Instruction

 IMG_20240327_150822

2023-2024ஆம் கல்வியாண்டிற்கான உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 மற்றும் 7 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு மூன்றாம் பருத் தேர்வும் , 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்களுக்கு முழுஆண்டுத் தேர்வும் 02.04.2024 முதல் 12.04.2024 முடிய நடைபெறவுள்ள இத்தேர்வுகளுக்கான கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.


மேலும் , ஏற்கனவே நடைமுறையில் உள்ள வழிமுறைகள் மற்றும் கீழ்காணும் அறிவுரைகளை பின்பற்றி மூன்றாம் பருவத் தேர்வு மற்றும் முழுஆண்டுத் தேர்வினை எவ்வித புகார்களுக்கு இடமளிக்காமல் சிறப்பான முறையில் நடத்திட அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

 பொதுவான அறிவுரைகள் : -

 6th  to 9 th  Standard Annual Exam Time table & Instruction - CEO Proceedings 👇👇👇

Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ANNUAL DAY TRACKER | EMIS WEBSITE NEW UPDATE

 

ANNUAL DAY TRACKER | EMIS WEBSITE NEW UPDATE


*SPORTS / EVENT WINNERS


*CLUB ACTIVITIES


*ACADEMIC PERFORMANCE


* ANNUAL DAY CELEBRATION PHOTOS


போன்ற ஆண்டு விழா கொண்டாடப்பட்ட & வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்ட விவரங்களை EMIS-ல் UPDATE செய்வதற்கான வழிமுறைகள்👇👇👇

Click here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

EMIS NEW UPDATE | ADMISSION CALLS FOR PARENTS

 IMG_20240326_203856

🏀✍🏼 தற்போது EMIS இணையதளத்தில் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் விவரங்கள் தலைமை ஆசிரியர் Individual login ல் கொடுக்கப்பட்டுள்ளது.


🏀✍🏼 Chrome ல்  (Google ) சென்று login ல் தலைமை ஆசிரியர் Individual Id மற்றும் Password கொடுத்து உள்ளே சென்று dashboard ல் உள்ள Admission calls for Parents  கிளிக் செய்யவும். 


🏀✍🏼  கிளிக் செய்ததும் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளின் பெயர் விவரம் பிறந்த தேதியுடன் காட்டும். 


🏀✍🏼 பின்பு அக்குழந்தைக்கு நேரே உள்ள update (Green Colour ) என்ற  option ஐக் கிளிக் செய்யவும்.


🏀✍🏼 திரையில் தந்தை மற்றும் தாயாரின் அலைபேசி எண் தோன்றும் ...

அதன் அடியில் அழைப்பின்  விபரமும் தோன்றும்.

(தலைமையாசிரியர்கள் Emis இணையத்தில் உள்ள தாய் / தந்தையின் அலைபேசி எண்ணிற்கு call செய்து கீழே உள்ள option ஐத் தேர்ந்தெடுக்கவும் )


 அழைப்பின்  விபரம் :

1. அழைப்பிற்கு பதிலளிக்கப்பட்டது.

2. அழைப்பிற்கு பதிலளிக்கப்படவில்லை.

3. இப்பெற்றோருக்கான அலைபேசி எண் அல்ல.

4. தவறான எண்.


மேற்கண்ட நான்கு option ல் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து Submit கொடுக்கவும்.


🏀✍🏼 இவற்றில் .

அழைப்பிற்கு பதிலளிக்கப்பட்டது என்பதை தேர்வு செய்தால்

   1. பதிலளித்தவர் யார் ?

2. ஏதேனும் பள்ளியில் குழந்தையை சேர்க்கை செய்யப்பட்டுள்ளதா?

3. ஆம் எனில்.

அரசு பள்ளி, 

அரசு உதவி பெறும் பள்ளி, 

தனியார் பள்ளி. 

இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து Submit  கொடுக்கவும்.


EMIS NEW UPDATE | ADMISSION CALLS FOR PARENTS👇


Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Election Flowchart - 2024

 

IMG_20240323_183214_wm

தேர்தல் தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் படிவங்கள் விவரம் ஒரே பக்கத்தில்...

Election Flowchart - 2024👇

Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

வாக்குசாவடி மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்கள் மருத்துவ காரணங்கள் தொடர்பாக விலக்களிப்பு கோரினால் , அவர்களது உடல் நலனை பரிசோதனை செய்ய மருத்துவ குழு

 IMG_20240323_190333

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 , 2024 அன்று நடைபெற உள்ளதால் மேற்படி தேர்தல் காலத்தில் வாக்குசாவடி மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்கள் மருத்துவ காரணங்கள் தொடர்பாக விலக்களிப்பு கோரும் நேர்வில் , தொடர்புடைய அலுவலர்களின் உடல் நலனை பரிசோதனை செய்யும் பொருட்டு கீழ்க்கண்டவாறு மருத்துவ பரிசோதனைக்குழு 25.03.2024 முதல் 10.04.2024 வரை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிய இதன்மூலம் ஆணையிடப்படுகிறது.


பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு: தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியாகிறது

 


1220015

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. நிறைவு நாளில் நடந்த உயிரியல் தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதியன்று வெளியாகிறது.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 4.38 லட்சம் மாணவர்கள் எழுதினர். 7,951 பள்ளி மாணவர்கள், 1,009 தனித் தேர்வர்கள் என மொத்தம் 8,960 பேர் தேர்வெழுத வரவில்லை.

இதில் உயிரியல் பாடத் தேர்வுகள் சற்று கடினமாக இருந்ததாகவும் மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள் கூறும்போது,‘‘இந்த வினாத்தாளில் தாவரவியல் பகுதி வினாக்கள் எளிதாகஇருந்தன. ஆனால், விலங்கியல் பகுதியில் 1, 2, 3 மற்றும் 5 மதிப்பெண் என அனைத்து பிரிவுகளிலும் எதிர்பாராத வினாக்களும், பாடப் பகுதியின் உள்ளிருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதனால் இந்தாண்டு செண்டம் பெறுபவர்கள் எண்ணிக்கை குறையும்’’ என்றனர்.


விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 1 முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 6-ல் வெளியிடப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.


அதேபோல், கடந்த ஆண்டு (2023) நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் வரை பங்கேற்காதது பெரும் சர்ச்சையானது. கரோனா பரவலால் பள்ளிக்கு முறையாக வராத மாணவர்களுக்கும் ஹால்டிக்கெட் தரப்பட்டது உட்பட சில காரணங்களால் ஆப்சென்ட்எண்ணிக்கை உயர்ந்துவிட்டதாகவும், வரும் ஆண்டுகளில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவது உறுதி செய்யப்படும் எனவும் பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்திருந்தது.


இந்நிலையில் நடப்பாண்டு பொதுத் தேர்வு எழுத 7 லட்சத்து 72,200 பள்ளி மாணவர்கள், 21,875 தனித்தேர்வர்கள் என மொத்தம் 7 லட்சத்து 94,075 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் சுமார் 13 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று கூறப்படுகிறது. இது கடந்தாண்டை ஒப்பிடும் போது குறைவாகும்.


இதற்கிடையே, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் வெப் கேமரா வசதி உள்ளதால், அங்கேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ரூ.50-ம், சான்றிதழ் மற்றும் இணையதள பதிவுக்கு ரூ.185-ம் தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த வாய்ப்பை தவறவிடும் தேர்வர்கள் சிறப்பு அனுமதி (தட்கல்) பிரிவின் கீழ் ரூ.1,000 கூடுதல் கட்டணம் செலுத்தி ஏப்ரல் 8 மற்றும் 10-ம் தேதிகளில் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். தபால் வழியே பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

6 முதல் 8-ம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வழிகாட்டுதல்

 


1220065

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் ஏப்.2 முதல் 12-ம் தேதி நடைபெற உள்ளன. இந்த தேர்வுக்கான வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் /exam.tnschools.gov.in/ எனும் மாநில மதிப்பீட்டு புலத்தின் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றப்படும்.


தேர்வுக்கு முந்தைய தினம் காலை 9 முதல் அடுத்த நாள் மதியம் 1 மணி வரை வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்யும்போது சிக்கல்கள் ஏற்பட்டால் ‘14417’ என்ற பள்ளிக்கல்வி உதவி மையத்துக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். மேலும், தேர்வுக்கு முன்பாகவே மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை அச்சிட்டு வகுப்பாசிரியர்கள் தயாராக வைத்துக் கொள்வது அவசியம்.

அச்சிடுதலுக்கான செலவின நிதியை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். அதேபோல், உரிய வழிமுறைகளை பின்பற்றி தேர்வுகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதற்கிடையே நடப்பு ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், வினாத்தாள் வெளியாவதை (லீக்) தடுப்பதற்காக இந்த நடைமுறைகளை கல்வித்துறை பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Last date for declaration of Income Tax regime option for the financial year 2024-25 upto 15.04.2024

 IMG_20240323_122657

In the letter cited , the Registrar General , O / o High Court of Madras , has sought for extension of time limit for declaration of Income Tax regime's option for the financial year 2024-25 . Further , many DDOS have also requested for additional time to declare their tax plan ( proposed saving / investment details ) . Hence , it has been decided to extend the last date for declaration of Income Tax regime option for the financial year 2024-25 upto 15.04.2024 . However , it may be noted that the IT declaration window will be disabled during the payroll period ( from18.03.2024 to 31.03.2024 ) and will be enabled back from 01.04.2024 to 15.04.2024 for declaring the regime saving option & proposed saving investment plan details . In this connection , following key points may also be taken into consideration :


IT & A Department - Kalanjiyam ( IFHRMS 2.0 ) - Income Tax self declaration - sensitization requested - Reg - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

EDC VOTE Details & 12A & 12B Forms

 .com/

EDC VOTE

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு  தபால் ஓட்டு வழங்குவது வழக்கம்...


தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தனது சொந்த சட்டமன்ற தொகுதியிலிருந்து வேறு சட்டமன்ற தொகுதிக்கு பணியமத்தப்படுவர்

அவ்வாறு பணியமர்த்தப்படும் போது சட்டமன்றத் தேர்தலில் அனைவருக்கும் தபால் ஒட்டு பெறவேண்டிய சூழல் ஏற்படும் ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் ஆறு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி என்பதால் வேறு சட்டமன்ற தொகுதியில் பணியமர்த்தப்பட்டாலும் தாங்கள் பணிபுரிவது தங்களது சொந்த நாடாளுமன்ற தொகுதியாக இருந்தால் EDC CERTIFICATE பெற்றுக் கொண்டு நேரடியாகவே தாங்கள் தேர்தல்  பணிபுரியும் இடத்தில் `EVM மிஷினில் வாக்களிக்கலாம்`.

ஆனால் வேறு நாடாளுமன்ற தொகுதி அல்லது வேறு மாவட்டத்தில் பணி புரியும் தேர்தல் பணியாளர்கள் தபால் ஓட்டுக்கள் மூலமே வாக்களிக்க முடியும்.


EDC VOTE - Form 12A & 12B - Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

10th Tamil Slow Learners New Study Materials

 

10th Tamil Slow Learners New Study Materials| Mr.R. Balakrishnan - Download here


10th Slow Learners Study Material 2022 - School Education - All Subject - Download here

10th Tamil Slow learners study material –Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசு அலுவலகங்களில் e-office நடைமுறைப்படுத்துதல் - ரூ.19 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியீடு!

 IMG_20240322_111522


Information Technology and Digital Services Department - TNEGA - Implementation of e - Office in the Heads of Departments ( HODs ) and Subordinate Offices at an estimated cost of Rs . 19,03,41,170 / - Administrative approval and Financial Accorded Orders - Issued .

அரசு அலுவலகங்களில் e-office நடைமுறைப்படுத்துதல் - ரூ.19 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.05 - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

SSLC Exam Hall Supervisors guide - 2024

 IMG_20240322_113338

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள் :

 SSLC Exam Hall Supervisors guide - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

1 - 9th Annual Exam Time Table - Single Page ( Class Wise & Date , Time Wise..)

 

IMG_20240322_120436

1 - 9th Annual Exam Time Table - Single Page ( Class Wise & Date , Time Wise..)👇

Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

25.03.2024 ( திங்கள்கிழமை ) உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

 Local%20holiday

பங்குனி உத்திர திருநாள் 25.03.2020 திங்கள்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் அரசு பொதுத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவிக்கப்படுகிறது.


மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்கள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேற்படி 25.03.2024 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News