6th Std - SEAS Practice Materials Download

1 To 3rd - FA ( b ) Evaluation Schedule Revised

 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு நடக்கவிருந்த FA(B) மதிப்பீட்டுக்கான தேதி மாற்றம்...


1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு நடக்கவிருந்த FA ( B ) மதிப்பீடு நிர்வாக காரணங்களுக்காக அக்டோபர் 27 ஆம் தேதியிலிருந்து நவம்பர் 1 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

 முதல் FA ( b ) மதிப்பீடு தொடங்கும் நாள் : 01/11/2023 முடியும் நாள் : 10/11/2023

IMG-20231026-WA0011


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

நவ.3-இல் கற்றல் அடைவு திறனாய்வு தோ்வு: மாணவா்களைத் தயாா்படுத்த உத்தரவு

 

IMG_20231026_124301

 தமிழகத்தில் நவ.3-ஆம் தேதி 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாநில கற்றல் அடைவு திறனாய்வுத் தோ்வு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு மாணவா்களை தயாா்படுத்துமாறு பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


நாடு முழுவதும் பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக தேசிய கற்றல் அடைவு திறனாய்வுத் தோ்வு மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வு பள்ளி மாணவா்களுக்கு அவ்வப்போது நடத்தப்பட்டு, அவா்களின் கற்றல் நிலையைக் கண்டறிந்து தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நிகழாண்டில் 3, 6, 9 ஆகிய வகுப்பு மாணவா்களுக்கு மாநில கற்றல் அடைவு திறனாய்வு - 2023 தோ்வு நவ.3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.


இந்தத் தோ்வை மாநிலம் முழுவதும் 27,047 பள்ளிகளில் இருந்து மொத்தம் 7.42 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். இந்தத் தோ்வு கண்காணிப்பு பணிக்காக பி.எட்., எம்.எட். பயிற்சி மாணவா்கள் உள்பட 29,775 கள ஆய்வாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு இந்த ஆய்வுக்கான பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. அதேபோல், 20 பள்ளிகளுக்கு ஒருவா் வீதம் மொத்தம் 1,356 போ் வட்டார ஒருங்கிணைப்பாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.


பாடத் திட்டம் என்ன? அதன் தொடா்ச்சியாக தோ்வுக்கான பாடத் திட்ட விவரங்களும் தற்போது வெளியாகியுள்ளன.


அதன்படி, தமிழ் வழியில் பயிலும் மாணவா்களுக்கு தமிழ், கணக்கு ஆகிய பாடங்களில் மட்டும் வினாக்கள் இடம்பெறும். மேலும், ஆங்கில வழிக்கல்வி எனில் ஆங்கிலம், கணக்கு பாடங்களில் கேள்விகள் இருக்கும். வினாக்கள் முந்தைய வகுப்புகளில் பாடத்திட்டம் அடிப்படையில் கேட்கப்படும்.


அதாவது, 3-ஆம் வகுப்புக்கு 1, 2-ஆம் வகுப்பு பாடத்திட்டம், 6-ஆம் வகுப்புக்கு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையான பாடத்திட்டம், 9-ஆம் வகுப்புக்கு 1 முதல் 8-ஆம் வகுப்பு பாடத்திட்டம் வரையறைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப மாணவா்களைத் தோ்வுக்கு தயாா்படுத்த வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்ற வேண்டும்: என்சிஇஆர்டி பரிந்துரை

 

1144209

இந்தியா சமீபத்தில் ஜி20 உச்சி மாநாட்டுக்கு தலைமை வகித்தது. அப்போது அதில் கலந்து கொண்ட வெளிநாட்டு தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் அளித்த விருந்தின் அழைப்பிதழில் முதன் முதலாக குடியரசுத் தலைவர் என்பதற்கு பதில் பாரத குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டது. அதன்பின் அந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டது.


இந்நிலையில், பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிஇஆர்டி)உருவாக்கிய உயர்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து இக்குழுவின் தலைவரும், வரலாற்று ஆராய்ச்சி இந்திய கவுன்சில் உறுப்பினருமான ஐசக் கூறியதாவது:


பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றிய மைப்பதற்காக உருவாக்கப்பட்ட என்சிஇஆர்டி, சமூக அறிவியல் பாடத்துக்கான உயர் நிலைக் குழுவை அமைத்தது. என்சிஇஆர்டி புதிய பாடப் புத்தகங்களில் மாற்றங்களை செய்ய 7 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒருமனதாக பரிந்துரை செய்துள்ளது.


அரசியல் சாசனத்தின் 1(1) வது பிரிவில் இந்தியாவின் பெயர் ஏற்கெனவே பாரத் என்று உள்ளது. பாரத் என்பது பழங்கால பெயர். 7,000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு புராணம் போன்ற பழங்கால புத்தகங்களில் பாரத் என்ற பெயர் குறிப்பு உள்ளது. கிழக்கு இந்திய கம்பெனி வந்த பின்பும், 1757-ம் ஆண்டு பிளாஸி போருக்குப் பின்புதான் இந்தியா என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது. அதனால், அனைத்து வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களில் இந்தியா என்ற பெயருக்கு பதில் பாரத் என்ற பெயரை பயன்படுத்த வேண்டும் என உயர்நிலைக் குழு ஒருமனதாக பரிந்துரை செய்துள்ளது.


அதேபோல் ஆங்கிலேயர்கள் இந்திய வரலாறை பழங்கால, இடைக்கால, நவீன வரலாறு என மூன்று பகுதிகளாக பிரித்தனர். இவை இந்தியாவின் இருண்டகாலம், அறிவியல் அறிவு பற்றிஅறியாதது, முன்னேற்றம் என 3 பகுதிகளை காட்டுகிறது. ஆனால் சூரிய குடும்பத்தில் ஆர்யபட்டாவின் ஆராய்ச்சி உட்பட இந்தியாவின் சாதனைகள் பழங்காலத்திலேயே இடம்பெற்றுள்ளன. அதனால் பழங்கால வரலாற்றுக்கு பதிலாக, இந்திய வரலாற்றின் செம்மைக் காலம் பற்றி பள்ளிகளில் கற்றுக் கொடுக்க நாங்கள் ஆலோசனை வழங்கியுள்ளோம்.


மேலும் பாடப் புத்தகங்களில் இந்து வெற்றிகள் பற்றிய வரலாறு இடம் பெறவும் உயர்நிலைக் குழுபரிந்துரை செய்துள்ளது. பாடப் புத்தகங்களில் நமது தோல்விகள் மட்டும் தற்போது இடம் பெற்றுள்ளன. முகலாயர்கள் மற்றும் சுல்தான்களுக்கு எதிரான நமது வெற்றிகள் பாடப் புத்தகங்களில் இல்லை. எனவே இந்து வெற்றிகளின் வரலாறு இடம் பெறவும் பரிந்துரை செய்துள்ளோம். மேலும் அனைத்துபாடத்திட்டங்களிலும் இந்திய அறிவியல் முறையை அறிமுகப்படுத்தவும் பரிந்துரைத்துள்ளது.


இவ்வாறு ஐசக் தெரிவித்தார்.


தேசிய கல்வி கொள்கை 2020-க்கு ஏற்ப பள்ளி பாடப் புத்தகங்களில் உள்ள பாடத்திட்டங்களை என்சிஇஆர்டி மாற்றியமைத்து வருகிறது. பாடப் புத்தகங்கள் மற்றும் பாடத் திட்டங்களை இறுதி செய்ய என்சிஇஆர்டி பல குழுக்களை உருவாக்கியுள்ளது.


இவற்றின் பரிந்துரைப்படி பள்ளிப் பாடத் திட்டங்களில் மாற்றம் செய்வது குறித்து என்சிஇஆர்டி இறுதி முடிவு எடுக்கும் எனத் தெரிகிறது.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் அறிவிக்கப்படும் சூப்பரான மூன்று அறிவிப்புகள்..

 நடுநிலை பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 அரசாணைகள் விரைவில் வெளிவர உள்ளன.


1.நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் அல்லது அதற்கு இணையான பணியிடங்களில் பதவி உயர்வு.


2 நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக  விகிதாச்சார அடிப்படையில்  பதவி உயர்வு                  


3.மாவட்ட கல்வி அலுவலகத்தில் பள்ளி துணை ஆய்வாளர் பதவிக்கு பட்டதாரி ஆசிரியர்கள் மாற்றம். 



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

TNPSC குரூப் 4 தேர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும்? காலியிடங்கள் எத்தனை? முக்கியத் தகவல்கள் இதோ !

 2023ம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு குறித்த அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விரைவில் வெளியிடயிருப்பதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


2023ம் ஆண்டிற்கான போட்டித் தேர்வுகள் குறித்தான ஆண்டுத் திட்டத்தினை டிஎன்பிஎஸ்சி முன்னதாக  வெளியிட்டது.


இதில், பல இலட்சக்கணக்கான தேர்வர்கள் பங்கேற்கும் குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும் அதற்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், நவம்பர் 12-ஆம் நாள் தீபாவளி கொண்டாடப்படும்  நிலையில் ,அதற்கு முன்னதாகவே குரூப் 4 தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியாகும் என்றும் எதிரிபார்க்கப்படுகிறது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - கலந்தாய்வு நாள் - 31.10.2023

 


IMG_20231027_121521

2023-2024 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் , கணினி பயிற்றுநர் , உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர் / ஆகிய பதவிகளுக்கு 31.10.2023 அன்று காலை 10.00 மணியளவில் Online இல் பொது மாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்டங்களில் மாறுதல் கோரி பதிவு செய்த மேற்கண்ட பதவிகளுக்கு மட்டும் ஆதிதிராவிடர் நல இயக்குநரின் நேரடி பார்வையில் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் , மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முன்னிலையில் நடைபெற உள்ளது.


Counselling Proceedings - Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

நவம்பர் 1 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

 Local%20holiday

தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் அன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.


உள்ளூர் விடுமுறை

நாமக்கல் மாவட்டத்தில் கோவில் நகரின் மையப்பகுதியில் 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் சுவாமி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் இந்த கோவிலின் பங்குனி தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த நிலையில் நடப்பு ஆண்டு திருவிழா வருகிற அக். 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள் .


புராண கதைகளின் படி மார்கழி மாதம் மூல நட்சத்திரம், சர்வ அமாவாசை தினத்தில், ஆஞ்சநேயர் பிறந்ததாக ஐதீகம். அதனால் ஆண்டு தோறும் அன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற உள்ளது. அதனால் அன்றைய தினம் நாமக்கல் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது இது குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

பள்ளி , கல்லூரிகளுக்கு வரும் 30 - ம் தேதி விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

 தேவர் ஜெயந்தி - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை


தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை , திருப்புவனம் , மானாமதுரை , இளையான்குடி , காளையார்கோவில் ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு வரும் 30 - ம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவிப்பு


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

4% DA Arrear Calculator

 உங்களது BASIC PAY மட்டும் Enter செய்து எளிதாக அறிந்து கொள்ளலாம்...👇👇👇👇

4% DA Arrear Calculator - Download here



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

4% DA Arrears Table

 Hike in pension per month & Arrears from 1st July 2023 , due to increase in 4 % DA

4% DA Arrears Table - Download here





🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

State Educational Achievement Survey (SEAS) - Model Question Paper

 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கல்வி அடைவு ஆய்வு (SEAS) - மாதிரி வினாத்தாள்...

 State Educational Achievement Survey (SEAS) for Class 6 - Model Question Paper

Download here



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைபடி உயர்வு அறிவிப்பு.

 அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி . 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.



TNPSC - CESE - Assistant Engineer - EEE - Unit v ( Electrical Mechanical ) Study Materials

  TNPSC - CESE - Assistant Engineer - EEE - Unit v ( Electrical Mechanical ) Study Materials - Srimaan Coaching Centre - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

TNTET 2023 - FINAL Key பிழைகளுக்கும், TRB ன் தவறுகளுக்கும் மதிப்பெண்கள் வழங்க கோரிய மனுவிற்கு CM CELL பதில்

  TNTET 2023 - FINAL Key பிழைகளுக்கும், TRB ன் தவறுகளுக்கும் மதிப்பெண்கள் வழங்க கோரிய மனுவிற்கு CM CELL பதில்...

CM CELL Reply - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

6,7,8,9,10th Std - October 4th Week Notes of Lessons

 

 .com/

English Notes of Lessons for 6,7,8,9,10 Std (25.10.2023 to 27.10.2023) the October the 4th week 


6th Std Notes of Lesson - Download here

7th Std Notes of Lesson - Download here

8th Std Notes of Lesson - Download here

9th Std Notes of Lesson - Download here

10th Std Notes of Lesson - Download here


6,7,8th Std - Term 2 - Full Lesson Plan ( All Subject ) T/M & E/M


6,7,8th Standard Tamil | Term 2 | Lesson Plan - click here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

Departmental Examination May 2023 - Results ( Updated on 19 Oct 2023 )

 IMG_20231020_091853

 RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS – MAY 2023

(Updated on 19 Oct 2023)👇

Click here



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

Ennum Ezhuthum - 1,2,3 Std - Term 2 - Module 3 Lesson Plan - T/M & E/M

 Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024


Ennum Ezhuthum Empty Format - Download here

Term 2 Lesson Plan

October - 2023

4th week

Ennum Ezhuthum - 1,2,3 Std -  Term 2 - Module 3 Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3 Std -  Term 2 - Module 3 Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4,5th Std -  Term 2 - Module 2 Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4,5th Std -  Term 2 - Module 2 Lesson Plan - E/M - Download here 


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

Ennum Ezhuthum - 4th & 5th Std - Term 2 - Module 2 Lesson Plan

 Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024


Ennum Ezhuthum Empty Format - Download here

Term 2 Lesson Plan

October - 2023

4th week

Ennum Ezhuthum - 1,2,3 Std -  Term 2 - Module 3 Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3 Std -  Term 2 - Module 3 Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4,5th Std -  Term 2 - Module 2 Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4,5th Std -  Term 2 - Module 2 Lesson Plan - E/M - Download here



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

Pre Matric / Post Matric கல்வி உதவித்தொகை திட்டங்களை மத்திய அரசின் NCAER குழு நேரடி ஆய்வு - Letter

 IMG_20231020_185528


Pre Matric / Post Matric கல்வி உதவித்தொகை திட்டங்களை தமிழ்நாட்டில் உள்ள 13 மாவட்டங்களில் மத்திய அரசின் NCAER குழு நேரடி ஆய்வு (Physical Verification) செய்ய உள்ளது!

Scholarship - Physical Verification Letter - Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

கலைத் திருவிழா 2023-24 | நடுவராகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் - மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் உணவுப்படி - நிதி ஒதுக்கீடு செய்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

 IMG_20231020_215400

கலைத் திருவிழா 2023-24 -  நடுவராகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு  மதிப்பூதியம் - மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் உணவுப்படி - நிதி ஒதுக்கீடு செய்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

 SPD - KT Fund Approved Proceedings - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

கல்வி உதவித்தொகை பெறும் தகுதியான மாணவர்களின் வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் விவரங்களை 15.11.2023க்குள் EMIS ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 IMG_20231020_220227

கல்வி உதவித்தொகை பெறும் தகுதியான மாணவர்களின் வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் விவரங்களை 15.11.2023க்குள் EMIS ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

DSE - EMIS Entry - Scholarship Proceedings - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

தமிழ் திறனறித் தேர்வு 2023 - Solved Question Papers

 IMG_20231021_090801

15-10-2023 அன்று நடைபெற்ற தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வில் 100 - க்கு 97 - வினாக்கள் நமது TCA வழங்கிய முதல் பதிப்பு புத்தகத்தில் இருந்து நேரடியாக கேட்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

TEACHER'S CARE PUBLICATION]
[KANCHIPURAM, TRICHY, SALEM, MADURAI]

15-10-2023 அன்று நடைபெற்ற தேர்லின் வினா , விடை , விளக்கம்👇

 தமிழ் திறனறித் தேர்வு 2023 - Solved Question Papers - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

TNCMTSE - தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வுகளுக்கான தற்காலிக விடைக்குறியீடு வெளியீடு.

 

IMG_20231019_221951

07.10.2023 அன்று நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு ( TNCMTSE ) மற்றும் 15.10.2023 அன்று நடைபெற்ற தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வுகளுக்கான தற்காலிக விடைக்குறியீடு ( Tentative Key Answer ) அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடபட்டுள்ளது.

 இவ்விடைக்குறியீடு சார்பாக மாற்றம் தெரிவிக்க விரும்பினால் அவற்றை 27.10.2023 - க்குள் dgedsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கலாம் என்ற விவரத்தினை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tentative Key Answer - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

6 முதல் 8ம் வகுப்பு வரை ‘காலை உணவு’ - தமிழகத்தில் முதல் முறையாக மதுரை பள்ளிகளில் தொடக்கம்

 


1141485

முதலமைச்சர் ஸ்டாலின் அரசு தொடக்கப்பள்ளிகளில் தொடங்கி வைத்த காலை உணவு திட்டம் மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் தமிழகத்திலே முதல் முறையாக 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்களும் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு இந்த திட்டத்தில் காலை உணவு வழங்கப்படுகிறது.


தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பின் இந்த திட்டம் 38 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு காலை உணவுத்திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த திட்டத்தில் 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள் என மொத்தம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு 1,14,095 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலமாக பயன்பெற்று வருகிறார்கள்.


மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில், மதுரை மாநகராட்சியில் முதலமைச்சரின் இந்த காலை உணவு திட்டம் தமிழகத்திலே முதல் முறையாக 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டு, சத்தமில்லாமல் அந்த மாணவர்களும் மாநகராட்சி காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவது அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது. இந்த திட்டத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளை தவிர்த்து மற்ற வகுப்புகள் (6 முதல் 8 வரை) படிக்கும் மாணவ, மாணவிகளும் பயனடையும் வகையில் கூடுதலாக இந்த திட்டத்தில் 1,350 பேருக்கு தனியார் சமூக பங்களிப்பின் மூலம் காலை உணவு வழங்கப்படுகிறது.


இதுகுறித்து மேயர் இந்திராணி கூறுகையில், ‘‘மதுரை மாநகராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு கள்ளழகர் உயர்நிலைப்பள்ளி உள்பட மொத்தம் 74 பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 7,197 மாணவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகிறார்கள். மாநகராட்சி பள்ளிகளில் அடித்தட்டு மக்களுடைய குழந்தைகளே பெரும்பாலும் படிப்பதால் அவர்களில் 6 முதல் 8 படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்களும் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருகிறார்கள்.


இதை ஒரு முறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நான் போன்றோர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்ய சென்றபோது கண்டறிந்தோம். அப்போது 6ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர் காலை உணவு சாப்பிட முடியாமல் பசியுடன் நின்று கொண்டிருந்தார். அழைத்து பேசியபோது அந்த மாணவர் வீட்டில் தினமும் காலை உணவு தயார் செய்வதில்லை என்றும், மதிய உணவை நம்பிதான் பள்ளிக்கு வருவதாக தெரிவித்தார். உடனே அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இதுபோன்ற மாணவர்களும் பயனடையும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்யும் படி எங்களை கேட்டுக் கொண்டார்.


அதன் அடிப்படையில் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி மூலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கும் பயனடையும் வகையில் காலை உணவு திட்டத்தை விரிவுப்படுத்தி உள்ளோம், ’’ என்றார்.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

School Morning Prayer Activities - 20.10.2023

 .com/

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.10.2023


 திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கள்ளாமை

குறள் :282


உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்.


விளக்கம்:


அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது.


பழமொழி :

Empty vessels make the greatest noise


குறை குடம் கூத்தாடும்


இரண்டொழுக்க பண்புகள் :


1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஊக்கமுடன் செய்வேன். 


2. முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்.


பொன்மொழி :


ஏழைகள் உணவைத் தேடுகிறார்கள். செல்வந்தர்கள் பசியைத் தேடுகிறார்கள்.-- கிரீஸ்


பொது அறிவு :


1. புதுக்கோட்டை குடுமியான் மலையில் காணப்படும் கல்வெட்டுகள்? 


பல்லவர் கால கல்வெட்டுகள்


2. புற்று நோய் உட்பட எந்தநோயுமே வராத ஒரே உயிரினம் –  


சுறாமீன் .


English words & meanings :


 illustrious (இல்லஸ்ட்ரஇயஸ்) - widely known or esteemed புகழ்பெற்ற.imbibe(இம்பைப்)-take in liquids உள்வாங்குதல்


ஆரோக்ய வாழ்வு : 


சங்குப்பூ : சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும். குடல் புழுக்களைக் கொல்லும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். வாந்தி உண்டாக்கும். பேதியைத் தூண்டும். தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்


அக்டோபர் 20 இன்று


ஆனி சலிவன் அவர்களின் நினைவுநாள்


ஆனி சலிவன் (Anne Sullivan) (1866 ஏப்ரல் 14 - 1936 அக்டோபர் 20 ) இவர், தலைசிறந்த ஆசிரியரும், பார்க்கவும் கேட்கவும் இயலாத எலன் கெல்லர் வாழ்க்கையில் புதிய விடியல் பிறக்க வழிவகுத்துத் தந்தவருமாகவும் அறியப்படுகிறார்.    கண் பார்வையற்ற, காது கேளாத தனது ஏழு வயதுக் குழந்தை ஹெலனுக்கு ஆசிரியர் தேவை என ஆர்தர் கெல்லர் என்பவர் இவர் பயின்ற நிறுவனத்தின் இயக்குநரிடம் கேட்க, அவர் அந்த வேலைக்கு இவரை சிபாரிசு செய்தார். எலனை இவர் சந்தித்த கணத்தில் இருவருக்குமிடையே அற்புதப் பிணைப்பு மலர்ந்தது. 49 ஆண்டு காலம் நீடித்த இந்த மகத்தான உறவில் முதலில் எலனுக்கு இவர் ஆசிரியராகவும், பின்னர் நல்ல துணையாகவும் இறுதியில் நண்பராகவும் மாறினார். கண் பார்வையற்ற, காது கேளாத, பேசும் திறனும் அற்ற குழந்தையான ஹெலனுக்கு புரியும் வகையில் தன் போதனை முறையை மாற்றினார். தண்ணீர் கொட்டும் குழாயின் அடியில் அவள் கையை நீட்டிப் பிடித்து, உள்ளங்கையில் w-a-t-e-r என்று மீண்டும் மீண்டும் எழுதி மனதில் அறியவைத்தார்.[5] அப்போதுதான் அந்தக் குழந்தைக்கு, தன் கையில் ஓடிக்கொண்டிருக்கும் பொருளுக்கு ஒரு பெயர் உள்ளது, அதுதான் இது என்பது புரியத் தொடங்கியது. ஆறே மாதங்களில் இவர் ஹெலனுக்கு 575 வார்த்தைகள், ஒரு சில பெருக்கல் வாய்ப்பாடுகளையும் புடையெழுத்து (பிரைய்லி (Braille) முறையையும் கற்றுக்கொடுத்தார். ஹெலன் ரெட்க்ளிஃப் கல்லூரியில் பட்டம் பெறும்வரை அவருக்கு இவர் உறுதுணையாக நின்றார். எஜுகேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்காட்லாந்து சலிவனுக்கு ஃபெலோஷிப் வழங்கியது. டெம்பிள் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்திலுள்ள ஹார்வேர்ட் பல்கலைக்கழகங்கள் (Harvard University) கவுரவப் பட்டங்களை வழங்கின. இவரைக் குறித்து ஹெலன் கெல்லர் எழுதிய ‘மை டீச்சர்’ என்ற நூல் மிகவும் பிரபலமான ஒன்றாகும். சுய முனைப்பால் மகத்தான உயரங்களை எட்டியவரும் உலகுக்கே ஒரு முன்னுதாரண ஆசிரியராகவும் பரிணமித்த ஆனி சலிவன் 1936-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் நாள் 70-வது வயதில் காலமானார்.


நீதிக்கதை


ஒரு பெரியவரிடம் ஐயா! நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் ஒருவன். “ என்ன காரணம்?" என்று கேட்டார் ஒரு பெரியவர். "மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்” என்றான் "உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம் தான்" என்றார் பெரியவர், "அப்படியா சொல்கிறீர்கள்?" "ஆமாம்!" "அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?" "மனதைப் புரிந்து கொள்... அது போதும்," "எப்படிப் புரிந்து கொள்வது?" என்றான் அவன், "இந்தக் கதையைக் கேள் என்று அவர் சொன்னார் ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒரு நாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது, அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது. மறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது, இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவும் இல்லை; வருந்தமும் இல்லை. எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று. தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிற போது துன்பம், தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது


இன்பமுமில்லை... துன்பமுமில்லை...' - என்று அவர் கதையை முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான். "மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்!!...


இன்றைய செய்திகள் - 20.10.2023


*"ஆப்ரேஷன் அஜய்" திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து இதுவரை 1200 பேர் இந்தியா வருகை- மத்திய அமைச்சகம் தகவல்.


*மகாத்மாவின் தொலைநோக்கு பார்வையே சமூக ஒற்றுமை மற்றும் சமத்துவம் முன்னோக்கி செல்வதற்கான வழி: ஜனாதிபதி முர்மு.

*ஆயுத பூஜை தொடர் விடுமுறை: பயணிகள் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை மற்றும் சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்ல  1000 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு.


*தென்மேற்கு பருவக்காற்று விலகி விட்டது.  இன்னும் 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை.


*உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியா- வங்காளதேசம் இடையே நடைபெற்ற போட்டியில் இந்தியா வெற்றி.


Today's Headlines


* So far 1200 people from Israel have come to India through "Operation Ajay" - Union Ministry Information.


 * Mahatma's for seeing vision is for the forwardness of social unity and equality: President Murmu.

 *Ayudha Puja holiday: Metro train service and 1000 special buses from Chennai to outlying areas will be arranged for the convenience of passengers.


 * The southwest monsoon has departed.  The Northeast Monsoon starts within 3 days.


 *India won the  World Cup cricket  match between India-Bangladesh


 Prepared by


Covai women ICT_போதிமரம் 



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News