இந்து தமிழ் திசை - அன்பாசிரியர் 2022 விருது

 


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ராம்ராஜ் காட்டன் வழங்கும் இந்து தமிழ் திசை - அன்பாசிரியர் 2022 விருது நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.


லட்சுமி செராமிக்ஸ், இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் ஆகியன இந்த விருதுகளை இணைந்து வழங்குகின்றன. வர்த்தமானன் பதிப்பகம், அன்னை வேளாங்கண்ணி கல்வி குழுமம், பொன்வண்டு டிடர்ஜெண்ட் நிறுவனம் ஆகியன நிகழ்வின் பங்குதாரராக இணைந்துள்ளன. ரேடியோ பார்ட்னராக ரேடியோ சிட்டி பங்கேற்க, விழாவுக்கான அரங்கத்தை ரஷ்ய கலாச்சார மையம் வழங்குகிறது.


மாணவர்களின் திறன் வளர்த்தல்: மாணவர்களுக்கு வழக்கமான பாடம் கற்பிப்பதோடு நின்றுவிடாமல், மாறுபட்ட சிந்தனை, புதுமை உணர்வோடு, மாணவர்களின் திறன்களை வளர்த்து, சமூக அக்கறை ஊட்டி, நற்பண்புகளை போதித்து, பள்ளியையும் மேம்படுத்தும் அர்ப்பணிப்பு மிக்க சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து, 2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் ‘அன்பாசிரியர்’ விருதுகள் வழங்கப்பட்டன.


‘முன்மாதிரி ஆசிரியர்’ விருது: மூன்றாம் ஆண்டாக ‘அன்பாசிரியர் 2022’ விருதுகள் சென்னையிலுள்ள ரஷ்ய கலாச்சார மைய அரங்கில் நாளை (ஜூலை 28-ம் தேதி வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு வழங்கப்படவுள்ளன.


இவ்விருதுக்கு தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 600-க்கும்மேற்பட்ட ஆசிரியர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். அதில் 350 ஆசிரியர்கள் முதல்கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இதில் தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு இறுதிச்சுற்று தேர்வு நடத்தப்பட்டு, மூத்த கல்வியாளர்கள் அடங்கிய தேர்வுக் குழு மூலம் 35 ஆசிரியர்கள் ‘அன்பாசிரியர் 2022’ விருது பெறவும், 6 ஆசிரியர்கள் ‘முன்மாதிரி ஆசிரியர்’ விருது பெறவும் தேர்வாகினர்.


தேர்வு செய்யப்பட்ட 41 ஆசிரியர்களுக்கு இன்று (ஜூலை 28-ம் தேதி வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஸ் பொய்யாமொழி விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றவுள்ளார். இவ்விழாவில் அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்கலாம்.

 Click here for latest Kalvi News 

பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டம் - விண்ணப்பிக்க கடைசி தேதி 12.08.2023

 

மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதமமந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டத்தில் (PM-YASASVI) தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து எழுத்துத்தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித் தொகை பெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

2023-24 நிதியாண்டில், நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர் ,பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர்(OBC,EBC  மற்றும் DNT) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


 தமிழகத்தைச் சார்ந்த 3093 மாணவ/ மாணவியர்களுக்கு இக்கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்ப்டடுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் (மாணவ/ மாணவியர்கள்) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். https://vet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.


மேலும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும் 


11 மற்றும்12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். 


தேசியத் தேர்வு முகமை நடத்தும் YASASVI நுழைவுத் தேர்வில் (YASASVI Entrance Test) பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இத் தேர்விற்கு 10.08.2023 க்குள் https://vet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் 12.08.2023 முதல் 16.08.2023 தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.


எழுத்துத் தேர்வு (OMR Based) 29.09.2023 ஆம் தேதி நடைபெறும் விண்ணப்பத்துடன் கைப்பேசி எண். ஆதார் எண். ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.


இத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் https://yet.nta.ac.in மற்றும் http://soclaljustice.gov.in/schemes/ ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.


 Click here for latest Kalvi News 

ஆக.3 மற்றும் ஆக.9-ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

 சேலத்தில் ஆக.3 மற்றும் ஆக.9-ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். ஆடி 18 மற்றும் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி ஆக.3-ம் தேதியும், கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவையொட்டி ஆக.9-ம் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது;

“சேலம், அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 09.08.2023, புதன்கிழமை அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.


இந்த உள்ளூர் விடுமுறை, செலாவணி முறிச் சட்டம் 1881(Negotiable Instrument Act 1881)-ன் கீழ் வராது என்பதால், அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் சேலம் மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.


இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக. சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகின்ற 02.09.2023, சனிக்கிழமை அன்று ஈடுகட்டும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது” என மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.


 Click here for latest Kalvi News 

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப் பதிவேடு EMIS Portal லில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும் - பதிவேடுகளில் பராமரிக்கக் கூடாது - CEOs Proceedings

 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப் பதிவேடு EMIS Portal லில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும் - பதிவேடுகளில் பராமரிக்கக் கூடாது - வேலூர் மற்றும் தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள் 


(CoSE & DEE இணைச் செயல்முறைகளுடன்)


TNJ CEO Proceedings - Download here


Vellore CEO Proceedings - Download here


 Click here for latest Kalvi News 

School Morning Prayer Activities - 28.07.2023 | பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

  

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.07.23

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஈகை

குறள் :226

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

விளக்கம்:

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் கருவூலமாகும்.


பழமொழி :
All things come to those who wait

பொறுத்தவர் பூமி ஆள்வார்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.

 2. துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.


பொன்மொழி :

இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.

டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம்


பொது அறிவு :

1. முதல் பரம் வீர் சக்ரா யாருக்கு வழங்கப்பட்டது?

விடை: மேஜர் சோம்நாத் சர்மா

2. உலகிலேயே மிக அதிக எல்லை நாடுகளைக் கொண்ட(14 நாடுகள்)நாடு எது?
விடை: சீனா


English words & meanings :

 vague - uncertain, unclear meaning. தெளிவற்ற.waver - moving here and there without strength. நிலை இன்றி தள்ளாடு


ஆரோக்ய வாழ்வு :

சீரகம் -நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும்.


ஜூலை 28 இன்று

உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்

உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day) ஒவ்வோர் ஆண்டும் சூலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.[1]

உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.


உலகக் கல்லீரல் அழற்சி நாள்


உலகக் கல்லீரல் அழற்சி நாள் (World Hepatitis Day), ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் (WHO) ஏற்படுத்தப்பட்டது

நீதிக்கதை

பல முறை யோசிக்கனும்


நரி ஒன்று தாகத்தால்  தவித்தது. எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன செய்வது? தண்ணீரைத் தேடி அலைந்தது. தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்தது. கிணற்றின் அருகே சென்றது, கிண்ற்றில், கயிற்றின் ஒரு முனையில் வாளி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட நரி, வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உட்னே வாளி 'விரி'ரெனக் கிணற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்தது. தாகம் தணிந்தபின் மேலே பார்த்தது. 'எப்படி வெளியேறுவது' என்று யோசிக்கத் தொடங்கியது. 'மேலேயிருந்து யாராவது கயிற்றை இழுத்தால் தானே என்னால் மேலே போக முடியும். என்ன செய்வது?' நேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது. அந்த நேரம் பார்த்துக் கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது. கிண்ற்றின் உள்ளே எட்டிப் பார்த்தது. அங்கு நரி இருப்பதைக் கண்டது. “அடடா! நரி ஐயா! உள்ளே என்ன செய்கிறீர்கள்?" எனக் கேட்டது. "நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா? இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள்" என்றது நரி. ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது. அந்த வாளி 'சரசர'வென்று கிணற்றின் உள்ளே போயிற்று. அப்போது நரி அமர்ந்திருந்த வாளி மேலே வந்தது. நரி மேலே வரும் போது பாதி வழியில் ஓநாயைப்


பார்த்தது."நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலான இடத்திற்குப் போகிறேன்". என்று கூறிக் கொண்டே மேலே சென்றது. மேலே வந்ததும் கிணற்றுச் சுவரின் மேலே தாவிக் குதித்துத் தப்பியோடியது. பாவம் ஓநாய்.! ஒரு செயலைச் செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும்.


இன்றைய செய்திகள் - 28.07. 2023

*டொயோட்டாவின் எர்டிகா வெர்ஷன் -  விரைவில் இந்தியா வரும் லோ பட்ஜெட் 7 சீட்டர்.

*பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய 3 விவசாயிகளுக்கு விருது மற்றும் ரொக்க பரிசு வழங்கினார்- முதல்வர்.

*அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கலந்தாய்வு 3000 பேர் குவிந்தனர்.

*சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

*ஜெர்மனி ஹாக்கி தொடர்: இந்திய ஆண்கள் ஜூனியர் அணி அறிவிப்பு.

*பாகிஸ்தானை சேர்ந்த சவுத் ஷக்கிள் முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் மற்றும் இரண்டாவது டெஸ்டில் 57 ரன்கள் எடுத்ததன் மூலம் 146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைத்திராத புதிய சாதனை படைத்துள்ளார்.


Today's Headlines

*Toyota's Ertiga version,low budget 7-seater coming to India soon.

 * Awarded and cash prizes are given to 3 farmers who excelled in traditional rice production by TN Chief Minister.

 * 3000 students were gathered for medical counseling for the government school students.

 *The price of crude oil continues to decrease in the international market.

 *Germany Hockey Series: Indian Men's Junior Team was Announced

 *Pakistan's South Shackle scored a double century in the first Test and 57 runs in the second Test, setting a new record in the 146-year history of cricket.

 Prepared by

Covai women ICT_போதிமரம்



 Click here for latest Kalvi News 

அரசு அலுவலர்கள் தங்கள் பெயரை எழுதும் போதும், ஒப்பமிடும் போதும் கண்டிப்பாக தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் அரசாணை ( 24.07.23 )

 

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு . அலுவலர்கள் / பணியாளர்கள் அனைவரும் அரசு ஆணைகளில் கூறப்பட்ட விதிமுறைகளின்படி அனைத்து இனங்களிலும் தங்களின் பெயர்களை எழுதும் போதும் , ஒப்பமிடும் போதும் கண்டிப்பாக தமிழிலேயே கையொப்பம் இடப்பட வேண்டும் என்று மீண்டும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

Sign in Tamil - DSE Proceedings & GO - Download here


 Click here for latest Kalvi News 

ஆகஸ்ட் 5-ல் உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

 

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


பனிமய மாதா பேராலயத்தின் தேர் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.


உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி புனித பனிமய மாதா பேராலயத் திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.


வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி பனிமய மாதா பேராலயத்தின் 441ஆம் ஆண்டு திருவிழா மற்றும் 16வது தங்க தேர் பவனி நடைபெறவுள்ளதால, உள்ளூர் விடுமுறை  மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.


 Click here for latest Kalvi News 

School Morning Prayer Activities - 27.07.2023 | பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.07.23

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஈகை

குறள் :225

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

விளக்கம்:

பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.

பழமொழி :
All that glitters is not gold

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.

 2. துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

பொன்மொழி :

அழகை பற்றி கனவு காணாதீர்கள் அது உங்கள் கடமையை பாழாகி விடும்.. கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.

டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் 


பொது அறிவு :

1. ஹரியானா சூறாவளி’ என்று அழைக்கப்படும் பிரபல கிரிக்கெட் வீரர் யார்?

விடை: கபில் தேவ்

2. மேன் புக்கர் பரிசை வென்ற முதல் இந்தியர் யார்?
விடை: அருந்ததி ராய்

English words & meanings :

fe·lic·i·ta·tion - an expression of joy for the achievement of other persons. Noun. மற்றொருவரின் வெற்றியில் மகிழ்ச்சியின் வெளிப்பாடு. பெயர்ச்சொல்


ஆரோக்ய வாழ்வு :

சீரகம் -வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கை தீர்வாகவும் அமைகிறது. 

ஜூலை 27 இன்று


அப்துல் கலாம் அவர்களின் நினைவுநாள்

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, அக்டோபர் 15, 1931 - ஜூலை 27, 2015) பொதுவாக டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் இந்தியாவின், 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

கலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார்.  2002 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சூலை 27, 2015 இல் இந்தியாவின், மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் (மாலை சுமார் 6.30 மணியளவில்) மயங்கி விழுந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.



சலிம் அலி அவர்களின் நினைவுநாள்

சாலிம் அலி (சலீம் அலி) (Sálim Ali; நவம்பர் 12, 1896 – சூலை 27, 1987) உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநரும் இயற்கையியல் அறிஞரும் ஆவார். சாலிம் அலியின் முழுப்பெயர் சாலீம் மொய்ஜுதீன் அப்துல் அலி என்பதாகும். இவர் இந்தியாவில் முதன்முதலில் பறவைகளைப் பற்றிய முழுமையான தரவுகளைத் துவக்கியவர். இவர் பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தின் புரவலராக விளங்கியவர். பறவைகளின் வாழ்க்கையைப் பற்றியும், பழக்க வழக்கங்கள் குறித்தும் அவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் வாய்ந்தவை.

சாலிம் அலி பறவைகளின் நண்பராகவும், பாதுகாவலராகவும் விளங்கியதோடு மட்டுமின்றி, இயற்கைப் பாதுகாப்பிலும் பெரும் நாட்டம் கொண்டிருந்தார்; பறவைகளின் நல்வாழ்வும், பாதுகாப்பும், இயற்கைப் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்தவை என்ற சூழியல் சார்ந்த கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.


நீதிக்கதை 

ஒரு நாள் எறும்பும் பறவையும் தங்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டன. யார் முதலில் சென்று அந்த வான்உயர்ந்த மலையை தொடுவது என்பது தான் இருவரின் பந்தயம்
பறவை எறும்பை பார்த்து ஏளனமாக சிரித்துவிட்டு மலையை நோக்கி பறந்தது. வெகு சீக்கிரத்திலேயே பறவை மலையின் உச்சியை தொட்டது.

மலை உச்சிக்கு சென்ற பறவை மேலிருந்து கீழே இருக்கும் எறும்பை தேடியது. அப்போது எறும்பு மலை அடிவாரத்தில் இருந்து பாதி தூரத்தை கூட தொடவில்லை.

எறும்பை பார்த்து பறவை கூறியது எனக்கு முதலிலேயே தெரியும் வெற்றி எனக்குதான் என்று.

பறவையிடம் ஒரு சிறு எறும்பு போட்டியிடலாமா? எறும்பை பார்த்து கேலி செய்து பறவை நகைத்தது.

வெகு நாட்கள் கழித்து எறும்பின் விடாமுற்ச்சியால் ஒரு நாள் எறும்பு அந்த மலையின் உச்சியை சென்றடைந்தது. அப்போது அந்த பக்கமாக மலையை கடந்து சென்ற பறவை மலை உச்சியில் இருக்கும் எறும்பை ஆச்சரியமாக பார்த்தது.


அப்போது பறவையை பார்த்து எறும்பு கூறியது, “வெற்றி என்பது எல்லோருக்கும் பொதுவானது. சிலருக்கு வெற்றி சீக்கிரமாகவே கிடைத்துவிடும் சிலருக்கோ தாமதமாகவும் கிடைக்கும். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தாலே போதும், வெற்றி ஒரு நாள் எல்லோருக்கும் நிச்சயம்”, என்றது எறும்பு.

இன்றைய செய்திகள் - 27.07. 2023

*லடாக் கார்கிலில் முதல் மகளிர் காவல் நிலையம் திறப்பு.

*விடிய விடிய பலத்த மழை - டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.

*சோழன் விரைவு ரயில் ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் நேரம் மாற்றம்.

*கூட்டாற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் தனித்தீவாக மாறிய உடுமலை வனப்பகுதி.

*ஜப்பான் ஓபன் பேட்மிட்டன்: முதல் சுற்றில் திரில் வெற்றி பெற்ற லக்ஷயாசென்.

*4 ஓவர்...8 ரன்...7 விக்கெட் ....சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த மலேசிய வீரர் சையார்சுல் இசாட்.


Today's Headlines

*First women police station inaugurated in Kargil, Ladakh.

 *Heavy rain at dawn - Orange alert for Delhi: Flooding on roads.

 *Cholan Express train timing change from 14th August.

 * Udumalai forest area which has become a separate island due to increase in water flow in the river.

 *Japan Open Badminton: Lakshyasen wins first round.

 *4 overs...8 runs...7 wickets...Malaysian player Sayarsul Izad has set a new record in international T20 cricket.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

6 to 12th Std - Midterm Test & Unit Test - Time Table & Syllabus

 

2023-24 ஆம்கல்வியாண்டு 6 முதல் 9 ஆம்வகுப்பு வரை மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்பருவத்தேர்வு . 10 மற்றும் 12 ஆம்வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் அலகுத் தேர்வுகால அட்டவணை மற்றும் பாடத்திட்டம்

Chennai Dt CEO Proceedings 

6 - 12th Std - Midterm Test & Unit Test - Time Table & Syllabus - Download here



 Click here for latest Kalvi News 

CRC - கணித ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவு பயிற்சி கையேடு

 

CRC - கணித ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவு பயிற்சி கையேடு

1 - 3 வகுப்புகள் EE இந்த வார செயல்பாடுகள் - EE Team

 வணக்கம் Teachers

1 - 3 வகுப்புகள் EE இந்த வார செயல்பாடுகள்

1) 2,3 வகுப்பு New Admission from Matric School Students க்கு மட்டும் மேற்கொள்ளுங்கள்

2) இன்று முதல் 

MODULE 5 FA B Assessment கணக்கு, English பாடங்கள் மேற்கொள்ளுங்கள்

3) தமிழ் பாட FA B வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்குங்கள் " August 03 வரை மேற்கொள்ளலாம்".4) MODULE 3 நாளை July27 இறுதி நாள்..Check Assessed Green colour & Screen shot எடுத்து வையுங்கள்



 Click here for latest Kalvi News 

கற்போருக்கான புதிய செயலி அறிமுகம்: மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் என அமைச்சர் உறுதி

 

தாம்பரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கற்போருக்கான புதிய செயலி - மணற்கேணி நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்தச் செயலி மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் என அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


`மணற்கேணி’ என்ற பெயரில் கற்போருக்கான புதிய செயலியை, தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி வெளியீட்டு நிகழ்ச்சி, தாம்பரத்தை அடுத்த சேலையூர், தாம்பரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடைபெற்றது.


மணற்கேணி - கற்போருக்கான செயலியை, யு.என்.சி.சி.டி., துணை பொது செயலர் மற்றும் நிர்வாக செயலருமான இப்ராஹிம் தயாவ் வெளியிட்டார். நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தாம்பரம் எம்எல்ஏ ராஜா, பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


அப்போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களுக்கு மட்டுமே காணொலி பாடங்கள் கிட்டும் என்ற நிலையை போக்கி அவற்றை அனைவருக்குமானதாக மாற்றும் நோக்கத்திலேயே இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.


மணற்கேணி செயலி, தமிழ் மற்றும் ஆங்கிலம் என, இரு மொழிகளிலும், 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாநில பாடத் திட்டத்தில் உள்ள பாடங்களை, 27,000 பாடப் பொருள்களாக, வகுப்புகள் தாண்டி வகைபிரித்து, அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு காணொலி முடிவிலும் கேள்விகள் கேட்கப்பட்டு, கற்போரின் புரிதல் திறனை சரிபார்க்கும் வசதியும் உள்ளது. மேலும், பாடங்களை எளிதில் புரிந்து கொள்வதற்கும், எதையும் விட்டு விடாமல் படிப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இச்செயலி இலவசமாக வழங்கப்படுகிறது.


இச்செயலியை, `ப்ளே ஸ்டோரில்’ எந்த தடையும் இன்றி, எளிதாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது, பிளஸ் 2 முதல் பருவத்துக்கான பாடங்களோடு இச்செயலி வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு வகுப்புக்கும், காணொலிகளும், கேள்விகளும் தயாராக தயாராக இச்செயலில் பதிவேற்றம் செய்யப்படும். தமிழகத்தில் மட்டுமின்றி உலகத்தில் எந்த இடத்தில் உள்ள தமிழர்களும், இச்செயலியை பயன்படுத்தலாம்.


மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கி அளித்துள்ள காணொலிகள் இச்செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மணற்கேணி செயலி வாயிலாக ஆசிரியர்கள் கற்பிப்பதன் மூலம் வருங்காலங்களில் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும் என்றார். பின்னர் மணற்கேணி செயலியை தொடங்கி வைத்த இப்ராஹிம் தயாவ் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.


 Click here for latest Kalvi News