வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு

 வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க விரும்புவோருக்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 3ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவில், தொழலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் ஓய்வூதியம் பெறுவோருக்கு அதிகபட்ச ஓய்வூதியம் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதற்கு மக்களுக்கு நான்கு மாதங்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, நான்கு மாத கால அவகாசம் மார்ச் 3ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்த நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் இணையதளத்தில், அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 3ஆம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் இந்த அதிக ஓய்வூதியம் பெற தகுதிபெறுவார்கள்?

ஊழியர்கள் மற்றும் முதலாளிகளில், ஊதிய உச்சவரம்பு ரூ 5,000 அல்லது ரூ 6,500 ஐ விட அதிகமாக சம்பளத்திலிருந்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிப்பு செய்தவர்கள்.

வருங்கால வைப்பு நிதி உறுப்பினராக இருந்த போது ஊழியர் மற்றும் முதலாளிகளில் கூட்டு இணைப்பினை பயன்படுத்தாதவர்கள்.

செப்டம்பர் 1, 2014 க்கு முன்பு உறுப்பினர்களாக இருந்த ஊழியர்கள் மற்றும் அந்த தேதியில் அல்லது அதற்குப் பிறகு தொடர்ந்து உறுப்பினர்களாக இருந்தவர்கள் இந்த புதிய திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களாவர்.

அதாவது, ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் இருந்து 12 சதவீதம் தொழிலாளர் சேமநல நிதியாகப் பிடிக்கப்படும். தனியார் நிறுவனங்களில் இதே தொகை ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் என இரு தரப்பினரிடமிருந்தும் பிடிக்கப்படும். இதில் தொழில் நிறுவனங்கள் அளிக்கும் 12 சதவிகிதத்தில் 8.33 சதவிகிதம் தொழிலாளரின் குடும்ப ஓய்வூதியத்துக்காக எடுத்துக் கொள்ளப்படும். ஊழயர்களின் பங்கான 12 சதவிகிதம் மற்றும் தொழில் நிறுவனங்களின் 3.5 சதவிகிதம் சேர்ந்து தொழிலாளர் சேமநல நிதிக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு 8.65 சதவிகிதம் வட்டி தரப்படும்.

இநத் திட்டத்தின் கீழ் பயன்பெறவதற்கான குறைந்தபட்ச ஊதியத் தொகை ரூ.6500ல் இருந்து ரூ.15,000 ஆக கடந்த 2014ல் உயர்த்தப்பட்டது.

மேலும், அடிப்படை ஊதியம் 15 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக பெறும் தொழிலாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள், ஊதிய உச்சவரம்பின்றி, முழு தொகைக்கும் சேர்த்து 8.33 சதவிகித ஓய்வூதியம் செலுத்தலாம். அதாவது ஒருவர் 40 ஆயிரம் ரூபாய் ஊதியமாக பெற்றாலும், 15 ஆயிரம் என்ற வரம்பின்றி, முழு ஊதியத்தையும் கணக்கெடுத்து 8.33 சதவிகிதத்தை ஓய்வூதியத்துக்கு பங்களிக்கலாம்.

எனவே, புதிய அறிவிப்பின்படி, அதிகபட்ச ஓய்வூதியம் பெற பணியாளர்களும், தொழில் நிறுவனங்களும் கூட்டாக விண்ணப்பிக்க அனுமதிக்கும் புதிய நடைமுறை, இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு வேளை, 2014ஆம் ஆண்டு செப்டம்பருக்கு முன்பே அதிக ஊதியம் பெற்றவராக இருந்து, ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்து அதை தொழிலாளவர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நிராகரித்திருந்தால் அவர்கள் மே 3ஆம் தேதிக்குள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

2014ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதிக்கு முன்னர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் சேர்ந்தவர்கள், தற்போது பணியில் இருந்து அதிக ஓய்வூதிய வசதியை பெறாமல் இருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ஒருவேளை இவர்களின் விண்ணப்பங்கள் முன்பு நிராகரிக்கப்பட்டிருந்தாலும் கூட மீண்டும் விண்ணப்பிக்கலாம்.


இபிஎஃப்ஓ திட்டத்தில் அதிக ஓய்வூதியம்: கேள்வி - பதில்கள்

 

இபிஎஃப்ஓ திட்டத்தில் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க விரும்பும் மூத்த குடிமக்களிடையே பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. பல்வேறு வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களிலும் ஏராளமான மூத்த குடிமக்கள் அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு தங்களது சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

அதிகாரிகள் பல விளக்கங்கள் அளித்தாலும் கூட பல்வேறு விடைகாணப்படாத கேள்விகளும் எழுந்துகொண்டேதான் இருக்கின்றன.

அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான கால அவகாசம் மார்ச் 3ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அது மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளா் ஓய்வூதிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் செல்லும் என உச்சநீதிமன்றம் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது.

இந்த தீர்ப்புக்குப் பிறகு, தங்களுக்கு ஒரு நியாயமான ஓய்வூதியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பலருக்கும் ஏற்பட்டாலும் கூட, அதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, அது தங்களுக்கு பொருந்துமா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

அதாவது,  தொழிலாளா் ஓய்வூதிய சட்டத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, ஓய்வூதிய பங்களிப்புக்கான அதிகபட்ச ஊதியம் மாதம் ரூ.6,500-இல் இருந்து ரூ.15,000-ஆக அதிகரிக்கப்பட்டது.

மாதம் ரூ.15,000-க்கு மேல் ஊதியம் பெறுவோா் 1.16 சதவீதம் கூடுதல் ஓய்வூதியப் பங்களிப்பை வழங்க வேண்டும் என விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஓய்வூதியத் திட்டத்தில் இணையும் தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.15,000-ஆக இருக்க வேண்டுமெனவும் விதிகள் திருத்தப்பட்டன.

ஓய்வூதிய சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்களுக்கு எதிராக கேரளம், ராஜஸ்தான், தில்லி மாநில உயா்நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த உயா்நீதிமன்றங்கள், புதிய திருத்தங்களை ரத்து செய்து உத்தரவிட்டன. அந்த உத்தரவுகளுக்கு எதிராக மத்திய அரசும், தொழிலாளா் ஓய்வூதிய நிதி அமைப்பும் (இபிஎஃப்ஓ) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

அந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் அனைத்துத் தரப்பு வாதங்களையும் ஆராய்ந்து, தொழிலாளா் ஓய்வூதிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

எனினும், ரூ.15,000-க்கு அதிகமாக மாத ஊதியம் பெறுவோா் மட்டுமே ஓய்வூதிய நிதியில் இணைய முடியும் என்ற விதியை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். புதிய திருத்தங்கள் தொடா்பாக நிலவிய பல்வேறு குழப்பங்கள் காரணமாக ஓய்வூதிய நிதியில் இணையாத தொழிலாளா்களுக்கு திட்டத்தில் இணைய 6 மாதம் அவகாசம் வழங்க வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மேலும், மாதம் ரூ.15,000-க்கு அதிகமாக ஊதியம் பெறுவோா் கூடுதலாக 1.16 சதவீதம் ஓய்வூதியப் பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற திருத்தத்தையும் நீதிபதிகள் ரத்து செய்தனா். இபிஎஃப்ஓ அமைப்பு கூடுதல் நிதியைத் திரட்டும் நோக்கில், இந்த விதி ரத்தானது 6 மாதங்களுக்கு செல்லாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனா். 6 மாதங்களுக்குத் தொழிலாளா்களிடம் இருந்து கூடுதல் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

தற்போதைய நிலவரப்படி, இந்த சேமநல வைப்பு நிதியின் கீழ் யார் ஒருவரும் ரூ.3500க்கு மேல் ஓய்வூதியம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள், ஆன்லைன் விண்ணப்பித்தல் முறைக்கு மாற்றாக தங்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கி பூர்த்தி செய்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மூன்று பிரிவினர் அதிக ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்கலாம். முதலில், ஒரு தொழிலாளர் இந்த திட்டத்தில் தற்போது இணைந்திருக்க வேண்டும். பணியில் இருந்து, அதிகபட்ச ஓய்வூதியம் திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும். தற்போது இவர்கள் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து அதிக ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

இரண்டாவது, 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பின் ஓய்வு பெற்றவர்கள், தற்போது தொழில் நிறுவனத்துடன் இணைந்து இதில் பயன்பெறலாம்.

மூன்றாவது, 2014ஆம் ஆண்டுக்கு முன்பே ஓய்வு பெற்றிருந்தாலும், அப்போதே இந்த திட்டத்தில் இணைந்திருப்பவர்களும் கூட இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தில் இணைந்து, முன்கூட்டியே தங்களது பணத்தை எடுத்துவிட்டவர்கள் இதில் சேர முடியாது.

இரண்டாவது, இபிஎஃப்ஓ திட்டத்தில் 2014ம் ஆண்டு செப்டம்பர்மாதத்துக்குப் பிறகு இணைந்தவர்களாலும் இந்த அதிக ஓய்வூதியம் திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது.

ஒரு தொழிலாளரின் ஊதியம், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான அதிகபட்ச ஊதியத்தை விட அதிகமாக இருந்து, அது எங்கும் குறையாமல் இருந்திருக்க வேண்டும். இதில் தொழிலாளர் மற்றும் தொழில் நிறுவனம் இணைந்து விண்ணப்பிப்பது என்பது ஒரு விதியாக உள்ளது.

எனவே இது முற்றிலும் தொழில் நிறுவனத்தைச் சார்ந்ததாகவே உள்ளது. அதாவது, அதிக ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு அதிகபட்ச ஊதியத்தில் 12 சதவிகிதத் தொகையை செலுத்த முன் வர வேண்டும். ஆனால், இப்போதெல்லாம் பிஎஃப் தொகையை செலுத்துவதிலிருந்து தப்பிக்கவே நிறுவனங்கள் விரும்புகின்றன. அவ்வாறு இல்லையென்றாலும் அதிகபட்ச ஊதியம் ரூ.15000 என்ற அளவிலேயே நிறுத்தவும் விரும்புகின்றன. எனவே, இதிலிருக்கும் பல்வேறு சிக்கல்கள் காரணமாக, அதிக ஓய்வூதியம் பெற விரும்பும் தொழிலாளர்கள் அனைவராலும் இதில் இணைய முடியாமல் போகும் வாய்ப்பு உள்ளது. 

இதுபோல, கணவர் இறந்துவிட்டால், மனைவிக்கு ஓய்வூதியம் கிடைக்கும்பட்சத்தில், அவருக்கு இந்த திட்டத்தால் பயனடைய முடியுமா என்ற கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை என்றே களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.

வருங்கால வைப்பு நிதி இணையதளத்தில் தொழிலாளர்கள் பதிவு செய்ய முன்வந்தாலும் கூட, அவர்கள் பணியாற்றும் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பும் விண்ணப்பிக்கும்போது தேவைப்படுகிறது. இதனை தொழிலாளர்களும் ஏற்கனவே ஓய்வூதியம் பெறுவோரும் எப்படி பெறுவார்கள் என்பதும் பதில் கிடைக்காத கேள்வியாகவே உள்ளது.

Click here for latest Kalvi News 

பாடத்திட்டத்தை மேம்படுத்த யு.ஜி.சி., உத்தரவு

 'இந்திய உயர்கல்வி நிறுவனங்கள், டெக்ஸ்டைல் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் அளித்து, பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும்' என, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக, யு.ஜி.சி., சார்பில், உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:


துணிநுால் எனப்படும், டெக்ஸ்டைல் தொழில்நுட்பம் என்பது, துணிகள் தயாரிப்பு மட்டுமின்றி, வேளாண்மை, மருத்துவம், உள்கட்டமைப்பு, தானியங்கி, விண்வெளி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளுக்கு தேவையான துணி சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்வதிலும் முக்கிய பங்காற்றுகிறது.


சமீபகாலமாக டெக்ஸ்டைல் துறை, சர்வதேச அளவில், 'டிரெண்ட்'டாக மாறியுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதியிலும் பொருளாதார அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே, டெக்ஸ்டைல் தொழில்நுட்பம் மற்றும் அந்தத் துறை சார்ந்த வளர்ச்சியை மேற்கொள்ள, 1,400 கோடி ரூபாய் மதிப்பில், புதிய திட்டங்களை மத்திய அரசு வகுத்துள்ளது.


டெக்ஸ்டைல் துறையில், ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பு, வளர்ச்சி, ஊக்குவித்தல், சந்தை மேம்பாடு, ஏற்றுமதி, கல்வி, திறன் மேம்பாடு, தொழில்நுட்ப பயிற்சி உள்ளிட்ட பிரிவுகளில், வளர்ச்சியை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.


எனவே, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், டெக்ஸ்டைல் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பாடத் திட்டங்களை மேம்படுத்த வேண்டும். டெக்ஸ்டைல் தொழில்நுட்பம் சார்ந்த பாடங்களை, கல்லுாரிகள், பல்கலைகளில், அதிகம் ஏற்படுத்த வேண்டும்.


இதுகுறித்து, மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள டெக்ஸ்டைல் தொழில்நுட்ப வழிகாட்டு முறைகளை பின்பற்றி, இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும்.


இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பிளஸ் 2 செய்முறை தேர்வு நாளை மறுநாள் துவக்கம்

 பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, நாளை மறுநாள் துவங்குகிறது.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, மார்ச் 14; பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 13ம் தேதியும் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.


இந்நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, மார்ச் 1ம் தேதியான நாளை மறுநாள் துவங்குகிறது. மாநிலம் முழுதும், 3,000 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உட்பட, 5,000 பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில், செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது.


சம்பந்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளின் ஆய்வகங்களில், உரிய வகையில் ரசாயன பொருட்களும், ஆய்வக பயன்பாட்டு பொருட்களும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.


அவற்றை பயன்படுத்தி, எந்த முறைகேடும், குளறுபடியுமின்றி, செய்முறை தேர்வை நடத்த வேண்டும் என, பள்ளிகளுக்கு அரசு தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.


இந்த செய்முறை தேர்வை, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், தொழிற்கல்வி பாடங்கள் உள்ளிட்டவற்றுக்கு, பாட வாரியாக அட்டவணை தயாரித்து, வரும் 9ம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.


செய்முறை தேர்வுக்கு, அரசு தேர்வுத் துறை வழங்கியுள்ள பட்டியலில் உள்ள அனைத்து மாணவர்களையும் பங்கேற்க செய்ய வேண்டும். யாரையும் தேர்வு எழுத விடாமல் தடுக்கக் கூடாது.


தேர்வுத்துறையால் சலுகை அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும், செய்முறை தேர்வு நடத்த வேண்டாம் என்று, தலைமை ஆசிரியர்கள் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.



வகுப்பறை, பள்ளி, எண்ணும் எழுத்தும் வகுப்பறை பார்வை படிவங்கள்

 கீழே போடப்பட்டுள்ள படிவங்களில் குறிப்பிட்டுள்ளவாறு பள்ளி பார்வை மற்றும் ஆய்வு இருக்கும். எனவே அனைத்துப் பள்ளிகளிலும் இப்படிவங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். வகுப்பறை பார்வை படிவங்கள் ஆசிரியர் எண்ணிக்கைக்கேற்ப எடுத்து வைத்துக் கொள்ளவும். வட்டாரக் கல்வி அலுவலர்களின் பார்வையின் போது கொடுக்கக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.


Class Visit Form - Download here


Ennum Ezhuthum Visit Report Form - Download here


BEO School Visit Form - Download here

CORONA காலத்தில் எடுத்த EL / ML அனைத்தும் cancel செய்து கொள்ளலாம் - அரசாணை வெளியீடு.

 


CORONA காலத்தில் எடுத்த விடுப்பு நாட்கள் அனைத்தும் பணிக்காலமாக அறிவித்து அரசாணை வெளியீடு

EL/ML அனைத்தும் cancel செய்து கொள்ளலாம்.


GO NO : 62 ,Date : 13.02.2023 - Download here...


NMMS Original Question Paper And Answer Key 2023

 NMMS Original Question Paper And Answer Key 2023


 NMMS MAT 2023  key answers with original question paper - Mr VENKATACHALAM A, -  Download here


NMMS MAT 2023  key answers with original question paper - Mr SK. Senthil kumar - Download here


NMMS SAT 2023  key answers with original question paper - Download here

EE - இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பெண் பட்டியல் குறித்த விளக்கம் - EE

 நமது TNSED SCHOOLS செயலியில் இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டிற்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 


நமது செயலியில்  வளரறி மதிப்பீடு (அ) மதிப்பெண்கள் பதிவு செய்தவர்கள்  மதிப்பெண் பட்டியலை நகல் எடுத்துக்கொண்டு அதில் மொத்த மதிப்பெண்கள், தரநிலை மற்றும் பாட இணை செயல்பாடுகளுக்கான தரநிலை போன்றவற்றை  எழுதி பதிவேடாக பராமரித்துக் கொள்ளவும்.


2. நமது செயலியில் வளரறி மதிப்பீடு (அ)விற்கு மதிப்பெண்கள் பதிவு செய்யாதவர்கள் இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு மதிப்பெண் பட்டியலை நகல் எடுத்துக்கொண்டு அதில் வளரறி மதிப்பீடு (அ) விற்கான மதிப்பெண், மொத்த மதிப்பெண்கள், தரநிலை,பாட இணை செயல்பாடுகளுக்கான தரநிலை போன்றவற்றை எழுதி பதிவேடாக பராமரித்துக் கொள்ளவும். 


நன்றி.

TN EE MISSION

தலைமை ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

CoSE - HS HM Mentor Training.pdf - Download here


3000 ஆசிரியர் பயிற்றுநர்களின் கலந்தாய்விற்கான விவரங்களை EMIS இணையதளத்தில் சரிபார்க்க உத்தரவு.

 Respected CEOs

Chief Educational officers are requested to

BRTE data must be downloaded from EMIS and signed off as correct.


2500 BRTEs List - Download here


500 BRTEs List - Download here


Check the accuracy of each data entered:


Carefully Check all the data points entered in EMIS portal to ensure accuracy and completeness. BRTE data must be downloaded from EMIS and signed off as correct.

2. Review for accuracy:

Compare the data entries with the service register to ensure accuracy.

3. Check for consistency:

Review the data for any inconsistencies, such as incorrect spelling (Name) or incorrect formatting (date).

4. Ensure the data is up-to-date:

Ensure that the data is accurate and up-to-date (ex. place of work) by cross-referencing with other sources and ensuring that any changes are properly documented and the signed correction reports mailed to brtessatn@gmail.com on or before 27.02.2023.


தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களின் தொலைபேசி எண்கள் அடங்கிய தொலைபேசி கையேடு (Telephone Directory) வெளியீடு

 01.01.2023 ன் படி தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களின் தொலைபேசி எண்கள் அடங்கிய தொலைபேசி கையேடு (Telephone Directory) வெளியீடு

Telephone Directory List - Download here

தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சிக்கு ஏற்பாடு

 

அரசு தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு, பெங்களூரில் ஆங்கில மொழி பயிற்சி அளிக்கப்படும்' என, தொடக்க கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது.


சமீப ஆண்டுகளில், ஆங்கில மொழி வழியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.


அதனால், ஆங்கில வழியில் பாடம் நடத்தும் தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளது.


அரசு தொடக்க பள்ளிகளில், தமிழ் வழியில் மட்டுமே கற்றுத் தருவதால், மாணவர் சேர்க்கையும் குறைந்துள்ளது.


எனவே, அரசு தொடக்க பள்ளிகளில், ஆங்கில வழி கற்பித்தலை அதிகரிக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


இதற்கான முன்னேற்பாடாக, அரசு தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆங்கில மொழி கற்பித்தல் மற்றும் பேச்சு பயிற்சி தர முடிவு செய்யப்பட்டு உள்ளது.


இதற்காக, பெங்களூரில் உள்ள மண்டல ஆங்கில மொழி பயிற்சி நிறுவனம் வழியே, அரசு தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்பட உள்ளது.


இதுகுறித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


அதில், முதற்கட்டமாக, சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, வேலுார், தஞ்சாவூர் உட்பட, 13 மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.


இல்லம் தேடி கல்வி திட்ட விபரம் தனியார் நிறுவனத்திற்கு அனுமதி

 

தமிழக அரசின், 'இல்லம் தேடி கல்வி திட்டம்' விபரங்களை, தன்னார்வ நிறுவனங்கள் சேகரிக்க, பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.


கொரோனா ஊரடங்கு நேரத்தில், பள்ளிகள் செயல்படாமல் இருந்த போது, தனியார் பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக, மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தின.


அரசு பள்ளி மாணவர்களுக்கு, நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் கற்பித்தல் பணி நடக்கவில்லை.


இதனால், கற்றலில் பின்தங்கிய அரசு பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கும் வகையில், மாலை நேர வகுப்புகளை நடத்த, இல்லம் தேடி கல்வி திட்டம் அறிமுகமானது.


ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் செலவிலான திட்டம், இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.


இதில், தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாணவர்களின் வீடுகளுக்கு அருகேயுள்ள பொது இடங்களில், செயல்முறை கற்பித்தல் மற்றும் மாலை நேர டியூஷன் வகுப்புகளை நடத்துகின்றனர்.


இத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர், குடியிருப்பு விபரம், பயிற்சி பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் விபரம், திட்டம் சார்ந்த கல்வி அலுவலர்கள், பெற்றோர், ஆசிரியர் மற்றும் அதிகாரிகளின் மொபைல் போன் எண்கள் உள்ளிட்ட தகவல்களை, தரவுகளாக சேகரிக்க தன்னார்வ நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.


இதற்காக, அந்த நிறுவனங்கள் விண்ணப்பித்த நிலையில், சென்னையில் செயல்படும் தனியார் நிறுவனத்துக்கு, தகவல்களை சேகரித்து கொள்ள, பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.


இம்மாதம் முதல் ஏப்ரல் வரை தகவல்களை சேகரித்து கொள்ளலாம்.