SMC Meeting - EMIS - இல் பதிவேற்றம் செய்தல் - SPD Proceedings

SMC Meeting - EMIS - இல் பதிவேற்றம் செய்தல் - SPD Proceedings



Practical Exam Instructions | செய்முறைத் தேர்வு விதிமுறைகள்





அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம்!!!

அரசுபள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தமிழ்நாடு பெலோஷிப் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

பல துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்களை கொண்டு கல்வித்தரத்தை உயர்த்த புதியதிட்டம் செயல்படுத்தப்படுகிறது

மாவட்டத்திற்கு ஒரு Senior fellow என்கிற பணியிடத்துக்கு 5 ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேரம் குறைப்பு




தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்தேர்வுகள் நேரடியாக நடைபெற உள்ளது. 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே முதல் வாரத்தில் இருந்து நடைபெற இருக்கும் பொதுத்தேர்வுக்கான பணிகல் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.
இதற்கிடையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் வரும் திங்கட்கிழமை முதல் நடைபெற உள்ளது. இதற்கான சுற்றறிக்கைகள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வெளியிட்டுள்ளனர். இதில் முக்கியமாக செய்முறைத்தேர்வுக்கான நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் செய்முறைத்தேர்வுக்கான மதிப்பெண்கள் 50 ஆக இருந்தது. இது தற்போது 30 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. 200 மதிப்பெண்களை கொண்ட ஒரு பாடத்தின் மதிப்பெண்கள் ஒட்டுமொத்தமாக 100 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், செய்முறைத்தேர்வுக்கான மதிப்பெண்களும் 50 லிருந்து 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த 30 மதிப்பெண்களில் 10 மதிப்பெண்கள் அக மதிப்பீட்டு மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது. 

எனவே மாணவர்கள் 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே செய்முறைத்தேர்வுகளை எழுதுகின்றனர். மதிப்பெண்கள் குறைந்துள்ள காரணத்தினாலும், கூடுதல் நேரம் இருக்கின்ற காரணத்தினாலும், தேர்வுகளை விரைவாக முடிப்பதற்காகவும் இந்த தேர்வுகள் 3 மணியில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. 

இந்த நேரம் குறைப்பினால், மாணவர்களுக்கு எவ்வித சிக்கலும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இல்லம் தேடி கல்வி APP NEW UPDATE -0. 27






இல்லம் தேடி கல்வி APP NEW UPDATE -0. 27 Version Available 

What's new • 

1. Added OoSC module 

2. Added Teaching Learning Materials module 

3. Updated Resource Materials module

App update Link - Download here...



SMC Selected Members Model Certificate

பள்ளி மேலாண்மைக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான சான்றிதழ் மாதிரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படின் பயன்படுத்திக் கொள்ளலாம்...

நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை..

நாளை SMC மறுகட்டமைப்பு நடைபெறும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் வரவேண்டியதில்லை. தொடக்கக் கல்வி இயக்குநர் தகவல்.


நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மட்டும்  நாளை விடுமுறை..

 எப்போதும் போல் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்.

தொடக்கப் பள்ளிகள் செயல்பட வேண்டும். நாளை பள்ளி மேலாண்மைக்குழு என்பதால் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர அவசியம் இல்லை. ஆசிரியர்கள் அனைவரும் வர வேண்டும்.


6,7,8 -Social Science Model Questions -T/M & E/M pdf

Unit To Unit Transfer - Apply Option Now Available in EMIS Website

 அலகு விட்டு அலகு மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் வசதி தற்போது EMIS தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.




மனமொத்த மாறுதலுக்கான EMIS இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது!!

மனமொத்த மாறுதலுக்கான EMIS இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது!!! TEACHERS INDIVIDUAL LOGIN -ID-

1 - 5th Standard - 3rd Term Model Question Paper

Latest 1st to 5th Study Materials - Tamil Medium ( Based on New Syllabus )

Latest 1st to 5th Study Materials

  • 1 - 5th Standard - 3rd Term Question Paper Model |  TNPTF - Download Here

SMC மறு கட்டமைப்புக்கு தேவையான படிவங்கள் அனைத்தும் ஒரே கோப்பாக...

பள்ளி மேலாண்மைக் குழு  ( SMC ) மறு கட்டமைப்புக்கு ( 2022 - 2023 ) தேவையான படிவங்கள் அனைத்தும் ஒரே கோப்பாக...

அரசுப் பணியாளர்களுக்கு வீடு கட்ட முன்பணம் - சட்டப்பேரவையில் அறிவிப்பு.


அரசுப் பணியாளர்களுக்கு வீடு கட்டும் முன்பணம் - சட்டப்பேரவையில் இன்றைய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் அறிவிப்பு!

Housing Loan - TN Government Press News - Download here ( pdf) 

மூன்றாம் பருவத் தொகுத்தறி வினாத்தாள்கள் SA 60 MARKS - வகுப்பு 1 முதல் 5 வகுப்பு




1St Std SA QUESTIONS T/M - Download Here

RTE 2022_2023 Admission - Dir Circular





2022-2023 கல்வியாண்டில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி (RTE) அனைத்து சிறுபான்மையற்ற  தனியார் சுயநிதி  பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடு- அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து RTE மாநில  முதன்மை தொடர்பு அலுவலர் & மெட்ரிக் பள்ளி இயக்குனரின் செயல்முறைகள்!


RTE 2022_2023 Admission Circular.pdf - Download here

Mutual & Union Transfer - Revised Counselling Schedule Published

 மனமொத்த மாறுதல், அலகு விட்டு அலகு மாறுதல் விண்ணப்பம்  சார்ந்து - திருத்திய கலந்தாய்வு அட்டவணை - பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

மனமொத்த மாறுதல் / அலகு விட்டு அலகு மாறுதல் சார்பான அறிவுரைகள் , கல்வி தகவல் மேலாண்மை முறைமையில் எவ்வாறு பதிவேற்றம் செய்தல் மற்றும் கலந்தாய்விற்கான காலஅட்டவணைகள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் EMIS- ல் இணையதளத்தில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விண்ணப்பங்களை உரிய காலத்திற்குள் பதிவேற்றம் செய்ய இயலாதநிலையில் கீழ்க்கண்ட திருத்திய காலஅட்டவணையின்படி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து கல்வி அலுவலர்களும் கேட்டுக் முதன்மைக் கொள்ளப்படுகிறார்கள்.

Mutual & Union Transfer - Revised Counselling Schedule 



சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? பல்வேறு கேள்விகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்.

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு (டெட்) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது தொடா்பாக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று பரிசீலனை செய்யப்படும் என  தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

சென்னை, ஆழ்வாா்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் 2021-ஆம் ஆண்டுக்கான ‘அன்பாசிரியா் விருது’ வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் சிறப்பான கல்விப்பணியோடு சமூக அக்கறையுடன் கூடிய மாணவா்களை உருவாக்கி வரும் 46 ஆசிரியா்களுக்கு, அன்பாசிரியா் விருதை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி பேசியது:

ஆசிரியா்கள் அனைவருமே பெருமைக்குரியவா்கள்தான்.  மாணவா்களுக்கு ஆசிரியா்கள் இரண்டாவது பெற்றோராகத் திகழ்கின்றனா். சமுதாயம் அறவழியில் நடைபெறுவதில் ஆசிரியா்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. முதல்வா் அமைத்துள்ள பள்ளி மேலாண்மைக் குழு மூலமாகவும், ‘நான் முதல்வன்’ திட்டம் மூலமாகவும் அரசுப் பள்ளி மாணவா்கள், அரசு ஆசிரியா்களின் திறனை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஆசிரியா் தகுதித் தோ்வுக்காக விண்ணப்பிக்கும் தேதி நிறைவடைந்துள்ள நிலையில் அதனை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது. இது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்.

நீட் தோ்வு தமிழகத்தில் இல்லாமல் செய்வதே அரசின் நோக்கம். அரசுப் பள்ளி ஆசிரியா்கள் 148 கோரிக்கைகளை பள்ளி கல்வித் துறையிடம் முன்மொழிந்துள்ளனா். இதில் 40-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் ஏற்புடையதாக உள்ளன. முக்கியமாக அரசாணை 101, 108 ஆகியவற்றை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா். அதை முதல்வா் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளேன்; பரிசீலனையில் உள்ளது.

சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொடக்கப் பள்ளிகள் சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.

EMIS- APP - & WEBSITE NOW WORKING | EMIS APP மற்றும் இணையதளம் இன்று வேலை செய்கிறது

EMIS இணைய பயன்பாடு மற்றும் மொபைல் ஆப்ஸ் சேவைகள் ஏப்ரல் 13 முதல் 17 ஏப்ரல் இரவு 9 மணி வரை வேலை செய்யத நிலையில் இன்று வேலைசெய்ய தொடங்கியது.





CBSE Exam முதல் NEET Exam வரை - ஏப்ரல் மாதத்தில் முக்கியமான கல்வி நிகழ்வுகள்.!

இந்த ஏப்ரல் மாதத்தில், கல்வி சார்ந்த மிக முக்கியமான அறிவிப்புகள் வெளியாக இருக்கின்றன. குறிப்பாக, முதல் முறையாக நடத்தப்பட உள்ள ஒற்றை கல்லூரி நுழைவுத் தேர்வு, 30 லட்சம் மாணவர்களுக்கு தொடங்க உள்ள சிபிஎஸ்இ தேர்வுகள், தேசிய அளவிலான பொறியியல் நுழைவுத் தேர்வு - ஜேஇஇ மெயின்ஸ் ஆகியவை இதில் அடங்கும். ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட உள்ள முக்கிய தேர்வுகள் குறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சியூஇடி மாணவர் சேர்க்கை :

நாட்டிலேயே முதல் முறையாக மத்திய பல்கலைக்கழகங்களுக்கான ஒரே நுழைவுத் தேர்வு (சியூஇடி) நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்பதற்கான பதிவு நடவடிக்கைகளை தேசிய திறனாய்வு முகமை (என்டிஏ) கடந்த 6ஆம் தேதி தொடங்கியது .

ஜேஇஇ மெயின்ஸ் அனுமதிச்சீட்டு :

ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு முதல் செஷனுக்கான அனுமதிச்சீட்டுகள் ஏப்ரல் 3ஆவது வாரத்தில் வெளியிடப்பட உள்ளது. பொறியியல் நுழைவுத் தேர்வின் முதல் அமர்வு என்பது ஏப்ரல் 21, 24, 25, 29 மற்றும் மே 1, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு இரண்டு அமர்வுகளாக நடைபெற உள்ளது. முதல் அமர்வு தேர்வுக்கான பதிவு என்பது ஏப்ரல் 5ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. அதற்குப் பிறகு இரண்டாம் அமர்வுக்கான விண்ணப்ப நடவடிக்கை தொடங்கும். இரண்டாம் அமர்வு தேர்வு என்பது மே 24, 25, 26, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

சிஐஎஸ்சிஇ வாரிய தேர்வுகள் :

சிஐஎஸ்சிஇ கல்வி வாரியத்தில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி ஜூன் 13ஆம் தேதியுடன் நிறைவுபெற உள்ளது

இரண்டாம் பருவத் தேர்வுகள் 1.5 மணி நேர கால அளவில் நடைபெற உள்ளன. கேள்வித் தாள்களைப் படித்துப் பார்ப்பதற்காக மாணவர்களுக்கு 10 நிமிடங்கள் வழங்கப்படும். தேர்வு நடைபெறும் நாளில் நண்பகல் 1.50 மணியளவில் மாணவர்களுக்கு கேள்வித் தாள்கள் வழங்கப்படும்.

சிபிஎஸ்இ வாரிய தேர்வுகள் :

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்க உள்ளன

இரண்டு வகுப்புகளுக்குமே தேர்வு என்பது காலை 10.15 மணிக்கு தொடங்கும். கேள்வித் தாள்களை படிப்பதற்காக 15 நிமிடங்கள் வழங்கப்படும்.

நீட் தேர்வு அறிவிக்கை :

நீட் தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 6 தேதி முதல் தொடங்கியது. ஏப்ரல் 6 தேதி முதல் மாணாக்கர்கள் விண்ணப்பங்களை neet.nta.nic.in  இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 06-5-2022.





12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்து வழிகாட்டுதல் - நான் முதல்வன் என்ற இணையதளம் வாயிலாக நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்து வழிகாட்டுதல் - நான் முதல்வன் என்ற இணையதளம் வாயிலாக நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!!


Click here to download Pdf file

6 - 9 ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வு கால அட்டவணை!

6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு கால அட்டவணை- மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் அறிவிப்பு..




SMC மறுகட்டமைப்பு நடைபெறும் நாட்கள் - SPD Proceeding

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு வழிகாட்டுதல்கள் 16.03.2022 அன்று அனைத்து விரிவான அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மார்ச் 20 ம் தேதி நடைபெற்ற பெற்றோர்கள் கூட்டத்தில் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து மறுகட்டமைப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. மறுகட்டமைப்பு ( உறுப்பினர்கள் தெரிவு ) செய்வது தொடர்பான கால அட்டவணை மற்றும் நடைபெறும் நாள் கீழ்கண்டவாறு நடத்த அறிவுறுத்தப்படுகிறது.
SMC



EMIS WEBSITE வரும் 17ந்தேதி வரை செயல்படாது

 EMIS WEBSITE வரும் 17ந்தேதி வரை செயல்படாது




Due to scheduled maintenance activity, All EMIS web application  & Mobile app services will not be available from 13th April to 17th April 9 Pm.

- TN School Education Department



சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது : தமிழ் நாடு அரசு

ஆண்டுதோறும் 100  சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது - பள்ளிக்கு ரூ.10 இலட்சம் ஊக்க நிதி வழங்கப்படும்  சட்டப் பேரைவையில் பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஷ் அறிவிப்பு.


சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது 

கல்வி , விளையாட்டு , மாணவர் மேம்பாடு . பள்ளிக் கட்டமைப்பு , பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடு . இல்லம் தேடிக் கல்வி என அரசின் திட்டங்கள் அனைத்தையும் சிறப்பாகச் செயல்படுத்தும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படும் . 


ஆண்டுதோறும் 100 தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும் , கேடயமும் . பள்ளிக்கு ரூ .10 இலட்சம் ஊக்க நிதியும் வழங்கப்படும் .



பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2022 - அமைச்சர் அறிவிப்பு.

பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2022 - அமைச்சர் அறிவிப்பு.




பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை முக்கிய தகவல்கள்
  • 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முழுமையடைந்துள்ளது
  • 100% மாணவர்கள் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சேர்ந்து படித்து வருகின்றனர்
  • 9, 10-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 94.20%
  • 11, 12-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 88.60% - 
  • பள்ளிக்கல்வித்துறையின் சேவைகளை கணினி மயமாக்க நடவடிக்கை
  • அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் Smart Classes ஏற்படுத்தப்படும் - 
  • பள்ளி நூலகங்களில் உள்ள புத்தகங்கள் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள தனி Mobile App உருவாக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை


    click here to download pdf file

மனமொத்த மாறுதல் சம்பந்தமாக கூடுதல் அறிவுரைகள் வழங்கி இணை இயக்குனர் செயல்முறைகள்

மனமொத்த மாறுதல் சம்பந்தமாக கூடுதல் அறிவுரைகள் வழங்கி இணை இயக்குனர் செயல்முறைகள்




அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளரை மேல்நிலைப் பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய உத்தரவு.

 9 மற்றும் 10ஆம் வகுப்பில் 80க்கும் குறைவாக உள்ள மாணவர்கள் பயிலும் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளரை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு  13.04.2022க்குள் பணி நிரவல் செய்ய பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!