அனைத்து வகை அரசு பள்ளிகளுக்கும் 2-ஆம் கட்ட பள்ளி மானியத் தொகை விடுவிப்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 

IMG_20240417_225016


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2023 -24 ஆம் நிதியாண்டு அனைத்து வகை அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை ( Composit School Grant /Sim for Tablet -june -24) இரண்டாம் கட்டமாக மீதம் உள்ள 50% மானியத்தொகை அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


மத்திய கல்வி அமைச்சகத்தின் , திட்ட ஒப்புதல் குழு 2023-24ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக UDISE 2021-22ன்படி பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக் கேற்ப அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியம் பரிந்துரை வழங்கியுள்ளது.


 பார்வை 3 ல் காணும் மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகளின்படி 50 சதவீதம் பள்ளி மானியம் ஏற்கனவே ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலாக விடுவிக்கப் பட்டுள்ளது . தற்போது பார்வை 4 ல் காணும் சென்னை -6 , மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகளின்படி மீதமுள்ள 50 சதவீத பள்ளி மானிய தொகையினை அனைத்து அரசு பள்ளிகளுக்கு வழங்கிடும் வகையில் ரூ 632072500 ( ரூபாய் அறுபத்து மூன்று கோடியே இருபது இலட்சத்து எழுபத்திரண்டாயிரத்து ஐநூறு மட்டும் ) பள்ளிக் கல்வி இயக்குநருக்கு விடுவிக்கப்பட்டு , மானியத் தொகை பள்ளிக் கல்வி இயக்குநரின் வங்கி கணக்கிற்கு பெறப்பட்டுள்ளது . எனவே பார்வை 4 ல் காணும் மேற்காண் மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகளின்படி மீதமுள்ள 50 சதவீதம் பள்ளி மானிய தொகையினை இணைப்பில் கண்டவாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அவர்களின் வங்கி கணக்கிற்கு பணப்பரிமாற்றம் ( Fund Transfer ) செய்திட பள்ளிக் கல்வி இயக்குநரின் நேர்முக அலுவலருக்கு ஆணை வழங்கப்படுகிறது.


இந்நிதியினை ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ள Tablet- க்கு தேவையான SIM- ற்கான ஜுன்'24 மாதத்திற்கான தொகையினை மட்டும் ( Rs.110 / -per Teacher ) பள்ளி மானியத்திலிருந்து மேற்கொள்ளவும் , பள்ளி மானியத் தொகையினை பார்வை 3 ல் குறிப்பிட்டுள்ள செயல்பாடுகள் மற்றும் மேற்கூறிய முன்னுரிமை தவிர வேறு எந்த செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தாமல் உரிய காலத்திற்குள் நிதியினை பயன்படுத்த அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


இணைப்பு : பணப்பரிமாற்ற வங்கி எண் விவரப் பட்டியல்

👇👇👇👇👇

Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தேர்தல் பணிக்கு கிளம்பிட்டீங்க போல...இதெல்லாம் எடுத்தாச்சானு ஒரு முறை பார்த்துக்கோங்க...

 .com/

தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் மறவாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள் விபரம் :


1. மாற்று உடைகள் ( தேவையானவை )

2. தேங்காய் எண்ணெய்

3. பவுடர், சீப்பு , பொட்டு, ப்ரஷ் , பேஸ்ட்

4. மாத்திரைகள் , இன்ஹேலர்கள்

5. விக்ஸ், தலைவலி தைலம்

6. பிஸ்கட் பாக்கெட்

7. இரண்டு ஸ்கெட்ச்

8. Buds - 2 - ( மை வைக்க )

9. டார்ச் லைட்

10. பெட்ஷீட் / துண்டு

11. மூக்கு கண்ணாடி (தேவை உள்ளவர்கள்)

12. பேனா சிவப்பு & நீலம்

13. Ex. box & Table fan ( வாகனத்தில் செல்பவர்கள் ) ( Booth ல போதிய fan வசதி இருக்காது )

14. தேவையான குடிநீர் ( வேறு குடிநீர் ஒத்துக் கொள்ளாது என்பவர்கள் )

15. EDC - படிவம் original. (ஒட்டு போட + Photo )


16. Voter ID / ஆதார் Card.

17. 1 முதல் 500 வரை எண்கள் கொண்ட பேப்பர் - 2 ( P1 க்கு மட்டும் )

18. முந்திரி , பாதாம் பருப்பு + திராட்சை, கடலை மிட்டாய் / நொறுக்கு தீனி ( சாப்பாடு சரி இல்லனா ...)

19. Cell phone + Headphone + Charger

20. flask ( தேவை உள்ளவர்கள்)

21. மிக முக்கியமானது கண் கண்ணாடி


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Polling Station Materials, Forms, Envelopes - Check List

 IMG_20240417_131626

வாக்குச்சாவடிக்கு வழங்கப்படும் பொருட்கள், படிவங்கள், உறைகள்

LIST OF POLLING MATERIALS FOR A POLLING STATION

Polling Station Materials, Forms, Envelopes - List 👇

Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மணற்கேணி செயலி மூலம் கற்பித்தலை முன்னெடுக்க வேண்டும்: ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவு

 1231957

மணற்கேணி செயலியை பயன்படுத்தி வகுப்பறைகளில் கற்பித்தல் செயல்பாடுகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: மாநில பாடத்திட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையான கணிதம் மற்றும் அறிவியல் புத்தகங்களில் உள்ள பாடங்களுக்கான காணொலி காட்சிகள் தமிழ், ஆங்கில வழியில் அனிமேஷன் வீடியோக்களாக மணற்கேணி செயலியில் வழங்கப்பட்டுள்ளன.


குறிப்பாக 11, 12-ம் வகுப்பில் உள்ள ஒவ்வொரு பாடப் பொருளும், அதற்கு அடிப்படையாக 6 முதல் 10-ம் வகுப்பு வரையான பாடப்பொருட்களுடன் தொடர்புபடுத்தி வழங்கப்பட்டுள்ளது.


வரும் கல்வியாண்டில்(2024-25) அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. எனவே, திறன் வகுப்பறைகள், கணினி ஆய்வகங்களில் மணற்கேணி இணையதள முகப்பின் வழியாக கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை பயிற்றுவிக்க ஏதுவாக ஸ்மார்ட் பலகையில்(Smart Board) அனிமேஷன் வீடியோக்களை பாடவாரியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் 6 முதல் 8-ம் வகுப்பு பாடங்களுக்கான அனிமேஷன் வீடியோக்களில் உள்ள பாடக் கருத்துக்கள் மற்றும் அந்த வீடியோக்கள் சரியாக உள்ளனவா என்பதை முன்கூட்டியே சரிபார்த்து கொள்ள வேண்டும்.


அதேபோல், ஆசியர்கள் தங்கள் செல்போனில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதற்கான மணற்கேணி க்யூஆர் கோடு இணைக்கப்பட்டுள்ளது. அதை ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள கணினி ஆய்வகம் மற்றும் வகுப்பறைகளிலும் ஒட்டி வைக்க வேண்டும். மணற்கேணி செயலியை பயன்படுத்தி அதன் மூலம் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை சிறந்த முறையில் முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Teachers Transfer - New Module in EMIS

 IMG_20240417_060442

ஆசிரியர்கள்/அலுவலர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளி/அலுவலகத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு மாறுதலில் செல்லும்போது EMIS ல் பெயரை ஏற்கெனவே பணிபுரிந்த இடத்திலிருந்து புதிதாக சென்ற பள்ளி/அலுவலகத்திற்கு மாற்ற வேண்டுமானால் அதற்கு சார்ந்த ஆசிரியர்/அலுவலர் emis.tnschools.gov.in என்ற website ல் சென்று தங்களுடைய username மற்றும் password கொடுத்து login செய்து request கொடுக்க வேண்டும். தாங்கள் கொடுத்த request ஆனது மாவட்ட EMIS DC login ற்கு வரும். மாவட்ட அளவில் அதனை சரிபார்த்த பிறகு  ஆசிரியரின்/அலுவலரின் பெயரை புதியதாக சென்ற இடத்திற்கு மாற்றம் செய்யப்படும். அதற்கான வழிமுறைகள் அடங்கிய pdf கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Teachers Transfer - New Module in EMIS👇

Pdf file - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

4 ஆயிரம் உதவி விரிவுரையாளர் பணிக்கு 29ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம்!

 


.com/

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4 ஆயிரம் உதவி விரிவுரையாளர் பணிக்கு வரும் 29 ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் எனவும், ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டில் விண்ணப்பித்தவர்களும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், ஆனால் அவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.


மேலும், கடந்த 2019ம் ஆண்டில் விண்ணப்பம் செய்துள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பத்தை ஆன்லைனில் செய்வதுடன், உயர் கல்வித்துறையின் அரசாணை 247ன் படி விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ள படிவத்தில் பணி அனுபவத்திற்கான சான்றிதழைப் பெற்றும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்


தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு வரும் மார்ச் 28ந் தேதி முதல் ஏப்ரல் 29 ந் தேதி மாலை 5 மணி வரை, www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த அறிவிப்பின் மூலம் 3 ஆயிரத்து 921 நடப்பு காலிப் பணியிடங்கள் மற்றும் 79 பின்னடைவு காலி பணியிடங்கள் என மொத்தம் 4 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன

தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு முறைப்படி காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஜூலை 1, 2024ல் 57 வயது முடியாதவர்கள் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறையின் படியும், உயர் கல்வித் துறையின் அரசாணையின் அடிப்படையில், நெட் (NET-National Eligibility Test) அல்லது செட் (SET- State Eligibility Test) தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தமிழ் மொழியைப் பாடமாக எடுத்துப் படிக்காமல், பிற மொழி எடுத்துப் படித்தவர்கள் தமிழ் மொழி தேர்வில் பணி நியமனம் செய்யப்பட்ட இரண்டு ஆண்டுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். உயர் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்தது போன்று, கௌரவ விரிவுரையாளர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. இதற்காக அவர்கள் பணி அனுபவச் சான்றுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள படிவத்தில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


கலை பாடப் பிரிவுகள், வணிகவியல், மானுடவியல், கல்வியியல், சமூக அறிவியல், அறிவியல், உடற்கல்வி, இயல், இதழியல் மற்றும் தொடர்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் உதவி பேராசிரியர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். தேர்வு முறை: உயர் கல்வித் துறை, அரசாணை அடிப்படையில் எழுத்துத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். நேர்முகத் தேர்விற்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. முதுகலை பாடங்களில் இருந்து போட்டி தேர்வு கேள்விகள் இடம் பெறும்.


தாள் ஒன்றில் மூன்று மணி நேரத்திற்கு 100 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில், பகுதி ஒன்றில் தமிழ்ப் பாடத்தில் 25 மதிப்பெண்கள் கொள் குறி வகையிலும், பொது அறிவு 25 மதிப்பெண்கள் என மொத்தம் 50 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் இடம் பெறும். பகுதி இரண்டில் இரண்டு மணி நேரத்திற்கு 50 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறும். தாள் இரண்டில் 100 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து நேர்காணல் 30 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடத்தப்படும்.


மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு, உயர் கல்வித் துறையின் அரசாணையின்படி, அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். போட்டித் தேர்வு மற்றும் நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்தப் பணியிடங்களுக்கு ஏற்கனவே 2019ம் ஆண்டில் விண்ணப்பம் செய்தவர்களும் மீண்டும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இதற்கு ஏற்பத் தான் ஆன்லைனில் பதிவு செய்வதற்கான இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


மேலும் அறிவிப்பிலும் அவர்களுக்குத் தேவையான கூடுதல் தகவல்களைப் பெறும் வகையில் இணைப்பும் அளிக்கப்பட்டுள்ளது. போட்டித்தேர்விற்கான பாடத்திட்டமும் https://www.trb.tn.gov.in/syllabus1.php?language=LG-1&status=Active என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4000 உதவி விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு புதியதாக 3028 பேர் விண்ணப்பங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.


சுமார், 19 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்வதற்காகப் பார்வையிட்டுள்ளனர். ஏற்கனவே, 2019ஆம் ஆண்டில் சுமார் 32 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். ஆனால் இவர்கள் பேப்பர் மூலம் விண்ணப்பம் செய்துள்ளதால், மீண்டும் ஆன்லைன் மூலம் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் கட்டணங்களைச் செலுத்தத் தேவையில்லை. புதிய விண்ணப்பத்தில் உள்ளது போல் பணி அனுபவத்திற்கான சான்றிதழ்களைப் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டியதும் கட்டாயம் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தெரிவித்தார்

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Election 2024 - Presiding Officer's Diary In Tamil

Polling Station Materials, Forms, Envelopes - Check List

 

IMG_20240417_131626

வாக்குச்சாவடிக்கு வழங்கப்படும் பொருட்கள், படிவங்கள், உறைகள்

LIST OF POLLING MATERIALS FOR A POLLING STATION

Polling Station Materials, Forms, Envelopes - List 👇

Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தேர்தல் பணியில் ஏதேனும் சந்தேகமா? இதோ உங்களுக்கான பதில்..

 


IMG_20240417_145636

.

தேர்தல் பணியில் ஏதேனும் சந்தேகமா? இதோ உங்களுக்கான பதில்...


Q&A -Election procedures👇

Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Election 2024 - All Filled in Forms - பூர்த்தி செய்யப்பட்ட தேர்தல் படிவங்கள் மாதிரிகள்

 

Election 2024 - All Filled in Forms - பூர்த்தி செய்யப்பட்ட தேர்தல் படிவங்கள் மாதிரிகள்

Click Here to Download - Election 2024 - All Filled in Forms - Pdf

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

2024 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் செயல்பாடுகள் - ஒருபக்க சுருக்க கையேடு

 




2024 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் செயல்பாடுகள் - ஒருபக்க சுருக்க கையேடு



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Election 2024 - Timewise Work - Check List For Presiding Officials

 

நாடாளுமன்றத் தேர்தல் 2024 - வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் - Election 2024 -  Timewise Work - Check List For Presiding Officials


Click Here to Download - Election 2024 -  Timewise Work - Check List For Presiding Officials - Pdf




🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மணற்கேணி செயலியை பயன்படுத்தி கற்றல் - கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 


IMG_20240416_080146

தொடக்கக் கல்வி - மணற்கேணி செயலி பயன்பாடு - நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான அனிமேஷன் வீடியோக்கள் - ஆசிரியர்கள் கைபேசி , உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் மற்றும் திறன் வகுப்பறைகளில் மணற்கேணி செயலியை பயன்படுத்தி கற்றல் - கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்ளுதல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்👇

DEE - Manarkeni APP - Utilising in Middle Schools Proceedings - Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

PG TRB SYLLABUS ல் புதிதாக செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன?

 .com/

PGTRB பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 24 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நிலையில் பள்ளி மாணவர்களின் எதிர்கால கல்வி நலனை கருத்தில் கொண்டு அடுத்து வரக்கூடிய தேர்விற்கு PG TRB SYLLABUS ல் மாற்றம் செய்யப்பட உள்ளது.

புதிதாக செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன? 


🔰ஏற்கனவே உள்ள பாடப்பகுதிகளோடு 20 முதல் 25 சதவீதம் increase ஆகிறது.


🔰வினாத்தாள் முறையில் மாற்றம் இல்லை


Major 110 வினாக்கள்

உளவியல் 30 வினாக்கள்

பொது அறிவு 10 வினாக்கள்

🔰மொத்தம் 150 மதிப்பெண்கள்


🔰தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம்


🔰ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதத்தில் Government Gazette ல் syllabus release ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

SSLC - மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் கவனத்திற்கு ...

 IMG_20240414_185549

SSLC - மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் கவனத்திற்கு ...

உதவித் தேர்வாளரின் பணிகள் :

AE INSTRUCTIONS 👇

Download here


CE INSTRUCTIONS👇

Download here


SO INSTRUCTIONS👇

Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TNSED Attendance APP-ல் 3 நாட்களுக்கு ஆசிரியர் வருகை பதிவை மேற்கொள்ளும் முறை

 IMG_20240415_061211


15.04.2024 TO 17.04.2024 வரை  TNSED Attendance APP  அனைத்து தொடக்க /நடுநிலைப் பள்ளி  ஆசிரியர் வருகை பதிவை  மேற்கொள்ளும் முறை


FULLY NOT WORKING

👇

Reason

👇

Others


( ATTENDANCE  MARK  ONLY  TEACHERS )



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News