ITK தன்னார்வலர்கள் மாதிரிப் பள்ளி தூதுவர்களாக நியமனம்!!!

  IMG_20240415_125506

மாதிரிப் பள்ளி தூதுவர்கள்


மாதிரிப் பள்ளிகள் என்பவை தமிழ்நாடு அரசு நடத்தும் உண்டு உறைவிடப் பள்ளிகள். இங்கு சிறந்த பயிற்சி அளித்து மாணவர்களை முக்கியமான கல்வி நிறுவனங்களில் சேர பல பயிற்சிகள் வழங்கப்படும்‌. கடந்த ஆண்டு ஐஐடி, என்ஐடி, உள்ளிட்ட நாட்டின் முக்கியமான உயர்கல்வி நிறுவனங்களில் 247 மாணவர்கள் சேர்ந்துள்ளார். அரசுப்பள்ளி மாணவர்கள் ஐஐடியில் சேர்ந்துள்ளது அண்மைக்கால வரலாற்றில் இதுவே முதல் முறை. அரசுப்பள்ளி மாணவர்களின் கனவை நனவாக்கும் இந்த மாதிரிப் பள்ளிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நல்ல ஊக்கமுடைய தன்னார்வலர்கள் 3000 பேர் தேவை என்று மாதிரிப் பள்ளிகள் செயலகத்தில் இருந்து கோரப்பட்டுள்ளது. ஒரு ஒன்றியத்திற்கு 5-6 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.


தன்னார்வலர்கள் பணி:


அரசுப் பள்ளிகளில் படிக்கும்‌ 9, 10  மாணவர்களின் விவரம் தரப்படும்.‌ இவர்களின் பெற்றோரைச் சந்தித்து  மாதிரிப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான விழிப்புணர்வுவை ஏற்படுத்த வேண்டும்.‌ 

இவர்களுக்கு மாவட்ட அளவில் பள்ளிக் கல்வித் துறையில் இருந்து முறையான பயிற்சி வழங்கப்பட்டு அதன் பின்பு அவர்கள் பெற்றோர்களை சந்திக்கும் வகையில் செயல்பாடுகள் அமையும்.


தன்னார்வலர்கள் தகுதி:


பெற்றோர்களிடம்  பேசி மாணவர்களின் எதிர்காலம் குறித்து ஊக்கமூட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும். இருசக்கர வாகனம் இருந்தால் நலம். இல்லாவிட்டால், பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.


இவர்களுடைய பணியானது  +2 தேர்வு முடிவுகள் வெளியானதும் தொடங்கும்.

இப்பணியானது குறுகிய காலத்தை கொண்டதாக அமையும்..

( கல்லூரிகளில் விண்ணப்பம் வழங்குவது தொடங்கும் காலம் வரை இருக்கலாம்) இவர்களுக்கு போக்குவரத்து பயணப்படி வழங்குவதாக தெரிகிறது.


சிறப்பு ஊதியம் வழங்குவது சம்பந்தமாக எவ்வித முடிவும் தற்போது வரை தெரிய வரவில்லை. இருப்பினும் வழங்கலாம் என்ற முடிவும் உள்ளது.

மாணவர்கள் நலன் கருதி செயல்படும் இத்திட்டத்திற்கு நன்கு ஆர்வமுள்ள மற்றும் இதனை சிறப்பாக கொண்டு செல்லக்கூடிய திறனுள்ள தன்னார்வலர்கள் தங்களது ஒன்றிய ஒருங்கிணைப்பாளரை தொடர்புகொள்ளவும்.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஏப்.20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

 


ஏப்.20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

Local%20holiday

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை


தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவிப்பு


தஞ்சாவூர் மாவட்ட அரசு அலுவலகங்களுக்கும் ஏப்.20ல் விடுமுறை அறிவிப்பு



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

FA (A) FA (B) MARKS தற்போது EMIS இணையத்தில் - எவ்வாறு பதிவிறக்கம் செய்வது??

 


IMG_20240415_183002

மூன்றாம் பருவ FA (A) FA (B) MARKS தற்போது EMIS இணையத்தில் - எவ்வாறு பார்ப்பது? பதிவிறக்கம் செய்வது?

👇👇👇👇

Emis Website

https://emis.tnschools.gov.in

👇

School Login 

👇

Registers

👇

Staff Registers

👇

EE Academic Register

& FA ( B ) Register 

👇

Download pdf

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாதவர்கள்களுக்கு 16.04.2024 அன்று பயிற்சி வகுப்பு - CEO Proceedings

  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் நாள்: 15.04.2024

பள்ளிக்கல்வி - தேர்தல் - ஏப்ரல் 2024- பாராளுமன்ற தேர்தல் - பயிற்சி வகுப்பு - மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது - பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாதவர்கள்/கலந்து கொண்டவர்களுக்கு 16.04.2024 அன்று நடைபெறும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தெரிவித்தல் மேற்பார்வையிடும் அலுவலர்கள் நியமித்தல் -தொடர்பாக.

பார்வையில் காணும் தொலைபேசி செய்திகளின் அடிப்படையில் 19.04.2024 அன்று நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் பணி ஆணை கிடைக்கப்பெற்று மூன்று கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் மற்றும் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு 16.04.2024 அன்று நடைபெறும் பயிற்சி வகுப்பில் ஏற்கனவே கலந்து கொண்ட மையத்திலேயே கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது/கலந்து கொள்ளாதவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.




🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Election App ( PMS ) - Now Enabled

 PMS_GELS 2024 App Download Link & பயன்படுத்தும் முறை...

 

Poll Monitoring System - PMS_GELS 2024 App இப்பொழுது  உபயோகத்தில் உள்ளது 



PMS_GELS 2024 App பயன்படுத்தும் முறை...


Log in Screen ல், Mobile Number என்னும் இடத்தில் உங்களுடைய, தேர்தல் அலுவலகத்தில் பதிவு செய்த Mobile No.ஐ உள்ளீடு செய்யவும்.


Enter Pin என்னும் இடத்தில் 1234 என்று உள்ளீடு செய்யவும். PMS Appஐ பயன் படுத்திப் பார்க்கவும்..


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

நீங்கள் தேர்தல் பணிக்கு போறீங்களா? உங்களுக்குதான் இந்த பயனுள்ள தகவல்..

 தேர்தல் பணிக்கும் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பயனுள்ள தகவல் ...👇

Download here



கோடை வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்: ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

 


 1230644

பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்விஇயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் மு.பழனிசாமி ஆகியோர் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:


தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல்கோடை வெப்பம் படிப்படியாக அதிகரிக்கும். மேலும் பருவநிலை மாற்றம் காரணமாக கோடை வெப்பத்தின் தாக்கமும் வெகுவாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, அனைத்துவித பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களும் இந்த கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் உடல்நலனை பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும்.


மதியம் 12 முதல் 3 மணி வரைநேரடி வெயில் படும் திறந்த வெளியை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இந்த நேரங்களில் மாணவர்களுக்கான வகுப்புகள், விளையாட்டுகள் அல்லது உடற்பயிற்சி ஆகியவற்றை திறந்த வெளியில் நடத்தக்கூடாது.

மாணவர்கள் தண்ணீர் அதிகஅளவு பருகுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஓஆர்எஸ்மற்றும் எலுமிச்சை சாறு, நீர்மோர்,லஸ்ஸி, பழச்சாறுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பருகலாம்.


அனைத்து பள்ளிகளிலும் ஓஆர்எஸ் பாக்கெட்கள், முதலுதவிபெட்டகத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், வெப்பம் தொடர்புடைய உடல் நோய்கள் ஏற்பட்டால் அதில் இருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையான வழிமுறைகள் குறித்து அறிவுறுத்த வேண்டும். இந்த விவரங்களை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக் கும் தெரிவிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான உழைப்பூதிய விவரம் - அரசாணை வெளியீடு!

 IMG_20240414_061358

ELECTIONS - General Elections to Lok Sabha , 2024 and Bye - election to Tamil Nadu Legislative Assembly from 233.Vilavancode Assembly Constituency - Remuneration Payment of flat rate allowances to Polling and Counting Personnel and others - Lumpsum advance - Sanctioned - Orders issued


🇵 🇴 : ₹1700

🇵 1, 🇵 2, 🇵 3, 🇵 4: ₹1300

No remuneration for 2nd repeat training...


G.O.(Ms).No.310 , DATE : 13.04.2024.pdf - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர் மற்றும் அட்டவணையாளரின் பணிகள் மற்றும் பொறுப்புகள்

 மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர் மற்றும் அட்டவணையாளரின் பணிகள் மற்றும் பொறுப்புகள் :


1. மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர் மற்றும் அட்டவணையாளர் ஆகியோர் முகாம் அலுவலர் பொறுப்பேற்கும் அன்றே பொறுப்பேற்கும் வகையில் பாடவாரியாக முகாம் அலுவலரால் நியமிக்கப்படுவர்.


2. மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர் அட்டவணையாளர் உதவியுடன் அனைத்து விடைத்தாள்களிலும் உள்ள மதிப்பெண்களை பக்க வாரியான கூடுதல் (Pagewise Total), வினாவாரியான கூடுதல் (Questionwise Total) விடைத்தாளின் மேற்புறத்தில் எடுத்தெழுதப்பட்டது மற்றும் பகுதி-ஆ (Part-B) இல் எழுதப்பட்டது ஆகியவற்றினைச் சரிபார்த்து கட்டில் உள்ள பகுதி-ஆ (Part-B) பகுதியைக் கட்டு எண், உறை எண், வரிசை எண் என வரிசையாக அடுக்கி சுருக்க விவரத்தாளை (DocketSheet) மேல் வைத்து இடது மூலையில் தைத்து சுருக்க விவரத்தாளில் (DocketSheet) மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர் மற்றும் அட்டவணையாளர் கையொப்பமிட வேண்டும். இவர்கள் பகுதி-ஆ (Part-B) கையொப்பமிடவேண்டிய அவசியமில்லை (ஒரு கட்டுக்கு ஒரு சுருக்க விபரத்தாள் (DocketSheet) இருக்க வேண்டும்.



3. மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர் அன்றைய தினமே சுருக்க விவரத்தாள் (Docket sheet) வைத்து தைக்கப்பட்ட பகுதி-ஆ (Part-B) கட்டினை முகாம் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். பகுதி-ஆ (Part-B) க்கு வரிசை எண் 1, 2, 3 என்று தொடங்கி 72/48 வரிசை எண்கள் வழங்கப்பட வேண்டும். மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாட்கள் மந்தண அறையில் பாதுகாக்கப்பட வேண்டும்.


4. உயிரியல் பாடத்தைப் பொறுத்த வரையில் மதிப்பெண்கள் கணினியில் பதியும்பொழுது பகுதி-ஆ (Part-B) மதிப்பெண் அட்டவணையின் கீழ் தனியாக எண்ணாலும், எழுத்தாலும் எழுதப்பட்ட முழுமையாக்கப்பட்ட மொத்த மதிப்பெண்ணை மட்டும் பதிவு செய்ய வேண்டும்.


5. சுருக்க விவரத்தாளுக்கு (Docket sheet) உரிய பதிவினைத் தேதி வாரியாக, பாட வாரியாக, பயிற்று மொழி வாரியாக உரிய பதிவேட்டில் அன்றைய தினமே பதிந்து முகாம் அலுவலர் ஒப்பம் பெறவேண்டும்.

1001347015-transformed_wm


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

SSLC - மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் கவனத்திற்கு ...

 

IMG_20240414_185549

SSLC - மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் கவனத்திற்கு ...

உதவித் தேர்வாளரின் பணிகள் :

AE INSTRUCTIONS 👇

Download here


CE INSTRUCTIONS👇

Download here


SO INSTRUCTIONS👇

Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

 


திருச்சியில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் திருச்சி மாவட்ட மக்கள் பங்கேற்கும் வகையில், ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாகவும், அந்த விடுமுறை நாளை ஈடு செய்ய ஜூன் 8ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.


திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்குகிறது. வேறு எந்த தலத்திலும் காணப்பெறாதபடி இத்திருத்தலத்தில் அஷ்ட புஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக, சிவபதத்தில் விக்ரமசிம்மாசனத்தில் எழுந்தருளியிருக்கிறார்.


இத்தகைய சிறப்புக்குரிய இத்தலத்தில் சித்திரைப் பெருந்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஏப்.15 ம் தேதி வெள்ளிக் குதிரை வாகனத்திலும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்.16ம் தேதி நடைபெற உள்ளது


ஏப்.17ம் தேதி வெள்ளிக் காமதேனு வாகனத்திலும், ஏப்.18ம் தேதி முத்துப்பல்லக்கும், ஏப்.19ம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறும். மேலும் ஏப்.23ம் தேதி தங்க கமலவாகனத்தில் திருவீதி உலா நடைபெறும்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஏப்.19-ல் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை - புகார் அளிக்க உதவி எண்கள் வெளியீடு

 1230703

தமிழக அரசின் தொழிலாளர் துறை ( தொழிலாளர் இணை ஆணையர்-1, சென்னை ) சார்பில் வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 135 ( B )-ன் கீழ் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுரைகளின் படி, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அனைத்து பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களான தினக் கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு அவர்கள் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் நாளான ஏப்ரல் 19-ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.


அதேபோல், தமிழகத்தில் கட்டுமானத் தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தேர்தல் நாளான ஏப்ரல் 19-ம் தேதி 100 சதவீதம் வாக்களிக்க ஏதுவாக, விடுப்பு வழங்கப்பட வேண்டும்.


அவ்விடுப்பு நாளுக்கான ஊதியம் சாதாரணமாக தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாகவும், பணியின் தன்மைக்கேற்ப அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்த பட்ச ஊதியத்துக்கு குறையாமலும் இருக்க வேண்டும். தேர்தல் நாளில் விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


இது குறித்து புகார் அளிக்க தொழிலாளர் துறை சார்பில் வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என தனித் தனியாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளன.


விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக தொழிலாளர் துணை ஆய்வாளர் ( வட சென்னை ) சி.விஜய லட்சுமி 9840829835, தொழிலாளர் துணை ஆய்வாளர் ( தென் சென்னை ) இ.ஏகாம்பரம் 9790930846, தொழிலாளர் துணை ஆய்வாளர் ( மத்திய சென்னை ) ஆர்.வேத நாயகி 9884264814 ஆகியோரை மேற்கூறிய செல்போன் எண்களிலும், 044-24330354 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TNSED Attendance APP-ல் 3 நாட்களுக்கு ஆசிரியர் வருகை பதிவை மேற்கொள்ளும் முறை

 IMG_20240415_061211


15.04.2024 TO 17.04.2024 வரை  TNSED Attendance APP  அனைத்து தொடக்க /நடுநிலைப் பள்ளி  ஆசிரியர் வருகை பதிவை  மேற்கொள்ளும் முறை


FULLY NOT WORKING

👇

Reason

👇

Others


( ATTENDANCE  MARK  ONLY  TEACHERS )

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கடும் வெப்பம்- காரணமாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அறிவுரைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் பள்ளி கல்வி இயக்குநர் ஆகியோரின் இணைச் செயல்முறைகள்

 


தமிழ்நாட்டில் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் கோடை வெப்பம் அதிகரிக்கத் தொடங்குகின்றது . மேலும் பருவ நிலை மாற்றத்தினால் இந்த கோடை வெப்பத்தின் தாக்கமும் வெகுவாக அதிகரித்துக் கொண்டே வருகின்றது . எனவே . பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் . பிற பணியாளர்கள் மற்றும் மாணவர்களும் இந்த கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் உடல்நலனை பாதுகாத்துக் கொள்ளவும் பின்வருமாறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது


 Summer Heat Wave_ Instructions to Headmasters, Teachers and Students

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு ஏப்.21 வரை விடுமுறை

 


1230061

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பள்ளிகளில் 4 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று (ஏப்.13) முதல் 21-ம் தேதி வரை தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. தொடர்ந்து 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு மற்றும் பருவத் தேர்வுகள் ஏப்.2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.


தேர்வுகள் தள்ளிவைப்பு: இதில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையான குழந்தைகளுக்கு ஏப்.5-ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைந்து, 6-ம் தேதி முதல் கோடை விடுமுறை வழங் கப்பட்டுள்ளது.

அதேநேரம் ரம்ஜான் பண்டிகைகாரணமாக 4 முதல் 9-ம் வகுப்புமாணவர்களுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தேர்வுகள் ஏப்.22, 23-ம் தேதி களுக்கு தள்ளிவைக்கப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு நேற்றுடன் முடிவடைய இருந்த முழு ஆண்டுத் தேர்வுகள் சற்று தள்ளிப்போனது.


இதற்கிடையே மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பெரும்பாலான பள்ளிகள் தேர்தல் முகாம்களாக செயல்பட இருக்கின்றன. மேலும், ஆசிரியர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதையடுத்து 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (ஏப்.13) முதல் 21-ம் தேதி வரை 9 நாட்கள் தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேமிப்பு மற்றும் நீர்நிலை பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு குறித்த நிகழ்வுகள் ஏப்.16 - 30 வரை நடத்திட வழிமுறைகள் வெளியீடு.

 IMG_20240412_181608

மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி . அனைத்து பள்ளிகளிலும் மழைநீர் சேமிப்பு  மற்றும் நீர்நிலை பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு குறித்த நிகழ்வுகள் நடத்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் , 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் -16 ம் தேதி முதல் ஏப்ரல் 30 ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் நடத்திடும் நிகழ்வுகளை மத்திய கல்வி அமைச்சக வலைதள இணையத்தில் / இணைப்பில் புகைப்படமாகவோ . ஒளிக்காட்சியாகவோ . வீடியோ படமாகவோ அல்லது அறிக்கையாகவோ பதிவேற்றம் செய்யப்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


எனவே அனைத்து மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் / முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் , மத்திய கல்வி அமைச்சகத்தின் கடிதத்தின் படி பரிந்துரைக்கப்பட்ட பங்கேற்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 இணைப்பு : - மத்திய கல்வி அமைச்சகத்தின் கடிதம் மற்றும் ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 30 வரையில் வழிமுறைகள் பின்பற்றபட வேண்டிய வழிமுறைகள்

 Jal_sakthi spd proceedings - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Annual Day Fund - Utilisation Certificate - பயனீட்டு சான்றிதழ் (New)

 School Annual Day Fund - Utilisation Certificate - பயனீட்டு சான்றிதழ் (New)

அனைத்து வகைதொடக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம்


ஆண்டு விழா நடத்துவதற்காக வழங்கப்பட்ட தொகை பயன்பாட்டுச் சான்றிதழ் தற்பொழுது தொடக்க கல்வி இயக்குனர் அலுவகத்திலிருந்து கேட்கப்பட்டுள்ள படிவத்தில் மூன்று நகல்கள் கட்டாயம்  ஆலுவலகத்தில் சேர்த்து விடுங்கள் ஏற்கனவே பயன்பாட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட படிவத்திலிருந்து இது மாறுபட்டு உள்ளதால் இந்த படிவத்தை தான் தொடக்கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டி உள்ளது 


எனவே சிரமம் பார்க்காமல் தற்பொழுது அனுப்பப்படுகின்ற இந்த பயன்பாட்டு சான்றிதழ் பூர்த்தி செய்து மூன்று நகல்களில்  வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.




Click Here to Download - School Annual Day Fund - Utilisation Certificate (New) - Pdf


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

சமத்துவ நாள் உறுதிமொழி (13.04.2024)

 

13.04.2024 சமத்துவ நாள் உறுதிமொழி எடுப்பது


"சமத்துவ நாள்" உறுதிமொழி

சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும்,


சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி,


ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும்,


ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய,

நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில்,


சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும்,


சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன்.




🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News