மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி சார்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கடிதம்

 

IMG_20240408_195351

மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி சார்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கடிதம்...


பாராளுமன்ற பொதுத் தேர்தல்கள் - 2024 தொடர்பாக எண் 11.திருவண்ணாமலை மற்றும் எண் : 12 ஆரணி பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட தேர்தல் வாக்குச் சாவடிகளில் , வாக்குச்சாவடி தலைமை அலுவலராகவும் , இதர தேர்தல் அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் / அரசு ஊழியர்களுக்கு . முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட பயிற்சிக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் முறையே 24.03.2024 மற்றும் 07.04.2024 ஆகிய இரண்டு நாட்களில் அன்று நடைபெற்று முடிந்தன.


 தற்போது வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் வருகிற 13.04.2024 ( சனிக்கிழமை ) அன்று காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை ஏற்கனவே 07.04.2024 அன்று 2 - ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற அதே மையங்களில் அந்தந்த சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இடங்களிலேயே நடைபெறவுள்ளது . மேற்டி , பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ள இடங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.


District Collector Letter - Download here



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மக்களவைத் தேர்தல் 2024 - வாக்குப்பதிவில் ஈடுபடும் அலுவலர்களுக்கான உழைப்பூதிய விவரம் வெளியீடு!

 


மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில் ஈடுபடும் அலுவலர்களுக்கான உழைப்பூதிய விவரம் வெளியீடு!


Click Here to Download - Lok Shaba Election 2024 - Remuneration - Pdf


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Lok Sabha Election 2024 APP - Direct Download Link

 

நடைபெற உள்ள 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை ஒருங்கிணைப்பதற்காக பிரத்தியேக மொபைல் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது அதனை பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும் 


Click Here  - Lok Sabha Election 2024 APP -  Direct Download Link


VILLUPURAM

PO: 6840000008

BLO : 7840000008

PWD: 1234


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Partially Working Day - TN EMIS New School Attendance App - ஐ எவ்வாறு பயன்படுத்துவது? - தெளிவான விளக்கம்!

 


EMIS இணையதளத்தில்  ஆசிரியர் மாணவர் Local body ஆகியோரின் வருகையை குறித்தல் TN EMIS SCHOOL  APP புதியதாக உருவாக்கப்பட்டுள்ள  செயலியை எவ்வாறு கையாளுதல் என்பதற்கான விளக்கம்

பள்ளியின் வருகையை பதிவு செய்வதற்கான வழிமுறைகள்


Today Status என்பதை Click செய்து பள்ளியின் வேலை நாளை உறுதி செய்தல் வேண்டும் 


இதில் உள்நுழைந்து Fully Working என்பதை Click செயதால் அனைத்து மாணவர்களுக்கும் வருகையை பதிவு செய்ய இயலும் இந்த Option ஐ தேர்வு செய்தால் அனைத்து வகுப்புகளுக்கும் கடடாயம் விடுபடாமல் வருகையை பதிவு செய்தல் வேண்டும் 


Fully not working என்பதை  தேர்வு செயதால் உரிய காரணத்தை வழங்க வேண்டும் இதில் ஆசிரியர் வருகையை மட்டும் வருகையை பதிவு செய்ய இயலும் மாணவர்களுக்கு பதிவு செய்ய இயலாது 


Partially Working என்பதை தேர்வு செய்தால் அன்றைய தினத்தில் நடைபெற இருக்கும் வகுப்புகளை மட்டும் தேர்வு செய்து அவ்வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகையை பதிவு செய்ய இயலும் எனவே பள்ளி தலைமையாசிரியர்கள் அன்றைய தினத்தில் செயல்படும் வகுப்புகளை கவனமாக தேர்வு செய்தல் வேண்டும் மேலும் அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு Save செய்தல் வேண்டும் 


மேலே குறிப்பிட்ட  Today Status பதிவு செய்தால் மட்டுமே மாணவர்கள் வருகை ஆசிரியர் வருகை மற்றும் Local body வருகையை பதிவு செய்ய இயலும் 


Staff Attendance வருகையை பதிவு செய்ய Click செய்யும் போது Automatic Sync setting open ஆகும் அதில் School Information Todays Status Staff List Students List அனைத்து Sync குறியுடன் இருக்கும் இந்த நான்கு விவரங்கள் அனைத்தையும் ஒரு முறை Click செய்து Sync செய்து கொள்ள வேண்டும் 


School Information Sync செய்த பின்பு Today Status Sync செய்யும் போது Information Box Display வந்தால் மீண்டும் Home page உள்ள Today Status ல் Save செய்த  பின்பு  தான்  பள்ளி விவரங்கள் Sync ஆகும் 


அடுத்து Staff List Sync செய்தால் அனைத்து ஆசிரியர்கள் பெயர் Sync ஆகும்.


பின்பு Students List Sync செய்தல் வேண்டும் பள்ளி தலைமையாசிரியர் Todays Status ல் Partially Working என பதிவு செய்திருந்தால்  எந்தெந்த  வகுப்புகளுக்கு இன்று வேலை நாள் என்பதை குறிப்பிட்டுள்ளாரோ அந்த வகுப்புகளை Select செய்து Sync செய்தல் வேண்டும் 



ஃ உதாரணமாக ஒரு உயர் நிலைப்பள்ளியானது  அன்றைய தினத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளி வேலை நாள் என குறிப்பிட்டு இருந்தால் 10 ஆம் வகுப்பு மற்றும் அதன் Sectionயையும்  select செய்து Sync கொடுத்தல் வேண்டும் தற்போது மாணவர்கள் விவரமும் Sync செய்யப்பட்டிருக்கும் 


Teachers Attendance School Login


ஆசிரியர்கள் வருகையை TN EMIS School App ல் School Login ஐ மட்டும் பயன்படுத்தி பதிவு செய்தல் வேண்டும் 


Teacher List Strudent List Stored Locally என வரும்  Sync Setting ல் அனைத்து முடித்த பின்பு Home page ல் Staff Attendance Click செய்து Open செய்தால் Sync ஆன அணைத்து ஆசிரியர்கள் பெயர்கள் உள்ள பட்டியல் Display ஆகும் இதில் ஆசிரியர் வருகை புரிந்தால் P Present எனவும் இன்றைய நாளில் அவருக்கு Work Allotment இல்லை எனில் ஒரு முறை Click செய்து N/A எனவும் மற்றொரு  முறை Click செய்து OD Training Dt Deputation A  Absent ( CL ML Half day CL EL RH LOP UEL Parttime Maternity Leave Study Leave Special Leave Un Authorise N/A No Duty Teaching Staff Non Teaching Basic Staff ( Lab Asst Cleark ) இவ்வாறாக வருகையை பள்ளி Login ல் பதிவு செய்தல் வேண்டும் 


Students Attendance Teacher Individual Login


மாணவர்கள் வருகையை TN EMIS School App ல் Teacher Login ஐ மட்டும்பயன்படுத்தி பதிவு செய்தல் வேண்டும் 


வருகை புரிந்த மாணவர்கள் வருகையை TN EMIS School App ல் ஆசிரியர்கள் தங்களது EMIS ID Password கொடுத்து Open செய்யவும் Students Attendance Class Teacher Login ல் Open செய்து Student List Sync செய்தல் வேண்டும் பின்பு  Students Attendance Click செய்து வருகை புரிந்த மாணவர்களின் வருகையை பதிவு செய்தல் வேண்டும் 


Local body Attendance School Login


பள்ளிக்கு நகராட்சி மற்றும் பஞ்சாயத்து மூலம் வகுப்பறை மற்றும் கழிவறை சுத்தம் செய்வதற்காக வருகை புரியும் Sweepers மற்றும் Scavengers ன் எண்ணிக்கை மற்றும் பணிபுரிந்த நேரத்தையும் குறிப்பிட்டு  Save செய்தல் வேண்டும் 



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

EMIS - SMART CLASSROOM SITE PREPARATION NEW UPDATE

 

IMG_20240403_083236


அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளும் SMART CLASSROOM SITE PREPARATION UPDATE செய்வதற்கான வழிமுறைகள்

SMART CLASSROOM SITE PREPARATION NEW UPDATE👇

Video - Click here

EMIS - SMART CLASSROOM SITE PREPARATION NEW UPDATE


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

“அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” - முதல்வர் உறுதி

 “இண்டியா கூட்டணி அரசு மத்தியில் அமைந்தவுடன், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இந்தியா கூட்டணிக்கு உங்களது ஆதரவைத் தாரீர்” என்று முதல்வர் ஸ்டாலின் வாக்குற்தி அளித்துள்ளார்.


இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ, அப்போதுதான் ஆசிரியர் அரசு ஊழியர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்கும். 53 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களை காலமுறை ஊதியத்துக்குக் கொண்டு வந்தது; அரசு ஊழியர்கள் இறந்து போனால் கருணை அடிப்படையில் குடும்ப நல நிதி வழங்கியது; ஊதியக் குழு மாற்றத்தைப் பலமுறை கொண்டு வந்தது; அதிமுக ஆட்சியில் முடக்கி விட்டுப் போன அகவிலைப்படி உயர்வினையும் சேர்த்து 2021-இல் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் ஒரே நேரத்தில் 14 விழுக்காடு வழங்கியது என திமுகவின் சாதனைகளைப் பட்டியலிடத் தொடங்கினால் நாளும் பொழுதும் சொல்லிக் கொண்டே இருக்கலாம்!.

கடந்த அதிமுக ஆட்சியில் கஜானாவைத் தூர்வாரி மாநிலத்தைக் கடும் நிதி நெருக்கடியில் விட்டுவிட்டுச் சென்றார்கள். இந்தச் சூழலிலும் இன்றைக்கு மத்திய அரசுக்கு இணையான, மத்திய அரசு உயர்த்துகிற அகவிலைபடி உயர்வை அப்படியே வழங்கி வருகிறது திமுக அரசு. அரசு ஊழியர்கள் இறந்து போனால் வழங்கப்பட்டு வந்த மூன்று லட்ச ரூபாய் குடும்பநல நிதியை தற்போது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கி இருக்கிறோம்.

கடந்த அதிமுக ஆட்சியில் ஆசிரியர் - அரசு ஊழியர்கள் பேரமைப்பான ஜாக்டோ-ஜியோ போராடியபோது, போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளான வழக்குகள், துறைரீதியான நடவடிக்கைகள் இவற்றையெல்லாம் ரத்து செய்து, போராடிய காலத்தைப் பணிக்காலமாகக் கருதி, தேர்தல் அறிக்கையில் சொன்னபடி ஊதியத்தை வழங்கி இருக்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்கள் வைத்த கோரிக்கையான, தொடக்கக் கல்வித் துறையைத் தனியாகப் பிரித்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தொடக்கக் கல்வித் துறையைப் பள்ளிக்கல்வித் துறையிடமிருந்து பிரித்துத் தனியாகச் செயல்பட ஆணை பிறப்பித்து இருக்கிறோம்.

பள்ளிக் கல்வித் துறை ஆணையர் பணியிடத்தை மாற்றி இயக்குநர் பணியிடத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று பல ஆசிரியர் சங்கங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று இயக்குநர் பணியிடத்தை மீண்டும் கொண்டு வந்து வந்திருக்கிறோம்.

ஒளிவுமறைவற்ற பொது மாறுதல் கலந்தாய்வு; இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்குக் கைக்கணிணி வழங்கும் திட்டம் செயல்படுத்தியது, ஆசிரியர்களின் குழந்தைகளின் உயர் கல்விக்கு 10 ஆயிரம் ரூபாயாக இருந்த நிதியை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது, 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது, கனவு ஆசிரியர் விருது வழங்கி கௌரவித்தது, அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்குவது திராவிட மாடல் அரசு.

ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் இருப்பதை உறுதி செய்வது, 2800 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்தது, பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்குக் கடுமையான நிதிநிலை நெருக்கடியையும் கடந்து 2500 ரூபாய் ஊதியத்தை உயர்த்தி வழங்கியது, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காகப் பணிபுரியும் சிறப்பு பயிற்றுநர்களுக்கு ரூபாய் 5000 தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்கியது என அடுக்கடுக்கான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்துள்ள அரசுதான் திராவிட மாடல் அரசு.

ஆனால், இப்போது திடீரென்று அரசு ஊழியர்கள் மீது கரிசனம் வந்துள்ளது போல் தேர்தலுக்காக நாடகமாடும் பழனிசாமியின் வரலாறும், அதிமுகவின் வரலாறும் எப்படிப்பட்டது? ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியம் பற்றியெல்லாம் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து, அசிங்கப்படுத்தி, எள்ளி நகையாடி, அவர்களை கோரிக்கைகளுக்காக அழைத்துக் கூடப் பேசாமல் புறக்கணித்து அவமதித்தவர்தான் பழனிசாமி. இப்படிப்பட்டவருக்கு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊதியத்தை முதலமைச்சராக இருந்துகொண்டே மிக மோசமாகக் கிண்டலடித்து மேடையில் பேசி, அவர்களை மனவேதனைக்கு உள்ளாக்கிவிட்டு, இப்போது கபட நாடகமாடி ஏமாற்றத் துடியாய் துடிப்பது யார்? பழனிசாமிதான்!

அதிமுக என்றைக்காவது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் துணையாக நின்றுள்ளதா? அதிமுகவால் அரசு ஊழியர்கள் அனுபவித்த வேதனைகளும், துன்பங்களும் வரலாறு முழுக்க நிறைந்திருக்கிறதே!. அரசு ஊழியர்களுக்குத் திமுக ஆட்சி, பொற்கால ஆட்சி என்றால், அவர்களது வேதனையில் உள்ளம் மகிழும் இருண்ட ஆட்சியை நடத்தியது அதிமுக. எஸ்மா மற்றும் டெஸ்மா சட்டங்களை கொண்டு வந்து நள்ளிரவில் அரசு ஊழியர்களைக் கைது செய்ததும், அடக்குமுறை செய்ததும்தானே அதிமுக ஆட்சியின் அலங்கோலம். அந்த எஸ்மா, டெஸ்மா வழக்குகளை ரத்து செய்து, அரசு ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றியது திமுக ஆட்சியில்தான் என்பது வரலாறு!

இந்தியாவிலேயே முதன்முதலாகப் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது அதிமுக ஆட்சி. இப்படிப்பட்ட அரசு ஊழியர் விரோத ஆட்சி நடத்திவிட்டு உத்தமபுத்திரன் போல் பேச பழனிசாமிக்கு என்ன அருகதை இருக்கிறது? ஆட்சியில் இருந்தபோது பழனிசாமிதானே அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வினை முடக்கி வைத்து விட்டுப் போனார். ஆசிரியர்கள் பெற்று வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய முறையை ரத்து செய்து விட்டுப் போனார்? இன்று அவர் வடிக்கும் நீலிக்கண்ணீருக்குப் பின்னால் அதிகாரப் பசியும், துரோகத்தின் ருசியும்தான் இருக்கிறதே தவிரே; அரசு ஊழியர்களின் மீதான அக்கறை எள்முனையளவும் இல்லை.

பழனிசாமியும் அவரது கட்சியும், தமிழ்நாட்டை வஞ்சித்து, கஜானாவைத் தூர்வாரிவிட்டு சென்றபோதும், தமிழ்நாட்டை மீட்டெடுத்து, நிதி நிலைமையைச் சீர்செய்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அப்படிச் செய்யப்பட்ட திட்டங்களைத்தான் பட்டியலிட்டேன்.

மீதியுள்ள கோரிக்கைகளுக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஒவ்வொரு முறையும் அமைச்சர்கள் அழைத்துப் பேசுவதும், ஏன், நானே அழைத்துப் பேசி தீர்வு காண்பதும், தீர்வு காணப்படும் என உறுதியளிப்பதும் என அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.

அதனால்தான், இன்றைக்கு
திராவிட முன்னேற்றக் கழக அரசு, அரசு ஊழியர்களின் நண்பனாகத் திகழ்கிறது
. தங்கள் கோரிக்கைகளை அரசு ஊழியர்களால் எளிதில் எங்களிடம் வந்து சொல்ல முடிகிறது. அவற்றைப் படிப்படியாக நிறைவேற்றுவதிலும் இந்த அரசு உறுதியாகச் செயல்பட்டு வருகிறது. சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தாமதம்தானே தவிர, அவை நிராகரிக்கப்படவில்லை.

அந்தத் தாமதம் கூட பழனிசாமி உருவாக்கிவிட்டுச் சென்ற நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ளதுதான். கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற இயலாத நிலைமை பற்றி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் ஒளிவு மறைவின்றி விளக்கிச் சொல்லும் ஒரே அரசு திமுக அரசுதான். “உங்களுடைய அத்தனை கோரிக்கைகளையும் அச்சுப்பிசகாமல் நிறைவேற்றி தருவேன்” என்ற உறுதியை அவர்களை நேரில் அழைத்துப் பேசிச் சொல்லியிருக்கிறேன். இதெல்லாம் திமுக ஆட்சியில் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது பொது வாழ்க்கை நடவடிக்கையில் இருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்ட பழனிசாமிக்குத் தெரிய வாய்ப்பில்லை.

எனவே, திமுகவின் சாதனைகளை மறைக்க அவர் போடும் வேடம், பகல் வேடமாகவே கலைந்து போகும் என்பது மட்டும் நிச்சயம். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்… நிச்சயம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். நாம் விரும்பும் மாற்றம் வந்தவுடன், தமிழகத்தின் நிதிநிலை விரைவில் சீராகும். அப்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேறும்.

எனவே, “
திராவிட மாடல் அரசுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கை
யை நிறைவேற்ற மனது இருக்கிறது. மார்க்கமும் விரைவில் வரும்” என்பதை உணர்ந்துள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நல்லதொரு மாற்றம் ஏற்பட இண்டியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறி ஆதரவு கோரியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தேர்தல் வகுப்பு - பயிற்சி அட்டவணை...

 IMG_20240317_092538

தேர்தல் வகுப்பு - பயிற்சி அட்டவணை...

Election Class - Agenda - Download here



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

சி.பி.எஸ்.இ : 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முறையில் இந்த மாற்றங்கள் இடம் பெறும்: முக்கிய அறிவிப்பு

 சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சி.பி.எஸ். இ-யில் 11 மற்றும் 12 வகுப்பு தேர்வுகளில்  கேட்கப்படும் கேள்விகள் இனி, விரிவான தீர்வுகளுடன் கூடிய கேள்விகள் கேட்கப்படும். மேலும்  அதை வாழ்வின் உண்மை நிகழ்வுகளுடன் பொருத்திபார்க்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என்று சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.

இதுபோல விரிவான தீர்வுகள் உடைய கேள்விகள் எம்.சி.க்யூ வகை கேள்விகளாக கேட்கப்படும். இதுபோன்ற கேள்விகளின் சதவிகிதம் 40 % இருந்து 50  % ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோல கட்டமைக்கப்பட்ட  சிறிய மற்றும் நீளமான விடைகள் கொண்ட கேள்விகளின் சதவிகிதம் 40% இருந்து 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

” தேசியக் கல்விக் கொள்கை, 2020-ன்படி வாரியம், பள்ளிகளில் திறன் அடிப்படையிலான கல்வியை அமல்படுத்துவதில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது, மதிப்பீட்டை சீரமைப்பது முதல் திறன்கள் வரை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான முன்மாதிரி வளங்களை மேம்படுத்துதல் மற்றும் ஆசிரியர்களின் தொடர்ச்சியான திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என்று சி.பி.எஸ்.இ இயக்குநர் ஜோசப் இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் “ 21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள மாணவர்களின் ஆக்கப்பூர்வமானவிமர்சன மற்றும் அமைப்புமுறை சிந்தனைத் திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்தும்மனப்பாடம் செய்வதிலிருந்து விலகிகற்றலை நோக்கிச் செல்லும் கல்விச் சூழலை உருவாக்குவதே வாரியத்தின் முக்கிய வலியுறுத்தலாகும்” என்று தெரிவித்துள்ளார்.

” இதன் விளைவாக, வரவிருக்கும் அமர்வில், வாரியத்தின் வினாத்தாள்களில் உள்ள நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளில் கருத்துகளின் பயன்பாட்டை மதிப்பிடும் திறன் அடிப்படையிலான கேள்விகளின் சதவீதம் மாற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.  சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில்  9 மற்றும் 10ம் வகுப்புகளின் தேர்வு முறையில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News


சி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; எந்தத் தேதி வெளியாகும்?

 மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான (சிபிஎஸ்இ) 12ஆம் வகுப்பு தேர்வு ஏப்.3ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனால், வாரியம் மே மாத மத்தியில் முடிவுகளை அறிவிக்க வாய்ப்புள்ளது.

 

சிபிஎஸ்இ 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்தியுள்ளது. கடந்த ஆண்டு, போர்டு 12 ஆம் வகுப்பு தேர்வுகளை பிப்ரவரி 14 முதல் ஏப்ரல் 5 வரை நடத்தியது. முடிவுகள் மே 12 அன்று அறிவிக்கப்பட்டன.

2022
ஆம் ஆண்டில், சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புத் தேர்வு இரண்டு விதிமுறைகளாக நடைபெற்றது. டேர்ம்-1 தேர்வு நவம்பர்-டிசம்பர் மற்றும் 2 தேர்வு மே-ஜூனில் நடந்தது.

இதையடுத்து, ஜூலை 22, 2022 அன்று இரு மதிப்பெண்களை ஒருங்கிணைத்த பின்னரே வாரியம் முடிவை அறிவித்தது.

இந்த ஆண்டு, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு இந்தியாவிலும், 26 வெளிநாடுகளிலும் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வுகளில், கிட்டத்தட்ட 16.9 லட்சம் மாணவர்கள் போர்டு தேர்வுக்கு பதிவு செய்தனர், அவர்களில் 87.33 சதவீத மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.

கடந்த ஆண்டை விட 5.38 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வில் 1,12,838 மாணவர்கள் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்களும், அவர்களில் 22,622 பேர் 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

வாரியம், முதல் முறையாக, 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறந்த புத்தகத் தேர்வுகளை (OBE) பரிசீலித்து வருகிறது. மேலும் 9 ஆம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியலுக்கு ஒரு சில பள்ளிகளில் திறந்த புத்தகத் தேர்வுகளை நடத்துவதற்கு வாரியம் முன்மொழிந்துள்ளது.

 

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News