கோடை விடுமுறையில் மீண்டும் திருத்தம்

 

4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் ஏப்.12 வரை பள்ளிக்கு வரவேண்டும்: கோடை விடுமுறையில் மீண்டும் திருத்தம்

1226737

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 13 முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வி துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டன. அதன்படி ஏப்ரல் 10, 12-ல் நடக்க இருந்த தேர்வுகள் ஏப்ரல் 22, 23-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டன.


இதையடுத்து, ‘ரம்ஜான் பண்டிகை மற்றும் தேர்தல் பணிகள் காரணமாக மாணவர்களுக்கு ஏப்ரல் 6 (இன்று) முதல் 21-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. அவர்கள் மீண்டும் ஏப்ரல் 22, 23-ம் தேதிகளில் தேர்வு எழுத பள்ளிக்கு வந்தால் போதும்’ என்று அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 8-ம் தேதிவிருப்பமொழி பாடத் தேர்வு நடத்தப்பட வேண்டும். மேலும், நீண்ட விடுமுறையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதால் கோடை விடுமுறையிலும் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.



இதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. அதன் விவரம்:


:தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்.5-ம் தேதியுடன் (நேற்று) பருவதேர்வு முடிந்துவிட்டது. அவர்களுக்கு 6-ம் தேதி (இன்று) முதல் கோடை விடுமுறை. 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஏப்.8, 10, 12-ம் தேதிகளில் பள்ளிக்குவந்து தேர்வுக்கு தயாராக வேண்டும். இடைப்பட்ட தினங்கள் அரசு மற்றும் வார விடுமுறை நாட்கள்.


அதன்பிறகு, தேர்தல் பணிகள் காரணமாக ஏப்,15 முதல் 21-ம் தேதிவரை மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை. இந்த மாணவர்களுக்கு மீண்டும் ஏப். 22, 23-ம்தேதிகளில் அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும். ஏப். 24 முதல் கோடை விடுமுறை விடப்படும்.


ஆசிரியர்கள் அனைவரும் இறுதி வேலை நாளான ஏப். 26வரை பள்ளிக்கு வருவது அவசியம்.அந்த நாட்களில் மாணவர் சேர்க்கை, விடைத்தாள் மதிப்பீடு மற்றும் இதர அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Income Tax Return - eFiling | ஆசிரியர்கள் / பணியாளர்கள் தங்கள் DDO விடம் இருந்து Form-16 பெற்று அதனடிப்படையில் வருமான வரி கணக்கை தாக்கல்

 

2023-24ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return - eFiling) செய்யும் வசதி 01.04.2024 முதல் ஆரம்பம். ஆசிரியர்கள் / பணியாளர்கள் தங்கள் DDO விடம் இருந்து Form-16 பெற்று அதனடிப்படையில் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது நன்று!

IMG_20240406_112946



🔻🔻🔻🔻


அனைத்து அரசுப் பள்ளிகளும் இணையதள வசதியை துரிதமாக பெற பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

 1226307

அரசுப் பள்ளிகள் இணையதள வசதிகளை துரிதமாகப் பெறவேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை செயலர் குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார்.


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம், தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர 80 ஆயிரம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (டேப்) வழங்கப்பட உள்ளது. இவை அனைத்தும் ஜூன் மாதம் பள்ளி திறப்பின்போது முடிக்கும் விதமாக பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


இதற்கிடையே, அரசுப் பள்ளிகளில் நடப்பாண்டில் இதுவரை 3 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த பணிகளில் ஈடுபட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களை குரல்வழி பதிவின் வழியாக பள்ளிக்கல்வித்துறை செயலர் ஜெ.குமரகுருபரன் பாராட்டியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:


மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உயர் தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் போர்டு மற்றும் கையடக்க கணினி போன்ற தொழில்நுட்ப ரீதியிலான வகுப்பறை கற்றலை மாணவர்களுக்கு வழங்க இணையதள வசதி அவசியமானது. இதுவரை சுமார் 1,000 அரசு தொடக்க, நடுநிலைபள்ளிகள் மட்டுமே இணையதள வசதிகளை பெற்றுள்ளன. மற்ற பள்ளிகளும் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.


இணையதள வசதிகளைப் பெறுவதற்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும். இந்த உட்கட்டமைப்பு வசதிகளை விரைந்து செய்தால் மக்கள் மத்தியில் அரசுப் பள்ளிகள் மீது பெரும் நம்பிக்கை வரும். இந்த 3 மாதத்துக்கான நமது உழைப்பு அடுத்த 30 ஆண்டுகளுக்கான பெரிய மாற்றத்துக்கு அடித்தளமாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மாணவர்கள் சீருடைகளுக்கு அளவுகள் எடுக்கும் பணி - தவறுதலாக உள்ளது போன்ற குறைகளை EMIS இணையதளத்தில் சேர்க்கை / திருத்தம் செய்து பதிவேற்றம் செய்யக் கோருதல் சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...

 


தொடக்கக் கல்வி -2024-25 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ / மாணவியர்களுக்கு பள்ளிகளில் சமூக நலத்துறையின் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் சீருடைகளுக்கு அளவுகள் எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது -மாணவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது. தவறுதலாக உள்ளது போன்ற குறைகளை EMIS இணையதளத்தில் சேர்க்கை / திருத்தம் செய்து பதிவேற்றம் செய்யக் கோருதல் சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...

Uniform EMIS Portal 05.04.2024 - Proceedings - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தமிழ் வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் தமிழ்வழி விடைத்தாட்களையும் , ஆங்கில வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் ஆங்கிலவழி விடைத்தாட்களை மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும் - தேர்வுத்துறை

 IMG_20240405_141726

மார்ச் / ஏப்ரல் 2024 இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு தொடர்பாக கல்வி மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் தங்கள் மாவட்டத்தில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப விடைத்தாட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

 அவ்வெண்ணிக்கைக்கு தக்கபடி மதிப்பீட்டுப் பணியை செய்து முடிக்க தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கையினை சரியாகக் கணக்கிட்டு பாடவாரியான / பயிற்று மொழிவாரியான ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்து முகாம் பணிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


 மேலும் , தமிழ் வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் தமிழ்வழி விடைத்தாட்களையும் , ஆங்கில வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் ஆங்கிலவழி விடைத்தாட்களை மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றத்தக்க வகையில் , தங்கள் மாவட்டத்தில் அமையும் மதிப்பீட்டு முகாமில் பெறப்படும் பயிற்றுமொழி வாரியான விடைத்தாள்களின் எண்ணிக்கைக்கு தக்க விகிதத்தில் ஆங்கிலம் , தமிழ் வழிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை கணக்கிட்டு நியமனம் செய்து அனுப்பிட வேண்டும் .

SSLC Camp Letter - Download here



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கோடை விடுமுறை எப்போது? - பள்ளிக்கல்வித் துறை விளக்கம்

 1226272

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வுகள் ஏப்.2 முதல் 12-ம் தேதிக்குள் நடத்தப்படும். தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்.13-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.


இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டன. அதன்படி ஏப்.10, 12-ம் தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஏப்.22, 23-ம் தேதிகளுக்கு தள்ளிவைக்கப்பட்டன. அதேநேரம் கோடை விடுமுறை தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்களிடம் குழப்பம் நிலவி வருகிறது.


இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ஏப்.5-ம் தேதியுடன் பருவத் தேர்வுகள் முடிவடைகிறது. அவர்களுக்கு ஏப்.6-ம்தேதி முதல் கோடை விடுமுறையாகும். அதேபோல், 4 முதல் 9-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஏப்.6 முதல் 21-ம் தேதிவரை ரம்ஜான் பண்டிகை மற்றும்தேர்தல் பணிகள் நிமித்தம் காரணமாக விடுமுறை அளிக்கப்படுகிறது.


இந்த மாணவர்களுக்கு மீண்டும்ஏப்.22, 23-ம் தேதிகளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும். தொடர்ந்து ஏப்.24-ல்தொடங்கி கோடை விடுமுறை தரப்படும். பள்ளி திறப்பு நாள் பின்னர் அறிவிக்கப்படும்.


அதேநேரம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இறுதி வேலை நாளான ஏப்.26-ம் தேதி வரை அரசு விடுமுறை இல்லாத தினங்களில் பள்ளிக்கு வருகை புரிவது அவசியம். அந்த நாட்களில் மாணவர் சேர்க்கை, விடைத்தாள் மதிப்பீடு மற்றும் இதர அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

24 மணி நேரமும் மனநல ஆலோசனை வழங்கும் ‘டெலிமனாஸ்’ திட்டம் குறித்து விழிப்புணர்வு: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

 1226165

24 மணி நேரமும் மனநல ஆலோசனைகளை இலவசமாக வழங்கும் ‘டெலிமனாஸ்’ திட்டம் தொடர்பாக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுமம் (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.


இதுதொடர்பாக யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:


இலவச சேவை: உலக மனநல தினத்தை முன்னிட்டு கடந்த 2022, அக்.10-ல் அனைத்து மாநிலங்களிலும் டெலி தொழில்நுட்பம் அடிப்படையில் மனநல ஆலோசனைகளை வழங்ககூடிய ‘டெலிமனாஸ்’ திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. அதன்படி நாடு முழுவதும் இலவசமாக தொலைதொடர்பு (டெலி) மூலம் 24 மணி நேரமும் மக்களுக்கு மனநலம் தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.


அந்தவகையில் ‘டெலிமனாஸ்’ திட்டத்தின் மூலம் ‘14416’ மற்றும் 1800-891-4416 என்ற இலவச உதவி எண்கள் கடைசி மைல் தூரம் வரை மக்களை சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே 24 மணி நேரமும் கிடைக்ககூடிய மனநல ஆலோசனைக்கான இலவச உதவி எண் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.


இலச்சினை வெளியீடு: இந்நிலையில் 2023-ம் ஆண்டு உலக மனநல தினத்தையொட்டி நடத்தப்பட்ட தேசிய சுகாதார மனநல மாநாட்டில் ‘டெலி மனாஸ்’ திட்டத்துக்கு புதிய இலச்சினை (லோகோ) வெளியிடப்பட்டது.


மனநல ஆரோக்கியத்துக்காக 24 மணி நேரமும் வழங்கப்படும் ‘டெலிமனாஸ்’ திட்டத்தின் இலவச உதவி எண்ணுடன் கூடிய இந்த இலச்சினையை உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது வளாகங்களில் விளம்பரப்படுத்தி மாணவர்களிடம் ‘டெலிமனாஸை’ கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய உத்தரவு - DEO Proceedings

 

IMG_20240405_175203

திண்டுக்கல் மாவட்டம் , ஒட்டன்சத்திரம் கல்விமாவட்டம் , வடமதுரை ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்டு தகவலின்றி பணிக்கு வருகை புரியாத நாள்களை ஈட்டிய விடுப்பாக அனுமதிக்க தெளிவுரை வேண்டி கருத்துரு பெறப்பட்டுள்ளது. கருத்துரு பரிசீலனை செய்யப்பட்டது.


 பார்வை 3 இல் காண் அரசுக்கடிதத்தில் தெரிவித்துள்ள படி மருத்துவ விடுப்பு தவிர பிற விடுப்புகள் அனுமதிக்கக்கூடாது என்பதால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கையை தற்போதைய நிலையில் ஏற்க இயலாது என வடமதுரை வட்டாரக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்படுகிறது.

 

 அரசுக்கு எதிராக போராட்டத்தில் ( 19.02.2024 முதல் 08.03.2024 வரை ) கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும் மேலும் 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகள் ஊதியத்தில் ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டாரக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்படுகிறது . எனவே இனிவரும் காலங்களில் இது போன்ற கடிதங்கள் , தெளிவுரைகள் கேட்பதை தவிர்க்குமாறு வடமதுரை வட்டாரக் கல்வி அலுவலருக்கு அறிவுரை வழங்கப்படுகிறது .


 Strike Days EL request - DEO Proceedings - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி, சிசிடிவி கேமரா கட்டாயம்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.

 பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி மற்றும் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுளளது.


இதுகுறித்து தனியார் பள்ளிகள் இயக்குநர் மு.பழனிசாமி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:


தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி வாகனங்களில் நடத்துநர்களால் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு வருவதாக புகார்கள் வருகின்றன. எனவே, பள்ளி வாகனங்களில் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, தமிழ்நாடு மோட்டார்வாகனங்கள் சிறப்பு விதிகள்-2012-ல் பிரிவு 5(6)-ன் படி மாணவிகளுக்காக இயக்கப்படும் பள்ளி வாகனங்களில் கட்டாயமாக பெண் உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் கனரக வாகனஓட்டுநர் உரிமத்துடன் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் மற்றும் உதவியாளர் நியமனத்தின்போது அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை இல்லை என்பதற்கான காவல் துறையின் சான்று மற்றும் மருத்துவத் தகுதிச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.



இதுதவிர, உதவியாளருக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை ஒருநாள் புத்தாக்க பயிற்சி அளிப்பதுடன், அவர்களுக்கு போக்சோ சட்டத்தின் சாராம்சங்களை தெளிவாக விளக்க வேண்டும். வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும். ஒவ்வொரு வாகனத்துக்கும் தரச்சான்று உரிய காலத்தில் புதுப்பிக்கப்பட வேண்டும். ஆண்டுதோறும் மாவட்டஅளவிலான ஆய்வுக் குழுவின் சோதனைக்கு வாகனங்களை உட்படுத்த வேண்டும். வாகனங்களின் முன்னும், பின்னும் பள்ளி வாகனம் என எழுதியிருப்பதுடன், மஞ்சள் வண்ணம் பூசப்பட்டு, பள்ளியின் தொலைபேசி எண் குறிப்பிட்டிருக்க வேண்டும்.


அதேபோல், பள்ளி வாகனத்தில் முதலுதவி பெட்டி, தீயணைப்புக் கருவி, வேகக் கட்டுப்பாட்டு கருவி, முன் மற்றும் பின் சக்கரங்களின் இடையே பாதுகாப்பு தாள்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு வாகனத்திலும் அவசரகால வழி இருப்பதுடன், அசாதாரண சூழல்களில் மாணவர்கள் உடனே தொடர்பு கொள்ள அவசரகால பட்டன்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். காலாவதியானவாகனங்களை பயன்படுத்தக்கூடாது. மேலும், வாகனங்களில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக மாணவர்களை ஏற்றக்கூடாது.


முக்கியமாக, குழந்தைகளை இறக்கிவிடும்போது வாகனத்துக்கு அருகில் அல்லது பின்புறமாக எவரும் இல்லை என்பதை உறுதிசெய்த பின்னரே வாகனத்தை இயக்க வேண்டும். பள்ளியை ஒட்டியுள்ள சாலைகளில் வாகனங்களை நிறுத்தி மாணவர்களை ஏற்றி, இறக்கக்கூடாது என்பன உட்பட 32 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை பின்பற்றி செயல்பட அனைத்து தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளுக்கும் அந்தந்த மாவட்டமுதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

1 - 5ஆம் வகுப்பு கோடை விடுமுறை & ஆசிரியர்களது பணி குறித்த செய்தி

 

ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஐந்தாம் தேதி அன்றோடு ஆண்டு தேர்வுகள் முடிவடைகிறது. ஆறாம் தேதி முதல் அந்தக் குழந்தைகளுக்கு கோடை விடுமுறையாக கருதலாம்.

       நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு பயிலக் கூடிய மாணவர்களுக்கு பத்தாம் தேதி மற்றும் 12ஆம் தேதி இருந்த தேர்வுகள் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது அதனால் மாணவர்களுக்கு தேர்விற்கு ஆயத்தப்படுத்தும் விதமாக 12-ம் தேதி வரை நான்கு மற்றும் ஐந்து வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து அவர்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்துகின்ற பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ளலாம்.

      அதன் பிறகு தேர்தல் பணிகள் ஆசிரியர்களுக்கு 15 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை உள்ள காரணத்தினால் நான்கு மற்றும் ஐந்து வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை.

     மீண்டும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக பங்கேற்கக் கூடிய வகையில் தெளிவாக எடுத்துச் செல்லுதல் வேண்டும், அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

              ஆசிரியர்களை பொறுத்தவரை 26 ஆம் தேதி வரை அவர்களுக்கு வேலை நாட்களாக கருதப்படுகிறது அவர்கள் இடையில் தேர்தல் பணிக்காக செல்கின்ற போது அது on duty ஆக கருதலாம்.

    தேர்தல் பணி இல்லாத நேரங்களில் பள்ளிக்கு வருகை புரிந்து ஏற்கனவே நடைபெற்ற தேர்வு விடைத்தாள்களை திருத்துகின்ற பணி, மாணவர்களுக்கான promotion கொடுக்கின்ற பணி ,  promotion registration- ல் பதிவு செய்கின்ற பணி, வட்டார கல்வி அலுவலருக்கு அனுப்புகின்ற பண ஆகியவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம் மேலும் தற்போது இணையதள இணைப்பு பெறுகின்ற பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவே அதனை பெறுகின்ற முயற்சியில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இணையதள இணைப்பு வசதிக்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் நிதியின் மூலம் இரண்டாவது கட்ட பள்ளி மானியம் தற்போது பள்ளி கல்வி இயக்குனர் மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


one time connectivity charge இந்த நிதியில் இருந்து  மேற்கொள்ளலாம் அதோடு நாம் ஏற்கனவே ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் மாதந்திர கட்டணத் தொகை மூன்று மாதங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது அதனை பள்ளிகளுக்கு விடுவிக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

      

பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொறுத்தவரை ஏப்ரல் மே மாதங்களில் இணையதள இணைப்பு வசதியும் மற்றும் keltron  நிறுவனத்தின் மூலம் வழங்கப்படுகின்ற திறன் வகுப்பறைகள் மற்றும் ,கணினி தொழில்நுட்ப ஆய்வகம் அமைப்பதற்கு பொருட்கள் வருகின்ற போது பள்ளிக்கு வருகை புரிந்து பொருட்களை பெற்று அதனை நிர்மாணம் செய்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


- பள்ளிக் கல்வித்துறை தகவல்


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

IFHRMS - ஏப்ரல் 2024 முதல் Income Tax Auto Deduction நடைமுறைக்கு வரவுள்ளதால் கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்ற உத்தரவு.

 

அனைத்து பணம் பெறும் அலுவலர்களின் கவனத்திற்கு ஏப்ரல் 2024 முதல் Income Tax Auto Deduction நடைமுறைக்கு வரவுள்ளதால் கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


 * ஏப்ரல் 12 - க்குள் PAN Number இல்லாத பணியாளர்களுக்கு Employee Profile- ல் PAN Number update செய்ய வேண்டும் . 


* PAN Number இல்லாத பணியாளர்களுக்கு வருமான வரித்துறையின் விதிகளின் படி தானாகவே 20 % Income Tax பிடித்தம் செய்யப்படும்.


* அனைத்து பணியாளர்களும் TDS பிடித்தம் முறை Old Regime அல்லது New Regime என்பதை தேர்வு செய்ய வேண்டும்.


*  களஞ்சியம் Mobile App அல்லது களஞ்சியம் மென்பொருளில் Employee Selt Service ஆகிய இரண்டு வழிகளில் பணியாளர்கள் option- ஐ தேர்வு செய்யலாம்.


*  ஏப்ரல் 12 - க்குள் Income Tax Option- ஐ தேர்வு செய்யாத பணியாளர்களுக்கு தானாகவே New Regime தேர்வு செய்யப்படும்.


*  Old Regime தேர்வு செய்த பின்பு பணியாளர்கள் தங்களது declaration- ஐ ( Savings மற்றும் Expenses ) Self Service- ல் கொடுக்க வேண்டும்.


*  Initiator தங்களது அலுவலக அனைத்து பணியாளர்களுக்கும் Initiator id -ல் Option- தேர்வு செய்யலாம் மற்றும் Declaration work ஆகியவற்றை செய்ய இயலும் Intiator- ன் Employee Self Service portal- லில் இதனை செய்யலாம்.


* Old Regime தேர்வு செய்த பணியாளர்கள் டிசம்பர் மாதம் 10 - ம் தேதிக்குள் தங்களது சேமிப்பு மற்றும் செலவுகளுக்கான அசல் ரசீதுகளை Scan செய்து IFHRMS மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


* அவ்வாறு அசல் ரசீதுகளை பதிவேற்றம் செய்யாத பட்சத்தில் December மாதம் முதல் IT கூடுதலாக பிடித்தம் செய்யப்படும் . 


*அனைத்து பணியாளர்களும் அவரவர் Income Tax Projection Report- ஐ Employee Service -- > Reports -- > Income Tax Projection Report Self Service பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கோடை விடுமுறை & பள்ளி வேலைநாள் தொடர்பான மாவட்டக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை.

 மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அறந்தாங்கி அவர்களின் பள்ளி வேலைநாள் தொடர்பான சுற்றறிக்கை...

IMG-20240404-WA0012

அறந்தாங்கி கல்வி மாவட்டம் தொடக்கக் கல்வி ) அனைத்து ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 5 - ஆம் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. ஆதலால் அவ்வகுப்பு மாணவர்களுக்கு 6 - ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.


 நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 6 - ஆம் தேதி முதல் 21- ஆம் தேதி வரை ரம்ஜான் பண்டிகை மற்றும் தேர்தல் பணி நிமித்தம் காரணமாக மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.


 இம்மாணவர்களுக்கு மீண்டும் 22/04/24 மற்றும் 23/04/24 ஆகிய தேதிகளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வு நடைபெறும். இவ்வகுப்பு மாணவர்களுக்கு 24/04/24 முதல் கோடைவிடுமுறை அளிக்கப்படுகிறது. 


பள்ளி திறப்பு நாள் பின்னர் அறிவிக்கப்படும்.


 தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் அனைவரும் அரசுவிடுமுறை இல்லாத நாட்களில் பள்ளிக்கு வருகைப்புரிந்து மாணவர் சேர்க்கை மற்றும் விடைத்தாள் மதிப்பீடு செய்தல் மற்றும் பிறப் பணிகளை ( ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வகம் ) அமைக்க வரும் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு நல்கிட அனைத்து தொடக்க / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கிடுமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஏப்., 12க்கு முன் 4 லட்சம் மாணவர்கள் சேர்க்க உத்தரவு.

 


2024-2025 கல்வியாண்டில் 5 வயது முடிந்த மாணவர்களை கடந்த மார்ச் 1ம் தேதி முதல் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.


இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4 லட்சம் மாணவர்களை ஏப்ரல் 12 ம் தேதிக்குமுன்பாக சேர்க்க வேண்டும் என்றும், அதனை எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்யவும் தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இனிமேல் கருத்தாளர்களாக செல்ல முடியாது

 IMG-20240403-WA0012

மாநில / மாவட்ட / ஒன்றிய அளவில் கருத்தாளர்களாக மிகச் சிறப்பாக செயல்பட்ட தொடக்கக் கல்வி , உயர் தொடக்கக் கல்வி , உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பு ஆசிரியர்களை பாடவாரியாக நான்கு ( 4 ) பேர் வீதம் தெரிவு செய்து இணைப்பில் உள்ள Google link do 03.04.2024 இன்று மாலை 04.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யவும்...


குறிப்பு : 

1 ) ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதில் ஆர்வமும் ஊக்கமும் உள்ள ஆசிரியர்களாட இருத்தல் வேண்டும் 


2 ) 50 வயதிற்கு கீழ் உள்ள ஆசிரியர்களாக இருத்தல் வேண்டும்


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசு பள்ளிகளுக்கு இணைய வசதி - Installation Charges - பள்ளிகளுக்கு விடுவித்தல் - Proceedings

 தொடக்கக் கல்வி பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை எண். 43 மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் - அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் (Smart Classrooms) மற்றும் அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்கள் (Hi Tech Labs) அமைப்பதற்கு தேவையான One time charge (Installation charge) பெறப்பட்டது பள்ளிகளுக்கு விடுவித்தல் தொடர்பாக


Click Here to Download - Hi Tech Lab - Fund Release of One Time Installation Charges - Proceedings - Pdf


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News