46% to 50% அகவிலைப்படி உயர்வு உங்களுக்கு எவ்வளவு வரும்? - உத்தேச அட்டவணை பட்டியல் - Level 12 (Grade Pay - 4300) - SG Teacher

 46% to 50% சதவீத அகவிலைப்படி உயர்வு உங்களுக்கு எவ்வளவு வரும்? 


தமிழ்நாடு அரசு ஜனவரி   1 முதல் தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவித்துள்ளது அதன்படி தற்போது உள்ள 46 சதவீத அகவிலைப்படி லிருந்து 50 சதவீத அகவிலைப்படி உயருகிறது இதில் உங்களுக்கு எவ்வளவு அகவிலைப்படி உயர்வு வரும் என்பதற்கான உத்தேச அட்டவணை பட்டியல் இங்கு வழங்கப்பட்டிருக்கிறது


46% to 50% D.A Hike Calculation - Level 12 (Grade Pay - 4300)

Click Here To Download - 46% to 50% D.A Hike Calculation - Level 12 (Grade Pay - 4300) - SG Teacher - Pdf



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

2024 - 2025 ஆம் கல்வியாண்டில் பாடவேளை அட்டவணையில் ஆய்வக செய்முறை வகுப்பு இடம்பெற வேண்டும் - DSE Proceedings

 IMG_20240312_152814

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு / நகராட்சி உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் 6 முதல் 10 வகுப்பு வரை பயின்று வரும் மாணவ / மாணவியர்களுக்கு ஆய்வகத்தில் செய்முறை பாடவேளை மற்றும் மேல்நிலை வகுப்பு மாணவ ஆய்வகங்களில் செய்முறை வகுப்பு அட்டவணை தலைமையாசிரியரால் தயார் செய்து மாணவியர்களுக்கு பாடவேளைகளுக்கான கால வழங்கப்படவேண்டும்.


 பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி / மாநகராட்சி / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களின் கற்றல் அடைவினை மேம்படுத்தும் பொருட்டு ஆய்வகச் செயல்பாடுகள் மூலம் உற்றுநோக்கி ஆய்ந்தறிதல் , செய்து கற்றலின் மூலம் நிலையான கற்றல் அனுபவத்தைப் பெறுதல் , அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல் , மொழி ஆய்வகங்களின் மூலம் மொழி ஆளுமை மூலம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு திறன்களை பெறும் நோக்கில் பின்வரும் ஆய்வகங்களின் செல்பாடுகள் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 1. அடல் டிங்கரிங் ஆய்வகம் 

2. உயர்தொழில்நுட்ப ஆய்வகம் / மெய்நிகர் வகுப்பறை மூலம் கற்பித்தல் 

3. அறிவியல் ஆய்வகங்கள் 

4. மொழி ஆய்வகங்கள் 

5. தொழிற்கல்வி ஆய்வகங்கள் 

6. கணித ஆய்வகங்கள் 


கல்வி ஆண்டின் அனைத்து தொடக்கத்தில் வகுப்புகளுக்கும் ஆசிரியர்களுக்கும் கால அட்டவணை தயாரித்த பின்னர் அதன் அடிப்படையில் எந்தெந்த வகுப்பு மாணவ / மாணவிகள் எந்தெந்த ஆய்வகங்களை எந்தெந்த பாடவேளைகளில் பயன்படுத்தலாம் எனத் தலைமையாசிரியர் திட்டமிடுதல் வேண்டும் .

Time Table for Practical Period from 2024-25 Proceedings - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

SMC மறுகட்டமைப்பு நடைமுறையின்போது முன்னாள் மாணவர்களை இணைத்தல் குறித்த வழிகாட்டுதல்கள் வெளியீடு.

 IMG_20240312_163817

குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , 2009 இன்படி பள்ளி முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் பள்ளி மேலாண்மைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

 குழந்தைகளின் அடிப்படை உரிமைகளான கல்வி , பாதுகாப்பு , வளர்ச்சி போன்றவற்றிற்கும் , பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் துணைநிற்க ஏதுவாக பார்வை - இன்படி பள்ளி மேலாண்மைக் குழுவில் அரசுப் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களை உறுப்பினர்களாக இணைத்து செயல்படும் வகையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மேற்காண் ஆணையினை வெளியிட்டுள்ளது. 


பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைமுறையின்போது பள்ளி மேலாண்மைக் குழுவில் முன்னாள் மாணவர்களை இணைத்தல் குறித்த தக்க வழிகாட்டுதல்கள் கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது 


முன்னாள் மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் :

SMC RECONSTITUTION ALUMINI MEMBERS ADDED -24 PERSON PROCEEDINGS 

Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கடந்த கால தணிக்கை தடைகளை நிவர்த்தி செய்தல் - கூட்டமர்வு (Join Sitting) நடத்துதல் - DSE செயல்முறைகள்!

 IMG_20240312_145422

கடந்த கால தணிக்கை தடைகளை நிவர்த்தி செய்தல் - கூட்டமர்வு (Join Sitting) நடத்துதல் - DSE செயல்முறைகள்!

DSE - Join Sitting Proceedings - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

New DA Calculator - 50% அகவிலைப்படி உயர்வையும் அதற்குரிய CPS பிடித்தம், குறைந்தபட்ச TPF சந்தா மற்றும் நிலுவைத்தொகை ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம்!!!

தமிழ்நாடு அரசு தற்போது அறிவித்துள்ள 46% லிருந்து 50% அகவிலைப்படி உயர்வையும் அதற்குரிய CPS பிடித்தம், குறைந்தபட்ச TPF சந்தா மற்றும் நிலுவைத்தொகை ஆகியவற்றை அறிந்துகொள்ள மேற்காணும் படிவத்தில் உங்களது அடிப்படை ஊதியத்தை மட்டும் நிரப்பினால் போதுமானது. தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.👇

New DA Calculator - Download here



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

2024 - 2025 ஆம் கல்வியாண்டில் பாடவேளை அட்டவணையில் ஆய்வக செய்முறை வகுப்பு இடம்பெற வேண்டும் - DSE Proceedings

 IMG_20240312_152814

     தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு / நகராட்சி உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் 6 முதல் 10 வகுப்பு வரை பயின்று வரும் மாணவ / மாணவியர்களுக்கு ஆய்வகத்தில் செய்முறை பாடவேளை மற்றும் மேல்நிலை வகுப்பு மாணவ ஆய்வகங்களில் செய்முறை வகுப்பு அட்டவணை தலைமையாசிரியரால் தயார் செய்து மாணவியர்களுக்கு பாடவேளைகளுக்கான கால வழங்கப்படவேண்டும்.

 பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி / மாநகராட்சி / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களின் கற்றல் அடைவினை மேம்படுத்தும் பொருட்டு ஆய்வகச் செயல்பாடுகள் மூலம் உற்றுநோக்கி ஆய்ந்தறிதல் , செய்து கற்றலின் மூலம் நிலையான கற்றல் அனுபவத்தைப் பெறுதல் , அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல் , மொழி ஆய்வகங்களின் மூலம் மொழி ஆளுமை மூலம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு திறன்களை பெறும் நோக்கில் பின்வரும் ஆய்வகங்களின் செல்பாடுகள் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 1. அடல் டிங்கரிங் ஆய்வகம் 

2. உயர்தொழில்நுட்ப ஆய்வகம் / மெய்நிகர் வகுப்பறை மூலம் கற்பித்தல் 

3. அறிவியல் ஆய்வகங்கள் 

4. மொழி ஆய்வகங்கள் 

5. தொழிற்கல்வி ஆய்வகங்கள் 

6. கணித ஆய்வகங்கள்

கல்வி ஆண்டின் அனைத்து தொடக்கத்தில் வகுப்புகளுக்கும் ஆசிரியர்களுக்கும் கால அட்டவணை தயாரித்த பின்னர் அதன் அடிப்படையில் எந்தெந்த வகுப்பு மாணவ / மாணவிகள் எந்தெந்த ஆய்வகங்களை எந்தெந்த பாடவேளைகளில் பயன்படுத்தலாம் எனத் தலைமையாசிரியர் திட்டமிடுதல் வேண்டும் .

Time Table for Practical Period from 2024-25 Proceedings - Download Here.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Breaking : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

 


IMG_20240312_154742

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு.


DIPR.P.R.NO.539 - DA Government Offcial - PRESS RELEASE - Date - 12.03.2024 - Download here


மக்கள் நலன் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் பல முன்னோடித்திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வகையில் நடைமுறைபடுத்துவதில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது.


கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையே அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது . அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து , 01.07.2023 முதல் ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கிட அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

 அவ்வகையில் , ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 01.01.2024 முதல் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் மாநில அரசு பணியாளர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி 50 சதவீதமாக 01.01.2024 முதல் உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள். 


இந்த அகவிலைப்படி உயர்வால் , சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள் , ஆசிரியர்கள் , ஓய்வு தியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் .2587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும் , அரசு அலுவலர்கள் , ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் .


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிநியமனம் - Dir Proceedings

 01.01.2024 நிலவரப்படி தகுதியுள்ள ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு 20%  இட ஒதுக்கீட்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிநியமனம் வழங்குதல் - ஒதுக்கீட்டு ஆணை வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்...

 பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் இளநிலை ஆசிரியரல்லாப் பணியாளர்களில் ( உதவியாளர் உதவியாளர் / ஆய்வக உதவியாளர் / நூலகர் / பதிவறை எழுத்தர் / அலுவலக உதவியாளர் / இரவுக்காவலர் ) 20 % இட ஒதுக்கீட்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக தற்காலிக அடிப்படையில் நியமனம் வழங்க 01.01.2024 நிலவரப்படி தகுதியுள்ள கீழ்க்காணும் பணியாளர்களுக்கு அவர்களின்  பெயருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது ...


Join Dir Proceedings








மார்ச் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..

 Local%20holiday

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் வரும் மார்ச் 14ஆம் தேதி அன்று  நடைபெற உள்ளது. இதன் காரணமாக மார்ச் 14ஆம் தேதி அன்று ஒரு நாள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவுலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறைந்த பணியாளர்களை கொண்டு செயல்படும்.


மார்ச் 14ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு முன்னதாக தேர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தால் திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்படும் என்றும், மார்ச் 23ஆம் தேதி அன்று இதனை ஈடு செய்யும் விதமாக பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

11.03.2024 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

 Local%20holiday

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா மார்ச் 11ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு மார்ச் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 16ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2022-2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது - இருவர் தேர்வு!!!

 

மாணாக்கர்களின் அறிவை வடிவமைப்பதிலும் , அறிவியல் கற்றல் மீதான ஆர்வத்தை வளர்ப்பதிலும் , உயர் கல்வியில் மாணாக்கர்கள் அறிவியல் துறையினை தேர்ந்தெடுப்பதற்கும் மற்றும் அறிவியலாளர்களாக உருவாகுவதற்கும் அறிவியல் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.


 அறிவியல் ஆசிரியர்களின் விலைமதிப்பற்ற பணிகளை அங்கீகரிக்கும் விதமாக அறிவியல் நகரம் 2018-2019 முதல் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுகளை வழங்கி வருகிறது. 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ் நாட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி அளவில் அரசு , அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

2022-2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு இரண்டு அறிவியல் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 


2022-2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதை மாண்புமிகு உயர்கல்வித் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு ஆர்எஸ்ராஜகண்ணப்பன் அவர்கள் , உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் திரு ஆகார்த்திக் இஆப , மற்றும் அறிவியல் நகரம் , முதன்மைச் செயலர் துணைத் தலைவர் திரு தேவ் ராஜ் தேவ் , இஆப ஆகியோர்களின் முன்னிலையில் இன்று ( 11.03.2024 ) சென்னை தலைமை செயலகத்தில் வழங்கினார்கள்.


 விருது பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு 


1. இயற்பியல் துறையில் திருமதி சரபிந்துலேகா , முதுகலை ஆசிரியை அரசு மேல்நிலைப்பள்ளி , கொட்டாரம்- 629703. கன்னியாகுமரி மாவட்டம் அவர்களுக்கு வழங்கப்பட்டது . 


IMG-20240311-WA0032

2. உயிரியல் துறையில் திருமதி சு.சங்கீதா , பட்டதாரி ஆசிரியை , அரசு மேல்நிலைப்பள்ளி சேடப்பட்டி -625 527 , மதுரை மாவட்டம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

IMG-20240311-WA0033

சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது பெற்றவர்களுக்கு மாண்புமிகு உயர்கல்வித் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்களால் தலா ரூ .25,000 / - ( ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும் ) ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

CTET 2024 - தேர்வு அறிவிப்பு வெளியீடு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 2

 .com/

* மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET 2024) ஜூலை 2024க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


* இந்தத் தேர்வு நாடு முழுவதும் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும்.


* இந்த ஆண்டு தேர்வு, ஜூலை 7, 2024 அன்று நடைபெறும்.


* இந்தத் தேர்வில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் CBSE CTET அதிகாரப்பூர்வ இணையதளமான ctet.nic.in ஐ கிளிக் செய்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.


* இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 7ஆம் தேதி முதல் பெறப்படுகின்றன.


* விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 2, 2024 என அறிவிக்கப்பட்டுள்ளது..!


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பயிலும் பள்ளிகளிலேயே ஆதார் பதிவு / புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி (SOP) அரசாணை வெளியீடு!

 

பள்ளிக் கல்வி - " பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு " - அனைத்து அரசு , அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அப்பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ( Standard Operating Procedure ) ஆணை வெளியிடப்படுகிறது.

G.O.Ms.No.72 Aadhar Through schools - Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தொடக்கக் கல்வி - ஒரு பாடத்துக்கு ஒரு ஆசிரியர் - அரசு உத்தரவு

 

dpi

தமிழகத்தில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அரசு தொடக்க பள்ளிகளிலும்; ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான நடுநிலை பள்ளிகளிலும், 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் தான் நியமிக்கப்படுகின்றனர். 


அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் அதிகபட்சம், 100 மாணவர்கள் மட்டுமே இருப்பதால், ஒன்று அல்லது இரண்டு பாடங்களுக்கு மட்டுமே ஆசிரியர் இருப்பார்.

மற்ற பாடங்களுக்கு ஆசிரியர் இல்லாததால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும் கற்றலில், தொடக்க, நடுநிலை பள்ளிகள் பின்தங்கும் நிலை தொடர்கிறது. 


இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இனி வரும் காலங்களில், 100 மாணவர்களுக்கு மேல், ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ஒரு ஆசிரியர் நியமித்து கொள்ளலாம் என, தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு பள்ளிக்கல்வி துறை அனுமதி அளித்துள்ளது.


அதனால், வரும் கல்வியாண்டில், பாட வாரியாக ஆசிரியர் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தேவையான பாடங்களுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க, தொடக்க கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TNPSC - குரூப் -4 பதவிக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம் - ஒரு இடத்துக்கு 326 பேர் போட்டி

      6 ஆயிரத்து 244 பணியி உங்களுக்கான குரூப் -4 பதவிக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 94 பேர் விண் ணப்பித்து உள்ளனர். ஒரு இடத்துக்கு சுமார் 326 பேர் போட்டியிடுகின்றனர்...

IMG-20240310-WA0030

10th Science - Slow Learners - Important 2 Mark Study Materials

 IMG_20240311_112154

10th Science - Slow Learners - Important 2 Mark Study Materials 

Click here


Thanks To,

Mr S.R.senthil Kumar

Government Girls Higher Secondary School

Ayakkaranpulam

Nagapattinam District


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Manarkeneni App Download

 




      தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாநிலகல்வியியல் ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் இணைந்து பல்வேறு மாணவர் நலம் சார்ந்து வீடியோக்கள் தயாரித்து வழங்குகின்றனர். அதன் அடிப்படையில் மணற்கேணி இணையதளம் வாயிலாகவும் , மணற்கேணி மொபைல் ஆப் மூலமாகவும் வீடியோ பாடங்கள் பதிவேற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மருத்துவப் போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் விதமாக உயர்நிலை சிந்தனை வீடியோக்கள் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது அதனை மாணவர்கள் பார்த்து பயன்பெற ஆசிரியர்களாக நீங்கள் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி மணற்கேணி இணையதளம் மணற்கேணி மொபைல் ஆப்பை பயன்படுத்த வழி காட்டுங்கள்..

ஆப் டவுன்லோட் செய்ய



இணையதள முகவரி

https://manarkeni.tnschools.gov.in




🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News