காணொலி பாடங்கள் அடங்கிய ‘மணற்கேணி இணையதளம்' - அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

 


1204208

பள்ளி மாணவர்களுக்கான காணொலி பாடங்கள் அடங்கிய மணற்கேணி இணையதள திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.


தமிழக பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்கள் 100பேரை கண்டறிந்து உலகத்தரம் வாய்ந்தகல்வியை சிவ் நாடார்அறக்கட்டளை வழங்கஉள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.


அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில், பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன், சிவ்நாடார் அறக்கட்டளை நிர்வாகி சுந்தர் ஆகியோர் ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.


இதனிடையே, 1 முதல் 12-ம் வகுப்பு வரையான பள்ளி பாடங்கள் அனைத்தும் 2டி, 3டி வடிவில் காணொலிகளாக வடிவமைக்கப்பட்டு மணற்கேணி செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான வரவேற்பை கருத்தில்கொண்டு மணற்கேணி திட்டத்துக்காக புதிதாக இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


இதன் தொடக்க விழாவும் தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த மணற்கேணி இணையதளத்தை (manarkeni.tnschools.gov.in) அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.


நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: நவீன தொழில்நுட்பம் வந்தாலும் வகுப்பறையில் ஒரு ஆசிரியர் பாடம் நடத்தும் அனுபவத்துக்கு எதுவும் ஈடாகாது. அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.


சட்டப்பேரவை வரலாற்றில் பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதைப் பார்த்து அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் வருவார்கள் என்றார்.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

3 , 4 , 5 ஆம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம்

  

IMG-20240223-WA0015

3 , 4 , 5 ஆம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக் கொள்கை 


நடப்பு கல்வியாண்டில் 3 , 4 , 5 ஆம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அனைத்து மாநிலங்கள் , யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் சுற்றறிக்கை


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Trust Exam - ல் ஒரே பள்ளியே சேர்ந்த 39 மாணவர்கள் தேர்ச்சி!!!

 IMG-20240222-WA0002

திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 39 பேர் Trust Exam தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு அன்பில் மகேஸ் அறிவுறுத்தல்

 


1203459

2024-2025 ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் அலுவலர்கள், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் முழு முயற்சியோடு பணியாற்றிட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வி மட்டுமே சமத்துவம் மலரச்செய்யும் மிகப்பெரிய ஆயுதம்”என்ற மறைந்த முதல்வர் கருணாநிதியின் கூற்றை மெய்ப்பித்திடும் வகையில் தமிழக முதல்வர் எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களில் கல்வி வளர்ச்சியில் நம் தமிழகம் முன்னிலை பெறவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, தொடங்கப்பட்ட பல்வேறு புதிய திட்டங்களால் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெற்றிநடை போட்டு வருவதைக் காணலாம்.கல்வியில் ஒரு மாநிலம் உயர்ந்த நிலையைப் பெறுகின்ற பொழுது, பல்வேறு துறைகளில் இயல்பாகவே உயர்வு பெறும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு தமிழக முதல்வர் பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகப்படுத்தியுள்ளார். எந்த நோக்கத்துக்காக நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளதோ அதை மனதிற்கொண்டு, அந்நோக்கத்தைச் சிறப்பாக நிறைவேற்ற வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.தமிழக முதல்வர் பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை செலவாகக் கருதாமல் கல்விக்கான முதலீடாகக் கருதுவதாக தெரிவித்துள்ளார். இதனை பள்ளிக் கல்வித் துறையில் உள்ள அலுவலர்கள், இருபால் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.


மாணவர் நலமே மாநில வளம் என்னும் உயரிய எண்ணத்தோடு செயல்பட்டு வருவதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். தமிழக முதல்வர் பள்ளிக் கல்வித்துறைக்கு 2021-22 –ஆம் நிதியாண்டுக்கு ரூபாய். 32,599.54 கோடியும்; 2022-23-ஆம் நிதியாண்டுக்கு ரூ.36,895.89 கோடியும்; 2023-24-ஆம் நிதியாண்டுக்கு ரூ.40,299.32 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளார். நடப்பு ஆண்டில் ரூபாய். 44,042 கோடி ஒதுக்கியுள்ளார். ஆக மொத்தம் ரூபாய். 1,53,796 கோடி பள்ளிக்கல்வித் துறைக்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு கல்வித்துறைக்கென இதுவரை 57-திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருவதால் மாணவர்களின் கல்வித் தரம் உயரும் வகையில் மிக பெரிய வளர்ச்சியை கல்வித்துறை பெற்றுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன். இதனால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் உயர்ந்துள்ளது. இடைநிற்றல் மிகவும் குறைந்துள்ளது.இல்லம் தேடிக்கல்வித் திட்டத்தால் கரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் தேக்க நிலை முற்றிலும் குறைந்துள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட்டுள்ளது. “நான் முதல்வன்” திட்டத்தால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களில், பலர் நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில வாய்ப்பு உருவாகியுள்ளது.



கலைத்திருவிழாவின் மூலம், மாணவர்களிடத்தில் பொதிந்துள்ள பல்வகை ஆற்றலை வெளிக்கொணர்கின்ற சூழல் உருவாகியுள்ளது. “நம்பள்ளி நம்பெருமை” திட்டத்தினால் அரசுப் பள்ளிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.“முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” இந்திய ஒன்றியத்திலேயே, முதன்முதலாக நம் தமிழகத்தில் தான் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டு, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் பள்ளிக்கு வருகை கூடியுள்ளதோடு கற்கும் ஆர்வமும் கூடியுள்ளதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம்.


இதன் மூலம் “வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்“ என்ற மகாகவியின் கனவு நிறைவேறியிருக்கிறது. “மணற்கேணித் திட்டம்” – நன்கு திட்டமிட்ட வழிகாட்டுதலுடன் கூடிய கற்றல் பயணத்துக்கு வழிவகுத்து கற்றனைத்தூறும் அறிவைச் சுரந்து கொண்டிருக்கிறது.


மாணவர்களின் மனதுக்கு மகிழ்வூட்டும் கல்விச் சுற்றுலா, ஊஞ்சல், தேன்சிட்டு இதழ்கள், தமிழ்மொழியின் ஆற்றலை பெருமையை மாணவர்கள் விரும்பி அறிந்திட தமிழ்க்கூடல், மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சி, வாசிப்பு இயக்கம் போன்ற பல்வேறு நல்ல திட்டங்களை தமிழக முதல்வர் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகின்றது.“விழுதுகள்” திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளில் பயின்ற மேனாள் மாணவர்களை அழைத்து வந்து அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மேம்பட அவர்களின் பங்களிப்பை உறுதி செய்யும் முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன.


பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டினை முன்னிட்டு, பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கென ரூபாய். 7,500 கோடி மதிப்பீட்டில் “பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்” என்ற மாபெரும் திட்டத்தை 5 ஆண்டுகளில் செயல்படுத்திட அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று இதுவரை, 2487 கோடி மதிப்பிலான 3601 வகுப்பறைகள், ஆய்வகங்கள், உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன.


இந்நிதியாண்டில் மேலும் ரூபாய். ரூ.1,000 கோடி பள்ளிக் கட்டமைப்புக்கென ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றும் உயர்ந்த நோக்கத்தோடு கடந்த மூன்று ஆண்டுகளில் 38 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 28 பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.


மேலும் நவீன தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் உயர்தர கற்றல், கற்பித்தல் சூழலை உருவாக்கவும், அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tech labs) மற்றும் 22,931 தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classrooms) அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன. மேலும் 80,000 ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்பட உள்ளது, இதனால் வரும் கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வசதிகளுடன் கற்றல் கற்பித்தல் பணிகள் நடைபெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆகியோர் ஒன்றிணைந்து அனைத்து பள்ளி வயதுடைய குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்த்திட பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்திட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

1132 தற்காலிகப் பணியிடங்களுக்கு 31.12.2028 வரை 5 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!

 IMG_20240222_184437


1132 தற்காலிகப் பணியிடங்களுக்கு 31.12.2028 வரை 5 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!

1132 Post Continuation Order - Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை நடத்துதல் தொடர்பாக வழிகாட்டுதல்கள் வெளியீடு.

 IMG_20240222_192206

தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான " மாநில மதிப்பீட்டுப் புலம் " பார்வையில் காணும் அரசாணை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பார்வையில் காணும் கூட்டக்குறிப்புகளில் கூறப்பட்டுள்ளவாறு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை ( Learning Outcome / Competency Based Test ) நடத்துதல் தொடர்பாக பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

SKILL BASED ASSESSMENT TEST - SPD Proceedings 👇👇👇

Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

EE TLM - ENGLISH - PLACES AROUND US - MODULE - 5 - TERM - 3

 


MJHJ

Students will be able to Raha nice and use 8 names for places in the town. (Town hall, hospital, supermarket, museum, library, swimming pool, post office, park).

Students will review previously learnt vocabulary.


Students will be able to identify the different places inside the school campus.


Students will be able to express what they do to the places.Students are able to make simple sentences about the things inside the classroom.


Students will know how to spell new vocabularies.


Show the pictures of places in the school and ask the students what it is.


Let them write the words to their notebook.


Present the word and let the students match it to the pictures.


Let the students read again and again the vocabularies.


Repeatedly let the student spell every word until they memorize all the vocabulary.


Have the students work in pair and take turn to ask and answer the questions.


PDF LINK  AVAILABLE IN BELOW.......


👇👇👇👇👇


MODULE - 1 -  Download here


MODULE - 2  - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கலைத் திருவிழா - 1 to 5 மாணவர்களுக்கு " பண்பாடு மற்றும் விளையாட்டு " வாரம் கொண்டாடுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

 


IMG_20240221_172646

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி செயல்பாடுகள் - கல்வி சாரா அரசு பள்ளிகளில் தொடக்க நிலையில் " 

பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம் 2023-24 நடத்துதல் வழங்குதல் வழிகாட்டு நெறிமுறைகள் & ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் பள்ளிக்கல்வி இயக்குநர் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணை செயல்முறைகள்

Screenshot_2024-02-21-17-10-15-10_e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f

Block level மார்ச் 5,6,7 போட்டிகள்

முழு விபரம் 👇👇

Cutural.sports week 2023-24 Proceedings | Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TN Budget 2024 - நவீன தொழில்நுட்பத்தில் மாணவர்கள் கற்றிட தொடக்கக் கல்வித்துறைக்கு ரூ.960 கோடி ஓதுக்கீடு.

 



 

நவீன தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் பொருத்தமான கற்றல் - கற்பித்தல் சூழலை உருவாக்கவும் , அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 525 கோடி ரூபாய் செலவில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ( Hi - Tech lab ) மற்றும் 435 கோடி ரூபாய் செலவில் 22,931 தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் ( Smart Classroom ) அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன . மேலும் , வரும் நிதியாண்டில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் .

TRUST Exam December 2023 - Selected Students List

 

ஊரகத் திறனாய்வு தேர்வு - டிசம்பர் 2023 - தேர்வு முடிவுகள் - தேர்வான மாணவர்கள் பெயர்ப் பட்டியல்...

TRUST Exam December 2023 - Selected Students List 

Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TN Budget 2024 | 6 - 12 ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டம்

 IMG-20240219-WA0013

உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் பெண்களின் உயர்கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 அதேபோல் , அரசுப் பள்ளிகளில் பயின்ற , ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும் அரசுப் பள்ளி மாணவரின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும்  ' தமிழ்ப் புதல்வன் ' எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும் . இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள் , பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில் , மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் . இத்தகைய முன்னோடித் திட்டங்களின் மூலம் நமது இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அவர்கள் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ்வார்கள்.இப்புதிய திட்டத்தின் மூலம் சுமார் மூன்று இலட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவர் . உயரிய நோக்கம் கொண்ட இத்திட்டத்தை நிறைவேற்றிட வரும் நிதியாண்டில் 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TN Budget 2024 - 2025 | கல்வித்துறைக்கான அறிவிப்புகள்

 

தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தற்போது (பிப். 19) தாக்கல் செய்து வருகிறார்.

TN Budget  2024 - 2025 | கல்வித்துறைக்கான அறிவிப்புகள்:

# நான் முதல்வன் திட்டத்துக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு.

# அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும், புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்

# தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக ₹600 கோடி ஒதுக்கீடு

 # உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் - பட்ஜெட்டில் அறிவிப்பு

# பள்ளிகளில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ₹300 கோடியில் உருவாக்கப்படும்

# இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ₹100 கோடி ஒதுக்கீடு

# பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்த ₹1000 கோடி ஒதுக்கீடு

# பள்ளிக்கல்விக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ₹3743 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு

*2023-24 பட்ஜெட்: ₹40,299 கோடி

*2024-25 பட்ஜெட்: ₹44,042 கோடி


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Ennum Ezhuthum Report Card - pdf

 மாணவர் தர நிலை அறிக்கை

2023-2024

JUJU

அன்பார்ந்த பெற்றோர்களே!


உங்கள் குழந்தையின் தர நிலையையும் கற்றல் நிலையையும் நீங்கள் தெரிந்து கொள்ள இந்த அறிக்கை உதவும்.


உங்கள் குழந்தையின் அடிப்படைக் கட்டளை மேம்படுத்த "எண்ணும் எழுத்தும்" திட்டத்தினை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது.


உங்கள் குழந்தைகள் மகிழ்வோடும் ஆர்வத்தோடும் பங்கேற்ற செயல்பாடுகள் பற்றியும் கற்றல் நிலையில் அடைந்த முன்னேற்றத்தையும் வகுப்பு ஆசிரியருடன் கலந்துரையாடி தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளின் திறமைகளை பாராட்டி ஊக்கப்படுத்துங்கள்.


மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


👇👇👇👇👇

Ennum Ezhuthum Report Card - pdf - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TNSGT - English Model Test 4 - Important Qns And Ans

 IMG_20240214_204302

TNSGT - English Model Test 4 - Important Qns And Ans - TET Coaching Centre - Download here

தேர்வு நாளில் மற்றும் தேர்வு அறையில் என்ன செய்ய வேண்டும்?

 1198412

1. தேர்வுக்கு கிளம்பும்போது வீட்டிலேயே அனைத்து பொருட்களும் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொண்ட பின் கிளம்புங்கள்.


2. காலை உணவை கட்டாயம் சாப்பிடுங்கள் இல்லையெனில் சோர்வு உங்களை தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் செய்துவிடும்.


3. தேர்வு மையத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன்னரே சென்று விடுங்கள். 10 நிமிடம் இருக்கும்பொழுது உங்கள் தேர்வறைக்கு சென்று உங்கள் இருக்கையில் அமர்ந்துகொள்ளுங்கள்.


4. உங்கள் இருக்கையின் அருகில் காகிதங்கள், துண்டுச்சீட்டுகள், புத்தகங்கள் ஏதேனும் காணப்பட்டால் வெளியில் வைத்துவிடுங்கள். நாம் படித்த பாடங்களில்தான் கேள்விகள் வரும் என்ற நம்பிக்கையோடு அமர்ந்திருங்கள்.


5. வினாத்தாளை நிதானமாக வாசித்து நன்கு தெரிந்த கேள்விகளை மனதில் தேர்ந்தெடுங்கள். ( இதற்கு 15 நிமிடம் தேர்வுதுறை ஒதுக்கியுள்ளது)


6. வினாத்தாளில் எவ்வித குறிப்பையும் எழுத வேண்டாம்.


7. உங்களுக்கு நன்றாகத் தெரிந்த கேள்வியை முதலில் எழுதுங்கள், மற்றவற்றை கடைசியாக எழுதுங்கள்.


8. விடைத்தாளில் வினா எண்களை கோட்டுக்கு வெளியேயும், விடையின் எண்களை உள்ளேயும் எழுதுங்கள்.


9. விடைத்தாளில் விடை எழுதும்பொழுது முகப்புச் சீட்டில் உரிய இடத்தில் கையொப்பமிட்டு இரண்டாவது பக்கத்தில் தேர்வு எழுதுபவர் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன என்ற விதிமுறைகளை படித்துப்பாருங்கள்.


10. உங்களுக்கு என்ன தெரியும் என்பதை விட தேர்வில் கேட்கப்படும் கேள்விக்கு என்ன பதில் எழுதவேண்டும் என்பதே முக்கியம்.


11. மதிப்பெண்களுக்கேற்ப விடையை சுருக்க மாகவோ, விரிவாகவோ எழுதி நேரத்தை சரி யாகக் கணக்கிட்டு எழுதுங்கள்.


12. விடைத்தாளில் உங்களது கையெழுத்து ஆரம்பம் முதல் இறுதிவரை தெளிவாக இருப்பது அதிக மதிப்பெண் கிடைக்க வழிவகுக்கும்.


13. பக்க வரிசைப்படி எழுதுகின்றோமா என விடைத்தாளின் பக்க எண்களை பார்த்து விடையளி யுங்கள். அடுத்த பக்கத்தை புரட்டும்பொழுது இரண்டு மூன்று தாள்கள் சேர்ந்துவிடும் விடை எழுதும் அவசரத்தில் அவற்றைச் சரியாக கவனித்து எழுதவும்.



14. நீங்கள் எந்த பேனாவை தேர்விற்கு பயன்படுத்தப் போகிறீர்களோ அந்த பேனாவை தினமும் பயன்படுத்துங்கள்.


15. படம் வரையும்போது, ஸ்கேல், பென்சில் துணைகொண்டு வரையுங்கள். முக்கியமாக ஜியாமெட்ரி பாக்ஸ் எடுத்துச்செல்வது நல்லது.


16. கடைசி 15 நிமிடங்களுக்குள் எல்லா வினாக் களுக்கும் விடையளித்து மீண்டும் ஒருமுறை விடைத்தாளை சரிபார்த்து விட்டுப்போனதை சரியான வினா எண் குறித்து எழுதி நிறைவு செய்யவேண்டும்.


17. தேர்வு நேரம் முடிந்து மணியடிக்கும்வரை தேர்வு கூடத்தில் இருந்து பயனுள்ள வகையில் திருப்புதலைச் செய்யவேண்டும். ஒருமுறை எல்லா பதில்களையும் சரி பார்த்துவிடுங்கள்.


18. மணி அடித்த பிறகு எழுதியதில் ஏதேனும் தவறோ குறைகளோ ஏற்பட்டிருப்பின் அதற்காக மனதை வருத்திக்கொள்ளாது அடுத்தத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடருங்கள்.


19. தேர்வுக்கு நடுவே விடுமுறை வந்தாலும் தேர்வு இருந்தால் எப்படிப் படிப்போமோ அதே உத்வேகத்துடன் படியுங்கள்.


வெற்றி பெற வாழ்த்துகள்!🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News