TNSGT - 2024 Exam Science and English Study Material

 IMG_20240213_111806

What's New

TNSGT - 2024 Exam Science Study Material - Srimaan Coaching Centre - T/M - Download here

TNSGT - English Model Test 3 - Important Qns And Ans - TET Coaching Centre - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

50 வயதிற்கு மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ.1000/- செலவில் முழு உடல் பரிசோதனை - அரசாணை வெளியீடு!

 

IMG_20240213_194401


50 வயதிற்கு மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை  ரூ.1000/- செலவில் முழு உடல் பரிசோதனை - அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.41 Health Checkup - Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Aided school Surplus proceedings

 

IMG_20240213_160857

2023-24ஆம் பள்ளிக் கல்வி அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகள் கல்வியாண்டிற்கான பணியாளர் நிர்ணயம் - தொடர் நடவடிக்கைகள் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்பு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். 

Aided school Surplus proceedings - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

7,000 பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகம்

 


62869_20240212134420

அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் 7,000 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில், 100 எம்.பி.பி.எஸ்., அலைவரிசை வேகத்துடன் கூடிய ஆன்லைன் இணைப்பு வசதியும் தரப்பட உள்ளது.


தொழில்நுட்ப மேம்பாட்டை முழுமையாக பயன்படுத்தி, நகர் பகுதிகள் முதல் கிராமங்கள் வரை, அனைத்து குழந்தைகளும் தரமான கல்வியை பெறும் வகையில், இந்த முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆய்வகங்கள் வழியே, ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கவும்; மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கற்பித்தல் பயிற்சி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


- குமரகுருபரன்


செயலர், பள்ளிக்கல்வி துறை


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளிகளுக்கு 100 சதவீதம் குடிநீர் இணைப்பு; தமிழகத்திற்கு பாராட்டு

 


62870_20240212134732

ஜல் ஜீவன் இயக்கம், துாய்மை பாரதம் திட்டம் போன்றவற்றின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, மத்திய அரசின் குடிநீர் வழங்கல் துறை செயலர் வினித் மகாஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

தமிழகத்தில் ஊரகப்பகுதி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட; செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஊரகப் பகுதிகளில், 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கிய பின், கிராம சபைகளில் வைத்து உறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


ஊரகப் பகுதிகளில், தனி நபர் வீடுகளில், 100 சதவீதம் கழிப்பறைகள் கட்டுவது, பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஜல் ஜீவன் இயக்க திட்டத்தில், தேசிய அளவில், 73.98 சதவீத வீடுகளுக்கும்; தமிழக ஊரகப் பகுதிகளில், ஒரு கோடிக்கு மேல் அதாவது, 80.43 சதவீத வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில், அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு, 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இது, இதர மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது என, மத்திய அரசு செயலர் பாராட்டு தெரிவித்தார்.கூட்டத்தில், மத்திய அரசு அதிகாரிகள், மாநில நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை செயலர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசு பள்ளிகளில் இனி ஆன்லைன் வழி அட்மிஷன்.

 அரசு பள்ளி மாணவர் சேர்க்கையில் தில்லுமுல்லு நடக்காமல் தடுக்க, ஆன்லைன் வழி சேர்க்கை முறை கொண்டு வர பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.


தமிழக பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டில், மாநிலம் முழுதும், 38,000 அரசு பள்ளிகளும், 8,000 அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்படுகின்றன. அரசு பள்ளிகளில், 45 லட்சம் மாணவ, மாணவியரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில், 22 லட்சம் பேரும் படிக்கின்றனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சிலவற்றில், ஆசிரியர்களின் பணியிடங்களை தக்க வைக்க, மாணவ -- மாணவியரின் சேர்க்கையை போலியாக அதிகரித்து காட்டுவதாக, கடந்த காலங்களில் புகார்கள் எழுந்தன.


இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறை விசாரணை செய்து, போலி மாணவர் எண்ணிக்கை பிரச்னையை தடுக்க, மாணவர்களின் ஆதார் எண், ரத்தப்பிரிவு, பெற்றோரின் மொபைல்போன் எண் போன்றவற்றை, 'எமிஸ்' ஆன்லைன் தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.


இந்நிலையில், இந்த பிரச்னைக்கு முழுமையாக தீர்வு காண, மாணவர்களின் சேர்க்கையை ஆன்லைன் முறையில் மேற்கொள்ள, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.


ஏற்கனவே, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், அரசு சார்பில் தனியார் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை, ஆன்லைன் முறையில் நடத்தப்படுகிறது.


இதேபோன்று, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, ஆன்லைன் வழி சேர்க்கை நடத்தினால், போலி விண்ணப்பங்கள் பதிவு செய்ய முடியாது என, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் ஆலோசித்துள்ளனர்.


மேலும், பெற்றோருக்கு சிரமம் இன்றி, பள்ளி ஆசிரியர்கள் அல்லது எமிஸ் தளத்துக்கான ஆன்லைன் பணி ஊழியர்கள் வழியே, ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்றும், ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழா அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசு ஆணை - Date : 10.05.2023

 


IMG_20240212_192601

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு . அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் கடிதத்தில் , கோயில்களின் நகரமாம் கும்பகோணம் மாநகரில் , தென்பரதக் கும்பமேளா என்று அனைவராலும் அழைக்கப்படும் மாகாமகப் பெருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்பட்டு வருகிறது என்றும் , குடந்தையில் உள்ள மகாமகத் திருக்குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தன்று சிறப்பாக நடைபெற்று வரும் மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு 12 சைவத் திருக்கோயில்கள் மற்றும் 5 வைணவத் திருகோயில்களின் சுவாமிகள் , தீர்த்தவாரி செய்வதற்காக வருகை தருகின்றனர் என்றும் , இப்பதினேழு சுவாமிகளையும் தரிசனம் செய்வதற்காகவும் , மகாமகத் திருக்குளத்தில் , புனித நீராடுவதற்காகவும் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை புரிகின்றனர் என்றும் , ஆயிரக்கணக்கான பக்தர்கள் தம் முன்னோர்களுக்குத் திதி கொடுக்கவும் செய்கின்றனர் என்றும் , இந்த வருடம் 06.03.2023 அன்று மாசிமகத்திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் , இத்தகையப் பெருமை வாய்ந்த மாசிமகத் திருவிழா அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

 மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு . அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலித்து , அதனை ஏற்றுக் கொண்டு . அவ்வாறே ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழா அன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசு ஆணையிடுகிறது.

இந்த உள்ளூர் விடுறை நாட்கள் செலாவணி முறிச் சட்டம் , 1881 ( Under Negotiable Instruments Act , 1881 ) ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் , உள்ளூர் விடுமுறை அறிவிக்கும்போது , மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும் , சார்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

GO NO : 297 , DATE : 10.05.2023 - Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பட்ஜெட் 2024 - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்ட நிகழ்ச்சி நிரல்

 IMG_20240212_195339

பட்ஜெட் 2024 - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்ட நிகழ்ச்சி நிரல்


TN Assembly Schedule - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

14.02.2024 ( புதன்கிழமை ) - வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RL ) உண்டு

 Restricted Leave Days ( RL / RH List 2024) - வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் 2024


காரணம் - சாம்பல் புதன்

IMG_20240212_200001



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 13.02.2024

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.02.2024


திருக்குறள் 

பால் : அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : மெய்யுணர்தல்


குறள்:355


எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.


விளக்கம்:


 எந்த பொருள் எந்த தன்மையுடையாதாக இருப்பினும் அந்த பொருளின் உண்மைத்தன்மையை அறிந்துக் கொள்வதே அறிவு.


பழமொழி :

Necessity is the mother of invention


தேவையே கண்டுபிடிப்பின் தாய்


இரண்டொழுக்க பண்புகள் :


1 . மகிழ்ச்சி உங்கள் மனதில் தோன்ற புன்னகை உங்கள் முகத்தில் எப்போதும் குடியேற வேண்டும். 


2. படுத்தே இருந்தால் படுக்கையும் பகையாகும். எழுந்து முயற்சி செய் உலகே உனது வசமாகும்.


பொன்மொழி :


இந்த உலகை வெல்வதற்கு நாம் வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் பயன்படுத்த வேண்டாம். அன்பையும் இரக்கத்தையும் பயன்படுத்துவோம். --அன்னை தெரசா


பொது அறிவு : 


1. ஒரு தலைமுறை சுமார் எத்தனை ஆண்டுகளை குறிக்கும்?


விடை: 33


2. பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?


விடை: நாக்கு


English words & meanings :


 waggish - witty or joking சிரிப்பூட்டுகின்ற; waif - homeless children , orphaned ஆதரவற்ற குழந்தை


ஆரோக்ய வாழ்வு : 


பசலை கீரை: கால், கை, மூட்டுக்களில் வரக்கூடிய வாதத்தையும் போக்கக் கூடிய தன்மை இந்த பசலைக் கீரைக்கு உள்ளது.


பிப்ரவரி 13 இன்று


உலக வானொலி நாள்


உலக வானொலி நாள் (World Radio Day) என்பது ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது.[1] வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.


கவிக்குயில் சரோஜினி அவர்களின் பிறந்தநாள்


சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் - மார்ச் 2,1949, லக்னோ) அவர் பாரத்திய கோகிலா [1] (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும்[2] உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.[3] அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.


நீதிக்கதை


 கடிதம் சொல்லும் கதை


ஒரு கிராமத்தில் வசித்துவந்த பண்ணையாரின் நிலத்தில் ஏராளமாக கரும்பு விளைந்தது. கரும்பை, ஒருவருக்கு விற்றதுபோக இருபத்து ஐந்து கரும்புக் கழிகள் மீதி இருந்தன. அடுத்த கிராமத்தில் வசித்து வரும் நண்பருக்கு அவற்றைக் கொடுக்க எண்ணினார். அடுத்த கிராமத்துக்குச் செல்ல சாலை வசதிகள் இல்லை. எனவே ஒரு வேலையாளிடம் கொடுத்து அனுப்ப நினைத்தார். வேலு என்பவன் அவ்வூரில் வசித்து வந்தான். அவன் படிப்பறிவு இல்லாதவன். ஆனால் நல்ல உழைப்பாளி.


பண்ணையார் வேலுவை அழைத்தார். "வேலு! கரும்புக் கழிகளைக் கட்டி வைத்துள்ளேன். அவற்றை அடுத்த கிராமத்திலுள்ள சுப்பையாவிடம்சேர்த்து விட்டு வர வேண்டும். போய் விட்டு வந்ததும் உனக்குக் கூலி தருகிறேன்" என்றார்.


"சரி, ஐயா, இதில் எவ்வளவு கரும்புக் கழிகள் இருக்கின்றன?" என்றான் வேலு.


"அதெல்லாம் இந்தக் கடிதத்தில் எழுதியுள்ளேன். இதையும் சுப்பையாவிடம் கொடு. கடிதம் விவரம் சொல்லும்" என்றார்.பண்ணையார் தந்த கரும்புக் கழிச் சுமையை தலையில் ஏற்றிக் கொண்டு வேலு அடுத்த கிராமத்தை நோக்கி ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்றான். சுட்டெரிக்கும் வெயில் காலம். வேலுவுக்கு தாகம் எடுத்தது. கரும்பு ஒன்றைக் கடித்துத் தின்று தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என எண்ணினான். சுமையைக் கீழே இறக்கி வைத்தான். கரும்பை எடுத்துத் தின்பதற்கு முன்னால் ஒரு யோசனை தோன்றியது.

ஒரு கரும்பை எடுத்துத் தின்று விட்டால், எண்ணிக்கையில் ஒன்று குறைந்து விடும். அதை இந்தக்கடிதம் மூலமாக அறிந்து கொண்டு சுப்பையாவிடம் தெரிவித்து விட்டால் என்ன


செய்வது என்ற சந்தேகம் வேலுவுக்குத் தோன்றியது. சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்துடன் கடிதத்தை எடுத்தான், “ஏ, கடிதமே நான் இப்போது கரும்பு ஒன்றைத்


தின்னப்போகிறேன். இந்தச் சுமையில் எத்தனைகழிகள் இருக்கின்றன என்று சொல் பார்ப்போம்" என்று கடிதத்தைப் பார்த்துக் கேட்டான். கடிதம் எதுவும் பேசவில்லை.

"இதென்ன? கடிதம் விவரம் சொல்லும் என்றாரே! இப்போது கேட்டதற்கு பதிலே சொல்ல வில்லையே!” என்றெண்ணிய வேலு கரும்புக்கழி ஒன்றை எடுத்துக் கடிக்கலானான். மற்றொரு கரும்பையும் கடித்து சாற்றை உறிஞ்சியபின்பே அவனுடைய தாகம் தணிந்தது.


வேலு சுறுசுறுப்படைந்து கிராமத்தை அடைந்து சுப்பையாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அவரிடம் கரும்புக் கழிகளையும், பண்ணையார் கொடுத்த கடிதத்தையும் தந்தான். சுப்பையா கடிதத்தைப் படித்துப் பார்த்து விட்டு சுமையிலிருந்த கழிகளை எண்ணிப் பார்த்தார்.

இருபத்தைந்துக்கு பதிலாக இருபத்திமூன்று கரும்புகளே சுமையில் இருந்தன. “வேலு!, இரண்டு கழிகள் குறைவாக இருக்கிறதே" என்றார்.


"உங்களுக்கு இந்தக் கடிதம் பதில் சொல்லியதா?" என்றான்.


"வேலு! படிக்கத் தெரிந்தால் கடிதம் விவரம் சொல்லும். உனக்குத்தான் படிக்கத் தெரியாதே. அதனால் எதுவும் சொல்லவில்லை" என்றார் சுப்பையா.


வேலு தான் இரண்டு கரும்புகளைத் தின்றதை ஒப்புக்கொண்டான். சுப்பையா அவனை மன்னித்து "இனியாவது படிப்பதற்கு முயற்சிசெய்" என்று கூறினார்.


இன்றைய செய்திகள் - 12.02.2024


*செலவினங்களை குறைக்க 1400 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ஸ்பைஸ் ஜெட் விமானம்.


*வரும் 15ஆம் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர்- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.


*மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்; சபாநாயகர் அப்பாவு.


*ஈரோட்டில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகும் வெயிலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.


*ஜல் ஜீவன் இயக்கத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அரசுபள்ளிகளுக்கு 100% குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதற்கு, மத்திய அரசின் குடிநீர் வழங்கல் துறை செயலர் பாராட்டு தெரிவித்துள்ளார்.


*19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது.


Today's Headlines


*SpiceJet lays off 1400 employees to cut costs


 *Legislative Session will last till 15th -  Speaker Appavu informed.


 *All measures will be taken to prevent construction of Meghadahu Dam –  Speaker Appavu.


 * Motorists are suffering due to heat recorded above 100 degrees in Erode.


 *Secretary of Drinking Water Supply Department of Central Government has expressed appreciation for providing 100% drinking water connection to government schools in Tamil Nadu under the Jal Jeevan initiative.


 *India lost the Under-19 World Cup final against Australia by 79 runs.

 

Prepared by

Covai women ICT_போதிமரம்



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

6 ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு BASELINE ASSESSMENT SURVEY மேற்கொள்வதற்கான வழிமுறை

  LANGUAGE LAB - BASELINE ASSESSMENT -HI TECH LAB 


மொழிகள் ஆய்வகத்தில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு BASELINE ASSESSMENT SURVEY மேற்கொள்வதற்கான வழிமுறை


THIN CLIENT SYSTEM இல் LOGIN செய்ய வேண்டிய முகவரி

👇👇👇👇👇

https://mozhigal.tnschools.gov.in/login


USERNAME


STUDENTS 10 DIGIT NEW EMIS ID 


PASSWORD


LAST 4 DIGIT OF EMIS ID @ YEAR OF BIRTH


SPD-Proceedings-

👇👇👇👇👇

Click here pdf...


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று தொடக்கம்.

 


3eb8b0ad861f78bf201cf28cf2990808

இன்று தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள +2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் இன்று பிப்ரவரி 12ம் தேதி துவங்கி பிப்ரவரி 17ம் தேதி வரை நடைபெற உள்ளது.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு மாா்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் 5,000 அதிகமான மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் சுமாா் 6 லட்சம் மாணவா்கள் இந்த தோ்வில் பங்கேற்கவுள்ளனர். இதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் செய்முறைத் தோ்வுக்கு தேவையான ஆய்வகப் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. 


அதன்படி தோ்வுத்துறை வழங்கியுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி பாடவாரியாக அட்டவணை தயாரித்து எவ்வித குளறுபடியுமின்றி வரும் 17-ம் தேதிக்குள் செய்முறைத் தோ்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். ஒரு சுற்றுக்கு அதிகபட்சம் 25 முதல் 30 மாணவா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.


தோ்வுத்துறை சலுகை அறிவித்த மாணவா்களுக்கு மட்டும் செய்முறைத் தோ்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும், தோ்வில் ஏதேனும் புகாா்கள் கிடைக்கப் பெற்றால் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியா்கள் பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்களை தோ்வுத் துறை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

10th Science - One Mark Questions Series Wise - School Education Published

 .com/

10th Science - One Mark Questions Series Wise - School Education

10 ஆம் வகுப்பு - அறிவியல் பாட ஒரு மதிப்பெண் வினா விடைகள்

Tamil Medium

👇👇👇👇👇👇

A series T/M-Click here -pdf


B series T/M- Click here pdf


C series T/M- Click here pdf


D series T/M - Click here pdf


English Medium

👇👇👇👇👇👇👇

A series E/M - Click here pdf


B series E/M - Click here pdf


C series E/M - Click here pdf


D series E/M - Click here pdf


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News