பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘நலம் நாடி’ என்ற புதிய செயலி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளம் தொடக்கம்

 


முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சீரிய வழிகாட்டுதலில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘நலம் நாடி’ என்ற புதிய செயலி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களது கல்வியினை எவ்வித தடையுமின்றி பெற வேண்டும் என்ற அக்கறையில் தமிழ்நாடு அரசு பல முக்கியமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இதன் வாயிலாக பல மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உடல் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதன் வாயிலாக அவர்களுடைய குறைபாடுகள் கண்டறியப்பட்டு அதனைக் களைவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறாக மாணவர்களிடையே ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதனைக் கண்டறியவே “நலம் நாடி” எனும் செயலி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பயிற்றுனர்கள் இச்செயலியைப் பயன்படுத்தி குறைபாடுகளை எளிதில் கண்டறிவார்கள். மாணவர்களுக்கு பிறக்கும் போதே ஏற்பட்டுள்ள குறைபாடுகள், வளர்ச்சியில் ஏற்படும் தாமதங்கள், மற்றும் பிற குறைபாடுகள் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுகின்றன. பள்ளிகளில் ஆசிரியர்களால், இக்குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டு, பின்னர் சிறப்புப் பயிற்றுநர்களால், இந்தச் செயலியைப் பயன்படுத்தி 21 வகையான குறைபாடுகளுக்கு முழுமையான பரிசோதனை மேற்கொள்ள இயலும்.


இதன் வாயிலாக மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி மற்றும் பிற சலுகைகள் அனைத்தும் உரிய தருணத்தில் கிடைப்பதை உறுதி செய்ய இயலும்.


சிந்தனையில் மாற்றம்!

சமூகத்தில் ஏற்றம்! -என்பதே நம் இலக்கு.


வகுப்பறையில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்தல் மிகவும் அவசியம். இதனை உறுதி செய்ய “நலம் நாடி” என்ற இச்செயலி பேருதவியாக அமைந்திடும்.


கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா (KGBV)


கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா எனும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக தர்மபுரி, அரியலூர், கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சிவகங்கை, சேலம், பெரம்பலூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய 15 மாவட்டங்களில் பெண் கல்வியில் பின்தங்கியுள்ள 44 ஒன்றியங்களில் 61 KGBV உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் முறையான பள்ளிகளிலிருந்து இடைநின்ற அல்லது பள்ளியில் சேராத 10 வயது முடிந்த 14 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் சேர்க்கப்பட்டு கல்வி பயின்று வருகிறார்கள்.


மேலும், 14 மாவட்டங்களில் (அரியலூர், தர்மபுரி, கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சிவகங்கை, சேலம், பெரம்பலூர், திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம்) கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்களில் 44 பெண்கள் விடுதிகள் இயங்கி வருகின்றன. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், இடைநிலைப் பள்ளியில் (IX-XII) பெண் குழந்தையைத் தக்க வைத்துக் கொள்வதாகும்.


இவ்விடுதிகளில் 9 – 12 வகுப்பு மாணவிகள் தங்கி, விடுதி வளாகம் / விடுதிக்கு அருகாமையில் உள்ள அரசு உயல்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவிஷ்ய வித்யாலயா (NSCBAV) உண்டு உறைவிடப் பள்ளி


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தமிழ்நாடு இலவச கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011ன்படி (RTE Rules,2011) பள்ளி வசதி ஏற்படுத்திட இயலாத குடியிருப்புகளில் பள்ளி வசதி அளிக்கும் பொருட்டு, மிகக் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகள் உள்ள பள்ளி வசதி இல்லாத குடியிருப்புப் பகுதியில் உள்ள குழந்தைகள், நகர்ப்புறக் குழந்தைகள், தெருவோரக் குழந்தைகள், வீடில்லாக் குழந்தைகள் மற்றும் பெரியோர் துணை இல்லாத குழந்தைகளுக்காக தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் (கோயம்புத்தூர், நீலகிரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், இராமநாதபுரம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, பெரம்பலூர், தர்மபுரி மற்றும் திருப்பூர்) 15 உண்டு உறைவிடப் பள்ளிகளும் 3 மாவட்டங்களில் (கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் விருதுநகர்) 3 விடுதிகளும் தற்போது இயங்கி வருகின்றன.


* கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிகள் மற்றும் பெண்கள் விடுதிகள், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவிஷ்ய வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிகள் மற்றும் விடுதிகள் ஆகியவற்றில் பயின்று வரும் மொத்தம் 9870 மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை ஒரு மாதத்திற்கு ரூ.200/- வழங்கப்பட்டு வருகிறது.


* இதுநாள் வரையில் ஊக்கத்தொகைக்கான நிதி மாநிலத் திட்ட இயக்ககத்திலிருந்து மாவட்டத்திற்கும், மாவட்டத்திலிருந்து வட்டார வள மையத்திற்கும், வட்டார வளமையத்திலிருந்து பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்டு மாணவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டது.


* காலதாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு தற்போது ஜனவரி-2024 முதல் மாணவ/மாணவிகளின் ஊக்கத் தொகை மாநில திட்ட இயக்ககத்திலிருந்து மாணவரின் வங்கி கணக்கிற்கு (DBT) நேரடியாக செலுத்தப்படும். இவ்வகையில் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது உத்தரவின்பேரில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் 9870 மாணவ மாணவியர்களுக்கான ஊக்கத் தொகை மாணவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்துவதற்கான வசதி தொடங்கி வைக்கப்படுகிறது.


அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான குறைதீர் அமைப்பு:

தமிழ்நாட்டில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களின் தகுதிகாண் பருவம் முடித்தல், உயர் கல்வி பயில அனுமதி கோருதல், தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதிக்க கோருதல் போன்ற கருத்துருக்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தால் சமர்ப்பிக்கப்படும் பணியிடம் நிரப்ப முன் அனுமதி கோருதல், பணி நியமனத்திற்கு ஒப்புதல் கோருதல் போன்ற கருத்துருக்கள் வட்டார / மாவட்ட / முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நிலுவையில் உள்ள நிலையில், தங்கள் கோரிக்கை சார்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகம் அறிந்து கொள்வதற்கும், பல்வேறு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள மனுக்களை உயர் அலுவலர்கள் கண்காணித்திடவும், விரைந்து தீர்வு காணும் வகையில் emis.tnschools.gov.in இணையதளத்தில் தங்களது கோரிக்கையினை இணைய வழியே சமர்ப்பித்திட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் குறைகளை தீர்வு காண ஏற்படுத்தப்பட்டுள்ள வசதியினைப் போன்று அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகங்களின் குறைகளை களைந்திட ஏதுவாக புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.


அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரிகள் தங்களது பள்ளிக்குரிய பயனர் குறியீடு (user ID) மற்றும் கடவுச் சொல் (Password) பயன்படுத்தி EMIS இணையதளத்தில் உள்நுழைந்து தங்களது குறிப்பிட்ட கோரிக்கையினை தெரிவு செய்து, கருத்துரு சமர்ப்பிக்கப்பட்ட அலுவலகம், நாள் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்கும் நிலையில், சார்ந்த அலுவலரால் தொடர்புடைய கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு விரைந்து ஆணைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், அதன் விவரங்கள் இணைய வழியே மீளவும் பள்ளி நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்படும்.


இதன் மூலம் அரசு நிதிஉதவி பெறும் 8337 பள்ளிகளின்  கோரிக்கைகள் / குறைதீர் மனுக்களின் மீது இணை வழி தொடர் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த குறைதீர் அமைப்பு இன்று முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.


இத்திட்டங்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி, இன்று 09.01.2024 தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டன. இதன் மூலம் பள்ளிக் கல்வித்துறை, பல நவீன முன்னெடுப்புகளை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News


+2 பொதுத் தேர்வு - தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்துதல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

 

IMG_20240109_190239

2023-2024 . ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களிடமிருந்து ( தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்களைத் தவிர்த்து ) தேர்வுக் கட்டணத் தொகையினை பெற்று , அத்தொகையினை ஆன்லைன் வழியாக பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றி 09.01.2024 அன்று பிற்பகல் முதல் 29.01.2024 பிற்பகல் 5.00 மணி வரையிலான நாட்களுக்குள் செலுத்திட , தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

DGE - Exam Fees for +2 and +1 Arrear Proceedings - Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

நீட் தேர்வு தேதி மாற்றம்

 ஜூலை 7ம் தேதி நீட் தேர்வு


மார்ச் 3ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, ஜூலை 7ம் தேதி நடக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.


In supersession of NBEMS notice dated 09.11.2023 and pursuant to the receipt of NMC letter No. N - P018 ( 20 ) / 7 / 2023 - PGMEB - NMC / 000587 dated 03.01.2024 , the conduct of NEET - PG 2024 examination which was earlier notified to be tentatively held on 3rd March 2024 stands rescheduled.

IMG-20240109-WA0086🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஆண்டுச் சம்பளப் பட்டியல் (2023-24) தற்போது IFHRMS இணையதளத்தில் வெளியீடு.

 

ஆண்டுச் சம்பளப் பட்டியல் (2023-24) தற்போது IFHRMS இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது..

IMG_20240109_183728

புதிதாக மேம்படுத்தப்பட்ட IFHRMS இணையத்தில் தங்களது IFHRMS user id& pw கொடுத்து Login செய்து ( https://www.karuvoolam.tn.gov.in/web/tnta/ifhrms-report  தங்களது 2023-24) ஆண்டுச் சம்பளப் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

01.01.2024 முதல் 31.03.2024 வரையிலான காலத்திற்கு GPF வட்டி விகிதம் எவ்வளவு? - அரசாணை வெளியீடு.

 IMG_20240109_183006

Provident Fund - General Provident Fund ( Tamil Nadu ) - Rate of interest for the financial year 2023- 2024 with effect from 01.01.2024 to 31.03.2024

01.01.2024 முதல் 31.03.2024 வரையிலான காலத்திற்கு GPF மீதான வட்டி விகிதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு.

 G.O.Ms.No.13 GPF Rate of Interest - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை - அமைச்சர் தகவல்

 10,11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் 

தேர்வுகான அனைத்து விதமான அட்டவணையும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஏற்றார் போலத்தான் மக்களவை தேர்தல் தேதி இருக்கும் -அமைச்சர்

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TNSED APP Update - அனைத்து விடுப்பு விவரங்களும் IFHRMS வலைதளத்திற்கு விரைவில் மாற்றம் !!!

 IMG_20240109_131456

தற்போது CL & RL 2024 ஆம் ஆண்டிற்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.


▪️ மற்ற விடுப்புகள் தவறுதலாக எண்ணிக்கை காண்பிக்கும் பட்சத்தில் CHALLENGE OPTION பயன்படுத்தி உடனடியாக திருத்தம் மேற்கொள்ளவும்.


இனிவரும் காலங்களில் அனைத்து விடுப்பு விவரங்களும் IFHRMS வலைதளத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Ennum Ezhuthum - TERM 3 - Full Lesson Plan

 IMG_20240106_234727

1,2,3 எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவம் முழுமைக்குமான பாடத்திட்டம். தமிழ் வழி

Std 1,2,3th Ennum Ezhuthum - TERM 3 - Full Lesson Plan👇👇👇

Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Ennum Ezhuthum - Term 3 - 1,2,3 rd Teachers Hand Book ( THB ) pdf

 

IMG_20240108_102932

Ennum Ezhuthum - Term 3 - 1,2,3 rd  Teachers Hand Book ( THB ) 


🔰Tamil - THB - Download here

🔰English - THB - Download here

🔰Maths - THB - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

INCOME TAX CALCULATOR 2024 ( M.S.Excel )

 

.com/

ஆண்டுதோறும் தாங்கள் சமர்ப்பிக்கும் Income Tax Form-ஐ எளிமையாக ஒரே நேரத்தில் பழைய & புதிய வரிக்கணக்கீட்டு (Old Regime, New Regime) முறைகளில் நீங்களே தயார் செய்து, நிரப்பப்பட்ட படிவமாக Print எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள M.S.Excel-ல் இந்த I.T Calculator வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

திரையில் தோன்றும் கணக்கீட்டுத்தாளின் வலது கீழ் புறத்தில் உள்ள  பொத்தானை அழுத்தி Excel file-ஆகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.


Income Tax Calculator 2024 - Download here


இது அனைத்து வயதினருக்கும் (Employee, Senior Citizen & Super Senior Citizen) பொதுவான கணிப்பான். பிறந்த தேதியைப் பொறுத்து உங்களுக்கான வரிக் கணக்கீடு மாறுபடும். 60 வயதிற்கு மேற்பட்டோர் மட்டும் தங்களது பிறந்த தேதியை மறவாது குறிப்பிடவும்.

 

தமிழ்நாட்டின் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களைப் பொறுத்தவரை 2023 மார்ச் மாத ஊதியம் & சில அடிப்படைத் தகவல்களை அளித்தால் போதும். தமிழ்நாடு அரசின் 8-வது ஊதிய மாற்றக்குழுவின் Pay Matrix படி 12 மாத Pay Drawn Particulars தானாகவே நிரப்பப்பட்டுவிடும். இதில் திருத்தம் தேவைப்படின் உரிய Sheet-ல் (Old Back / New Back) சென்று திருத்தம் செய்து கொள்ளலாம்.

DA, CPS (10%), வருமான வரிக்கான 4% Cess உள்ளிட்டவை தானியங்கி முறையில் கணக்கிடப்படும்.


CPS பிடித்தத்திற்கு Arrear செலுத்துதல், வேறு ஏதேனும் Arrear அதற்கான Tax, பொங்கல் Bonus, Housing Loan உள்ளிட்டவற்றிற்கு அதற்குரிய மஞ்சள் கட்டங்களில் தனியே உள்ளிட வேண்டும்

 

தனியார் நிறுவன ஊழியர்கள் / மற்ற மாநில & ஒன்றிய அரசு ஊழியர்கள் தங்களுக்கான 12 மாத Pay Drawn Particulars-ஐ Old Back / New Back Sheet-ல் தேவையான விபரங்களை நேரடியாக அளித்து வருமான வரியினை அறிந்து கொள்ளலாம்.

ஓய்வூதியதாரர்கள் தங்களது அடிப்படைத் தகவல்களுடன் மார்ச் 2023 ஓய்வூதிய விபரங்களை அளித்தால் போதுமானது. மேற்கொண்டு Pay Drawn Particulars-ல் திருத்தம் தேவையெனில், Old Back / New Back Sheet-ல் தேவையான விபரங்களை நேரடியாகத் திருத்தி தங்களுக்கான வருமான வரியினை அறிந்து கொள்ளலாம்.

 

 CPS / NPS பாதிப்பாளர்கள் 80C-ல் 2 இலட்சம் வரை விலக்குப் பெறும் வகையில், 80CCD & 80CCD(1)-ல் CPS பிடித்தம் தானியங்கி முறையில் பிரித்துக் கொள்ளும்.

HRA exemption, வருட வீட்டு வாடகையாக ரூ.1,00,000/-ற்கும் மேல் கழித்தல் & மொத்த வருமான வரியையும் Rounded 10-ஆகக் கணக்கிடுதல் உள்ளிட்டவற்றிற்கும் தனித்தனியே Options கொடுக்கப்பட்டுள்ளது. தேவையானவற்றைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.


மலைப்படி உள்ளிட்ட Compensatory Allowances / மாற்றுத்திறனாளிக்கான Conveyance Allowances உள்ளிட்டவற்றைக் கழிக்க விரும்புவோர் Others-ல் நிரப்பி அதன் மொத்தத்தை உரிய மஞ்சள் கட்டத்தில் தனியே காண்பித்து கழித்துக் கொள்ளலாம்.


NHIS / HF தொகை 80D-ல் கழிக்கப்பட்டுவிடும். 80D-ல் கூடுதலாகக் கழிவு காட்ட விரும்புவோர் அத்தொகையை அதற்குரிய மஞ்சள் கட்டத்தில் தனியே கொடுக்கவும்.


ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படாத LIC, NSC உள்ளிட்ட சேமிப்புகளை அதன் மொத்தத் தொகையை காப்பீட்டு எண்ணுடன் அதற்குரிய கட்டத்தில் நிரப்பவும்.


இறுதியாக, நீங்கள் அளிக்கும் தரவுகளைக் கொண்டு பழைய & புதிய கணக்கீட்டு முறைகளின் படியான வருமானவரி தனித்தனியே கணக்கிடப்பட்டு அதே பக்கத்தின் இறுதியில் தோன்றும்.


அதை ஒப்பிட்டு தங்களுக்குத் தேவையான Sheet-களை (Old Front & Old Back / New Front & New Back) மட்டும் Print செய்து கொள்ளலாம்.

 

இதில் கூடுதலாக, மாதிரி Form-16 படிவமும் தனியே தரப்பட்டுள்ளது. அசல் Form-16 படிவம் தங்களது ஊதியம் வழங்கும் அலுவலர் (Pay Drawing Officer) வாயிலாக IT துறையிடமிருந்து மட்டுமே பெறப்பட வேண்டும்.

 

நாம் பெற்றதை

ஞாலம் பயனுற

யாவருக்கும் பகிர்வோம்!

- செல்வ.ரஞ்சித் குமார்

 

இணைப்பு 

வீட்டு வாடகைப்படி அட்டவணை (G.O.Ms.No.305, Dated 13th October 2017)

HRA%20Slab





🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமை பட்டியலில் வட்டார அளவில் திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தல்...

  

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமை பட்டியலில் வட்டார அளவில் திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.



கோயம்புத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட ( தொடக்கக்கல்வி ) ஊராட்சி ஒன்றிய / நகராட்சி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களின் விவரங்கள் இணைப்பில் உள்ள படிவத்தில் அனுப்பி வைக்கப்படுகிறது. அப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்களின் விவரங்களை சென்னை , தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி , சரிபார்த்து Excel படிவமாக இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ( deedeocoimbatore@gmail.com ) 05.01.2024 மாலை 4.00 க்குள் தவறாமல் அனுப்பி வைக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Ennum Eluthum - Term 3 - Arumbu , Mottu , Malar - Work Books

 3rd Term - 1,2,3rd Std - Ennum Eluthum Work books pdf Download 


Tamil Arumbu - Click here pdf


Tamil Mottu - Click here pdf


Tamil Malar - Click here pdf


English - Arumbu - Click here pdf


English - Mottu - Click here pdf


English - Malar- Click here pdf


Maths - Arumbu -T/M- Click here pdf


Maths - Arumbu -E/M- Click here


Maths - Mottu -T/M- Click here


Maths - Mottu -E/M- Click here


Maths - Malar -T/M - Click here


Maths - Malar -E/M - Click here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

EE - English Teacher Hand Book - Revised page Numbers ( pdf )

 

எண்ணும் எழுத்தும் ஆங்கிலப் பாடம் ஆசிரியர் கையேட்டில் இணைக்கப்பட்டுள்ள பாடநூல் பக்க எண்கள் திருத்தியமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இச்சரியான பக்க எண்களை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

   SCERT TNEE mission


EE - English Teacher Hand Book - Revised page Numbers - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Ennum Ezhuthum - TERM 3 - Full Lesson Plan

 

IMG_20240106_234727

1,2,3 எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவம் முழுமைக்குமான பாடத்திட்டம். தமிழ் வழி

Std 1,2,3th Ennum Ezhuthum - TERM 3 - Full Lesson Plan👇👇👇

Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கனமழை - இன்று ( 08.01.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 

கனமழை காரணமாக இன்று ( 08.01.2024) 10 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு :

பள்ளிகளுக்கு மட்டும்

* நாகை- கீழ்வேளூர் வட்டம் ( பள்ளி,கல்லூரிகளுக்கு மட்டும்..)

* செங்கல்பட்டு - பள்ளிகளுக்கு மட்டும்

* கள்ளகுறிச்சி - பள்ளிகளுக்கு மட்டும்

* அரியலூர் - பள்ளிகளுக்கு மட்டும்

*வேலூர் - பள்ளிகளுக்கு மட்டும்

*திருவண்ணாமலை - பள்ளிகளுக்கு மட்டும்

*ராணிப்பேட்டை - பள்ளிகளுக்கு மட்டும்

பள்ளி , கல்லூரிகளுக்கு 


*மயிலாடுதுறை  - பள்ளி , கல்லூரிகளுக்கு 

* விழுப்புரம் - பள்ளி , கல்லூரிகளுக்கு 

* கடலூர் - பள்ளி , கல்லூரிகளுக்கு 

*திருவாரூர் - பள்ளி , கல்லூரிகளுக்கு

விடுமுறை இல்லை :

திருவள்ளுர்

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

9 மற்றும் 10-ம் வகுப்பு பிசி, எம்பிசி மாணவிகளுக்கு உதவித்தொகை

  

1179372

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 9 மற்றும்10 ஆகிய வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகை வழங்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது.


இதில் பயன்பெற, 9 மற்றும் 10-ம் வகுப்பில் பயிலும் மாணவிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சல் வங்கிகளில் தன் பெயரில் கணக்கு தொடங்கி, அதை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஆதார் எண், வங்கிக் கணக்கு, வருமானச் சான்று, சாதிச்சான்று நகல்களை தலைமையாசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.


தலைமையாசிரியர்கள் மாணவியரின் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாணவிகள் பள்ளி தலைமையாசிரியர்களை அணுக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

08.01.2024 முதல் 10.01.2024 வரை பள்ளி தூய்மை செயல்பாடுகள் - SPD செயல்முறைகள்!!!

 IMG_20240107_114449

08.01.2024 முதல் 10.01.2024 வரை பள்ளி தூய்மை செயல்பாடுகள் - SPD செயல்முறைகள்!!!

 2024 - ஆம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழுவின் முதல் கூட்டமானது அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் சென்ற 05.01.2024 . வெள்ளிக் கிழமையன்று பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் எங்கள் பள்ளி , மிளிரும் பள்ளி " -சிறப்பு பள்ளி தூய்மை செயல்பாடுகளில் 2024 , ஜனவரி 8 - ஆம் தேதி முதல் ஆம் தேதி வரை பள்ளிகளைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வானது நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது குறித்தும் . முடிவுசெய்யப்பட்டது.

 பெற்றோர்களைப் பெருமளவில் இம்முன்னெடுப்பில் பங்கேற்க செய்யவும் தலைமையாசிரியர்கள் திட்டமிடப்பட்டுள்ளது.

School Cleaning 08-10 Jan SPD Proceedings - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News