School Morning Prayer Activities - 15.12.2023

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.12.2023


திருக்குறள் 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கொல்லாமை

குறள்:321


அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாந் தரும்.


விளக்கம்:


 அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.


பழமொழி :

Hunger is the best source


பசி ருசி அறியாது


இரண்டொழுக்க பண்புகள் :1


.  1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் , மனதுக்கு துன்பம் தரமாட்டேன்.


2.  துன்ப படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன் .


பொன்மொழி :


கடினமாக உழைத்தவர்கள்

எல்லாம் முன்னேறி விடவில்லை.

கவனமாகவும் நம்பிக்கையுடனும்

உழைத்தவர்களே வாழ்க்கையில்

முன்னேறி உள்ளனர்._____ அப்துல் கலாம்


பொது அறிவு :


1. உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது?


விடை: சகாரா


2. சிரிக்க வைக்கக்கூடிய வாயு எது?


விடை: நைட்ரஸ் ஆக்சைடு


English words & meanings :


 Draw the line - to set a limit, சில காரியங்களுக்கு எல்லைக் கோடு அமைத்தல், 


carry the can - taking the blame for the things which we didn't do, செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்தல்


ஆரோக்ய வாழ்வு : 


ஆவாரம் பூ : ஆவாரம் பூ பானம் சிறுநீர் கடுப்பு இருக்கும் போது அதை குறைக்க செய்கிறது. இதனுடைய வேரிலிருந்து தயாரிக்கப்படும் சாறு இயற்கை டையூரிடிக் ஆக செயல்பட்டு சிறுநீரகத்தை பாதுகாக்கிறது. நீரிழிவு நோய் கொண்டிருப்பவர்களுக்கு சிறுநீரகம் சேதமாகாமல் பாதுகாக்கிறது.


டிசம்பர் 15 இன்று

Walt_disney_portrait

வால்ட் டிஸ்னி அவர்களின் நினைவுநாள்


வால்ட் டிஸ்னி (/ˈdɪzni/;[3] டிசம்பர் 5 , 1901 - டிசம்பர் 15, 1966) உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மவுஸ், டொனால்ட் டக் , ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின் இணை-நிறுவனரான டிஸ்னி(தன் அண்ணன் ராய்.ஒ.டிஸ்னியுடன் உலகின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.


நீதிக்கதை


 கர்வம் கொண்டவர் துன்பமே அடைவர்.


காட்டில் ஒரு நாள் பெரிய பூனை ஒன்றும் நரியும் சந்தித்தன. அவை இரண்டும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தன.


அப்பொழுது நரி பூனையிடம் “நண்பரே! தந்திரத்திற்குப் பேர் போனவன் நான் எவ்விதத் தீங்கிலிருந்தும் தந்திரமாய் தப்புவேன்" என்று இறுமாப்புடன் கூறியது.

அதற்கு பூனை "நண்பரே! தங்களைப் போல் பல தந்திரங்கள் எனக்கு தெரியாது. சில தந்திரங்கள் தான் தெரியும். தங்களைப் போல் சாமர்த்தியம் எனக்குக் கிடையாது” என்று அடக்கத்துடன் பதில் கூறியது.பூனையைக் கண்டு நரி ஏளனமாய் "ஒன்றும் தெரியாத நீ எவ்வாறு ஆபத்திலிருந்து தப்புவாய்" என்று ஏளனம் செய்தது.


அச்சமயம் திடீரென்று அப்பக்கம் சிலவேட்டை நாய்கள் வந்தன. உடனே பூனை ஒரு பெரிய மரத்தின் மேல் ஏறிக்கொண்டது. ஆனால் நரியினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அங்கிருந்து ஓட ஆரம்பித்தது. ஆனால் வேட்டை நாய்கள் வேகமாய் ஓடித் தாவி நரியைப் பிடித்துக் கொன்றன. பூனையோ தப்பிப் பிழைத்தது. கர்வம் கொண்டவர் துன்பமே அடைவர்.


இன்றைய செய்திகள் - 15.12.2023


*74.1% இந்தியர்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதில்லை அதிர்ச்சி தகவல்.


* 11 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்-தமிழக அரசு உத்தரவு.

*இந்தியாவில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா... அஞ்சி நடுங்கும் மக்கள்.


*16, 17 -ஆம் தேதிகளில் டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.


* ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், விமர்சனங்களுக்கு மத்தியில் சாதனைகள் படைத்த டேவிட் வார்னர்.


Today's Headlines


*74.1% of Indians do not have access to healthy food shocking information.


 * 11 IPS  Transfer of Officers-Tamil Govt Order.


 *Corona is picking up speed again in India...People are trembling with fear.


 * Chance of heavy rain in Delta and Southern districts on the 16th and 17th.

 * David Warner's record-breaking 3-match Test cricket series in Australia, amid criticism.

 Prepared by


Covai women ICT_போதிமரம்



 🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Government Schools Vegetable Gardening Maintenance GO - பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைத்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு






அனைத்து நடுநிலை /உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைத்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் மற்றும் நிதி விடுவித்தல் - SPD செயல்முறைகள்









 🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

1,2,3-ஆம் வகுப்புகளுக்கு இன்று நடைபெற்ற தேர்வுக்கான மதிப்பெண் எவ்வாறு வழங்குவது? - TN EE MISSION விளக்கம்.

 இன்று நடந்த 1,2,3 வகுப்பிற்கானத் தேர்வில் ஒவ்வொரு கேள்விக்கும் 6 மதிப்பெண்கள் வீதம் 10 கேள்விகளுக்கு 60 மதிப்பெண்கள் வழங்கிக் கொள்ளவும்.

( 10×6=60)


TN EE MISSION

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TDS Return Filing Workshop Date : 16th & 17th Dec 2023

 Government Certified Professional Course on TDS Return Filing Workshop Date : 16th & 17th Dec 2023 Time : 9.30 . a.m. to 1.30 . p.m. 

20231213_185654_wm


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கனவு ஆசிரியர் விருது 2023 - தெரிவு செய்யப்பட்ட 380 ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & 380 ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் - மாவட்ட வாரியாக

 


a

கனவு ஆசிரியர் விருது பாராட்டு விழா 19.12.23 அன்று நாமக்கலில் நடைபெறுகிறது


 2023-2024ம் ஆண்டிற்கான மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பான அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும் கனவு ஆசிரியர்களை - சிறப்பிக்கும் வகையில் பாராட்டு விழா நடத்துதல் சார்பு பார்வை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள், செய்தி வெளியீடு στσστ 408 πåt 01.03.2023 மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக கனவு ஆசிரியர் திட்டத்தின் கீழ் சிறப்பான முன்னெடுப்புப் பணிகளின் மூலம் தெரிவுபெற்ற கனவு ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


அதன் தொடர்ச்சியாக, கல்வித்திறன் மற்றும் கற்பித்தல் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மூன்று படி நிலைகளில் ஆய்வுக்கு உட்படுத்தி இறுதியில் 75% மற்றும் அதற்கு அதிகமாக மதிப்பெண்கள் பெற்று தெரிவு செய்யப்பட்ட 380 ஆசிரியர்களை சிறப்பிக்கும் விதமாக 19.12.2023 அன்று நாமக்கலில் விழா நடைபெறுவதால் இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குடும்ப உறுப்பினர்கள் (கணவர் / மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும்) கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இணைப்பில் கண்டுள்ள. ஆசிரியர்களை 18.12.2023 அன்றே அலுவலகப் பணியாக கருதி விடுவிக்க சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்துமாறும் சார்ந்த அலுலவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். விழா நடைபெறும் இடம் மற்றும் நேரம் பின்னர் தெரிவிக்கப்படும்.

Kanavu Aasiriyar 2023 Selection list 👇

 Download here

IMG_20231212_221703

CBSE Public Examination 2024 - Class 10th and 12th Exam Time Table Released

 


.com/

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு 2024 - 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணை வெளியீடு.

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு...


12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15 முதல் மார்ச் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது.


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், பிப்ரவரி 15 முதல் மார்ச் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


Click Here to Download CBSE Secondary School (10th) Examination Date Sheet 2024...


Click Here to Download CBSE Senior Secondary School Certificate (12th) Examination Date Sheet 2024...

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

UGTRB - BT / BRTE - Geography Unit 1 ( Geomorphology) - Study Materials

 UGTRB - BT / BRTE - Geography Unit 1 ( Geomorphology) - Study Materials - Srimaan Coaching Centre - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

UG TRB - English Collection Of Question Bank With Keys


 UG TRB - English Collection Of Question Bank With Keys - TET Coaching Centre - Download here



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Question Paper Download - Feedback Submission Regarding

 Feed back link


 SUMMATIVE ASSESSMENT FEEDBACK SUBMISSION REGARDING


தொடக்கப் பள்ளிகள்

அனைத்து பாடத்திற்கும் Event End Date 22-Dec-2023 என்பதால் 22-Dec-2023 தேதிக்கு பிறகு feedback சமர்ப்பித்தால் போதும்.


நடுநிலைப் பள்ளிகள்

6,7,8 ஆம் வகுப்பிற்கு Event End Date அடுத்த நாளே என்பதால் அந்த வகுப்பிற்கு Feedback சமர்பித்தால் மட்டுமே அடுத்த பாடத்திற்கான வினாத்தாள் (வகுப்பு 1-8) டவுன்லோட் செய்ய முடியும்.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு மதிப்பீடு தேர்வு - SPD செயல்முறைகள் & Video Explanation

 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - நான் முதல்வன் திட்டம் - 2023 - 2024 கல்வியாண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கின்ற உயர்கல்வி வழிக்காட்டி ஆசிரியர்களுக்கான மதிப்பீடு தேர்வு நடைபெறுதல் மற்றும் நெறிமுறைகள் வழங்குதல் - SPD செயல்முறைகள்!

Assessment for CG Counsellors Proceedings👇

 Download here



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

1 முதல் 8 ம் வகுப்பு வரை வினாத்தாள் டவுன்லோடு செய்யும் வழிமுறை. (எளிய முறையில் ...)

 

1 முதல் 8 ம் வகுப்பு வரை வினாத்தாள் டவுன்லோடு செய்யும் வழிமுறைகள் : 


Tn school exam-

Click here

⬇️


user name,pass word பதிவு செய்யுங்கள்.


⬇️


ஒரு page open ஆகும்.


அதில் 


Descriptive என்ற word இருக்கும்.அதை கிளிக் செய்ய வேண்டும்.


⬇️


அடுத்து class என்ற இடத்தில் எந்த வகுப்புக்கு வினாத்தாள் வேண்டுமோ அந்த வகுப்பை பதிவு செய்து submit கொடுக்க வேண்டும்.


⬇️


Submit கொடுத்தபின்பு அதே page ல் மேலே இருக்கும் Download question paper என்ற கலத்தை click செய்யுங்கள்.


⬇️


இப்போது question paper download என்று கீழே வரும்.


⬇️


அந்த கலத்தை click செய்தால் வினாத்தாள் டவுன்லோடு ஆகும்.


⬇️


ஒவ்வொரு தேர்வுக்கும்


முதல் நாள் மதியம் 2 மணிக்கு feedback கொடுத்த பின்பு வினாத்தாள் download செய்ய வேண்டும்.


நன்றி.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

1, 2 and 3 std Term 2 Question paper available now

 Term II -  1, 2 and 3 std question paper available now.

            ஒன்று முதல் மூன்றாம் வகுப்பிற்கு நாளை நடைபெற இருக்கும் தேர்விற்கான வினாத்தாள்களை இன்று காலை 10.30 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

                .      TN EE mission

Download Link👇👇👇

https://exam.tnschools.gov.in/


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

27.12.2023 உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வரும் டிச. 27 ஆம் தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


உலகப் புகழ்பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் ஆருத்ரா தரிசன உற்சவமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன உற்சவமும் தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்றன.


அதன்படி, நிகழாண்டுக்கான மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வருகிற 18-ஆம் தேதி (திங்கள்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் வருகிற 27-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.


ஆருத்ரா தரிசனம் நடைபெறும் நாளான வருகிற 27-ஆம் தேதி (புதன்கிழமை) கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி மாதத்தில் விடுமுறை நாளான ஜன. 06 (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.


மேலும், டிச. 27 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்த எண்ணிக்கையிலான பணியாளா்களைக் கொண்டு வழக்கம்போல இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TRUST Exam 2023 - தேர்வுமைய பெயர்ப்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் - DGE Proceedings

 IMG_20231212_115247

அரசுத் தேர்வுகள் இயக்ககம் , சென்னை - 6 . தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( Trust Examination ) . டிசம்பர் 2023 தேர்வுமைய பெயர்ப்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் - தொடர்பான DGE Proceedings 

 TRUST Hall Ticket and NR Download 2023 Proceedings - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News