அறிவியல் விழா ( IISF- 2023 ) - அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்பது இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள அறிவுறுத்தல் - CEO Proceedings

 பள்ளிக்கல்வி - தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் , சென்னை - இந்தியா அனைத்துலக அறிவியல் விழா ( IISF- 2023 ) - அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்பது இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள அறிவுறுத்தல் தொடர்பாக தர்மபுரி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 

CEO Proceedings - Download here



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு தரவரிசை வழங்கப்படாது என CBSE அறிவிப்பு

 

.com/

பத்தாம் வகுப்பு பிளஸ் 2 பொது தேர்வில் மாணவர்களுக்கு தரவரிசை மற்றும் சிறப்பிடம் போன்றவை வழங்கப்படாது' என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.


பல்வேறு மாநில பாடத்திட்ட பள்ளிகளில் 10ம் வகுப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களுக்கான மதிப்பெண்ணில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு முதலிடம் இரண்டாம் இடம் முதல் கிரேடு 2ம் கிரேடு என சிறப்பிடங்கள் வழங்கப்படுகின்றன.


இந்த சிறப்பிடங்களால் மாணவர்கள் மத்தியில் ஆரோக்கியமற்ற போட்டியும் மன அழுத்தமும் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த பிரச்னையை தீர்க்க தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு மாணவர்களுக்கான சிறப்பிடங்கள் மற்றும் தரவரிசைகளை நிறுத்தி 2017ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.


இதேபோன்று மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.யும் முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு :


சி.பி.எஸ்.இ. நடத்தும் பொது தேர்வுகளில் மாணவர்களின் சராசரி மதிப்பெண்கள் அவர்களின் மதிப்பெண்ணை கணக்கிடும் முறை போன்றவற்றை தெரிவிக்குமாறு பல்வேறு அமைப்புகள் தரப்பில் கேட்கப்பட்டுள்ளன.


சி.பி.எஸ்.இ.யை பொறுத்தவரை மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் மண்டல அளவிலோ ஒட்டு மொத்தமாகவோ கணக்கிட்டு சிறப்பிடங்கள் வழங்கப்படுவதில்லை.


உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் ஒரு மாணவர் ஐந்து பாடங்களுக்கு மேல் தேர்வு எழுதியுள்ள நிலையில் அந்த மாணவர் ஏதாவது ஐந்து பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெற்ற மதிப்பெண்களை கணக்கிட்டு கொள்ளலாம்.


சி.பி.எஸ்.இ. வாரியம் சார்பில் மாணவர்களின் மதிப்பெண்களை கணக்கிட்டு சராசரி மதிப்பெண் குறிப்பிடுவது கிடையாது. உயர்கல்வி சேர்க்கையோ அல்லது வேலைவாய்ப்பு வழங்கலோ எதுவானாலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முடிவெடுத்து கொள்ள வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் கருவிகளை கையாள சிறப்பு வகுப்பு

 SCHOOL,

சென்னை மாநகராட்சியில் தரம் உயர்த்தப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய 15 பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 


மாநகராட்சி பள்ளிகளில் 98 ஆயிரத்து 633 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 3 ஆயிரத்து 13 ஆசியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனியார் பள்ளிகளுக்கு நிகராக சென்னை மாநகராட்சி பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.


அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளில் டிஜிட்டல் முறையிலான வள வகுப்பறைகள் அமைத்தல், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கற்கும் முறை, நிர்பயா திட்டத்தின்கீழ் பெண்களுக்கான கழிப்பறைகள் அமைத்தல் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் நிறுவுதல் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதில் குறிப்பாக,பிரான்ஸ் மேம்பாட்டு முகமை (AFD) நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் சிட்டிஸ் (CITIIS) திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி, சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகியவை இணைந்து சென்னை மாநகராட்சி பள்ளிகளை நவீன வசதியுடன் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


சிட்டிஸ் திட்டத்தின் கீழ் 28 மாநகராட்சி பள்ளிகளில் ரூ.95 கோடியே 25 லட்சத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பிரான்ஸ் மேம்பாட்டு முகமை சார்பில் இத்திட்டத்தின் கீழ் ரூ.76 கோடியே 20 லட்சம் கடன் ஏற்கெனவே வழங்கப்பட்டு, 28 பள்ளிகளில் நவீன வசதிகளுடன் ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆய்வகங்கள், சிறந்த விளையாட்டு கட்டமைப்புகள், கழிப்பறைகள் `ஸ்டெம்’ ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்த சிறப்பு வகுப்புகள், பணியாளர்களுக்கென தனியாக நவீன அறை என தலைமையாசிரியர் முதல் ஆசிரியர்கள் வரை இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளன.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி தெரிவிக்கையில்: சென்னை பள்ளிகளை நவீனப்படுத்தும் முயற்சியில் சென்னை மாநகராட்சி ஈடுப்பட்டுள்ளது. சிட்டீஸ் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் நிச்சயம் பள்ளி குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் இருக்கும், மாணவர்கள் பள்ளியில் நுழையும் போதே ஆரோக்கியமான மனநிலையை உணர்வார்கள், பள்ளி படிக்கட்டுகளை வண்ண வண்ண நிறங்களால் மாற்றியுள்ளோம். மாணவர்களின் பாதுக்காப்பிற்கு சிசிடிவி கேமரா, மால்கள்,விமான நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் போன்று பள்ளிகளில் நவீன கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.


சிட்டீஸ் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வரும் வளர்ச்சி பணிகளால் பிரான்ஸ் மேம்பாட்டு முகமை (AFD), கூடுதலாக ரூ.36 கோடி மாநகராட்சிக்கு வழங்க இருக்கிறது. இதைக் கொண்டு மேலும் 11 பள்ளிகளை நவீன வசதிகளுடன் கட்டமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே முதல்வர் மு.க. ஸ்டாலின் 4 வளாகங்கள் கூடிய 7 பள்ளிகளை திறந்து வைத்துள்ளார். மேலும், தற்போது 11 வளாகங்கள் கூடிய 15 பள்ளிகள் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.


டிஜிட்டல் உள்கட்டமைப்பு முக்கிய அம்சங்கள்


* 28 பள்ளிகளில் 500க்கும் மேற்பட்ட வகுப்பறைகளுக்கு LCD-LED இன்டராக்டிவ் பேனல்கள், ஒருங்கிணைந்த கற்றல்-கற்றல், மின் வளங்களுக்கு மாறும் அணுகல்


* அனைத்து 28 பள்ளிகளும் வைஃபை வளாகங்களாக நிறுவப்படும்


* GCC பள்ளிகள் மற்றும் GoTN ஆல் இயக்கப்படும் பிற பள்ளிகள் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கற்றல் வள களஞ்சிய மேலாண்மை அமைப்பு மற்றும் பள்ளி மேலாண்மை அமைப்பு


* அனைத்து திட்ட வளாகங்களிலும் STEM ஆய்வகம் மற்றும் மொழி ஆய்வகங்களை நிறுவுதல்


* மொத்த பட்ஜெட்: ரூ.12 கோடி.


விளையாட்டு மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளின் முக்கிய அம்சங்கள்


* சென்னை பள்ளிகளில் (ரூ.0.34 கோடி) சாரணர், உபகரணங்கள், பயணம் மற்றும் உணவு உட்பட 30 திறமையான மாணவர்களுக்கான சிறப்பு கிரிக்கெட் பயிற்சித் திட்டம்


* உபகரணங்கள், பயணம் மற்றும் உணவு உட்பட 3 சென்னை பள்ளிகளில் (ரூ.0.08 கோடி) 60 திறமையான மாணவர்களுக்கான சிறப்பு கால்பந்து பயிற்சித் திட்டம்மாநகராட்சி பள்ளிகள் முழுவதும் விளையாட்டுக் கருவிகளை வழங்குதல்.கூடுதல் விளையாட்டு உள்கட்டமைப்பு (வலைகள், விளக்குகள், பலகைகள் போன்றவை


* மொத்த பட்ஜெட்: ரூ.1 கோடி.


ஆசிரியர் மேம்பாடு மற்றும் கல்வியியல் கண்டுபிடிப்பு முக்கிய அம்சங்கள்


* 2000 ஆசிரியர்களுக்கு தகவல், தொடர்பு மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி (டிஜிட்டல் கருவிகளைக் கையாளுதல், கணினி, ஸ்மார்ட் வகுப்பு போன்றவை)


* 600 AEOக்கள், HMகள், AHMகள், மூத்தவர்களுக்கான பள்ளி தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டம்


* அகாடமி ஆஃப் STEM எக்ஸலன்ஸ்


* மொத்த பட்ஜெட்: ரூ.9 கோடி.


சிவில் உள்கட்டமைப்பு முக்கிய அம்சங்கள்


* 28 சென்னைப் பள்ளிகள் உள்கட்டமைப்புச் சீரமைப்பிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன


* வகுப்பறைகள், கழிப்பறைகள், சமையல் & உணவு விடுதிகள், விளையாட்டுப் பகுதி போன்றவற்றைச் சீரமைத்தல்/ புதுப்பித்தல்.


* புதிய வகுப்பறைகள், கழிப்பறைகள் போன்றவற்றைக் கட்டுதல்.


* தலைமையாசிரியர் அறைகள் மற்றும் பணியாளர் அறைகளின் புதிய தோற்றம் மற்றும் முகத்தை உயர்த்துதல்


* குழந்தை-உளவியலைக் கருத்தில் கொண்டு வண்ணம் தீட்டுதல் மற்றும் ஓவியம் வரைதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட கற்றல் மற்றும் பொது உணர்வைத் தூண்டுதல்.


* மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மற்றும் கூடுதல் பாடத்திட்ட உள்கட்டமைப்பு


* மொத்த பட்ஜெட்: ரூ.69 கோடி.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

NMMS 2024 - Exam Notification Published

 

IMG_20231201_190557

2023 - 24 ஆம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு, தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது.
இத்தேர்விற்கான வெற்று விண்ணப்பங்களை டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை இத்துறையின் https://apply1.tndge.org/dge-notification/NMMS  என்ற இணையதளம் வழியாக பள்ளிகள் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைய வழி விண்ணப்பக் கட்டணத் தொகை ரூபாய் 50 சேர்த்து மாணவர்கள் தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 19 ஆம் தேதி கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது.
- அரசு தேர்வுகள் இயக்ககம்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

NMMS SCHOLARSHIP NEWS

 NMMS SCHOLARSHIP


▪️ கடந்த கல்வி ஆண்டில் NMMS Exam-யில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற nsp Portal-லில்  புதிதாகவும்  & Renewal செய்வதற்கான காலக்கெடு 31-12-2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


▪ இதற்கு முன் விண்ணப்பிக்க கடைசி நாள் 30-11-2023 என இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணங்களால் 31-12-2023 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.


▪️ விண்ணப்பிக்காத மாணவர்கள் புதிதாகவும் & ஏற்கனவே விண்ணப்பித்து கல்வி உதவித்தொகை பெற்ற மாணவர்கள் தங்கள் விண்ணப்பித்தினை Renewal-லும் செய்து கொள்ளலாம்...


▪️ மாணவர்களின் விண்ணப்பத்தினை பள்ளி அளவில்  15-01-2024 முதல் verification செய்யலாம்...


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

1 To 5th November CRC - Agenda, Time Table, PPT & Training Videos

 

அந்தந்த வட்டார மையங்களில்  1 முதல் 5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வரும் சனிக்கிழமை (25.11.2023) CRC நடைபெறும்


பாடப்பொருள்-  "எண்ணும் எழுத்தும் ஐயங்களும் தெளிவுரைகளும்"


CRC videos- 1-5 


NOVEMBER CRC 2023- VIDEO'S-எண்ணும் எழுத்தும் வகுப்பு 1-3 


English : Reading


VIDEO-1- CLICK HERE 


VIDEO-2- CLICK HERE  


VIDEO-3- CLICK HERE  


English : Writing


VIDEO-1- CLICK HERE


Tamil 


VIDEO- 1-CLICK HERE 


Maths


 VIDEO-1- CLICK HERE 


எண்ணும் எழுத்தும் வெற்றியாளர்கள் (காணொலி)


VIDEO -1- CLICK HERE 

VIDEO--2 -CLICK HERE 

VIDEO-3- CLICK HERE 

VIDEO-4- CLICK HERE


CRC - Time table & Agenda


CLASS-1-3-CRC- PPT- CLICK HERE

 

EE_Agenda&Guidelines - CLICK HERE

 

NOVEMBER CRC 2023- VIDEO'S-எண்ணும் எழுத்தும் வகுப்பு 4 & 5


ENGLISH


VIDEO-1- CLICK HERE

 VIDEO-2- CLICK HERE

VIDEO-3- CLICK HERE

VIDEO-4- CLICK HERE


TAMIL


VIDEO-1- CLICK HERE 


MATHS


VIDEO-1- CLICK HERE 


 எண்ணும் எழுத்தும் வெற்றியாளர்கள் (காணொலி 


VIDEO-1 - CLICK HERE

VIDEO-2- CLICK HERE


TELEGRAM VIDEO


VIDEO-1- CLICK HERE


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Ennum Ezhuthum - 1 To 5th Std - December 1st Week Lesson Plan - T/M & E/M

Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024

Ennum Ezhuthum Empty Format - Download here

Term 2 Lesson Plan

December - 2023

1st week ( 04.12.2023 - 08.12.2023 )

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 2 - December 1st Week Lesson Plan - T/M & E/M - Download here

Ennum Ezhuthum - 4th , 5th Std -  Term 2 - December 1st Week Lesson Plan - T/M & E/M - Download here



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கனமழை - நாளை (02.12.23) பள்ளிகளுக்கான விடுமுறை அறிவிப்பு

 

சென்னையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.. வௌியான முக்கிய அறிவிப்பு!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் பெய்த கனமழை பெய்த நிலையில், நாளை, நாளை மறுதினம் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 4ம் தேதி சென்னைக்கும் ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், சென்னையில் நாளை (டிசம்பர் 2) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மழை அச்சம் ஒருபுறம் இருந்தாலும் இந்த விடுமுறைக்கான காரணம்,
ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது. அரசு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி இருப்பதன் காரணமாக, சென்னை மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வானிலை மையம் அறிவிப்பை அடுத்து புயல் முன்னெச்சரிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, சென்னை மாநகராட்சி, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

காலை உணவு திட்டம் தனியாருக்கு இல்லை - அறிவிப்பு

 

காலை உணவு திட்டத்தை தனியாருக்கு கொடுக்கும் டெண்டர் அறிவிப்பு தற்போது கோரப்படவில்லை எனவும், மாநகராட்சி சார்பிலேயே தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “சென்னை மாநகராட்சியில் 358 பள்ளிகளில் 1 முதல் 5 – ம் வகுப்பு வரை பயிலும் 65 ஆயிரத்து 30 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், நிர்மாணிக்கப்பட்ட 35 சமையல் கூடங்களில் இருந்து, தினசரி உணவு வழங்கப்பட வேண்டிய அட்டவணையின்படி உயர் அலுவலர்களின் கண்காணிப்பில் காலை உணவு தரமாக தயாரித்து வழங்கும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணியில் உயர் அலுவலர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்புடன் ஒப்பந்த அடிப்படையில் காலை உணவு தரமாகத் தயாரித்து வழங்குவதற்கான நிலை ஏற்படுமாயின் அதற்கான உத்தேச மதிப்பீடு தயாரித்து அதற்கான ஒப்புதல் சென்னை மாநகராட்சியின் மன்றத்தில் பெறப்பட்டது.இதற்கான ஒப்பந்தப் புள்ளி ஏதும் தற்போது கோரப்படவில்லை. முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் சென்னை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கலைத் திருவிழா போட்டி வெற்றி பெறுபவர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு

 


1161730

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:


பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்காக நடத்தப்படும் கலைத் திருவிழா போட்டி நடப்பாண்டு முதல் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிகளில் தரவரிசையில் முதன்மை இடத்தை பெறும் 6 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற 500 மாணவர்கள் விவரம் - மாவட்டம் & பள்ளியின் பெயர் வெளியீடு

 

Screenshot_2023-12-01-12-22-45-972-edit_com.google.android.apps.docs

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற 500 மாணவர்கள் விவரம் - மாவட்டம் & பள்ளியின் பெயர் வெளியீடு.

 TAMILNADU CHIEF MINISTER TALENT SEARCH EXAM SEP - 2023

Selected Students List - Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

வினா-வங்கி புத்தகம் ஜனவரியில் வழங்கப்படும்: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தகவல்

 1161689

 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வினா-வங்கி புத்தகங்கள் மீண்டும் ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.


தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கிவரும் மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு புதிதாக 14 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், பள்ளிக்கல்வித் துறை சார்ந்த வழக்குகளை கையாள 4 சட்ட வல்லுநர்கள் நியமனம் என்பது உட்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது: பள்ளிக்கல்வித் துறையில் நிலுவையில் உள்ள வழக்குகளை கையாளுவதற்கு பல்வேறு கட்டங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக நம்மிடம் ஒரே ஒரு சட்ட அலுவலர் மட்டுமே உள்ளார்.அவருக்கு உதவியாக சட்ட நுணுக்கங்கள் தெரிந்த 4 பேர் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து ஊதியம் வழங்க அனுமதி வழங்கப்படும்.


மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு 5 ஆண்டுகளுக்கு பின்பு கூட்டப்படுகிறது. ஒரு பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பங்கு முக்கியமானதாகும். மேலும், 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக வினா-வங்கிகள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வழங்கப்பட்டது.


கரோனா பரவலுக்குபின் அது தயார் செய்யப்படாமல் இருந்து. வரும் ஜனவரி மாதத்தில் இருந்து மீண்டும் வினா வங்கி புத்தகங்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதில் பள்ளிக்கல்வித் துறை செயலர் குமரகுருபரன், தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளிகளுக்கு மழை விடுமுறை - புதிய நடைமுறை - பள்ளிக்கல்வித் துறை தகவல்

 2019

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் ஏற்பட்டு வரும் குழப்பங்களுக்கு விரைவில் தீா்வு காணப்படும் என பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.


தமிழகத்தில் பருவமழை காலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்த முடிவை அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் எடுக்கும் நடைமுறை தற்போது அமலில் இருக்கிறது. 


அதன்படி இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கை, மழை பாதிப்புகள் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையின்படி பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்படுகிறது. அவ்வாறு விடுமுறை விடப்படும் நாட்களை ஈடுசெய்யும் வகையில் கல்வித்துறை சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தி மாணவ-மாணவிகளுக்கான கற்பித்தல் பணிகளை மேற்கொள்கின்றன. இந்த நிலையில் சில மாவட்டங்களில் மழை காலங்களில் விடுமுறை விடுவதில் சில குழப்பங்கள் ஏற்படுகிறது. 


இந்தச் சூழலில் நிகழாண்டு மழை காலங்களில் விடுமுறை விடுவதில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்படுகின்றன. மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா்கள் விடுமுறை பற்றி முடிவெடுக்கலாம் என்ற உத்தரவு சா்ச்சையானது. இதனால் பள்ளி தலைமையாசிரியா்கள், கல்வித் துறை அலுவலா்கள் அதிருப்தி அடைந்தனா்.


அதேபோன்று வியாழக்கிழமை பலத்த மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.


ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு விடுமுறை தரப்படவில்லை. செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னையை ஒட்டிய சில பகுதிகளும் வருகின்றன.


இதனால் அந்தப் பகுதிகளில் உள்ளவா்களுக்கு விடுமுறையில் குழப்பம் ஏற்பட்டது. இந்த சிக்கல்களை சரிசெய்வதற்கான மாற்று நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Education Official Calendar ( December 2023 & January 2024 )

 

IMG_20231201_113317

December 2023 & January 2024 - School Education Official Calendar 

டிசம்பர் 2023 & ஜனவரி 2024 மாத பள்ளி நாட்காட்டி!!!

Dec 2023 & Jan 2024 Calendar👇
Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News