1-ம் வகுப்பு சேர்க்க சரியான வயது எது? ஒரு விவாதம்

 

rX8tbwWyaezetMwrbnk7

1-ம் வகுப்பு சேர்க்கைக்கு வரும்போது மாநிலங்களுக்கிடையே வயது அளவுகோல்களில் பரந்த வேறுபாடுகள் உள்ளன. மார்ச் 2022 நிலவரப்படி 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 6 வயது நிறைவு செய்யாத குழந்தைகளை 1-ம் வகுப்பு சேர்க்கைக்கு அனுமதிக்கின்றன.


1-ம் வகுப்பு சேர்க்கைக்கு வரும்போது மாநிலங்களுக்கிடையே வயது அளவுகோல்களில் பரந்த வேறுபாடுகள் உள்ளன. மார்ச் 2022 நிலவரப்படி 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 6 வயது நிறைவு செய்யாத குழந்தைகளை 1-ம் வகுப்பு சேர்க்கைக்கு அனுமதிக்கின்றன.

இந்த ஆண்டு டெல்லியில் உள்ள பள்ளிகள் 6 வயதுக்குட்பட்ட மாணவர்களை 1-ம் வகுப்பிற்கு தொடர்ந்து சேர்க்க உள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி, 1-ம் வகுப்பில் சேருவதற்கான வயதை சீரமைக்க வலியுறுத்தி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சமீபத்தில் எழுதிய கடிதங்களுக்கு இது முரணானது.


மார்ச் 2022 இல் லோக்சபாவில் மத்திய அரசு அளித்த பதிலின்படி, 1-ம் வகுப்பு சேர்க்கைக்கு வரும்போது மாநிலங்களுக்கிடையே வயது வரம்புகளில் பல வேறுபாடுகள் உள்ளன. மார்ச் 2022 நிலவரப்படி, 6 வயது பூர்த்தியடையாத குழந்தைகளுக்கு 1-ம் வகுப்பு சேர்க்கையை அனுமதிக்கும் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன. 

குழந்தைகள் முறையான கல்வியைத் தொடங்க எந்த வயது பொருத்தமானது, அது ஏன் முக்கியமானது? நாங்கள் இங்கே விளக்குகிறோம்.


தேசிய கல்விக் கொள்கையில் கூறியுள்ளபடி, 3-8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் (அடிப்படை நிலை) முறையான பள்ளிக் கல்விக்கான   ‘5+3+3+4’ வயது அடிப்படையாக அமைந்துள்ளது. 8-11 வயது (ஆயத்த நிலை), 11-14 வயது (நடுத்தர நிலை), 14-18 ஆண்டுகள் (இறுதி நிலை) ஆகும்.


இது ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வியை 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு முன்பள்ளிக் கல்வி என்றும் அழைக்கப்படுகிறத. இதை முறையான பள்ளிக் கல்வியின் கீழ் கொண்டுவருகிறது. மூன்று வருட ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வியை முடித்த பிறகு, 1-ம் வகுப்பில் சேர்க்கைக்கு தகுதி பெறுவதற்கு ஒரு குழந்தை 6 வயதாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.


இது ஏன் இப்போது விவாதமாகிறது?


புதிய தேசிய கல்விக் கொள்கை (என்.இ.பி 2020) தொடங்கப்பட்டதில் இருந்து, மத்திய கல்வி அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதி, புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, ஆறு வயதில் 1-ம் வகுப்பில் சேர்க்கைக்கான வயதை சீரமைக்க வலியுறுத்துகிறது. குழந்தைகள் பள்ளியில் சேர்க்கை நுழைவு வயது மாநிலங்கள் முழுவதும் மாறுபடுவதால் - சிலர் 5 வயதை எட்டிய பிறகு 1-ம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்க்கிறார்கள், மற்றவர்கள் 6 ஆண்டுகளில் சேர்க்கிறார்கள் - மத்திய அரசின் என்.இ.பி விதிமுறைப்படியும் அதை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நினைவூட்டலை வெளியிடும் போதெல்லாம், இந்த விஷயம் செய்திகளில் கவனத்தை ஈர்க்கிறது. 


உதாரணமாக, கடந்த ஆண்டு, என்.இ.பி 2020-ன் பரிந்துரைகளுடன் ஒத்துப்போகும்விதமாக கேந்திரிய வித்யாலயாக்கள் 1-ம் வகுப்புக்கான சேர்க்கை வயதை ஐந்திலிருந்து ஆறு ஆண்டுகளாக உயர்த்தியபோது, ​​ஒரு பெற்றோர் குழு நீதிமன்றத்தில் இந்த முடிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. பிப்ரவரி 2022-ல் சேர்க்கை செயல்முறை தொடங்குவதற்கு சற்று முன்பு இந்த மாற்றம் திடீரென அறிமுகப்படுத்தப்பட்டது என்று அவர்கள் வாதிட்டனர். டெல்லி உயர் நீதிமன்றம் இறுதியில் அவர்களின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், இந்த முடிவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.


இந்த ஆண்டும், மிக சமீப காலம் வரை, 1-ம் வகுப்பு நுழைவு வயதை சீரமைப்பது தொடர்பாக மாநிலங்களுக்கு கல்வி அமைச்சகம் மற்றொரு நினைவூட்டலை அனுப்பிய பிறகு, டெல்லி அரசு, குறைந்தபட்சம் இந்த கல்வியாண்டில், டெல்லி பள்ளிக் கல்வி விதிகளின்படி (DSEAR 1973) தற்போதுள்ள வழிகாட்டுதல்களைத் தொடர முடிவு செய்தது. இது 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை 1-ம் வகுப்பில் சேர்க்கையை அனுமதிக்கிறது.


கல்வி உரிமைச் சட்டம் (ஆர்.டி.இ) 6 வயது முதல் 14 வயது வரை கல்விக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அதாவது ஒரு குழந்தை 6 வயதில் ஆரம்பக் கல்வியைத் (1-ம் வகுப்பு படிக்க) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி உரிமைச் சட்டத்தின் வரைவு தொடர்பான கல்வியாளர்களின் கருத்துப்படி, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகள் பின்பற்றும் உலகளாவிய வயதைக் கருத்தில் கொண்டு 6 வயது அடையாளம் காணப்பட்டது, அதாவது 6 அல்லது 7 வயதில் ஒரு குழந்தையை வகுப்பில் சேர்க்க வேண்டும்.


வரைவுப் நடைமுறையின் ஒரு பகுதியாக இருந்த தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஆர் கோவிந்தா இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “ஆர்.டி.இ 1-ம் வகுப்பைத் தொடங்குவதற்கான வயது என்று சொல்லும் 6 வயது என்பது வெறுமனே மீண்டும் வலியுறுத்துவதாகும். இது ஏற்கனவே நமது அரசியலமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது. காந்தியின் அடிப்படைக் கல்வி பற்றிய யோசனையிலும் இதுவே இருந்தது. 1940-களில் இருந்து செல்லும் சார்ஜென்ட் கமிஷன் (இந்தியாவில் போருக்குப் பிந்தைய கல்வி வளர்ச்சி) அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது.” என்று கூறினார்.


மேலும், “ஆர்.டி.இ சட்டம் முறையான கட்டாயக் கல்வியை அமலாக்குவதற்கான நுழைவு வயதைக் குறிப்பிட வேண்டும், இது பல மாநிலங்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது, இது வகுப்பு 1-ம் வகுப்பு மாணவர்களை சேர்க்கும் உண்மையான வயது பற்றிய குழப்பத்திற்கு வழிவகுத்தது. உண்மையில், ஆர்.டி.இ சட்டத்தில் உள்ள பெரும்பாலான ஷரத்துக்கள் முழுமையாக செயல்படுத்தப்படாமல் உள்ளன” என்று கோவிந்தா கூறினார்.


முறையான கல்விக்கான நுழைவு வயது பற்றி ஆராய்ச்சி என்ன சொல்கிறது?


கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கல்வி புலத்தைச் சேர்ந்த டேவிட் வைட்பிரெட், 'பள்ளி தொடங்கும் வயது: சான்றுகள்' என்ற தலைப்பில் தனது ஆய்வறிக்கையில், குழந்தைகளின் முறையான கல்வி ஆர்வத்துடன் தொடங்குவதற்கு முன், ஏன் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அதிக நேரம் தேவைப்படலாம் என்பதை விளக்கினார்.


வைட்பிரெட் தனது ஆராய்ச்சியில்,  “நியூசிலாந்தில் 5 மற்றும் 7 வயதில் முறையான கல்வியறிவு பாடங்களைத் தொடங்கிய குழந்தைகளின் குழுக்களை ஆய்வுகள் ஒப்பிட்டுள்ளன. அவர்களின் முடிவுகள், கல்வியறிவுக்கான முறையான கற்றல் அணுகுமுறைகளின் ஆரம்ப அறிமுகம் குழந்தைகளின் வாசிப்பு வளர்ச்சியை மேம்படுத்தாது, மேலும் சேதப்படுத்தும். 11 வயதிற்குள், இரு குழுக்களிடையே வாசிப்பு திறன் மட்டத்தில் எந்த வித்தியாசமும் இல்லை, ஆனால் 5 வயதில் தொடங்கிய குழந்தைகள் படிப்பதில் குறைவான நேர்மறையான அணுகுமுறையை வளர்த்துக் கொண்டனர், பின்னர் தொடங்கிய குழந்தைகளை விட குறைவான புரிதலைக் காட்டினர். 55 நாடுகளில் 15 வயதுடையவர்களில் வாசிப்பு சாதனை பற்றிய தனி ஆய்வில், வாசிப்பு சாதனைக்கும் பள்ளி நுழைவு வயதுக்கும் இடையே குறிப்பிடத்தக்க தொடர்பு எதுவும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் காட்டியுள்ளனர்.


பல்வேறு நாடுகளில் உலகம் முழுவதும் முறையான கல்வியைத் தொடங்க வயது என்ன?


“ஜப்பானில் மட்டுமின்றி, கிழக்கு ஆசியா முழுவதும் ஆரம்பப் பள்ளியைத் தொடங்குவதற்கான நிலையான வயது ஆறு. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் இந்த வயது பொதுவானது. இந்த சமூகங்களில் உள்ள இளைய குழந்தைகள் ஒருவித பாலர் பள்ளியில் கலந்து கொள்வது வழக்கம் (கட்டாயமில்லை என்றாலும்). இது சம்பந்தமாக, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில், குழந்தைகள் பொதுவாக 5 வயதில் பள்ளியைத் தொடங்குகிறார்கள், அவை வெளிப்படையாகத் தெரிகின்றன” என்று டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்வித் துறையின் உதவிப் பேராசிரியர் லத்திகா குப்தா கூறினார்.


மறுபுறம், ஸ்காண்டிநேவிய நாடுகள், 7 வயதில் குழந்தைகளின் கல்வியைத் தொடங்குகின்றன, ஏனெனில், அவை உலகளாவிய குழந்தை பராமரிப்பு உள்ளது. பள்ளிக் கல்வியின் குழந்தை பராமரிப்பு அம்சத்தை மனதில் கொள்ள வேண்டும். இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில், 5 வயதிற்குட்பட்டவர்களுக்கான குழந்தை பராமரிப்பு வழங்குவது மிகவும் செலவு அதிகம். அதேசமயம் ஸ்காண்டிநேவியாவில், 7 வயதிற்கு உட்பட்டோருக்கான பராமரிப்பு உலகளாவியது மற்றும் அரசு ஆதரவுடன் உள்ளது-” என்று லத்திகா குப்தா கூறினார்.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Calendar - December 2023

 




டிசம்பர் மாதத்திற்கான பள்ளி நிகழ்வு காலண்டர் - நாள் வாரியாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது.
டிசம்பர் -2023 நாள்காட்டி...


* 02-12-2023 - சனி -1-5 வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC & குறைதீர்க்கும் நாள்


* 11-12-2023 - திங்கள் - இரண்டாம் பருவம் SA தேர்வு / அரையாண்டுத் தேர்வு - 1-12 வகுப்புகளுக்கு.


* 18-12-2023  to  20-12-2023 வரை --- 1-3 வகுப்புகளுக்கு மூன்றாம் பருவ  EE  பயிற்சி...


* 23 -12-2023 --  இரண்டாம் பருவம்  / அரையாண்டுத் தேர்வு விடுமுறை  ஆரம்பம்...


* 02-01-2024 -- 6-12 வகுப்புகளுக்கு மூன்றாம் பருவம் -- பள்ளிகள் திறப்பு..


* தொடக்கப் பள்ளிகளுக்கு பள்ளிகள் திறப்பு மாறுதலுக்கு உட்பட்டது..


School Calendar - December 2023 pdf👇

Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

25.11.23 - CRC பயிற்சி தேதி மாற்றம் - SCERT Proceedings

 IMG-20231122-WA0034


IMG-20231122-WA0035


1 முதல் 5 ஆம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் , ஐயங்களும் தெளிவுரைகளும் பாடப் பொருண்மைகள் சார்ந்த தொடர்பணித்திறன் மேம்பாட்டுப் ( CRC -நவம்பர் -2023 ) வட்டார அளவிலான பயிற்சி 25.11.23 அன்று நடைபெற இருந்தது. 

வாக்காளர் பெயர் சேர்த்தல் , நீக்குதல் பணி நடைபெறுவதால் பயிற்சி 02.12.2023 அன்று நடைபெறும் என்ற விவரம் அன்புடன் தெரிவிக்கப்படுகிறது.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

AIDED பள்ளிகளில் BT/SGT களாக பணி நியமனம் பெற்றவர்கள் - TET விலக்கு கோரி DPIல் மனு

 23.08.10 to 16.11.12 காலகட்டத்தில் AIDED பள்ளிகளில் BT/SGT களாக பணி நியமனம் பெற்றவர்கள் - TET விலக்கு கோரி DPIல் மனு...

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் ஏற்கனவே இருந்த துறை சார்ந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி 16.11.2012 வரை நிரந்தரப் பணியிடத்தில் நியமனம் பெற்று ஆசிரியர் தகுதித்தேர்வு நிபந்தனையுடன் கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்து , ஒரு தவிர்ப்பாணை வெளியிட தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்திட பணிந்து வேண்டுதல் சார்பாக மனு...

IMG-20231121-WA0035

IMG-20231121-WA0036

IMG-20231121-WA0037

IMG-20231121-WA0038

IMG-20231121-WA0039

IMG-20231121-WA0042



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி - பள்ளி அளவில் அமைக்கப்படும் குழுக்கள் & பணிகள்

 

%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%C2%A0%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20-%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20&%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தன் சுத்தம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு , கழிவு மேலாண்மை , காய்கறி தோட்டம் , கழிவு மறு சுழற்சி மற்றும் நெகிழி இல்லா பள்ளி வளாகம் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட தமிழ்நாடு அரசின் " எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி " என்ற திட்டம் 01-09-2023 முதல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது . அதன்படி பள்ளி அளவில் அமைக்கப்படும் குழுக்கள் மற்றும் அவர்களின் பணிகள்


Responsibilities of the School Level Committee 


* include Strengthening of Youth and Eco club

* Developing a clean School campus plan  

* Making safe drinking water available to students a part of clean school campus plan 

* Understanding waste management practice in the school campus.

 * Developing a school vegetable Garden and ensuring that the vegetable / fruits grown usedfor Noon meal programme

Constituting a team for conducting activities related to awareness regarding conservation ofenvironment . Every team should have students , teachers , NGOs , student alumni of school.


 Student Sub Committee 


A team of 5 students will be constituted to coordinate and implement various activities of the five sub - committees such as safe drinking water , clean classroom and maintenance , Clean School campus waste management and creation of school vegetable garden .


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 22.11.2023

 .com/

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.11.2023


 திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வெகுளாமை

குறள்:303


மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய

பிறத்தல் அதனான் வரும்.


விளக்கம்:


யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.


பழமொழி :

Good and Bad are not due others


நன்றும் தீதும் பிறர் தர வாரா.


இரண்டொழுக்க பண்புகள் :


1) என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.


2) பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :


முடியாது என்ற வார்த்தை

முட்டாள்களினால் மட்டுமே

பயன்படுத்தப்படும் வார்த்தை..

அந்த வார்த்தையை நீ

பயன்படுத்தாதே.


பொது அறிவு :


1. முதல் உலகப்போர் நடந்த ஆண்டு எது ? 


 1914 ஆம் ஆண்டு . 


 2. உலக சமாதான சின்னம் எது ?


 ஒலிவ் மரத்தின் கிளை.


English words & meanings :


 zany(adj)- uncommon behaviour.சம்பந்தமற்ற , வித்தியாசமான zestful)adj) - having a lot of energy ஆர்வம் , உந்துதல்


ஆரோக்ய வாழ்வு : 


செம்பருத்தி பூ உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் 10 பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும். ஒரு மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.


நீதிக்கதை


 ஒரு நாள் அக்பர் சக்கரவர்த்தி பீர்பாலிடம் ஒரு புதிர் போட்டார்.


“மேலே மூடி கீழே மூடி


நடுவே மெழுகுத் திரி எரிந்து அணைகிறது


இது என்ன?”


என்று பீர்பாலைப் பார்த்துக் கேட்டார். பீர்பாலுக்கு இந்தப் புதிருக்கான விடை தெரியவில்லை. “அரசே, எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். யோசித்து வந்து சொல்கிறேன்” என்றார் பீர்பால்.


மறுநாள் பீர்பால் ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்று  கொண்டிருந்தார். அவருக்குத் தாகம் எடுத்தது. தம் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளத் தண்ணீர் கேட்பதற்காக, அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்தார். அங்குச் சிறுமி ஒருத்தி சமைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.


“குழந்தாய், என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று  அந்தச் சிறுமியைப் பார்த்துக் கேட்டார் பீ்ர்பால்.


“குழந்தையைச் சமைத்துக் கொண்டிருக்கிறேன்; தாயாரை எரிய விட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று அந்தச் சிறுமி கூறினாள்.


“அப்படியா? உன் தகப்பனார் எங்கே” என்று அந்தச் சிறுமியிடம் கேட்டார் பீர்பால்.


“என் தகப்பனார் மண்ணுடன் மண்ணைச் சேர்ப்பதற்குச் சென்றுள்ளார்” என்றாள் அந்தச் சிறுமி.உன் தாயார் எங்கே?” என்று பீர்பால் கேட்டபொழுது, “ஒவ்வொன்றையும் இரண்டிரண்டாக ஆக்கச் சென்றிருக்கிறாள்” என்றாள்.

இந்த பதில்களைக் கேட்டப் பீர்பால் திகைத்துப் போய் விட்டார். இந்தச் சமயத்தில் அந்தச் சிறுமியினுடைய தாய் தந்தையர் அங்கு வந்தனர். அவர்களிடம் பீர்பால் எல்லா விவரத்தையும் கூறினார்.


இதைக் கேட்டுச் சிரித்த அந்தச் சிறுமியின் தந்தை ‘ அவள் சரியாகத்தான் கூறியிருக்கிறாள்” என்றார்.


“எனக்கு ஒன்றும் புரியவில்லையே?” என்றார் பீர்பால்.


“துவரம் பருப்பை வேகவைத்துக் கொண்டு, அதற்காக அடுப்பை எரிப்பதற்குத் துவரஞ் செடியின் காய்ந்த தண்டுகளை விறகாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாள். அதனைத்தான் குழந்தையைச் சமைத்துக்கொண்டு தாயாரை எரித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்” என்றார் சிறுமியின் தந்தை.


“நீங்கள் மண்ணுடன் மண்ணைச் சேர்க்கச் சென்றதாகக் கூறினாளே” என்றார் பீர்பால்.

“என்னுடைய உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். அவரைச் சுடுகாட்டில் தகனம் செய்வதற்காகப் போயிருந்தேன். உயிர் போன பிறகு இந்த உடம்பு மண்ணோடுதானே சேர்ந்து விடுகிறது! அதைத்தான் அப்படிச் சொல்லி இருக்கிறாள்” என்றார்.


“உங்கள் மனைவி ஒவ்வொன்றையும் இரண்டிரண்டாக ஆக்கச் சென்றிருக்கிறாள் என்றாளே” என்றார் பீர்பால்.


“பக்கத்து வீட்டில் உளுந்து உடைத்துக் கொடுக்கச் சொன்னார்கள். அங்குச் சென்று உளுந்து உடைத்துக் கொடுத்துவிட்டு வருகிறாள்” என்றார்  அந்தச் சிறுமியின் தகப்பனார்.


இந்தப் பதில்களைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த பீர்பால் “அக்பர் சக்கரவர்த்தி போட்ட புதிருக்குப் பதில் அளிக்கக் கூடியவர்கள் இவர்களே’ என்று கருதினார். அக்பர் சக்கரவர்த்தி கூறியதை நினைவுபடுத்திக் கொண்டு.


“மேல மூடி கீழே மூடி


 நடுவே மெழுகுத் திரி எரிந்து அணைகிறது.


இது என்ன?என்று கேட்டார் பீர்பால்.


இதைக் கேட்ட அந்தச் சிறுமியின் தந்தை, “ இரண்டு மூடிகள் என்றால் ஒன்று ஆகாயம், மற்றொன்று பூமி. மெழுகுத் திரி என்பது மனிதன். பூமியில் மனிதன் வாழ்ந்து  இறந்து விடுகிறான். இதுதான், இந்தப் புதிருக்கு விடை” என்று கூறினான்.


இதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த பீர்பால் தம்மால் இயன்ற பொருள்களைச் சன்மானமாக அந்தக் குடும்பத்திற்குக் கொடுத்தார்.


மறுநாள் அரச சபைக்குச் சென்ற பீர்பால், அக்பர் சக்கரவர்த்தி போட்ட புதிருக்கான விடையைக் கூறினார்.


அதைக் கேட்ட சபையிலிருந்தவர்கள் அனைவரும் ஆச்சிரியப்பட்டனர்.


பீர்பாலின் அறிவுத் திறனைப் பாராட்டி அக்பர் சக்கரவர்த்தி, பொன்னையும் மணியையும் பரிசாக வழங்கினார். பீர்பால் தாம் அதைப் பெற்றுக் கொள்ளாமல், தமக்கு அந்தப் புதிருக்கு உரிய விளக்கத்தைக் கூறிய குடும்பத்தவரை வரவழைத்தார். “இவர்களே அந்தப் பரிசுக்கு உரியவர்கள்” என்று கூறி, நடந்த நிகழ்ச்சிகளை விளக்கமாகக் கூறினார். அக்பர் சக்கரவர்த்தி வழங்கிய பரிசை அந்தக் குடும்பத்தவர் பெற வழிசெய்தார். பீர்பாலின் நேர்மையை வியந்து பாராட்டிய அக்பர் சக்கரவர்த்தி பீர்பாலுக்குச் சிறப்புப் பரிசு வழங்கினார்.


இன்றைய செய்திகள் - 22.11.2023


*போக்குவரத்து மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு லண்டனில் விருது.


* திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு 2,700 சிறப்பு பேருந்துகள்; அமைச்சர் தகவல்.


* நீர் நிலைகளை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது மதுரை ஐகோர்ட் அதிரடி.


*ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு.


* பின்னணி பாடகி பி சுசிலாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார்.


* ஐசிசி- இன் புதிய விதிமுறை: முந்தைய ஓவர் முடிந்து 60 வினாடிகளுக்குள் வந்து வீச்சு அணி அடுத்த ஓவரை வீச தயாராக வேண்டும். அப்படி தயாராகாமல் இருப்பது மூன்றாவது முறையாக நிகழும் போது, 5 ரன்கள் பந்து வீச்சு அணிக்கு அபராதம் விதிக்கப்படும்.


Today's Headlines


* Chennai Metro Rail was  Awarded in London for its continuous involvement in activities beneficial to the environment, not only just transportation.


 * 2,700 special buses for Tiruvannamalai Karthikai Deepa festival;  Minister Information.


 * Madurai High Court –cannot order to give Patta to those who are encroaching on water bodies a striking action.


 *Minister Anbil Mahesh Poiyamozhi surprise visit to  Erode district government schools.


 * Playback singer P Susila was awarded an honorary doctorate degree by Chief Minister M K Stalin.


 * ICC's new rule: The batting team must be ready to bowl the next over within 60 seconds of the previous over.  The third occurrence of such unpreparedness will result in a penalty of 5 runs to the bowling team.

 Prepared by


Covai women ICT_போதிமரம்

கனமழை - ( 22.11.2023 ) விடுமுறை அறிவிப்பு.

 கனமழை - பள்ளி,  கல்லூரிகளுக்கு இன்று ( 22.11.2023 ) விடுமுறை அறிவிப்பு

* நாகை ( மழை சூழலுக்கு ஏற்ப தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம்) 


* மயிலாடுதுறை ( மழை சூழலுக்கு ஏற்ப தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம்) 

* காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும்

* புதுச்சேரி - பள்ளிகளுக்கு மட்டும்


விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்ட மாவட்டம்


* சென்னை

6 முதல் 9ஆம் வகுப்பு வரை - கற்றல் விளைவுகள் / திறன் மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் , SPD & SCERT செயல்முறைகள்

 மாநிலத் திட்ட இயக்குனர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 6519/ G3/ 2023, நாள்: 20.11.2023 

தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான " மாநில மதிப்பீட்டுப் புலம் " பார்வையில் காணும் அரசாணை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பார்வையில் காணும் கூட்டக்குறிப்புகளில் கூறப்பட்டுள்ளவாறு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை ( Learning Outcome / Competency Based Test ) நடத்துதல் தொடர்பாக பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணைப்பு - 1 இல் உள்ளவாறு 28.11.2023 முதல் 01.12.2023 வரை படிப்படியாக 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை ( Learning Outcome / Competency Based Test ) நடத்த வேண்டும்.


 LO_CBT - November 2023 Proceedings - Download here



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் முப்பெரும் விழா - ஆசிரியர்களுக்கு அழைப்பு.

 கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள கூட்டரங்கில் 25.11.2023 அன்று காலை 8.00 மணியளவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் முப்பெரும் விழா நடைபெறுகிறது. 


அவ்விழாவில் அனைத்து அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ( பொறுப்பு ) நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள் , முதுகலை ஆசிரியர்கள் பள்ளிக்கு ஒருவர் வீதமும் , பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கு ஒருவர் வீதமும் ( நடுநிலைப்பள்ளிகள் உட்பட ) , பள்ளித்துணை ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட திட்ட அலுவலக ஒருங்கிணைப்பாளர்கள் அன்று காலை 8.00 மணியளவில் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தமிழ் வாசிக்கப் பழக ஓர் எளிய வழிகாட்டி (தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு)

 தமிழ் வாசிக்கப் பழக ஓர் எளிய வழிகாட்டி (தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு)


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News