சர்.சி.வி.இராமன் |
திருக்குறள் :
இயல்:துறவறவியல்
அதிகாரம் : வெகுளாமை
குறள்:304
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
விளக்கம்:
முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?.
Good beginning makes a good ending
நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்
இரண்டொழுக்க பண்புகள் :
2) பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
வாழ்வில் நீ
வெற்றி பெறும் போதெல்லாம்
உன் முதல் தோல்வி
நினைவுக்கு வந்தால்
உன்னை யாராலும்
வெல்ல முடியாது.
பொது அறிவு :
1. இந்தியாவின் பழமையான பொது அஞ்சல் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?
விடை: சென்னை
2. இந்தியாவின் முதல் 5 ஸ்டார் ஹோட்டல் எங்கு உள்ளது?
விடை: மும்பை
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
செம்பருத்தி பூ : செம்பருத்தி பூ குளிர்ச்சி பொருந்தியது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும்.
நவம்பர் 21
உலகத் தொலைக்காட்சி நாள் (World Television Day) உலகெங்கும் ஆண்டுதோறும் நவம்பர் 21 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 21, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகள் அவை நவம்பர் 21 ஆம் நாளை உலகத் தொலைக்காட்சி நாளாக அறிவித்தது. இக்கருத்தரங்கில் உலகில் தொலைக்காட்சியின் கூடிய முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது. உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாசார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது. இதன்படி முதல் தொலைக்காட்சி நாள் 1997-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
நீதிக்கதை
ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டின் பக்கத்துக் கிராமத்தில் இருந்து ஒரு கழுதை வழி மாறி அந்த காட்டிற்குள் வந்தது. அந்த கழுதை வரும் வழியில் பல விலங்குகள் பயத்துடன் ஓடிக்கொண்டிருந்ததாம். அதில் ஒரு மானும் இருந்தது.
அப்பொழுது அந்த கழுதை மானிடம் ஏன் அனைவரும் இப்படி வேகமாக பயத்துடன் ஓடி செல்கின்றன? என்று கேட்டது. அதற்கு மான் இந்த காட்டில் சிங்கம் ஒன்று உள்ளது. அதனை கண்டுதான் நாங்கள் அனைவரும் இப்படி ஓடுகின்றோம் என்று கூறிவிட்டு சென்றது.
இருப்பினும் கழுதை சிங்கத்தின் வீரத்தை தெரிந்து கொண்டே அந்த காட்டிற்குள் சென்றது. சிறிது தூரம் கடந்து சென்றதில் கழுதை களைப்படைந்துவிட்டது. பின் கழுதை அந்த காட்டிற்குள் ஒரு ஓடையைப் பார்த்தது. பின் கழுதை தண்ணீர் அருந்த அந்த ஓடைக்கு சென்றது. அங்கே சில வேட்டைக்காரர்கள் தாங்கள் வேட்டையாடிய மான், புலி, சிங்கம் போன்ற விலங்குகளின் தோலை அங்கிருந்துப் பாறைகள் மேல் உலர வைத்திருந்தனர்.
அதனைப் பார்த்த கழுதைக்கு ஒரு ஆசை வந்தது. உடனே ஒரு சிங்கத்தின் தோலை எடுத்துக் தன் உடம்பின் மேல் போர்த்திக்கொண்டது. அந்த கழுதையும் பார்ப்பதற்கு சிங்கம் போலவே இருந்ததினால் மற்ற விலங்குகளும் கழுதையை சிங்கம் என்று நினைத்து பயந்து ஒதுங்கி சென்றன.
மிருகங்கள் அனைத்தும் தன்னைப் பார்த்துப் பயந்து மரியாதையாக வழி விட்டு ஒதுங்குவதைப் பார்த்த கழுதைக்கு கர்வம் தலைக்கு ஏறியது. சிறிது தூரம் அந்த கழுதை அந்த காட்டில் உலாவி கொண்டிருந்தது, அப்பொழுது அங்கு ஒரு நரியை பார்க்கிறது.
சரி இந்த நரியையும் பயமுறுத்தலாம் என்று நினைத்து, நரியின் அருகில் சென்றது நரியும் பயத்தில் நடுங்கிக்கொண்டே “சிங்க ராஜா, நான் தெரியாமல் இந்த பக்கம் வந்துவிட்டேன் இனி நான் இந்த காட்டிற்கே வரமாட்டேன் என்று கழுதையிடம் கூறியது.
கழுதையும் சிங்கத்தை போல் கர்ஜிக்கணும்னு நினைத்து “ங்கெ ங்கெ” ன்னு கத்தியது. அந்த குரல் அது கழுதையினுடையது என்று நரிக்கு காட்டிக் கொடுத்தது. அதன் பிறகு அந்த கழுதையை நரி மதிக்கவே இல்லை.
அதுவும் இல்லாம “எனக்கு கோவம் வருவதற்குள் இங்கிருந்து சென்றுவிடு” என்றது கழுதை.
அதற்கு நரியோ கழுதையைப் பார்த்து முடியாது என்று பதில் கூறியது. மேலும் நரி கழுதையிடம், நீ சிங்கம் போன்று வேஷம் போட்டாலும் உன்னுடைய உண்மையான குணத்தை உன்னால் மாற்ற முடியாது என்று கூறியது.
கழுத்தையும் அவமானத்தில் தலைகுனிந்தது. அதன் பிறகு தனது வேஷத்தை கலைத்துவிட்டு, தனது உண்மையான உருவத்தில் இருந்தது
இந்த கதையின் நீதி:
நாம் நாமாக இருக்கும் போதுதான் மதிப்படைகிறோம். அடுத்தவர் போல வேஷம் போட்டாலோ அல்லது மற்றவர்கள் போல நடந்து கொள்வதாலோ அவமானம் தான் மிஞ்சும். ஆகவே நாம் நாமாகவே இருப்போம்.
இன்றைய செய்திகள்
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update