Ennum Ezhuthum Term II Schedule FA(B) | SA | Class 1-5 (2023-2024)
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
Education and Information
Ennum Ezhuthum Term II Schedule FA(B) | SA | Class 1-5 (2023-2024)
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான மாநில அளவில் முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி - அளித்தல் சார்ந்து -மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் செயல்முறைகள்
Ennum Ezhuthum Term -3 State & District level Training Dates - Click Here To Download
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
நடப்பு கல்வி ஆண்டில் 10, 11, 12ம் வகுப்புக்கான பொதுதேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. அதன்படி சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புத் தேர்வுகள் 2024ம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் பாதி நாட்கள் முடிந்து விட்ட நிலையில் 2024க்கு இன்னும் 50 நாட்கள் கூட இல்லை. சிபிஎஸ்இ வாரிய மாணவர்கள் விரைவில் போர்டு தேர்வு தேதித்தாள் பற்றிய விரிவான தகவல்களைப் பெற வாய்ப்பு உள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் "10, 11 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 55 நாட்களுக்கு முன்னதாக தேதி விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறது. மேலும் சிபிஎஸ்இ வாரியத்தின் கோட்பாடு தேர்வுகள் பிப்ரவரி 15 ம் தேதி தொடங்கும், நடைமுறைத் தேர்வுகள் ஜனவரி 1 அல்லது 2 ம் தேதி தொடங்கும். சிபிஎஸ்இ வாரியத்தின் நடைமுறைத் தேர்வுகள் ஜனவரி 1 முதல் தொடங்கினால், அதன்படி சிபிஎஸ்இ வாரியத் தேர்வு தேதித்தாள் கூடிய விரைவில் வெளியிடப்படும்.
ஏனெனில் ஜனவரி 1, 2024 க்கு இன்னும் 51 நாட்கள் மட்டுமே உள்ளன. கடந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு டிசம்பர் 29ம் தேதி வெளியானது. இந்நிலையில் அதே போல் நடப்பாண்டிலும் தேதித்தாள் வெளியாகும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இந்த ஊகங்கள் குறித்து வாரியம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.இந்த முறை சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு தாளில் 50 கேள்விகளும், சிபிஎஸ்இ 12 ம் வகுப்பு தாளில் 40 கேள்விகளும் மாணவர்களின் திறன் அடிப்படையில் கேட்கப்படலாம். இந்த திறன் அடிப்படையிலான கேள்விகள் புறநிலை வகை, குறுகிய பதில்களுடன் நீண்ட வகை.
அத்தகைய சூழ்நிலையில், மாணவர்கள் இதுபோன்ற கேள்விகளைத் தீர்க்கவும் பயிற்சி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.கூடுதல் விவரங்களைஅறிய: https://www.cbse.gov.in/cbsenew/documents/Circular_Bifurcation_Marks_30102023.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
தமிழகத்தில் 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை தலைமை ஆசிரியர்கள் வரும் 30-ம் தேதிக்குள் சரிபார்க்க தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
எமிஸ் வலைதளத்தின் விவரங்கள் அடிப்படையிலேயே நடப்பு கல்வி ஆண்டில் 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. எனவே, அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் எமிஸ் தளத்தில் மாணவர்களின் பெயர், பிறந்ததேதி, புகைப்படம் உள்ளிட்ட 13 தகவல்கள் சரியாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அதில் ஏதேனும் திருத்தம் இருந்தால் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளை நவ.30-ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும்.
பெயர் பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும். அதனால், இந்த பணிகளை தலைமை ஆசிரியர்கள் தங்கள் நேரடி கவனத்தில் மேற்கொள்ள வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்களில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும். மேலும், எக்காரணம் கொண்டும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய பிறகு, திருத்தங்கள் கோரி தேர்வுத் துறைக்கு விண்ணப்பம் அனுப்பக் கூடாது.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் பகுதி 1-ல் தமிழை மொழிப் பாடமாக எழுதியாக வேண்டும். எனினும், சிபிஎஸ்இ போன்ற பிற பாடத் திட்டத்தில் படித்து நேரடியாக 9, 10-ம்வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே தமிழ் மொழிப் பாட தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு தரப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
What's New
* 6th Std Notes of Lesson - Gulliver’s Travels (Supplementary - part-2) - Download here
* 7th Std Notes of Lesson - Naya- The Home of Chitrakaars - Supplementary (part-2) - Download here
* 8th Std Notes of Lesson - Homeless Man and his Friends - Supplementary - ( part-2) - Download here
* 9th Std Notes of Lesson - Little Cyclone: The Story of a Grizzly Cub., (part-2) - Download here
* 10th Std Notes of Lesson - Download here
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
தமிழக அரசின் அறிவிப்புபடி, 2022-23-ம் கல்வியாண்டு முதல் மகாகவி பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கவிதைப் போட்டிகள் நடத்தி சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து ‘இளம் கவிஞர் விருது’ மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒன்றியளவில் கவிதைப் போட்டிகள் நடத்தி, அதில் சிறந்ததலா 3 மாணவ, மாணவிகளை தேர்வு செய்ய வேண்டும்.
அவர்களுக்கு மாவட்ட அளவிலான கவிதை போட்டிகள் நவம்பர் 23-ம் தேதி நடத்தப்படும். அதில் சிறந்த ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியை தேர்ந்தெடுக்க வேண்டும். தொடர்ந்து மாவட்ட அளவில் தேர்வான மாணவர்களுக்கு மாநில அளவிலான கவிதைப் போட்டிகள் சென்னையில் நவம்பர் 30-ம் தேதி நடைபெறும். அதில் மாநில அளவில் ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு மகாகவி நினைவு தினத்தன்று இளம் கவிஞர் விருது வழங்கி கவுரவிக்கப்படும்.
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
குழந்தைகளின் சிறந்த படைப்புகளை அனுப்ப மின்னஞ்சல் முகவரிகள் (Email addresses to send children's best works)...
கனவு ஆசிரியர்:
kanavuaasiriyar@tnschools.gov.in
(ஆசிரியர் இதழ்)
தேன்சிட்டு: thenchittu@tnschools.gov.in
(6-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு)
புது ஊஞ்சல் : Oonjal@tnschools.gov.in
(4, 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு)
அன்புள்ள ஆசிரியர்களுக்கு, மேற்குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் வகுப்பு குழந்தைகளின் சிறந்த படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை; தமிழகத்தில் அரசு, உதவி பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம், அளவை உறுதி செய்ய ஏதுவாக தானியங்கி கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சத்துணவு குறித்த தகவல்கள் குறுஞ்செய்தியாக அந்தந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு தினந்தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமூகநலத்துறை ஆணையர் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், 'சமீபத்தில் மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது பல்வேறு பள்ளிகளில் ஏஎம்எஸ் அமைப்பு மூலம் தினசரி சத்துணவு அறிக்கையை தலைமை ஆசிரியர்கள் முறையாக மாவட்ட சமூக நலத்துறைக்கு அனுப்பாமல் உள்ளனர்' என தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏஎம்எஸ் அமைப்பு மூலம் சத்துணவு அறிக்கையை குறுஞ்செய்தியாக தினமும் காலை 11 மணிக்குள் மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
English Alphabets Letters Writing Practice (PDF)
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update