சிறந்த மாணவன் மற்றும் சமூக பணியாளர் சிறப்பை பெற்ற இளம் அறிவியல் விஞ்ஞானி சி.அனிஷ்

 IMG-20231118-WA0024


பல்துறை சாதனை நாயகன்.இளம் அறிவியல் விஞ்ஞானி.கிராண்ட் மாஸ்டர்.மதிப்புறு முனைவர்.சி.அனிஷ். சிறந்த மாணவன் மற்றும் சமூக பணியாளர்.

பெயர்.சி.அனிஷ். வயது.10. பிறந்த தேதி.23-4-2012. பிறந்த இடம்.கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் தற்போது சென்னை வேளச்சேரியில் வசித்து வருகிறார்.சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த கின்னஸ் உலக சாதனை நாயகன்.மதிப்புறு முனைவர்.பாரத் ரத்தன்.சி.அனிஷ்
சிறந்த மாணவன் மற்றும் சமூக பணியாளர்.


டி.ஏ.வி.பாபா வித்யாலயா பள்ளியில் தற்போது ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் 40 -க்கும் மேற்பட்ட உலக சாதனைகள் மற்றும் கின்னஸ் உலக சாதனைகள், எவரெஸ்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-நேபால், நேஷனல் ரெக்கார்ட்ஸ் மற்றும் இண்டர்நேஷனல் ரெக்கார்ட்ஸ் இடம் பிடித்துள்ளார்.

இவரது சாதனைகளை அங்கீகரித்து மதிப்புறு முனைவர் பட்டம் (University of New Jerusalem) வழங்கி கௌரவித்தது. இந்திய அஞ்சல் துறை இவருக்கு மை ஸ்டாம்ப் வெளியீடு செய்து கௌரவித்தது. மேலும் டெல்லியில் ஃபேஸ் ஆஃப் குரூப் இவருக்கு பாரத் ரத்தன் விருது வழங்கி கௌரவித்தது. 

ஆர்கன் டோனர் ஃபேஷன் ஷோ இஸ்கான் ஆடிட்டோரியம் டெல்லியில் மேற்கொள்ளப்பட்டது இதற்காக ஹீரோ ஆஃப் தி சொசைட்டி அவார்ட் வழங்கி கௌரவித்தது. மெக்சிகோவில் நடைபெற்ற சொற்பொழிவு நேர்காணலில் பங்குபெற்று அந்நாடு சான்றிதழ் வழங்கி பெருமைப் படுத்தியது.

கடற்கரையில் தூய்மை பணியினை மேற்கொள்ளுதல் உணவு வழங்குதல் மரம் நடுதல் நெகிழி விழிப்புணர்வு செய்தல் முழு உடல் தானம் விழிப்புணர்வு செய்தல் ஆகிய சமூக சேவைகளை பாராட்டி தென்னிந்திய கலாச்சார அகடமியானது சிறந்த சமூக சேவைக்கான செம்மல் விருது வழங்கி கௌரவித்தது.முழு உடல் தானம் விழிப்புணர்வு பேஷன் ஷோ இஸ்கான் ஆடிட்டோரியம் டெல்லியில் மேற்கொள்ளப்பட்டது இதற்காக ஹீரோ ஆஃப் தி சொசைட்டி அவார்ட் வழங்கி கௌரவித்தது.

சிறந்த சமூக சேவைக்கான விருது (10) பல்வேறு அறக்கட்டளைகள் மற்றும் அமைப்புகள் இவருக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது. இவர் Rising youth super star award Newdelhi-இல் பெற்றவர்.நட்சத்திர தமிழன் விருது-2022 மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் புதுச்சேரியில் இவருடைய சாதனைகளை வியந்து பாராட்டி சிறந்த மாணவன் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது. ஓவியாலயா அறக்கட்டளை இவரின் திறமைகளை அங்கீகரித்து இவருக்கு Young Achiever's Award-2022 ஓவியாலயா முப்பெரும் விழாவில் இவருடைய சாதனைகளை பெருமைப்படுத்தி கௌரவித்தது. 

இவருடைய சாதனைகள் இதோடு நின்றுவிடப் போவதில்லை. இந்திய நாட்டிற்காக மேலும் பல சாதனைகள் படைத்து சரித்திரம் படைக்க வேண்டும் என்பதே இவருடைய இலட்சியம் ஆகும்.

 தென்னிந்திய கலாச்சார அகடமியானது சிறந்த சமூக சேவைக்கான செம்மல் விருது வழங்கி கௌரவித்தது. நவீன் ஆர்ட்ஸ் அமைப்பானது Dr.A.P.J.அப்துல்கலாம் விருது இவருடைய சமூக சேவையை வியந்து பாராட்டி திரைப்பட இசை அமைப்பாளர் திரு சங்கர் கணேஷ் ஐயா அவர்களின் நல்லாசியுடன் வழங்கி கௌரவித்தது.

India Best Student Award ( ABJ அறக்கட்டளை) வழங்கியது. Pride of Tamil Nadu ( All India Book of Records) வழங்கி கௌரவித்தது. Young Achievers Award -2021 (Jetlee Book of Records) வழங்கியது. Best Social activist awards (WAC Book of Records) சமூக சேவையைப் பாராட்டி வழங்கியது.

நட்சத்திர தமிழன் விருது -2022 சிறந்த மாணவன் மற்றும் சாதனைகளின் அடிப்படையில் இவ்விருது மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் புதுச்சேரியில் வழங்கி கௌரவித்தது. மேலும் Rising youth superstars of India-2022 டெல்லியில் வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

கேன்சர் நோயாளிகளுக்கு தங்களால் இயன்ற அளவு பண உதவி சேமித்தது மட்டும் அல்லாமல் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை தான் படிக்கும் பள்ளியில் வழங்கினார். இதற்காக சிறந்த சமூக சேவைக்கான விருது, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தது.
 ஓவியப் போட்டியில் தான் பரிசாக பெற்ற ரூ.500 ஐ ஒரு வேளை உணவுக்காக குழந்தைகளுக்கு வழங்கினார்.
IMG-20231119-WA0009

IMG-20231119-WA0010

IMG-20231119-WA0011

IMG-20231119-WA0012

IMG-20231119-WA0013

IMG-20231119-WA0014

IMG-20231119-WA0015

IMG-20231119-WA0016

IMG-20231119-WA0017

IMG-20231119-WA0018

IMG-20231119-WA0019

IMG-20231119-WA0020

IMG-20231119-WA0021

IMG-20231119-WA0022

IMG-20231119-WA0023

IMG-20231119-WA0024

IMG-20231119-WA0025

IMG-20231119-WA0026

IMG-20231119-WA0027

IMG-20231119-WA0028

IMG-20231119-WA0029

School Morning Prayer Activities - 20.11.2023



 .com/

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.11.2023


 திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வெகுளாமை

குறள்:301


செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்

காக்கின்என் காவாக்கா லென்.  


விளக்கம்:


எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?  


பழமொழி :

God is love


அன்பே கடவுள்


இரண்டொழுக்க பண்புகள் :


1) என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.

2) பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :


என்னைப் பற்றி போற்றி பாடுபவர்களை விட, என்னை கடுமையாக விமர்சிப்பவர்களால் தான் நான் அதிகம் நன்மை பெற்றுள்ளேன். - காந்தியடிகள் 


பொது அறிவு :


1. ஐநா பொதுச் சபையின் தலைவரான முதல் இந்தியர் யார்?


விடை: விஜயலட்சுமி பண்டிட்


2. வேங்கையின் மைந்தன் என்று புத்தகத்தை எழுதியவர்?

விடை: அகிலன்


English words & meanings :


yern - quick விரைவாக. yield - produce தயாரித்தல், விளைச்சல் 


ஆரோக்ய வாழ்வு : 


செம்பருத்தி பூ : இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான டானிக். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும்.


நவம்பர் 20 இன்று


திப்பு சுல்தான் அவர்களின் பிறந்தநாள்... 


திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனஹள்ளி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டணம்), மைசூரின் புலியென அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார். பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார். ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு அகற்றுவதற்காகப் பிரான்சின் மாவீரன் நெப்போலியனுடன் பேச்சுவார்த்தைகூட நடத்தினார்.[1]மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கில-மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படைகளினாலும் தோற்கடிக்கப்பட்டார். மே 4, 1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் போரின்போது இறந்தார்.


நீதிக்கதை


 முரட்டு சிங்கம்:-


ஒரு பெரிய மலைப் பிரதேசத்தில் செழித்தோங்கி வளர்ந்த அடர்ந்த காடு அக்காட்டில் சிங்கம், புலி, கரடி போன்ற பெரிய மிருகங்களும், மான், குரங்கு போன்ற சிறிய மிருகங்களும் வாழ்ந்து வந்தன.


காலம் காலமாக பல வகையான மிருகங்களும் ஒரே இடத்தில் இருந்து வந்ததால் இவை ஒற்றுமையாக காட்டில் வாழ்ந்து வந்தன. ஆனாலும், இக்காட்டிலுள்ள சிங்கங்களில் முரட்டுச் சுபாவமுள்ள சிங்கம் ஒன்று இருந்தது.


அதனுடைய செயல்கள் மற்ற சிங்கங்களுக்குப் பிடிக்காததால் அது தனிமைப் படுத்தப்பட்டு தனிக்காட்டு ராஜாவாக உலாவி வந்தது.இருப்பினும் காட்டிலுள்ள மான், குரங்கு ஆகியவற்றுடன் முரட்டுச் சிங்கம் நட்பாகவே பழகி வந்தது. அவையும் தனியாக வாழும் முரட்டுச் சிங்கத்தின் மீது பாசமாய் இருந்தன


.இச்சிங்கம் காட்டில் உலாவச் செல்லும் போது, மான்களுடன்தான் செல்வது வழக்கம். நாட்கள் ஆக ஆக மான்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்த்து.ஒரு நாள் தன் குட்டியை தேடி கொண்டு தாய் மான் சென்றது.அங்கே அடர்ந்த புதர் பக்கத்தில் சிங்கம் கர்ஜிப்பதைப் போன்ற சப்தம் கேட்டது. உன்னிப்பாக அந்த திசை நோக்கி நடந்த தாய் மான் சேறும், சகதியுமாய் இருந்த படு குழியில் முதலை ஒன்றுடன் உயிருக்கு ஒரு சிங்கம் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்தது.


இது நம்முடன் இருந்த முரட்டுச் சிங்கம்தான் என அறிந்து,  உரத்த குரலில் சப்தமிட்டது.


இந்த சப்தம் கேட்டு, காட்டிலுள்ள மற்ற மான்களும்,குரங்குகளும், சிங்கங்களும் அங்கு படையெடுத்தன.


முரட்டுச் சிங்கம் முதலையுடன் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்த மான்கள் எப்படியாவது அதைக் காப்பாற்ற வேண்டுமென சிங்கங்களிடம் கூறின. ஆனால், சிங்கங்கள் அது தங்களுக்கு இழைத்த கொடுமைக்கு சாகட்டும் என சொல்லி சென்றுவிட்டன. 


ஆனால், குரங்குகள் அந்தச் சிங்கங்கள் சொன்னதைக் கேட்காமல் அதன் மீது இரக்கம் காட்டி காப்பாற்ற ஒரு திட்டத்தைத் தீட்டி மான்களிடம் கூறின.


அத்திட்டத்தின்படி,இதுவும் நல்ல யோசனைதான் என அறிந்த குரங்குகள் மான்கள், மரத்திலிருந்து பிடுங்கிப் போட்ட கொடி ஒன்றை எடுத்துச் சென்று சிங்கம் விழுந்திருந்த குழியில் போட்டு, "ஏய்.... சிங்கமே நீ இதை உன் வாயால் கவ்விப் பிடித்துக் கொள். உன்னை மேலே நாங்கள் தூக்கி காப்பாற்றி விடுகிறோம்" எனக் கூறின.


அவ்வாறே, முரட்டுச் சிங்கமும் கொடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டு ஏறி பாதி குழி வரும் போது, கொடி அறுந்து மீண்டும் குழிக்குள் விழுந்துவிட்டது.இதை மரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த குரங்குகள் ஏராளமான கொடிகளைப் பிடுங்கி ஒன்றாகக் கயிறு போல் திரித்து கீழே போட்டன. மான்கள் அதை சுருட்டிக் கொண்டு போய் மீண்டும் குழிக்குள் போட்டன. முரட்டுச்சிங்கம் அந்தப் பலமான கொடியைப் பிடித்துக் கொண்டு தப்பித்தோம், பிழைத்தோம் என கூறிக் கொண்டு மேலே வந்து சேர்ந்தது.


தன்னை முதலையிடமிருந்து காப்பாற்றி உயிர் பிச்சை வழங்கிய குரங்கு களுக்கும், மான்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி கூறியது. நாம் நயவஞ்சமாகப் பழகி மான் இனத்தை வேட்டையாடிப் புசித்தும், தன்னைப் பழி வாங்காமல் காப்பாற்றிய செயல் கண்டு அவற்றிடம் மன்னிப்பு கேட்டது.


தன் உயிர் உள்ளவரை தன் பலத்தை வைத்துக் கொண்டு எல்லா உயிர்களுக்கும் தன்னாலான உதவி செய்வேனே ஒழிய, தொந்தரவு செய்யமாட்டேன் எனவும்,


 அன்றிலிருந்து தனக்கு ஏற்பட்ட துன்பம் ஒரு பாடம் எனக் கருதி மற்ற சிங்கங்களுடன் திருந்தி வாழவும் முடிவு செய்தது முரட்டு சிங்கம்.


இன்றைய செய்திகள் - 20.11.2023


*கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


*பொங்கலூரில் இயற்கை மருத்துவம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


*கிறிஸ்துவ வாரிசுரிமை சட்டத்தின்படி மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு கிடையாது  ஐகோர்ட்டு தீர்ப்பு.


*கன்னியாகுமரி: சூரிய உதயம் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம். கடல் சீற்றத்தால் படகு போக்குவரத்தும் நிறுத்தம்.


*உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: ஆஸ்திரேலியா- இந்தியா இடையேயான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று கோப்பையை வென்றது.


Today's Headlines


*Announcent regarding apply for   assistant post vacancies in co-operative societies.


 *Naturopathy awareness rally was held in Pongaloor.


 *According to the Christian Inheritance Act, the mother has no share in the son's property, the Highcourt gave  judgment.


 * Kanyakumari: Tourists disappointed not being able to see the sunrise.  Boat traffic also stopped due to rough seas.


 *Cricket World Cup 2023: Australia won the final against India and won the trophy.

 Prepared by


Covai women ICT_போதிமரம்



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

CTET - அறிவோம் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு!

 


60702_20231118161029

முக்கியத்துவம்

இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் வாயிலாக, கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு பள்ளிகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆசியராக பணிபுரியும் தகுதியை பெறலாம். மாநில அரசால் நடத்தப்படும் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சி.டி.இ.டி., அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்யலாம்.


தேர்வு விபரம்:


சி.டி.இ.டி., இரண்டு தாள்களை கொண்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான தொடக்கநிலை பிரிவுக்கு தாள் -1 எழுத வேண்டும். 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான பிரிவுக்கு தாள் -2 எழுத வேண்டும். இரண்டு பிரிவிலும் பணியாற்ற விரும்புபவர்கள் இரண்டு தாள்களையும் எழுத வேண்டும்.


கல்வித் தகுதி:


தாள் 1: குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், தொடக்கக் கல்வியில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். தற்போது இறுதி ஆண்டு படிப்பவர்களும் இத்தேர்வை எழுதலாம்.தாள் 2: தொடக்கக் கல்வியில் இரண்டாண்டு டிப்ளோமா படிப்புடன் ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எட்., இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.அல்லது 12ம் வகுப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, நான்கு ஆண்டு பி.ஏ.எட்., அல்லது பி.எஸ்சி.எட்., படிப்பை முடித்திருக்க வேண்டும். இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கும் முறை: 


ctet.nic.in எனும் அதிகாரப்பூரவ இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வுமுறை


தேர்வு இரண்டரை மணி நேரம் நடைபெறும். எம்.சி.கியூ., வகை கேள்விகளாக மொத்தம் 150 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் கேள்விகள் கேட்கப்படும். பொதுப் பிரிவை சேர்ந்தவர்கள் குறைந்தது, 60 சதவீத மதிப்பெண்களும், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்ளும் சி.டி.ஏ.டி தேர்வில் பெற வேண்டும். நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. சி.டி.இ.டி சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும், இத்தேர்வை எழுதலாம். தேர்வில் தகுதி பெற்றும் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதுபவர்களும் மீண்டும் தேர்வெழுதலாம்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 


நவம்பர் 23தேர்வு நாள்: ஜனவரி 21, 2024விபரங்களுக்கு: https://ctet.nic.in/


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

6 முதல் 12 ம் வகுப்பு வரை வகுப்புகளுக்கு பாடக்குறிப்பேடு கையினால் எழுதப்பட வேண்டுமா? அரசாணை இருக்கா? CM CELL Reply

 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை வகுப்புகளுக்கு பாடக்குறிப்பேடு கையினால் எழுதப்பட வேண்டும் என்பதற்கான அரசாணை ஏதும் உள்ளதா என்பதற்கான தகவல் தரவும் . அவ்வாறு அரசாணை ஏதும் இருப்பின் அதன் நகல் தருக...

CM CELL Reply ...👇

Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

11 நாள் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை?

 .com/

 6 - 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. +1, +2 வகுப்புக்கு டிச.22 வரையும், 6,7,8,9,10ம் வகுப்புக்கு டிச.21ம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது. 


இதன்பின் 6-10ம் வகுப்பு மாணவர்களுக்கு 11 நாட்களுக்கும், +1, +2 வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்களும் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஜனவரி 2ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

Ennum Ezhuthum - 4,5th Std - Term 2 - Module 6 Lesson Plan - T/M & E/M

 Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024

எண்ணும் எழுத்தும்- பாடக்குறிப்பு

நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்புகள்

 நவம்பர் நான்காம் வாரம்..


20.11.23 to 24.11.23

தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி


Ennum Ezhuthum - 4,5th Std -  Term 2 - Module 6 Lesson Plan - T/M & E/M 👇


Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024

Ennum Ezhuthum Empty Format - Download here

Term 2 Lesson Plan

November - 2023

4th week ( 20.11.2023 - 26.11.2023 )

Ennum Ezhuthum - 4,5th Std -  Term 2 - Module 6 Lesson Plan - T/M & E/M - Download here

3rd week ( 14.11.2023 - 19.11.2023 )

Ennum Ezhuthum - 1,2,3 Std -  Term 2 - Module 6 Lesson Plan - T/M / EM - Download here

Ennum Ezhuthum - 4,5th Std -  Term 2 - Module 5 Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4,5th Std -  Term 2 - Module 5 Lesson Plan - E/M - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

மாணவர்களுக்கு இளம் கவிஞர் விருது - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 பள்ளிக்கல்வி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சட்டமன்ற கூட்டத் தொடர் அறிவிப்பு எண் .110 இன்படி 2023-24 ஆம் ஆண்டிற்கான " இளம் கவிஞர் விருது " - கவிதைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல்- வருவாய் மாவட்ட அளவில் 23.11.2023 அன்று கவிதைப் போட்டிகள் நடத்தி , அதில் சிறந்த ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியை தெரிவு செய்து விவரம் அனுப்பி வைக்கக் கோருதல் - தொடர்பாக . பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

DSE - Young Poet Award Proceedings - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

6-12 வகுப்புகளுக்கு மாநில அளவிலான அரையாண்டு பொதுத் தேர்வு நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு - இணைப்பு: 6-12 தேர்வு அட்டவணை!

 

Assessment cell discussion meeting on forthcoming Half - yearly Examination was held on 08.11.2023 headed by State Project . Director . During the meeting , it was discussed that the assessment cell of SCERT will prepare questions for conduct Term - 2 Summative and Half - yearly examination for classes 6 to 12 in December 2023 , In addition to this , it is also discussed that the time table should be prepared for class 6 to 12 for Term 2 - Summative and Half - Yearly exam .


 In specific , the dates for the Half - Yearly exam for Class 11 and 12 will commence from December 07 to December 22 and similarly , from December 11 to December 21 for class 6 to 10 . In this milieu , the Summative / Half - Yearly Examination time table for Classes 6 to 10 and Higher Secondary ( Classes 11 and 12 ) have been prepared by SCERT and the same is enclosed herewith for information . Based on the discussion held , Assessment Cell , SCERT will prepare 2 sets of question papers from class 6 to 12 for Term -2 summative and Half- Yearly examination . In specific class 6 to 8 question papers for all medium will be uploaded in the portal for download on the previous day ( 2 pm ) for every exam.


 The SOP to conduct the descriptive exam has been prepared by Assessment Cell , SCERT and the same is enclosed herewith . In this regard , the Director , Directorate of School Education and Directorate of Elementary Education is requested to communicate the Proceedings regarding the Term - 2 summative and Half - Yearly exam to all the Districts as early as possible for the smooth conduct of Examination at field level .

 இணைப்பு: 6-12 தேர்வு அட்டவணை!

SPD - 1 To 12th Half-yearly Examination Time Table - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு வாரம் (நவம்பர் 18 முதல் 24 வரை)

 IMG_20231119_100714

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு வாரம் (நவம்பர் 18 முதல் 24 வரை)

Violence Against Children Week pdf - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

BT & PG பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

 பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு 27.11.2023க்கு ஒத்திவைப்பு...

Screenshot_2023-11-18-13-22-53-13_e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f(1)

பார்வையில் காணும் செயல்முறைகளில் 2023-24ம் கல்வியாண்டிற்கான 01.08.2023 நிலவரப்படி முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ( BT & PG Staff Fixation ) நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு , அதனடிப்படையில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட ( Surplus Post With Person ) முதுகலை / பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் வருகின்ற 20.11.2023 பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்காளல் Offline மூலமாக கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.


 இந்நிலையில் மேற்காண் 20.11.2023 அன்று நடைபெறவிருந்த பட்டதாரி 1 முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் ( BT & PG Deployment Counselling ) கலந்தாய்வு நிருவாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது . மேலும் இப்பணிநிரவல் கலந்தாய்வு வருகின்ற 27.11.2023 அன்று நடைபெறும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

BRTE - பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி மாறுதல் செய்து ஆணை வழங்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்களை பணி விடுவிப்பு செய்ய உத்தரவு.

 IMG_20231118_151706

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி மாறுதல் செய்து ஆணை வழங்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்களை பணி விடுவிப்பு செய்யக் கோருல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

 BRTE Reliving Circular - Download here



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

பொதுத் தேர்வில் ஆய்வக உதவியாளர்கள் தேர்வுப் பணிக்கு உட்படுத்தப்படுவார்கள் - முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு பள்ளிக் கல்வித் துறை பதில்!

 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆய்வக உதவியாளர்கள் தேர்வுப் பணிக்கு உட்படுத்தப்படுவார்கள் - முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு பள்ளிக் கல்வித் துறை பதில்!




🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News