School Morning Prayer Activities - 18.11.2023

 .com/

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.11.2023


 திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வாய்மை


குறள் :300


யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற.


விளக்கம்


வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.


பழமொழி :

Forgive and forget


மன்னிப்போம், மறப்போம்


இரண்டொழுக்க பண்புகள் :


1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.


2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்.


பொன்மொழி :


சொல்லும், செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழும் மனிதன். ஜவஹர்லால் நேரு 


பொது அறிவு :


1. இந்தியாவில் உள்ள மொத்த மாவட்டங்கள்?


விடை: 748 மாவட்டங்கள்


2. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மாவட்டம்?


விடை: கட்ச் மாவட்டம், குஜராத்


English words & meanings :


 Aisle -a passage between seats, noun. இடையில் அமைந்துள்ள பாதை. பெயர்சொல். isle -island. noun. தீவு. பெயர் சொல். both homonyms 


ஆரோக்ய வாழ்வு : 


தாமரைப் பூ : தாமரை பூவிதழ்களை போட்டு காய்ச்சி இறக்கி வைத்த பின் வரும் ஆவியை, பாதிக்கப்பட்ட கண்ணில் படும்படி காலை, மாலை இரு வேளைகளில் செய்து வந்தால், கண் குறைபாடுகள் நீங்கும்...


நவம்பர் 18 இன்று


வ. உ. சி அவர்களின் நினைவுநாள்


வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை[2](V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936)[3] ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.


நீதிக்கதை


 ஒரு ஆறு வயது சிறுவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான். ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மையை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து” எந்த பொம்மை வேண்டும் என்றான் . அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து அந்த பொம்மை என்ன விலை என்று கேட்டான். அதற்கு சிரித்துகொண்டே அந்த முதலாளி உன்னிடம் எவ்வளவு உள்ளது என்று கேட்டார் · அதற்கு அந்த சிறுவன் தான் விளையாட சேர்த்து வைத்து இருந்த அந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான். இது போதுமா என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே' எனக்கு நான்கு சிப்பிகள் போதும் என்று மீதியை கொடுத்தார். சிறுவன் மகிழ்ச்சியோடு மீதி உள்ள சிப்பிகளோடும், தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்துக்கொண்டு சென்றான். இதை எல்லாம் கவனித்துக்கொண்டு இருந்த அந்த கடையின் வேலையாள் முதலாளியிடம் "அய்யா ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு விலை உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டிர்களே அய்யா ", என்றான். அதற்கு அந்த முதலாளி அந்த சிறுவனுக்கு பணம் கொடுத்தால் தான் பொம்மை கிடைக்கும் என்று புரியாத வயது அவனுக்கு அந்த சிப்பிகள் தான் உயர்ந்தவை. நாம் பணம் கேட்டால் அவன் எண்ணத்தில் பணம் தான் உயர்ந்தது என்ற மாற்றம் வந்து விடும். அதை தடுத்து விட்டேன் மேலும் தன் தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கி தர முடியும் என்ற தன்னம்பிக்கையை அவனுக்குள் விதைத்து விட்டேன். என்றோ ஒரு நாள் அவன் பெரியவன் ஆகி இந்த சம்பவங்களை நினைத்து பார்க்கையில்


இந்த உலகம் நல்லவர்களால் ஆனது என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும். ஆகையால் அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவான். உலகம் அன்பினால் கட்டமைக்கபட வேண்டும் என்றார்


இன்றைய செய்திகள் - 18.11.2023


*சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு.


*சென்னையில் வேகமாக பரவும் "இன்ஃப்ளுயன்சா" காய்ச்சல்: ஓய்வு மற்றும் தனிமைப்படுத்துதல் அவசியம்.


*அனைத்து வகை கார்களையும் வாடகைக்கு பயன்படுத்த அனுமதி; போக்குவரத்து துறை அறிவிப்பு.


*அரசு மரியாதை கொடுப்பதால் உடல் உறுப்பு தானம் அதிகரிப்பு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்.


*"மிதிலி" புயல் எதிரொலி: தமிழகத்தில் 6 நாட்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு.


*தாய்லாந்தில் உலகத்திறன் விளையாட்டுப் போட்டி வீரர்களுக்கு காசோலை வழங்கினார் உதயநிதி.


Today's Headlines


*Second phase of polling completed in Chhattisgarh.


 *Rapid "influenza" fever in Chennai: rest and isolation necessary.

*Permission to use all types of cars on hire;  Notification of Transport Department.


 * Due to  the honour given by government there is steady raise  in body organ donation : Minister Ma.  Subramanian information.


 *"Mithili" storm reverberation: 6 days of heavy rain likely in Tamil Nadu.


 * Udhayanidhi presented a cheque to the athletes of World Skill Games in Thailand.

 

Prepared by

Covai women ICT_போதிமரம்



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 30 நாள்கள் ஆங்கில பயிற்சி - தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.

 

 RIESL Bangalore - 30 Days CELT Programme - 04.12.2023 முதல் 02.01.2024 வரை தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆங்கில ஆசிரியர்களின் விவரங்களை உடன் அனுப்பக் கோருதல் - சார்பாக . -  தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் - நாள்:09.11.2023

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

Ennum Ezhuthum - 1 To 5th - Term -3 State & District level Training & RPs List District wise

 


IMG_20231117_184452

எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ மாநில மற்றும் மாவட்ட அளவிலான பயிற்சி தேதி அறிவிப்பு  இயக்குநர் செயல்முறைகள்

இணைப்பு:- கருத்தாளர் பெயர் பட்டியல் பாடவாரியாக மாவட்ட வாரியாக

Ennum Ezhuthum Term -3 State & District level Training PProceedings - Download here


1 - 3rd RPs List - Download here


4 & 5th RPs List - Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

விருப்ப ஓய்வு (VRS) கொடுத்தால் ஓய்வூதியம் (Pension) மற்றும் Commutation எவ்வளவு கிடைக்கும்? - கணக்கீடு...

 30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் Full Pension கிடைக்கும். Full Pension என்பது கடைசி மாத ஊதியத்தில் Basic Pay, DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் Health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும்.

   உதாரணமாக 30ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் அடிப்படை ஊதியமும் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும். இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100 ஓய்வூதியம் (பென்ஷனாகக்) கிடைக்கும். (அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு அதை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100health allowanceஐக் கூட்ட வேண்டும். இது Commutation வேண்டாம் என்பவர்களுக்கு. Commutation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும். அதற்கான விவரம்:

முதலில் Commutation என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும். இது வட்டி இல்லாத கடனல்ல. வட்டி உண்டு.

    30ஆண்டுகளுக்கு  மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர் கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் (Basic Pay) பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூபாய் ஹெல்த் அலவன்ஸூம் சேர்ந்து பென்ஷனாகக்கிடைக்கும் என்று முந்தைய பதிவில் பார்த்தோம்.

    அதாவது (30ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெற்றவர்) பணியிலிருக்கும்போது 40000ரூபாய் அடிப்படை ஊதியம் வாங்கியிருந்தார் என்றால் ஓய்வு பெற்றபின் அவருடைய அடிப்படை ஊதியம் 20000ரூபாயாக ஆகிவிடும். இப்போது இவர் Commutation வேண்டும் எனறு விரும்புகிறார் எனில் இவருக்கு எவ்வளவு தொகை கமுட்டேஷனாகக் கிடைக்கும் என்று பார்ப்போம்.

    அடிப்படை ஊதியத்தில் மூன்றில் ஒரு பகுதியை கணக்கிட்டு அதை 120ஆல் பெருக்கி வரும் தொகையே கமுடேஷன் ஆகும் .பிடித்தம் செய்யும்போது 180 மாதங்களுக்குப் பிடிப்பார்கள்.

  ஓய்வு பெற்றபின் இவருடைய அடிப்படை ஊதியம் 20000ரூபாய். இதில் மூன்றில் ஒருபாகம் =20000÷3=6666.66 , இதை 6667 என்று எடுத்துக்கொன்டு 120ஆல் பெருக்க 6667×120=800040 (எட்டு லட்சத்து நாற்பது) ரூபாய் Commutation கிடைக்கும். பென்ஷன் தொகையில் ஒவ்வொரு மாதமும் ரூ.6667பிடித்தம் செய்வார்கள். இந்த பிடித்தம் 180 மாதங்களுக்குத் தொடரும்.(அதாவது6667ஐ 120ஆல் பெருக்கிக் கொடுத்துவிட்டு இதே 6667ஐ 180 மாதங்களுக்குப் பிடிப்பார்கள். அப்ப வட்டி என்பது6667×60=400020 ரூபாய் ஆகும். பதினைந்து ஆண்டுகள் என்று பார்க்கும்போது இது குறைந்த வட்டிதான்). இடையில் இவர் இறந்துவிட்டால் இந்தப் பிடித்தம் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும். இவர் மனைவிக்குக் கொடுக்கப்படும் பென்ஷனில் பிடித்தம் செய்யப்ப்பட மாட்டாது.


   (பென்ஷன் வாங்குபவர் இறந்துவிட்டால் அவர் வாங்கிய பென்ஷனில் பாதி அவர் மனைவிக்குப் பென்ஷனாகக் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.)


  30 ஆண்டு முடித்த 40000ரூபாய் அடிப்படை ஊதியம் 5000ரூபாய் DAவும் பெற்ற ஒருவர் கமுடேஷன் வேண்டாம் எனும்போது அவருக்கு 22600ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும் என்று பார்த்தோம். இவரே கமுட்டேஷனை விரும்புகிறார் என்றால் இவருக்கு 6667ஐக் கழிக்க 22600-6667=15933 ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.


   இவரே 24 வருடம் சர்வீஸ் செய்திருந்தால் இவருடைய கமுட்டேஷனைப் பார்ப்போம்.


   ஓய்வு பெற்றபின் இவருடைய பேசிக் 40000÷2×24÷30=16000 ஆகும். இதில் மூன்றிலொரு பாகம் 16000÷3=5333.33. இதை 5333என எடுத்துக்கொண்டு அதை120 ஆல் பெருக்க 


5333×120=639960ரூபாய் கமுட்டேஷனாகக் கிடைக்கும். கமுட்டேஷன் வாங்கியபின் இவருடைய பென்ஷன்


18100-5333=12767கிடைக்கும் (18100 எப்படி வந்ததென்பது தெரியும். தெரியவில்லையெனில் முந்தைய கமெண்ட்டில் பார்க்கவும்)


    நண்பர்களே மேற்கண்ட விவரங்களை வைத்து அவரவர் சர்வீஸ் செய்த ஆண்டுகள் மற்றும் அவரவர் பெற்ற பேசிக்கிற்குத் தகுந்தாற்போல் பென்ஷன் மற்றும் கமுடேஷனைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.


   பணியில் உள்ளவர்களுக்குத் தற்போது 46%DA வழங்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் கூடிக்கொண்டே வரும்.


   ஆகவே இதை ஒரு உதாரணமாகக் கணக்கில் கொள்ளவும்.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

அலுவலக மின் ஆளுமை (e-office) நடைமுறைப்படுத்துதல் - DSE செயல்முறைகள்!!!

 


  IMG_20231116_222817

அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலகங்களில் மின் ஆளுமை ( e - Office ) நடைமுறைப்படுத்தும் பொருட்டு முதன்மைக்கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலகங்களில் கோப்புகளை கையாளும் பணியாளர்களின் விவரங்கள் பார்வை -3 ல் காண் கடிதத்தின்படி பெற்றிட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக முதன்மைக்கல்வி அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி தங்கள் ஆளுகைக்குட்பட்ட உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கோப்புகளை கையாளும் தலைமை ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்களின் விவரங்களை கூடுதலாக சமர்பிக்க இயக்குநர் , தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் கோரப்பட்டுள்ளது.

அதன்படி இணைப்பில் கண்டுள்ள இரு படிவங்களில்பள்ளிகளில் பெற்று பூர்த்தி செய்து Excel Format -ல் F- பிரிவின் fsectioncose23@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு 20-11-2023 தேதிக்குள் அனுப்பிட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளளப்படுகிறார்கள் . படிவம் 1 - ல் நிரப்பபட்ட ( filed post ) தலைமை ஆசிரியர் , மற்றும் அலுவலக பணியாளர்களின் எண்ணிக்கைக்கு மாறாமல் படிவம் 2 - ல் உள்ள கலங்களுக்கு ஏற்ப தலைமை ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்களின் விவரங்கள் தவறாமல் பூர்த்தி செய்தல் வேண்டும் - தரவுகளில் தவறுகள் ஏற்படும் பட்சத்தில் சார்ந்த அலுவலரே பொறுப்பாவார் எனவும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

 இணைப்பு👇

 DSE - E-Office Proceedings - Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு 20.11.2023 அன்று பணிநிரவல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு 20.11.2023 அன்று பணிநிரவல்  கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

DSE - PG Deployment Proceedings - Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

போட்டோமேத் - கணிதத்தை இனிக்க வைக்கும் செயலி (PhotoMath - An app that makes math sweet)

 

தனித்தனியாகப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் எல்லாமே இன்று ஒற்றை திறன்பேசியில் கிடைத்துவிடுகின்றன. ஒளிப்படங்கள், காணொளிகள் பதிவுசெய்யவே திறன்பேசி கேமரா பயன்படுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் திறன்பேசியின் லென்ஸ் வசதியால் எழுத்துக்களைப் பிரதி எடுப்பது, மொழிபெயர்ப்பு செய்வது, கோப்புகளை ஆவணப்படுத்துவது போன்ற வேலைகளும் எளிதாகின. இப்போது கேமராவைப் பயன்படுத்தி கணிதச் சமன்பாடுகளைக்கூடத் தீர்க்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? ‘போட்டோமேத்’ (PhotoMath) செயலி மூலம் இது சாத்தியமாகியிருக்கிறது!


கூகுள் தயாரிப்பு: கணிதம் மாணவர்களுக்கு பாகற்காய் போல கசக்கும் என்பது பொதுவான மனநிலை. அடுக்கடுக்கான கணக்குகளைப் பார்த்து மலைத்துப் போவோர் உண்டு. ஆனால், கணிதக் கற்றலை எளிமையாக்கி இருக்கிறது ‘போட்டோமேத்’ செயலி. குரோஷியாவில் உருவாக்கப்பட்ட இந்தச் செயலியின் சிறப்பம்சத்தைப் பார்த்த கூகுள் நிறுவனம், கடந்த 2022இல் விலைக்கு வாங்கியது. ‘போட்டோமேத்’ செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிளின் ஆப் ஸ்டோர் தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இந்தச் செயலியைப் பயன்படுத்தக் கட்டணம் தேவையில்லை.


அடிப்படைக் கணிதக் கணக்குகள் முதல் வடிவியல், இயற்கணிதம், கால்குலஸ் வரை பல கணக்கு முறைகளையும் ‘போட்டோமேத்’ செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம். செயலியின் கேமராவில் கணிதக் கேள்வியைப் படம் பிடித்து பதில் கேட்டால், நொடிப்பொழுதில் விடைகளைத் தருகிறது ‘போட்டோ மேத்.’ ஒரு கணக்கின் முதல் பகுதியில் தொடங்கி படிப்படியாக விளக்கி, இறுதியில் விடை தருவதால், மாணவர்கள் எளிதாகக் கணக்கைப் புரிந்துகொள்ள முடியும். கணிதப் பாடத்தில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள், ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் ‘போட்டோமேத்’, கணக்குப் பாடம் படிப்பதற்கென அதிக பயனர்களால் பயன்படுத்தப்படும் செயலியாகவும் இருக்கிறது. உலக அளவில் சுமார் 10 கோடிக்கும் அதிகமானோர் இச்செயலி வழியே கணிதம் பழகுகின்றனர்.


குறிப்பு எடுக்கலாம்: கற்றுக்கொள்ள மட்டுமல்ல, கற்பிக்கவும் ‘போட்டோமேத்’ பயன்படுகிறது. ஆசிரியர்கள், பெற்றோர்களும் திறன்பேசி வாயிலாக பிள்ளைகளுக்குக் கணிதப் பாடத்தைக் கற்றுத் தர முடியும். கணிதக் கணக்குகளை கேமராவில் படம் பிடித்து பதில் கேட்கலாம் அல்லது ‘போட்டோ மேத்’ செயலியில் கொடுக்கப்பட்டுள்ள கால்குலேட்டர் வசதியைப் பயன்படுத்தலாம். கணக்குகளை அதில் பதிவிடுவதன் மூலம் ‘போட்டோமேத்’ அதற்கான பதில்களைத் தரும். செயலியில் பதிவுசெய்யப்படும் கணக்குகளை ‘புக்மார்க்’ வசதி மூலம் சேமித்துக்கொள்ளலாம்.


தேவையிருப்பின் சேமித்து வைத்த கணக்குகளை மீண்டும் பார்த்து கற்றுக்கொள்ள முடியும். கணக்கு முறைகளைப் புரிந்துகொண்டு படித்தால் கணிதம் எளிது. ‘போட்டோமேத்’ செயலியைப் பயன்படுத்தி சந்தேகங்களை விளக்கிப் புரிந்துகொள்ளலாமே தவிர, வீட்டுப் பாடம் முடிக்க அல்லது ‘காப்பி’ அடிப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். இது தவிர, கூடுதலாக காணொளி வழி விளக்கங்களுக்கும், கணிதம் தொடர்பான புத்தகங்களைப் படிக்கவும் ‘போட்டோமேத் பிளஸ்’ வசதியைப் பயன்படுத்தலாம். இதற்கு பயனர்கள் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். எனினும் பெரும்பாலான பாடங்கள் அடிப்படை ‘போட்டோமேத்’ செயலி யிலேயே கிடைப்பதால் கணிதப் பிரியர்களின் முதல் தேர்வாக இருக்கிறது இச்செயலி.

>>> PhotoMath செயலியை Install செய்ய இங்கே சொடுக்கவும்...


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை அளிப்பதில் 7 வகையான விதிமுறைகளை பின்பற்ற பள்ளிக்கல்விதத்துறை முதன்மைச்செயலாளர் உத்தரவு

 


IMG_20231117_095227

பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை அளிப்பதில் 7 வகையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என  அறிவுறுத்தி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.


இது குறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றிக்கையில், “அதி கனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், “லேசான மழையோ, தூரலோ இருந்தால் விடுமுறை அறிவிக்க கூடாது” என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, விடுமுறை குறித்த முடிவை பள்ளி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும்” எனவும் கூறப்பட்டுள்ளது.


இதுமட்டுமின்றி, மாவட்டம் முழுவதுமான மழை நிலவரம், பாதிப்புகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும் எனவும், மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்க கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.


மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நாள்களை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை போன்ற நாள்களில் வகுப்புகளை நடத்த வேண்டும்.


விடுமுறை காரணமாக எந்தப் பாடங்களும் விடுபடாமல் மாணவர்களுக்கு முழுமையாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.


மாணவர்கள் பாதுகாப்பு: பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி இருந்தல் கூடாது. அவ்வாறு தேங்கியிருந்தால், அவற்றை அப்புறப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன்பின்னர்தான் பள்ளிகள் செயல்பட வேண்டும்” எனவும் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

School Morning Prayer Activities - 17.11.2023

 .com/

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.11.2023


திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வாய்மை

குறள் :299


எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.


விளக்கம்:


உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.


பழமொழி :

Familiarity breeds contempt


பழக பழக பாலும் புளிக்கும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.


2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்.


பொன்மொழி :


ஆண்டவனிடம் நம்பிக்கை இல்லாவிட்டால், நாம் சொந்த வாழ்விலும் சரி, நமது சமுதாய வாழ்விலும் சரி, நாம் முன்னேற மாட்டோம். ஜவஹர்லால் நேரு


பொது அறிவு :


1. கைவிளக்கு ஏந்திய காரிகை என்று அழைக்கப்பட்டவர்?


விடை: பிளாரன்ஸ் நைட்டிங்கேல்


2. உலகில் மிக அதிகமாக விளையும் காய்கறி எது?

விடை: உருளைக்கிழங்கு


English words & meanings :


 tentacles –soft long leg like structure in sea animals like octobus. சிலவகைக் கடல் விலங்குகளில் காணப்படும் கால்கள் போன்ற நீண்டு மெலிதான மென் பகுதிகளில் ஒன்று; உணர்ச்சிக்கொடுக்கு; பற்றிழை.


ஆரோக்ய வாழ்வு : 


தாமரைப் பூ : தாமரைப் பூவை, நிழலில் உலர்த்தி, பொடியாக்கி, பனை வெல்லத்துடன் கலந்து பாகுபோல் காய்ச்சி சாப்பிட்டு வந்தால் ,இருமல் ,சுவாசக் கோளாறு நீங்கும்.


நவம்பர் 17 இன்று


லாலா லஜபதி ராய்  அவர்களின் நினைவுநாள்


லாலா லஜபதி ராய் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர். 'லாலா லஜபத் ராய்' பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் "லட்சுமி காப்புறுதி கம்பெனி" ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்


நீதிக்கதை


 முன்னொரு காலத்தில் குரங்கு ஒன்று இருந்தது. அதற்கு செர்ரிப் பழங்கள் என்றால் உயிர்- ஒரு நாள் அது அழகான செர்ரிப் பழத்தைக் கண்டது. உடனே 'மரத்தை விட்டிறங்கி எடுத்துப் பார்த்தால், அது ஒரு சிறிய கண்ணாடிக் குவளை, அதற்குள் செர்ரிப் பழம்! குரங்கு குவளைக்குள் கையை விட்டது... பழத்தை இறுகப் பற்றிக் கொண்டது... ஆனால், மூடிய கை வெளியே வரவில்லை. உள்ளே போகும் போது... நேராகப் போன கை பழத்தை பற்றிக் கொண்டதும் வடிவம் பெரியதாகவே... வெளியில் கொண்டு வர முடியவில்லை... குரங்கைப் பிடிக்க வேடன் வைத்த பொறி... குரங்கு எப்படிச் சிந்திக்கும் என்பதை அறிந்திருந்தான்.   அங்கு குரங்கு போராடுவதைக் கண்டு அங்கே வந்தான். குரங்கு ஓடப் பார்த்தது. கை குவளையில் சிக்கிக் கொண்டதால், வேகமாக ஓடித் தப்பவும் முடியவில்லை. ஓர் ஆறுதல்! பழம் தன் கைப்பிடிக்குள் தான் இருக்கிறது என்ற ஆறுதல் அதற்கு. வேடன் குரங்கைத் தாவிப் பிடித்தான், அதன் கையின் மேல் சட்டென ஒரு தட்டுத் தட்டினான்... அதிர்ச்சியில் அது பழத்தை விட்டு விட்டது. கை வெளியில் வந்து விட்டது என்றாலும் அது வேடன் பிடியில் சிக்கியிருந்தது. வேடனுடைய கண்ணாடிக் குவளையும், பழமும் சேதமாகாமல் அப்படியே இருந்தன.  "நாம் வேண்டாத ஆசையில், கையை நுழைத்து...குரங்கைப்போல அகப்பட்டு விடுகிறோம்...


இன்றைய செய்திகள் - 17.11.2023


*தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் 18ம் தேதி கூடுகிறது.


* சந்திரயான் - 3 விண்கலத்தின் ராக்கெட் பாகம் கடலில் விழுந்தது: இஸ்ரோ அறிவிப்பு.

* அமெரிக்காவில் வசிப்பவர் ஆரோன் பார்த்தலோமி. இவர் பென்சில் சேகரிப்பில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.


* மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் நாளை வாக்குப்பதிவு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.


வாட்ஸ் அப் சாட் : ஹிஸ்டரி பேக்கப் தகவல்கள் அனைத்தும் கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் கட்டுப்பாடு விதிகளின் கீழ் வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


*ரோஹித் சர்மா இந்தியாவின் ரியல் ஹீரோ நசீர் ஹுசைன் புகழாரம்.


Today's Headlines


*The special session of the Tamilnadu Assembly will be held on the 18th.


 * Chandrayaan-3 rocket part has fallen into sea: ISRO statement

 * Aaron Bartholomew is a US resident.  He holds the Guinness record for pencil collection.


 * Security arrangements are intense for the  tomorrow's polling in Madhya Pradesh and Chhattisgarh .


 *Whats Up Chat*: It is informed that all the history backup information will come under Google Cloud Storage restrictions' terms and conditions.


 *Rohit Sharma is India's real hero:  praises  Naseer Hussain.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

EE - FA ( B ) அனைத்து வளரறி மதிப்பீடுகளும் மேற்கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

 

IMG-20231116-WA0014

எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 5 வரை - FA ( B ) அனைத்து வளரறி மதிப்பீடுகளும் மேற்கொள்வதற்கான கால அவகாசம் 08.12.2023 வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    - TN EE MISSION

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் பெறலாம் - தேர்வுத்துறை

 கடந்த ஜூன் , ஜூலை மாதங்களில் நடைபெற்ற தொடக் கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வெழுதிய பயிற்சி மாணவர்கள் , தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வியாழக்கிழமை முதல் விநியோகிக்கப்படும். பயிற்சி மாணவர்கள் தாங்கள் பயின்ற நிறுவனத்திலும் , தனித்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனத்திலும் மதிப் பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

EMIS விவரங்களின் அடிப்படையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்க உத்தரவு.

 

IMG_20231116_140205

EMIS விவரங்களின் அடிப்படையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் - DGE செயல்முறைகள்!

 10th & +1 NR Preparation Proceedings - Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

சத்துணவு தினசரி அறிக்கை - SMS செய்தியினை காலை 11 மணிக்குள் அனுப்ப ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அளவினை உறுதி செய்திட தானியங்கி கண்காணிப்பு அமைப்பு ( Automated Monitoring System ) என்ற AMS அமைப்பு உருவாக்கப்பட்டு . இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் அல்லது நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் SMS மூலம் சார்ந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு செய்தி தினந்தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.


 சமூக நலத்துறை ஆணையரின் நேர்முகக் கடிதத்தில் , மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்யும் போது , பல பள்ளிகளில் AMS அமைப்பு மூலம் சத்துணவு தினசரி அறிக்கை தலைமையாசிரியர்களால் குறுஞ்செய்தி ( SMS ) மூலம் மாவட்ட சமூக நலத்துறைக்கு பெறப்படவில்லை என தெரிவித்துள்ளார். எனவே அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் இதில் கூடுதல் கவனம் செலுத்தி AMS அமைப்பு மூலம் சத்துணவு தினசரி அறிக்கை SMS செய்தியினை காலை 11 மணிக்குள் சார்ந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு அனுப்பி வைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் மாணவர்களின் திட்டத்துக்கு ரூ.1 லட்சம் பரிசு

 


 

அரசு அலுவலகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் மாணவர்களின் சிறந்த 10 திட்டங்களுக்கு (ப்ராஜக்ட்) தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநர் உமா சங்கர் தெரிவித்தார்.


தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் ‘நான் முதல்வன் நிரல் திருவிழா’ பயிற்சி பட்டறை கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.


கூட்டத்துக்கு தலைமை வகித்து உமாசங்கர் பேசியதாவது: "மாணவர்களிடையே ஒளிந்திருக்கும் திறன்களை வெளிக்கொண்டு வந்து அவர்களை தொழில் நுட்ப ரீதியாக மேம்படுத்தவும், புதிய வேலை வாய்ப்பு மற்றும் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கத்திலும் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.


‘நிரல் திருவிழா’ என்பது உள்ளூர் தேவைகளுக்கேற்ப தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி புத்தாக்க சிந்தனையின் மூலம் மாணவர்கள் புதிய பொருட்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதாகும். இதற்காக ‘நிரல் திருவிழா - நான் முதல்வன்’ என்ற பெயரில் பிரத்யேக வலைதளம் உருவாக்கப் பட்டுள்ளது.


இதில் அரசு மற்றும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பதிவேற்றலாம். ஒவ்வொரு துறையும் அரசு குறிப்பிட்ட 10 தலைப்புகளில் தொழில் நுட்ப பிரச்சினைகள் குறித்து பதிவேற்ற வேண்டும். வலைதளத்தில் குறிப்பிடப்படும் தரவுகள் மாணவ சமூகத்தினரிடையே புதுமையான சிந்தனைகள் மற்றும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும்.


இப்புத்தாக்க பயிற்சி பட்டறையில் உயர்கல்வி மாணவர்கள் நடப்பாண்டில் புதிய கண்டுபிடிப்பு செய்வதற்கு தேவையான ‘புத்தாக்க தேவைகள், பிரச்சினைகளை கண்டறிதல்’ என்பதற்கான பயிற்சி மற்றும் செயலாக்கம் நடைபெறும். இந்த பயிற்சியை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.


அரசு அலுவலகத்தில் சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள், தொழில் நிறுவனங்களில் தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகள் குறித்து பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இறுதி ஆண்டு ‘ப்ராஜக்டாக’ கொடுக்க அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அளவில் சிறந்த 40 குழுக்களின் ‘ப்ராஜக்ட்’ தேர்வு செய்யப்பட்டு, முதல் 10 ப்ராஜக்ட்-களுக்கு தலா ரூ.1 லட்சம், 30 ப்ராஜக்ட்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அரசால் வழங்கப்படும்.


‘புத்தாக்க பிரச்சினைகள் தேவைகள்’ குறித்து தாங்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் உயர்கல்வி மாணவர்கள் நடப்பாண்டில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் புத்தாக்க கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

Guidelines for Examination Centres of AMP NTS 2023.

 IMG_20231116_112323

The following guidelines are issued and should be necessarily followed by all NTS Examination centres


Guidelines for Examination Centres of AMP NTS 2023 - Download here



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

CRC - 9 மற்றும் 10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான நவம்பர் மாத பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி - Proceedings

 IMG_20231116_113322

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின் படி ஆசிரியர்களுக்கு பல்வேறு தொடர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் ( Teacher Professional Development ) 2023-24 ஆம் கல்வியாண்டில் நடத்தப்பட்டுவருகிறது.


இதன் ஒரு பகுதியாக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தி வரப்படும் நவம்பர் -2023 ஆம் மாதத்திற்கான ( CRC ) பயிற்சி வருகின்ற 28.11.2023 முதல் 30.112023 வரை 9 மற்றும் 10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ் , ஆங்கிலம் , கணிதம் , அறிவியல் , சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு கற்றல் விளைவுகள் சார்ந்து கீழ்குறிப்பிட்டுள்ள தேதிகளில் வட்டார அளவில் பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


DPT Training - CEO Proceedings - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News