ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் பெறலாம் - தேர்வுத்துறை

 கடந்த ஜூன் , ஜூலை மாதங்களில் நடைபெற்ற தொடக் கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வெழுதிய பயிற்சி மாணவர்கள் , தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வியாழக்கிழமை முதல் விநியோகிக்கப்படும். பயிற்சி மாணவர்கள் தாங்கள் பயின்ற நிறுவனத்திலும் , தனித்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனத்திலும் மதிப் பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

EMIS விவரங்களின் அடிப்படையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்க உத்தரவு.

 

IMG_20231116_140205

EMIS விவரங்களின் அடிப்படையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் - DGE செயல்முறைகள்!

 10th & +1 NR Preparation Proceedings - Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

சத்துணவு தினசரி அறிக்கை - SMS செய்தியினை காலை 11 மணிக்குள் அனுப்ப ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அளவினை உறுதி செய்திட தானியங்கி கண்காணிப்பு அமைப்பு ( Automated Monitoring System ) என்ற AMS அமைப்பு உருவாக்கப்பட்டு . இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் அல்லது நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் SMS மூலம் சார்ந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு செய்தி தினந்தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.


 சமூக நலத்துறை ஆணையரின் நேர்முகக் கடிதத்தில் , மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்யும் போது , பல பள்ளிகளில் AMS அமைப்பு மூலம் சத்துணவு தினசரி அறிக்கை தலைமையாசிரியர்களால் குறுஞ்செய்தி ( SMS ) மூலம் மாவட்ட சமூக நலத்துறைக்கு பெறப்படவில்லை என தெரிவித்துள்ளார். எனவே அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் இதில் கூடுதல் கவனம் செலுத்தி AMS அமைப்பு மூலம் சத்துணவு தினசரி அறிக்கை SMS செய்தியினை காலை 11 மணிக்குள் சார்ந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு அனுப்பி வைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் மாணவர்களின் திட்டத்துக்கு ரூ.1 லட்சம் பரிசு

 


 

அரசு அலுவலகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் மாணவர்களின் சிறந்த 10 திட்டங்களுக்கு (ப்ராஜக்ட்) தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநர் உமா சங்கர் தெரிவித்தார்.


தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் ‘நான் முதல்வன் நிரல் திருவிழா’ பயிற்சி பட்டறை கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.


கூட்டத்துக்கு தலைமை வகித்து உமாசங்கர் பேசியதாவது: "மாணவர்களிடையே ஒளிந்திருக்கும் திறன்களை வெளிக்கொண்டு வந்து அவர்களை தொழில் நுட்ப ரீதியாக மேம்படுத்தவும், புதிய வேலை வாய்ப்பு மற்றும் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கத்திலும் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.


‘நிரல் திருவிழா’ என்பது உள்ளூர் தேவைகளுக்கேற்ப தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி புத்தாக்க சிந்தனையின் மூலம் மாணவர்கள் புதிய பொருட்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதாகும். இதற்காக ‘நிரல் திருவிழா - நான் முதல்வன்’ என்ற பெயரில் பிரத்யேக வலைதளம் உருவாக்கப் பட்டுள்ளது.


இதில் அரசு மற்றும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பதிவேற்றலாம். ஒவ்வொரு துறையும் அரசு குறிப்பிட்ட 10 தலைப்புகளில் தொழில் நுட்ப பிரச்சினைகள் குறித்து பதிவேற்ற வேண்டும். வலைதளத்தில் குறிப்பிடப்படும் தரவுகள் மாணவ சமூகத்தினரிடையே புதுமையான சிந்தனைகள் மற்றும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும்.


இப்புத்தாக்க பயிற்சி பட்டறையில் உயர்கல்வி மாணவர்கள் நடப்பாண்டில் புதிய கண்டுபிடிப்பு செய்வதற்கு தேவையான ‘புத்தாக்க தேவைகள், பிரச்சினைகளை கண்டறிதல்’ என்பதற்கான பயிற்சி மற்றும் செயலாக்கம் நடைபெறும். இந்த பயிற்சியை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.


அரசு அலுவலகத்தில் சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள், தொழில் நிறுவனங்களில் தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகள் குறித்து பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இறுதி ஆண்டு ‘ப்ராஜக்டாக’ கொடுக்க அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அளவில் சிறந்த 40 குழுக்களின் ‘ப்ராஜக்ட்’ தேர்வு செய்யப்பட்டு, முதல் 10 ப்ராஜக்ட்-களுக்கு தலா ரூ.1 லட்சம், 30 ப்ராஜக்ட்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அரசால் வழங்கப்படும்.


‘புத்தாக்க பிரச்சினைகள் தேவைகள்’ குறித்து தாங்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் உயர்கல்வி மாணவர்கள் நடப்பாண்டில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் புத்தாக்க கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

Guidelines for Examination Centres of AMP NTS 2023.

 IMG_20231116_112323

The following guidelines are issued and should be necessarily followed by all NTS Examination centres


Guidelines for Examination Centres of AMP NTS 2023 - Download here



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

CRC - 9 மற்றும் 10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான நவம்பர் மாத பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி - Proceedings

 IMG_20231116_113322

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின் படி ஆசிரியர்களுக்கு பல்வேறு தொடர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் ( Teacher Professional Development ) 2023-24 ஆம் கல்வியாண்டில் நடத்தப்பட்டுவருகிறது.


இதன் ஒரு பகுதியாக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தி வரப்படும் நவம்பர் -2023 ஆம் மாதத்திற்கான ( CRC ) பயிற்சி வருகின்ற 28.11.2023 முதல் 30.112023 வரை 9 மற்றும் 10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ் , ஆங்கிலம் , கணிதம் , அறிவியல் , சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு கற்றல் விளைவுகள் சார்ந்து கீழ்குறிப்பிட்டுள்ள தேதிகளில் வட்டார அளவில் பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


DPT Training - CEO Proceedings - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

11th Public Exam Time Table 2024 Download

10th Public Exam Time Table 2024 Download

12th Public Exam Time Table 2024 Download

 12th Public Exam Time Table 2024 Download

12th, 11th, 10th Public Exam 2024 | Combined Time Table - PDF Download Here

 




அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 நடப்புக் கல்வியாண்டில் ( 2023-24 ) 01.08.2023 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் ( BT Staff Fixation ) செய்யப்பட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து விவரங்கள் பெறப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட ( Surplus Post With Person ) பட்டதாரி ஆசிரியர்களை அந்தந்த மாவட்டத்திற்குள் உள்ள நிரப்பத்தகுந்த காலிப்பணியிடம் / / கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் ( BT Deployment Counselling ) மூலம் வருகின்ற 20.11.2023 அன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கு ( Off line : Counselling ) சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரால் கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி நடத்தி முடிக்கப்படவேண்டும்.


DSE - BT Deployment Counselling Instructions 👇

 Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 


10,11,12th Public Examination 2023 - 2024 | Time Table & Result Date Announced

10,11,12th Public Examination 2023 - 2024 | Time Table


10th Time Table - Download here


11th Time Table - Download here


12th Time Table - Download here


தேர்வு முடிவுகள்


12ஆம் வகுப்புக்கு மே 6ஆம் தேதியும், 11ஆம் வகுப்புக்கு மே 14ஆம் தேதியும், 10ஆம் வகுப்புக்கு மே 10ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்களவைத் தேர்தல், நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளை கருத்தில் கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனைக்கு பிறகு பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

IMG_20231116_094059_wm

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.

பத்தாம் வகுப்பு

WhatsApp%20Image%202023-11-16%20at%2009.45.56

* பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்குகிறது.

* பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 26 இல் தொடங்கி ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெறும்.

பதினோராம் வகுப்பு

WhatsApp%20Image%202023-11-16%20at%2009.46.42

* பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது .

* பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 4ஆம் தேதி தொடங்குகிறது.

12 ஆம் வகுப்பு

WhatsApp%20Image%202023-11-16%20at%2009.43.55

* 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 17 வரை நடைபெறும் .

* 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெறும் 

என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பின் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தற்போது அறிவித்துள்ளார். 


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

School Morning Prayer Activities - 16.11.2023

.com/

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.11.2023


 திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வாய்மை

குறள் :298


புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்


விளக்கம்:


புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.


பழமொழி :

Faith is the force of life


நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி.


இரண்டொழுக்க பண்புகள் :


1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.


2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்.


பொன்மொழி :


உண்மையான நம்பிக்கை மட்டும் ஒருவனுக்கு இருக்குமாயின், அந்த நம்பிக்கை மலைகளைக்கூட அசைத்து விடும். ஜவஹர்லால் நேரு 


பொது அறிவு :


1. ஈராக் நாட்டின் தலைநகரம்?


விடை:பாக்தாக்


2. தமிழ்நாட்டின் இரசூல் கம்சதோவ் என்று பாராட்ட பெறுவர் யார்?

விடை:  பாரதிதாசன்


English words & meanings :


 whisker -a projectiing hair or britsle from the face or snout of many mammals.(விஸ்கர்ஸ்). withdraw-remove or take away (something) from a particular place or position திரும்பப் பெறுங்கள்.


ஆரோக்ய வாழ்வு : 


தாமரைப் பூ : கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்ற கண் நோய்களுக்கு, தாமரைப்பூவின் இதழ்கள் பயன்படுகின்றன....


நவம்பர் 16 இன்று


உலக சகிப்புத் தன்மை நாள்


உலக சகிப்புத் தன்மை நாள் (International Day for Tolerance) என்பது மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காகவும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல் 1995 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்டது.


நீதிக்கதை


 தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர்


ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன் றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டி யது. வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது. பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச் சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார். பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர். அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது. பைத்திய க்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என் று ஆத்திரத்துடன் கேட்டார். அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டு ம் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறது. அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்து செய்து பிச்சைக் காரனை விடுவித்தான்.


நீதி : தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால்,சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள


முடியாமல் போய் விடும்.


இன்றைய செய்திகள் - 16.11.2023


*தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு.


*தமிழகம், புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.


* 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


*சச்சின் டெண்டுல்கரின் இரண்டு சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி.


*  உலக்கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதிப் போட்டி நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் இந்திய அணி  70  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.


Today's Headlines


*Chance of rain with thunder and lightning in Tamil Nadu.


 * No. 1 storm warning flag hoisted out of 9 ports in Puducherry and Tamil Nadu.


 * It is expected that the public examination table for class 10, 11 and 12 will be released today.


 *Virat Kohli broke two records of Sachin Tendulkar.


 * In the Cricket  world cup semi finals between New Zealand & India , team India  won by 70 runs  and qualified for the final.

 Prepared by


Covai women ICT_போதிமரம்


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

TNPSC Group IV போட்டித் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது - செய்தி அறிக்கை!

 

TNPSC Group IV போட்டித் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு அரசு 13.11.2023 முதல் தொடங்கியுள்ளது!


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள தொகுதி IV Group IV ) க்கான தகுதித் தேர்வுகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது....

Screenshot_20231115_184644


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வௌயீடு!!!

 

1500x900_1981949-student

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதி குறித்து அறிவிக்கப்படாமல் உள்ளது.


10,11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியிடப்படும் என தகவவல் வெளியாகியுள்ளது.


ஒரு சில நாட்களில் 10,11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகும் என அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.


இந்நிலையில், பொதுத்தேர்வுக்கான அட்டவணை நாளை காலை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

TRB - கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.

 பள்ளிக் கல்வி இயக்கத்திற்கு 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் 2222 பட்டதாரி ஆசிரியர் / வட்டாரவள மைய பயிற்றுநர் தெரிவிற்கான அறிவிக்கை 03 / 2023 நாள் : 25.10.2023 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

IMG-20231115-WA0017

இதனை தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்ககம் , தொடக்ககல்வி இயக்ககம் மற்றும் இணையதளத்தில் சென்னை மாநகராட்சி ஆகியவற்றில் நிரப்பப்படவேண்டிய 360 பணியிடங்களுக்கான  கூடுதல் காலிப்பணியிட விவரங்கள் வெளியிடப்படுகிறது.

 அறிவிக்கை எண் 3 A 2023 )👇

 Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

 

2023-2024 ஆம் ஆண்டு 23 வதுஅஞ்சல்வழி / பகுதிநேர ( மாறுதலுக்கு உட்பட்டது ) கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

IMG_20231115_102450

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ., தேர்வுக்கான பயிற்சி - பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிக்கை

 


.com/

தமிழக பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மொத்தம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 225 மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ., தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது.நீட் தேர்வு எழுத, 46,216 பேரும், ஜே.இ.இ., தேர்வுக்கு, 29,279 பேரும், இரு தேர்வுகளையும் எழுத 31,730 மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் எனக்கூறப்பட்டு உள்ளது.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

Guidelines to be followed while declaration of Holidays for schools on account of rain - Principal Secretary School Education Department letter to all District Collectors - Year 2018

 மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் - அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் கடிதம் - ஆண்டு 2018 Letter No.30354 / SE5(2)/ 2018-1, Dated: 28-11-2018  - 


>>> பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் கடிதம் - Letter No.30354 / SE5(2)/ 2018-1, Dated: 28-11-2018 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

Download here...


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

சிறார் திரைப்படம் மன்றப் பதிவேடு - மாதிரி

 


IMG_20231115_071819

சிறார் திரைப்படம் மன்றப் பதிவேடு - மாதிரி ( Children Films Forum Register - Model

திரைப்பட மன்றம் பதிவேடு மாதிரி- Empty Form👇

Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News