School Morning Prayer Activities - 15.11.2023

 ம்பர் 15 இன்று


கிஜூபாய் பதேக்கா அவர்களின் பிறந்தநாள்


கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை[1] அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923 – ல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை [2] நிறுவினார். “ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.


சானியா மிர்சா அவர்களின் பிறந்தநாள்


சானியா மிர்சா (Sania Mirza ˈˈsaːnɪja ˈmɪrza; பிறப்பு 15 நவம்பர் 1986) ஓர் முன்னாள் இந்திய தொழில்முறை டென்னிசு வீராங்கனை ஆவார். இரட்டையர் பிரிவில் உலக அளவில் முதல் இடம் பிடித்திருந்தார். ஆறுமுறை பெருவெற்றித் தொடர் பட்டம் பெற்றுள்ளார். மூன்று முறை பெண் இரட்டையர் பிரிவிலும் மூன்று முறை கலப்பு இரட்டையர் பிரிவிலும் பட்டம் பெற்றுள்ளார்.[3][4] மகளிர் டென்னிசு சங்க தகவலின்படி 2003 ஆம் ஆண்டிலிருந்து ஓய்வு பெரும் வரை இந்திய ஒற்றையர் பிரிவு தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார்


நீதிக்கதை


 ஒரு அடர்ந்த காட்டில் இரண்டு தூக்கணாங்குருவிகள் மரத்தின் மீது ஒரு கூடு கட்டி வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே சென்றிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது. சிறிது நேரத்திற்குள் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, 'குருவி அக்கா எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே... தயவுசெய்து வெளியே போய்விடு" என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது. 'போடி போ... உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டு போகமாட்டேன்” என்று குருவி மறுத்துவிட்டது. தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து 'அப்படிப்போடு... அப்படிப்போடு” என்று ஜாலியாக பாடி கொண்டிருந்தது. திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது. முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, பிறகு தலை, கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து அடைத்து பூசிவிட்டு பறந்து போயின. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி... என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.


இன்றைய செய்திகள் - 15.11.2023


*குடிநீர் வளங்கள் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பாக புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு.


* தொடர் மழை எதிரொலி சென்னையில் இருந்து நேற்று புறப்பட வேண்டிய இரண்டு விமானங்கள் ரத்து.


*கனமழை எச்சரிக்கை: பேரிடர்களை தவிர்க்க உஷாராக இருக்குமாறு 27 மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு.


*இலங்கையில் 6.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.


*சென்னை - நெல்லை "வந்தே பாரத்" சிறப்பு ரயில் வியாழக்கிழமை தோறும் இயக்கப்படும். 


*இறுதிப் போட்டிக்கு நுழைவது யார்? இந்தியா - நியூசிலாந்து இடையே இன்று பலப்பரீட்சை.


Today's Headlines


*Notification of telephone numbers to lodge complaints regarding drinking water resources waste water disposal.


 * Two flights scheduled to depart yesterday from Chennai were canceled due to continuous rain.


 *Heavy rain warning: Collectors of 27 districts have been instructed to be vigilant to avoid disaster.


 * A powerful earthquake of 6.2 Richter occurred in Sri Lanka.


 *Chennai - Nellai "Vande Bharat" special train will run every Thursday.


 *Who will enter the finals?  Today there will be a strong competition between India and New Zealand to show their strength.

 Prepared by


Covai women ICT_போதிமரம்


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

Learning The English Alphabet Letters

 

Learning The English Alphabet Letters

Learning English begins with learning alphabets. How to write alphabets? This is for preschoolers and kindergarten children! Learn English alphabets the write way!

Follow these steps, these are easy to follow and remember.

click here to download pdf file








🔻🔻🔻🔻



2023-24ம் ஆண்டிற்கான அரசு பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறும் இடம், தேதி & நிதி விடுவித்து SPD செயல்முறைகள்

 


IMG_20231114_180115

2023-24ம் ஆண்டிற்கான அரசு பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் 21.11.2023 , 22.11.2023 , 23.11.2023 மற்றும் 24.11.2023 ஆகிய நாட்களில் பின்வரும் மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.

KT_GOVT_SLC Location and fund release details 2023-24 |SPD Proceedings👇

Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

கனமழை காரணமாக நாளை (15.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :

 கனமழை காரணமாக நாளை (15.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம் :


  • Rain Holiday - கனமழை காரணமாக  (15.11.2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம் !



    பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம் :

    1. ⭕ சென்னை ( பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)
    2. ⭕ திருவள்ளூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
    3. ⭕ புதுச்சேரி/காரைக்கால் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 



    பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் :
    1. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்.
    1. செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும். 
    1. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

பள்ளிகளில் சாா்லி சாப்ளின் திரைப்படம் கல்வித் துறை உத்தரவு

 

தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த மாதம் சாா்லி சாப்ளின் இயக்கி, நடித்த ‘தி கிட்’ திரைப்படம் திரையிடப்படவுள்ளதாக கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இது தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் சிறாா் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.


அதன்படி இந்த மாதம் ‘தி கிட்’ எனும் மெளனப் படம் திரையிடப்படவுள்ளது. சாா்லி சாப்ளின் இயக்கி, நடித்த இந்த படமானது 1921-ஆம் ஆண்டு வெளியானது. சாா்லி சாப்ளினின் மிகச் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்றாகும்.


இந்த படத்தை ‘எமிஸ்’ வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்குரிய பாடவேளைகளில் படத்தைத் திரையிட வேண்டும். அதற்குமுன் பொறுப்பாசிரியா் அந்த படத்தை பாா்த்து, அதன் கதைச் சுருக்கத்தையும் படித்து, மாணவா்களுக்கு படத்தின் அடிப்படை பின்னணியை விளக்க வேண்டும்.


இதுசாா்ந்த வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி, பள்ளி தலைமை ஆசிரியா்கள் படத்தை மாணவா்களுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும்.


மாநில அளவில் நடைபெறும் சிறாா் திரைப்பட விழாவில் பங்கேற்று, சிறந்து விளங்கும் 25 மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவாா்கள். இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி 16-இல் தொடக்கம்

 


.com/

அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் வியாழக்கிழமை (நவ.16) முதல் பல்வேறு அமா்வுகளாக நடைபெறவுள்ளது.


இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்ககம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் கல்வி மேம்பாட்டுக்காக அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக்குழு, 2022-ஆம் ஆண்டு ஜூலையில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டன.


இதையடுத்து அதில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மாநில, மாவட்ட அளவில் முதன்மைக் கருத்தாளா்களுக்கு கடந்த மே, செப்டம்பரில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.


இந்தநிலையில் மூன்றாம், நான்காம் கட்டங்களில் வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு மாவட்ட கருத்தாளா்கள் மூலமாகவும், ஒவ்வொரு பள்ளிகளிலும் தெரிவு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா்களைக் கொண்டும் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


ஒரு பள்ளிக்கு ஐந்து நபா்கள்: அந்த வகையில் வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா்களுக்கு நவ.14, 15 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு நவ.16 முதல் டிச.8-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் பயிற்சி வழங்கப்படும்.


ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா், துணைத் தலைவா், கல்வி ஆா்வலா், ஆசிரியா் பிரதிநிதி, தலைமை ஆசிரியா் என ஐந்து நபா்கள் பங்கேற்க வேண்டும்.


பள்ளிகள், குறு வள மையங்கள், வட்டார வளமையங்களில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படும். பள்ளி மேம்பாடு, குழந்தைகளின் கல்வி வளா்ச்சியில் பங்காற்றுவது குறித்து பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

2022-2023 CPS Account Slip Published Now

 2022-2023 CPS ACCOUNT SLIP தற்போது வெளியாகி உள்ளது.

2022-2023 CPS Account Slip Published Now - Check it👇

CPS Account Slip Link - Click here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

School Morning Prayer Activities - 14.11.2023

 

 .com/

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.11.2023


 அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள் 


திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வாய்மை


குறள் :296


பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை

எல்லா அறமுந் தரும்.


விளக்கம்:


பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.


பழமொழி :

Fact is stronger than fiction.


கற்பனையை விட உண்மை விசித்திரமானது.


இரண்டொழுக்க பண்புகள் :


1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.


2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்.


பொன்மொழி :


துணிந்து செயல்படுகிறவர்கள்தான் அடிக்கடி வெற்றியின் சிகரத்தை எட்டுகிறார்கள். ஜவஹர்லால் நேரு 


பொது அறிவு :


1. காகித பணத்தை பயன்படுத்தும் மு,தல் நாடு எது?


விடை: சீனா


2. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?

விடை: ஞான பீட விருது


English words & meanings :


 valor-great courage in the face of danger, especially in battle.வீரம். vagary-unexpected change in a situation or in someone's behaviour ;வகை.

ஆரோக்ய வாழ்வு : 


தாமரைப் பூ :இருதயத்தை பாதுகாக்கும். இதய தசைகளை வலுப்படுத்தும். இருதயம் தொடர்புடைய எண்ணற்ற நோய்களை போக்க, தாமரை பூ கஷாயம் ஏற்றது. ...


நவம்பர் 14 இன்று

childrens%20day%20wishes

ஜவகர்லால் நேரு (நவம்பர் 14, 1889 – மே 27, 1964), இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப் பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக, 15 ஆகஸ்ட் பதவி ஏற்று அவர் தொடக்க உரையாக "விதியுடன் ஒரு போராட்டம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்தியாவின் திட்டக் குழுவை உருவாக்கி முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை 1951 இல் வரைந்தார். இந்தியாவின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில்தான் இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம் இருக்கிறது என்று நம்பி அதன் அவசியத்தை உணர்ந்து நேரு அதில் மிகவும் அக்கறை காட்டினார்.


நீதிக்கதை


 மூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்கு தயாராகின. அவை மலையேற ஆரம்பிக்கும் போது பார்வையாளராக இருந்த ஒருவர் 'இவ்வளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடுக்கி விழுந்தால் அவ்வளவு தான்' என்றார். உடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்தி விட்டது. சிறுது தூரம் சென்றவுடன் இன்னொருவர் ‘மேலே செல்லும் போது பாம்புகள் பிடித்து விட்டால் என்ன செய்யப் போகின்றன ' என்றார். உடனே இரண்டாவது தவளையும் கீழிறங்கிவிட்டது. ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காத மூன்றாவது தவளை மட்டும் மலை உச்சியை சென்றடைந்தது. பின்னர் கீழிறங்கிய அந்தத் தவளையிடம் அங்கிருந்த ஒருவர் உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து சிகரத்தை அடைய முடிந்தது' என்று கேட்டார். அதற்கு அந்தத் தவளை 'எனக்குக் காது கேட்காது " என்றது. நாமும் வாழ்வில் இந்த தவளையை போல இருந்தால் தான் சில நேரங்களில் முன்னேற முடியும்.


இன்றைய செய்திகள் - 14.11.2023


*வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பணிக்கு ஆட்கள் தேவை.

பல்கலைக்கழகம் அறிவிப்பு.


*உடுமலை அமராவதி சைனிக் பள்ளியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு.


 *மாநில அளவிலான கலை திருவிழா: திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 436 பேர் தேர்வு.


 *அவினாசி வட்டாரத்தில் தொடர் மழையால் நிரம்பி வழியும் குளம், குட்டைகள். வனப்பகுதி தடுப்பணைகளும் நிரம்பின.


*ஆஸ்திரேலியாவில் மூன்றாவது டிவிஷன்  கிரிக்கெட் போட்டியில்  நியூசிலாந்து வீரர் நீல்வாக்னர், ஒரு ஓவரில் ஆறு பந்துகளிலும் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.


Today's Headlines


* Manpower required for research work in Agricultural University. Announcement from the University.


*Admission Notification of Udumalai Amaravati Sainik School.


 *State level Kalaithiruvila: 436 candidates selected from Tirupur district.


 * Ponds and puddles overflowing due to continuous rains in Avinasi area. Forest barrages are also full.


*New Zealand cricketer Neil Wagner holds the record for taking six wickets in an over in a third division match in Australia.

 Prepared by

Covai women ICT_போதிமரம்


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

SPF வட்டி கணக்கிடுதல் தொடர்பாக திருத்திய ஆணை - ஓய்வுபெற்றவர்களுக்கு கூடுதல் நிலுவை!!!

 லர்களிடம் பேசி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளலாம். 1996-2023வரை ஓய்வுபெற்றவர்களுக்கு கூடுதல் நிலுவை கிடைக்கும்.




🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

ஆதார் போல் மாணவருக்கு வருகிறது அபார்

 


.com/

'ஆதார்' போல், பள்ளி மாணவர்களுக்கென தனித்துவ அடையாள அட்டை, 'அபார்' எனும் பெயரில், விரைவில் வர உள்ளது.


மக்களுக்கு 'ஆதார்' அட்டை வழங்குவது போல், நாடு முழுதும் பள்ளி மாணவ -- மாணவியருக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


இந்த அட்டைக்கு, 'தானியங்கு நிரந்தர கல்வி கணக்கு பதிவு' அதாவது 'அபார்' என, பெயரிடப்பட உள்ளது.


இதில், மாணவரின் முழுமையாக கல்வி விபரம், கூடுதல் திறமைகள் பதிவு செய்யப்பட உள்ளன.


'அபார்' அட்டையின் அடிப்படை தகவல்கள் அவர்களின் 'ஆதார்' தகவல்களில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கும்.


கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில், இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் கருத்து கேட்புக்கு பிறகே, இதற்கு ஒப்புதல் வழங்கப்படும். இதுகுறித்து, விரிவான அறிவிப்புகள் அடுத்தாண்டு துவக்கத்தில் வெளிவர உள்ளது' என்றனர்.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

1 To 5th - Ennum Ezhuthum Lesson Plan - November 3rd week ( 14.11.2023 - 19.11.2023 )

 Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024


Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024

Ennum Ezhuthum Empty Format - Download here

Term 2 Lesson Plan

November - 2023

3rd week ( 14.10.2023 - 19.10.2023 )

Ennum Ezhuthum - 1,2,3 Std -  Term 2 - Module 6 Lesson Plan - T/M / EM - Download here

Ennum Ezhuthum - 4,5th Std -  Term 2 - Module 5 Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4,5th Std -  Term 2 - Module 5 Lesson Plan - E/M - Download here

2nd week

Ennum Ezhuthum - 1,2,3 Std -  Term 2 - Module 5 Lesson Plan - T/M -  - Download here

Ennum Ezhuthum - 4,5th Std -  Term 2 - Module 4 Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4,5th Std -  Term 2 - Module 4 Lesson Plan -E/M - Download here

November - 2023

1st week

Ennum Ezhuthum - 1,2,3 Std -  Term 2 - Module 4 Lesson Plan - T/M - Download here


Ennum Ezhuthum - 4,5th Std -  Term 2 - Module 3 Lesson Plan - T/M - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News