NET தேர்வுக்கு அக்.28 வரை விண்ணப்பிக்கலாம்

 

1131890

உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு அக்டோபர் 28-ம் தேதிக்குள் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.


இதுகுறித்து என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பு: யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் 6 முதல் 22-ம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 83 பாடங்களுக்கு பல்வேறு கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். பட்டதாரிகள் /ugcnet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக அக்.28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த அக்.29-ம் தேதி கடைசி நாளாகும்.


விண்ணப்பங்களில் அக்.30, 31-ல் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். தொடர்ந்து டிசம்பர் முதல்வாரத்தில் ஹால்டிக்கெட் வெளியிடப்படும். இதற்கான விண்ணப்பகட்டணம், பாடத்திட்டம் உட்பட கூடுதல் தகவல்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். 011-69227700 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இவ்வாறு என்டிஏ தெரிவித்துள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

விண் கற்கள் தேடுதல் திட்டத்தில் பங்கேற்க அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு

 

தமிழ்நாடு விண் கற்கள் தேடுதல் திட்டத்தில் பங்கேற்க அரசுப் பள்ளி மாணவர்கள் குழுவாக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சூரிய குடும்பம் தோன்றியதிலிருந்தே அதன் முக்கிய உறுப்பினராகப் பல கோடிக் கணக்கிலான சிறு கோள்கள் இருந்து வருகின்றன. சூரிய குடும்பத்தின் பல்வேறு இடங்களில் பரவிக் கிடக்கும் சிறு கோள்களானது, வெவ்வேறு வடிவங்கள், அளவுகள் மற்றும் பண்புகளை உடையவை ஆகும்.


உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் சிறு கோள்கள் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த, சிறு கோள்களை (விண் கற்கள்) ஆராய்ந்து வகைப்படுத்துவதன் மூலம், அவற்றின் மோதலால் பூமிக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முடியும். உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் இவ்வாறு விண் கற்களை வகைப்படுத்தும் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளன.


சில மீட்டர்கள் முதல் சில நூறு கிலோ மீட்டர்கள் விட்டம் கொண்ட விண் கற்களைக் கண்டறிவது ஒரு சவாலான பணியாகும். இந்த பணியை தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் செய்து வருகின்றனர்.


இது தொடர்பாக, ‘ஓபன் ஸ்பேஸ் பவுண்டேசன்’ அமைப்பின் உதவி அறிவியலாளர் கிரித்திகா கிருஷ்ணன் கூறியதாவது: தமிழ்நாடு விண் கற்கள் தேடுதல் திட்டம் மூலமாகப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர். இவ்வாறு விண் கற்களைக் கண்டறிவதற்கான பயிற்சி பெறுபவர்கள் சர்வதேச அளவிலான விண் கற்கள் தேடுதல் நிகழ்ச்சியில் தமிழகத்தின் சார்பாக பங்கேற்று வருகின்றனர்.


இத்தேடுதல் திட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு, International Astronomical Search Collaboration (IASC) எனும் சர்வதேச அமைப்பு, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து, ஹவாயில் உள்ள பான்-ஸ்டார்ஸ் (PAN-STARRS) எனும் 1.80மீட்டர்விட்டமுடைய தொலைநோக்கியால் எடுக்கப்படும் படங்களை ஆன்லைனில் வழங்கும்.


இப்படங்களை, விண் கற்களின் நகர்வுகளைக் கண்டறிய உதவும் பிரத்யேக மென் பொருளின் உதவியுடன், மாணவர்களும், ஆசிரியர்களும் ஆராய்வார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட படங்களில் ஏதேனும் நகரும் பொருட்கள் இருப்பின், அவற்றை வகைப்படுத்தி மீண்டும் பான்-ஸ்டார்ஸ் வானியலாளர்களுக்கு மாணவர்கள் அனுப்பிவைப்பர்.


மாணவர்களும், ஆசிரியர்களும் கண்டறியும் விண் கற்களின் தடயங்கள், மேலும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, சர்வதேச வானியல் மையத்துக்கு அனுப்பப்படும். இவ்வாறு பல நிலைகளைக் கடந்து உறுதி செய்யப்படும் கண்டுபிடிப்புகளுக்கு மாணவர்களே பெயர் வைக்கும் வாய்ப்பை பெறுவார்கள்.


கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு விண் கற்கள் தேடுதல் திட்டம் மூலம், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 100 மாணவர்கள் மற்றும் 20 ஆசிரியர்கள் என தமிழகம் முழுவதுமிருந்து 20 குழுக்களைப் பங்கேற்கச் செய்கிறோம். நடப்பாண்டுக்கான நிகழ்ச்சியானது அக்டோபர் 9-ம் தேதி தொடங்கி நவம்பர் 3-ம் தேதி வரை நடைபெறும். இந்த ஆண்டு பங்கேற்கும் 20 தேடுதல் குழுக்களில் 14 குழுக்கள் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்தவை.


கடந்த ஆண்டு பங்கேற்ற குழுவினர் சுமார் 300-க்கும் அதிகமான விண்கற்களின் தடயங்களைக் கண்டறிந்தனர். அவற்றில் 98 தடயங்கள் விண் கற்களாக இருப்பதற்கான அதிகப்படியான சாத்தியக்கூறுகள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டு அடுத்த கட்ட ஆய்வுக்கு விஞ்ஞானிகளால் உட்படுத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக, விண்கற்கள் தேடுதல் திட்டம் 2024 ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளது.


இதில், ஒரு பள்ளியை சேர்ந்த 5 மாணவர்கள், ஒரு ஆசிரியர் குழுவாக பங்கேற்கலாம். மொத்தம் 20 குழுக்கள் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், ஆசிரியர்கள் கூடுதல் விவரங்களை https://openspacefoundation.inஎன்ற இணையதளத்திலோ அல்லது 9952209695 என்ற எண்ணிலோ தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

School Morning Prayer Activities - 03.10.2023


 .com/

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.10.2023


 திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : தவம்

குறள் :269


கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.


விளக்கம்:


தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.


பழமொழி :

_Hunger breaks stone walls.


_பசி வந்தால் பத்தும் பறந்திடும்._


இரண்டொழுக்க பண்புகள் :


1.நான் செல்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன்.


2. செல்பேசியில் விளையாட்டு விளையாடி ,நேரத்தை வீணடிக்க மாட்டேன்.


பொன்மொழி :


மாணவனுக்குச் சிறந்த பாடப்புத்தகம் அவனுடைய ஆசிரியரே. மகாத்மா காந்தி


பொது அறிவு :


1.வாடகை கார்கள்(டாக்ஸி) அதிகம் உள்ள நகரம்?


விடை: மெக்சிகோ 


2. இந்திய தேசியக்கொடியை வடிவமைத்தவர்?


விடை: பிங்கல வெங்கையா 


English words & meanings :


1. Approbate (அப்ராபேட்) - அதிகார பூர்வமாக ஏற்றுக்கொள்.


2. Decline (டிக்லைன்) - சரிவு.


3. Categorize (கேட்டகரைஸ்) - வகைப்படுத்து.


ஆரோக்ய வாழ்வு : 


வெந்தயம் வயிற்றில் ஏற்படும் அலர்ஜி,குடல் அலர்ஜி, குடல் அல்சர் போன்றவற்றை தடுப்பதோடு இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது .


நீதிக்கதை


 குரங்கின் அறிவு


ஒரு நதியில் முதலை தன் துணைவியாருடன் வாழ்ந்து வந்தது. நதிக்கரையோரம் ஒரு குரங்கு வாழ்ந்து வந்தது. முதலையும் குரங்கும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர்


ஒரு நாள் பெண் முதலை ஆண் முதலையிடம் தன் ஆசையை தெரிவித்தது. எனக்கு ரொம்ப நாளாக குரங்கின் இதயத்தை சாப்பிடனும்னு ஆசை! தாங்களால் கொண்டுவரமுடியுமா? என கேட்டது

ஆண்முதலை யோசித்தது என்ன செய்வதென்று! திடீரென ஒரு ஆசை வந்தது, சரி நான் கொண்டுவருகிறேன் என சம்மதித்தது. நம் குரங்கு நண்பனை வீட்டிற்கு விருந்துக்கு அழைப்போம்... அவனும் வருவான் கொன்று அவன் இதயத்தை சாப்பிடு என கூடியது. பெண் முதலைக்கோ கொண்டாட்டம், சந்தோசம்...!


அடுத்த  ஆண் முதலை குரங்கு நண்பனை விருந்துக்கு அழைத்தது. குரங்கும் சம்மதித்தது முதலையின் முதுகில் ஏறி அமர்ந்ததும் முதலை புறப்பட்டது.


நடு ஆற்றில் சென்றுகொண்டிருக்கும் பொது ஆண் முதலை கூறியது "இப்போ ஏன் விருந்துக்கு  போறோம் ன்னு தெரியுமான்னு கேட்டது"


அப்பாவி குரங்கு விருந்துக்கு தானே ன்னு சொன்னது.


முதலை சொன்னது, அதான் இல்லை என்னோட மனைவி குரங்கின் இதயம் சாப்பிட ஆசைபட்டா, அதுக்காக தான் உன்னைகூட்டிகிட்டு போறேன் ன்னு கூறியது.


சற்று குரங்கிற்கு அதிர்ச்சியாக இருந்தது.


சற்று யோசித்த குரங்கு... அடடா என்ன நண்பா இத முன்னாடியே சொல்லகூடாதா? நேத்து நான் என இதயத்தை எடுத்து காயபோட்டேன் அது அங்கேயே இருக்கு ன்னு கூற


முதலையும் அப்படியா வா திரும்பி போய் எடுத்துகொண்டு வருவோம்னு திரும்பவும் கரைக்கு வந்து விட்டது. தப்பித்த குரங்கு முதலிடம் கூறியது...! முட்டாள் முதலையே நீயெல்லாம் ஒரு நண்பன் என்னையே கொல்ல பாக்கிறியான்னு சொல்லிட்டு மரத்தின் மேல் ஏறி போய்டுசாம்.


இன்றைய செய்திகள் - 03.10.2023


* பச்சை நிற ஆவின் பால் விநியோகம் 50 சதவீதம் குறைப்பு: பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு.


*பூண்டி ஏரியில் உபரி நீர் திறக்கப்பட்டதை அடுத்து வல்லூர் அணைக்கட்டு  நீர் நிரம்பி வழிந்தது.

*வண்டலூர் பூங்காவில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கம் மான்களை வாகனத்தில் சென்று பார்க்கும் வசதி துவக்கம். 


* பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு 13 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு.


*ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து.


*ஆசிய விளையாட்டுப் போட்டி ஹாக்கியில் வங்காள தேசத்தை 12-0 என வீழ்த்தியது இந்தியா.


Today's Headlines


* 50 percent reduction in milk supply of green aavin milk: Milk Agents Association alleges.


* Vallur dam overflowed after release of surplus water in Poondi lake.

* After three years in Vandalur Park, the facility to see lions and deers by vehicle has been inaugurated.


* Boycott of Gram Sabha meeting in 13 panchayats in protest of Parantur airport.


*Chief Minister M K Stalin congratulated Tamil Nadu athletes who won medals in the Asian Games.


* India beat Bangladesh 12-0 in Asian Games Hockey.

 Prepared by


Covai women ICT_போதிமரம்


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

School Calendar - October 2023

 

அக்டோபர் 2023-க்கான பள்ளி நாட்காட்டி 

School Calendar - October 2023👇

Click here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை 30.11.2023க்குள் பதிவேற்றம் செய்ய மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு!

 NMMS தேர்வில் (2022-23ஆம் கல்வியாண்டு) தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை 01.10.2023 முதல் 30.11.2023க்குள் பதிவேற்றம் செய்ய மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு!

Selected Candidates - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

டிசம்பர் - 2023 துறைத் தேர்வில் இருந்து தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை தேர்வு (DOM/TOM) முறையில் மாற்றம்!!!

 

 டிசம்பர் - 2023 துறைத் தேர்வில் இருந்து தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை தேர்வு  (DOM/TOM) முறையில் மாற்றம் - கொள்குறி வகை வினாக்கள் முற்றிலும் நீக்கப்பட்டு 100% descriptive வகை வினாக்கள் மட்டுமே இடம்பெறும் என அறிவிப்பு.




Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

குழந்தைகளுக்கான உடல் பாதுகாப்பு சிக்னல் - வெளியீடு: பள்ளிக் கல்வித் துறை!!

 

குழந்தைகளுக்கான உடல் பாதுகாப்பு சிக்னல்  - வெளியீடு: பள்ளிக் கல்வித் துறை!!

IMG_20231001_184205_wm




Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

சிபிஎஸ்இ விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு

 

1130383

சிபிஎஸ்இ வாரியம் நடத்தும் விளையாட்டுப் போட்டியில் அரசு சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


மதுரை கோவில் பாப்பாகுடியைச் சேர்ந்த சந்திரா, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: எனது மகள் நித்யமீனாட்சி, மதுரை ரயில்வே சிபிஎஸ்இ பள்ளியில் 11-ம் வகுப்புப் படிக்கிறார். கைப்பந்துப் போட்டியில் பங்கேற்று வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் இடையே தேசிய அளவிலும், மாநில அளவிலும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இப்போட்டிகளை சிபிஎஸ்இ விளையாட்டு வாரியம் நடத்துகிறது.


இந்த ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகளில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் மட்டும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தவறானது. எனவே அக். 1-ல் தொடங்கும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான விளை யாட்டுப் போட்டிகளில் அரசு சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் பினேகாஸ் ஆஜராகி, அரசுப் பள்ளி மாணவர்களை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதி மறுப்பது சட்டவிரோதம், என்றார். இதையடுத்து, சிபிஎஸ்இ விளையாட்டுப் போட்டிகளில் அரசு சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

ஆசிரியர் தகுதி தேர்விற்கு இலவச பயிற்சி

 ஆசிரியர் தகுதி தேர்விற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை முதல் இலவசப்பயிற்சி வழங்க உள்ளதாக கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடக்க உள்ள தேர்வுகள் பற்றி அறிவிப்பு டிச.,ல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 தேர்வுகளுக்கான இலவசப்பயிற்சி மாவட்ட வேலைவாய்ப்பு, அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளது.பயிற்சிகள் நாளை(செப்.,30) துவங்குகிறது. ஆசிரியர் தகுதித்தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். 

மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை 63792 68661 அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

கேட் நுழைவுத் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் நிறைவு

 1130401


நாடு முழுவதும் உள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கணினி வழியிலான கேட் தேர்வு, இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 29பாடப் பிரிவுகளில், மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.


2024-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு பிப்ரவரி 3 முதல் 11-ம் தேதி வரை பாடப்பிரிவு வாரியாக நடைபெற உள்ளது. இந்த முறை கேட் தேர்வை பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மையம் (ஐஐஎஸ்சி) நடத்த உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட்30-ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் பலர் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.


இந்நிலையில், விண்ணப்பிக்கும் காலஅவகாசம் இன்றுடன் (செப். 29) நிறைவடைகிறது. மாணவர்கள் https://gate2024.iisc.ac.in/ எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தாமதக்கட்டணத்துடன் அக். 13 வரை விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து, நவம்பர் 7 முதல் 11-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்.


தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜனவரி 3-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகள் மார்ச் 16-ம் தேதி வெளியாகும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறியலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

கல்வி உதவித் தொகைக்கான நுழைவுத் தேர்வு திடீர் ரத்து

  மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில் இன்று (செப்.29) நடைபெறவிருந்த கல்வி உதவித் தொகைக்கான யாசஸ்வி நுழைவுத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.


மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில் பிரதமர் – யாசஸ்வி (Prime Minister – Young Achievers Scholarship Award Scheme for Vibrant India) கல்வி உதவித் தொகைக்கான நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை ஜூன் மாதத்தில் அறிவித்தது. இந்த தேர்வை எழுத நாட்டில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்,


பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும், ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் தேர்வு நடத்தப்படும் என்பன போன்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் தமிழகத்தில் தெரிவு செய்யப்பட்டிருந்த 6,593 பள்ளிகளிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.


இந்நிலையில், இன்று (செப்.29) நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், நுழைவுத் தேர்வுக்கு பதிலாக, தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளில் தற்போது 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள், கடந்த ஆண்டு 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தால் தேசிய உதவித் தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) விண்ணப்பிக்கலாம் எனவும், ஏற்கெனவே நுழைவுத் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து விதிமுறைகளும் இதற்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து கல்வியாளரும், காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முன்னாள் முதல்வருமான எஸ்.சிவகுமார் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: கல்வி உதவித் தொகைக்கான யாசஸ்வி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகளில் ஏராளமான முரண்பாடுகள் இருந்தன.


இந்த நிலையில், இந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்து விட்டு, 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் கல்வி உதவித் தொகைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பை பொறுத்தவரை அரசு பொதுத் தேர்வாக நடைபெறுகிறது. ஆனால், 8-ம் வகுப்புக்கு மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே விடைத் தாள்கள் திருத்தப்படுவதால் அந்த மதிப்பெண்களை மற்ற பள்ளிகளுடன் ஒப்பிட்டு தரப்படுத்துவது சரியான நடைமுறையாக இருக்காது.


ஒவ்வொரு பள்ளிக்கும் மதிப்பீடு செய்யும் முறைகளும் மாறும். எனவே, 8-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களுடன் மாநில அளவில் அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பிற திறன்களில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சிறப்பு மதிப்பெண்களை வழங்கலாம். மேலும், அனைத்து பள்ளிகளைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கும் வகையில் இத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றார்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை 30.11.2023க்குள் பதிவேற்றம் செய்ய மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு!

 

NMMS தேர்வில் (2022-23ஆம் கல்வியாண்டு) தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை 01.10.2023 முதல் 30.11.2023க்குள் பதிவேற்றம் செய்ய மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு!

Selected Candidates - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாகத்திறன் மேம்பாட்டு பயிற்சி - Batch wise teachers name list avail

 IMG_20230930_083110

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாகத்திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் 05.10.2023 முதல் மதுரையில் நடைபெற உள்ளது...தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Batch wise teachers name list avail- pdf

 Middle HM Training - 2023-24 @ Madurai - Proceedings - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

ITK மையங்களுக்கு கற்றல் கற்பித்தல் பொருட்கள் மற்றும் தன்னார்வலர் கையேடு வழங்குதல் சார்ந்து இளம்பகவத் அவர்களின் செயல்முறைகள்

 IMG_20230928_170649

இல்லம் தேடி கல்வி மையங்களுக்கான கற்றல் கற்பித்தல் பொருட்கள் மற்றும் தன்னார்வலர் கையேடு வழங்குதல் சார்ந்து இளம்பகவத் அவர்களின் செயல்முறைகள்....

Proceedings - Download here



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

Selection List Of NAAN MUDHALVAN UPSC Scholarship Exam - 2023

 

SELECTION LIST OF NAAN MUDHALVAN UPSC PRELIMINARY SCHOLARSHIP EXAM - 2023👇

Click here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

 தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் அறிவித்துள்ளது.


தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு, வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், பட்ட மேற்படிப்பு வரை பயிலும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு,1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப் படுகிறது. மாணவர்களுக்கான ஊக்கத்தொகை பெறும் தொழிலாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இதற்கு, தொழிலாளர்களின் மாத சம்பளம் 25,000 ரூபாயாக இருத்தல் வேண்டும். தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணையதளத்திலோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

காமன்வெல்த் மாஸ்டர்ஸ் உதவித்தொகை

 59436_20230928163347

 இந்த உதவித்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், யு.கே., கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் முழுநேர முதுநிலை பட்டப்படிப்பை இலவசமாக மேற்கொள்ள முடியும். யு.கே.,வின் காம்ன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷன் வழங்கும் இந்த திட்டம், செப்டம்பர் / அக்டோபர் 2024 முதம் துவங்கும் படிப்புகளுக்கு பொருந்தும்.

தகுதியுள்ள கருப்பொருள்கள்:

 வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சுகாதார அமைப்புகள் மற்றும் திறனை வலுப்படுத்துதல் உலகளாவிய செழிப்பை ஊக்குவித்தல் உலக அமைதி, பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துதல் திறனை வலுப்படுத்துதல் மற்றும் நெருக்கடிகளை சமாளித்தல்

* அணுகல், சேர்த்தல் மற்றும் வாய்ப்புகள்


தகுதிகள்:

இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். இந்தியாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். யு.கே., கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ள உரிய தகுதி பெற்றவராக இருப்பதுடன், செப்டம்பர் / அக்டோபர் 2024 சேர்க்கை பெற தயாராக இருக்க வேண்டும்.

* செப்டம்பர் 2023க்குள், குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.

* இரண்டாவது யு.கே., முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு சி.எஸ்.சி., நிதி அளிப்பதில்லை. எனினும், அதன் அவசியம் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அவை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் நிதி உதவி அளிக்கப்படலாம்.

* எம்.பி.ஏ., படிப்பிற்கு நிதி உதவி அளிக்கப்படுவதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷனின் https://fs29.formsite.com/m3nCYq/omxnv2g3ix/index எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைன் விண்ணப்பபதோடு, இந்திய கல்வி அமைச்சகத்தின் https://proposal.sakshat.ac.in/scholarship/ எனும் சாக்சாத் இணையதளத்திலும் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:காமன்வெல்த் உதவித்தொகை கமிஷனின் இணையதளம் வாயிலாக 17 அக்டோபர் 2023 வரையிலும், இந்திய கல்வி அமைச்சகத்தின் இணையதளம் வாயிலாக 25 நவம்பர் 2023 வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

விபரங்களுக்கு: www.education.gov.in



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

தொடக்க கல்வி பட்டய தேர்வு முடிவுகள்

 தொடக்க கல்வி பட்டய தேர்வு முடிவுகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அறிந்து கொள்ளலாம்.உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டியில் இயங்கும்,

  காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த ஜூன், ஜூலை 2023, தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள், தங்கள் விண்ணப்பங்களை சமர்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

விடைத்தாள்களை மறுகூட்டல், ஒளி நகல் பெற விரும்புவோர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அக்., 3ம் தேதி, மாலை 5:00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் வாயிலாகவோ பதிவேற்றம் செய்யலாம்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

G.O-242- 10- ஆம் வகுப்பு படித்து மூன்று ஆண்டுகள் பாலிடெக்னிக் படித்தால் 12ஆம் வகுப்புக்கு சமம் என்பதற்கான அரசாணை.

 

 G.O-242- 10- ஆம் வகுப்பு படித்து மூன்று ஆண்டுகள் பாலிடெக்னிக் படித்தால் 12ஆம் வகுப்புக்கு சமம் என்பதற்கான அரசாணை.


அரசாணை 242- கீழே உள்ள link ஐ கிளிக் செய்து download செய்து கொள்ளுங்கள்... 

👇👇👇👇👇👇👇👇

Click to download pdf file


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

SNA கணக்கிலிருந்து பணம் அனுப்புவதற்கு முன் உள்ளீடு செய்ய வேண்டிய COMPONENTS CODE FOR GRANTS

 


IMG_20230929_090047

SNA COMPONENTS CODE FOR GRANTS

தொடக்க , நடுநிலை பள்ளிகளுக்கு


COMPOSITE GRANT ELEMENTARY


COMPONENTS CODE-F. 01.18


YOUTH AND ECO CLUB ELEMENTARY


COMPONENTS CODE -F. 01.12.01


உயர்நிலை , மேல்நிலை பள்ளிகளுக்கு


COMPOSITE GRANT SECONDARY


COMPONENTS CODE -F. 03.12


YOUTH AND ECO CLUB SECONDARY


COMPONENTS CODE-  F. 03.06


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

6 To 12th Std - Summative / Quarterly Exam 2023 - Official Answer key ( All Subject )

 6 ஆம் முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான காலாண்டு / முதல் பருவத் தேர்வு விடைக்குறிப்பு மற்றும் இதனுடன் learning out comes குறியீடு எண் கொடுக்கப்பட்டுள்ளது.


6 To 12th Std - Summative / Quarterly Exam 2023 - Official Answer key with Related Learning Outcomes - Download here



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

EE| எண்ணும் எழுத்தும்| | வகுப்பு 1'2'3| MATHS | MOD10 | PART 1 & 2 | CLASS 1,2,3|| KALVITV |

 மாணவர்கள் கவனம் ஆசிரியரில் வருவதற்கும் , வகுப்பறை கற்றலுக்கு ஆயத்தப்படுத்தும் விதம் சிறப்பாக அமைந்துள்ளது . மாணவர்களிடம் கற்றல் தூண்டல் நடைபெற மாணவர்களே போட்டி போட்டுக்கொண்டு கற்றலுக்கு முந்திக்கொள்வது தனி சிறப்பாகிறது. விரல் பொம்மைகளை வைத்து வாரத்தின் நாட்களை அறிமுகப்படுத்தியது மிக சிறப்பு. மாணவர்கள் தானாகவே கற்றது மறக்க முடியாததாக வாழ்க்கை பயனுடையதாக மாறுகிறது.




Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

EE | எண்ணும் எழுத்தும்| |வகுப்பு 4,5| |TAMIL| MOD9 |ACT 1| CLASS1,2, 3 |KALVITV |

 மாணவர்களின் நிலைத்த கற்றல் திறன் வெளிப்பட ஆசிரியர் கையாளும் திறன் மிக சிறப்பு. மாணவர்கள் தொடக்க எழுத்துக்களைக் கொண்டு வார்த்தைகளை உருவாக்கும் விதம், வார்த்தை தேடல், பாராட்டுகளால் மகிழும் விதம் மிக சிறப்பு. புதிய வார்த்தைகளை கையாண்டு படைப்பாற்றலை வளர்த்துக்கொள்கின்றனர்




Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

EE | எண்ணும் எழுத்தும்|ENGLISH| STD 4&5 |MOD5&6 |kalvitv|

 The teacher effectively introduce compound words so that the students able to strengthen their pronunciation skills , vowel sound also developing vocabulary. The students are improving the reading and speaking skills.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

DEO TO CEO Promotion - GO 236

 

IMG_20230926_204801

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி அங்குலட்சுமி அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

G.O.236 SE1(1) D date 26.09.2023 - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News