IFHRMS வழியாக ஊதியம் பெற்று வழங்க இயலாத ஆசிரியர், ஆசிரியரல்லாதோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
DSE - IFHRMS Salary Proceedings - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
Education and Information
IFHRMS வழியாக ஊதியம் பெற்று வழங்க இயலாத ஆசிரியர், ஆசிரியரல்லாதோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
DSE - IFHRMS Salary Proceedings - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
TNSED மணற்கேணி (Manarkeni) Student APP - New Version 0.0.21 - Update Now
⚡- Version 0.0.21
⚡- Updated on Sep 26, 2023
What's New
* Middle Order Questions.
* Bug Fixes & Performance Improvements
Click here to join whatsapp group for daily kalvinews update
CTET Result 2023: சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு; கட் -ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு?
சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு முடிவுகள் ( செப்.25) வெளியாகி உள்ளன.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ள தேர்வு முடிவைப் பார்ப்பது எப்படி என்று காணலாம்.
அரசு கொண்டு வந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (CENTRAL TEACHER ELIGIBILITY TEST - CTET) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.
அதேபோல மத்திய அரசுப் பணிகளுக்கு சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் பேனா - காகித முறையில் நடைபெறும் தேர்வை சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்துகிறது.
2023ஆம் ஆண்டுக்கான தேர்வு நேரடி முறையில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 29 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்தனர். குறிப்பாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான வகுப்பு ஆசிரியர் பணிக்கு நடத்தப்படும் முதல் தாளை எழுத 15,01,719 பேர் விண்ணப்பித்தனர். அதேபோல 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான வகுப்பு ஆசிரியர் பணிக்கு நடத்தப்படும் இரண்டாம் தாளை எழுத 14,02,184 பேர் விண்ணப்பித்தனர்.
இதற்குத் தேர்வர்கள் ஏப்ரல் 27ஆம் தேதி முதல் மே 26ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். இதில் பொதுப் பிரிவினர், ஓபிசி பிரிவினருக்கு ஒரு தாளுக்கு ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ரூ.1200 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதுவே எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி
பிரிவினருக்கு முறையே ரூ.500 கட்டணமாகவும் ரூ.600 கட்டணமாகவும் பெறப்பட்டது.
இந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. டிஜிட்டல் மதிப்பெண் சான்றிதழ்களையும் சிடெட் சான்றிதழையும் சிபிஎஸ்இ விரைவில் வெளியிட உள்ளது.
கட் -ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு?
பொதுப் பிரிவு தேர்வர்களுக்கு கட் -ஆஃப் மதிப்பெண் 60 சதவீதம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் எஸ்சி, எஸ்டி,ஓபிசி, மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு
தகுதி கட் - ஆஃப் மதிப்பெண் இன்னும் குறைவாகவே இருக்கும்.
பார்ப்பது எப்படி?
* தேர்வர்கள் https://ctet.nic.in/ctet-aug-23-result/ .
* அதில், CTET AUG-23 Result என்ற இணைப்பு தோன்றும். அதை க்ளிக் செய்ய வேண்டும்.
* தொடர்ந்து https://cbseresults.nic.in/ctet_23_aug/CtetAug23.htm என்ற இணைப்பு தோன்றும்.
* அதை க்ளிக் செய்து, பதிவு எண்ணை உள்ளிடவும்.
* தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.
*அதை பதிவிறக்கம் செய்து, வருங்காலத் தேவைகளுக்காகப் பயன்படுத்தலாம்.
2022 தேர்வு
கடந்த 2022ஆம் ஆண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-ற்கான கணினி வழித் தேர்வு (Computer Based Examination) திட்டமிட்டபடி கடந்த 14.10.2022 முதல்19.10.2022 வரையிலும் இருவேளைகளில் நடைபெற்றது. கணினி வழியில் நடைபெற்ற தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதி இருந்தனர்.
கூடுதல் விவரங்களுக்கு: https://ctet.nic.in
Click here to join whatsapp group for daily kalvinews update
முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி உயர் மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான இயற்பியல் , வேதியியல் , கணிதம் மற்றும் உயிரியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாவட்டங்களில் பயிற்சி வழங்குதல் முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி சென்னையில் 04.10.2023 முதல் 07.10.2023 முடிய நடத்துதல் பணிமனை ஏற்பாடு செய்தல் பணிமனைக்கான செலவினம் மேற்கொள்ளுதல் - தொடர்பாக . -
PG Teachers Training 04.10.2023 to 07.10.2023
SCERT Proceedings - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
TNPSC - துறைத்தேர்வு டிசம்பர் - 2023 அறிவிப்பு
துறைத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு...
* ஆதார் எண்ணை கட்டாயமாகப் பதிய வேண்டும்.
* டிசம்பர் - 2023 - ற்கான துறைத்தேர்வுகள் 09.12.2023 முதல் 17.12.2023 வரை தேர்வாணையத்தால் நடத்தப்பெற உள்ளன.
* விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 27.09.2023 முதல் விண்ணப்பிக்கலாம்.
* இணைய தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி நாள் 26.10.2023 அன்று 11.59 பிற்பகல் வரை.
* அனைத்து கொள்குறி வகை தேர்வுகளும் ( 100 சதவீதம் மற்றும் பகுதியளவு அதாவது 40 சதவீதம் / 60 சதவீதம் / 80 சதவீதம் ) கணினி வழி முறையிலும் அனைத்தது விரிந்துரைக்கும் வகை தேர்வுகளும் ( 100 சதவீதம் மற்றும் பகுதியளவு அதாவது 20 சதவீதம் / 40 சதவீதம் / 60 சதவீதம் ) ஏற்கெனவே உள்ள முறையான தேர்வுத் தாளில் எழுதும் வகை தேர்வாக நடைபெறும்.
Click here to join whatsapp group for daily kalvinews update
பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் பின்பற்ற வேண்டிய பணிகள் மற்றும் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (ஆண்டு 2020)!!!
DSE - PET & PD Duties Proceedings - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு ( TNCMTSE ) அக்டோபர் 2023 தேர்வு மைய பெயர் பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல்
TNCMTSE 2023 - NR & Hall Ticket downloading instructions - Click here
Click here to join whatsapp group for daily kalvinews update
2024-25 கல்வியாண்டிற்கான ஒன்பது மற்றும் பதினோராம் வகுப்புகளில் காலி இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன
Notification - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
தங்களது 12 மாத ஊதியத்தில் ஒரு மாத ஊதியத்தை வருமான வரியாகச் செலுத்தி வரும் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களில் அநேகருக்கு 2016, 2017, 2018, 2022 உள்ளிட்ட கணக்கீட்டு ஆண்டுகளில் Outstanding Demand இருப்பதாகக் கூறி கடந்த சில ஆண்டுகளாக Notice வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் தமிழ்நாடு முழுக்கவே பெரும்பான்மையினருக்கு இந்த Notice email மூலமாகவோ அல்லது SMS மூலமாகவோ அனுப்பப்பட்டு வருகிறது. பலருக்கு Outstanding Demand இருந்தும் சில சிக்கல்களால் notice வந்தடையாமல் உள்ளது.
நோட்டீஸைப் பார்த்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் "வேணாம். . . முடியல. . . வலிக்குது. . . . அழுதுருவேன்!" என்று வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும் அத்தகைய நிலையில்தான் உள்ளனர். ஆண்டுதோறும் சம்பளத்தில் 12ல் ஒரு பங்கை வருமான வரியாக முறைப்படிச் செலுத்தி வரும் நமக்கே இப்புடி நோட்டீஸ் வந்துள்ளதே என்று வேதனையோடே உள்ளனர். இவ்வேதனை எதனால் உருவானது? அதைத் தீர்க்க இயலுமா? என்பது குறித்துத் தெளிந்துகொள்ளவே இப்பதிவு.
Outstanding Demand என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் உங்களது PAN எண் மூலம் நடைபெற்ற (ஊதியம் உட்பட) பணப்பரிமாற்றம் முழுவதிற்குமான வருமான வரியினை வருமான வரித்துறை மென்பொருள் Generate செய்யும். TDS & ITR பணிகளுக்குப் பின்னர், இத்தொகையானது உங்களது PAN எண்ணிலிருந்து பெறப்பட்ட வருமான வரியைவிடக் கூடுதலாக இருக்குமெனில், அந்தக் கூடுதல் தொகை Outstanding Demandஆக அதாவது இன்னும் கட்ட வேண்டிய வருமான வரிப் பாக்கியாக உங்களது PAN கணக்கில் சேரும்.
என்னென்ன காரணங்களுக்காக Outstanding Demand உருவாகிறது
6 காரணங்களால் Outstanding Demand உருவாக வாய்ப்புள்ளது. 6 காரணங்களையும் அதற்குரிய பிரிவுகளையும் இனி காண்போம்.
143(1)(a)(i) :
ITRல் எண்கள் உள்ளீட்டில் பிழை.
143(1)(a)(ii) :
ITRல் தவறான வரி விலக்குகளுக்கு உரிமை கோரியது.
143(1)(a)(iii) :
ITRல் கோரப்பட்ட இழப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
143(1)(a)(iv) :
ITRல் கோரப்பட்ட செலவினத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
143(1)(a)(v) :
ITR ல் கோரப்பட்ட வரிவிலக்குகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
143(1)(a)(vi) :
படிவம் 26AS, Form 16 / 16Aல் காட்டப்பட்டதைவிடக் கூடுதலாக வருமானம் வந்துள்ளது.
Outstanding Demand வந்துள்ளதை வருமான வரித்துறை எவ்வாறு தெரிவிக்கும்?
Outstanding Demand வந்துள்ளோருக்கு இத்தகவலை Email, SMS, WhatsApp & Call மூலம் தெரியப்படுத்தும் வசதி வருமான வரித்துறையிடம் உள்ளது. பல நேரங்களில் Mail ID / Mobile No. குளறுபடிகள் காரணமாக இத்தகவல் முறையாகச் சென்று சேராதநிலையும் உள்ளது.
தங்களுக்கு Outstanding Demand இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவது எப்படி?
incometax.gov.in என்ற (நாம் முன்னர் ITR செய்த) இணையதளத்தில் Login செய்யவும். பின்னர் மேலே நீலநிறப்பட்டையில் உள்ள Menuவில் Pending Actions -> Response to Outstanding Demand என்பதை Click செய்யவும். தங்களுக்கான Outstanding Demand இருந்தால் அந்தத் தொகை உரிய Assessment Year-உடன் தோன்றும். ஏதும் தோன்றவில்லை எனில், உங்களுக்கு தற்போது வரை எவ்வித Outstanding Demandம் இல்லை என்று பொருள்.
Outstanding Demand இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
எந்த வருடத்திற்கு Outstanding Demand காட்டுகிறதோ அந்த ஆண்டிற்குரிய வருமானவரி ஆவணங்களுடன் இந்தப் பக்கத்தையும் Print செய்து கொண்டு உங்களது அலுவலகம் அமைந்துள்ள மண்டல வருமானவரி அலுவலகத்திற்குச் சென்று விபரங்களை அளித்தால் என்ன காரணத்திற்காக Outstanding Demand வந்துள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
TDS செய்யும் போது எழுந்த சிக்கலால்தான் என்றால் உங்களது சம்பள அலுவலரிடம் தெரிவித்து இச்சிக்கலைத் தீர்க்க முயற்சிக்கலாம்.
அல்லது, அந்த ஆண்டில் உங்களது PAN சார்ந்த நடவடிக்கைகளால் ஊதியமற்ற வேறு காரணங்களால் கூடுதல் வருமானம் வரப்பட்டு அதனால் Outstanding Demand வந்துள்ளது என்றால், அத்தொகையை நீங்களே மேலே Outstanding Demand காட்டிய அதே பக்கத்தில் சென்று செலுத்தி கணக்கை நேர்செய்து கொள்ளலாம்.
முறையாக வரிக் கணக்கு தாக்கல் செய்தும் Outstanding Demand தவறாக வந்திருந்தால் சரி செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை?
a. Income tax return filed for the AY.
b. Form 26AS.
c. Form 16/16A (optional).
d. Challan paid for the AY to ascertain if claim is correct in ITR (optional).
e. Intimation or order u/s.154 from CPC/AO.
f. இது தொடர்பான கூடுதல் ஆவணங்கள்.
வருமானவரித் துறையைத் தொடர்பு கொள்ளலாமா?
இதற்கென தனிப் பிரிவு வருமான வரித்துறையில் அரசு விடுமுறை நாள்கள் நீங்கலாக திங்கள் முதல் சனி வரை காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை செயல்படும். மேலேயுள் பத்தியில் தெரிவித்த ஆவணங்களுடன் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
தொலைபேசி : 1800 309 0130
E-MAIL : taxdemand@cpc.incometax.gov.in
Click here to join whatsapp group for daily kalvinews update
பண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பப் படிவம்...
Festival Advance Form - pdf👇
Click here to join whatsapp group for daily kalvinews update
1 - 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவம் முடிந்து பள்ளி திறக்கும் தேதி அறிவிப்பு.
Term 1 leave and term 2 reopen Proceedings 👇
Click here for latest Kalvi News
தமிழ்நாடு இடைநிலைக்கல்விப்பணி -01.08.2023 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியருடன் உபரி பணியிடத்தினை உறுதிபடுத்துதல் - தொடர்பாக . நிர்ணயம் செய்யப்பட்டமை..
Thanjavur CEO Proceedings - Download here
Surplus Teachers List - Download here
Click here for latest Kalvi News
எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறும் நாட்கள் மாற்றம்.
1 முதல் 3 ஆம் வகுப்பு - 03.10.2023 மற்றும் 04.10.2023
4 மற்றும் 5 ஆம் வகுப்பு - 05.10.2023 மற்றும் 06.10.2023
E.E. Revised Training Proceedings to DIETs
Click here for latest Kalvi News
முதல் பருவம்/காலாண்டுத் தேர்வு கணிதம்
🖨️வினாத்தாள் print எடுக்கும் போது கவனிக்க வேண்டியவை.
6 ஆம் வகுப்பிற்கு வினாத்தாள் 3 பக்கம்
7 ஆம் வகுப்பிற்கு வினாத்தாள் 4 பக்கம்...
8ஆம் வகுப்பிற்கு வினாத்தாள் 4 பக்கம் என்பதால் layout 2-up select செய்து 2-sided printing யில் short edge தேர்வு செய்து print கொடுக்கவும்..
மேலும் விவரங்களுக்கு மேலே உள்ள image-ஐ காணவும்...
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வரைபடத்தாள் (graph sheet) கடைகளில் வாங்கி கொள்ளவும்.....
Click here for latest Kalvi News
அனைத்து அரசு தொடக்க , நடுநிலை , உயர்நிலை & மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு ....
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான தகவல்களை சரிபார்க்க. கல்வித் துறையின் சார்பில் அழைப்பு மையம் ( Call Centre ) எண் 044-28201600 என்ற எண்ணிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்று சரியான விவரங்களை வழங்கவும்.
Click here for latest Kalvi News
எண்ணும் எழுத்தும் பாடத்திட்டத்தில், மாணவர்களின் புரிதல் திறன் மேம்பட்டுள்ளதா என்பதை அறிய, 132 பள்ளிகளில் சர்வே நடப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்றுக்கு பின் ஏற்பட்ட, கற்றல் இடைவெளி போக்க, தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு, 'எண்ணும் எழுத்தும்' என்ற பெயரில், புதிய பாடத்திட்டம் உருவாக்கி சொல்லி தரப்படுகிறது. இப்பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பும், வரவேற்பும் கிடைத்துள்ள நிலையில், சர்வே மேற்கொள்ளப்படுகிறது.
வட்டார வாரியாக பள்ளிகளை, 'ரேண்டம்' முறையில் தேர்வு செய்து, முதுகலை ஆசிரியர் ஒருவர் தலைமையில், பி.எட்., மாணவர்கள் ஈடுபடுத்தி சர்வே எடுக்கப்படுகிறது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில், 15 வட்டாரங்களில், 132 பள்ளிகளில், சர்வே எடுக்கும் பணிகள் நடக்கின்றன. வரும் 14ம் தேதி வரை, சர்வே தகவல்கள், செயலியில் பதிவேற்றப்படும். இத்தகவல்கள் அடிப்படையில், இரண்டாம் பருவ கற்பித்தல் முறைகள் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.
Click here for latest Kalvi News
எண்ணும் எழுத்தும் -2023-24 வகுப்பு 1,2 & 3 - இரண்டாம் பருவம் பயிற்சி கால அட்டவணை - ( 03.10.2023 , 04.10.2023 )
Click here for latest Kalvi News
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இறகுப் பந்து போட்டி நடைபெறும் நாள் 01.10.2023
🏸பங்குபெறும் ஆசிரியர்கள் பதிவு செய்ய கடைசி நாள் 29.09.2023
🏸விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் 👇👇👇👇👇👇👇👇
.https://forms.gle/dZeg9u7DimbjLuks6
தொடர்பு கொள்ள:
1.Arunkumar - 9786884566
2.Saravanan - 9597063944
3.Niganandhan - 9894391864
4.Jayaselan - 7010007298
Location👇
https://maps.app.goo.gl/5eB9ihiyEGWMpuvj7
Click here for latest Kalvi News
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கும் விதமாக " ஊராட்சி மணி " அழைப்பு மைய எண் : 155340 வழங்கப்பட்டுள்ளது - மாவட்ட அளவில் தொடர்பு அலுவலராக ( Nodal Officer ) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வார்ச்சி ) நியமிக்கப்பட்டுள்ளது.
Proceeding Letter👇
Click here for latest Kalvi News