School Morning Prayer Activities - 19.09.2023

 .com/

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19.09.2023


 திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : தவம்

குறள் :262


தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை

அஃதிலார் மேற்கொள் வது.


விளக்கம்:


தவம் செய்வது தவம் செய்ய வல்லவருக்கு மட்டுமே இயலும் மற்றவர் முயற்சிப்பது பயன் தராது.


பழமொழி :

Cut your coat according to your cloth


வரவுக்குத் தக்க செலவு செய்


இரண்டொழுக்க பண்புகள் :


1. எனது நோட்டில் உள்ள காகிதம் அல்லது பேப்பர் கிழிக்க மாட்டேன்.


2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.


பொன்மொழி :


மற்றவர்களிடம் பழகும் வித்தையையும், ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே ஒருவன் கற்றுக்கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன். தந்தை பெரியார் 


பொது அறிவு :


1. உலகிலேயே  ஆழமான ஆழி எது?


விடை: மரியானா ஆழி


2.உலகில் மிகப்பெரிய மலர் இனம் எது?


விடை: ரப்லேசியா அர்னால்டி


English words & meanings :


 revitalize -restore strength புத்துயிர் ஊட்டு. aggression -violent behaviour வலுச்சண்டைக்குப் போதல்


ஆரோக்ய வாழ்வு : 


கொண்டைக்கடலை:சாதாரணமாக இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு உணவாக கொண்டைக் கடலை உள்ளது. அதனால் அதிகப்பட்சமான மக்கள் கொண்டை கடலையை சுவைத்திருப்போம். கார்பன்சோ பீன்ஸ் என அழைக்கப்படும் கொண்டைக் கடலை புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து ஆகியவற்றை மிகுதியாக கொண்டுள்ளது.


செப்டம்பர் 19 இன்று


சுனிதா வில்லியம்ஸ் அவர்களின் பிறந்தநாள்


சுனிதா வில்லியம்ஸ் (பிறப்பு: செப்டம்பர் 19, 1965) ஒரு அமெரிக்க விண்வெளி வீராங்கனையும் கப்பல்படை அதிகாரியும் ஆவார்[1]. இவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14ம் விண்வெளிப் பயணத்திற்கு உறுப்பினராக்கப்பட்டார், பின் அவர் 15ம் விண்வெளி பயணத்தில் இணைந்தார். விண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் விண்வெளியில் பயணம் செய்த சாதனையை (195 நாட்கள்) அவர் கொண்டிருக்கிறார்.


நீதிக்கதை


பழனியாண்டிக்கு சொந்தமாக வயல் ஒன்று இருந்தது. மற்றவர்கள் எல்லாம் வயலில் உழுகின்ற நேரம் பழனியாண்டி தன் வயலைப் பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் சும்மாவேயிருந்தான். இதனைக் கவனித்த பழனியாண்டியின் மனைவி வயலில் ஏர்கலப்பை பூட்டி உழும்படி கூறினாள். பழனியாண்டி அதனை ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டு விட்டான் . மற்ற விவசாயிகள் எல்லாம் வயலில் நீர் பாய்ச்சி விவசாய வேலையை ஆரம்பித்தார்கள். அதனைக் கண்ட பழனியாண்டி நமது வயலில் பின்னர் விவசாயம் செய்து கொள்ளலாம் என்று சும்மாவே இருந்து விட்டான்.அதனைக் கண்டு பழனியாண்டியின் மனைவிக்கு ஆத்திரமாக வந்தது. பழனியாண்டியை விவசாயம் செய்யும்படி வற்புறுத்தினாள்.சோம்பேறியான பழனியாண்டி அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று சும்மாவே இருந்துவிட்டான். பழனியாண்டியின் வீட்டிலிருந்த அரிசி மூட்டையில் உள்ள அரிசியெல்லாம் காலியாகத் தொடங்க, அவன் சாப்பாட்டிற்கு அரிசி வாங்க பணம் இல்லாமல் திண்டாடினான்.


அறுவடை காலம் நெருங்கியதும் மற்ற விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த நெற்கதிர்களை அறுத்து, நெற்குவியல்களை மூட்டை மூட்டையாக எடுத்துச் சென்றார்கள்.அதனைப் பார்த்து பழனியாண்டியால் பொறாமைப் படத்தான் முடிந்தது. குறித்த காலத்தில் விவசாயம் செய்து முடிக்காததால் தன் குடும்பம இன்று வறுமையில் வாடுகிறதே என்று கவலையடைந்தான்.


இனிமேல் எந்த வேலையையும் காலம் பார்த்து செய்ய வேண்டுமென்று தன்னைத் திருத்திக் கொண்டான்.


நீதி:


பருவம் பார்த்து பயிர் செய்வதுபோல் எந்தச் செயலையும் காலம் பார்த்து உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும்.


இன்றைய செய்திகள் - 19.09.2023


*விடை பெற்றது பாராளுமன்ற பழைய கட்டிடம். புதிய கட்டிடத்தில் இன்று கோலாகல விழா.


*காலாண்டு தேர்வு இன்று தொடக்கம்: பொதுவான ஒரே வினாத்தாள் முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.


*நிபா வைரஸ்: கடந்த இரண்டு நாட்கள் பாசிட்டிவ் இல்லை. கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி.


*திருப்பதி ரூ. 650 கோடியில் ஆறு கிலோமீட்டர் நீள மேம்பாலம் திறப்பு:

பஸ் நிலையத்தில் இருந்து மலையடிவாரம் வரை எளிதில் செல்லலாம்.


*கரீபியன் பிரீமியர் லீக்: ஒரே ஓவரில் 32 ரன்கள் குவித்த 

சாய்ஹோப்.


*21 ரன்னுக்கு ஆறு விக்கெட் ஒரே போட்டியில் பல சாதனைகளைப் படைத்த சிராஜ்.


Today's Headlines


*Valediction was given to Parliament Old Building. Grand ceremony  will  be there in the new building,Today.


 *Quarterly Exam Starts Today: Common Single Question Paper System is being implemented again.

 * Nipah virus: No positive for last two days.  Kerala State Health Minister.


 * Reopen of Rs.  650 crore  six kilometer long flyover in Tirupathi:

Will have easy access from the bus station to the foothills.


 *Caribbean Premier League: Scored 32 runs in one over

 Saihope.


 * Six wickets in 21 runs , player Siraj who set many records in one match today.

 Prepared by


Covai women ICT_போதிமரம்


Click here for latest Kalvi News 

3 Days All CEO's Review Meeting - September Schedule & DSE Proceedings

 IMG_20230916_185857

பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 21.09.2023 , 22.09.2023 மற்றும் 23.09.2023 ஆகிய நாட்களில் திருச்சியில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது . கூட்டம் நடைபெறும் இடம் குறித்த விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் . மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( இடைநிலை ) , மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக்கல்வி ) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தனியார் பள்ளிகள் ) ஆகியோர் மடிக்கணினி மற்றும் கூட்டப் பொருள் சார்ந்த விவரங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கலாகிறது . திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்.


3 Days All CEO's Review Meeting - September Schedule & DSE Proceedings. - Download here



Click here for latest Kalvi News 

காலாண்டு பொது தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்வது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

 IMG_20230916_205722

காலாண்டு பொது தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்வது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Question Paper Download Instruction - Download here



Click here for latest Kalvi News 

தமிழ்நாட்டை பின்பற்றும் தெலங்கானா… காலை உணவுத் திட்டம் அறிமுகம்!

 


kamadenu%2F2023-09%2F734af399-2a36-42a3-a910-aa0ce78aae6d%2Fmor_meal.jpg?auto=format%2Ccompress&fit=max&format=webp&w=400&dpr=3

தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானா அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது.


தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் மாநிலம் முழுவதும் தற்போது அமலில் உள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள பள்ளிகளில் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், பின்னர் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.


காலை உணவுத் திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானா அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்க உள்ளது. திட்டம் குறித்து அறிந்து கொள்ள அண்மையில் தெலங்கானா மாநில அதிகாரிகள் சென்னை வந்திருந்தனர்.


இந்நிலையில், தெலங்கானா முழுவதும் அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 2ம் தேதி முதல் சத்தான காலை உணவு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மாணவர்களுக்கு தசரா பரிசாக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தைக் கொண்டு வருவதாக அம்மாநில ஆளுங்கட்சியினர் கூறியுள்ளனர். இத்திட்டத்திற்காக தெலங்கானா அரசு ஆண்டுக்கு ரூ.400 கோடி செலவிட உள்ளது.


Click here for latest Kalvi News 

CTET AUGUST 2023 - KEY & OBJECTIONS TRACKER RELEASED

Project Veer Gatha 3.0"-பள்ளி அளவில் போட்டிகள் நடத்தி இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது எவ்வாறு?

 

Project Veer Gatha 3.0"-பள்ளி அளவில் போட்டிகள் நடத்தி இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல்- நினைவூட்டல்


பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு...


அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நான்கு பிரிவுகளில் 


Category 1 : 3 to 5 classes


Category 2: 6 to 8 classes,


Category 3 : 9 to 10 classes  மற்றும்


Category 4 : 11 to 12 classes

மாணவர்களுக்கு

கவிதை, கட்டுரை, ஓவியம், வண்ணம் தீட்டுதல், மல்டி மீடியா பிரசன்டேஷன் ஆகிய தலைப்புகளில் பள்ளியளவில் போட்டிகள் நடத்தி ஒவ்வொரு பள்ளிக்கும் மொத்தமாக (incuding all 4 categories) நான்கு சிறந்த வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்து.


 My Gov Portal என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.


 பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு 15.09.2023 க்குள், "My Gov Portal" லில் 4 best entries பதிவேற்றம் செய்ய வேண்டும்.


பள்ளி அளவில் ஒரு போட்டி பிரிவிற்கு ஒரு சிறந்த போட்டியாளரை தேர்ந்தெடுத்து, அவரின் படைப்பை இணையதளத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் ஒரு பள்ளிக்கு அனைத்து போட்டி பிரிவுகளையும் உள்ளடக்கி 4 பதிவேற்றங்கள் மட்டுமே செய்யப்பட வேண்டும்(one best from each category) 


 Category 1: class 3 to 5- 01 best entry


 Category 2: class 6 to 8- 01 best entry


 Category 3: class 9 to 10- 01 best entry


 Category 4: class 11 to 12- 01 best entry


எடுத்துக்காட்டாக,தங்கள் பள்ளியில் மூன்று பிரிவுகள்(category 1,2,3) உள்ளபட்சத்தில் கூடுதலாக ஏதாவது ஒரு பிரிவில் ஒரு பதிவினை மேற்கொள்ளலாம்.


எடுத்துக்காட்டாக,தங்கள் பள்ளியில் இரண்டு போட்டி(category 2,3) பிரிவுகள் உள்ள பட்சத்தில் கூடுதலாக இரண்டு பதிவுகளை ஒவ்வொரு போட்டி பிரிவிலும் அதிகரித்துக் கொள்ளலாம்.


ஆகவே ஒவ்வொரு பள்ளியும் அதிகபட்சமாக நான்கு பதிவுகள் மட்டுமே இணையதளம் வாயிலாக மேற்கொள்ள வேண்டும்.


அரசின் வீர சாகச விருதுகள் பெற்ற வெற்றியாளர்களைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் நடத்தப்பட வேண்டும்.


Suggestive topics:


1.My role model is(Gallantry Award winner)......The values which I have learnt from his/her life are....


OR


2........(Gallantry Award Winner) gave the supreme sacrifice for our nation.If given a chance for keepingg his/her memory alive,I would like to......


OR


3.Rani Lakshmibai came in to my dream.She wanted me to serve nation by .......


OR


4.  1857 Mutiny has been marked as First war of Indian independence.The life story of .......(name of freedom fighter) motivates me to........


OR


5.Role of Tribal Uprising in Freedom struggle.


மேற்குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் கவிதை, கட்டுரை, ஓவியம், வண்ணம் தீட்டுதல், மல்டிமீடியா பிரசன்டேஷன் ஆகியவை இணைப்பில் உள்ள வழிகாட்டுதலில் கூறியுள்ளபடி நடத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது இணைப்பில் உள்ள கடிதத்தில் எவ்வாறு மதிப்பெண்கள் வழங்கிட வேண்டும் என்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.ஒரு போட்டிக்கு அதிகபட்ச மதிப்பெண் 16 ஆகும்.


எனவே,அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளி அளவில் மாணவர்களுக்கு போட்டிகளை நடத்தி மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் ஒரு பள்ளிக்கு 4 சிறந்த பதிவுகளை மட்டும் பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது இதில் தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Click here for latest Kalvi News 

1 - 5th Std | Summative Assessment , Term - 1 | Tips

 தொகுத்தறி மதிப்பீடு - Summative Assessment , Term - 1 

இன்று 14.09.2023 துவங்குகிறது...

IMG-20230914-WA0011

IMG-20230914-WA0012



Click here for latest Kalvi News 

SUMMATIVE ASSESSMENT TERM-1 ENABLED IN TNSED SCHOOLS

 1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீட்டு அட்டவணை


1-3 ஆம் வகுப்பு


தமிழ், ஆங்கிலம், கணக்கு


14-09-2023 முதல் 22-09-2023 வரை


4 & 5 ஆம் வகுப்பு


தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல்,சமூக அறிவியல்


14-09-2023 முதல் 27-09-2023 வரை


Click here for latest Kalvi News 

பள்ளிகளில் இரண்டாம் கட்டமாக கலைஞர்களைக் கொண்டு கலையரங்கம் நடத்துதல் - மாவட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி SPD உத்தரவு

 IMG_20230914_203010

பள்ளிக் கல்வித் துறை 2023-2024ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில் இரண்டாம் கட்டமாக கலைஞர்களைக் கொண்டு கலையரங்கம் நடத்துதல் மாவட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்ந்து SPD Proceedings ...

Kalai Arangam_ Phase II 2023-24 Approved- Proceedings

Click here


Click here for latest Kalvi News 

TNSED Schools செயலியை நாளை 15.09.23 பயன்படுத்த வேண்டாம் - TN EE mission Team

 IMG-20230914-WA0037

ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம் 

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு,நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொகுத்தறி மதிப்பீட்டினை நடத்தும் பொழுது, ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகளை களையவும், சரியான முறையில் கால விரயம் ஏற்படாமல் ஒவ்வொரு மாணவர்களுக்கும் மதிப்பீட்டினை நடத்திட ஏதுவாக செயலியானது19.09.23  முதல் செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. நாளை 15.09.23 செயலியை பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்.

                              நன்றி

                   State coordinator

     .              .TN EE mission


Click here for latest Kalvi News 

தொடக்கக் கல்வித் துறையில் இருந்து சென்னை மாநகராட்சித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு துறை மாறுதலில் செல்ல இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 IMG_20230914_210311

தொடக்கக் கல்வித் துறையில் இருந்து சென்னை மாநகராட்சித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு துறை மாறுதலில் செல்ல இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

DEE -Unit Transfer Proceedings

Click here


Click here for latest Kalvi News 

NAS LO - 6th, 7th, 8th, 9th Learning Outcomes Question Paper with Answer Keys

 


 


Click here for latest Kalvi News 

Lok Sabha Election 2024 - Patriculars of Polling Personnel Form

 images%20-%202023-09-12T210937.415

மக்களவை தேர்தல் 2024 - கல்வித்துறை சார்பாக அலுவலகம் மற்றும் அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / அலுவலர்கள் சார்பான விவரங்களை பூர்த்தி செய்யும் படிவம்..

Lok Sabha Election 2024 - Patriculars of Polling Personnel Form - Download here


Click here for latest Kalvi News 

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடுகள் வழங்குதல் - SPD செயல்முறைகள்!

 IMG_20230913_121421

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடுகள் வழங்குதல் - SPD செயல்முறைகள்!

CG Book Distribution Proceedings - Download 


Click here for latest Kalvi News 

உயர் கல்வி வழிகாட்டி வகுப்பு- நுழைவுத் தேர்வு தொடர்பான விவரங்கள் - SPD செயல்முறைகள்!

 IMG_20230913_121215

உயர் கல்வி வழிகாட்டி வகுப்பு- நுழைவுத் தேர்வு தொடர்பான விவரங்கள் - SPD செயல்முறைகள்!

CG Class Proceeding - Download 



Click here for latest Kalvi News 

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் பள்ளி மேம்பாட்டுக்கு ரூ.126.4 கோடி நிதி ஒதுக்கீடு

 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் பள்ளி மேம்பாட்டுக்கு ரூ.126.4 கோடி ஒன்றிய கல்வி அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பள்ளி மேலாண்மை குழுவின் வங்கி கணக்கில் 3 நாட்களில் வரவு வைக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஆணையிட்டுள்ளனர். 


1 முதல் 30 மாணவர் உள்ள பள்ளிக்கு ரூ.10,000, 31 முதல் 100 பேர் உள்ள பள்ளிக்கு ரூ.25,000-ம் ஒதுக்கீடு செய்து உத்தரவு அளித்துள்ளனர். 101 பேர் முதல் 250 பேர் வரை உள்ள பள்ளிக்கு ரூ.50,000, 251 பேர் முதல் 1000பேர் வரை உள்ள பள்ளிக்கு ரூ.75,000 ஒதுக்கீடு செய்தும் 1000 மாணவர்களுக்கு அதிகமாக உள்ள பள்ளிக்கு ரூ. 1 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது


Click here for latest Kalvi News 

Ennum Ezhuthum - Term 2 - Block Level Training Schedule | ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதி அறிவிப்பு!

 Ennum Ezhuthum - Term 2 - Block Level Training Schedule |ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதி அறிவிப்பு!






Click here for latest Kalvi News