பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.09.2023

 

இந்திய அறிவியல் கழகம் 
Indian Institute of Science (IISC)


திருக்குறள் :

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்

அதிகாரம் : புலால் மறுத்தல்

குறள் :253

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.

விளக்கம்:

படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல

பழமொழி :

Brids of same feather flock together

இனம் இனத்தோடு சேரும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :

நான் உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்குக்
கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்
பட்டிருக்கிறேன். – மாவீரன் அலெக்ஸôண்டர்

பொது அறிவு :

1 ஈராக் நாட்டின் தலைநகரம்

விடை: பாக்தாக்

2. இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம்?

விடை: பெங்களூர்

English words & meanings :

 ideal - உயர்ந்த சிந்தனையுள்ள inoculate- நோய்த்தடுப்பு ஊசி

ஆரோக்ய வாழ்வு : 

சோம்பு:சாப்பிட்டதக்கு அப்புறம் தினமும் கொஞ்சம் சோம்ப எடுத்து வாயில போட்டு மென்னு, சாற கொஞ்சம் கொஞ்சமா விழுங்கி வந்தா உணவு சீக்கிரமா ஜீரணமாகும். அதோட வாயுத் தொல்லையும் சரியாகும்.

நீதிக்கதை

உண்மையே உயர்வு.

மருதமலை நாட்டை நேர்மையான அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் ஒருநாள் மாறுவேடத்தில் நகரத்தைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்.

இரவு நேரம், இளைஞன் ஒருவன் அரண்மனையை நோக்கி வருவதைப் பார்த்தார்.

“தம்பி! நீ யார்? இந்த நள்ளிரவு நேரத்தில் அரண்மனைக்கு எதற்காகச் செல்கிறாய்?” என்று கேட்டார்.

“திருடச் செல்கிறேன்” என்றான் அவன்.

“திருடுபவன் எவனாவது உண்மையைச் சொல்வானா? அப்படிச் சொன்னால் சிக்கிக் கொள்ள மாட்டானா” என்று கேட்டார் அரசர்.

“திருடனான என்னிடம் எல்லாத் தீய பழக்கங்களும் இருந்தன. என் தாய் என்னைத் திருத்த முயற்சி செய்தார். அவரால் முடியவில்லை. சாகும் நிலையில் இருந்த அவர் என்னை அழைத்தார். எப்போதும் உண்மையே பேச வேண்டும் என்று என்னிடம் வாக்குறுதி வாங்கினார். அவரின் நினைவாக, அந்த வாக்குறுதியைக் காப்பாற்றி வருகிறேன்” என்றான் திருடன்.

“தம்பி! நீ அரண்மனையில் திருட நான் உதவி செய்கிறேன். கிடைப்பதில் பாதிப் பங்கு எனக்கு தர வேண்டும்” என்றார் அரசர்.

திருடனும் ஒப்புக் கொண்டான். அரண்மனைக் கருவூலத்திற்குள் எப்படி நுழைவது என்று சொல்லித் தந்தார் அவர்.

கருவூலத்திற்குள் சென்ற அவன் இரண்டு வைரங்களுடன் வந்தான்.

“கருவூலத்தில் மூன்று வைரங்கள் இருந்தன. மூன்றையும் இழந்தால் அரசர் வருந்துவார். அதனால் ஒன்றை அங்கேயே வைத்துவிட்டு இரண்டை எடுத்து வந்தேன். உம் பங்கிற்கு ஒன்று” என்று ஒரு வைரத்தை அரசரிடம் தந்தான்.

மறுநாள் அரியணையில் வீற்றிருந்தார் அரசர். பரபரப்புடன் அங்கே வந்த அமைச்சர்,அரசே! கருவூலத்தில் இருந்த வைரங்கள் மூன்றும் திருடு போய்விட்டன” என்றார்.

“மூன்று வைரங்களுமா திருடு போய் விட்டன?” என்று கேட்டார் அரசர்.

“ஆம் அரசே” என்றார் அமைச்சர்.

“திருடன் பொய் சொல்லி இருக்க மாட்டான். எஞ்சிய ஒரு வைரத்தை இவர்தான் திருடி இருக்க வேண்டும்” என்று நினைத்தார் அரசர்.

வீரர்களை அழைத்த அவர், “அமைச்சரைச் சோதனை இடுங்கள்” என்று கட்டளை இட்டார்.

வீரர்கள் அவர் இடுப்பில் ஒளித்து வைத்திருந்த வைரத்தை எடுத்தனர்.

“வீரர்களே! இன்ன இடத்தில் இன்ன பெயருடைய இளைஞன் இருப்பான் அவனை அழைத்து வாருங்கள்” என்று கட்டளை இட்டார்.

அவர்களும் அவனை அழைத்து  வீற்றிருந்தவரைப் பார்த்தான் திருடன். நேற்றிரவு தன்னைச் சந்தித்தவர் அவர் என்பதை அறிந்தான்.

என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ என்று நடுங்கினான்.

“அமைச்சரே! இவன் திருடனாக இருந்தும் உண்மை பேசினான். நேர்மையாக நடந்தும்s கொண்டான். நீர் அமைச்சராக இருந்தும் திருடினீர். பொய் சொன்னீர். அதற்காக உம்மைச் சிறையில் அடைக்கிறேன்.

“இளைஞனே! திருட மாட்டேன் என்று வாக்குறுதி கொடு உன்னை அமைச்சராக நியமிக்கிறேன்” என்றார் அவர்.

“அரசே! வறுமையில் வாடியதால் திருடினேன். இனி திருட மாட்டேன்” என்றான் திருடன்.

அவனைப் பாராட்டி அந்நாட்டின் அமைச்சராக நியமித்தார் அரசர்.


உண்மையே என்றும் உயர்வு தரும்.

இன்றைய செய்திகள்

04.09.2023

*சென்னையின் பல இடங்களில் கனமழை - மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு.
தமிழகம் புதுச்சேரியில் ஆறு நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு.

*வாணியம்பாடியில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு.

*' ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆய்வு பணி தொடக்கம் விரைவில் அறிக்கை தாக்கல்.

*காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மறு ஆய்வு மனு தாக்கல்.

* ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது - இஸ்ரோ தகவல்.

*ஜிம்பாவே முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழப்பு - பிரபலங்கள் இரங்கல்.

 *ஆசிய ஆண்கள் 5 பேர் ஹாக்கி - பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.

Today's Headlines

*Heavy rain in many parts of Chennai - City Commissioner Radhakrishnan survey.
 Tamil Nadu Puducherry is likely to receive six days of light rain.

 * One person died due to swine flu in Vaniyambadi.

 * 'One country, one election' survey work to start, report to be submitted soon.

 *Karnataka government filed a review petition in the Cauvery Management Authority.

 * Aditya L-1 spacecraft successfully lifted into orbit - ISRO informs.

 *Zimbabwe Star cricketer Heath Streak passed away   - Celebrities mourn.

  *Asian  5 men's hockey - India beat Pakistan and won the title.
 Prepared by

Covai women ICT_போதிமரம்




எண்ணும் எழுத்தும் - வகுப்பு 1 முதல் 3 வரை பாடக்குறிப்பினை (Lesson plan) கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம் - RTI Reply

 எண்ணும் எழுத்தும் - வகுப்பு 1 முதல் 3 வரை பாடக்குறிப்பினை (Lesson plan) கணிணியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம் - RTI Reply Letter ..





செப்டம்பர் 2023 மாத ஆய்வுக் கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

 செப்டம்பர் 2023 மாத ஆய்வுக் கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்டம் சிறப்பாக  செயல்பட்டு, மூன்றாமிடம் பெற்றதற்கான பாராட்டு சான்றிதழ்  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.






டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது மாநில தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா 05.09.2023 - DSE Proceedings

 IMG_20230903_075709

டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது மாநில தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா 05.09.2023 நடைபெறுதல் தகவல் தெரிவிக்க கோருதல் சார்பு

State Award 2022-2023 Proceedings - Download here





ஆசிரியர் பணிக்காக, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!!

 ஆசிரியர் பணிக்காக, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, புதிய மதிப்பெண் முறை தயார்....

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:

Click here




Dr Radhakrishnan Award 2023 - Selected Teachers List School Education Published

 


images(8)

Dr Radhakrishnan Award 2023 - Selected Teachers List 

திருச்சி மாவட்டம் - Download here

கிருஷ்ணகிரி மாவட்டம் - Download here

இராணிப்பேட்டை மாவட்டம் - Download here

திண்டுக்கல் மாவட்டம் - Download here

Other District list will be soon...

அனைத்து மாவட்டங்களை சேர்ந்த விருது பெறும் ஆசிரியர்கள் பட்டியல் உரிய முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல். பட்டியல் கிடைத்தவுடன் பதிவிடப்படும்.



டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா அழைப்பிதழ்

 

IMG_20230902_164259

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா அழைப்பிதழ் - பள்ளிக் கல்வித்துறை நிகழ்ச்சி நிரல்...

 Invitation 2023 - Download hereo



Ennum Ezhuthum - 1,2,3 Std - Term 1 - Module 4,5,6 Revision Lesson Plan

Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024

Term 1 Lesson Plan

September 2023

Ennum Ezhuthum - 1,2,3 Std -  Term 1 - Module 4,5,6 Revision Lesson Plan - T/M - Download here



CEO - கூடுதல் பொறுப்பு - ஆணை வெளியீடு.

 

பள்ளிக் கல்வி - கூடுதல் பொறுப்பு - திருவாரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் திரு.அ.புகழேந்தி மற்றும் திரு.து.கணேஷ்மூர்த்தி ஆகியோர்கள் முறையே 03.09.2023 முதல் 10.09.2023 முடிய மற்றும் 05.09.2023 முதல் 10.09.2023 முடிய நாட்களில் வெளிநாட்டில் மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா மேற்கொள்ள இருப்பதால் - முழுக்கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் செய்து ஆணை...





மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி - Hi-Tech Lab Link - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

 

IMG_20230901_222031

மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி - Hi-Tech Lab Link - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

Hi-Tech Lab Link - Reg - Download here



நான் முதல்வன் திட்டம்!. UPSC தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

 UPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறுவதற்கு மதிப்பீட்டு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது அவசியம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் யுபிஎஸ்சி தேர்வு தயாராகும் மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறுவதற்கு மதிப்பீட்டு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது அவசியம் என அரசு தெரிவித்துள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாதம்தோறும் 7,500 வீதம் பத்து மாதங்களுக்கு உதவி தொகை வழங்கப்படும்.


தமிழக மாணவர்கள் குடிமைப் பணிகளுக்கான தேர்வில் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக இந்த ஊக்கத்தொகை திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. அண்மையில் இந்த மதிப்பீட்டு தேர்வுகள் குறித்த அறிவிப்பு ஆன்லைன் மூலமாக வெளியிடப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 10ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களின் பதிவு எண் உள்ளிட்ட ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



6 - 8th Std Learning Outcome / Competency Based Test Key Answer - Pdf

 .com/

கற்றல் விளைவு திறன் வழி மதிப்பீட்டு தேர்வு விடை குறிப்பு


தமிழ் வழி & ஆங்கில வழி


6 - 8th Std Learning Outcome / Competency Based Test Key Answer - Pdf


கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.

👇👇👇👇👇👇

6th Std - Download here


7th Std - Download here


8th Std - Download here





list of Schemes in School Education

பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள்

 list of Schemes in School Education pdf - Download here



 

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு நழுவ விடாதீர்

 

இணைய வழி கூட்டத்தில் மதிப்புமிகு சிறப்பு பணி அலுவலர்(OSD)  இல்லம் தேடி கல்வித் திட்ட சிறப்பு பணி அலுவலர் ஐயா அவர்கள்  தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்.


📌 TNeGA மூலம் இ-சேவை மையம் தொடங்க இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு ஏற்கனவே வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாம் பணியினை சிறப்பாக பணியாற்றியதற்காக தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.


📌 தற்போது இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் *எந்தவித கட்டணமும் இன்றி* இ- சேவை மையத்தை தொடங்கலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. (ஏற்கனவே இ சேவை மையம் தொடங்க கிராமப்புறங்களில் ₹3000, நகர்ப்புறங்களில் ₹6000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது)


📌இ-சேவை மையம் தொடங்க விரும்பும் தன்னார்வலர்கள் நம் இல்லம் தேடி கல்வி செயலிலேயே(App) விருப்பத்தை தெரிவிப்பதற்கான வசதி உள்ளது.


📌 அதன் பின்னர் இ-சேவை மையம் தொடங்க தேவையான வழிகாட்டுதல்கள்,பயிற்சிகள் ஆகியவற்றை TNeGA மூலம் பெற்று வழங்க ஏற்பாடு செய்யப்படும்.


📌 இ-சேவை மையம் மூலம் 200 க்கும் அதிகமான சேவைகளை பொது மக்களுக்கு வழங்குவதன் மூலம் ஒரு நிரந்தர வருமான வாய்ப்பாக தன்னார்வலர்கள் அமைத்துக் கொள்ள முடியும்.


📌 முக்கியமாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மகளிர்க்கான உரிமை தொகை இ-சேவை மையம் மூலமாக வழங்கப்பட இருப்பதால்  தன்னார்வலர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அவர்கள் இருப்பிடத்திலேயே இ-சேவை மையங்களை தொடங்கி பயன் பெறலாம்.


' எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' - பள்ளித் தூய்மை உறுதிமொழி

 அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் செப்டம்பர் 1,2023-லிருந்து ஒவ்வொரு வாரமும் வாரத்தின் முதல் நாளன்று, பள்ளித்தூய்மை உறுதிமொழி கட்டாயம் இறைவணக்கத்தில் எடுத்தல் – தொடர்பாக  பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு!






Ennum Ezhuthum - மூன்றாம் தரப்பு மதிப்பீடு - பள்ளிக் கல்வித் துறையானது ஒரு முதுகலை பட்டதாரி ஆசிரியரை (PGT) ஒரு கணக்கெடுப்பாளர் குழுவில் பணியமர்த்த SCERT இயக்குநர் உத்தரவு.

 

IMG_20230831_221822

எண்ணும் எழுத்தும் (Ennum Ezhuthum) திட்டம் - தாக்க மதிப்பீடு - மூன்றாம் தரப்பு மதிப்பீடு - பள்ளிக் கல்வித் துறையானது ஒரு முதுகலை பட்டதாரி ஆசிரியரை (PGT) ஒரு கணக்கெடுப்பாளர் குழுவிற்குப் பணியமர்த்த வேண்டும் - தாக்க மதிப்பீட்டை வழிநடத்த முதுகலை ஆசிரியர்களை ஒதுக்கக் கோரிக்கை - தொடர்பாக - SCERT இயக்குநரின் கடிதம்...


EE_Request PGT_ Impact Assessment - SCERT Letter - Download here



Ennum Ezhuthum - 4th & 5th August Month Assessment Questions - pdf Download

 

எண்ணும் எழுத்தும் முதல் பருவம் -2023-2024 ஆகஸ்ட் மாதத் தொகுத்தறிவு மதிப்பீடு.


Ennum Ezhuthum - 4th & 5th August Month Assessment Questions 


4th - Tamil Medium - Download here


4th - Eng Medium - Download here


5th - Tamil Medium - Download here


5th - English Medium - Download here




School Calendar - September 2023 ( Revised )

 2023 செப்டம்பர் மாதம் ஆசிரியர் டைரி


01.09.2023- வெள்ளிக்கிழமை

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்


02.09.2023- சனிக்கிழமை

BEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்


05.09.2023 - செவ்வாய்க்கிழமை

ஆசிரியர் தினம்.


06-09-2023 - புதன்கிழமை

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

(அரசு விடுமுறை)


09.09.2023- சனிக்கிழமை

DEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்


11.09.2023 முதல் 16.09.2023 வரை

தொல்லியல் பயிற்சி

(தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்)


14.09.2023 - வியாழக்கிழமை

1-5 வகுப்பு முதல் தொகுத்தறி மதிப்பீடு தொடக்கம்


16.09.2023- சனிக்கிழமை

CEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்


18.09.2023 திங்கள் கிழமை

விநாயகர் சதுர்த்தி (அரசு விடுமுறை)


19.09.2023 - செவ்வாய்க்கிழமை

6-8 வகுப்பு முதல் தொகுத்தறி மதிப்பீடு தொடக்கம்

(மாறுதலுக்கு உட்பட்டது)


22.09.2023 - வெள்ளிக்கிழமை 

1,2,3 வகுப்பு தொகுத்தறி மதிப்பீடு முடிவு.


25-09-2023 -முதல் 27-09-2023 வரை

EE -1,2,3 வகுப்பு ஆசிரியர்களுக்குப் பயிற்சி.


27-09-2023 - புதன்கிழமை

4,5 வகுப்பு தொகுத்தறி மதிப்பீடு முடிவு.

(முதல் பருவத் தேர்வு முடிவு)


28.09.2023 முதல் 02.10.2023 வரை

முதல் பருவ தேர்வு/ காலாண்டு விடுமுறை


03.10.2023 - செவ்வாய்க்கிழமை

இரண்டாம் பருவம் பள்ளிகள் திறப்பு



பள்ளி காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு - செப்.15 முதல் 27 வரை நடைபெறும்

 

தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் செப்.15 முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.


அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான (2023-24) நாட்காட்டியை பள்ளிக்கல்வித் துறை கடந்த ஏப்.28-ம் தேதி வெளியிட்டது. அதில் காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் செப்டம்பர் 3-வது வாரத்தில் தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி காலாண்டுத் தேர்வுக்கால அட்டவணை தற்போது வெளியாகிஉள்ளது.


அதன்படி, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்,15 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்படும். பிளஸ் 1 வகுப்புக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும், பிளஸ் 2 வகுப்புக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும்.


6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு செப்.19-ல் தொடங்கி 27-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு காலை 10 முதல் மதியம் 2.30 மணி வரையும், 9, 10-ம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும். 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான உடற்கல்வி தேர்வு செப்.22-ம் தேதி நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து செப்.28 முதல் அக்.2-ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மாநில வாரியாக வினாத்தாள்கள்: இதற்கிடையே பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் மாநிலவாரியாக தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த காலாண்டு தேர்வு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


இந்நிலையில், பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு அட்டவணையில் கணிதம், வணிகவியல் போன்ற முக்கிய பாடங்களுக்குத் தயாராக போதிய காலஅவகாசம் இல்லை. எனவே, அந்த தேர்வுகளை ஒருநாள் தள்ளி செப்.23-ம் தேதி நடத்த வேண்டும் என மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



செப்.10-ல் நான் முதல்வன் மதிப்பீட்டுத் தேர்வு - நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வெளியீடு

 


1115642

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

2023-24-க்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையில், நான் முதல்வன் திட்டத்தின்கீழ், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் 1000 மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.7,500 பத்து மாதங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அந்த வகையில், மதிப்பீட்டுத் தேர்வு செப்.10-ம் தேதி நடைபெறும் நிலையில், இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. நான் முதல்வன் ஊக்கத்தொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Breaking : விநாயக சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம் !!!

 விநாயகர் சதுர்த்தி விடுமுறை 17.09.2023 க்கு மாற்றாக 18.09.2023 விடுமுறை அளித்து அரசாணை வெளியீடு.


Public Holidays - Holiday for Vinayakar Chathurthi on 18.09.2023 ( Monday ) - Change in the date of observance of the festival - Revised Orders - issued


GO NO, : 528 Date : 31.08.2023 - Download here



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

CRC - பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி - SCERT செயல்முறைகள்

 9 & 10-ஆம் வகுப்பு கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி மாவட்ட அளவில் (24.08.2023& 25.08.2023) ஆகிய இரு நாட்களிலும் வட்டார அளவில் (28.08.2023& 30.08.2023) நடத்துதல் - தொடர்பாக SCERT செயல்முறைகள்....


SCERT Proceedings - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

SMC - செப்டம்பர் மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் - 01.09.2023 நடைபெறும்- SPD Proceedings

 IMG_20230821_214751


SMC - செப்டம்பர் மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 01.09.2023 வெள்ளிக்கிழமை நடைபெறுதல் சார்ந்து அதற்கான வழிகாட்டுதல்களை வழங்கி மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (நாள் 21.08.2023) 

 SMC - Sep 2023 - Meeting Proceeding - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

TNSED Manarkeni APP ( மணற்கேணி ) NEW UPDATE- 0. 17

 IMG_20230822_064918


TNSED Manarkeni APP  ( மணற்கேணி ) NEW UPDATE

Version 0. 17Date : 22.8.23


What's New

Evolution of science videos. 

Bug Fixes & Performance Improvements.


App Update  செய்ய Direct link👇👇👇

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedstudent.tnemis


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

Then chittu Magazine ( Date : 16.08.2023 to 31.08.2023 ) -School Education Published.

 


IMG_20230821_152912

தேன்சிட்டு - 16-31 ஆகஸ்ட் 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Then Chittu - 16-31 August 2023 


 Then chittu Magazine ( Date : 16.08.2023 to 31.08.2023 ) -School Education  -  Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News