பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.08.2023
School Morning Prayer Activities - 18.08.2023
Ennum Ezhuthum - 4th,5th Std - Term 1 - Module 10 Lesson Plan
Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024
August 2023
Click here to join whatsapp group for daily kalvinews update
வளரிளம் பருவக் கல்வி தொடர்பான பங்கேற்று நடித்தல் (Role Play) போட்டியினை நடத்துதல் சார்பாக SCERT இயக்குநரின் செயல்முறைகள்!
வளரிளம் பருவக் கல்வி தொடர்பான பங்கேற்று நடித்தல் (Role Play) போட்டி
ஒவ்வொரு ஆண்டும் , புதுடெல்லி , தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழிகாட்டுதல் மற்றும் நிதியுதவியுடன் வளரிளம் பருவக் கல்வி சார்ந்த பங்கேற்று நடித்தல் போட்டி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , அனைத்து 38 மாவட்டங்களில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ , மாணவியருக்கு பங்கேற்று , நடித்தல் பாட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது. இப்போட்டியை பள்ளி அளவிலும் , மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் , நடத்தப்பட்டு , மாதில அளவில் முதலிடம் பெறும் பள்ளி மாணவர் குழுவிற்கு ஆங்கிலத்தில் பங்கேற்று நடித்தல் செயல்பாடுகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு அக்குழு தென்மண்டல அளவில் பங்கேற்கும் . தென்மண்டல அளவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் மாநில அணிகள் புதுடெல்லியுள்ள NCERT ல்நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க வேண்டும்.
பங்கேற்று நடித்தல் போட்டி கீழ்க்காணும் ஐந்து தலைப்புகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட சூழ்நிலைகளில் நடத்தப்பட உள்ளது.
SCERT - Roleplay Proceedings - Download here..
Click here to join whatsapp group for daily kalvinews update
19.08.2023 - சனிக்கிழமை பள்ளி வேலைநாள் - Proceedings
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவரின் கடிதத்தின்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மேல்மருவத்தூர் , ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆடிப்பூரம் விழாவினை முன்னிட்டு கடந்த 21.07.2023 அன்று அனைத்துவகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
அந்நாளினை ஈடு செய்யும் விதமாக 05.08.2023 அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டது . தற்போது செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 05.08.2023 பதிலாக 19.082023 ( மூன்றாவது வாரம் ) அன்று பணி நாளாக அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில் வரும் 19.08.2023 சனிக்கிழமை செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்துவகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது . எனவே , செங்கல்பட்டு மாவட்ட தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் 19.08.2023 சனிக்கிழமை அன்று செயல்பட வேண்டும் என அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
Click here to join whatsapp group for daily kalvinews update
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் (CMBFS - Menu) - கிழமை வாரியாக வழங்கப்படும் உணவுகள்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் (CMBFS - Menu) - கிழமை வாரியாக வழங்கப்படும் உணவுகள் பட்டியல்...
வகுப்பு : 1 முதல் 5 வரை
நேரம்: காலை 8.15 மணி முதல் 8.50மணி வரை
Breakfast Scheme - Meals served day wise - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
Breaking : மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு.
ஆகஸ்ட் 18,19,20 மூன்று நாட்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் நடைபெறும் - இயக்குநரின் செயல்முறைகள்
நாளை ஆகஸ்ட் 18 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
ஆகஸ்ட் 18ஆம் தேதி ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் மீனவர்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.
EMIS UPDATE SCHOOL PAVILION PHOTO UPLOAD - VIDEO
EMIS UPDATE SCHOOL PAVILION PHOTO UPLOAD
நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் நமது பள்ளியின் சிறந்த புகைப்படங்களை EMIS வலைதளத்தில் UPLOAD செய்வதற்கான வழிமுறை வீடியோ...
அதற்கான EMIS LINK
https://emis.tnschools.gov.in/school/school-pavilionphoto
Click here to join whatsapp group for daily kalvinews update
Hi - Tech Lab Formative Assessment / Quiz for 6-12 | Class Teachers Question Generation & Allocation
HI TECH LAB OFFLINE ASSESSMENT/ QUIZ வகுப்பு 6 முதல் 12 வரை வகுப்பு ஆசிரியர்கள் தங்களது 8 இலக்க EMIS ID பயன்படுத்தி LOGIN செய்து தங்களது வகுப்பு மாணவர்களுக்கு OFFLINE QUESTION ALLOCATE செய்து DOWNLOAD செய்வதற்கான வழிமுறை
மாணவர்கள் HI TECH LAB இல் தங்களுடைய 10 இலக்க EMIS ID பயன்படுத்தி LOGIN செய்து QUIZ COMPLETE செய்வதற்கான வழிமுறை
Click here to join whatsapp group for daily kalvinews update
Unit Transfer - Seniority List Released - Available in Individual Login
அலகு விட்டு அலகு மாறுதல் - முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு - EMIS வலைதள தனிப்பட்ட உள்நுழைவில் அறியலாம்...
இனி Mobile App மூலம் Inspire Award க்கு விண்ணப்பிக்கலாம் - Mobile App direct link
இனி Mobile App மூலம் Inspire Award க்கு விண்ணப்பிக்கலாம்...
Mobile App direct link👇👇👇
https://play.google.com/store/apps/details?id=space.shortsqueeze.inspire.inspire_scholarship
Click here to join whatsapp group for daily kalvinews update
25.08.2023 முதல் காலை உணவுத்திட்டம் - அனைத்து மாவட்ட பள்ளிகளிலும் தொடங்குவது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
மாண்புமிகு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் , தமிழ்நாட்டில் நகர்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் தொடக்கப் பள்ளி மாணவ , மாணவியருக்கு விரிவுபடுத்தப்படுகிறது. அத்திட்டம் நாகை மாவட்டம் , திருக்குவளையில் 25.08.2023 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் துவக்கப்படுகிறது. அதே நாளில் அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் சார்ந்து , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை செயலாளர் அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பார்வை ( 2 ) ல் காணும் கடிதம் மூலம் ஆயத்த பணிகள் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மாவட்ட ஆட்சியரின் அறிவுரையினை பெற்று அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) தங்கள் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அத்திட்டத்தினை மேற்கொள்ள செயல்படுத்திட தக்க நடவடிக்கை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Click here to join whatsapp group for daily kalvinews update
School Morning Prayer Activities - 16.08.2023
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.08.2023
INDEPENDENCE DAY TAMIL -SPEECH -5 FILE-PDF
INDEPENDENCE DAY 5 -SPEECH FILE
INDEPENDENCE DAY SPEECH - 1 CLICK HERE -PDF
சுதந்திர தினம் - சுதந்திரப் போரில் இந்திய இதழ்கள் - இந்தியா , தினமணி இதழ்கள் - சிறப்புக் கட்டுரை
சுதந்திரப் போரில் இந்திய இதழ்கள்
15.08 .2023
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு...
இங்கு எல்லோரும் சமமென்பது .உறுதியாச்சு ....
வாள் கொண்டு போராடவில்லை வண்ண மைகொண்டு போராட்டக் களம் கண்டார் மகாகவி,சுதந்திர முழக்கமிட்டு சுடரொளியாக எட்டுத்திக்கும் எதிரொலிக்கச் சுதந்திரம் நிரந்தரமாகியதை அன்றே எண்ணி
" ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்"-- என்று பாடினார். அவர் தம் கனல் தெறிக்கும் கட்டுரைகள் மூலம் சுதந்திர வேட்கைக்கு வித்தூன்றி விருட்சமென படரச்செய்த பெருமை இதழ்களுக்கு உண்டு. இதழ்கள் என்பவை கருத்துகளையும், கொள்கைகளையும் பரப்பும் நிலையை மாற்றி ,விடுதலை வேட்கையும்,சுதந்திர உணர்வையும் எட்டுத்திக்கும் கொட்டும் முரசாக பயன்படுத்த பல ஆசிரியர்கள், அறிஞர்கள், புரட்சியாளர்கள்,எனப் பலரும் பயன்படுத்தும் களமாக இதழ்கள் இயங்கின.
ஆங்கிலேய அடிமைத்தளையை உடைத்தெறியும் ஊடகக் கருவியாக இவ்விதழ்கள் பயன்பட்டன. விடுதலை உணர்வையூட்டி தம் குறிகோளை பரப்பச்செய்யும் தளமாக் கொழுந்துவிட்டு எரிந்த சுதந்திர உணர்வுக்கு பேருதவியாக இருந்தது பத்திரிக்கைத்துறை. நாட்டைக் காக்கும் ஐந்தாம் படை இவ்வூடகங்கள் அல்லவா!. இவற்றை இயக்கும் ஆசிரியர்கள் சொல்லவொண்ணா இன்னல்களுக்கு ஆளாயினர். துன்பம் பல கண்ட போதும் ,துவண்டு விடாமல் தாய்நாட்டைக் காக்க ,தன் இறுதிவரை உறுதிபூண்டனர்என்பது இன்று நெகிழ்ச்சியான உண்மையன்றோ! அவற்றிலிருந்து ஒரு சில இதழ்களின் வரலாற்றை நினைவு கொள்வோம்....
இந்தியா: (1906)
விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு என்பது தமது துணிச்சலான செயலால் வெகுண்டெழுந்து முன் ஏராகச் சென்று ,எழுச்சிமிக்க இளைஞர்களைத் தன் பின்னோடு தொடரச் செய்து விடுதலை விடியல் கண்டிட சூளுரைத்தவர், கவிஞர், ஆசிரியர்,கட்டுரையாளர்,பகுத்தறிவாளர் எனப் பன்முக தன்மை கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி 1906- ஆம் ஆண்டு மே - 9 ம் நாள் இந்தியா என்னும் இதழைத் தொடங்கினார். இந்தியா வார இதழ் சென்னையிலும்,பின்பு புதுச்சேரியிலும் வெளிவந்து இந்தியர்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டியது. விழிப்புணர்வை கூட்டியது. இவ்விதழில் செய்திகளும், கட்டுரை களும்,தலையங்கங்களும் மட்டுமன்றி, அரசியலை விமர்சிக்கும் விதமாகக் கேலிச்சித்திரங்களும் வெளிவந்தன. இவை அரசியல் விமர்சனம் தந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முதன்மையான நிலையில் இருந்தது. இது ஆங்கிலேயரை அச்சத்தில் ஆழ்த்தியது.
இந்தியா - இதழில் புறநானூற்று வழி தமிழக தாய்களின் வீரம் செறிந்த செயல்கள் பற்றியும், இந்திய விடுதலை வேட்கையும்,மேலைநாட்டு போர் முறைகளும் , இயக்கங்கள் பற்றிய செய்திகளும் வெளிவந்தன. இவை இந்திய இளைஞர்களை விடுதலை கனல்தகிக்கும் தீயென கொழுந்து விட்டெரிந்தன . இவற்றைக் கண்டு அச்சம் கொண்ட பிரிட்டஷ் அரசு இவ்விதழ் வளர்ச்சிக்குத் தடைவிதித்தது. அரசாங்கத்தின் அசுர அடக்குமுறையால் புதுச்சேரிக்கு இடம் பெயர்ந்து இந்தியா.
தினமணி :(1934)
பாரதியாரின் இறப்பிற்குப் பிறகு சில ஆண்டுகள் கடந்த பின்பு 1934- ஆம் ஆண்டு செப்டம்பர் - 11- பாரதியின் நினைவு நாள் அன்று 'தினமணி ' இதழ் தொடங்கப்பட்டது. அதன் விலை அரையணா, பக்கங்களோ எட்டு. இதன் ஆசிரியர் விடுதலைப் போராளி டி.எஸ்.சொக்கலிக்கம் அவர்கள். தினமணி இதழில் சுதந்திர வேட்கையை தட்டி எழுப்பும் வகையில் கட்டுரைகளை எழுதியும், காந்தியக் கொள்கைகளில் ஈடுபாட்டுடனும் காணப்பட்டவர்.
இவ்விதம் தமிழ் மக்களின் நம்பிக்கை இதழாக தினமணிவளர்ச்சியடைந்தது.
இளம் இந்தியா : ( YOUNG INDIA- 1916)
இந்தியா என்றும் இளமையாக வளம்மிக்க செழிப்புடன் விளங்க வேண்டும் என்றும்,அந்நியரின் ஆதிக்க அதிகாரத்தை சிதைத்து துவைக்கும் வீரம் செறிந்து இளம் இந்தியாவாகவே திகழவேண்டி இப்பெயர் பெற்றிருக்கக் கூடுமோ,.. இளம் இந்தியா என்னும் இதழானது 1916- ஆம் ஆண்டு தொடங்ககப்பட்டது.பின்பு 1919 முதல் 1931 வரை மகாத்மா காந்தியால் வெளியிடப்பட்ட ஆங்கில வார இதழ் ஆகும்.இவ்விதழ் மூலம் காந்தி தமது சுதந்திர கொள்கையை பிரபலப்படுத்தினார். மகாத்மா தமது எழுத்துகளால் இளைஞர்களையும், நாட்டுப்பற்று உள்ளவர்களையும் ஊக்கப்படுத்தி ஒன்றிணைக்கும் முயற்சியைச் செவ்வனே செய்தார். இவ்விதமாக தமது தனித்துவமான சிந்தனைகளைப் பரப்பி ஐக்கிய அரசில் இருந்து இந்தியா சுதந்திரம்பெறுவதைக் கருத்தில் கொள்ளவும், திட்டமிடவும் இவ்விதழைப் பயன்படுத்திக்கொண்டார்.
தமிழ் முரசு:
அச்சகக் கோப்பாளராக இருந்த ம.பொ.சி.அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரராகவும்,சிலப்பதிகார ஈடுபாட்டாளராகவும் உடைய புலமை பெற்ற அறிஞர். இவரது சுதந்திரப் போராட்ட உணர்வை ஊட்டும் களமாக தமிழ்முரசு தளம் இருந்தது. வீரம் செறிந்த கட்டுரைகளை இவ்விதழ் வாயிலாக எழுதி இளைஞர்களுக்கு உரமூட்டினார். விடுதலை உணர்வேற்றினார்.மேலும் வீரபாண்டிய கட்ட பொம்மன், மற்றும் வ.உ.சி ஆகியோரை தமிழக மக்களுக்கு பத்திரிக்கை வாயிலாக அறிமுகப்படுத்தினார்.
வந்தே மாதரம் :
வந்தே மாதரம் என்பதன் பொருள் - தாய் மண்ணேஉன்னை வணங்குகிறேன் என்பதாகும்.இப்பாடல் ஆங்கில அடக்கு முறைக்கு எதிரான விடுதலை முழக்கமாக இருந்தது. மக்களிடையே விடுதலை வேட்கையைத் தூண்டும் பேராபத்து நிறைந்ததாக இருக்கும் இப்பாடலை உணர்ந்த பிரிட்டிஷ் அரசு ,பொது இடங்களில் பாட தடை விதித்தது .மீறியவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். ரவீந்திர நாத் தாகூர் போன்ற அறிஞர்கள் பல பொது மேடைகளில் பாடினர்.லாலா லஜ்பத் ராய் லாகூரில் இருந்து " வந்தே மாதரம் " என்ற பெயர் கொண்ட இதழைத் தொடங்கினார்.வந்தே மாதரம்
பாடலை எழுதிய" பங்கிம் சந்திர சட்டர்ஜி " இப்பாடல் பிரபலம் அடைவதை காண நான் இல்லாமல் போகலாம்,ஆனால் இப்பாடல் ஒவ்வொரு இந்தியனாலும் பாடப்படும் என நம்பிக்கைக் கொண்டார்.இப்பாடல் பல்வேறு இசை மற்றும் கவியாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கவிஞர் எண்ணம் போலவே இப்பாடல் இன்றுவரை இந்தியரின் நாட்டுப்பற்று முழக்கமாகவே , முழங்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது.
பிரபலமானவர்கள் சுதந்திர போராட்ட வீரர்களாக பல பேர் நாட்டிற்காக தங்கள் செயல்,உழைப்பு,இன்னுயிர் ஆகியவற்றை ஈந்து அரும்பாடுபட்டவர்கள் வரலாறு நிறைந்து வீரம் பேசும் வேலை, இன்னும் இன்றும் வெளி உலகிற்கு தன்னைக் காட்டாமல் நமது விடுதலையே வெற்றியாகக் கொண்டு ,சுதந்திர போராட்டத்திற்கு உரமேற்றி ஊக்கம் தந்து ஊன்றுகோலாக, சான்றாக தமது சிந்தனைகளை ஒன்றிணைத்து, சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தம் சுவாசக் காற்றை துச்சமென எண்ணி, அச்சம் தவிர்த்து , மிச்சமாகக் கிடைத்ததை பத்திரிக்கையின் பாதையாக பயணித்து , ஆங்கில மொழியாலேயே பயமுறுத்தி பணிய வைத்து தம் உரிமையைப் பெற்றோம். சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அனைவரையும் போற்றுவது நமது கடமையாகும். சுதந்திரத்திற்காக பயன்படுத்திய நாள்,வார இதழ்களையும் வாழ்த்தி மகிழ்வோம்.
சுதந்திர தின பேச்சுப் போட்டி உரை
சுதந்திர தின பேச்சுப் போட்டி உரை
"நம்நாடு"
இமய முதல் குமரி வரை உடலெடுத்தும்,இதயம் எல்லாம் குளிரும்படி குரலெடுத்தும்,
தரணியெங்கும் ஒலிக்கதிராய்ப் பரவிநிற்கும்,
தமிழ்த்தாயை வணங்குகின்றேன்!
என் உரையைத் தொடங்குகின்றேன்!
அவையோர் அனைவருக்கும், அன்பு வணக்கம்.
இந்தியத் திருநாடு பல்வேறு பெருமைகளைக் கொண்டது.
இயற்கை வளம், மனித வளம் இவற்றோடு அறிவியலிலும் புரட்சி செய்து,உலக நாடுகள் மத்தியில் நம் நாடு சிறந்த நாடாக வெற்றி நடை போட்டு வருகிறது. மேலும் அதன் வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டிய பணியினைப் பற்றியும், நாடு ஒளிர்வதற்கு நாம் ஆற்றவேண்டிய பங்கினைப் பற்றியும் உங்கள் முன் உரையாற்ற வந்துள்ளேன். கேளுங்கள்,கேட்ட பின்பு எனக்கு வாழ்த்துக் கூறுங்கள்.
உலக நாடுகள் அனைத்தும் வியக்கக்கூடிய அளவிற்கு,அரசியல் அமைப்புச் சட்டத்தை நாம் பெற்றுள்ளோம் மக்களாட்சி மாண்பினையும், அதன் மதிப்பினையும் உயர்த்தும் வண்ணம் நம் அரசியலமைப்பு திகழ்கிறது...
அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு இணையாக, விண்வெளியில் இந்தியாவின் இஸ்ரோ பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
அதற்கு உதாரணம் சந்திராயன் l சந்திராயன் ll மற்றும்
சந்திராயன் lll
போன்ற செயற்கைக்கோள்களே ஆகும்.
*கற்கை நன்றே, கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே*.
ஆம்!பெற்ற சுதந்திரத்தை நாம் பேணிப் பாதுகாக்க மாணவர்களாகிய நம்முடைய பணி யாதெனில்,கல்வியின் அருமையைக் கருத்தில் கொண்டு அதனை நன்முறையில்
நடைமுறைப்படுத்த வேண்டும்.கல்வியால் மட்டுமே உயர்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும், கல்வியால் மட்டுமே வளரும் நாடான நம் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க முடியும்!
மக்களின் எண்ணம் செழிப்புறவும், தீய வழிகளில் அவர்கள் செல்லாமல் இருக்கவும் மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களும், திருக்குறள் போன்ற அற நூல்களும் தொடர்ந்து நல்வழிகளைக் காட்டி வருகின்றன்... மகாத்மா காந்தியடிகள், சுவாமி விவேகானந்தர், மகாவீரர், புத்தர் முதலானோரின் வாழ்க்கை வரலாறு நம்மைப் பக்குவப்
படுத்துவதாக அமைந்துள்ளன. மேலும் விடுதலைப் போராட்டத் தியாகிகளான
வ. உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, பால கங்காதர திலகர், ராஜாராம் மோகன் ராய் முதலானோரின் தியாகங்களும், மெய்சிலிர்க்க வைக்கின்றன. ...
நம் கையில் என்ன இருக்கிறது? என்று நினைக்காதீர்கள், நம்பிக்கையில்தான் எல்லாம் இருக்கிறது என்பதை மறக்காதீர்கள்! என்ற பொன்மொழிக்கேற்ப நம்பிக்கை,உழைப்பு, முயற்சி போன்றவற்றை நம் மனதில் வளர்த்துக் கொண்டு வெற்றி நடை போட முற்படுவோம்! வெற்றிக்கனி சுவைக்க விரைவாகச் செயல்படுவோம்! நம் வீடு,நம் மக்கள், நம்முடையது என்று சுயநல சுல்தானாகச் சுற்றி வராமல்,
நம் நாடு, பொதுநலம் என்று நினைப்போம்! நம் பாரதம் நமக்கெனக் கருதி இருப்போம்!
இந்தியா என்பது நம் மூச்சு,
இணைந்தே செயல்பட்டால் வாழ்வாச்சு,
சிந்தித்தால் எல்லாம் நமதாச்சு!,
உங்கள் சிந்தையில் நிற்கும் என் பேச்சு!
நன்றி!
வணக்கம்!