பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.08.2023

 


செங்கோட்டை


திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: புகழ்

குறள் :238
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.

விளக்கம்:

புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.

பழமொழி :

Be first at a feast and the last to slander

பந்திக்கு முந்து, படைக்கு பிந்து

இரண்டொழுக்க பண்புகள் :

1. என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.

2. பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

ஒரு பெண் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை வைத்துதான் சமூகத்தின் முன்னேற்றம் அளவிடப்படுகிறது - பீமா ராவ் அம்பேத்கர்

பொது அறிவு :

1. தமிழ் நாட்டின் முதல் பெண் IPS யார்?

விடை: திலகவதி

2. சோலையார் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?

விடை: சாலக்குடி ஆறு

English words & meanings :

 combat - fighting between armed forces போர் ; congested - overcrowded அதிக கூட்டம்

ஆரோக்ய வாழ்வு : 

கொத்தமல்லி விதை : கொத்தமல்லி டையூரிடிக் என்பதால், உடலில் இருந்து அதிகப்படியான சோடியம் மற்றும் தண்ணீரை வெளியேற்ற உதவுகிறது.  இதன் மூலம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.

ஆகஸ்ட்15

இந்திய விடுதலை நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.[1]

இந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.

ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.

நீதிக்கதை

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.

மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான்.  ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...!

இன்றைய செய்திகள்

15.08. 2023

*சுற்றுவட்ட பாதை மேலும் குறைப்பு: நிலவை நெருங்கும் சந்திராயன்-3.

* ஆறு நாள் பயணமாக சீனா பாதுகாப்பு துறை மந்திரி ரஷியா, பெலாரஸ் செல்கிறார்.

*ரூபாய் 87.77 கோடி செலவில் உயர்கல்வி துறையில் கட்டப்பட்ட கட்டிடங்கள்: முதலமைச்சர் திறந்து வைத்தார்.

* காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய தமிழக போலீஸ் அதிகாரிகள் 21 பேருக்கு ஜனாதிபதி பதக்கம்.

*கனடா ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றார்- ஜெசிகா பெகுலா.

*உலக ஹாக்கி தரவரிசை இரண்டாவது முறையாக மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய இந்திய அணி.

Today's Headlines

*Orbit further reduction: Chandrayaan-3 approaches the Moon.

 * Chinese Defense Minister is going to Russia, Belarus on a six-day visit.

 *Buildings constructed in higher education sector at a cost of Rs 87.77 crore: Chief Minister inaugurated.

 * President's medal to 21 Tamil Nadu police officers for their outstanding service in the police.

 *Canada Open Tennis Champion - Jessica Pegula.

 *The Indian team moved to the third position in the world hockey rankings for the second time.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

தமிழ்த்தாய் வாழ்த்து, கொடி வணக்கப் பாடல் (தாயின் மணிக்கொடி பாரீர்) மற்றும் தேசிய கீதம்

 IMG_20210814_195600

சுதந்திர தின விழாவில் பயபடுத்த....


தமிழ்த்தாய் வாழ்த்து - Download here


கொடி வணக்கப் பாடல் (தாயின் மணிக்கொடி பாரீர்)  - Download here


தேசிய கீதம்  - Download here

CLASS 4 UNIT 3 SOCIAL SCIENCE EM TLM PDF

Ennum ezhuthum English Class 4 & 5 Module 6 TLM

க், ங், ச், ஞ்,ட், ண், சொற்கள் PRIMARY TLM GROUP PDF

 க், ங், ச், ஞ்,ட், ண், சொற்கள் PRIMARY TLM GROUP PDF






School Morning Prayer Activities - 14.08.2023

 

.com/

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.08.2023


திருக்குறள் :

பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: புகழ்

குறள் :237

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.

விளக்கம்:

புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணம் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?.

பழமொழி :
Barking dogs seldom bite

குரைக்கின்ற நாய் கடிக்காது


இரண்டொழுக்க பண்புகள் :

1. என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.

2. பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

ஏழை என்றும் அடிமை என்றும் யாரும் இல்லை சாதியில். இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே. கல்வி செல்வம் எய்தி மனமகிழ்ந்து கூடியே, மனிதர் யாவும் சரி நிகர் சமானமாக வாழ்வோம் - பாரிதியார்

பொது அறிவு :

1. தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் யார்?


விடை: s. விஜயலக்ஷ்மி

2.: தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழர் யார்?

விடை: சிவாஜி கணேசன்


English words & meanings :

 Quiz-zi-cal - asking a question through expression not with words. Adjective. ஒன்றை வினவுவதைப் போலக் காணப்படுகின்ற. பெயரளபடை 


ஆரோக்ய வாழ்வு : 

கொத்தமல்லி விதை : கொத்தமல்லி விதை தனியா விதை என்றும் அழைக்கப்படுகிறது.அவை குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது, நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் இன்சுலின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.


நீதிக்கதை

ஒரு வீட்டில் செல்லப்பிராணியாக ஒரு பூனையையும் ஒரு நாயையும் வளர்த்தார்களாம். 

பூனையை விட நாய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்களாம். அந்த வீட்டில் உள்ள பிள்ளைகளும் நாயிடம் அதிக அன்பை காட்டியதாம்.

 அதைப் பார்த்த பூனை மிகவும் பொறாமை பட்டு நாயிடம் சென்று என்னதான் அவர்கள் உன்னை அதிகமாக நேசித்தாலும் நீ ஒரு நாய் யாரை தாழ்த்தி திட்ட வேண்டும் என்றாலும் நாய் என்று தான் திட்டுவார்கள் பூனை என்று திட்ட மாட்டார்கள் என்று கூறி, உன்னுடைய தரம் இதுதான் என்று பூனை தன்னுடைய தரத்தை உயர்த்தி சொல்லிக் கொண்டிருந்ததாம். 

அதற்கு நாய் என்னதான் என்னை வைத்து மனிதர்கள் திட்டினாலும் விமர்சனங்கள் செய்தாலும் போடா நாயே வாடா நாயே என்று கூறினாலும் அந்த விமர்சனங்களையும் அவமானங்களையும் உரமாக எடுத்துக்கொண்டு நான் விருட்சமாய் வளர்வேன். 

ஏனென்றால் நான்ஒரு நன்றியுள்ள ஜீவன் அல்லவா என்னை மிகுந்த நன்றியுள்ள ஜீவன் என்றே அழைப்பார்கள்  அல்லவா என்று தன்னிடம் உள்ள  நிறைவை கூறியதாம் நாய் . ஆனால் நீமனிதர்கள் வெளியில் செல்லும் பொழுது குறுக்கே வந்தால் உன்னை என்ன சொல்வார்கள் என்று யோசித்துப் பாருங்கள் பூனையாரே என்று நாய் கூறியதாம்.

தலை குனிந்த பூனை மன்னிப்பு கேட்டு சென்றதாம். 

 யாரையும் உயர்த்தியோ தாழ்த்தியோ பார்க்க கூடாது எல்லோரும் சரி சமம் தான் நாம் இந்த வீட்டில் வாழும் செல்லப்பிராணிகள் ஆகவே இருவரும் ஒற்றுமையாய இருப்போம் என்று கூறி நாய் சென்றதாம்.


இன்றைய செய்திகள் - 14.08. 2023

*நல் ஆளுமை விருதுகளை அறிவித்தது தமிழக அரசு - சுதந்திர தினத்தன்று 
ரூ. 2 லட்சம் பரிசுத்தொகையுடன் முதலமைச்சர் 
மு. க. ஸ்டாலின் விருதுகளை வழங்குவார். 

*நாங்குநேரி மாணவனுக்கு ஸ்டான்லி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை - அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்.

*நீட் தேர்வு ரத்துக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்- கவர்னர் 
ஆர். என்.  ரவி.

*திருப்பூர் மாவட்டத்தில் உலக சாதனைக்காக பவளக்கொடி வள்ளி கும்மியாட்டம் 2000 பேர் பங்கேற்பு. 

*சர்வதேச ஹாக்கி தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய இந்திய அணி. 

*மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

Today's Headlines

*Good governance awards announced by Tamil Nadu Government - on Independence Day Rs. 2 lakh prize money along with awards will be given by Chief Minister  M. K.  Stalin.

 *Nanguneri student is treated by Stanley Doctors -information by Minister Ma.  Subramanian .

 * Governor  R.  N.  Ravi.declared that he will never allow the cancellation of NEET exam

 * 2000 people participated in Pavalakkodi Valli Kummiyattam for world record in Tirupur district.

 *Indian team moved up to the third position in the international hockey rankings.

 *Minister Udayanidhi Stalin inaugurated the International Surfing Competition at Mamallapuram.

 Prepared by

Covai women ICT_போதிமரம்


Click here for latest Kalvi News 

பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் - குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்

 IMG_20230812_141709


நமது இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழாவினை 15.08.2023 அன்று தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாவட்டக் கல்வி ( தொ.க ) அலுவலகங்கள் , அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.


ஆகஸ்ட் மாதத்திற்கான சிறார் திரைப்படம் திரையிடுதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 

001

அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6-9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான சிறார் திரைப்படம் திரையிடுதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


August Month Children's movie Dir Proceedings - Download here


Click here for latest Kalvi News 

29.08.2023 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

 ஓணம் பண்டிகையை முன்னிட்டு , 29.08.2023 தேதி செவ்வாய்கிழமை அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை சென்னை மாவட்டத்திற்கு அளிக்கப்படுகிறது. மேற்படி உள்ளூர் விடுமுறைக்கு பதில் 02.09.2023 சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகின்றது.


ஆயினும் உள்ளூர் விடுமுறை நாளான 29.08.2023 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு , சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா , அவர்கள் அறிவித்துள்ளார் . இவ்வறிவிக்கை www.chennai.tn.nic.in என்ற இணையதள முகவரியில் உள்ளது எனவும் அறிவிக்கப்படுகிறது .



Click here for latest Kalvi News 

அரசு பள்ளிகளில் 6000 ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை முடிவு

 



 

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 6000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் 38 ஆயிரம் அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அரசுப் பள்ளிகளை பொறுத்தவரையில் மேனிலைப் பள்ளிகளில் 1000 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களும், உயர்நிலைப் பள்ளிகளில் 1000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், தொடக்கப் பள்ளிகளில் 2000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை கணக்கெடுத்துள்ளது. அதேபோல நடுநிலைப் பள்ளிகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் முடிவு செய்துள்ளது.


நடுநிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ, மாணவியருக்கு தரமான கல்வியை கொடுக்க பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளில் அறிவியல் கணக்கு பாடங்களுக்கு மட்டுமே அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், தமிழ், சமூக அறிவியல் பாடங்களை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை என்பதால் அந்த பாடங்களுக்கான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருவதால் அந்த பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடுநிலைப் பள்ளிகளில் பணி நியமனங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அத்துடன், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தகுதியடைந்தவர்களுக்கு மீண்டும் பணிநியமனத்துக்கான தேர்வை நடத்தாமல், தகுதித் தேர்வின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. அதன் பேரில், விரைவில் சுமார் 6000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. இந்த நியமனங்களில் தகுதித் தேர்வின் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.


Click here for latest Kalvi News 

Ennum Ezhuthum - 1,2,3 Std - Term 1 - Module 9 Lesson Plan

 Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024


Term 1 Lesson Plan

August 2023

Module - 9

Ennum Ezhuthum - 1,2,3 Std -  Term 1 - Module 9 Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4th,5th Std -  Term 1 - Module 9 Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4th,5th Std -  Term 1 - Module 9 Lesson Plan - E/M - Download here

Inspire Award 2023 - விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கவனத்திற்கு...

IMG_20230810_112054

Inspire Award 2023 - விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கவனத்திற்கு...


▪️மேலே உள்ள PDF File -யில் ஒருசில Model Innovation Idea உள்ளது . 


வழிகாட்டி ஆசிரியர்கள் இவற்றில் உள்ளது போல் வேறுசில innovation idea- ஐ விண்ணப்பிக்கும் போது upload செய்யவும்....


விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-08-2023


Idea-Competition.pdf - Download here  



Click here for latest Kalvi News 

1,016 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பட்டியல் தயார் - விரைவில் பணி நியமனஆணை

 

அரசு உயர்நிலை , மேல்நிலைப்பள்ளிகளில் 1,016 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பட்டியல் தயார் - விரைவில் பணி நியமனஆணை

IMG-20230810-WA0001

அரசு உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில் 1,016 தலைமை ஆசிரியர் பதவி உயர்வு இறுதி பட்டியல் தயாரிக் கப்பட்டுள்ளது . தமிழகத்தில் அரசு தொடக்க , நடுநிலை , உயர் நிலை , மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வாணயம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது மேலும் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி தலைமை ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டு வருகிறனர்.


 இருப்பினும் கடந்த மார்ச் மாதம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் பணியாற்றி ஓய்வு

பெற்றனர்

 Click here for latest Kalvi News 

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சி - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சி - முதன்மை கருத்தாளர்களைத் தெரிவு செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!



 Click here for latest Kalvi News 

நாளை ( 11.08.2023 ) அன்று அனைத்துவகை பள்ளிகளிலும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 

போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான சமூக விழிப்புணர்வு பெறும் நோக்கில் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு ' போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக , பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எதிர்வரும் 11.08.2023 அன்று அனைத்துவகை பள்ளிகளிலும் , உயர் மற்றும் மேல்நிலை வகுப்பில் பயின்று வரும் மாணவர்கள் அனைவரும் . இத்துடன் இணைக்கப்பட்டுள்ள போதைப்பழக்கத்திற்கு எதிரான பெருந்திரள் உறுதிமொழி ஏற்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் , தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளில் உறுதிமொழி எடுக்கப்பட்ட நிகழ்வுகளை ஆவணப்படுத்தவும் , நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் விவரங்களை , இணைப்பில் கண்டுள்ள படிவம் -1 இல் அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் பெற்று மாவட்ட அளவிலான விவரங்களை படிவம் -2 இல் பூர்த்தி செய்து இவ்வியக்ககம் அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.


மேலும் , நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் படிவம் - 2 - ஐ dad.ebcid@gmail.com மற்றும் இவ்வலுவலக மின்னஞ்சல் msectndse@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் 11.08.2023 பிற்பகல் 4.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 https://enforcementbureautn.org/pledge என்ற இணைய இணைப்பினை பயன்படுத்தி மின்னணு உறுதிமொழி ஏற்க வசதி செய்யப்பட்டுள்ளது.


 இதனை பயன்படுத்தி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பதுடன் உறுதிமொழி ஏற்றமைக்கான மின்னணு சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை அனைத்து மாணவர்களுக்கும் தெரிவித்து மின்னணு உறுதிமொழி ஏற்க ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


 Click here for latest Kalvi News 

Ennum Ezhuthum - 4th,5th Std - Term 1 - Module 9 Lesson Plan - T/M & E/M

 Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024


Term 1 Lesson Plan

August 2023

Module - 9


Ennum Ezhuthum - 4th,5th Std -  Term 1 - Module 9 Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4th,5th Std -  Term 1 - Module 9 Lesson Plan - E/M - Download here



 Click here for latest Kalvi News