1,016 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பட்டியல் தயார் - விரைவில் பணி நியமனஆணை

 

அரசு உயர்நிலை , மேல்நிலைப்பள்ளிகளில் 1,016 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பட்டியல் தயார் - விரைவில் பணி நியமனஆணை

IMG-20230810-WA0001

அரசு உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில் 1,016 தலைமை ஆசிரியர் பதவி உயர்வு இறுதி பட்டியல் தயாரிக் கப்பட்டுள்ளது . தமிழகத்தில் அரசு தொடக்க , நடுநிலை , உயர் நிலை , மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வாணயம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது மேலும் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி தலைமை ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டு வருகிறனர்.


 இருப்பினும் கடந்த மார்ச் மாதம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் பணியாற்றி ஓய்வு

பெற்றனர்

 Click here for latest Kalvi News 

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சி - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சி - முதன்மை கருத்தாளர்களைத் தெரிவு செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!



 Click here for latest Kalvi News 

நாளை ( 11.08.2023 ) அன்று அனைத்துவகை பள்ளிகளிலும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 

போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான சமூக விழிப்புணர்வு பெறும் நோக்கில் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு ' போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக , பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எதிர்வரும் 11.08.2023 அன்று அனைத்துவகை பள்ளிகளிலும் , உயர் மற்றும் மேல்நிலை வகுப்பில் பயின்று வரும் மாணவர்கள் அனைவரும் . இத்துடன் இணைக்கப்பட்டுள்ள போதைப்பழக்கத்திற்கு எதிரான பெருந்திரள் உறுதிமொழி ஏற்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் , தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளில் உறுதிமொழி எடுக்கப்பட்ட நிகழ்வுகளை ஆவணப்படுத்தவும் , நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் விவரங்களை , இணைப்பில் கண்டுள்ள படிவம் -1 இல் அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் பெற்று மாவட்ட அளவிலான விவரங்களை படிவம் -2 இல் பூர்த்தி செய்து இவ்வியக்ககம் அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.


மேலும் , நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் படிவம் - 2 - ஐ dad.ebcid@gmail.com மற்றும் இவ்வலுவலக மின்னஞ்சல் msectndse@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் 11.08.2023 பிற்பகல் 4.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 https://enforcementbureautn.org/pledge என்ற இணைய இணைப்பினை பயன்படுத்தி மின்னணு உறுதிமொழி ஏற்க வசதி செய்யப்பட்டுள்ளது.


 இதனை பயன்படுத்தி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பதுடன் உறுதிமொழி ஏற்றமைக்கான மின்னணு சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை அனைத்து மாணவர்களுக்கும் தெரிவித்து மின்னணு உறுதிமொழி ஏற்க ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


 Click here for latest Kalvi News 

Ennum Ezhuthum - 4th,5th Std - Term 1 - Module 9 Lesson Plan - T/M & E/M

 Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024


Term 1 Lesson Plan

August 2023

Module - 9


Ennum Ezhuthum - 4th,5th Std -  Term 1 - Module 9 Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4th,5th Std -  Term 1 - Module 9 Lesson Plan - E/M - Download here



 Click here for latest Kalvi News 

School Morning Prayer Activities - 11.08.2023

 .com/

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.08.2023


திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: புகழ்

குறள் :236


தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

விளக்கம்:

எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈ.டுபடாமல் இருப்பதே நல்லது.


பழமொழி :
Bare words buy no bar ley

வெறுங்கை முழம் போடுமா?


இரண்டொழுக்க பண்புகள் :

1. அறிவும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.


2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன். விவேகானந்தர்


பொது அறிவு :

1. இந்தியாவில் பத்திரிகை துறையில் மிக உயர்ந்த விருது எது?

விடை: ராம்நாத் கோயங்கா

2. இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வழங்கப்படும் உயரிய விருது எது?

விடை: சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு


English words & meanings :

 abhor- feel hatred,வெறுப்பு appease- to make peace with சமாதானப்படுத்த.


ஆரோக்ய வாழ்வு : 

வெந்தயம் : இரத்த சோகை உள்ளவர்கள் வெந்தயம்  உபயோகித்தால் அதிலிருந்து விடுபடலாம். இரத்த அணுக்களின் உற்பத்தியை வெந்தயம் தூண்டிவிடுகிறது. வெந்தயத்தை முளைக்க வைத்து உபயோகப்படுத்தலாம்.


நீதிக்கதை

கோடீஸ்வரர் ரகுராமன் தனது மகனுடன் காரில் கோயிலுக்குச் சென்றார். உள்ளே சென்று கடவுளை தரிசனம் செய்துவிட்டு  வெளியே வந்தவர்,அங்கிருக்கும் பிச்சைக்காரர்களைப் பார்த்தார்.

அதில் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் கையில் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 10,000 கொடுத்தார். அப்பா எதற்குப் பணம் கொடுக்கிறீர்கள்? என மகன் கேட்டான்.காரில்  சென்று கொண்டிருக்கும்போது அப்பா மகனிடம் 'நாம் இவர்களுக்குப் பணம் கொடுத்திருக்கிறோம். இந்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என மூன்று மாதம் கழித்து பார்க்கலாம்' என்றார்.

அப்பா சொன்னது புரியாவிட்டாலும் சரி என்றான். மூன்று மாதங்கள் கழித்து ரகுராமன் அதே கோயிலுக்கு வந்தார். அங்கு அவர் பணம் கொடுத்த மூன்று பேரில் ஒருவர் மட்டும் அங்கே உட்கார்ந்திருந்தார்.

அந்தப் பிச்சைக்காரன் அருகில் சென்ற ரகுராமன் 'ஏனப்பா நான்தான் உனக்குப் பணம் கொடுத்தேனே... நீ அதை என்ன செய்தாய்?' என்று கேட்டார்.

நீங்கள் கொடுத்த பணத்தை அப்படியே வைத்திருந்து தினமும் அதில் செலவு செய்து சாப்பிட்டேன். எல்லாம் தீர்ந்துவிட்டது. மறுபடியும் நான் இதே பிச்சை எடுக்கும் இடத்திற்கு வந்துவிட்டேன். என்றான்.மற்றவர்கள் எங்கே? என்றார் ரகு ராமன்.

எதிரே உள்ள ஐஸ்கிரீம்கடையை பாருங்கள்....அங்கே ஐஸ்கிரீம் கடை வைத்து இன்று நல்ல வியாபாரம் செய்து நல்ல நிலைக்கு வந்து விட்டான்' என்று பதில் சொன்னான்.

ரகுராமன் தன் மகனுடன் அந்தக் கடைக்குள் நுழைந்தார். என்னை தெரிகிறதா? என்றார்.ஐயா பணம் கொடுத்த உங்களை எப்படி மறக்க முடியும்? என்று சொன்னான் அவன்.

'நீங்கள் கொடுத்த பணத்தில் நன்றாக வேலை செய்து வருகிறேன்.நான் நேர்மையாக உழைத்ததால் இன்று அதிகமான லாபம் கிடைத்தது. நல்ல நிலையில் இருக்கிறேன். இதற்கு நீங்கள்தான் காரணம் என்று அவரை வாழ்த்தி, பணிவுடன் பேசினான்.

சரி  மற்ற ஒருவனுக்கும் பணம் கொடுத்தேனே, அவன் என்ன ஆனான்? என்று கேட்டார்.  நீங்கள் கொடுத்த பணத்தில் அவன் ரேஸ் குதிரை,வாங்கி தோற்றதனால்  அவன் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் அதேபோல் மறுபடியும் பிச்சை எடுக்கிறான்,என்றான்.

தன் மகனிடம் பார்த்தாயா... நமக்கு வாய்ப்புகள் எப்போதும் கிடைப்பது அரிது. அந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டால், நன்கு முன்னேறலாம் என்றார்.அப்பா சொன்ன அறிவுரை இப்போது மகனுக்குப் புரிந்தது. வாய்ப்பு கொடுத்தும் அதில் ஒருவர்தான் அந்தப் பணத்தை நல்ல வழியில் செலவு செய்து. இன்று நல்ல நிலையில் இருக்கிறார். எனவே கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி கொண்டு முன்னேற வேண்டும்.


இன்றைய செய்திகள் - 11.08. 2023

*சீனாவின் வர்த்தக ராக்கெட் CERES-1 Y7 விண்ணில் பாய்ந்தது.

*முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் இன்று மஞ்சள் நிற பஸ்களை தொடங்கி வைக்கிறார்.

*தொடர் விடுமுறை எதிரொலி:  விமான கட்டணமும் இறக்கை கட்டி பறக்கிறது.

*இமாச்சலில் 3.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்.

*உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆன்லைன் டிக்கெட் விற்பனை வரும் 25ம் தேதி முதல் தொடங்குகிறது.

*ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை ஐந்தாவது இடத்திற்கு முன்னேறினார் - சுப்மன் கில்.

Today's Headlines

* China's commercial rocket CERES-1 Y7 launched into space.

 * Chief Minister
 M. K. Stalin starts yellow-coloured buses today 

 *Due to continuous Vacation: Airfare also took a flight

 * Moderate earthquake of 3.4 Richter in Himachal.

 *World Cup Cricket: Online ticket sales will start from the 25th.

* Subman Gill Moved to fifth place in the ODI rankings

 Prepared by

Covai women ICT_போதிமரம்

சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ , மாணவியர்களுக்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதி அன்று இனிப்புப் பொங்கல் வழங்க சமூக நல ஆணையர் உத்தரவு

 சமூக நல ஆணையரகம் - சத்துணவுத் திட்டம் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ , மாணவியர்களுக்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதி அன்று இனிப்புப் பொங்கல் வழங்குதல் தொடர்பாக சமூக நல ஆணையரின் கடிதம்.

 



 Click here for latest Kalvi News 

உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் வளரறி மதிப்பீடுகள் - விரிவான வழிகாட்டுதல்கள் வெளியீடு!

 

உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் வளரறி மதிப்பீடுகள் - விரிவான வழிகாட்டுதல்கள் வெளியீடு!


Guideline to QP allocation - Download here


Assessment - FAQ - Download here

 Click here for latest Kalvi News 

10ஆம் வகுப்பு துணைத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களின் 11ஆம் வகுப்பு சேர்க்கையினை உறுதி செய்தல் - SPD செயல்முறைகள்!

 10ஆம் வகுப்பு துணைத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களின் 11ஆம் வகுப்பு சேர்க்கையினை உறுதி செய்தல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!


 Click here for latest Kalvi News 

கல்வி உதவித் தொகைக்கான திறனாய்வு தேர்வு: ஆக.18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

 


தமிழக தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் 2023-24-ம் கல்வியாண்டு முதல் ‘தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு’ நடத்தப்பட உள்ளது. அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வு எழுதலாம். இதில் ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் இளநிலை பட்டப்படிப்பு வரை உதவித் தொகையாக மாதம் ரூ.1,000 தரப்பட உள்ளது.


பள்ளிகளில் விழிப்புணர்வு: இதற்கான தேர்வு செப்டம்பர் 23-ம் தேதி நடைபெற உள்ளது. 9,10-ம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்களின் அடிப்படையில் தேர்வு வினாத்தாள்கள் இருக்கும். விருப்பமுள்ள மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதன்பிறகு பூர்த்தி செய்த படிவங்களை ஆகஸ்ட் 18-ம் தேதிக்குள் ரூ.50 கட்டணத்துடன் சேர்த்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இத்தேர்வில் அதிக மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக தங்கள் எல்லைக்குட்பட்ட பள்ளிகளில் உரிய விழிப்புணர்வு பணிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 Click here for latest Kalvi News 

School Morning Prayer Activities - 09.08.2023

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.08.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஈகை

குறள் :234

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.


விளக்கம்:

தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்.


பழமொழி :
As you Sow, so You Reap.

வினை விதைத்தவன் விதை அறுப்பான்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. அறிவும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.


2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்


பொன்மொழி :

உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி. விவேகானந்தர்.


பொது அறிவு :

1. அகாடமி விருதை (ஆஸ்கார்) வென்ற முதல் இந்தியர் யார்?

விடை: பானு அத்தையா.

2. இந்தியாவில் இசைத்துறையில் வழங்கப்படும் உயரிய விருது எது?

விடை: சங்கீத நாடக அகாடமி விருது


English words & meanings :

 evacuation -ejection வெளியேற்றுதல்: ordinance - rule அவசர சட்டம்


ஆரோக்ய வாழ்வு : 

வெந்தயம்: தினம் இரவு சிறிது வெந்தய விதையை ஊற வைத்து, மறுநாள் காலையில் மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகி வர, ஆரம்ப நிலை நீரழிவு நோய் குணமாகும். மத்திய, முற்றிய நிலை நீரழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.


ஆகஸ்ட் 09 இன்று

பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஷ்டு 9ஆம் தேதி அனுசரிக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் திசம்பர் 1994 முன்மொழியப்பட்டு , 2007 செப்டம்பர் 13 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.[1] தொல்பழங்குடிகளான குறிஞ்சி நிலத்தின் குன்றகுறவர்களின் உரிமைகளை ஊக்குவிக்கவும், அவ்வுரிமைகளைப் பாதுகாக்கவும் இத் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வானது அப்பழங்குடி குறவர் மக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலக பிரச்சினைகளின் எடுக்கும் நல்லெண்ண முடிவுகளுக்கு அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.


நீதிக்கதை

ஒரு ஊரில் நல்ல மனிதன் ஒருவன் இருந்தான். எப்பொழுதும் தன்னால் இயன்ற வரை மற்றவர்களுக்கு உதவுவது அவனின் தன்மை.

ஒரு நாள் சுற்றுலா சென்ற போது அவன் ஒருவன் மட்டும் சென்ற சிறு படகு கவிழ்ந்து விட்டது. கடல் நீரினால் அடித்து செல்ல பட்ட அவன் யாருமே இல்லாத தீவு ஒன்றில் கரை ஒதுங்கினான்.

திகைத்து போனாலும், தன்னை காப்பாற்ற யாரேனும் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தான். அந்த பக்கமாக செல்லும் பெரிய கப்பல்களுக்கு சமிக்ஞை செய்ய தன்னிடம் இருந்த கைக்குட்டையை கொடியாக கட்டி வைத்தான்.

ஆனால் இரண்டு மாதங்கள் சென்ற பின்பும் அவனை காப்பாற்ற ஒருவரும் வரவில்லை.

அவனின் நம்பிக்கை குறைந்தாலும் அந்த தீவில் வாழ தன்னால் இயன்ற அளவில் முயன்றான்.அங்கே இருக்கும் வன விலங்குகளிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள சிறு குடிசை ஒன்றை கட்டிக் கொண்டான்.... அங்கே கிடைத்த சிறு சிறு உணவு பொருட்களை தேடி கண்டு பிடித்து எடுத்து உண்டு பசியாறினான்.

ஒருநாள் அதே போல் அவன் உணவு தேடி விட்டு திரும்பிய போது அவன் மிகவும் கஷ்டப் பட்டு கட்டி இருந்த அந்த குடிசை மொத்தமாக எரிந்து சாம்பலாகி இருப்பதை பார்த்து திகைத்து போனான். குடிசை இருந்த இடத்தில புகை மட்டுமே வந்துக் கொண்டிருந்தது...

அவ்வளவு தான் அவனுக்கு கோபம் பொங்கியது! விரக்தி மேலோங்கியது...

கோபத்துடன் கத்தினான்...! நல்லது செய்த அவனுக்கு எல்லாமே தீங்காகவே நடப்பதாக அழுது புலம்பினான்...!

அப்போது ஒரு பெரிய கப்பல் ஒன்று அவன் இருந்த தீவின் திசையில் வருவதை கண்டான். கைகளை வேகமாக அசைத்து அவன் கத்த,  அப்பொழுது கப்பல் மெல்ல அந்த தீவின் அருகே இருந்த கரையோரம் வந்து நின்றது.

அவனால் நம்பவே முடியவில்லை! கப்பலில் இருந்து இறங்கி வந்த மாலுமியிடம் எப்படி அந்த தீவிற்கு வந்தீர்கள் என ஆவலுடன் கேட்டான்.

"எங்கள் கப்பல் தலைவன் எங்கிருந்தோ புகை வருவதை கவனித்து என்ன என்று தன்னுடைய தொலைநோக்கியில் பார்த்த போது நீங்கள் நட்டிருந்த உதவி கேட்கும் கொடி அவர் கண்ணில் பட்டது. யாரோ உதவி கேட்கிறார்கள் என்பதை புரிந்துக் கொண்டு இந்த பக்கம் கப்பலை திருப்பி வந்தோம்.” என்றான் அந்த மாலுமி!


வாழ்வில் நாம் சவால்கள், பிரச்சனைகள் என எத்தனை எத்தனையோ எதிர் கொள்ள வேண்டி இருக்கலாம். சில சமயம் நாம் நம் வாழ்வின் மோசமான நேரம் என்று நினைப்பது கூட நன்மையாக இருக்கலாம்.


இன்றைய செய்திகள் - 09.08. 2023

*தமிழகம் புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்.

* மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வரவிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோபைடன்.

* குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகளால் நிரப்பப்படும் சென்னை ஏரிகள்.

* சுதந்திர தினத்திற்கு ஒரு லட்சம் போலீஸ் பாதுகாப்பு: சென்னையில் வணிக வளாகங்கள், கோவில்களில் கண்காணிப்பு.

* சர்வதேச அளவிலான வில்வித்தை போட்டியில் உலக சாதனை படைத்த செய்துங்கநல்லூரைச் சேர்ந்த +2 மாணவி சுப்புலட்சுமி.

*உலக காவல்துறை மற்றும் ஹெப்டத்லான் போட்டிகள் : தங்கப்பதக்கம் வென்று சென்னை பெண் போலீஸ்
 லீலாஸ்ரீ சாதனை.

Today's Headlines

*Chance of moderate rain in Puducherry, Tamil Nadu for the next 7 days - Meteorological Department Information.

 * US President Joe Biden is coming to India for a three-day tour.

 * Chennai lakes are being filled with garbage and construction waste.

 * One Lakh Police Security for Independence Day: Monitoring at Malls, Temples in Chennai.

 * Subbulakshmi, a +2 student from Seythunganallur set a world record in an international archery competition.

 *World Police and Heptathlon Competitions: Chennai Women Police Leelasree made headlines by winning the gold medal.
 Prepared by

Covai women ICT_போதிமரம்



 Click here for latest Kalvi News 

16.08.2023 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு .

 கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகின்ற 16ஆம் தேதி (16.08.2023) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.


 ஆடி அமாவாசை, வாவுபலி கொண்டாட்டத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


 இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு  செப்டம்பர் 9-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளன.


 Click here for latest Kalvi News 

அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் ஆக. 25 முதல் காலைச் சிற்றுண்டி!

 

முதல்வரின் காலை உணவுத் திட்டம் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.


தற்போது, 1,978 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டால், மொத்தம் உள்ள 31,008 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் 15,75,900 மாணவர்கள் பயனடைவார்கள்.


 ரூ. 404 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் பயனடையும் ஒவ்வொரு குழந்தைக்கும் தினமும் ரூ.12.71 செலவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாணவருக்கும் 100 மி.லி. காய்கறிகளுடன் சாம்பார் மற்றும்  150-200 கிராம் உணவு வழங்கப்படும்.


 வாரத்திற்கு இரண்டு முறையாவது உள்ளூரில் கிடைக்கும் சிறுதானியங்களைக் கொண்டு காலை உணவு வழங்கப்படும் எனவும், மாணவர்களுக்கு  காலை 8 மணி முதல் 8.50 மணி வரை உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 Click here for latest Kalvi News 

NMMS தேர்வில் வெற்றி பெற்று NSP இணையதளத்தில் பதிவேற்றம் செய்த விவரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு.

 

NMMS தேர்வில் வெற்றி பெற்று NSP இணையதளத்தில் பதிவேற்றம் செய்த மாணவர்கள், தங்களது விவரங்களில் 10.08.2023 வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!


 Click here for latest Kalvi News 

எண்ணும் எழுத்தும் - கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் (TLMs) - தமிழ் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், English Alphabets & Colours Name - படங்களுடன்

 

எண்ணும் எழுத்தும் - கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் (TLMs) - தமிழ் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், English Alphabets & Colours Name - படங்களுடன் ....


Download here

 Click here for latest Kalvi News