School Morning Prayer Activities - 02.08.2023 | பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.08.2023


திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஈகை

குறள் :229

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.

விளக்கம்:

பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.


பழமொழி :
Appearance is deceitful

உருவத்தை கண்டு ஏமாறாதே.


இரண்டொழுக்க பண்புகள் :

1. உன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு தாழ்த்திக் கொள்ளாதே. 

2. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் தங்கள் நேரத்தில் ஒளி வீசுகின்றன. ஒன்றோடொன்று ஒத்து பார்ப்பதில்லை

பொன்மொழி :

உங்கள் வயதை நண்பர்களை வைத்துக் கணக்கீடுங்கள், வருடங்களை வைத்து அல்ல. உங்கள் வாழ்க்கையை புன்னகையை வைத்துக் கணக்கீடுங்கள், கண்ணீரை வைத்து அல்ல. --ஜான் லெனான்.


பொது அறிவு :

1. சிந்து மக்கள் முதலில் பயன்படுத்திய உலோகம் எது?

விடை: தாமிரம்


2. இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்பட்டவர் யார்?

விடை: சமுத்திரகுப்தன்


English words & meanings :

 haphazard - accident எதிர்பாராத நிகழ்ச்சி idiosyncrasy - an odd way of thinking சிந்தனை முரண்பாடு


ஆரோக்ய வாழ்வு :

சோம்பு: சாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்

ஆகஸ்ட் 02 இன்று


ஆபிரகாம் பண்டிதர்    அவர்களின் பிறந்தநாள்

ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் (Abraham Pandithar) ஆகஸ்ட் 2, 1859 - 1919 ) புகழ்பெற்ற தமிழிசைக் கலைஞர், சித்த மருத்துவர் மற்றும் தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழுநேர மருத்துவராகப் பயிற்சி பெற்றுப் பணியாற்றலானார். ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது. அக்கால இந்திய இசை வல்லுநர்களிலேயே நன்கு அறியப்பட்ட பண்டிதர், மற்ற இசை வடிவங்களிலேயும் ஆர்வம் கொண்டிருந்தார். தனது இசையுலகத் தொடர்புகளை நன்கு பயன்படுத்திய ஆபிரகாம் பண்டிதர், முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டைத் தஞ்சாவூரில் நடத்தினார்.[4] அதனைத் தொடர்ந்து ஆறு மாநாடுகளை அவர் கூட்டினார். பல்லாண்டு தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை 1917-இல் பெரும் இசை நூலாகக் கருணாமிர்த சாகரம் என்ற பெயரில் வெளியிட்டார்.இந்நூல் 1395 பக்கங்கள் உடையது. இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது.

பிரபுல்லா சந்திர ராய்  அவர்களின் பிறந்தநாள்


பிரபுல்லா சந்திர ராய் (Acharya Prafulla Chandra Ray -  ஆகத்து 2, 1861 - சூன் 16, 1944) ஒரு வங்கக் கல்வியாளர், வேதியியலாளர், வணிகர். சமூக சேவையாளர், ஆயுர்வேத மருத்துவம் பற்றி ஆய்வுகள் செய்தவர். லண்டனில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர். இந்திய வேதியியல் கழகத்தைத் தொடங்கியவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டவர். பாதரச நைட்ரைட்டு என்ற அதிக நிலைத்தன்மை கொண்ட சேர்மத்தைக் கண்டு பிடித்தவர். இந்திய வேதியல் வளர்ச்சிக்காக மிகக் கடுமையாக உழைத்த பிரபுல்ல சந்திர ரே யின் சேவையை மதித்து, 1989-ல் இருந்து அவர் பெயரில் "பி. சி. ராய் விருது" என்ற விருது இந்தியாவில் சிறந்த விஞ்ஞானிகளுக்கு இந்திய அறிவியல் கழகத்தால் வழங்கிச் சிறப்பு செய்யப்படுகிறது.

பிங்கலி வெங்கைய்யா அவர்களின் பிறந்தநாள்


பிங்கலி வெங்கைய்யா(Pingali Venkayya) (தெலுங்கு: పింగళి వెంకయ్య) (ஆகத்து 2, 1876 - சூலை 4, 1963) என்பவர் (2 ஓர் இந்திய சுதந்திர போராட்ட வீரராவார். மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளரான இவர், இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தார்.[1] வெங்கையா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிப்பட்டணத்தின் பத்லபெனுமரு என்னும் ஊரில் பிறந்தார்.


நீதிக்கதை

ஒரு ஊர்ல ஒரு விவசாயி இருந்தாரு ,அவருக்கு திடீர்னு பணக்கஷ்டம் வந்துச்சு ,உடனே தன்னோட கழுதையை வித்து அந்த பணத்தை வச்சு பிரச்னையை சமாளிக்கலாம்னு முடிவு பண்ணுனாரு.

தன்னோட மகன கூட்டிகிட்டு பக்கத்து சந்தைக்கு நடந்து போனாரு அந்த விவசாயி ,அப்படி போகும்போது ஒருத்தர் அவுங்கல பாத்து சொன்னாரு ,கழுதைய சும்மாதான நடத்துவது ,உங்க ரெண்டு பேருல யாராவது அதுமேல உக்காந்துட்டு போகலாம்லனு சொன்னாருஉடனே தன்னோட மகன அந்த கழுத மேல ஏத்தி விட்டுட்டு கூட சேர்ந்து நடந்தார் விவசாயி.

கொஞ்ச தூரத்துக்கு அப்புறமா அங்க வந்த இன்னொருத்தரு ,அட பாவி சின்ன பயலே வயசான உங்க அப்பாவ நடக்க விட்டுட்டு நீ உக்காந்துகிட்டு வரியேனு கேட்டாரு

உடனே விவசாயி தான் உக்காந்துக்கிட்டு அவரோட மகன கூட நடக்க சொன்னாரு ,

கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறம் ,ஒரு பாட்டி வந்து நீ எல்லாம் பெரிய மனுசனா,சின்ன பையன நடக்க விட்டு நீ உக்காந்துட்டு வரியேனு சொன்னாங்க .

உடனே தன்னோட மகனையும் கூட ஏத்திக்கிட்டு ஒண்ணா பயணம் செஞ்சாரு அவரு ,அப்ப அங்க வந்த முதியவர் ஒருவர் அட கொடுமைக்காரர்களா இப்படி ரெண்டு பேரு அந்த குதிரைமேல உக்காந்து இருக்கீங்களே உங்களுக்கு இரக்கம் இல்லையானு கேட்டாரு.

உடனே ரெண்டு பேரும் கீழ இறங்கிக்கிட்டு ,இனி என்ன பண்றதுன்னு யோசிச்சாங்க ,இனி இந்த கழுதைய நாம தூக்கிட்டு நடப்போம்னு ,ஒரு குச்சியை கழுதையோட கால்களுக்கு நடுவுல கட்டி தலைகீழா தூக்கிட்டு நடந்தாங்க .

அப்ப அங்க ஒரு ஆறு குறிக்கிட்டுச்சு ,ஆத்த கடக்கறப்ப கழுத பயத்துல துள்ளி குதிச்சது ,உடனே பிடிய விட்டான் அந்த பையன் ,அப்ப அந்த கழுத ஆத்தோட போயிருச்சுஅடுத்தவங்க சொல்றத எல்லாத்தையும் கேட்டா அவங்களுக்கு ,கழுதையும் போயிருச்சு ,அத வித்து பணம் கிடைக்க வழியும் இல்லாம போயிருச்சு.


நீதி :- சொல் புத்தியை விட சுய புத்தியே சிறந்தது.


இன்றைய செய்திகள் - 02.08. 2023

*தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1705 பேர் உறுப்பு தானம் செய்துள்ளதாக அமைச்சர் 
மா. சுப்பிரமணியன் தகவல். 

*11 நிமிட சார்ஜில் 100கி.மீ.  ரேஞ்ச்....வேற லெவல் எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்த ஹோண்டா.

*மேற்கு வங்கத்தில் உள்ள பள்ளியில் அம்மோனியா எரிவாயு தொட்டி வெடித்து விபத்து-       9 மாணவர்கள்  மற்றும் ஒரு ஆசிரியருக்கு உடல் நலக்குறைவு.

*வரலாறு காணாத வெப்பம்- ஈரானில் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு. 

*பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து வியட்நாம் அணியை 7-0 என்ற கணக்கில் வீழ்த்தியது நெதர்லாந்து. 

*செஸ் போட்டியில் கலக்கும் இரண்டாம் வகுப்பு மாணவன்   கவிரூபன் " சர்வதேச போட்டிகளில் பங்கேற்பது லட்சியம்"  என்கிறார்.

Today's Headlines

*1705 people have donated organs in 15 years in Tamil Nadu information by Health Minister
 Ma.  Subramanian 

 * In 11 minute charge travelling space of 100 km Range...Honda introduced marvelous electric car.

 *Ammonia gas tank exploded in school in West Bengal - 9 students and one teacher was wounded.

 *Unprecedented heat- two days holiday announced in Iran.

 *Netherland beat Vietnam 7-0 in Women's World Cup Football.

 *Kaviruban, a second standard student who competes  in chess, says, "The ambition is to participate in international competitions."
 Prepared by

Covai women ICT_போதிமரம்

6 - 8th Std | முதல் பருவம் - மாத வாரியாக - பாட வாரியாக கற்றல் விளைவுகள்...

 

முதல் பருவம் -மாத வாரியாக - பாட வாரியாக கற்றல் விளைவுகள்...

 

6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை


6th std& 7th std

👇👇👇👇👇👇

Click here-pdf


8th std

👇👇👇👇👇

Click here pdf


8th Std Science- All term 

👇👇👇👇👇👇👇👇

Click here pdf


 Click here for latest Kalvi News 

6 To 10th Std - August 1st Week - History Kalakkodu

 

வரலாற்று காலக்கோடு - 6 முதல் 10ஆம் வகுப்பு

6 To 10th Std - August 1st Week - History Kalakkodu

Click here


 Click here for latest Kalvi News 

All CEOs & DEOs Review Meeting - August 2 & 3 - Dir Proceedings

 பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 02.08.2023 மற்றும் 03.08.2023 ஆகிய நாட்களில் மதுரை , கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் காலை 9 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( இடைநிலை ) , மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக்கல்வி ) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தனியார் பள்ளிகள் ) ஆகியோர் மடிக்கணினியுடன் மற்றும் கூட்டப் பொருள் சார்ந்த விவரங்களுடன் கலந்து கொள்ள தகவல் தெரிவிக்குமாறு அலுவலர்கள் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார் . அனைத்து முதன்மைக் கல்வி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 Click here for latest Kalvi News 

மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/ சீர் மரபினர் பெண் குழந்தைகளுக்கான கல்வி மேம்பாடு ஊக்குவிப்புத் தொகை (MBC / DNC Girls Scholarship Format) விண்ணப்பப் படிவங்கள் அனைத்தும்... (PDF Format)

 


MBC / SC Girls Scholarship Consolidation Format - Download here


MBC/DNC Girls Scholarship - Individual Student Application Format - Download here


MBC/DNC Girls Scholarship - Covering Letter Format - Download here


MBC/DNC Girls Scholarship - Consolidation Format 1 - Download here


MBC/DNC Girls Scholarship - Consolidation Format 2 - Download here


MBC/DNC Girls Scholarship - Acquittance - Download here


 Click here for latest Kalvi News 

அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புத்திறனை அதிகரிக்க ‘வெற்றிக்கொடி’ மாணவர் நாளிதழ் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

 

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசிப்புத்திறனை அதிகரிக்கும் நோக்கில் ‘வெற்றிக்கொடி’ மாணவர் நாளிதழை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை மாவட்டப் பள்ளி மாணவிகளுக்கு வழங்கினார்.


சென்னை மாவட்டத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9-ம்வகுப்பு வரை பயிலும் 24 ஆயிரம்மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் வெளியிடும் ‘வெற்றிக்கொடி’ மாணவர் பதிப்பு நாளிதழ் 2500 பிரதிகள் இந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகளுக்கு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.


சென்னை மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் ச.மார்ஸ் முன்முயற்சியில் ‘வெற்றிக்கொடி’ மாணவர் பதிப்பு நாளிதழ் அரசு பள்ளிகளுக்கு வாங்கப்படவுள்ளது.


பள்ளி கால அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான வாசிப்பு நேரத்தில் ‘வெற்றிக்கொடி’ நாளிதழை வாசித்து, மாணவர்களின் தமிழ்மொழித்திறனை மேம்படுத்துவதோடு, பிழையின்றி தமிழை வாசிக்கும் திறனை அதிகரிக்கும் விதமாகவும் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற ‘அன்பாசிரியர் 2022’ விருது வழங்கும் விழாவில், ராயப்பேட்டை அரசினர் ஹோபார்ட் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அண்ணாசாலையிலுள்ள அரசினர் மதரஸா இ-ஆசம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ‘வெற்றிக்கொடி’ மாணவர் பதிப்பு நாளிதழை வழங்கினார்.சென்னையில் நடைபெற்ற ‘அன்பாசிரியர் 2022’ விருது வழங்கும் விழாவில், பள்ளி மாணவர்களிடம் ‘வெற்றிக்கொடி’ மாணவர் பதிப்பு நாளிதழை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்



 Click here for latest Kalvi News 

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் செய்முறை வகுப்பு: ஆக.10 முதல் விண்ணப்பிக்க தனி தேர்வர்களுக்கு அறிவுறுத்தல்

 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனி தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புக்கு ஆக.10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2023-24-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள நேரடி தனிதேர்வர்களும், ஏற்கெனவே 2012-க்கு முன்பு பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல்பாடத்தில் தோல்வியடைந்தவர்களும், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயரை பதிவு செய்யலாம்.


தனி தேர்வர்கள் ஆக.10 முதல் 21-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்கள் பெயரை பதிவுசெய்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்கள், மாவட்டகல்வி அலுவலரால் ஒதுக்கப்படும் பள்ளிக்கு சென்று, செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். 80 சதவீத வருகை பதிவு உள்ள தனி தேர்வர்கள் மட்டுமே 2023-24-ம் கல்விஆண்டுக்கான 10-ம் வகுப்புபொதுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.


இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆக.10 முதல் 21-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலரிடம் ஆக.21-ம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.


 Click here for latest Kalvi News 

TNSED ADMIN APP NEW UPDATE-0.99- Date 12-3-24

 

TNSED ADMIN APP NEW UPDATE-0.99- Date 12-3-24*


👉 *Kalai Arangam and Uniform Measurement Module Added.*

TNSED Administrators App New Version👇


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.monitoring


 Click here for latest Kalvi News 

School Morning Prayer Activities - 01.08.2023 | பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.08.23

திருக்குறள் 

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஈகை

குறள் :228

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.

விளக்கம்:

.ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறிய மாட்டார்கள்.

பழமொழி :
An injury forgiven is better than that revenged

பழியை விட மன்னிப்பு வலிமையானது


இரண்டொழுக்க பண்புகள் :

1. உன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு தாழ்த்திக் கொள்ளாதே. 

2. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் தங்கள் நேரத்தில் ஒளி வீசுகின்றன. ஒன்றோடொன்று ஒத்து பார்ப்பதில்லை

பொன்மொழி :

பலர் உங்கள் வாழ்க்கையில் வந்து செல்வார்கள், ஆனால் உண்மையான நண்பர்கள் மட்டுமே உங்கள் இதயத்தில் கால்தடங்களை விட்டுச்செல்வார்கள். --எலினோர் ரூஸ்வெல்ட்

பொது அறிவு :

1. இந்தியாவுக்கு வந்த முதல் வெளிநாட்டுப் பயணி யார்?

விடை: மெகஸ்தனிஸ்

2. எந்த வம்சத்தின் ஆட்சி இந்தியாவின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது?

விடை: குப்த வம்சம்

English words & meanings :

 frail - weak and delicate. adjective .பலவீனமான. பெயரடை. fragile - easily broken or damaged object. adjective.எளிதில் முறிகிற அல்லது உடைகிற. பெயரடை

ஆரோக்ய வாழ்வு :

சோம்பு :எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளைக் கூட செரிக்கச் செய்யும் தன்மை சோம்பிற்கு உண்டு. உணவுக்குப்பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாறை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வந்தால் உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும்


ஆகஸ்ட் 01 இன்று

பால கங்காதர திலகர் அவர்களின் நினைவுநாள்

பால கங்காதர திலகர் (Bal Gangadhar Tilak, மராத்தி: बाळ गंगाधर टिळक, பாள கங்காதர டிளக்) சூலை 23, 1856 –1 ஆகத்து 1920 (அகவை 64), ஒரு இந்தியத் "தேசியவாதியும்", "சமூக சீர்திருத்தவாதியும்", விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது. முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆவார். மக்களிடையே அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் திலக் மகராஜ் என்றும் அழைக்கப்பட்டார்.


நீதிக்கதை

நம்பிக்கை மட்டும் இழக்காதே!

குருவிடம் வந்து சேர்ந்த புதிதில் சிஷ்யனுக்கு ஒரு  பிரச்சனை இருந்தது. எந்த ஒரு முக்கியமான பணியைச் செய்தாலும் முதல் முயற்சியிலேயே அதில் முழுமையான வெற்றி அவனுக்குக் கிடைப்பதில்லை. அதை குருநாதர் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்றாலும், சிஷ்யனுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. எப்படி அந்தச் சிக்கலில் இருந்து மீள்வது என ஒவ்வொரு முறையும் கவலையோடு தன் பணிகளை ஆரம்பிப்பான். பதட்டம் பற்றிக் கொள்ளும். பதறினால் சிதறத் தானே செய்யும். ஒருமுறை கூட முதல் முயற்சியிலேயே வெற்றியைச் சுவைத்ததில்லை அவன். ஒரு சில நாட்கள் அவனைக் கவனித்து வந்த குரு, ஒருநாள் அவனை அழைத்துப் பேசினார். "கிளி ஜோதிடர்களின் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடந்தாலும்  சீட்டை எடுக்க வெளியே வந்தாலும், அவை தன் சிறகை விரித்துப் பறக்க முயற்சிப்பதில்லை. மனிதர்களைப் போல நடந்து தான் வெளியே வருகின்றன. திரும்பவும் நடந்தே கூண்டுக்குள் செல்கின்றன. இது எதனால் என்று தெரியுமா?" என்று கேட்டார் குரு. ஓரிரு நொடிகள் யோசித்து விட்டு, "தெரியவில்லை குருவே" என்றான் சிஷ்யன். குரு பேசலானார்.. "சுதந்திரமாகப் பறந்து திரியும் கிளிவைப் பிடித்தவுடன் முதலில் அதன் சிறகுகளை வெட்டியெடுத்து விடுவார்கள். சிறகிழந்த கிளியானது அதை உணராமல் பறக்க முயற்சிக்கும். ஆனால், அதனால் இயலாது. தனக்கு இறகுகள் இல்லை என்று கிளிக்குத் தெரியாது. மீண்டும் மீண்டும் பறக்க முயற்சிக்கும். 

ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகும்.. கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான் சிஷ்யன். "வெட்டப்பட்ட சிறகுகள் மறுபடியும் நாளடைவில் வளர்ந்து விடும். கிளியால் அப்போது பறக்க முடியும். ஆனால் அது பறக்க முயற்சிப்பதில்லை! தான் ஒவ்வொரு முறையும் பறக்க முயன்று அது பலிக்காததால், தனக்கு இப்போது பறக்கும் சக்தி இல்லை என்று அது தவறாக நம்பிக் கொள்ளும். சிறகை விரித்துப் பறக்கும் பழக்கத்தையே மறந்து போய் விடும்..". குருவின் வார்த்தைகளைக் கேட்க கேட்க கிளிக்கும் தனக்கும் இருக்கும் ஒற்றுமை என்ன என்பது அரைகுறையாகப் புரிந்தது சிஷ்யனுக்கு. முழுமையாகப் புரியச் செய்தார் குரு. "எத்தனை முறை முயற்சி செய்கிறோம் என்பது முக்கியமல்ல. எத்தனை முறை தோல் வியடைகிறோம் என்பதும் முக்கியமல்ல. ஒவ்வொரு தோல்விக்குப் பின்னரும் அடுத்த முறை வெற்றி கிடைக்கும் என நம்புவதும், அதே நம்பிக்கையுடன் விடாமுயற்சியைத் தொடர்வதும் தான் முக்கியமாகும். இத்தனை தடவைகள் தோற்றுப் போனோமே என்ற கவலையை மனதுக்குள் கொண்டு சென்றால், அதனால் பதட்டமே ஏற்படும். அடுத்த முயற்சியும் தோல் வியாக முடியவே வாய்ப்புகள் அதிகமாகும். வெற்றியைச் சந்திக்க வாய்ப்பு இருந்தும், நம்பிக்கை இன்மையால் முழு அளவில் முயற்சி செய்யாமல் தோற்றுப் போவோம்.." என்றார் குரு. அதன் பின்னர் தோல்விகளைப் பொருட்படுத்தும் பழக்கம் தொலைந்து போனது சிஷ்யனிடம். என்ன ஆச்சரியம்... முதல் முயற்சிகளிலேயே வெற்றிகள் அவனைத் தேடி வந்தன.


இன்றைய செய்திகள் - 01.08. 2023

*சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு: என்.எல்.சி. நிர்வாகம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு.

*கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் உள்பட மூன்று பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம்.

*பேராவூரணி வந்த எக்ஸ்பிரஸ் இரயிலுக்கு வரவேற்பு. 

*தக்காளி விலையை கட்டுப்படுத்த அமைச்சர் பெரிய கருப்பன் ஆலோசனை- உயர் அதிகாரிகள் பங்கேற்பு.

*பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: கனடாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி. 

*மேஜர் லீக் தொடர் : பூரன் அதிரடி சதத்தால் கோப்பையை கைப்பற்றியது எம்ஐ நியூயார்க்.


Today's Headlines

* Compensation for Damaged Crops: Court orders N.L.C.   management to file affidavit.

 * Three products including Kanyakumari Matti  bananas got Geographical indication recognition.

 *People welcomed  the express train that arrived at Peravoorani.

 *Minister Periya Karuppan in discussion with high officials to control the price of tomatoes

 *Women's World Cup Football: Australia beat Canada with its stunning win.

 *Major League Series: MI New York won the trophy with Puran's action-packed century.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

School Calendar - August 2023

 



 
 ஆகஸ்ட்  2023 நாட்காட்டி 

அரசு விடுமுறை          

15.08.2023 - சுதந்திர தினம். 

கட்டுப் படுத்தப்பட்ட  விடுப்புகள்         

03.08.2023 - ஆடிப்பெருக்கு.            25.08.2023 -   வரலட்சுமி விரதம்                  29.08.2023 - ஓணம் திருநாள்.          29.08.2023 - ரிக் உபாகர்மா.                    30.08.2023 -யஜூர்உபாகர்மா.      31.08.2023-காயத்திரி ஜெபம் 


05.08.2023 - BEO அலுவலக குறைதீர் நாள் & CRC - 1,2,3 வகுப்பு ஆசிரியர்கள்

12.08.2023 -  CRC- 4,5 வகுப்பு ஆசிரியர்கள்


 Click here for latest Kalvi News 



 Click here for latest Kalvi News 

EE - Term 1 - English Reading Practice Book for Students - Topic wise...

 

Ennum Ezhuthum - Term 1 - Class - 1, 2, 3 English Reading Practice Book for Students - Topic wise...