School Morning Prayer Activities - 26.07.2023

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.07.23

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஈகை

குறள் :224

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.

விளக்கம்:

இல்லை என்று சொல்லாமல் கொடுப்பது கேட்பவர் முகம் மலர்ச்சி அடையும்வரை இருப்பதே அளவு.


பழமொழி :

All is well that ends well

ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன். 

 2. துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

பொன்மொழி :

வெற்றி உன்னிடம்..! கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே.. அது உன்னை கொன்றுவிடும்.. கண்ணை திறந்து பார் நீ அதை வென்று விடலாம்..!

டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் 

பொது அறிவு :

1. இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் யார்?

விடை: சுகுமார் சென்

2. இந்தியா வந்த முதல் அமெரிக்க அதிபர் யார்?

விடை: டுவைட் டி. ஐசனோவர்


English words & meanings :

 table-talk -light conversation spoken at the dining table மேசையைச் சுற்றியமர்ந்து அளவளஆவஉதல்: umpteen - a large number பெரும் எண்ணிக்கை

ஆரோக்ய வாழ்வு :

சீரகம். -சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் அதிக சர்க்கரை இருக்கும் பொழுது சீரகத்தை சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்திக்கிறது. 


ஜூலை 26 இன்று

ஜார்ஜ் பெர்னாட் ஷா அவர்களின் பிறந்தநாள்

ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856 ஆம் ஆண்டு ஜூலை 26 - 1950 ஆம் ஆண்டு நவம்பர் 2 ) ஓர் அயர்லாந்து நாடக ஆசிரியராவார். இசை மற்றும் இலக்கிய விமர்சனமே அவரது முதல் இலாபத் தன்மை கொண்ட எழுத்துப் படைப்புகள் ஆகும். அதில் தனது திறனைக் கொண்டு மிக நேர்த்தியான பத்திரிகைப் படைப்புகள் பலவற்றை எழுதினார். அவரது பிரதான திறமை நாடகமே ஆகும். மேலும் அவர் 60-இக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட அவரது அனைத்து எழுத்துப் படைப்புகளும் சமூகத்தில் பெருவாரியாக நிலவிவரும் சிக்கல்களைப் பற்றியதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மிக முக்கிய கருப்பொருள்களை மிகவும் மனதால் ஏற்றுக்கொள்ளும்படி மாற்றுவதற்கு அவற்றில் ஒரு நகைச்சுவை அம்சமும் இழையோடியபடி இருக்கும். கல்வி, திருமணம், மதம், அரசாங்கம், உடல்நலம் மற்றும் சாதிப்பாகுபாடு ஆகிய அனைத்தையும் பெர்னாட் ஷா ஆராய்ந்தார்.

நீதிக்கதை


இரண்டாம் உலக போரின் போது அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசி தாக்கியது. இதனால் பல லட்சகணக்கான மக்கள் இறந்தனர். இலட்சகணக்கானோர் அணுக்கதிர்வீச்சின் காரணமாக பலவித நோய்களுக்கு உட்பட்டனர்.

அந்த இலட்சக்கணக்கானவர்களில் ஒருத்தி தான் ஜப்பானின் ஹிரோஷிமாவைச் சேர்ந்த இரண்டு வயது நிரம்பிய சிறுமி சடகோ ஸசாகி. பாதிப்பின் தீவிரத்தை அறியாத ஸசாகி மகிழ்ச்சியாகவே தனது பள்ளி வாழ்கையை அனுபவித்தாள். வருடங்கள் ஓடியதே தெரியாத ஸசாகி ஏழாம் வகுப்பு படித்துகொண்டிருந்தாள். பள்ளியின் சிறந்த தடகள வீராங்கணையில் ஒருத்தியாக விளங்கிய ஸசாகியின் கனவு ‘’ஒரு நல்ல உடற்பயிற்சி ஆசிரியராக வேண்டும்’’என்பதாக இருந்தது.

திடீரென ஒருநாள் பள்ளியில் அவள் மயங்கி விழவே, அவளை மருத்துவமனையில் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ‘’லுயுகேமியா’’ என்ற இரத்தபுற்றுநோயால் பாதிக்கபட்டுள்ளதை கூறினார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் இறந்துவிடுவார்கள். அதுவரையில் மகிழ்ச்சியுடன் தன் வாழ்வில் இருந்த ஸசாகி தனக்கு வந்திருக்கும் நோயைப் பற்றி நினைத்து மிகவும் பயந்து அழுதாள்.

மருத்துவமனையில் நாட்கள் கழிந்த போது, ஒரு நாள் நலம் விசாரிக்க ஸசாகியின் நெருங்கிய தோழி ஒருத்தி தன் கைகளில் சில காகித கொக்குகளை கொண்டுவந்தாள். பல வருடங்களாக ஜப்பானில் கொக்குகள் புனிதத்தின் அடையாளமாக விளங்குகின்றன. நோயுற்ற ஒருவர்,1000 காகித கொக்குகளை உருவாக்கினால் அவர் உடல்நலம் பெறுவார்கள் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆகவே நீ 1000 காகித கொக்குகளை உருவாக்கு என அன்புக் கட்டளை இட்டுச் சென்றாள்.ஸசாகி காகித கொக்குகளை உருவாக்க முடிவு செய்தாள். நோயின் தீவிரத்தால் பாதிக்கப்பட்டிருந்தபோது கூட அவள் காகித கொக்குகளைச் செய்வதில் விடாமுயற்சியுடன் இருந்தாள். இதில் ஒரு கட்டத்தில் அந்தக் காகிதக் கொக்குகளைச் செய்வதற்கு காகிதங்கள் தீர்ந்து விடுகின்றன. இதனைத் தொடர்ந்து தனக்கு மருந்துகள் எழுதப்பட்ட மருந்துச்சீட்டில் காகித கொக்குகளைச் செய்யத் தொடங்கிறாள் ஸசாகி.
ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட காகித கொக்குகளை உற்சாகமாக உருவாக்கிய போது ஓரளவு உடல் நலம் பெற்றாள். ஆகவே மருத்துவர்கள் வீட்டுக்குச் செல்ல அனுமதித்தனர். வீட்டுக்குச் சென்ற ஒரு வாரத்தின் முடிவில் மீண்டும் நோய்வாய்பட்டாள். முன்பை விட மிக அதிகமான வலியும், வேதனையும் கூடியபோது கூட நம்பிக்கையை தளரவிடாமல் அவள் உருவாக்கிய காகித கொக்குகள் மொத்தம் 644.


அவள் இறப்புக்கு பின் அவளுடைய நண்பர்கள் மீதமுள்ள காகித கொக்குகளை செய்து முடித்து அவளுடைய கடைசி விருப்பத்தை நிறைவேற்றினர். ஸசாகியின் இறப்புக்குப் பின் மூன்று வருடங்களுக்கு பிறகு 1958 மே 5-ம் தேதி ஹிரோஷிமா அமைதி பூங்காவில் அவளுக்கென நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டது. அவளின் நினைவு சின்னம் இன்றளவும், நமக்கு உலகின் அமைதியைக் கூறி கொண்டே இருக்கிறது.இறக்கும் தருவாயில் கூட ஸசாகி தன்னுடைய விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் கைவிடவில்லை. உண்மையில் நம் அனைவருக்கும் வாழ்வில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் தவிர்க்க இயலா வருத்தங்கள்,பிரச்சனைகள் இருக்கும். அனைத்தையும் இழந்தாலும் நம் வாழ்வில் நாம் இழக்கக்கூடாது விடாமுயற்சி, தன்னம்பிக்கை மட்டும்தான். அனைத்தையும் இழந்தாலும் நம்மிடம் உயிர் உள்ளது.

இன்றைய செய்திகள் - 26.07. 2023

*ஐந்தாவது சுற்றுப்பாதைக்கு வெற்றிகரமாக சென்ற சந்திராயன்-3... அடுத்து வருவது தான் முக்கியமான கட்டம் - இஸ்ரோ தகவல்.

*எஸ்.டி.  பட்டியலில் தனுவர்,  தனுஹர் சமூகங்கள். மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்.

*பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: பவானி ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.   

*மோட்டார் சைக்கிள் பயன்பாட்டில் உலகில் இந்தியா முதலிடம்.

*மகளிர் உலகக் கோப்பை கால்பந்து- தென்கொரியாவை வீழ்த்தியது கொலம்பியா.

*5வது ஆசஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு.

Today's Headlines

*Chandrayaan-3 successfully entered the fifth orbit... Next is the important step - ISRO information.

 * ST.  Danuwar and Danuhar communities in the list.  Passage of the bill in Rajya Sabha.

 * Release of water from Pillur Dam: Flood warning for Bhavani riverside area.

 *India is number one in the world in motorcycle usage.

 *Women's World Cup Football- Colombia defeated South Korea.

 *5th Aces Test: England vs Australia squad announced.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

School Morning Prayer Activities - 25.07.2023

  

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.07.23

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஈகை

குறள் :223

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.

விளக்கம்:

தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.


பழமொழி :
All are not saints that go to church

சாம்பல் பூசியவரெல்லாம் சாமியார் அல்ல.


இரண்டொழுக்க பண்புகள் :

1. எல்லாம் தெரியும் என்று சொல்பவனின் தேடலும் அறிவும் விரைவில் முடிவுக்கு வரும்.

2. இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் எனக்கு அதிகம் தெரியாது என்று சொல்பவர்கள் தேடுதலும் அறிவும் தொடரும்

பொன்மொழி :

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவது இல்லை

டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் 


பொது அறிவு :

1. இந்திய தேசிய சின்னத்தின் பொன்மொழி என்ன?

விடை: சத்யமேவ ஜெயதே( வாய்மையே வெல்லும்)

2. இந்தியாவின் முதல் சட்டம் மற்றும் நிதி அமைச்சர் Anan?
விடை: டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்


English words & meanings :

 shuttle-a form of transport that travels regularly between two places. NOUN. travel regularly between places. VERB. சிறிது தூரம் சென்று திரும்பும் ரயில் வண்டி. பெயர்ச் சொல். இரு இடங்களுக்கு இடையே ஒழுங்காக பிரயாணம் செய்வது. வினைச் சொல்


ஆரோக்ய வாழ்வு :

சீரகம் - இதை வாழைப் பழத்துடன் பிசைந்து சாப்பிட்டால் இரத்த மூலம் சரியாகும். சீரகத்தையும் உப்பையும் மென்று சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் வயிற்று வலி சரியாகும்.


ஜூலை 25 இன்று

ஜிம் கார்பெட் 


புகழ்பெற்ற புலி வேட்டைக்காரரான ஜிம் கார்பெட் (ஜூலை 25, 1875- ஏப்ரல் 19, 1955) இமயமலைத் தொடரில் உள்ள குமாவுன் மலையில் அமைந்துள்ள கோடைவாழிடமான நைனித்தாலில் பிறந்தவர். ஆங்கில மரபினர். இயற்கையைப் பேணுவதில் ஆர்வம் மிகக்கொண்டிருந்தவர்.புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் பற்றிய இவரது நூல்களுக்காகப் புகழ்பெற்றவர். குறிப்பிட்ட விலங்கு அடிக்கடி மனிதர்களைக் கொன்று வருகிறது என்பது உறுதிப்பட்டாலொழிய அவ்விலங்கைக் கொல்ல மாட்டார். இந்தியாவின் முதல் தேசியப் பூங்காவான ஹெய்லி தேசியப் பூங்காவையும் ஏற்படுத்துவதில் கார்பெட் பங்காற்றினார். 1957ல் ஹெய்லி தேசியப் பூங்கா கார்பெட் தேசியப் பூங்கா என பெயர் மாற்றப்பெற்றது.


நீதிக்கதை

ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளெமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார்.

ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது.

தன் கையிலிருந்தவற்றை அப்படியே போட்டுவிட்டு ஓடினார் ஃப்ளெமிங். ஒரு சிறுவன் இடுப்பளவு ஆழத்தில் அந்தப் புதை மணலில் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான்.நல்லவேளையாக ஃப்ளேமிங் அவனை காப்பாற்றினார். ஃப்ளேமிங் இல்லையென்றால் அந்தச் சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக புதை மணலில் மூழ்கி இறந்திருப்பான்.

அடுத்த நாள் ஒரு ஆடம்பரமான வண்டி ஃப்ளெமிங் வீட்டு முன்னால் வந்து நின்றது.
நேர்த்தியாக உடை அணிந்த ஒரு பிரபு அவ்வண்டியிலிருந்து இறங்கி வந்து நேற்று ஃப்ளெமிங் காப்பாற்றிய சிறுவனின் தந்தை தாம் என்று அறிமுகம் செய்து கொண்டார்.

“நீங்கள் என் மகனின் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்களுக்கு நான் ஏதாவது கொடுக்க விரும்புகிறேன்”, என்றார்.

“இல்லை, என்னால் எதுவும் வாங்கிக் கொள்ள முடியாது” என்று பணிவாக மறுத்தார் ஃப்ளெமிங்.

அப்போது அவரது பிள்ளை அவர்களது எளிய குடிசையின் வாசலுக்கு வந்தான்.

“அவன் உங்கள் மகனா?” என்று கேட்டார் பிரபு.

“ஆமாம்” என்று பெருமையுடன் கூறினார் ஃப்ளெமிங்.

“அப்படியானால் சரி, நாமிருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுவோம்.

என் பிள்ளைக்குக் கிடைக்கும் அதே மிகச்சிறந்த கல்வியை அவனுக்குக் கொடுக்கிறேன்.
அவன் அவனது தந்தையைப் போலிருந்தால் பிற்காலத்தில் நாமிருவரும் பெருமை அடையக்கூடிய அளவுக்கு வருவான்” என்றார்.

இப்படியாக அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. சொன்னதோடு மட்டுமல்ல; செய்தும் காண்பித்தார்.

*விவசாயியின் மகன் மிகச் சிறந்த பள்ளிக் கூடங்களில் படித்தான்.

லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவப் பள்ளியில் படித்து உலகம் புகழும் பெனிசிலின் கண்டுபிடித்த

*சர் அலெக்ஸ்சாண்டர் ஃப்ளெமிங் ஆனார்.*

வருடங்கள் பல கழிந்தபின் பிரபுவின் பிள்ளை நிமோனியாவால் பாதிக்கப்பட்டபோது பெனிசிலின் தான் அவரைக் காப்பாற்றியது.

அந்த பிரபுவின் பெயர் லார்ட் ரண்டோல்ப் சர்ச்சில்.

அவரது பிள்ளை?

*சர் வின்ஸ்டன் சர்ச்சில்!*

தினை விதைத்தவன் தினை அறுப்பான்.


நல்லது செய்பவனுக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும்.


இன்றைய செய்திகள் - 25.07. 2023

*ட்விட்டரின் புதிய லோகோ 'X' - எலான் மஸ்க் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

*சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை- மக்கள் மகிழ்ச்சி.   தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

*சென்னையில் ஜி-20 கூட்டம் தொடங்கியது பிரதமரின் முதன்மை செயலாளர் பங்கேற்பு.

*அடுத்த மாதம் சென்னை வருகிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு.

*அப்ரார் அகமது அசத்தல் பந்துவீச்சு - இலங்கை முதல் இன்னிங்சில் 166 ரன்னுக்கு சுருண்டது.

*அதிவேகமாக 100 ரன்:  இந்திய அணி புதிய சாதனை. ரோகித் சர்மா 44 பந்தில் 57 ரன்கள் அடித்தார். இஷான் கிஷன் 34 பந்தில் 52 விளாசல்.


Today's Headlines

*Twitter's New Logo 'X' - Elon Musk Officially Announced

 *Heavy rains in Chennai and surrounding areas - people happy.  Chance of heavy rain in 5 districts of Tamil Nadu - Meteorological Center

 * The G-20 meeting started in Chennai with the participation of the Prime Minister's Principal Secretary.

 *President Draupadi Murmu is coming to Chennai next month.

 *Fantastic bowling by Abrar Ahmed - Sri Lanka were bowled out for 166 in the first innings.

 *Fastest 100 runs: New record for Indian team.  Rohit Sharma scored 57 runs off 44 balls.  Ishan Kishan scored 52 off 34 balls.
 Prepared by

Covai women ICT_போதிமரம்



 Click here for latest Kalvi News 

பி.டி.எஸ், எம்.டி.எஸ் படிப்புகளுக்கு ஆர்வம் குறைகிறதா? 5 ஆண்டுகளாக 10 – 55% இடங்கள் காலி

 ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இந்திய நிறுவனங்களில் இளங்கலை (UG) மற்றும் முதுகலை (PG) பல் மருத்துவப் படிப்புகளில் ஆண்டுக்கு ஆண்டு 10% முதல் 55% இடங்கள் காலியாகி வருகின்றன. மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை வெகுவாக குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

2016-17 மற்றும் 2022-23 க்கு இடையில் 1,89,420 இளங்கலை பல் அறுவை சிகிச்சை (BDS) இடங்கள் வழங்கப்பட்டதாகவும், அவற்றில் 36,585 இடங்கள் காலியாக இருப்பதாகவும் இந்திய பல் மருத்துவ கவுன்சிலின் (DCI) தரவு காட்டுகிறது. 2017-18 முதல் 2022-23 வரை, 38,487 முதுகலை பல் அறுவை சிகிச்சை (MDS) இடங்களில், 5,000 க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.

இடங்கள் காலியாக இருந்தாலும், நாட்டின் எதிர்கால சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல் மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு தீவிரமாக அதிகரித்து வருகிறது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2014 மற்றும் 2023 க்கு இடையில் பல் மருத்துவக் கல்விக்கான இடங்களின் எண்ணிக்கை BDS பட்டப்படிப்பில் 14% மற்றும் MDS பட்டப்படிப்புக்கு 48% அதிகரித்துள்ளது. பல் மருத்துவக் கல்வியின் அளவு மற்றும் தரத்தை மேம்படுத்த இந்திய பல் மருத்துவக் கவுன்சில் நடவடிக்கை எடுத்து வருவதே இந்த விரிவாக்கத்திற்குக் காரணம். 2021-22ல், அமைச்சகத்தின் தரவுகளின்படி இந்தியாவில் மொத்தம் 27,868 BDS இடங்களும் 6,814 MDS இடங்களும் இருந்தன.

ஆனால், பல ஆண்டுகளாக பல் மருத்துவப் படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்யாமல் இருப்பதற்கு தொழில்முறை வளர்ச்சி வாய்ப்புகள் இல்லாமை மற்றும் சம்பளம் தேங்கி நிற்பதே முக்கியக் காரணம் என்று சுகாதார நிபுணர்கள் மற்றும் துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு பல் மருத்துவம் இந்தியாவில் வளர்ந்து வரும் தொழிலாக இருந்தது. ஆனால், அரசுக் கல்லூரிகளில் நவீன தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் பற்றாக்குறையாலும், மாணவர்கள் சரியான கல்வி மற்றும் பயிற்சியை பெற முடியாமல் திணறுகிறார்கள். மேலும், அரசுத் துறையில் வேலை வாய்ப்புகள் மிகக் குறைவு. தனியார் துறையிலும் குறைந்த ஊதியம் உள்ளது. அதேநேரம் மெட்ரோ நகரங்களில் அதிக எண்ணிக்கையிலும், சிறிய நகரங்களில் பல் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லாததும் இந்த துறை வளராததற்கு காரணம். இன்று, பி.டி.எஸ்.,க்குப் பிறகு, பல பல் மருத்துவர்கள் எம்பிஏ அல்லது பொது சுகாதார நிர்வாகத்தில் முதுகலை பட்டப்படிப்பைத் தேர்வு செய்கிறார்கள், என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.


கல்வி அமைச்சகத்தின் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் படி, 2023 ஆம் ஆண்டில், முதல் ஐந்து பல் மருத்துவக் கல்லூரிகளில் 4 தனியார் கல்லூரிகள் உள்ளன, டெல்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மட்டுமே அரசுக் கல்லூரி. தனியார் கல்லூரிகளில், ஐந்தாண்டு இளங்கலை பி.டி.எஸ் படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்கு மேல் வசூலிக்கப்படுகிறது. எனவே குறைந்தபட்சம் 15 லட்சம் ரூபாய் செலவு செய்து படித்த நிலையில், குறைவான வருமானமே கிடைக்கிறது. MBBS அல்லது ஆயுர்வேத மருத்துவர்கள் கூட மாதம் ரூ20,000க்கு மேல் சம்பாதிக்கின்றனர். அதேபோல் முதுகலை படிப்புக்கான செலவும் அதிகம், ஆனால் வருமானம் குறைவு. மேலும், ஒரு புதிய பல்மருத்துவர் ஒரு தனியார் நிறுவனத்தை அமைப்பதற்கு ரூ.5 லட்சத்திற்கு மேல் செலவாகும், என்றும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

2019 ஆம் ஆண்டில், இந்திய பல் மருத்துவக் கவுன்சில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) மதிப்பெண்களைக் குறைக்க பரிந்துரைத்தது. முன்பு அகில இந்திய மருத்துவத்திற்கு முந்தைய தேர்வு (AIPMT), இது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் MBBS, BDS மற்றும் AYUSH (ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி) உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நாடு தழுவிய நுழைவுத் தேர்வாகும். வெளிநாட்டில் முதன்மை மருத்துவப் படிப்புகளைத் தவிர விரும்புபவர்களாலும் இந்தத் தேர்வு எழுதப்படுகிறது.

2020ல், பி.டி.எஸ் படிப்பில் சேருவதற்கான நீட் கட்-ஆஃப் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 10 சதவீத புள்ளிகளால் திருத்தப்பட்டது. திருத்தப்பட்ட நீட் கட்-ஆஃப் மதிப்பெண்களின் அடிப்படையில் 9,09,776 விண்ணப்பதாரர்கள் பி.டி.எஸ் சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளதாக மருத்துவ ஆலோசனைக் குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, பிடிஎஸ் சேர்க்கைக்கு 7,71,511 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

எவ்வாறாயினும், பல் மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.


 Click here for latest Kalvi News 

12-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு; தெரிந்துக் கொள்வது எப்படி?

Tamil Nadu HSE +2 Supplementary Exams Results 2023: தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் 12ஆம் வகுப்பு அல்லது பிளஸ் டூ துணைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வெழுதிய மாணவர்கள் தங்களது முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான https://dge.tn.gov.in/ இல் தெரிந்துக் கொள்ளலாம்.

இந்தத் துணைத் தேர்வுகள் ஜூன் 19 முதல் ஜூன் 26 வரை நடத்தப்பட்டன.

12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் 2023: முடிவுகளை எவ்வாறு தெரிந்துக் கொள்வது எப்படி?

படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் – https://dge.tn.gov.in/

படி 2: இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ரிசல்ட் லிங்கை கிளிக் செய்யவும்

படி 3: ரோல் எண் மற்றும் பிறந்த தேதி போன்ற உங்கள் சான்றுகளைப் பயன்படுத்தி உள்நுழையவும்

படி 4: எதிர்கால குறிப்புக்காக முடிவைப் பார்த்து பதிவிறக்கி வைத்துக் கொள்ளவும்

முன்னதாக 8.51 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வை எழுதினர், அதில் மொத்தம் 7,55,451 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 96.38 சதவீத தேர்ச்சியையும், மாணவர்கள் 91.45 சதவீத தேர்ச்சியும் பெற்றனர்.


 Click here for latest Kalvi News 

JEE Advanced 2023; திருச்சி என்.ஐ.டி 5 ஆண்டு கட் ஆஃப் விவரம் இங்கே

JEE Advanced 2023: இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IITs), தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (NITs), இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (IITs) மற்றும் பிற அரசு நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (GFTIs) ஆகியவற்றில் சேர்வதற்கான கூட்டு இருக்கை ஒதுக்கீடு ஆணையம் (JoSAA) கவுன்சிலிங் நடந்து வருகிறது.

இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்கும் 31 என்.ஐ.டி.,களில் ஒன்று – என்.ஐ.டி திருச்சிராப்பள்ளி அல்லது என்.ஐ.டி திருச்சி. இது பொறியியல், கட்டிடக்கலை மற்றும் மேலாண்மைக்கான முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாகும்.

NIRF 2023 தரவரிசையின்படி, NIT திருச்சிராப்பள்ளி நாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகளில் ஒன்பதாவது இடத்தையும், கட்டிடக்கலை கல்லூரிகளில் நான்காவது இடத்தையும், அதன் ஆராய்ச்சி ரேங்கில் 22 ஆவது இடத்தையும், மேலாண்மை நிறுவனங்களில் 35 வது இடத்தையும், அதன் ஒட்டுமொத்த தரவரிசையில் 21 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி திருச்சிராப்பள்ளி 10 இளங்கலைப் படிப்புகளையும், பல்வேறு துறைகளில் 26 முதுகலைப் படிப்புகளையும், அனைத்துத் துறைகளிலும் பி.எச்.டி படிப்புகளையும் வழங்குகிறது. இந்தநிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் தரவரிசையைப் பார்ப்போம்.

2023 

2022

2021

2020

2019

NIT திருச்சிராப்பள்ளி இந்திய அரசு மற்றும் தமிழக அரசின் கூட்டு முயற்சியாக 1964 இல் பிராந்திய பொறியியல் கல்லூரியாக நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் 2003 இல் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி என மறுபெயரிடப்பட்டது. இது தேசிய தொழில்நுட்ப நிறுவனம் சட்டம் 2007 மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.





CBSE: சி.பி.எஸ்.இ 9-12 வகுப்பு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்

 மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 9 முதல் 12 வகுப்புகளுக்கான வினாத்தாள் அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பள்ளிகள் இந்த மாற்றங்களைச் செயல்படுத்தத் தயாராகி வருவதோடு, அவற்றின் மதிப்பீட்டு முறைகளிலும் மாற்றத்தை செய்து வருகின்றன.

வினாத்தாள் வடிவமைப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் போட்டித் தேர்வுத் தரங்களுடன் ஒத்துப்போகிறது, இது உயர் படிப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கு தயாராகும் மாணவர்களுக்கு சாதகமாக உள்ளது என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான வாரியத் தேர்வுகள் மற்றும் ஆண்டுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், முந்தைய ஆண்டு 40% உடன் ஒப்பிடும்போது, ​​50% திறன் அடிப்படையிலான கேள்விகளைக் கொண்டிருக்கும். மீதமுள்ள 30% குறுகிய மற்றும் நீண்ட பதில்கள் உட்பட கட்டமைக்கப்பட்ட பதில் கேள்விகளைக் கொண்டிருக்கும், மீதமுள்ள 20% கொள்குறி வகை கேள்விகளாக (MCQs) இருக்கும்.

“தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020க்கு இணங்க, கருத்தியல் அடிப்படையிலான கற்றல் மற்றும் திறன் அடிப்படையிலான கற்றல் நோக்கிய மாற்றம் CBSEயின் புதிய வினாத்தாள் வடிவத்தில் தெளிவாகத் தெரிகிறது. கருத்தியல் வகை கேள்விகளை ஊக்குவிப்பதன் மூலம், வாரியமானது கற்றலை ஊக்கப்படுத்துவதையும், கருத்துகளின் ஆழமான புரிதலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அணுகுமுறை தேர்வுகளின் போது மாணவர்களுக்கு பயனளிப்பதோடு, மதிப்பீட்டு செயல்முறையையும் விரைவுபடுத்தும். இருப்பினும், கருத்தியல் வகை வினாக்களுக்கான இந்த மாற்றத்திற்கு ஆசிரியர்கள் மாணவர்களை வித்தியாசமாக தயார்படுத்த வேண்டும்,” என்றும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.


 Click here for latest Kalvi News 

ADD IN-SERVICE TRAINING DETAILS IN EMIS PORTAL

 பணியிடை பயிற்சியில் (TPD_2_Cls4&5_July22) கலந்து கொண்ட தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொண்ட விவரத்தினை EMIS PORTAL-ல் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள்


👇👇👇👇👇


https://youtu.be/yx5BsLo_nRA

 Click here for latest Kalvi News 

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது: பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு

 

மத்திய அரசின் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கு அரசுப் பள்ளிகள் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை விவரம்: நடப்பு கல்வியாண்டில் புத்தாக்க அறிவியல் மானக் விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான பதிவுகளை இணையதளத்தில் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், இதுவரை எவ்வித விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படாதது வருத்தமான செயலாகும்.


எனவே அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் வகுப்புக்கு ஒருவர் வீதம் 5 பேர், நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் வகுப்புக்கு ஒருவர் வீதம் 3 பேர் என்ற விகிதத்தில் தயார்செய்து http://www.inspireawards.dstgov.in/ என்ற இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதில் எந்தவொரு பள்ளியும் விடுபடக் கூடாது.


எனவே, அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் இந்த விருதுக்காகத் தேர்வான மாணவர்கள் மற்றும் பொறுப்பு ஆசிரியர் விவரங்களை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது சார்ந்து தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 Click here for latest Kalvi News 

Then chittu Magazine ( 16 to 31th ) - July 2023

 

தேன்சிட்டு 16-31 ஜூலை 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு.

July 2023 - Then chittu Magazine ( 16 to 31th ) - Download here...


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு உத்தேச பெயர்ப் பட்டியல் வெளியீடு.

 

 பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு உத்தேச பெயர்ப் பட்டியல் வெளியீடு.

DSE - HSS HM Panel List - Download here...


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News