Then chittu Magazine ( 16 to 31th ) - July 2023

 

தேன்சிட்டு 16-31 ஜூலை 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு.

July 2023 - Then chittu Magazine ( 16 to 31th ) - Download here...


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு உத்தேச பெயர்ப் பட்டியல் வெளியீடு.

 

 பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு உத்தேச பெயர்ப் பட்டியல் வெளியீடு.

DSE - HSS HM Panel List - Download here...


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஜுலை 31 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

 


தென்காசிக்கு உள்ளூர் விடுமுறை :


 ஆடித்தபசு திருநாளை முன்னிட்டு , தென்காசி மாவட்டத்தில் வரும் 31 ம் தேதி உள்ளூர் விடுமுறை ; இதனை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 19 ம் தேதி ( சனிக்கிழமை ) வேலை நாளாக செயல்படும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு -


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மணற்கேணி எனும் புதிய செயலி பள்ளிக் கல்வித் துறையில் அறிமுகம் - 25.07.2023 அன்று வெளியீடு

 

நாட்டிலேயே முதன்முறையாக பாடங்களை காணொலி வடிவத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது . நம் கல்வி முறையில் உயர்தரமான டிஜிட்டல் பாடங்களை உருவாக்கவும் இருப்பில் வைப்பதும் வகுப்பறைகளை மேலும் மேம்படுத்தவும் சுவாரஸ்யமானதாக மாற்றவுமே காணொலிப் பாடங்களை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது.

Invite-Manarkeni-App-launch.pdf - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தமிழகத்தில் 10ம் வகுப்பு துணைத் தேர்வுமுடிவுகள் வரும் 26ம் தேதி வெளியிடப்படும் - தேர்வுத்துறை

 

தமிழகத்தில் 10ம் வகுப்பு துணைத் தேர்வுமுடிவுகள் வரும் 26ம் தேதி வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவிப்பு.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

CBSE பள்ளிகளில் தமிழ் மீடியம்; வாரியம் உத்தரவு.

 

'நாடு முழுதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இனி தமிழ் உள்ளிட்ட, 22 பிராந்திய மொழிகளிலும் பாடம் பயிற்றுவிக்க வேண்டும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான பாடப் புத்தகங்களை தயாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுதும், 28,886 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில், 2.54 கோடி மாணவர்கள் படிக்கின்றனர்; 12.56 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.


இவை, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

பயிற்று மொழி


இந்த பள்ளிகளில் ஆங்கிலம், ஹிந்தி ஆகியவை பயிற்று மொழியாக உள்ளன. மத்திய அரசு அறிவித்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கையில், தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், மாணவர்களிடையே பன்மொழி திறனை ஊக்குவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தமிழ் உள்ளிட்ட, 22 பிராந்திய மொழிகளிலும் பாடம் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளி நிர்வாகங்களுக்கு சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டு உள்ளது.


இது குறித்து, சி.பி.எஸ்.இ., இயக்குனர் ஜோசப் இமானுவேல், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


தாய்மொழி மற்றும் பிராந்திய மொழிகளில் கல்வி கற்பிப்பதன் முக்கியத்துவம் குறித்து, புதிய தேசிய கல்வி கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


இதன் அடிப்படையில் ஏற்கனவே உயர் கல்வித் துறையில் தேசிய கல்வி கொள்கையின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


இதன் தொடர்ச்சியாக பள்ளி கல்வி துறையிலும் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.


இதன்படி சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மழலையர் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை தமிழ் உள்ளிட்ட, 22 பிராந்திய மொழிகளிலும் பயிற்று மொழியாக பயன்படுத்த வேண்டும்.


மாணவர்களுக்கு பன்மொழி அறிவின் முக்கியத்துவத்தையும், அதனால் ஏற்படும் நன்மைகளையும் தேசிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது. பிராந்திய மொழிகளில் பாடம் கற்பிப்பதிலும், இதை நடைமுறைப்படுத்துவதிலும் சில சவால்கள் உள்ளன.


அடித்தளம்


இந்த மொழிகளில் பாடம் நடத்துவதற்கு தேவையான ஆசிரியர்கள் கிடைப்பது, பாடப்புத்தகங்களை தயாரிப்பது, இரண்டு, 'ஷிப்டு' களாக இயங்கும் அரசு பள்ளிகளில், இதற்கான நேரத்தை ஒதுக்குவது ஆகியவை சவாலான விஷயங்கள். இதற்கு விரைவில் தீர்வு காணப்படும்.


இதற்காக தமிழ் உள்ளிட்ட, 22 மொழிகளில் பாடப் புத்தகங்களை தயாரிக்கும்படி தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு, மத்திய கல்வி அமைச்சகம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. 2024 - 25ம் கல்வியாண்டு முதல், இந்த பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு கிடைக்கும்.


இந்த பிராந்திய மொழிகளில் பாடப் புத்தகங்களை தயாரிக்கும் பணியை உயர் கல்வித் துறை துவங்கியுள்ளது. நாடு முழுதும் பிராந்திய மொழிகளில் முக்கியமான போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.


தொழிற்கல்வி, சட்டம், மருத்துவம், திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு, ஏற்கனவே பிராந்திய மொழிகளில் பாடப் புத்தகங்கள் தயாராகி உள்ளன.


எனவே, மாணவர்களின் சிறந்த எதிர்காலத்துக்கான முக்கியமான அடித்தளம் அமைக்க வேண்டும் என்பதற்காக, பள்ளி கல்வி துறையிலும் பிராந்திய மொழிகளில் பயிற்றுவிக்கும் முயற்சி துவங்கப்படுகிறது.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 24.07.2023

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.07.23


திருக்குறள் 

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஈகை

குறள் :222

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.

விளக்கம்:

நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.

பழமொழி :
After a strom cometh a calm

புயலுக்கு பிறகு அமைதி உண்டாகும்.


இரண்டொழுக்க பண்புகள் : 

1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன். 

 2. துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.


பொன்மொழி :

வாய்ப்புக்காக காத்திருக்காதே… உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்தி கொள்…

டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம்


பொது அறிவு :

1. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் யார்?

விடை: அபினவ் பிந்த்ரா.( துப்பாக்கி சுடுதல்)

2. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
விடை: வில்லியம் பென்டிங்க் பிரபு.


English words & meanings :

 quell - control அடக்கு: rind - skin தோல்,மரப்பட்டை


ஆரோக்ய வாழ்வு :

சோயா சங்க் நம்முடைய செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. சோயா துண்டுகள் நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாக உள்ளன, இது உடலில் சரியான செரிமானத்திற்கு அவசியம்.

சோயா துண்டுகளை சாப்பிடுவதன் மூலம் செரிமானத்திற்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.


நீதிக்கதை

ஒரு காலத்தில் ஒரு செல்வந்தன் கடுமையான கண் வலியால் அவதிப்பட்டான். அவர் பல  மருத்துவர்களைக் கலந்தாலோசித்து சிகிச்சையை முயற்சித்தார், ஆனால் எதுவும் உதவவில்லை. மேலும் கண் வலி முன்பை விட அதிகமானது. கடைசியாக, இதுபோன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் வல்லுனர் என்று புகழ் பெற்ற ஒரு துறவியைப் பற்றி அவர் கேள்விப்பட்டார். அவனிடம் சென்று தன் பிரச்சனையைச் சொன்னான்.

துறவி அவரது பிரச்சனையைப் புரிந்துகொண்டு, “நீங்கள் பச்சை நிறங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், உங்கள் கண்கள் வேறு எந்த நிறத்தையும் பார்ப்பதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்” என்று கூறினார். செல்வந்தன் இந்த வகையான மருத்துவத்தை விசித்திரமாகக் கண்டான் மற்றும் அதை முயற்சிக்க முடிவு செய்தார். செல்வந்தன் ஓவியர்களைக் கூட்டி வரவழைத்து ஏராளமான பச்சை வண்ணப்பூச்சுகளை வாங்கி, துறவி கூறியதை போலவே தனது கண்ணில் விழும் ஒவ்வொரு பொருளும் பச்சை நிறத்தில் இருக்குமாறு அறிவுறுத்தினார்சில நாட்களில் அந்த மனிதனைச் சுற்றியுள்ள அனைத்தும் பச்சை நிறத்தில் இருந்தன. செல்வந்தன் சுற்றிலும் உள்ள எதுவும் வேறு எந்த நிறத்திலும் வராமல் பார்த்துக்கொண்டான். சில நாட்களுக்குப் பிறகு, துறவி செல்வந்தரைப் பார்க்க வந்தார், செல்வந்தரின் வேலைக்காரன் ஒருவன் பச்சை வண்ணப்பூச்சின் வாளியுடன் ஓடி வந்து துறவியின் மீது ஊற்றினான். துறவி வேலைக்காரனிடம் இதற்கான காரணத்தைக் கேட்டார்.

வேலைக்காரன் அதற்கு பதிலளித்தார், “நீங்கள் காவி வண்ணத்தில் உடை அணிந்துள்ளீர்கள், பச்சை நிறத்தை தவிர எங்கள் மாஸ்டர் வேறு எந்த நிறத்தையும் பார்க்க அனுமதிக்க முடியாது…அதைக் கேட்டு துறவி சிரித்துவிட்டு, “அவர் அணிவதற்கு ஒரு  பச்சை நிறக் கண்ணாடியை நீங்கள் வாங்கியிருந்தால் செலவு குறைந்திருக்கும். நீங்கள் இந்த சுவர்கள், கட்டுக்கள் அனைத்தையும் சேமித்திருக்கலாம், மேலும் அவரது செல்வத்தில் பெரும் தொகையைச் சேமித்திருக்க முடியும்.. உங்களால் உலகத்தை பச்சையாக வரைய முடியாது.”


 உலகை வடிவமைப்பது மாற்றுவது முட்டாள்தனம், முதலில் நம்மை வடிவமைப்போம். நம் பார்வையை மாற்றுவோம், அதன்படி உலகம் தோன்றும்.


இன்றைய செய்திகள் - 24.07. 2023

*பீகார் மாநிலத்தில் நாளந்த மாவட்டத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தார். 5 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்பு.

*தமிழகத்தில் 110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு.

*30 தமிழறிஞர்களுக்கு வி.ஜி.பி இலக்கிய விருது - சபாநாயகர் அப்பாவு வழங்கினார். 

*ஆலங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 34 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடத்திய முன்னாள் மாணவர்கள். ஆசிரியருக்கு 'பேஷன் ப்ரோ' பைக் பரிசளித்த முன்னாள்  மாணவர்கள்.

*டுவிட்டர் என்ற பெயரை மாற்ற எலான் மஸ்க் முடிவு.

*சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இலங்கை வீரர் லஹிரு திரிமானே.

*கொரிய ஓபன் பேட்மிட்டன்: இந்தியாவின் சாத்விக் - சிராஜ் ஜோடி சாம்பியன்.

Today's Headlines

*A 4-year-old girl from Nalanda district in Bihar fell into a borewell.  Rescued alive after 5 hours.

 * 110 District Collectors promoted as Deputy Collectors in Tamil Nadu.

 *VGP Literary Award was given to 30 Tamil Scholars honourable by Speaker Appavu.

 *Former students held a retirement appreciation ceremony for the teacher who worked for 34 years in Alangadu Government High School.  Alumni presented the teacher with a 'Passion Pro' bike.

 * Elon Musk  decided to change the name Twitter.

 *Sri Lankan player Lahiru Thirmane has announced his retirement from international cricket.

 *Korea Open Badminton: India's Shathwick-Siraj pair clinched  the championship
 Prepared by

Covai women ICT_போதிமரம்


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

BASELINE ASSESSMENT SURVEY வகுப்பு 2,3 & 4 - SCERT

ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான  வணக்கம்.

2023-2024 கல்வியாண்டில்  தனியார் பள்ளிகளிலிருந்து  புதியதாக அரசு பள்ளிகளில் 2,3,4 ஆம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் கற்றல் நிலையை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு மட்டும் அடிப்படை திறனறிதல் மதிப்பீட்டை  (19-07-2023) முதல் வருகின்ற (25-07-2023) ஆம் தேதி வரை எண்ணும் எழுத்தும் செயலியில் மேற்கொள்ளலாம். 

                                    நன்றி

                                     SCERT

https://youtu.be/_rC332wEhTU


BASELINE ASSESSMENT SURVEY வகுப்பு 2,3 & 4


📌 2023-2024-ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளிலிருந்து புதியதாக அரசு பள்ளிகளில் 2,3,4 ஆம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் கற்றல் நிலையை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு மட்டும்


🌷 தமிழ்

🌷 ஆங்கிலம்

🌷 கணக்கு


📌 பாடத்திற்கு அடிப்படை திறனறிதல் மதிப்பீட்டை 19.07.2023 முதல் 25.07.2023 ஆம் தேதி வரை 


📌 TNSED SCHOOLS செயலியில் மேற்கொள்வதற்கான வழிமுறை.



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

INSPIRE AWARD விண்ணப்பிக்க தேவையானவை :

 


INSPIRE AWARD விண்ணப்பிக்க தேவையானவை

.

1.முதலில் பள்ளியின் U- DISE NUMBER யை update செய்யவும்.                   


2. 6 முதல் 10 வகுப்பு வரை அதிகபட்சமாக 5 மாணவர்களை தேர்வு செய்யவும். 

தேர்வு செய்யும் போது ஒரே வகுப்பிலிருந்து 5 மாணவர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.


(5 க்கும் குறைவான மாணவர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்)                

3. மாணவர்கள் விவரங்கள்.

🔸பெயர்

🔸பெற்றோர் பெயர்

🔸வகுப்பு

🔸ஆதார் எண்(not mandatory)

🔸கைபேசி எண்

🔸இனம்

🔸புகைப்படம்

(JPG,PNG FORMAT FILE SIZE 2MB)

🔸வங்கி கணக்கு புத்தகம். 


4.PROJECT விவரங்கள்.

Project topic (ஒவ்வொரு மாணவர்களுக்கும்)

JPG,PNG ,WORD ,PDF FORMAT FILE SIZE 2MB A4 SHEET கையால் எழுதியும் upload செய்து கொள்ளலாம்.

தமிழ் மொழி உட்பல பல மொழிகளில் project upload செய்து கொள்ளலாம்.

project photo copy upload additional( not mandatory.)

project audio, video upload FILE SIZE 5MB (not mandatory)

5.Guide teacher name and phone number  

6.HM name and phone number


7. இந்த 5 மாணவர்களை தேர்வு செய்ய காரணம் இதுபோன்ற தகவல்களை தயார்  நிலையில் வைத்துக்கொண்டு விண்ணப்பிக்கவும்.


8.Acknowledgement download செய்தபின் மாணவர்களின்  விவரங்களை திருத்தம் & மாற்றம் செய்ய இயலாது.ஆனால் உங்களது application rejected என நீங்கள் பதிவு செய்த பள்ளியின் e-mail முகவரிக்கு தகவல் வந்தால் அதன்பின் திருத்தம் & மாற்றம் & கூடுதலாக மாணவர்களை add செய்து கொள்ளலாம்.

அதன் பின் district forward செய்து மீண்டும் acknowledgement download செய்து கொள்ளலாம்.



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

22.07.2023-CRC Quiz key Answer and link

இலவச பேருந்து பயண அட்டை பெற இவ்வாண்டும் பழைய நடைமுறையினை (Offline) பின்பற்ற பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 மாணவர்களின் நலன் கருதி இலவச பேருந்து பயண அட்டை பெற இவ்வாண்டும் பழைய நடைமுறையினை (Offline) பின்பற்ற பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

03.08.2023 ( வியாழக்கிழமை ) உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

 நாமக்கல் மாவட்டம் , கொல்லிமலைப் பகுதியில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடைஏழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தினையும் , கொடைத்தன்மையினையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் அரசு சார்பில் வல்வில் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி , நடப்பு ஆண்டில் எதிர்வரும் 2.8.2023 மற்றும் 3.8.2023 ஆகிய நாட்களில் அரசின் சார்பாக வல்வில் ஓரி விழா கொண்டாடப்படவுள்ளது.


 இவ்விழாவிற்காக நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் , பள்ளி , கல்லூரிகளில் பயிலும் மாணவ , மாணவியர்கள் , அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை பணியாளர்கள் ஆகியோர் குடும்பத்துடன் கொல்லிமலைப் பகுதிக்கு வருகை புரிந்து சிறப்பிக்க உள்ளதால் , எதிர்வரும் , 3.8.2023 ( ஆடி மாதம் 18 - ஆம் நாள் ) வியாழக்கிழமை அன்று நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும் , இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் 128.2023 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

Namakkal District local holiday reg - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சியளிக்க SCERT இயக்குநர் உத்தரவு!

 


9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சியளிக்க SCERT இயக்குநர் உத்தரவு!

Emotional Wellbeing & Life Skill  Training - SCERT Proceedings - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

CRC ( July 25 - 27 ) Training Agenda & Guidelines

 

6th - 8th CRC ( July 25 - 27 ) Training Agenda & Guidelines 

6 to 8 வகுப்பு ஆசிரியர் ஏதுவாளர்களுக்கான ( Facilitator ) விரிவான வழிகாட்டி

TPD 2 (6 to 8) Agenda & Guidelines - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) சேரும் மாணவர்களுக்கு 8ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

 

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) சேரும் மாணவர்களுக்கு 8ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

SPD - Issue of 8th Mark Sheet - Proceedings - Download here



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை இரு மடங்காக உயர்த்தியது தமிழக அரசு

 

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகை இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பல்வேறு நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு 2013-2014ம் நிதியாண்டு முதல் அவர்களின் கல்வியினை மேம்படுத்தும் வகையில் 1ம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் வகுப்பிற்கு ஏற்றவாறு கல்வி உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.1000 முதல் ரூ.7000 வரை வழங்கப்பட்டு வந்தது.


இந்நிலையில், 2023-2024-ஆம் நிதியாண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மானியக்கோரிக்கையின்போது முதல்வரால்“மாற்றுத்திறன் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும்” என்று வெளியிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை இருமடங்காக உயர்த்தி வழங்கப்படுகிறது.


இதன்படி, 1-முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1,000 என்பதனை ரூ.2,000 ஆகவும், 6ம் முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.3,000 என்பதனை ரூ.6,000 ஆகவும், 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4000 என்பதனை ரூ.8000 ஆகவும், இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6,000 என்பதனை ரூ.12,000 ஆகவும், முதுகலை பட்டம் மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.7,000 என்பதனை ரூ.14,000 ஆகவும் வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


இதனால் சிறப்புக்கல்வி பெறும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி நிலையினை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் மாற்றுத்திறனாளி மாணவ,மாணவியர்கள் இவ்வுதவித்தொகையினை பெறுவதற்கு பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்விண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மூலம் பரிசீலனை செய்யப்பட்டபின் கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 80%க்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற 15.08.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

 

வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற வேண்டிய விண்ணப்பம் குறைந்த குடும்ப வருமானம் பெற்று பத்தாம் வகுப்பினை நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் ) சரோஜினி தாமோதரன் நிறுவனம் திரு . S.D. ஷிபுலால் , ( இன்போசிஸ் ) மற்றும் திருமதி.குமாரி ஷிபுலால் ( காப்பாளர் ) கட்டமைப்பு பெற்று வித்யாதன் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.


 உதவிப்பணம் , இரண்டு இலட்சத்திற்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பங்களின் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் பதினொன்றாம் வகுப்பு பயில்வோர் கல்வி உதவித்தொகை பெறும் திட்டம் - 2023 இந்த உதவித்தொகை பெறும் திட்டத்தின் மூலம் ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு இலட்சத்திற்கும் கீழ் பெறும் குடும்பங்களின் மாணவர்கள் பயன் பெறுவார்கள் . 2023 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் , 80 சதவீத மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் , மாற்றுத்திறனாளி மாணவர்கள் 60 % மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றிருத்தல் வேண்டும்.


 தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தகுதியான மாணவர்கள் www.vidyadhan.org என்னும் இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 15 , 2023 வரை விண்ணபிக்கலாம். மேலும் கேள்விகள் மற்றும் விவரங்களுக்கு , தமிழ் நாடு மாணவர்கள் vidyadhan.tamilnadu@sdfoundationindia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் , புதுச்சேரி மாணவர்கள் vidyadhan.puducherry@sdfoundationindia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் எழுதுங்கள் அல்லது 9663517131 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் .

Vidhyadhan Scholarship instructions - Download here...



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News