School Morning Prayer Activities - 21.07.2023

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.07.23

திருக்குறள் :
பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஈகை

குறள் :221

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

விளக்கம்:

இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.

பழமொழி :
After a dinner sleep a while

உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.


இரண்டொழுக்க பண்புகள் :

1. எல்லாம் தெரியும் என்று சொல்பவனின் தேடலும் அறிவும் விரைவில் முடிவுக்கு வரும்.

2. இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் எனக்கு அதிகம் தெரியாது என்று சொல்பவர்கள் தேடுதலும் அறிவும் தொடரும்

பொன்மொழி :

ஒரு புத்திசாலி பிரச்சினையைத் தீர்க்கிறான். ஞானமுள்ளவன் அதைத் தவிர்க்கிறான். --ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்


பொது அறிவு :

1. எகிப்தின் தலைநகர் எது?

விடை: கெய்ரோ

2. பரப்பளவில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது?

விடை: ராஜஸ்தான்


English words & meanings :

 overseas - going to a foreign country especially across the sea, கடல் கடந்த வெளி நாட்டு பயணம் செய்வது. pamper – give more attention and comfort to a person, செல்லம் கொடுப்பது.


ஆரோக்ய வாழ்வு :

கருணை கிழங்கு,அதீத உடல் எடை கூடுவது உடல் நலத்திற்கு பல பாதிப்புகளை உண்டாக்கும். உடல் எடை குறைய சரியான ஆரோக்கியமான உணவு உண்ணும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். கருணை கிழங்கு உடல் எடை குறைக்க சிறப்பாக உதவுகிறது.


நீதிக்கதை

ஒற்றுமையே வலிமை
வயது முதிர்ந்த விவசாயி ஒருவருக்கு  நான்கு மக்கள் இருந்தனர். அந்த நால்வரும் ஒற்றுமை இல்லாமல், எப்பொழுதும் சண்டையும் சச்சரவுமாக இருந்தனர்.
இவர்கள் இப்படியே இருந்தால், குடும்பம் சிதறிப் போகுமே என்று வருந்தினார் வயதான தந்தை.
அவர் கூறிய புத்திமதிகளை மதிக்காமல் திரிந்தனர்.
ஒருநாள் மக்கள் நால்வரையும் அழைத்தார் தந்தை அவர்கள் வந்து கட்டிலைச் சுற்றி நின்றனர்.
தன் காலடியில் கிடந்த மூங்கில் கட்டு ஒன்றை மூத்த மகனிடம் கொடுத்து, “இதை முறி” என்றார்.

தன் பலம் முழுவதையும் பயன்படுத்தினான். ஆனால், முறிக்க முடியவில்லை.

அடுத்து இரண்டாவது மகன், மூன்றாவது மகன், நான்காவது மகன், மூவரும் முயன்று பார்த்தனர், ஒருவராலும் முறிக்க இயலவில்லை.

பிறகு, கட்டைப் பிரித்து ஆளுக்கு ஒரு குச்சியைக் கொடுத்தார்.

நால்வரும் சுலபமாக முறித்து விட்டு நின்றனர்.

“இப்படித்தான் உங்கள் வாழ்க்கையும் அமையும், நீங்கள் நால்வரும் ஒற்றுமையாக இருப்பீர்களானால், உங்கள் வாழ்க்கை உறுதியாக விளங்கும். எவரும் உங்களை ஏமாற்ற முடியாது. சண்டைசச்சரவு செய்து, தனித்தனியாக ஆளுக்கு ஒரு பக்கமாக இருப்பீர்களானால், சிதறிப் போவீர்கள். ஒற்றுமையே வலிமை அளிக்கும்” என்றார் தந்தை.


இன்றைய செய்திகள் - 21.07. 2023

*இரயிலில் பொதுப்பெட்டி பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவு குடிநீர் வழங்க ஏற்பாடு - இரயில்வே துறை.

*குறைந்த வருமானம் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏசி அல்லாத சிறப்பு ரயில்கள் -  இரயில்வே துறை திட்டம்.

*கேரளா, தெலுங்கானா, குஜராத், ஒடிசா உயர் நீதிமன்றங்களுக்கு நான்கு தலைமை நீதிபதிகள் நியமனம்.

*ஆஷஸ் நான்காவது டெஸ்ட் - ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்.

*தேசிய டைவிங் - வாட்டர் போலோ : சென்னை வீராங்கனைக்கு வெள்ளி பதக்கம்.

Today's Headlines

 *Arrangement to provide food and drinking water at low cost to general coach passengers in trains - Railway Department.

 *Non-AC Special Trains for Low Income Migrant Workers - Railway Department Scheme.

 * Appointment of four Chief Justices to High Courts of Kerala, Telangana, Gujarat and Odisha.

 *Ashes Fourth Test - Australia all out for 317 in first innings.

 *National Diving - Water Polo: Silver medal for Chennai player.
 Prepared by

Covai women ICT_போதிமரம்


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 20.07.2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.07.23


திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஒப்புரவறிதல்

குறள் :220

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.

விளக்கம்:

இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே.


பழமொழி :
Add fuel to fire

எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற் போல


இரண்டொழுக்க பண்புகள் :

1. எல்லாம் தெரியும் என்று சொல்பவனின் தேடலும் அறிவும் விரைவில் முடிவுக்கு வரும்.

2. இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் எனக்கு அதிகம் தெரியாது என்று சொல்பவர்கள் தேடுதலும் அறிவும் தொடரும்


பொன்மொழி :

புத்திசாலித்தனமாகவும் மெதுவாகவும் செல்லுங்கள். வேகமாகச் செல்பவர்கள் தடுமாறி விழுந்துவிடுவார்கள். --வில்லியம் ஷேக்ஸ்பியர்


பொது அறிவு :

1. முதல் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) எது?

விடை: ஐஐடி காரக்பூர்

2. இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (LIC) தலைமையகம் எங்குள்ளது?
விடை: மும்பை


English words & meanings :

 maid - female servent பணிப்பெண்; newscast - a news report செய்தி அறிக்கை


ஆரோக்ய வாழ்வு :

கருணை கிழங்கு,ஒவ்வொரு மனிதனுக்கும் சாப்பிட்ட மூன்று மணி நேரத்திற்குள் மீண்டும் பசியுணர்வு ஏற்படுவது உடல் ஆரோக்கியத்திற்கான நல்ல அறிகுறியாகும். ஒரு சிலருக்கு சில காரணங்களால் பசியின்மை ஏற்பட்டு, சரியாக சாப்பிட முடியாத நிலை உண்டாகிறது. கருணை கிழங்கு பசியின்மை பிரச்சனையை சுலபத்தில் தீர்க்கும்


ஜூலை 20 இன்று


அனைத்துலக சதுரங்க நாள் 


அனைத்துலக சதுரங்க நாள் (International chess day) பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் வழிகாட்டலில் ஒவ்வோர் ஆண்டும் சூலை 20 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது.[1][2]

1924 ஆம் ஆண்டு சூலை மாதம் 20 ஆம் தேதியன்று உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசு நகரில் நிறுவப்பட்டது. இந்த நாளை அனைத்துலக சதுரங்க தினமாக கொண்டாடும் யோசனையை யுனெசுகோ முன்மொழிந்தது. இதன்படி சூலை 20 ஆம் நாள் அனைத்துலக சதுரங்க நாளாக 1966 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.[3] 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையும் இந்நாளை அங்கீகரித்தது.


கிரிகோர் யோவான் மெண்டல்  அவர்களின் பிறந்த நாள்



கிரிகோர் யோவான் மெண்டல் (Gregor Johann Mendel, சூலை 20, 1822 – சனவரி 6, 1884), மரபியல் குறித்த அடிப்படை ஆய்வுப் பணிகளுக்காக அறியப்படும் ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு அகத்தீனிய அவைத் துறவி. இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள்.


மார்க்கோனி அவர்களின் நினைவுநாள்


மார்க்கோனிஎனப்படும் குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi; ஏப்ரல் 25, 1874 – ஜூலை 20, 1937) வால்வுகளுள்ள வானொலியைக் கண்டு பிடித்தவர். 'நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை" எனப்படுபவர். ' கம்பியற்ற தகவல்தொடர்பு முறை' மற்றும் 'மார்க்கோனி விதி' ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897 ல் 'மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்', 'வானொலி'மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.


நீதிக்கதை

ஒரு காட்டில் ஒரு சிங்கம் கம்பீரமாக அதனுடைய எல்லையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. அப்போது அதே காட்டிற்குள் வாழ்ந்துகொண்டிருந்த சில விலங்குகள் அந்த சிங்கத்தின் மீது கொஞ்சம் பொறாமை கொண்டு ஒரு கூட்டம் கூடி பேச ஆரம்பிக்கிறது. அது என்ன எப்போது இந்த சிங்கம் மட்டும் தான் இந்த காட்டுக்கு ராஜாவாக இருக்கணுமா? இது என்ன திருத்தப்படக்கூடாத சட்டமா? இந்த சட்டத்தை நாம் மாற்ற வேண்டும் என்று விலங்குகள் எல்லாம் பேசிக்கொண்டிருந்ததாம்.

அப்போது அங்கு இருந்த ஒரு நரி சொல்லுது. சிங்கம் அதிக பலம் வாய்ந்த ஒரு மிருகம். அதனால தான் சிங்கம் எப்போதும் காட்டிற்கு ராஜாவாக இருக்கிறது என்று கூறியது.

அதனை கேட்ட புலி என்ன சிங்கம் பலம் வாய்ந்ததா? ஹ.. சிங்கத்தை விட எடையும், உயரமும், சண்டையிடும் திறனும் என்னிடம் இரண்டு மடங்கு உள்ளது. ஆகவே நான் சிங்கத்தை விட பலம் வாய்ந்தவன் என்று கூறியது.புலி கூறியதை கேட்டுக்கொண்டிருந்த மற்ற விலங்குகளும் தங்களின் பலத்தை கூறியது. இதையெல்லாம் கேட்ட குரங்கு சொன்னது எத்தனை பேர் சிங்கத்தை விட பலமானவர்களாக இருந்தாலும். இந்த காட்டிற்கு ராஜாவாக சிங்கம் இருப்பதற்கு  முக்கிய காரணம். அது எந்த விலங்குகளை கண்டும் பயந்ததே கிடையாது.  அதனால் சிங்கம் காட்டுக்கு ராஜாவாக இருக்கிறது என்று குரங்கு கூறியது.

இருப்பினும் விலங்குகள் அனைத்தும் தனது பலத்தை பயன்படுத்த திட்டமிட்டபடி நரி சிங்கத்திடம் சென்று சிங்க ராஜா காட்டில் மிருகங்கள் எல்லாம் உங்களை பார்க்க சேர்ந்து வந்துள்ளன ஏன் என்று தெரியவில்லை வாங்க என்று அழைத்தது.இதனை அறிந்த சிங்கம் நரியை நம்பி விலங்குகளை பார்க்க வருகிறது. அப்பொழுது அங்கு நின்றுகொண்டிருந்த ஒட்டகச்சிவிங்கி சிங்கத்தை எட்டி உதைத்தது, என்ன நடக்கிறது என்று சிந்திப்பதற்குள்ளாகவே சிங்கம் சுருண்டு தூரமாக போய் விழுகிறது. அங்கிருந்த காண்டாமிருகம் தனது கொம்பினால் சிங்கத்தை குத்தி தூரமாக வீசுகிறது.  இவ்வாறு ஒவ்வொரு மிருகங்களும் தனது பலத்தை பயன்படுத்தி சிங்கத்தை தாக்கியது.பின் எழுந்து சிங்கம்  ஒவ்வொரு மிருகங்களையும் தாக்க ஆரம்பித்தது. அனைத்து விலங்குகளையும் வென்றபிறகு ச தனது குகைக்குள் சென்றது.


மறுநாள் காலை விடிந்தது. சிங்கத்துடன் சண்டை போட்ட அனைத்து மிருங்கங்களும் பேசிக்கொண்டிருந்தன . சண்டை போட்டதில் சிங்கத்திற்கு அதிக இரத்த காயம் ஏற்பட்டதால் சிங்கம் குகையிலேயே இருந்திருக்கும்  என்று விலங்குகள்  நினைத்தது.அப்பொழுது அந்த சிங்கம்  அதே கம்பீர நடையுடன் எந்த ஒரு பயமும் இல்லாமல் அந்த  குகையில் இருந்து வெளியே வந்து   அனைத்து விலங்குகளையும் பார்த்து சிங்கம் கர்ஜித்தது. சிங்கம் கர்ஜித்ததை கண்ட அனைத்து மிருகங்களும் பயந்து ஓட்டம் பிடித்தது. இந்த சிங்கம் காட்டிற்கு ராஜாவாக இருப்பதற்கு முக்கிய காரணம் எதுவென்றால் எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ளமுடியும் என்ற ஒரு நம்பிக்கை மற்றும்  பயம் அப்படிங்கிற ஒரு விஷயம் அதனிடம் இல்லை என்பதால் சிங்கம் காட்டிற்கே ராஜாவாக இருக்கிறது என்று அனைத்து விலங்குகளும் புரிந்து கொள்கின்றன.


இன்றைய செய்திகள் - 20.07. 2023

*இரயில்வே பாதுகாப்பு படையின் புதிய தலைமை இயக்குனராக மனோஜ் யாதவா நியமனம்.

*டெல்லி யமுனை நதியின் நீர்மட்டம் அபாய கட்டத்திற்கு கீழே குறைந்தது.

*இலங்கை அதிபர் இன்று இந்தியா வருகை.

*சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று முதல் கலைஞர் மகளிர் உதவித் தொகைக்கான டோக்கன் மற்றும் விண்ணப்பம் வீடு வீடாக சென்று விநியோகம்- மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன். 

*சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி தற்போது 500 வது போட்டியில் விளையாட இருக்கிறார்.

*ஐசிசி தரவரிசை பட்டியல்...முதல் 10 இடத்தில் 7 இந்திய வீரர்கள்... மூன்று பிரிவிலும் இந்தியா ஆதிக்கம்.


Today's Headlines

*Manoj Yadava appointed as the new Director General of Railway Protection Force.

 *Delhi Yamuna river water level drops below danger level.

 *  President of Sri Lanka visits India today

 * Today onwards door to door distribution of token and application for kalaingar women's grant in areas under Chennai Corporation - report by Corporation Commissioner Radhakrishnan.

 *Virat Kohli is now about to play his 500th match in international cricket.

 *ICC ranking list...7 Indian players in top 10...India dominates in all three divisions.
 Prepared by

Covai women ICT_போதிமரம் 


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

வகுப்பு 4 & 5 | July 19 MODULE 1 & 2 க்கான FA(B) Assessment செய்வதற்கான வழிமுறைகள் - வீடியோ...

 வகுப்பு 4 & 5 | July 19  MODULE 1 & 2 க்கான FA(B) Assessment...


FA(B) வகுப்பு 4 & 5 MODULE 1 & 2 ENABLED


TNSED SCHOOLS செயலியில் ஜூலை-19 முதல் ஜூலை-25 வரை


கட்டகம் - 1 அறிவியல் & சமூக அறிவியல்


கட்டகம் - 2 அனைத்து பாடங்களுக்கும் நமது வகுப்பு (4 & 5) மாணவர்களுக்கு வளரறி மதிப்பீடு (ஆ) மேற்கொள்வதற்கான வழிமுறை


1) Update TN SED App , Log out & Long in.


2) Classroom Details ல் 4th (A & B)  5 th (A& B) Tick உள்ளதா? Check & ✔️.


3) "நானே செய்வேன்" பக்கத்தை நிறைவு செய்த பிறகு App ல் 🔍 Box ல் முதலில் .வகுப்புநிலை(4,5) மாணவர் பெயரை Type செய்து மேற்கொள்ளுங்கள்.


4)  Long Absent எனில் July 25 மதியம்  Long Absent கொடுங்கள். அதுவரை "Absent Today "தான்


5) முற்றிலும் Home Based children எனில் CWSN கொடுங்கள்.. பள்ளிக்கு  வருகை தரும் CWSN மாணவருக்கு முயற்சி செய்து பாருங்கள் ..(தவறாக பதில் அளித்தாலும் பரவாயில்லை)


6) ஒவ்வொரு மாணவருக்கும் கேள்விகள் மாறி வர வாய்ப்பு உள்ளது.. கவனமாக படித்து  பதில் எழுத சொல்லுங்கள்.


.7) "Assessed Green colour "ஆகிவிட்டதா?.. சரி பாருங்கள்.

வழிமுறை - வீடியோ...

https://youtu.be/xBLOM5m4o4A


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 19.07.2023

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19.07.23

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஒப்புரவறிதல்

குறள் :219

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.

விளக்கம்:

உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.


பழமொழி :
A young calf knows no fear

இளங்கன்று பயமறியாது.


இரண்டொழுக்க பண்புகள் :

1. எல்லாம் தெரியும் என்று சொல்பவனின் தேடலும் அறிவும் விரைவில் முடிவுக்கு வரும்.

2. இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் எனக்கு அதிகம் தெரியாது என்று சொல்பவர்கள் தேடுதலும் அறிவும் தொடரும்


பொன்மொழி :

ஒரு புத்திசாலி பல சாதனைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்தவர், ஆயினுங்கூட மேலும் கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார். --எட் பார்க்கர்


பொது அறிவு :

1. சர்தார் சரோவர் அணை எந்த நதியில் கட்டப்பட்டுள்ளது?

விடை: நர்மதா நதி

2. விந்தியா மற்றும் சத்புரா மலைத்தொடருக்கு இடையே ஓடும் ஆறுகள் எது?

விடை: நர்மதை நதி


English words & meanings :

 kiwi - a wingless bird சிறகற்ற ஒருவகை பறவை; lad - a boy சிறுவன்


ஆரோக்ய வாழ்வு :

கருணை கிழங்கு,உடலில் இருக்கும் வாதம், பித்தம், கபம் போன்றவற்றில் பித்தம் அதிகரிப்பதால் தலைவலி, மயக்கம் போன்றவை அடிக்கடி ஏற்படும் நிலை சிலருக்கு ஏற்படுகிறது. கருணை கிழங்கிற்கு பித்தத்தின் அளவை சமசீராக வைக்கும் தன்மை அதிகமுள்ளது.


நீதிக்கதை

ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.

காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான்.அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது.ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது. ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது.

இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது.

கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது.

விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் நம்மை படுகுழியில் தள்ளிக் குப்பைகளையும், மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும். ஆனால் நாம் தான் இந்த கழுதை போல தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு, அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும்.

நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து படிக்கற்களாக்கி  கொள்ளவேண்டும்.


இன்றைய செய்திகள் - 19.07. 2023

*வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய கட்டிடம் திறப்பு. பிரதமர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

*மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர் வழங்க 4.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு தமிழக அரசு அரசாணை வெளியீடு.

*மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறைக்காற்று மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

*வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்த முடிவு.

*இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 15 பழங்கால சிற்பங்களை ஒப்படைத்தது அமெரிக்கா.

*இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை வெல்ல ஆஸ்திரேலியா ஆர்வம். நான்காவது போட்டி நாளை தொடக்கம்.

*ஆசிய விளையாட்டுப் போட்டி: 800 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு.


Today's Headlines

*Inauguration of new building of Veera Savarkar International Airport.  Prime Minister inaugurated through video presentation.

 * Tamil Nadu government issued an ordinance to allocate 4.5 crore rupees to provide scooters for disabled people.

 *There is a ban on fishing in the Gulf of Mannar.

 *Decision to double entry fee at Vandalur Zoo.

 *US hands over 15 ancient sculptures smuggled from India.

 *Australia keen to win Ashes Test series against England.  The fourth match starts tomorrow.

 *Asian Games: 800-strong Indian team participates.
 Prepared by

Covai women ICT_போதிமரம்



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

6-9 வகுப்புகளுக்கு வாரம் இரு பாடவேளைகளுக்கு கலை, கலாசார பயிற்சி வகுப்பு

 

கலைத் திருவிழாவில் மாணவா்களை அதிகளவில் பங்கேற்கச் செய்யும் வகையில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு வாரத்துக்கு இரு பாடவேளைகளில் கலை, கலாசார பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநா் மா.ஆா்த்தி மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாகவும், கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைக்கவும் ‘கலை அரங்கம்’ பயிற்சி மாணவா்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.


அந்த பயிற்சியின் பலனாக சுமாா் 28 லட்சம் மாணவா்கள் கல்வித் துறையால் நடத்தப்பட்ட கலைத் திருவிழா போட்டிகளில் ஆா்வமுடன் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றனா்.


மாநில அளவில் சிறந்து விளங்கிய மாணவா்களுக்கு கலையரசன், கலையரசி விருதும் வழங்கப்பட்டது. தொடா்ந்து நிகழாண்டும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு நடனம், நாட்டுப்புறக் கலை, இசை, காட்சிக் கலை, நாடகம் மற்றும் பொம்மலாட்டம் ஆகிய 5 கலை வடிவங்களில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியா்கள் மற்றும் கலை ஆசிரியா்களை பயன்படுத்தி இந்த பயிற்சி நடைபெறவுள்ளது.


வாரந்தோறும் 2 பாடவேளைகளில் கலை மற்றும் கலாசார பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதற்கிடையே, கலை அரங்கம் செயல்பாட்டுக்காக பிரத்யேக கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் பணிகள் நிறைவுபெற்ற பின் பள்ளிகளுக்கான கலை அரங்கம் அமைத்தல் மற்றும் கலை வடிவங்களின் விவரங்கள் செயலியில் தெரிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!!

 


2023-24 ஆம் கல்வியாண்டில் நான் முதல்வன் திட்டம் சார்ந்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி கல்லுாரி சேர்க்கைக்கான அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணபிக்க இயலும்.


 மேலும் அவ்வாறு விண்ணப்பிக்கும் நிலையில் பெரும்பாலான கல்லூரிகள் , கல்லூரி சேர்க்கை சார்ந்த தகவல்களை மின்னஞ்சல் வாயிலாகவே மாணவர்களுக்கு வழங்குகின்றன. 


எனவே , ஒவ்வொரு மாணவருக்கும் மின்னஞ்சல் முகவரி இருத்தல் என்பது கட்டாயமான ஒன்றாகும்.


மின்னஞ்சல் தொடங்கும் செயல்பாடு :

👇👇👇👇👇👇

12th std Students - Email start Proceedings - Download here


Inspire Award 2023 -2024 | புத்தாக்க அறிவியல் மானக் விருது விண்ணப்பித்தலுக்கான வழிமுறைகள் - CEO Proceedings

 


தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநரின் செயல்முறைக் கடிதம் மற்றும் இவ்வலுவலக கடிதத்தின்படி , 2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான புத்தாக்க அறிவியல் மானக் விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான பதிவுகளை இணைய தளத்தில் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளது தேதிவரை எவரும் பதிவேற்றம் செய்யப்படவில்லை இது மிகவும் வருந்தத்தக்கதாகும்.


 அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களில் வகுப்பிற்கு ஒருவர் வீதம் ( 5 ) ஐந்து மாணவர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்ப முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ , மாணவியர்களில் வகுப்பிற்கு ஒருவர் வீதம் ( 3 ) மூன்று மாணவர்கள் என விண்ணப்பங்கள் 31.08.2023 ஆம் தேதிக்குள் www.inspireawards.dstgov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்திடவும் மற்றும் இணைப்பில் உள்ள குறிப்புகளை தவறாது பின்பற்றிட வேண்டும்.


 தொடர்நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , எந்தவொரு பள்ளியும் விடுபடாமல் , அனைத்து நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உரிய எண்ணிக்கையிலான புதிய பதிவுகளை தவறாது மேற்கொள்வதை உறுதி செய்யவும் , பதிவுகள் சார்ந்த முன்னேற்ற அறிக்கையினை வாராந்திர அறிக்கையாக 24.07.2023 முதல் 28.08.2023 வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைத்து முழுமைப்படுத்திடவும்.


 தேனி மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக்கல்வி இடைநிலை தனியார் பள்ளி ) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்....


இணைப்பு

inspire award manaak - Ceo Proceedings - Download here

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தமிழ் மன்றத்தை மேம்படுத்தி, ஆண்டுக்கு மூன்று தமிழ்க் கூடல் நடத்திட பள்ளி ஒன்றுக்கு ரூ.9,000/- அனுமதித்து அரசாணை வெளியீடு!

 

அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றத்தை மேம்படுத்தி, ஆண்டுக்கு மூன்று தமிழ்க் கூடல் நடத்திட பள்ளி ஒன்றுக்கு ரூ.9,000/- அனுமதித்து அரசாணை வெளியீடு!


Tamil mandram - GO NO : 123 , DATE : 25.08.2022 - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் - நிலையான வழிகாட்டுதல்கள் வெளியீடு!

 

மாணவர்களின் உள்ளார்ந்த விளையாட்டுத் திறனை வெளிக்கொண்டுவரும் நோக்கத்துடன் , தமிழக பள்ளிக் கல்வித் துறை பல்வேறு நிலைகளில் போட்டிகளை நடத்தி அவர்களுடைய திறன்களை கண்டறிந்து மாணவர்களின் திறன்களுக்கு ஏற்ப விளையாட்டுகளை தெரிவு செய்து உரிய பயிற்சி வழங்கி பள்ளியளவிலிருந்து மாநில அளவிலான போட்டிகள் வரை பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் ( BDG ) , குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் ( RDG ) , குடியரசு தின தடகளப் போட்டிகள் ( RDS ) மற்றும் பாரதியார் தின / குடியரசு தினப் ( BD / RD Competitions ) போட்டிகள் என ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் , திறன்மிக்க மாணவர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.


விளையாட்டு போட்டிகள் சார்ந்து நிலையான வழிகாட்டுதல்கள் :

2023-24 CIPEs Proceedings -RDG,BDG,RDS,&RD.BD - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News