12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!!

 


2023-24 ஆம் கல்வியாண்டில் நான் முதல்வன் திட்டம் சார்ந்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி கல்லுாரி சேர்க்கைக்கான அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணபிக்க இயலும்.


 மேலும் அவ்வாறு விண்ணப்பிக்கும் நிலையில் பெரும்பாலான கல்லூரிகள் , கல்லூரி சேர்க்கை சார்ந்த தகவல்களை மின்னஞ்சல் வாயிலாகவே மாணவர்களுக்கு வழங்குகின்றன. 


எனவே , ஒவ்வொரு மாணவருக்கும் மின்னஞ்சல் முகவரி இருத்தல் என்பது கட்டாயமான ஒன்றாகும்.


மின்னஞ்சல் தொடங்கும் செயல்பாடு :

👇👇👇👇👇👇

12th std Students - Email start Proceedings - Download here


Inspire Award 2023 -2024 | புத்தாக்க அறிவியல் மானக் விருது விண்ணப்பித்தலுக்கான வழிமுறைகள் - CEO Proceedings

 


தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநரின் செயல்முறைக் கடிதம் மற்றும் இவ்வலுவலக கடிதத்தின்படி , 2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான புத்தாக்க அறிவியல் மானக் விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான பதிவுகளை இணைய தளத்தில் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளது தேதிவரை எவரும் பதிவேற்றம் செய்யப்படவில்லை இது மிகவும் வருந்தத்தக்கதாகும்.


 அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களில் வகுப்பிற்கு ஒருவர் வீதம் ( 5 ) ஐந்து மாணவர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்ப முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ , மாணவியர்களில் வகுப்பிற்கு ஒருவர் வீதம் ( 3 ) மூன்று மாணவர்கள் என விண்ணப்பங்கள் 31.08.2023 ஆம் தேதிக்குள் www.inspireawards.dstgov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்திடவும் மற்றும் இணைப்பில் உள்ள குறிப்புகளை தவறாது பின்பற்றிட வேண்டும்.


 தொடர்நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , எந்தவொரு பள்ளியும் விடுபடாமல் , அனைத்து நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உரிய எண்ணிக்கையிலான புதிய பதிவுகளை தவறாது மேற்கொள்வதை உறுதி செய்யவும் , பதிவுகள் சார்ந்த முன்னேற்ற அறிக்கையினை வாராந்திர அறிக்கையாக 24.07.2023 முதல் 28.08.2023 வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைத்து முழுமைப்படுத்திடவும்.


 தேனி மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக்கல்வி இடைநிலை தனியார் பள்ளி ) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்....


இணைப்பு

inspire award manaak - Ceo Proceedings - Download here

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தமிழ் மன்றத்தை மேம்படுத்தி, ஆண்டுக்கு மூன்று தமிழ்க் கூடல் நடத்திட பள்ளி ஒன்றுக்கு ரூ.9,000/- அனுமதித்து அரசாணை வெளியீடு!

 

அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றத்தை மேம்படுத்தி, ஆண்டுக்கு மூன்று தமிழ்க் கூடல் நடத்திட பள்ளி ஒன்றுக்கு ரூ.9,000/- அனுமதித்து அரசாணை வெளியீடு!


Tamil mandram - GO NO : 123 , DATE : 25.08.2022 - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் - நிலையான வழிகாட்டுதல்கள் வெளியீடு!

 

மாணவர்களின் உள்ளார்ந்த விளையாட்டுத் திறனை வெளிக்கொண்டுவரும் நோக்கத்துடன் , தமிழக பள்ளிக் கல்வித் துறை பல்வேறு நிலைகளில் போட்டிகளை நடத்தி அவர்களுடைய திறன்களை கண்டறிந்து மாணவர்களின் திறன்களுக்கு ஏற்ப விளையாட்டுகளை தெரிவு செய்து உரிய பயிற்சி வழங்கி பள்ளியளவிலிருந்து மாநில அளவிலான போட்டிகள் வரை பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் ( BDG ) , குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் ( RDG ) , குடியரசு தின தடகளப் போட்டிகள் ( RDS ) மற்றும் பாரதியார் தின / குடியரசு தினப் ( BD / RD Competitions ) போட்டிகள் என ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் , திறன்மிக்க மாணவர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.


விளையாட்டு போட்டிகள் சார்ந்து நிலையான வழிகாட்டுதல்கள் :

2023-24 CIPEs Proceedings -RDG,BDG,RDS,&RD.BD - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 17.07.2023

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.07.23

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஒப்புரவறிதல்

குறள் :217

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

விளக்கம்:

பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும்.


பழமொழி :
All work and no play makes Jack a dull boy

ஓய்வில்லாத உழைப்பு உப்பில்லாத உணவு


இரண்டொழுக்க பண்புகள் :

1. எல்லாம் தெரியும் என்று சொல்பவன் தேடலும் அறிவும் வாழக்கை பாதையின் முடிவுக்கு வரும்

2. இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் எனக்கு அதிகம் தெரியாது என்று சொல்பவர்கள் தேடுதலும் அறிவும் தொடரும்


பொன்மொழி :

ஒரு புத்திசாலி சரியான பதில்களைத் தருவதில்லை, அவர் சரியான கேள்விகளை எழுப்புகிறார். --கிளாட் லெவி-ஸ்ட்ராஸ்


பொது அறிவு :

1. இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகம் எது?


விடை: நீலகிரி உயிர்க்கோள காப்பகம், தமிழ்நாடு

2. இந்தியாவின் மிகப்பெரிய அணை எது?


விடை: பக்ரா நங்கல் அணை, இமாச்சல பிரதேசம்


English words & meanings :

 fantasy – imagining impossible things, நடை முறைக்கு சாத்தியம் இலலாத கற்பனை.gusto – enjoyment in doing something.ஒரு செயலை செய்யும்போது ஏற்படும் ஆர்வ உணர்வு


ஆரோக்ய வாழ்வு :

கருணை கிழங்கு,நமது உடலுக்கு அடிப்படையாக இருப்பது நமது எலும்புகள் ஆகும். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியம். கருணை கிழங்கு எலும்புகளை வலிமையாக்கும் சத்து கொண்டதாக இருக்கிறது. எலும்புகள் வலு குறைவாக இருக்கும் குழந்தைகள், வயதானவர்கள் கருணை கிழங்கை வாரம் ஒரு முறை சாப்பிடவதால் எலும்புகள் வலிமை பெறும்.


நீதிக்கதை

அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டின் நடுவே ஒரு குறுகிய பாலம் ஒன்று ஆற்றின் நடுவில் இருந்தது. ஒரு நாள் அந்த பாலத்தை கடப்பதற்காக இரண்டு ஆடுகள் பாலத்தின் அருகில் வந்து கொண்டு இருந்தன. ஒரு ஆடு பாலத்தின் ஒரு முனையிலும் மற்றொன்று மறுமுனையிலும் நின்றன.  பாலத்தை ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமே கடக்க முடியும்.

  இது தெரிந்தும் இரண்டு ஆடும் ஏறி பாலத்தின் நடுவில் வந்து நின்றன.முதலாவது ஆடு "எனக்கு வழி விடு நான் செல்ல வேண்டும்" என்றது.
உடனே, இரண்டாவது ஆடு "நான் தான் முதலில் வந்தேன்; எனக்கு நீ தான் வழி விடவேண்டும்" .என்றது. இப்படியே இரண்டு ஆடுகளும் சண்டையிட தொடங்கியது.

சண்டையிடும் போது இரண்டு ஆடுகளின் கால்களும் பிடிமாணம் இன்றி ஆற்றில் விழத்தொடங்கின.ஆற்றில் விழுந்தவுடன் இரண்டு ஆடுகளும் தாங்கள் செய்த தவறை நினைத்து வருந்தின. இறுதியில் இரண்டு ஆடுகளும் நீரில் மூழ்கி இறந்தன.

நீதி: விட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக விட்டுகொடுக்க வேண்டும்.


இன்றைய செய்திகள் - 17.07. 2023

*சந்திரயான் - 3 விண்கலத்தின் சுற்றுப்பாதை முதன்முறையாக வெற்றிகரமாக உயர்த்தப்பட்டதாக இஸ்ரோ தகவல்.
சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கும் இஸ்ரோ விஞ்ஞான குழுவினருக்கும் பூட்டான் பிரதமர் வாழ்த்து.
*10 மற்றும் 12 வகுப்பில் இடைநின்ற மாணவர்களுக்கும்,தேர்ச்சி பெற்றும் படிப்பை தொடராமல் இருக்கும் மாணவர்களுக்காகவும் உயர்கல்வி குறித்து ஆலோசனை வழங்க மேலாண்மை குழு கூட்டம் நடத்த அரசு ஏற்பாடு. 

*மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.  2023-2024 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக 
40,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன - அமைச்சர்.

*நடப்பு கல்வி ஆண்டில் செவிலியர் பட்டயப் படிப்புகளில் சேர நேற்று முதல் 26 ஆம் தேதி மாலை 5 மணி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

*ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்வதே இலக்கு- ருதுராஜ் கெய்க்வாட் சொல்கிறார்.
*முதல் ஒரு நாள் போட்டி இந்தியாவை வீழ்த்தி வங்கதேச மகளிர் அணி அபார வெற்றி.

Today's Headlines

* ISRO informs that Chandrayaan-3 spacecraft has been successfully boosted into orbit for the first time.
 Prime Minister of Bhutan congratulates PM Modi and ISRO science team on Chandrayaan-3 success.

 *Government has organized a management committee meeting to advise students who have dropped out of class 10 and 12 and who are not continuing their studies after they had got pass.

 *Publication of rank list for medical courses.  For medical and dental courses in the academic year 2023-2024
 40,200 applications received - Minister

 *You can apply online from yesterday to 26th 5 pm for admission in nursing diploma courses in the current academic year.

 *The goal is to win gold in the Asian Games - says Ruduraj Gaekwad.

 *Bangladesh women's team beat India in the first one-day match with a huge victory.
 Prepared by

Covai women ICT_போதிமரம்


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 15.07.2023

  

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.07.23

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஒப்புரவறிதல்

குறள் :216

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.

விளக்கம்:

பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.


பழமொழி :
A tree is known by its fruit

நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. உதவி செய்வது பிறரின் வருத்தம் போக்கவே தவிர பிறர் என்னைப் புகழ அல்ல. 

2. என்னால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்வேன்.


பொன்மொழி :

உன் பிள்ளை ஊனமாய் பிறந்தால் சொத்து சேர்த்து வை. சொத்து சேர்த்து பிள்ளையை ஊனமாக்காதே

காமராஜர்


பொது அறிவு :

1.காமராஜர் எந்த வகுப்பு வரை படித்திருக்கிறார்? 

ஆறாம் வகுப்பு 

2. தமிழக முதல்வராக காமராஜர் பதவி ஏற்ற ஆண்டு? 

1954


English words & meanings :

 egoism - selfishness சுயநலம்; farrier - a veterinary doctor கால்நடை மருத்துவர்


ஆரோக்ய வாழ்வு :

வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வாழைப்பழத்தில் இருப்பதை விட பொட்டாசியம் சத்து அதிகமாக இருக்கும். பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும். உடலில் இருந்து கூடுதல் சோடியத்தை அகற்றவும் வழிவகை செய்யும். இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.


ஜூலை 15 இன்று

காமராசர்  அவர்களின் பிறந்த நாள்



காமராசர் (காமராஜர்) (K. Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆவார். இவர் ஒன்பது ஆண்டுகள் சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


நீதிக்கதை

நாட்டை ஆளும் அரசன் ஒருவனிடத்தில், அந்த நாட்டின் சிற்பி நான்கு பொம்மைகளை கொண்டு வந்து தருகிறார்.

அரசன் கோபமாக " நான் என்ன சின்னக் குழந்தையா?  இதை வைத்து விளையாடுவதற்கு" என்றுக் கேட்கிறார்.

சிற்பி "இல்லை அரசே, இது நம் வருங்கால ராஜாவுக்கு அதாவது நம் இளவரசருக்கு" என்கிறார்.

"இந்த பொம்மைகளில் சில விசேஷங்கள் உண்டு.நான்கு பொம்மைகளின் ஒரு பக்க காதிலும் ஓட்டை இருக்கிறது பாருங்கள்" என்கிறார்.

அரசன் "இதில் என்ன விஷயம் இருக்கிறது" என்கிறார்.

முதல் பொம்மையை அரசனிடம் கொடுக்கிறார் சிற்பி.கூடவே ஒரு மெல்லிய சங்கிலியையும் கொடுத்து அதன் காதில் இருக்கும் ஓட்டையில் விடச் சொல்கிறார்.

சங்கிலி மறுப்பக்க காதின் வழியே வருகிறது.

சிற்பி "மனிதர்களில் சிலர் நாம் எதைச் சொன்னாலும் இப்படித் தான் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதின் வழியே அனுப்பி விடுவார்கள்" என்கிறார்.

இரண்டாவது பொம்மையை கொடுத்து அதையே திருப்பிச் செய்யச் சொல்கிறார்.

இந்த பொம்மையில் சங்கிலி வாய் வழியே வருகிறது.

இந்த மாறி மனிதர்கள் எதை சொன்னாலும் அதை அடுத்த நொடி வெளியே விட்டு பரப்பிவிடுவார்கள் என்கிறார்.

பிறகு, மூன்றாவது பொம்மையை கொடுத்து மீண்டும் அதையே செய்யச் சொல்கிறார்.

இதில், சங்கிலி வெளியே வரவே இல்லை.

சிற்பி, இவர்களிடம் எதைச் சொன்னாலும் உள்ளேயே தான் இருக்கும்.வெளியே வராது என்கிறார்.

அப்போது இதில் "யார் தான் சிறந்த மனிதர் என்று" அரசன் கேட்கிறார்.

என் கையில் இருக்கும் இந்த நான்காவது பொம்மை தான் சிறந்த மனிதன் என்று சிற்பி சொல்கிறார்.

அரசன் பொம்மையின் காதின் வழியே சங்கிலியை விடுகிறார். மறுபக்க காதின் வழியே வெளிவருகிறது. சிற்பி மீண்டும் செய்ய சொல்கிறார்.இரண்டாம் முறை வாயின் வழியே சங்கிலி வருகிறது.மூன்றாம் முறை வரவே இல்லை.


சிற்பி "நான்காவது பொம்மை போன்ற மனிதர்கள் தான் வாழ்வில் உயர முடியும். கேட்பவற்றில் நல்லவைகளை மாத்திரம் மனதில் வைத்துக் கொண்டு தேவையற்றவைகளை விட்டுவிட வேண்டும். நல்லவைகளை மாத்திரம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.இதனை இளவரசர் கற்றுக்கொள்ள வேண்டும் என்றே இந்த பொம்மைகளை தருகிறேன்" என்றார். அரசனும் சிற்பிக்கு நன்றி கூறினார்.


இன்றைய செய்திகள் - 15.07. 2023

*ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்திராயன்-3 விண்கலம் தரையிறங்கும் என எதிர்பார்ப்பு. 7 ஆய்வுக்கருவிகளை உள்ளடக்கிய இந்த விண்கலம் நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது.

*ஏழை மக்களின் மருத்துவ செலவை பாதியாக குறைக்க 'மக்களை தேடி மருத்துவம்' திட்டம் - முதலமைச்சர் பெருமிதம்.

*மதுரையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்று திறப்பு.

*பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைய இருப்பது இந்தியாவிற்கே பெருமை.  
பிரான்ஸ் வாழ் இந்தியர்களிடையே பேசிய பிரதமர் மோடி பெருமிதம்.

*ஆசிய தடகளப் போட்டியில் ஒரே நாளில் இந்தியாவிற்கு மூன்று தங்க பதக்கம்.

*அமெரிக்க ஓபன் பேட்மிட்டன் பி.வி.சிந்து - லக்ஷயா சிங் கால் இறுதிக்கு தகுதி. தமிழக வீரர் சங்கர் முத்துசாமி இஸ்ரேலின் ஜில்பர் மேனை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.


Today's Headlines

* Chandrayaan-3 is expected to land on August 23.  The spacecraft, which includes 7 probes, has been sent to explore the southern part of the Moon.

 * To halve the medical expenses of the poor people, 'Medicine in search of people' - Chief Minister Perumidham.

 * The artist's centenary library, which has been built on a grand scale in Madurai, will be inaugurated today.

 * It is India's pride to have a statue of Thiruvalluvar in France.
 Prime Minister Modi spoke with pride among Indians living in France.

 *Three gold medals for India in a single day at the Asian Athletics Championships.

 *US Open Badminton PV Sindhu - Lakshya Singh qualify for quarter-finals.  Tamil Nadu's Shankar Muthuswamy defeated Israel's Gilber Man to qualify for the quarter-finals.
 Prepared by

Covai women ICT_போதிமரம்



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

நீரிழிவு நோயால் (Type - I Diabetes) பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவர்கள் நலன் காக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 வகை - I நீரிழிவு நோயால் (Type - I Diabetes) பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவர்கள் நலன் காக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

DSE - Type 1 Diabetes Instructions - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எப்போது? சிபிஎஸ்இ அறிவிப்பு

 


நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் படித்து வரும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பினை மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.


அதன்படி, 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 55 நாள்கள் பொதுத் தேர்வு நடைபெறும் எனறு தெரிவித்துள்ளது.


சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் வெளியிட்ட அறிவிப்பில், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தேர்வுகள் தொடங்கும். தேர்வு அட்டவணை, பல்வேறு மாநிலங்களிடமிருந்து வரும் பரிசீலனைகளை ஏற்ற மாணவர்களுக்கு ஏற்ற வகையில் பாடத் தேர்வுக்கான தேதிகள் இறுதி செய்யப்படும்.


அதன்படி, 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 21ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கான தேர்வுகளும், பிப்ரவரி 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை 12ஆம் வகுப்புக்கான தேர்வுகளும் நடைபெறவிருக்கின்றன. தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.


இதற்கு ஏற்ற வகையில், 2024ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி முதல் பிப்ரவரி 14ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறும். முக்கிய பாடத்திட்டங்களுக்கு செய்முறைத் தேர்வுகள் மிகவும் முக்கியத்துவம் பெறும் என்பதால், மாணவ, மாணவிகள் அதற்கேற்ற வகையில் தங்களை தயார்படுத்திக் கொள்ளமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பாடங்களுக்கான நேரங்களை உரிய முறையில் ஒதுக்கி, அன்றைய பாடங்களை அன்றைய நாளிலேயே படித்து தேர்வுக்குத் தயாராகுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அலகு விட்டு அலகு / துறை மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு - DSE செயல்முறைகள்!

 


அலகு விட்டு அலகு / துறை மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு - DSE செயல்முறைகள்!

DSE - Unit Transfer Counseling - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

SMC - பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு - உறுப்பினர் மாற்றங்கள்- கூடுதல் வழிகாட்டுதல்கள் வழங்கி மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

 

அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுவின் மறுகட்டமைப்பு நடைமுறைகளானது கடந்த 2022 - ஆம் ஆண்டு ஏப்ரல் , ஜுலை மாதங்களில் நடைப்பெற்றது. மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு முறையான பயிற்சி முதற்கட்டமாக அளிக்கப்பட்டது. 


பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும் , பள்ளி வளர்ச்சிக்குத் துணை நிற்கவும் , குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 - இன்படி உருவாக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுவானது மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை கூடி ஆலோசித்து குழந்தைகள் கல்வி மற்றும் பள்ளியின் வளர்ச்சி சார்ந்தத் திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது.


பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்களை அனைத்து உறுப்பினர்களின் முழுமையானப் பங்கேற்புடன் நடத்திடவும் . உறுப்பினர்களின் வருகை மற்றும் தவிர்க்கவியலாத மாற்றங்கள் சார்ந்து முடிவுகள் எடுக்கவும் , பள்ளியின் நிதி நிர்வாக நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையிலும் கூடுதல் வழிகாட்டுதல்கள் பின்வருமாறு வழங்கப்படுகிறது.


Additional Guidelinesfor SMC Reconstitution -Reg - Download here



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TNSED APP NEW UPDATE | OTHER CLASS HEALTH SCREENING TEACHER ASSIGN

 NSED APP NEW UPDATE | OTHER CLASS HEALTH SCREENING TEACHER ASSIGN


🪷 நடுநிலை,மேல்நிலை மற்றும் உயர் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு


📌 6 முதல் 12ம் வகுப்பு வரை கட்டாயமாக ஆண் மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்களும், மாணவியருக்கு பெண் ஆசிரியர்கள் மட்டுமே Health Screening மேற்கொள்ள வேண்டும்.


📌 அதற்காக EMIS தளத்தில் மாற்று வகுப்பிற்கு தங்களது பள்ளி ஆசிரியர்களை  Assign செய்ய வேண்டும்.


🪷 அதன் பிறகு ASSIGN செய்யப்பட்ட ஆசிரியருக்கு   TNSED APP -ல் OTHER CLASS STUDENTS LIST தோன்றும். அதன் பிறகு அந்த மாணவர்களுக்கும் HEALTH SCREENING மேற்கொள்ள வேண்டும்.




Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News