School Morning Prayer Activities - 14.07.2023

  

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.07.23

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஒப்புரவறிதல்

குறள் :215

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

விளக்கம்:

பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.


பழமொழி :
A thief knows a theif

பாம்பின் கால் பாம்பறியும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. உதவி செய்வது பிறரின் வருத்தம் போக்கவே தவிர பிறர் என்னைப் புகழ அல்ல. 

2. என்னால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்வேன்.


பொன்மொழி :

எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை
காமராஜர்


பொது அறிவு :

1.:எந்த நாட்டின் தேசிய கீதத்தில் இசை மட்டுமே உள்ளது, வார்த்தைகள் இல்லை?

விடை: ஸ்பெயின்

2. செவ்வகக் கொடி இல்லாத ஒரே நாடு எது?

விடை: நேபாளம்


English words & meanings :

 carbine - a light short gun சிறிய கைத்துப்பாக்கி; dictum - a proverb பழமொழி


ஆரோக்ய வாழ்வு :

வழக்கமான சர்க்கரைவள்ளிக்கிழங்குடன் ஒப்பிடும்போது ஊதா நிற சர்க்கரைவள்ளிக்கிழங்குஆன்டி ஆக்சிடென்ட் நன்மைகளை அதிகம் கொண்டிருக்கும்.


நீதிக்கதை

ஒரு மனிதன் யானைகளைக் கடந்து செல்லும்போது, ​​யானையின் முன் காலில் ஒரு சிறிய கயிரினால் கட்டப்பட்டதை கண்டு குழப்பம் அடைந்தார். சங்கிலிகள் இல்லை, கூண்டுகள் இல்லை. யானைகள் எந்த நேரத்திலும் தங்கள் பிணைப்பிலிருந்து பிரிந்து செல்ல முடியும் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் சில காரணங்களால் அவை அவ்வாறு செய்யவில்லை.

அவர் அருகில் ஒரு பயிற்சியாளரைப் பார்த்து, ஏன் இந்த விலங்குகள் தப்பிக்க முயற்சிக்கவில்லை. அங்கேயே நிற்கின்றன என்று கேட்டார். அதற்கு பயிற்சியாளர் கூறினார், “அவை மிகவும் சிறியதாக இருக்கும்போது, அதே அளவு கயிற்றைப் பயன்படுத்தி அவற்றைக் கட்டுவோம், சிறிய வயதில், தப்பிக்க முயற்சிக்கும் போது அவர்களால் அந்த பிடியில் இருந்து தப்பிக்க முடியாது . அவை வளரும்போது, ​​அவை தப்பிக்க முடியாது என்று அவைகள் நம்புகின்றன. எனவே அவைகள் ஒருபோதும் விடுபட முயற்சிக்க மாட்டாது. அந்த மனிதர் ஆச்சரியப்பட்டார். இந்த விலங்குகள் எந்த நேரத்திலும் தங்கள் பிணைப்பிலிருந்து விடுபடலாம், ஆனால் அவை தங்களால் முடியாது என்று நம்பியதால், அவை இருந்த இடத்திலேயே சிக்கிக்கொண்டன.
யானைகளைப் போல, நம்மில் எத்தனை பேர் முன்பு ஒருமுறை தவறிவிட்டதால், நம்மால் திரும்ப செய்ய முடியாது என்ற நம்பிக்கையில் வாழ்கிறோம்.


 தோல்வி என்பது கற்றலின் ஒரு பகுதி. வாழ்க்கையில் போராட்டத்தை கைவிடக்கூடாது. நீங்கள் தோல்வியடைவது தோல்வி அல்ல, உங்கள் வாழ்க்கையை நீங்கள் நகர்த்தும்போது நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்.


இன்றைய செய்திகள் - 14.07. 2023

*பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு தலைநகரில் உற்சாக வரவேற்பு. 

*சந்திராயன் 3  விண்கலம் விண்ணில் ஏவுவதற்கான கவுண்டவுன் தொடக்கம்.
*யமுனை வெள்ளம் சூழ்ந்ததால் டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு- முதலமைச்சர் கெஜ்ரிவால்.

*மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை இரு மடங்காக உயர்வு செய்து அரசாணை வெளியீடு.

*வரும் ஜூலை 22-ல் தொடங்குகிறது பொறியியல் கலந்தாய்வு.  3 சுற்றுகளாக மட்டும் நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. 

*ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 
1000 மீட்டர் நடைப்பந்தயத்தில் இந்தியாவின் அபிஷேக்பால் வெண்கல பதக்கம் வென்றார்.

Today's Headlines

* Prime Minister Modi received a warm welcome in the capital on his arrival in France.

 *Countdown begins for Chendrayan -3 Mauna satellite launch.
 * Due to flooding of Yamuna, drinking water shortage in Delhi - Chief Minister Kejriwal.

 * Education stipend for differently-abled persons has been doubled and an ordinance is issued.

 *Engineering councelling will start on 22nd July.  Minister Ponmudi announced that it will be held in 3 rounds only.

 *Asian Athletics Championship
 India's Abhishek Pal won the bronze medal in the 1000m walk.
 Prepared by

Covai women ICT_போதிமரம்



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை (Scholarship) 2023-2024-ஆம் நிதியாண்டு முதல் இருமடங்காக உயர்த்தி அரசாணை வெளியீடு!


மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை (Scholarship) 2023-2024-ஆம் நிதியாண்டு முதல் இருமடங்காக உயர்த்தி அரசாணை வெளியீடு!

 G.O.Ms.No.16 - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது - அறிவியல் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க அறிவியல் நகரம் அழைப்பு!

 



சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது - அரசு, அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க அறிவியல் நகரம் அழைப்பு!

School Morning Prayer Activities - 13.07.2023

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.07.23

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஒப்புரவறிதல்

குறள் :214

ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

விளக்கம்:

ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.

பழமொழி :
A teacher is better than two books

ஒரு ஆசிரியர் இரு புத்தகங்களை விட மேலானவர்


இரண்டொழுக்க பண்புகள் :

1. உதவி செய்வது பிறரின் வருத்தம் போக்கவே தவிர பிறர் என்னைப் புகழ அல்ல. 

2. என்னால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்வேன்.

பொன்மொழி :

எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைபற்றலாம்
காமராஜர்

பொது அறிவு :

1. உலகில் அதிகம் பேசப்படும் மொழி எது?


விடை: மாண்டரின் சீனம்

2. ஒரு லீப் ஆண்டில் எத்தனை நாட்கள் உள்ளன?


விடை: 366 நாட்கள்


English words & meanings :

 Amity - friendship நட்பு; banquet- rich meal விருந்து


ஆரோக்ய வாழ்வு :

சர்க்கரைவள்ளிக்கிழங்கை சாப்பிடுவது பசியை கட்டுப்படுத்தும். பசி உணர்வு இன்றி வயிறு நிறைந்த திருப்தியை நீண்ட நேரம் தக்கவைத்துக்கொள்ள முடியும்.


நீதிக்கதை

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது தனது பலத்தாலும், தோற்றத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் வசித்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.

பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திற்கு கிட்டச் செல்வதில்லை. சிங்கத்தைக் கண்டால் பயந்து ஓடிவிடுகின்றன.
ஆனால் ‘ஈ” ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது.  அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..’உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன், நகங்களால் விறாண்டுவேன், நசுக்கிப்  போடுவேன் என்றது.

அதற்கு ஈயோ...  நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட மாட்டேன். இன்னும் சொல்லப்போனால்..நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் விறாண்டிக் கொள்ளவும் செய்வேன்” என்றது.
இதைக் கேட்ட சிங்கம் கோபத்துடன் முடிந்தால் அதைச் செய் என சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் முதுகில் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது..அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல..ஈ பறக்க…சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே விறாண்டிக் கொண்டது. இவ்வாறு பலதடவை சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது.

சிங்கத்தினால் ஈயை பிடிக்கவோ நசுக்கவோ முடியவில்லை. அதனால் சிங்கம் தன் இயலாமையை எண்ணி வெட்கப்பட்டது.


அதன் பின்புதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை இம்சைப்படுத்தி விட்டதே என்று. .உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது.


இன்றைய செய்திகள் - 13.07. 2023

*பிரான்சில் வரும் 14ஆம் தேதி கொண்டாடவிருக்கும் பாஸ்டில் தினம் எனப்படும் தேசிய தினத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்.

*விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்.

*இமாச்சலப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று நிலச்சரிவில் சிக்கிய தமிழக மாணவர்கள் 12 பேர் பத்திரமாக மீட்பு.

*கடந்த ஆண்டு குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூலை இருபதாம் தேதி பணி நியமன கலந்தாய்வு தொடக்கம்.

*முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பயன்படுத்திய கார் புதுப்பிக்கப்பட்டு அவரது பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

*லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்.

Today's Headlines

* Preparations for Bastille Day, a national day to be celebrated on the 14th in France, are in full swing.

 * Chief Minister urges Central Minister to control inflation.

 * 12 students of Tamil Nadu who were caught in a landslide on a trip to Himachal Pradesh were rescued safely.

 *For those who passed the last year Group-4 examination, the recruitment councelling will start on 20th July.

 *The car used by former Chief Minister Kamaraj is planned to be refurbished and placed at the Kamaraj Arena in Chennai on his birthday, 15th July.

 * It was informed that Former Australia coach Justin Langer is going to be appointed as the head coach of the Lucknow team.

 Prepared by

Covai women ICT_போதிமரம்



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Kanavu Aasiriyar - Monthly Magazine - July 2023

 

Kanavu Aasiriyar - Monthly Magazine

 

Kanavu Aasiriyar - July 2023 Monthly Magazine - Download here

Kanavu Aasiriyar - June 2023 Monthly Magazine - Download here

School Morning Prayer Activities - 12.07.2023

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.07.23

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஒப்புரவறிதல்

குறள் :213

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற

விளக்கம்:

தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம்.


பழமொழி :
A sound mind in a sound body

உடல் வலுவுற்றால், உள்ளம் வலுவுறும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. உதவி செய்வது பிறரின் வருத்தம் போக்கவே தவிர பிறர் என்னைப் புகழ அல்ல. 

2. என்னால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்வேன்.


பொன்மொழி :

ஒரு பெண்ணிற்கு கல்வி புகட்டுவது குடும்பத்திற்கே கல்வி புகட்டுவதாகும்
காமராஜர்


பொது அறிவு :

1.உலகின் மிக உயரமான கட்டிடம் எது?

விடை: துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா

2. கணினியின் எந்த பகுதி மூளை என்று அழைக்கப்படுகிறது?

விடை: CPU


English words & meanings :

 zeal - intense enthusiasm ஆர்வம்; abdomen - belly அடிவயிறு


ஆரோக்ய வாழ்வு :

சர்க்கரை வள்ளி கிழங்கு : நார்ச்சத்து போன்ற ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் உள்ளது. 


ஜூலை 12 இன்று

மலாலா தினம்  


மலாலா யோசப்சையி (மாற்று: மலாலா யூசுஃப்சாய், ஆங்கிலம்: Malala Yousafzai பாசுதூ: ملاله یوسفزۍ‎, பிறப்பு 1997) என்பவர் பாகிசுத்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசிக்கும் ஒரு மாணவி ஆவார். இவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்காக அறியப்படுகிறார். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009ஆம் ஆண்டிலேயே இவரது பி.பி.சியின் உருது வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் பாக்கித்தானிய தாலிபானால் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார்.இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது. மலாலாவை அக்டோபர் 9, 2012 அன்று தாலிபான் சுட்டுக் கொல்ல முயன்றது.இவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மிகவும் சிறுவயதில் அமைதி நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார். 2013ஆம் ஆண்டு ஜூலை 12-ல் மலாலா தனது 16ஆவது பிறந்தநாள் அன்று ஐக்கிய நாடுகள் சபையை தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் "மலாலா தினம்" என்று குறிப்பிட்டனர். 
நீதிக்கதை

தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.

“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம்(கொழுக்கட்டை) கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.

பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது.  வீட்டிற்கு வந்தவள்,   தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு.மோதகதிற்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்  என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.


எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் பெரியோர்களின் பரிசில்களைப்பெறலாம்.


இன்றைய செய்திகள் - 12.07. 2023

*தமிழ்நாடு முழுவதும் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை.

*இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவால் சண்டிகர்- மணாலி நெடுஞ்சாலை மூடல்.

*கனமழை கொட்டிய போதும் சிம்லாவில் குடிநீர் தட்டுப்பாடு மக்கள் அவதி.

*தீபாவளி பண்டிகையொட்டி ரயிலில் இன்று முதல் முன்பதிவு தொடக்கம்.

*மகளிர் கிரிக்கெட்:      8 ரன்கள் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தியது இந்தியா.

*உகாண்டா நாட்டில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டி: கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் சாதனை.


Today's Headlines

*Sales of tomatoes in 300 ration shops across Tamil Nadu.

 * Chandigarh-Manali highway closed due to landslides in Himachal Pradesh.

 *Despite heavy rains, people are suffering from shortage of drinking water in Shimla.

 *On the occasion of Diwali festival, train booking starts from today.

 *Women's Cricket: India beat Bangladesh by 8 runs.

 *Badminton tournament held in Uganda: Kalpakkam nuclear power plant workers achieved

 Prepared by

Covai women ICT_போதிமரம்


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

உரிமைத் தொகை முகாம் பணி இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு கட்டாயமில்லை

 

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னாா்வலா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை திட்ட முகாம் பணி கட்டாயமில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து உரிமைத் தொகை திட்ட சிறப்புப் பணி அலுவலா் க.இளம்பகவத் மாவட்ட ஆட்சியா்கள், பெருநகர சென்னை, மாநகராட்சி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள் ஆகியோருக்கு அனுப்பிய கடிதம்:


கலைஞா் மகளிா் உரிமைத் திட்ட விண்ணப்பப் பதிவு பணியில், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். தன்னாா்வலா்கள் எந்தெந்த நியாய விலைக் கடைப் பகுதியில் வசிக்கிறாா்கள் என்ற விவரங்கள் இணைக்கப்பட்ட தொகுப்பு மாநில அலுவலகத்தில் இருந்து விரைவில் மாவட்டங்களுக்கு பகிரப்படும். இப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்து பெறப்படும் தகவல்களைக் கொண்டு தன்னாா்வலா்களுக்கு எந்தவித பணி ஒதுக்கீடுகளும் அளிக்க வேண்டாம்.


மாநில அலுவலகத்திலிருந்து பகிரப்படும் தகவல் தொகுப்பில், ஒவ்வொரு நியாயவிலைக் கடைப் பகுதியில் வசிக்கும் தன்னாா்வலா்களின் விவரங்கள் இடம்பெற்றிருக்கும். சில நியாயவிலை கடைப் பகுதிகளில் தேவைக்கு அதிகமான தன்னாா்வலா்கள் தங்களது விருப்பத்தை பதிவு செய்துள்ளனா்.


சில பகுதிகளில் போதிய தன்னாா்வலா்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை. அவா்களுக்கான பணி ஒதுக்கீடு அளிக்கும் போது, இயன்ற வரையில் 2 கி.மீ. தொலைவுக்கு மிகாமல் பணி ஒதுக்கீடு அளிக்க வேண்டும். ஒரு வேளை 2 கி.மீ.க்கு மேற்பட்ட தொலைவில் பயணிக்க தன்னாா்வலா் சம்மதம் தெரிவித்தால் அவா்களுக்கு 2 கி.மீ.க்கு அப்பால் பணி அளிக்கப்படும்.


தகவல் உள்ளீடு பணிகளுக்கும் கள ஆய்வுப் பணிகளுக்கும் விருப்பம் தெரிவித்த தன்னாா்வலா்களைத் தொலைபேசி வழியாக தொடா்பு கொள்ள வேண்டும். அவா்களுக்கு பணியின் முக்கியத்துவத்தை விளக்கி, சம்மதத்தைப் பெற்று பணியில் அமா்த்துதல் வேண்டும். சில தன்னாா்வலா்கள் பணி செய்ய விருப்பம் இல்லை என்று தெரிவித்தால் அவா்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது. ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்கள், ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் உள்ள வட்டாட்சியருடன் இணைந்து தன்னாா்வலா்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.


சுய உதவிக் குழுவினா்: நகரப் பகுதிகளில் போதிய இல்லம் தேடி கல்வி திட்ட தன்னாா்வலா்கள் இல்லை. அதுபோன்ற இடங்களில் சுய உதவிக் குழு உறுப்பினா்களை அடையாளம் கண்டு நியமிக்கலாம். வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களை கலந்து ஆலோசிக்காமல் பணி ஒதுக்கீடுகள் செய்ய வேண்டாம்.


20 சதவீத தன்னாா்வலா்களை அடையாளம் கண்டு இருப்பில் வைத்திருக்க வேண்டும். அவா்களுக்கு உதவி மையத் தன்னாா்வலா்கள் பொறுப்பு அளிக்கலாம். மேலும், விண்ணப்பப் பதிவு பணிக்குத் தேவைப்படும் போது, அவா்களை தன்னாா்வலா்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

RBSK - மாணவர்களது அடிப்படை விவரங்களை TNSED SCHOOL APP செயலியில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள்!!!

 

பள்ளிக் கல்வி - பள்ளி மாணவர்களின் உடல்நலம் பேணுதல் தேசிய சுகாதார இயக்கம் - RBSK அடிப்படை விவரங்கள் திரட்டுதல் TNSED SCHOOL APP செயலியில் விவரங்கள் பதிவிடக் கோருதல் சார்பு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் :


RBSK Survey Instructions pdf - Download here


கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களின்படி , இப்பணிகளை TNSED School APP , Health and Well.being செயலியின் மூலம் மேற்கொள்ள வேண்டும் . 


1 emistnschoolsgovin ல் மூலம் தலைமை ஆசிரியர்கள் வகுப்பையும் அதற்கான வகுப்பு ஆசிரியரையும் தேர்வு செய்தல் வேண்டும் . 

2. சோதனை செய்யும் வகுப்பு ஆசிரியர்கள் other class screening module யை தேர்வு செய்து இப்பணியினை மேற்கொள்ளுதல் வேண்டும் . 

3. மாணவர்களுடைய பெயர் , வகுப்பு மற்றும் பிரிவை ஆசிரியர்கள் தேர்வு செய்தல் வேண்டும் . 

4. மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு அதை சரிபார்த்து செயலியில் உள்ளீடு செய்தல் வேண்டும் . 

5. எடை பார்க்கும் கருவி ( Weighing Machine ) மற்றும் அளவை நாடா ( Inch Tape ) ஆகியவற்றின் மூலம் மாணவர்களின் எடை மற்றும் உயரத்தை கணக்கிடல் வேண்டும் . 

6. பதிவுகள் மேற்கொண்ட பின்பு , திருத்தம் ( Edit ) செய்ய இயலாது . 

7. ஆண் ஆசிரியர்கள் மாணவர்களையும் பெண் ஆசிரியர்கள் மாணவியர்களையும் மட்டுமே சோதனை செய்தல் வேண்டும் . 

8. இது சார்ந்த விளக்கப்படம் கீழ்க்காணும் இணைய தள முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம் .

 How tosereen : https:/bit.ly/3r3anMQ 

Youtube Video : https://bit.ly/31nxata 


மேலும் இப்பணியில் முன்னேற்றத்தினைத் தொடர்ந்து கண்காணித்திடவும் , இவ்விவரங்களின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதால் விரைவில் இப்பணியினை முடித்திட திட்டமிட்டு செயலாற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது ,


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தற்பொழுது TNSED app ல் இரண்டு புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது

 


தற்பொழுது TNSED app ல் இரண்டு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.... அதாவது விடுப்பு விண்ணப்பித்து அதனை அப்ரூவல் கொடுப்பதற்கு முன்பாக நாமே டெலிட் செய்து கொள்ளலாம்.. இரண்டாவதாக நீங்கள் தற்செயல் விடுப்பு கொடுத்ததை மருத்துவ விடுப்பாக மாற்ற வேண்டிய சூழ்நிலை வந்தால் அதனை எடிட் செய்து மாற்றிக் கொள்ளலாம்...

மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு உதவித் திட்ட அலுவலர் (APO) பணியிடங்கள் அனுமதித்தல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 

மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலகங்களுக்கு உதவித் திட்ட அலுவலர் (APO) பணியிடங்கள் அனுமதித்தல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


மாவட்ட வாரியான ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு.

DEO ELEMENTARY OFFICE APO NEW POST Proceedings - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News