School Morning Prayer Activities - 10.07.2023

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.07.23


திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஒப்புரவறிதல்

குறள் :211

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.

விளக்கம்:

கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.


பழமொழி :
A single swallow can not make a summer

தனி மரம் தோப்பாகாது.


இரண்டொழுக்க பண்புகள் :

1. உதவி செய்வது பிறரின் வருத்தம் போக்கவே தவிர பிறர் என்னைப் புகழ அல்ல.

 2. என்னால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்வேன்.


பொன்மொழி :

நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவர் என்றும் கதாநாயகன் தான்

காமராஜர்


பொது அறிவு :

1. ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயரமான சிகரம் எது?



விடை: குரு சிகரம்

1. இந்தியாவின் மிக நீளமான ஏரி எது?


விடை: வேம்பநாடு ஏரி


ஆரோக்ய வாழ்வு :

சக்கரை வள்ளிக் கிழங்கு :வைட்டமின் சி, வைட்டமின் பி 5, பி 7 ஆகிய வைட்டமின்கள் நிரம்பி காணப்படுகின்றன.


ஜூலை 10 இன்று

சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg, ஜூலை 10, 1682 - பிப்ரவரி 23, 1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது. முதன் முதல் இந்தியாவில் அச்சகத்தை ஆரம்பித்தவர். முதன் முதல் இந்தியாவில் காகித ஆலையை ஆரம்பித்தவர். முதன் முதல் தமிழ் நாள்காட்டியை அச்சிட்டு வெளியிட்டவர். முதன் முதல் தமிழ் உரைநடையை அறிமுகப்படுத்தியவர். முதன் முதல் பெண்கள் பள்ளியை ஆரம்பித்தவர்.முதன் முதல் ஏழை பிள்ளைகளுக்கு காப்பகத்தை துவங்கியவர். முதன் முதல் பெண்களுக்கு தையல் கூடம் ஆரம்பித்தவர். முதன் முதல் மதிய உணவு வழங்குவதை துவங்கியவர். முதன் முதல் பள்ளி பிள்ளைகளுக்கு பாடநூலை அச்சிட்டவர்.  முதன் முதல் தமிழ் புரோட்டஸ்டன்ட் ஆலயத்தை கட்டினவர். முதன் முதல் பல் சமய உரையாடலை துவங்கினவர்.முதன் முதல் தமிழ் அகராதியை உருவாக்கினவர். முதன் முதல் தென்னிந்திய கடவுள்களின் வரலாற்றை எழுதியவர்.


நீதிக்கதை

ஒரு நாள் வேடன் ஒருவன் காட்டிற்குள் வேட்டையாடச் சென்றபோது,

திடீரென காட்டில் எங்கிருந்தோ ஒரு சிங்கத்தின் கர்ஜனை அவனை பயந்து ஓட வைத்தது.

அப்போது "மனிதா....பயப்படாதே உன் வலப்பக்கம் பார்....யாரோ விலங்குகளைப் பிடிக்க வைத்த கூண்டில் நான் மாட்டிகொண்டுவிட்டேன்.கூட்டைத் திறந்து என்னை விடுவிக்கிறாயா?" என்றது சிங்கம்

வேடன் சொன்னான்,"சிங்கமே... நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன் உன்னை விடுவித்தால் வெளியே வந்து என்னை உணவுக்காக நீ கொன்று விடுவாயே."

"கண்டிப்பாக மாட்டேன்.என்னை காப்பற்றும் உன்னைக் கொல்வேனா...மாட்டேன்,

அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற " என சிங்கம் சொல்ல ...

வேடன் கூண்டைத்திறந்து சிங்கத்தை விடுவித்தான்.

நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று. இதனைக் கண்ட வேடன்

'சிங்கமே நீ செய்வது நியாயமா?, இதுதானா நீ காட்டும் நன்றியா? என்றான்".

அப்போது அவ்வழியாக ஒரு நரி வந்தது.

"இதனிடம் நியாயம் கேட்போம்'' என்று கூறிய வேடன் நடந்த

கதையனைத்தையும் நரியிடம் கூறினான்,சிங்கமும் நரி சொல்வதை தான் கேட்பதாகக் கூறியது.

அனைத்தையும் கேட்ட நரிக்கு சிங்கத்தின் நன்றி கெட்ட செயல் புரிந்து விட்டது

உதவி செய்த மனிதனைக் காப்பாற்றி சிங்கத்தை கூட்டில் பூட்டிவிட தந்திரமாக செயல் பட்டது.

நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல

முதலிலிருந்து நடந்ததைக் கூறுங்கள் நீங்கள் எந்த கூண்டில் எப்படி இருந்தீர்கள்' என சிங்கத்திடம் வினவ ,

உடனே சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்று ' இங்கே இப்படித்தான் இருந்தேன் என்றது.'

இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.

நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!'' என்று கத்தியது சிங்கம்.

சிங்கத்திடம் ' என்னை மன்னியுங்கள்.நீங்கள் உங்களை காப்பற்றுபவனுக்கு கொடுத்த உறுதிமொழியை மீறி கொல்ல நினைப்பது நம்பிக்கை துரோகமாகும்.ஆகவே தான் இப்படி நடந்துகொண்டேன்' என்று நரி கூறியது.

நன்றி மறந்த சிங்கம் தான் செய்த தவறை எண்ணி வருந்தியது.


நீதி: ஒருவர் நமக்கு செய்த உதவியை மறக்க கூடாது.


இன்றைய செய்திகள் - 10.07. 2023

*இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பியாஸ் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும்  வெள்ளம்.

*கேரளாவில் கனமழை 19 பேர் பலி 10000 பேர் முகங்களில் தங்க வைப்பு. 

*ஜூலை 14ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன்-3 விண்கலமானது விண்ணில் ஏவப்பட உள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் 240 விமான நிலையங்கள் என்ற இலக்கை அடைய மத்திய அரசு மும்முரம்-  மத்திய அமைச்சர்  தகவல். 

*வில்வித்தை சாம்பியன்ஷிப் இந்தியாவிற்கு மேலும் இரண்டு தங்கம்.

*கனடா ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்.


Today's Headlines

* Due to continuous heavy rains in Himachal Pradesh, Beas river is overflowing.

 *Heavy rains in Kerala  19 people died and 10000 people got to stay in camp.

 *Chandrayaan-3 is scheduled to launch from Sriharikota on July 14 at 2.35 pm.

 The Central Government targetted to achieve 240 airports in the country within the next three years - Union Minister informed.

 *Two more golds for India at Archery Championship.

 *Canada Open Badminton: Indian player Lakshya Sen advances to final.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

எண்ணும் எழுத்தும் வகுப்பு-1,2,3 பாடக்குறிப்பு

எண்ணும் எழுத்தும் Class-1,2,3 அலகு -1
Tamil medium - Click Here 

English medium - click here





12 அலகு ஒரே தொகுப்பாக Click here 

 அலகு -2
Tamil Medium - Click Here




அலகு -3
Tamil Medium Click here

அலகு -4
Tamil Medium - Click Here



English Medium - Click Here



காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள்: முக்கிய அறிவிப்பு!

 தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் உள்ள 1,000 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் பதவி உயர்வு மூலமாக இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் கூறியுள்ளது. 


அதன்படி, இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான முதுகலை ஆசிரியர்களையும் அதுபோல 17ஏ, 17பி பிரிவுகளின் கீழ் தண்டனை பெற்ற ஆசிரியர்களை பரிந்துரைக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதுபோல, தண்டனை காலம் முடிவடையாமல் உள்ள ஆசிரியர்களின் பெயர்களையும் பரிந்துரைக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. 


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மாணவர்களின் உடல்நலம் குறித்து அடிப்படை தகவல்களை திரட்டுதல் - TNSED செயலியில் விவரங்களை பதிவேற்றம் செய்ய மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு

 COSE PROCEEDINGS, Health & Wellbeing TNSED

Collection of Basic Information on Health of Students - Directed by State Planning Director to upload details on TNSED app பள்ளிக் கல்வி பள்ளி மாணவர்களின் உடல்நலம் பேணுதல் - தேசிய சுகாதார இயக்கம் - RBSK அடிப்படை விவரங்கள் திரட்டுதல் TNSED SCHOOL APP செயலியில் விவரங்கள் பதிவிடக் கோருதல் சார்பு.



தேசிய சுகாதார இயக்கம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுடைய உடல் நலன் சார்ந்த பிரச்சனைகளை இளம் வயதிலேயே கண்டறிதல் மற்றும் தேவையான மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள எதுவாக மாணவர்கள் உடல்நலன் சார்ந்த அடிப்படை விவரங்களை தொகுத்து விரைவு SCHOOL APP Health. and wellbeing) செயலிஉருவாக்கப்பட்டுள்ளது...


நடவடிக்கையைமேற்கொள்ளும்பொருட்டு (TNSED

பள்ளி மாணவர்கள் உடல் நலன் சார்ந்த பிரச்சனைகளை இனம் காணுதல் மூலம் பிறவிக் குறைபாடுகள். வளர்ச்சி குறைபாடுகள், இரத்த சோகை, விட்டமின் குறைபாடுகள் போன்ற பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கு விரைந்து உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளவும், மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் தேவையான நேர்வுகளில் மூக்குகண்ணாடி போன்ற தகுந்த உபகரணங்கள் வழங்கவும் உரிய நேரத்தில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவும் இவ்விவரங்கள் அடிப்படையாக அமைகிறது.கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களின்படி, இப்பணிகளை TNSED School APP, Health and well-being செயலியின் மூலம் மேற்கொள்ள வேண்டும்.



மேலும் இப்பணியில்

முன்னேற்றத்தினைத் தொடர்ந்து கண்காணித்திடவும், இவ்விவரங்களின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதால் விரைவில் இப்பணியினை முடித்திட திட்டமிட்டு செயலாற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

👇👇👇👇

Click here spd Proceedings Pdf file


Click here Health & well being Mobile App demo video


Click here - Doctors Advice video-1


Click here - Doctors Advice video-2


Update Tnsed App - click here 


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Final Subject Wise Name List - Direct PG Through TRB - Year 2003!

CRC Training 08.07.2023 - Quiz & Tentative Answer Key...

முன்னாள் மாணவர் மன்றம் - EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய தகவல்கள்

 

முன்னாள் மாணவர் மன்றம் - EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய தகவல்கள் 

Alumni Forum – Information to be uploaded on EMIS website - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

01.01.2023 நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் உத்தேச முன்னுரிமை பட்டியல்

 01.01.2023 நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் உத்தேச முன்னுரிமை பட்டியல்


 HS HM and PG name list  06.07.2023 - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளிக்கல்வி - 2023-2024ஆம் ஆண்டு - பள்ளி மாணவர்களுக்கான, விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 பள்ளிக்கல்வி - 2023-2024ஆம் ஆண்டு - பள்ளி மாணவர்களுக்கான, விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


Dir proceedings - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

6 - 12th மாணவர்களுக்கு இக்கல்வியாண்டில் நடத்தப்பட உள்ள அனைத்து தேர்வுகளின் உத்தேச கால அட்டவணை

 


சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / சென்னை பள்ளிகள் , / மெட்ரிகுலேஷன் / ஆங்கிலோ இந்தியன் / ஆதிதிராவிட நலத்துறை சிறப்பு மற்றும் Truncated பள்ளிகளுக்கான 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இக்கல்வியாண்டில் நடத்தப்பட உள்ள அனைத்து தேர்வுகளின் உத்தேச காலஅட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.


 இவ்விவரத்தினை அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அலுவலர்கள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


year planner letter - Download here

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

CRC Meeting 08.07.2023 - Training Schedule & PPT Modules

  CRC Meeting 08.07.2023 - Training 

1-5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி 2 - கால அட்டவணை - Download here


ஆசிரியர்களுக்கான தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி ( CPD Training ) 2 - மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிதல் மற்றும் அவர்களுக்கான உள்ளடக்கிய கல்வி - PPT - Download here


1-5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி 2 - பள்ளி சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய திட்டம் - PPT - Download here


1-5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி 2 - குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு தொடர்பான ஆசிரியர்களுக்கான வளங்கள் - PPT. - Download here


1-5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி 2 - குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி - PPT - Download here




Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 07.07.2023

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.07.23



திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்:தீவினையச்சம்

குறள் :210

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.

விளக்கம்:

வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்.

பழமொழி :
A rolling stone gathers no moss

அலைபாயும் மனத்தால் எதையும் செய்ய முடியாது.


இரண்டொழுக்க பண்புகள் :

1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே ஊக்கமுடன் எனது வேலைகளை செய்வேன்.

 2. முயன்றால் பட்டாம்பூச்சி. இல்லாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்.


பொன்மொழி :

ஒரு விஷயம் முக்கியமானதாக இருந்தால், நிலைமை உங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும் அதை செய்து முடியுங்கள்.எலன் மாஸ்க்


பொது அறிவு :

1.முதுகு தண்டில் உள்ள எலும்புகள் எத்தனை? 

                                                                         33  

2.காலரா நோயை உருவாக்கும் பாக்டீரியா எது? 

                                                            விப்ரியோ காலரே


English words & meanings :

 transpire - revealed வெளிப்படுத்துதல் ; utensil - vessel பாத்திரம்


ஆரோக்ய வாழ்வு :

உருளை கிழங்கு :இதில் வைட்டமின் C மற்றும் கரோடின் சத்துகள் நிறைந்துள்ளது. இதனால் இது குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ஸ்கர்வி நோய் வருவதை தடுக்கிறது.


ஜூலை 07 இன்று

மகேந்திர சிங் தோனி    
மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), சுருக்கமாக எம் எஸ் தோனி என்று (பிறப்பு: 7 சூலை, 1981) அறியப்படும் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சர்வதேசத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வரையிட்ட நிறைவுப் போட்டிகளுக்கும் , 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக இருந்தார். இவரின் தலைமையில் 2007 ஐசிசி உலக இருபது20 2007-08 பொதுநலவய போட்டித் தொடர், 2010மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2013 ஐசிசி வாகையாளர் ஆகிய கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. நடுவரிசை மட்டையாளரும் இலக்குக் கவனிப்பாளரான இவர் ஒநாப போட்டிகளில் 10,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை எடுத்துள்ளார். இவர் ஒரு நாள் பன்னாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆட்டத்தினை முடித்துவைக்கும் திறன் கொண்டவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[2][3][4][5] மேலும் அவர் காலத்திலான ஒரு நாள் பன்னாட்டு துடுப்பாட்டத்தின் சிறந்த இலக்குக் கவனிப்பாளர்களில் ஒருவராகவும் சிறந்த அணித்தலைவராகவும் கருதப்படுகிறார்


நீதிக்கதை

ஒரு சமயம், தாசு என்ற ஒரு சிறிய பறவை பரந்த காட்டில் ஒன்றில் வாழ்ந்து வந்தது. கோடைக்காலத்தில் ஒரு நாள், கொடூரமான காட்டுத் தீயானது கொழுந்து விட்டு எரிந்தது.அதன் தீப்பிழம்புகள் காட்டில் இருக்கும் பல மரங்கள்,விலங்குகளை விழுங்கிக் கொண்டிருந்தது. மற்ற பறவைகள், வானில் உயரமாகப் பறந்து, வெகு தொலைவிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் சென்று கொண்டிருந்தன; ஆனால் தாசுவால், தன்னுடைய அருமையான இருப்பிடம் மற்றும் எரிந்து கொண்டு இருக்கும் இடத்தை விட்டுச் செல்வதற்கு மனம் வரவில்லை. இரவும் பகலும், தன் ஆற்றல் முழுவதையும் உபயோகித்து, தனது சிறு அலகில் ஆற்று நீரை நிரப்பிக் கொண்டு, முன்னும் பின்னும் அலைந்து காட்டுத் தீயை அணைக்க தாசு முற்பட்டது. அந்த சிறிய பறவை தாசுவின் அரிதான துணிச்சலும், அசைக்க முடியாத மன உறுதியும் போற்றத்தக்க வகையில் இருந்தது. சிறிது நேரத்தில், பெரும் மழை காடுகளின் மீது பொழிந்து, காட்டுத் தீயை தணித்தது. ஆம்.,நண்பர்களே.., உங்களிடம் உள்ள மனஉறுதியைக் கொண்டு சுற்றுப்புற சூழ்நிலையையும் மாற்றிக் கொள்ளும் முயற்சிகளை இடைவிடாமல் தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள்.


இன்றைய செய்திகள் - 07.07. 2023

*கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளது தென்மேற்கு பருவமழை. பல்வேறு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.

*உலகில் இதுவரை இல்லாத அதிக வெப்பம் பதிவான நாளாக கடந்த ஜூலை 3 ஆம் தேதி அறிவிப்பு. அன்றைய தினம் உலக அளவில் சராசரி வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் பதிவானதாக சுற்றுச்சூழல் கண்காணிப்புக்கான அமெரிக்க தேசிய மையம் தகவல். 

*டுவிட்டருக்கு போட்டியாக பேஸ்புக்  நிறுவனர் மார்க் எலியட் சுக்கர் பெர்க்கால் தொடங்கப்பட்ட திரெட்ஸ் சமூக வலைதளம். 4 மணி நேரத்தில் 5 லட்சம் பேர் திரட்சில் இணைந்தனர்.

*சின்ன வெங்காயம் கிலோ ₹ 150 ஆக அதிகரிப்பு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து விலை உயர்வு- மக்கள் அவதி.

*விம்பிள்டன் டென்னிசில் ஆஸ்திரேலியா வீரரை வீழ்த்தி 350 ஆவது கிராண்ட்ஸ்லாம்  வெற்றியை பதிவு செய்தார் ஜோகோவிச்.

*ஐ.சி.சி. தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின்,  ஜடேஜா 'நம்பர் 1' இடத்தில் நீடிக்கின்றனர்.


Today's Headlines

* Southwest Monsoon has intensified in Kerala.  Yellow alert for various districts.

 *Announcement of July 3rd as the hottest day ever recorded in the world.  The US National Center for Environmental Monitoring reported that the global average temperature on that day was 17 degrees Celsius.

 *Threads is a social networking site started by Facebook founder Mark Elliott Zuckerberg to compete with Twitter.  5 lakh people joined the rally in 4 hours.

 * Small onion increase to ₹ 150 per kg Continued rise in prices of essential commodities- People suffer.

 *Djokovic registers his 350th Grand Slam win at Wimbledon by defeating the Australian.

 * ICC  India's Ashwin and Jadeja remain at the 'No. 1' position in the rankings.

 Prepared by

Covai women ICT_போதிமரம்


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TRB - Direct PGs - Subject Wise Name List as on 06.07.2003

Ennum Ezhuthum - 1,2,3 Std - Term 1 - Module 4 Lesson Plan - T/M & E/M

 

Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024

Term 1 Lesson Plan

July 2023

Ennum Ezhuthum - 1,2,3 Std -  Term 1 - Module 4 Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3 Std -  Term 1 - Module 4 Lesson Plan - E/M - Download here

June 2023


Ennum Ezhuthum - 1,2,3 Std -  Term 1 - Module 3 Lesson Plan - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்: பள்ளிக்கல்வித் துறை புதிய உத்தரவு

 


பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதி, கல்வி வளர்ச்சி தினமாகத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.


அந்நாளில் மாணவர்கள் புத்தாடை அணிந்து, விழா எடுத்து காமராஜர் படத்துக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதன்படி நடப்பு கல்வியாண்டில் வரும் ஜூலை 15-ம் தேதியன்று அனைத்து விதமான பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி தின விழாவை சிறப்பாகக் கொண்டாடத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.


மேலும், காமராஜரின் அரும்பணிகள் குறித்து மாணவர்கள் உணரும் வகையில் பேச்சு, ஓவியம், கட்டுரை, கவிதைப் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கவேண்டும். இதற்கான செலவினங்களைப் பள்ளி வளர்ச்சி அல்லது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நிதியிலிருந்து செய்ய வேண்டும்.


இது சார்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இதேபோல, அனைத்து முதன்மை, மாவட்ட மற்றும் வட்டாரக்கல்வி அலுவலகங்களில் காமராஜர்படத்தை அலங்கரித்து வைத்து, கல்வி வளர்ச்சி தினத்தை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் எனவும் கல்வித் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஐந்தாம் வகுப்பிற்கான அடிப்படை திறனறிதல் மதிப்பீட்டிற்கான காலக்கெடு நீட்டிப்பு

 ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான  வணக்கம்.


    ஐந்தாம் வகுப்பிற்கான அடிப்படை திறனறிதல் மதிப்பீட்டிற்கான காலக்கெடு 05.07.2023 அன்று முடிவடையிருந்த நிலையில் ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி வருகின்ற 10 ஆம் தேதி வரை  மதிப்பீட்டை மேற்கொள்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 


ஆகையால் வருகின்ற பத்தாம் தேதிக்குள் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் அடிப்படை திறனறிதல் மதிப்பீட்டை முடிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 


- TNSED



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News