அலகு விட்டு அலகு மாறுதல் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு...

 அலகு / துறை மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் தேதியினை கல்வி தகவல் மேலாண்மையில் ( EMIS online ) பதிவேற்றம் செய்ய ஏதுவாக 14.07.2023 வரை நீட்டித்து ஆணை வழங்கப்படுகிறது . கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கலாகிறது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கல்கி நினைவு அறக்கட்டளையின் கல்வி உதவித்தொகை அறிவிப்பு.

 


பிரபல எழுத்தாளர் அமரர் கல்கியின் பெயரில் இயங்கிவரும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை, ஒவ்வொரு வருடமும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.


2023-24-ம் கல்வியாண்டில் ரூ.15 லட்சம் பெறுமானமுள்ள உதவித்தொகை, அவரவர் தகுதிக்கு ஏற்பவழங்கப்பட உள்ளது. இந்த உதவித்தொகையை பெற, அரசு அங்கீகாரம் பெற்றுள்ள கல்வி நிலையத்தில் படிக்க வேண்டும். பிளஸ் 1,பிளஸ் 2, பாலிடெக்னிக், பட்ட மேற்படிப்பு ஆகிய வகுப்புகளில் ஏதேனும் ஒன்றில் பயில்பவராக இருக்கவேண்டும். கடைசியாக எழுதிய தேர்வில் குறைந்தபட்சம் 80 சதவீதம்(சராசரி) மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.kalkionline.com என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இம்மாதம் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் SMC Meeting - 14.07.2023 அன்று நடத்திட வழிகாட்டுதல்கள் வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டம் (SMC Meeting) - 14.07.2023 அன்று நடத்திட வழிகாட்டுதல்கள் வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் 


இணைப்பு : மாணவர் தகவல் படிவம், ITI / பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள், காணொளி QR Code 


School Management Committee meeting in all Government High and Higher Secondary Schools on 14.07.2023 - State Project Director's Proceedings - Download here 



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

6,7,8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் ஆசிரியர்களுக்கு- திறன்வளர்ப் பயிற்சி - SCERT Proceedings

 


6,7,8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் ஆசிரியர்களுக்கு- திறன்வளர்ப் பயிற்சி வழங்குதல் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் / விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்களை விடுவித்தல் பணிமனை ஏற்பாடு செய்தல் பணிமனைக்கான செலவினம் மேற்கொள்ளுதல் - தொடர்பாக SCERT Proceedings


 6th, 7th & 8th Std, Social Science - Training Proceedings - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 06.07.2023

  

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.07.23

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்:தீவினையச்சம்

குறள் :209

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.

விளக்கம்:

தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செய்யக்கூடாது

பழமொழி :
A penny saved is a penny gained

சிறு துளி பேரு வெள்ளம்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே ஊக்கமுடன் எனது வேலைகளை செய்வேன்.

 2. முயன்றால் பட்டாம்பூச்சி. இல்லாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

ஒரு போதும் மனம் தளர வேண்டாம் ஏனெனில், சரியான இடம் மற்றும் காலத்தில் எல்லாம் மாறிவிடும்”- ஹரியட் பீச்சர் ஸ்டோ


பொது அறிவு :

1. 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் யார்?


விடை: ஜவஹர்லால் நேரு.

2. 1761 இல் மராத்தியர்கள் முகலாயர்களை தோற்கடித்த போரின் பெயர் என்ன?


விடை: மூன்றாவது பானிபட் போர்.



English words & meanings :

 rectify -put right; correct the mistake made. verb. திருத்து
, சரிப்படுத்து. வினைச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :

உருளை கிழங்கு : வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும்.


நீதிக்கதை

கோபத்தின் கதை!

ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து

கொண்டே இருந்தது. 

ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும்

நிறைய ஆணிகளையும் கொடுத்தார். "இனிமேல் கோபம் வரும் போது எல்லாம்

வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்".

முதல்நாள் 10 ஆணி, மறுநாள் 7, பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது.

ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன். இனி கோபம் வராது என அவன் அப்பாவிடம்

கூறினான்.

இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார்.

45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான்.

உடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கிவிட்டாய், சுவற்றில் உள்ள ஒட்டைகளை

என்ன செய்வாய்?


உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும். அல்லவா?   எனவே இனி  ஒருபோதும் கோபம் கொள்ளாதே "என அப்பா கூற வாலிபன் ஏற்றுகொண்டான்.


இன்றைய செய்திகள் - 06.07. 2023

*கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு.

*தக்காளி மற்றும் இஞ்சி விலை கடும் உயர்வு.

*அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம்- இரண்டரை ஆண்டுகளில் 1.94 லட்சம் மாணவிகள் பயன். 

*சென்னை, 
அண்ணாசாலை, தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட சாலை ரூ. 621 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு. 

*இந்திய கிரிக்கெட் அணி தேர்வு குழு தலைவர் ஆனார் முன்னாள் 
ஆல்ரவுண்டர் அஜித் அகர்கர்.

*தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா அபார வெற்றி.
5க்கு 4 என்ற கோல் கணக்கில் குவைத் அணியை வீழ்த்தி ஒன்பதாவது முறையாக பட்டத்தை வென்றது.

Today's Headlines

*Flooding in Coimbatore Courtalam waterfall due to heavy rain.

 *Tomato and ginger prices have increased sharply.

 *Innovation Women Scheme which provides Rs.1000 to female students studying in government schools and pursuing higher education - 1.94 lakh female students benefited in two and a half years.

 *Rs 621 crore was allocated For Chennai,
 high level road between Annasalai, Thenampet and Saidapet.

 * All rounder Ajit Agarkar become Indian Cricket Team Selection Committee Chairman.

 *India won the South Asian Football Championship.
 Defeated Kuwait 5 to 4 ,to win the title for the nineth time.
 Prepared by

Covai women ICT_போதிமரம்



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

DEO Promotion - Eligible High & Hr Sec School HMs List - Published

 


2023-2024 ஆம் ஆண்டுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்ய ஏதுவாக , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்களின் அடிப்படையில் , மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கு விருப்பமின்மை தெரிவித்த அரசு உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் பெயர்களை தவிர்த்து , மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு பதவி உயர்வு / பணிமாறுதலில் செல்ல விருப்பம் தெரிவித்த தலைமையாசிரியர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெறத் தகுதியான தலைமையாசிரியர்களின் பட்டியல் இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது.

DEO Promotion - Eligible High & Hr Sec School HMs List_ For Verification - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஜூன் மாதத்திற்கான மாணவர் & ஆசிரியர் வருகை புரிந்த நாட்கள் தேதி வாரியாக (ATTENDANCE REGISTER)* டவுன்லோட் செய்வதற்கான வழிமுறை Direct Link!

 


🦋 ஜூன் மாதத்திற்கான மாணவர் & ஆசிரியர் வருகை புரிந்த நாட்கள் தேதி வாரியாக (ATTENDANCE REGISTER) டவுன்லோட் செய்வதற்கான வழிமுறை.


🌻 அதற்கான நேரடி லிங்க் Click here to download STUDENTS ATTENDANCE REGISTER


TEACHING STAFF ATTENDANCE REGISTER ஜூன் மாதத்திற்கான மாணவர் & ஆசிரியர் வருகை புரிந்த நாட்கள் தேதி வாரியாக (ATTENDANCE REGISTER) டவுன்லோட் செய்வதற்கான வழிமுறை.


https://emis.tnschools.gov.in/attendance-register/teacher_attendance



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Special SMC Meeting Circular 14.07.2023

 


அனைத்து அரசு தொடக்க 
நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

சூலை -2023 மாதம் நடைபெறவுள்ளப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 14.07.2023 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது.

SMC_PS&MS_Special Meeting Circular 14.07.2023 - Proceedings - Download here

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 05.07.2023

  

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.07.23


திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்:தீவினையச்சம்

குறள் :208

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.

விளக்கம்:

கேடு செய்தவரை கெடுதல் நிழல் போல் விலகாமல் தொடரும்.


பழமொழி :
A pen is mightier than a sword

கத்தி முனையைவிட பேனா முனை வலிமை வாய்ந்தது


இரண்டொழுக்க பண்புகள் :

1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே ஊக்கமுடன் எனது வேலைகளை செய்வேன்.

 2. முயன்றால் பட்டாம்பூச்சி. இல்லாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்.


பொன்மொழி :

ஆக்கபூர்வமான சிந்தனை, தடைகளை கடந்து, வலிகளை பொறுத்துக்கொண்டு, புதிய இலக்குகளை அடைவதற்கான மதிப்பு மிக்க கருவியாகும்”- ஆமி மோரின்


பொது அறிவு :

1. 1954 இல் இரண்டு முன்னாள் பிரெஞ்சு காலனிகளின் இணைப்பால் உருவாக்கப்பட்ட இந்திய மாநிலம் எது?

விடை: புதுச்சேரி.

2. கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய பெண் யார்?

விடை: சானியா மிர்சா.


English words & meanings :

 phonetics - science of speech sounds ஒலியியல்; quick sand - loose wet stand புதைமணல்


ஆரோக்ய வாழ்வு :

உருளை கிழங்கு : உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இது மிகவும் நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.


நீதிக்கதை

உயிர் இனங்களுக்குள் உதவி

  ஒரு காக்கையானது, தனக்கு ஒரு நட்பு இருந்தால், ஆபத்து வேளையில் உதவியாக இருக்குமே என்று கருதியது.

எலியிடம் சென்று நாம் இருவரும் நட்பாக இருப்போம் என்றது காக்கை

எலி அதை நம்பவில்லை, “என்னைக் கொத்தி தின்பதற்காகவே, என் நட்பை நீ விரும்புகிறாய்” என்று கூறி, புதருகுள் ஓடியது.

காக்கை பலவாறு எடுத்துக் கூறியது. பிறகு எலியும், காக்கையும் நட்புக் கொண்டன.

ஒரு நாள் காக்கை, ‘எலியே! சிறிது தொலைவில் உள்ள நதியில் எனக்கு நட்பான ஆமை ஒன்று உள்ளது, அங்கே சென்றால், இரை நிறையக் கிடைக்கும் பயமின்றி சிலநாட்கள் தங்கலாம் என்று கூறியது.

எலியும் அதற்குச் சம்மதித்தது. இரண்டும் ஆமையிடம் சென்றன.

அவற்றை மகிழ்ச்சியோடு வரவேற்று இரை அளித்தது ஆமை.

அப்போது, ஒரு வேடனுக்குப் பயந்து ஒரு மான் ஓடிவந்தது.

எலி, காக்கை, ஆமை மூன்றும் மானுக்கு அடைக்கலம் தந்து நட்போடு வாழ்ந்தன.

ஒரு நாள், வேடனின் வலையில் மான் அகப்பட்டுக் கொண்டது.

மரத்தின் மீது இருந்த காக்கை, அதைப் பார்த்ததும் உடனே ஆமையையும் எலியையும் கூட்டிக் கொண்டு போய் மானை விடுவித்தது.அந்தசமயம் வேடன் வந்தான். எலியும், மானும், காகமும் வேடனிடம் அகப்படாமல், தப்பி ஓடி விட்டன. ஆனால், ஆமையால் வேகமாக ஓட இயலாததால், வேடன் அதைப் பிடித்து கூடையில் போட்டு விட்டு, உணவு அருந்தச் சென்றான். ஆமை அகப்பட்டுக் கொண்டதை நினைத்து எலி, காகம், மான் மூன்றும் வருந்தின.

மானுக்கு ஒரு யோசனை தேன்றியது. அப்படியே செய்யலாம் என எலியும் காகமும் தீர்மானித்தன.

மான் செத்துப் போனது போல், படுத்துக் கொண்டது, அதன்மீது காக்கை அமர்ந்து தன் கண்ணைக் கொத்துவது போல் பாசாங்கு செய்தது.

மான் செத்துக் கிடப்பதாக வேடன் நினைத்து ஆமையிருந்த கூடையை அப்படியே போட்டு விட்டு, மான் கிடந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

இதுவே நல்ல சமயம் என்று நினைத்த ஆமை, அருகில் இருந்த நதிக்குள் குதித்து மறைந்தது.

ஆமை தப்பியதைக் கண்ட மான், விர்ரென்று பாய்ந்து ஓடிவிட்டது.

காக்கை பறந்து மரத்தின்மீது அமர்ந்தது. எலி தூரத்தில் நின்று பார்த்து மகிழ்ந்தது.

ஆமையும், மானும் ஏமாற்றியதை எண்ணி வேடன் வருத்தத்தோடு வீட்டுக்குத் திரும்பினான்.


பிறகு, அந்த ஜீவன்களும் ஒன்றுக்கொன்று உதவியாக இருந்து வாழ்ந்தன.


இன்றைய செய்திகள் - 05.07. 2023

*மின்னணு ஏற்றுமதியில் தமிழகத்துக்கு முதலிடம்- முதல்வர்  மு. க. ஸ்டாலின்.

*ரூ.404 கோடியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

*பாதுகாப்புப் பணிகளின் போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக் கூடாது என டிஜிபி அறிவுறுத்தல்.

*ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சாய் ஹிரா உலகளாவிய மாநாட்டு மைய கட்டிடத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் பிரதமர் மோடி. 

*ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி 2023 ஏற்பாடுகள் தீவிரம்.

*10வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Today's Headlines

Tamil Nadu is the first in electronics exports - Chief Minister M.K.  Stalin.

 *Tamil Nadu Government issued ordinance to expand Chief Minister's breakfast program at Rs.404 crore.

 *DGP instructed that no guard should use cell phone during security operations.

 *Prime Minister Modi inaugurated the Sai Hira Global Conference Center building in Puttaparthi, Andhra Pradesh through video presentation.

 *Asia Champions Cup Hockey 2023 preparations are in full swing.

 *The 10th Pro Kabaddi League is been scheduled to be held in November and December in India.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Bus Pass Application Module in TNSED Schools App

 

Bus Pass Application Module in TNSED Schools App


அனைத்து வகை அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பாசிரியர்களுக்கு. வணக்கம்!!!_ 


📌 வகுப்பு ஆசிரியர்கள் , தங்கள் வகுப்பில், பஸ் பாஸ் பெற வேண்டிய மாணவர்களின் விவரத்தினை TNSED Schools App - Class Teacher's Login-இல்  Schemes Module- இல் Bus Pass Option-இல்  உடன் பதிவேற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில், பஸ் பாஸ் பெற வேண்டி வகுப்பு வாரியாக விண்ணப்பித்த மாணவர்களின் விவரத்தினை TNSED Schools App -  HM Personal Login-இல் Schemes Module- இல் Approval option select செய்து அதில் Bus Pass Option-இல் அனைவருக்கும் Approve செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


குறிப்பு:

_தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியின் வகுப்பு ஆசிரியர்களுக்கு இத்தகவலை பகிரவும். நன்றி!_



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

4,5 வகுப்பு ஆசிரியர்களுக்கான CRC பயிற்சி தேதி மாற்றம்!

 


4,5 வகுப்புகளுக்கான CRC 15.07.2023 க்கு பதிலாக 22.07.2023 க்கு மாற்றப்பட்டுள்ளது.


spd proceedings pdf - Download here



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசுப் பணிகளில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை: அரசாணை வெளியீடு!

 தமிழ்நாடு அரசுப் பணிகளில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமைக்கான சான்றிதழ் வழங்குவது தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ளது. 


கரோனா தொற்றுக்கு பெற்றோர் இரண்டு பேரையும் இழந்தவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசாணையாக தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ளது. 


அரசாணையில், அரசுப் பணிகளில் முதல் தலைமுறை பட்டதாரிகள், கரோனா தொற்றுக்கு பெற்றோர் இருவரையும் இழந்து தேர்ச்சி பெற்றவர்கள்,  தமிழ்நாடு அரசுப் பள்ளியில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை மற்றும் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவதற்கான விளக்கமான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Cheif Minister Breakfast Scheme @ 2023 - காலை உணவுத்திட்ட விரிவாக்கத்துக்கு நிதி ஒதுக்கீடு.

 

பள்ளிகளில் காலை உணவு திட்ட விரிவாக்கத்திற்காக ரூ.404 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிக் கூடங்களில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் பள்ளி வேலை நாட்களில் அரசு பட்டியலிட்டுள்ள சிற்றுண்டிகளில் ஏதாவது ஒன்றை வழங்க வேண்டும். குறைந்தது 2 நாட்களாவது அந்த பகுதியில் விளையும் சிறுதானியங்களின் அடிப்படையிலான உணவை வழங்க வேண்டும் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் ஏற்பட்டுள்ள நல்ல பயன்களை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும் என கடந்த ஜனவரியில் முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் முதல் மற்றும் 2ம் கட்டத்தின் மூலம் பயன் அடைந்த மாணவர்களின் வருகை மற்றும் உணவு உட்கொள்பவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் விரிவுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம் நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் செயல்படும் 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.404 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தமிழ்நாடு அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

KV பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் பால்வாடிகா III அறிமுகம்.

 We are delighted to announce that Balvatika III ( Similar to UKG ) is introduced in our school with effect from this Academic year 2023-24 . Please visit the school website thanjavurafs.kvs.ac.in or school notice board for eligibility criteria like age , and schedule of admission process.

இந்த கல்வியாண்டு : 2023-24 முதல் பால்வாடிகா III ( யுகேஜி போன்றது ) எங்கள் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் . வயது மற்றும் சேர்க்கை செயல்முறை அட்டவணை போன்ற தகுதி அளவுகோல்களுக்கு , பள்ளி இணையதளம் thanjavurafs.kvs.ac.in அல்லது பள்ளி அறிவிப்பு பலகையைப்பார்வையிடவும் . PRINCIPAL


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News