மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு Bonafide Certificate வழங்குதல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம்!

 

மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு Bonafide Certificate வழங்குதல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம்!


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஓய்வு பெறும் CEO / DEO பணியிடத்திற்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 


30.06.2023 அன்று ஓய்வு பெறும் CEO / DEO பணியிடத்திற்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


CEO - DEO - Retirement June 2023 - Incharge Order - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

 

அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!


DSE - GHS HM Mentor Training Proceedings - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

 

அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!


DSE - GHSS HM Mentor Training - Proceeding - Download here




Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Diary - July 2023

 

2023-2024 கல்வி ஆண்டு 2023 ஜூலை மாதம்

ஆசிரியர் டைரி


01.07.2023- சனிக்கிழமை

BEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்


03.07.2023- திங்கள் கிழமை


(03.07.2023-30.07.2023)

பள்ளி மேலாண்மை குழு பயிற்சி


03.07.2023-08.07.2023 தொல்லியல் பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்


08.07.2023- சனிக்கிழமை

CRC-எண்ணும் எழுத்தும்- தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி

(1-3வகுப்பு ஆசிரியர்கள்)

&DEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்


15.07.2023- சனிக்கிழமை

காமராஜர் பிறந்த நாள்

கல்வி வளர்ச்சி நாள்

&

CRC-எண்ணும் எழுத்தும்- தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி*

(4-5 வகுப்பு ஆசிரியர்கள்)

&

CEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்


17.07.2023 to 22.07.2023 -திங்கள் முதல் சனி வரை

தொல்லியல் பயிற்சி

(தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்)


19.07.2023 to 20.07.2023 - புதன் மற்றும் வியாழன் வரை

*சுற்றுச்சூழல் மன்ற ஆசிரியர்கள்


20.07.2023- வியாழக்கிழமை

இஸ்லாமியர்(ஹிஜிரி) புத்தாண்டு -(RL)


24.07.2023-31.07.2023 திங்கள் முதல் திங்கள் வரை 

ஆங்கில ஒலிப்பு பயிற்சி

ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்கள்


25.07.2023-27.07.2023

மதிப்பீட்டுப் பயிலரங்கம்

25.07.2023 : 6-8 வகுப்பு ஆங்கில ஆசிரியர்கள்


26.07.2023 : 6-8 வகுப்பு கணக்கு ஆசிரியர்கள்


26.07.2023 : 6-8 வகுப்பு அறிவியல், சமூக அறிவியல் ஆசிரியர்கள்


29.07.2023- சனிக்கிழமை

மொகரம்-அரசு விடுமுறை

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Primary Teachers CRC Training - July 2023 - SCERT Proceedings

 1,2,3 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு 08/07/23 அன்றும் 4,5 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு 15/07/23 அன்றும் CRC பயிற்சி.

CRC Meeting State Level & District Level RPs Training Proceedings - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஜூலை-15 பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்... கல்வி எழுச்சி நாளாக கொண்டாடுவதா?... அன்று CRC கூட்டத்திற்கு செல்வதா?

 

ஜூலை-15 பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்... கல்வி எழுச்சி நாளாக கொண்டாடுவதா?... அன்று CRC கூட்டத்திற்கு செல்வதா?.

AIFETO..29.06.2023 கடிதம்...

தமிழக ஆசிரியர் கூட்டணி

அரசு அறிந்தேற்பு எண்: 36/2001


மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்...


 பள்ளிக்கல்வி ஆணையர் பதவி இருந்த காலத்திலும், பள்ளிக்கல்வி ஆணையர் பதவி விடுவிக்கப்பட்டதற்குப் பிறகும் மாநில கல்வியியல்  ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் (SCERT) பள்ளிக் கல்வித்துறையின்  மீது தொடர்ந்து அதிருப்தியினை ஏற்படுத்தும் அளவிற்கு மாநில கல்வியியல்  ஆராய்ச்சி மற்றும் பயிற்சி  இயக்ககத்தின் (SCERT) செயல்பாடுகள் அமைந்து வருகிறது.


 தலைவர் கலைஞர் அவர்களின் அரசு வெளியிட்ட அரசாணைக்கிணங்க ஜூலை-15 பெருந்தலைவர் காமராஜர்  பிறந்த நாளினை கல்வி எழுச்சி நாளாக பள்ளிகள் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று மாநில கல்வியியல்  ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரின் சார்பில் 4,5 வகுப்புகளுக்கு குறுவளமைய கூட்ட பயிற்சி (CRC) கூட்டத்தினை ஜூலை 15ஆம் தேதி நடைபெற இருப்பதாக முறைப்படி அறிவித்திருக்கிறார்கள். ஜூலை 15ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் என்று இயக்ககத்தின் நினைவுக்கு வரவில்லையா?...


எண்ணும் எழுத்தும் கல்வித் திட்டத்தை நான்கு, ஐந்து வகுப்பு மாணவர்களுக்கு பிடிவாதமாக அமல்படுத்தி இருப்பதன் மூலம் பெற்றோர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி ஏற்பட்டு வருகிறது. பாடப் புத்தகம் இல்லாத கல்விமுறை வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை.


அதேபோல் குருவளமைய (CRC) அளவில் நடைபெறும் பயிற்சி கூட்டத்தினை CPD கூட்டமாக நடத்தி புதிய கல்விக் கொள்கையை  அமல்படுத்துவதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.


தொடர்ந்து விமர்சனத்திற்கு உட்பட்ட இயக்கமாக மாணவர்களின் கல்வி நலனை பாதிக்க கூடிய வகையில் பள்ளிகளில் கற்பிக்கக் கூடிய ஆசிரியர்களுடைய கருத்தினை கேட்டு பதிவு செய்யாமல் இவர்களுடன் இருக்கின்ற ஒரு குழுவினரை மட்டும் வைத்து கொள்கை அளவில் முடிவு எடுப்பதாலும்  விளம்பரத்தின் மூலம் திட்டத்திற்கு அமோக ஆதரவு இருப்பது போல் பறைசாற்றுவதும் நடைமுறையில்  இருந்து வருகிறது.


மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் இயக்கத்தின் செயல்பாடுகளை கண்காணித்து நெறிப்படுத்துமாறு பெற்ற அனுபவங்களின் மூலம் வேண்டுகோளாக முன் வைக்கிறோம்.


வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர். AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), ஆர்வலர் மாளிகை, 52,நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கால்நடை மருத்துவ படிப்பு விண்ணப்பிக்க இன்றே கடைசி

 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில் உள்ள, கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு மற்றும் பி.டெக்., படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.


பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, https://adm.tanuvas.ac.inஎன்ற இணையதளத்தில் கடந்த 12ம் தேதி துவங்கியது.


இதுவரை, 21,000க்கும் மேற்பட்டோர், இணையவழியே விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளிகள் தோறும் வாசிப்போர் மன்றம்

 

தலைமை செயலர் இறையன்பு, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவொளிக்கு எழுதிய கடிதம்:


மாணவர்கள் மின்னணு உபகரணங்களை பயன்படுத்தி அதிகமாக வாசிப்பதால், புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், பொது அறிவு தொடர்பான செய்திகள், அவர்களுக்கு அதிகமாக தெரிவதில்லை.


வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த, ஒவ்வொரு பள்ளியிலும் வாசிப்போர் மன்றம் ஏற்படுத்தலாம். அதில், மாதந்தோறும், மாணவர்கள் தாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றி பேச வாய்ப்பு வழங்கலாம்.


இவ்வாறு செய்தால், வாசிப்பது மட்டுமின்றி, தகவல் தொடர்பிலும் மாணவர்கள் சிறந்து விளங்க சாத்தியக்கூறுகள் ஏற்படும். சிறந்த முறையில் நுாலை மதிப்புரை செய்கிற மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்குவதோடு, பங்கேற்கும் மாணவர்களுக்கு நல்ல புத்தகங்கள் கொடுத்து ஊக்கப்படுத்தலாம்.


இது, அவர்களிடம் சமூகம் தொடர்பான சிந்தனைகளையும், ஆக்கப்பூர்வமான விழுமியங்களையும் ஏற்படுத்தும் என்பதால், இதை விரிவாக செய்யவும்.

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 3 வகையான உடல்நலப் பரிசோதனைகள்

 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 3 வகையான உடல்நலப் பரிசோதனைகள் 


(3 Types of Health Checkups for Government School Students)..




Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை எனில் பெற்றோர்களுக்கு SMS

 அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை எனில் அவர்களின் பெற்றோர்களின் மொபைல் எண்ணிக்கு பள்ளிக் கல்வித் துறை மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 30.06.2023

  

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.06.23

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்:தீவினையச்சம்

குறள் :204

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.

விளக்கம்:

மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் அறக்கடவுளே எண்ணியவர்க்கு தீமையைத் தர எண்ணும்.


பழமொழி :
  A little stream will run a light mill

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1 .அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.


2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்


பொன்மொழி :

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.. தந்தை பெரியார்


பொது அறிவு :

1. மிகப் பெரிய மலர் எது? 

விடை: ரஃப்லேசியா அர்னால்டி 

2. மின் விளக்கின் உலோக இழை எதனால் ஆனது? 

விடை: டங்ஸ்டன்


English words & meanings :

 highway - a public road நெடுஞ்சாலை; impress - fix deeply in the mind மனத்தில் பதிய வை


ஆரோக்ய வாழ்வு :

பேரிச்சை பழத்தில் இருக்கும் மெக்னீசியம் கை, கால் பகுதிகளில் உண்டாகும் வீக்கத்தை குறைக்கும் தன்மை உடையது


ஜூன் 30 இன்று

மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ்  அவர்களின் பிறந்த நாள்

மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ் II (மைக்கல் பிரெட் பெல்ப்சு II) (Michael Fred Phelps II, பி ஜூன் 30, 1985, பால்ட்டிமோர், மேரிலன்ட்) பல நீச்சல் வகைகளில் உலக சாதனைகளைப் படைத்த அமெரிக்க நீச்சல் வீரர் ஆவார். 28 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்ற ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக தங்கப் பதக்கம் பெற்றவர் ஆவார்.


நீதிக்கதை

நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன. மெலிதாய்காற்று வீசிக்கொண்டு இருந்தது..!!"

காற்றை கண்டதும்...

'அமைதி' என்ற முதல் மெழுகுவர்த்தி ஐயோ காற்று வீசுகின்றது. நான் அணைந்து விடுவேன் என்று பலவீனமாக சொன்னது. காற்று பட்டதும் அணைந்துவிட்டது.

 "அன்பு '' என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாது' என்று அணைந்துவிட்டது. 

''அறிவு '' என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாமல் அணைந்தது.

நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று வீசிய சிலநொடிகள் போராடி ஜெயித்துவிட்டது. அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான். "அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே' என்று கவலையுடன் சொன்னான்.

அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது, 'வருத்தப்படாதே நான் இருக்கின்றேன். என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற வைத்துகொள்' என்றது.

சிறுவன் உடனே  நான்காவது மெழுகுவர்த்தியை பார்த்து உன்பெயர் என்ன.?”என்று கேட்டான்.. 'நம்பிக்கை' என்றது அந்த மெழுகுவர்த்தி.


நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாது...!


இன்றைய செய்திகள் - 30.06. 2023

*தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவ் தாஸ் மீனா நியமனம். தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு ஓய்வு பெறுவதை அடுத்து அறிவிப்பு.

*தமிழக டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் நியமனம்.

*சென்னையில் ட்ரோன்கள் மூலம் முக்கிய இடங்களை கண்காணிக்கும் காவல்துறையின் டிரோன் யூனிட் பிரிவை துவங்கி வைத்தார் டி.ஜி.பி சைலேந்திரபாபு.  

*கோவை ஆர்.எஸ்.புரம் அடுத்த தடாகம் சாலையில் அரை நூற்றாண்டை கடந்த நூலகம் மூடப்படுவதையொட்டி சலுகை விலையில் விற்கப்படும் புத்தகங்கள்.

*குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்துத் தர தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு கடிதம் எழுதிய ஆறாம் வகுப்பு மாணவன். இறையன்பு, மாணவனை நேரில் அழைத்து திருக்குறள் புத்தகம் மற்றும் பேனா பரிசளித்து வாழ்த்தினார்.

*ஸ்டீவ் ஸ்மித் சதம்: 
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் குவிப்பு.

Today's Headlines

* Shiv Das Meena was appointed as the new Chief Secretary of Tamil Nadu.  The announcement follows the retirement of Iraiyanbu, Chief Secretary.

 * Shankar Jiwal was appointed as Tamilnadu DGP.

 *DGP Shailendrababu started the drone unit of the police to monitor important places through drones in Chennai.

 *Books sold at concessional prices due to the closure of the half-century-old library on Thadakam Road next to RS Puram, Coimbatore.

 *Sixth standard student who wrote a letter to the Chief Secretary Iraiyanbu to repair the damaged road.  He called the student in person and congratulated him by gifting him a Thirukural book and a pen.

 *Steve Smith's century:
 Australia scored 416 runs in the first innings.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

TNSED PARENTS APP NEW UPDATE VERSION Version 0.0.11 - 27.6.23

 


TNSED PARENTS APP NEW UPDATE VERSION Version 0.0.11 - 27.6.23

What's new

Displaying of to be admitted and 10th absence list


TNSED PARENTS APP NEW VERSION 0.0.11 UPDATE LINK


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

"வீட்டுக்கொரு விஞ்ஞானி 2023" நிகழ்ச்சியில் ஆர்வமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதி - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 புதிய தலைமுறை என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தால் , " வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2023 " நிகழ்ச்சியினை வழங்கி வருவதாகவும் , மனிதகுலத்தின் நலனுக்காக புதுமையும் எளிமையும் இணைந்த புதுப்புது கருவிகளைக் கண்டுபிடிக்கும் புதிய விஞ்ஞானிகளையும் அவர்களது கண்டுபிடிப்புகளையும் கௌரவிப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அறிமுகப்படுத்தி மேலும் , தமிழகத்தில் உள்ள மாணவர்களில் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குகிற நாளைய விஞ்ஞானிகளையும் அவர்களது கண்டுபிடிப்புகளையும் உலகிற்கு அறிவிக்கின்ற உன்னத மேடை " வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2023 " நிகழ்ச்சி , இந்த நிகழ்ச்சியை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் தோறும் நடத்த இருப்பதாகவும் இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு , அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களும் பங்கேற்க உரிய அனுமதி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.


 எனவே , மேற்படி நிகழ்ச்சியில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு , அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களின் கல்வி நலன் பாதிக்கப்படாத வகையில் பங்கு பெற தேவையான ஒத்துழைப்பினை தலைமை ஆசிரியர் வாயிலாக அளித்து உதவிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Unit To Unit Transfer Counselling Instructions - Dir Proceedings

 


ஆசிரியருக்கான பணி மாறுதல் அலகு விட்டு அலகு மாறுதல் வேறு துறைக்கு மாறுதல் கோரும் ஆசிரியர்கள்  EMIS  வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள் அறிவுரை.


Unit trsfr counselling instructions - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Ennum Ezhuthum - 1,2,3 Std - Term 1 - Module 3 Lesson Plan

 

Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024

Term 1 Lesson Plan

June 2023


Ennum Ezhuthum - 1,2,3 Std -  Term 1 - Module 3 Lesson Plan - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

EE|எண்ணும் ,எழுத்தும் ENNAI SUTRI|என்னை சுற்றி MAT| TERM 1|STD 1,2,3|வகுப்பு 1,2,3|KALVI TV|

EE|எண்ணும் ,எழுத்தும் ENNAI SUTRI|என்னை சுற்றி MAT| TERM 1|STD 1,2,3|வகுப்பு 1,2,3|KALVI TV| 

வாழ்க்கை தொடர்புடைய செயல்கள் மாணவர்களின் புரிதல் மேம்பாடடைய ஆசிரியரின் விளையாட்டு முறை கற்பித்தல், மாணவர்களே புரிந்து கற்றலுக்கு வழிகாட்டுகிறது என்பதனை ஆசிரியர் செயல்பாட்டு கல்வியாக தருகிறார்.





Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

EE| ENG T1 MOD 2 |STD 1,2,3|kalvi tv|

 

EE| ENG T1 MOD 2 |STD 1,2,3|kalvi tv|

In this activity students can learn the names of house hold things.






Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

EE| எண்ணும் ,எழுத்தும்|IENAI SEARPOM |இணை சேர்ப்போம் | வகுப்பு 1,2,3|STD 1,2,3|KALVI TV.|

 EE| எண்ணும் ,எழுத்தும்|IENAI SEARPOM |இணை சேர்ப்போம் | வகுப்பு 1,2,3|STD 1,2,3|KALVI TV.|

மாணவர் உற்றுக் கவனித்தலை மேம்படுத்த சைகைகள், படங்கள் வழியாக செயல்பாடுகள் வழங்கி ஆர்வத்தினை தூண்டுதல். சிக்கல்களுக்கு மாணவர்களே தீர்வு காண வைத்தல், ஆராய்வு ஊக்கத்தினை மேம்படுத்துதல் பற்றி ஆசிரியர் தெளிவாக விவரிக்கிறார்




EE|VADIVANGALAIYUM URUVANGALAIYUM ARITHAL|எண்ணும் எழுத்தும்|MAT|TERM1|STD1,2,3|வகுப்பு1,2,3|KALVITV|

 EE|VADIVANGALAIYUM URUVANGALAIYUM ARITHAL|எண்ணும் எழுத்தும்|MAT|TERM1|STD1,2,3|வகுப்பு1,2,3|KALVITV|

வடிவங்களையும்,உருவங்களையும் அறிவோம் பாடல்வழியாக பாடத்தலைப்பினை மாணவர்களே உணர்ந்து கொள்ளசெய்தல்.ஆர்வமுடன் பங்கேற்கும் வகையில் வடிவங்களை மாணவர்களே வரைய தூண்டுதல்.மாணவர்களை அதைப்பற்றி விரிவாகஎடுத்துக்கூற வைத்து பாராட்டும், பரிசும் வழங்கி ஊக்குவித்தல். மாணவர்களுக்கு கவனச்சிதைவு ஏற்படாதவண்ணம் கற்றலை சிறப்புற அமைப்பது பற்றிஆசிரியர் விவரிக்கிறார்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

'நீட்’ தேர்ச்சி பெற்றவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

 எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று தொடங்குகிறது.


தமிழகத்தில் கடந்த ஆண்டு நிலவரப்படி 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,175 எம்பிபிஎஸ் இடங்கள், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, எஞ்சிய இடங்கள் மாநில அரசுக்கு இருக்கிறது. அதேபோல், 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்பிபிஎஸ் இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 பிடிஎஸ் இடங்களில் 1,254 இடங்களும் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 569 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் எஞ்சியுள்ள இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்.


அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தி வருகிறது.


இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2023-24 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று (ஜூன் 28) தொடங்குகிறது. இன்று காலை 10 மணி முதல் ஜூலை 10-ம் தேதி மாலை 5 மணி வரை www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நேற்று தெரிவித்துள்ளது. நீட் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, கலந்தாய்வு ஜூலை 3-வது வாரத்தில் தொடங்கும். சிறப்பு பிரிவினர் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு நேரடியாகவும், பொதுக்கலந்தாய்வு ஆன்லைனிலும் நடைபெற உள்ளது.


நீட் தேர்வில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மொத்தம் 10,385 இடங்கள் உள்ள நிலையில், ஒரு இடத்துக்கு 7 பேர் போட்டியில் உள்ளனர்.



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News