பதவி உயர்விற்கு TET கட்டாயமா? RTE சட்டமும் NCTE ஆணைகளும் சொல்வதென்ன? அரசும் ஆசிரிய இயக்கங்களும் செய்ய வேண்டியது என்ன?

 

14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான கல்வி பெறும் உரிமையை வலியுறுத்தி Right of Children to Free and Compulsory Education Act 2009 (RTE Act 2009) 27.08.2009ல் வெளியானது. இதன் பிரிவு 23(1)ன்படி 1 - 8ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தகுதி இருக்க வேண்டும் என்றது.


மேலும், காலிப்பணியிடம் உருவான 6 மாத காலத்திற்குள் நிரப்பப்பட வேண்டும் என்றும், மாணவர் ஆசிரியர் விகிதம் 30:1 (VI - VIII 35:1) என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என்றும் சட்டமானது.


அதன்பின்னர், இச்சட்டத்திற்கான தெளிவுபடுத்தல்கள் / திருத்தங்கள் என இதுவரை 6 அறிவிப்பாணைகளை NCTE எனும் National Council for Teacher Education வெளியிட்டுள்ளது. அவற்றில்தான் TET, Minimum Qualifications, Recruiting & Promotion தொடர்பான மாற்றங்கள் பல்வேறு காலகட்டங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் மிக முக்கிய மாற்றங்களை மட்டும் பருந்துப் பார்வையில் இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.


23.08.2010ல் வெளியான NCTE-ன் (National Council for Teacher Education) அறிவிப்பாணை குறைந்தபட்ச அடிப்படைத் தகுதியானது பின்வருமாறு இருக்க வேண்டும் என்றது.

I - V :

Senior Secondary (H.Sc) + D.T.Ed., & TET PASS

VI - VIII

B.A., B.Sc., + D.T.Ed., & TET PASS

B.A., B.Sc., + B.Ed., & TET PASS


== == == == == == ==


NCTE 11.02.2011ல் TET தேர்வை நடத்துவதற்கான வழிமுறைகளை வெளியிட்டது. அதன்படி 60% (90/150) மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி. ஒருமுறை தேர்ச்சி பெற்றால் 7 ஆண்டுகள் வரை செல்லத்தக்கது. ஆண்டிற்கு ஒருமுறையாவது TET தேர்வு நடத்தப்பட வேண்டும்.


== == == == == == ==


29.07.2011ல் வெளியான NCTE-ன் அறிவிப்பாணை குறைந்தபட்ச அடிப்படைத் தகுதியானது பின்வருமாறு இருக்க வேண்டும் என்று கல்வித் தகுதியில் சற்றே திருத்தம் செய்தது.

I - V :

Senior Secondary (H.Sc) + D.T.Ed., & TET PASS

Graduation + D.T.Ed., & TET PASS

VI - VIII

Graduation + D.T.Ed., & TET PASS

Graduation + B.Ed., & TET PASS


மேலும், ST / SC / OBC & மாற்றுத்திறனாளிகளுக்கு 5% மதிப்பெண் தளர்வும் அளித்தது.


[இந்த அறிவிப்பாணை வெளிவந்த தேதிதான் இறுதியாகத் தீர்ப்பு வந்த (WA. No. 313 of 2022 etc batch IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED.02.06.2023) TET Promotion வழக்கில் தகுதி நாளாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.]


== == == == == == ==


NCTE 12.11.2014ல் அரசு / நிதியுதவி / பகுதி நிதியுதவி / தனியார் பள்ளிகளில் Pre-primary, Primary, Upper Primary, Secondary & Senior Secondary ஆசிரியர்களின் பணி நியமனத்திற்கான குறைந்தபட்சத் தகுதிகளை வரையறுத்து NCTE Teacher Education Regulations 2014ஐ வெளியிட்டது.


அதில்தான் முதன்முறையாக பதவி உயர்வுகள் தொடர்பாக For promotion of the teachers the relevant minimum qualification are specified in the First and Second schedules are applicable for consideration  from one level to the next level என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஆசிரியர்களுக்கான பதவி உயர்வில் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு பரிசீலிக்க முதல் மற்றும் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச தகுதிகள்  பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இதில் First schedule என்பது பொதுவான ஆசிரியர்களுக்கும், Second schedule என்பது உடற்கல்வி ஆசிரியர்களுக்குமான அட்டவணையாகும்.


முதல் (schedule) அட்டவணையில் Level 1 & 2 என்பது Pre-Primary / Nursery / KG. இதற்கான கல்வித் தகுதி Hsc., + 2year D.E.C.Ed., / B.Ed., (Nursery)


Level 3-க்கு (Primary / Upper Primary. : I - VIII) RTE Act படியான குறைந்தபட்ச தகுதிகள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் Level 3-க்கான குறைந்தபட்ச தகுதிகளில் எவ்விதத் தளர்வும் அளிக்க இயலாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Level 4 என்பது IX - X வகுப்புகள். இதன்மூலம் பட்டதாரிப் பணியிடங்கள் VI - VIII மற்றும் IX - X என்று இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது.


Level 5 என்பது XI - XII வகுப்புகள்.


== == == == == == ==


28.06.2018ல் B.Ed தகுதியுள்ளோரை தொடக்கப்பள்ளி ஆசிரியராக நியமித்துக் கொள்ளலாம் என்றும் மேலும் அன்னார் 2 ஆண்டுகளுக்குள் ஆறுமாத தொடக்கக் கல்விப் பயிற்சியை (Bridge Course) முடிக்க வேண்டும் என்றும் NCTE அறிவிக்கை வெளியிட்டது.


== == == == == == ==


NCTE 09.06.2021ல் TET தேர்வு தேர்ச்சிச் சான்றினை 7 ஆண்டுகள் வரை என்பதிலிருந்து வாழ்நாள் முழுமையும்  செல்லத்தக்கது என்று திருத்தம் செய்து அறிவித்தது.


== ==~== ==~== ==


மேலே குறிப்பிட்டுள்ள சட்டம் & அறிவிப்பாணைகளின் வழி நாம் பின்வரும் புரிதலுக்குள் வரலாம். . . .


RTE ACT குறிப்பிடும் TET தேர்வு என்பது I - VII கற்பிக்கும் ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கானதே.


பதவி உயர்வைப் பொறுத்தவரை 12.11.2014ல் வெளியான அறிவிப்பாணைப்படி ஒருநிலையில் இருந்து அடுத்த நிலைக்குச் செல்லும் போது மட்டுமே தற்போது இருக்கும் நிலைக்கான குறைந்தபட்ச தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.


தொடக்க & நடுநிலைப் பள்ளிகள் ஒரே நிலையில்தான் உள்ளது என்பதாலும், ஒரே நிலைக்குள்ளான பதவி உயர்வுகளுக்கு எவ்வித வரையறையையும் RTE ACT & NCTE வகுக்கவில்லை என்பதாலும், P-HM, BT & M-HM பதவி உயர்வுகளுக்கு தற்போதைய நிலையில் TET அவசியமில்லை.


ஆனால், இந்தக் காரணத்தை மட்டும் முன்வைத்து எதிர் வழக்காடுவதால் தீர்வு கிட்டிவிடாது. தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்வதோ, டிட்டோஜாக் அதனுடன் இணைந்து வழக்காடுவதோ குறிப்பிட்ட ஒரு வழக்கை மட்டும் முன்வைத்து நடக்குமெனில், அடுத்தடுத்த வழக்குகள் இச்சிக்கலை கன்னித்தீவு கதையாக்கிவிடும். எனவே, மேல்முறையீடு செய்வதற்குமுன் அரசு ஒரு தெளிவான கொள்கை முடிவை வெளியிட வேண்டும். அதனை முன்வைத்து TET பதவி உயர்வு தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து வழக்காட வேண்டும்.


NCTE படியான அடிப்படைத் தகுதிகளைப் பொருட்படுத்தாத மாநிலங்களால் தான் தகுதித்தேர்வே கட்டாயமானது.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 100% NCTEன் கட்டமைப்பின் படியே ஆசிரியர் கல்விப் பயிற்சி நிறுவனங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இருந்தும் தற்போது தீர்ப்பான வழக்கில் TET எழுதாத ஆசிரியர்களை ஆசிரியர்களே அல்ல என்றும், அவர்கள் பதவி உயர்விற்குத் தகுதியே இல்லாதவர்கள் என்றும் எதிர்த்தரப்பு வாதிட்டு வழக்காடு மன்றத்தையும் ஓரளவு ஏற்க வைத்துள்ளது. இதுபோன்ற வாதங்கள் எதிர்காலத்திலும் தவிர்க்கப்பட வேண்டுமென்றால் தமிழ்நாடு அரசு ஆசிரியர் நியமனங்களில் RTE ACT-ஐ முன்வைத்து தெளிவான உறுதியான கொள்கை முடிவை எடுத்தாக வேண்டும்.


தமிழ்நாடு அரசு தனது கொள்கை முடிவாக, "தொடக்கக் கல்வித்துறையில் NCTE வழிமுறைகளின் படி தகுதிவாய்ந்த பாடத்திட்டம் & தேர்வுமுறைகள் மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களாக 29.07.2011-ற்கு முன் நியமிக்கப்பட்டனர் என்பதால் அவர்களது பணி நியமனத்திற்கான அடிப்படைத் தகுதியில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளவில்லை; அவர்கள் அடுத்தடுத்த ஊட்டுப் பதவி உயர்வுகளை அடையத் தகுதிவாய்ந்தவர்களே; அதன்பின்னர் RTE ACT & NCTE வழிகாட்டல் படி SGT பணியிடம் TET மூலம் நேரடியாக நிரப்பப்பட்டு வருகிறது; BT பணியிடம் பதவி உயர்வின் வழி நிரப்பப்படாத சூழலில் மட்டுமே TET மூலம் நேரடியாக நிரப்பப்படும்; P-HM & M-HM பணியிடங்கள் கற்பித்தலுடன் கூடிய நிருவாகப் பணியிடங்கள்; நிருவாகப் பணியிடங்கள் 100% பதவி உயர்வின் வழி மட்டுமே நிரப்பப்படும்; பதவி உயர்வுப் பணியிடங்களுக்கான முன்னுரிமைப் பட்டியலில் 29.07.2011-ற்கு முன் பணியேற்ற SGT / BTகளுக்கு பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் இடம்பெறுவர்; அதற்குப் பின் பணியேற்ற SGT / BTகள் TET PASS தகுதியுடன் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெறுவர்" என்று சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு  அறிவிக்கலாம்.


பள்ளிக் கல்வித்துறையைப் பொறுத்தவரை NCTE நடைமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து BT & PG பணியிடங்களும் 29.07.2011 முன்னர் TRB போட்டித் தேர்வின் வழியாக மட்டுமே நிரப்பப்பட்டன என்பதால் ஆசிரியர்களுக்கான அடிப்படைத் தகுதியில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை; 29.07.2011க்குப் பின்னர் TET தேர்வின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்; காலிப்பணியிடங்களுக்கு மாற்று அலகில் இருந்து மாறுதலில் வரும் BT அந்த அலகிற்கான அடிப்படைத் தகுதியுடன் மட்டுமே நியமிக்கப்படுவர்; இதர BT காலிப்பணியிடங்கள் TET தேர்வின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்படும்; PG பணியிடம் TRB போட்டித் தேர்வின் வழி நியமிக்கப்படும்; HS-HM & HSS-HM பணியிடங்கள் கற்பித்தலுடன் கூடிய நிருவாகப் பணியிடங்கள்; நிருவாகப் பணியிடங்கள் 100% பதவி உயர்வின் வழி மட்டுமே நிரப்பப்படும்; என்று கொள்கை முடிவை எடுத்து அறிவிக்கலாம்.


அல்லது ஒட்டுமொத்தமாக பதவி உயர்வு நீங்கலான நேரடி BT பணியிடங்கள் மீண்டும் பழையபடி TRB போட்டித் தேர்வின் வழி மட்டுமே நிரப்பப்படும்; SGT பணியிட புதிய நியமனங்கள் TET தேர்வின் வழி மட்டுமே நடைபெறும்; என்றும் கொள்கை முடிவை எடுத்து அறிவிக்கலாம்.


இவையாவும் தனிநபரான எனது புரிதலுக்கு உட்பட்டவையே.


இது அறைவேக்காட்டுத் தனமானதாகக் கூட தோன்றலாம். ஆனால், சட்ட வல்லுநர்கள் - ஆசிரியர் இயக்கத்தினர் உள்ளிட்டோரை உள்ளடக்கிய குழுவை அமைத்து அரசு செயல்படுமாயின் இதிலும் மேலானா ஒருநிலைப்பாட்டை உறுதி எடுக்க இயலும்.


அத்தகைய முடிவிற்குள் அரசு வராமல் எத்தனைமுறை வழக்காடினாலும் அடுத்தடுத்து வழக்குகள் தொடுக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். அவ்வளவு ஏன் பதவி உயர்வை முழுமையாகவே மேற்கொள்ள முடியாத அளவிற்கு மென்மேலும் தீர்ப்புகள்கூட வெளிவரலாம்.


ஒட்டுமொத்தமாக முதல் & அடிப்படைத் தேவை என்பது உறுதியான - சட்டப்பூர்வமான - தெளிவான கொள்கை முடிவே. அதனை அரசு தானாகவே சரி செய்துவிடும் / மேல்முறையிட்டு வென்றுவிடும் என்ற நம்பிக்கையில் டிட்டோஜாக் பேச்சுவார்த்தையோடே அமைதியாகிவிடக்கூடாது. ஏனெனில் தற்போதைய நிலைக்குக் காரணமே அரசின் தனித்த செயல்பாடுகளே.


எனவே, கொள்கை முடிவு செயலாக்கத்தில் சட்ட வல்லுநர்களோடே தனது இருப்பையும் டிட்டோஜாக் உறுதி செய்வதோடு, பள்ளிக்கல்வித்துறை இயக்கங்களையும் இச்செயல்பாடுகளில் இணைத்துக் கொண்டு செயலாற்ற வேண்டும்.


வந்ததைத் தீர்க்கவும் வரும்முன் காக்கவும், கொள்கைகளை முறையாக வகுப்போம்!


✍🏼செல்வ.ரஞ்சித் குமார்


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தலைமையாசியர்கள் வரும் 12.06.2023 மற்றும் 13.06.2023 ஆகிய இரு தினங்களுக்கு TNSED Attendance App இல் வருகைப்பதிவினை எவ்வாறு பதிவிடுவது? - EMIS Team

1 முதல் 5 வகுப்புகளுக்கு ஜூன் 14 ஆம் தேதியும்,  6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜுன் 12ம் தேதியும், திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பின்படி


அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 வகுப்புகளுக்கு 14.06.2023 அன்று பள்ளிகள் திறக்கப்படும்.


எனவே, தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 5 வகுப்புகளைக் கையாளும் இடைநிலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை எனவும்,


ஆனால் வரும் 12.06.2023 அன்று 6 முதல் 10 ஆம் வகுப்பிற்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் நடுநிலைப்பள்ளியில் 6 முதல் 8 வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.


நடுநிலைப்பள்ளி தலைமையாசியர்கள் வரும் 12.06.2023 மற்றும் 13.06.2023 ஆகிய இரு தினங்களுக்கு TNSED Attendance App இல் வருகைப்பதிவினை கீழ்க்கண்டவாறு குறிக்கப்பட வேண்டும்.


Today's status இல் Partially working என கொடுத்துவிட்டு working class இல் VI, VII, VIII மட்டும் தேர்வு செய்யவும்.


Teacher attendance App இல்  1 முதல்  5 வகுப்புகளைக் கையாளும் இடைநிலை ஆசிரியர்களுக்கு NA (Not Applicable ) என பதிவிடவும்.


மற்ற BT Assistant ஆசிரியர்களுக்கு வருகைப் பதிவினைக் குறிக்கவும்.


EMIS Team


 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்/ பட்டதாரி ஆசிரியர்/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு...


உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்/ பட்டதாரி ஆசிரியர்/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு...
👇👇👇👇👇👇👇👇👇


மருத்துவ மாணவர்களுக்கு அடுத்தாண்டு முதல் ‘நெக்ஸ்ட்’ தேர்வு



எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர்களுக்கு அடுத்தாண்டு முதல் நேஷனல் எக்ஸிட் டெஸ்ட்(நெக்ஸ்ட்) தேர்வு நடத்தப்பட உள்ளது.


தேசிய மருத்துவ ஆணைய (என்எம்சி) சட்டத்தின்படி, நெக்ஸ்ட் தேர்வு என்பது ஒரு பொதுவான தகுதி இறுதியாண்டு எம்பிபிஎஸ் தேர்வாகவும், நவீன மருத்துவம் மற்றும் முதுகலைப் படிப்புகளில் தகுதி அடிப்படையிலான சேர்க்கைக்கான உரிமத் தேர்வாகவும் இருக்கும்.


மேலும், வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான ஸ்கிரீனிங் தேர்வாகவும் ‘‘நெக்ஸ்ட்’’ இருக்கும்.



 ...Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசு பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகம் (English Language Lab) ஏற்படுத்துதல் - 6029 பள்ளிகளுக்கு Headphones & Splitters வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 

அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகம் (English Language Lab) ஏற்படுத்துதல் - 6029 பள்ளிகளுக்கு Headphones & Splitters வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


English Language Lab - Dir Proceedings - Download here...


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

இனி சனிக்கிழமைகளும் பள்ளிகள் செயல்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்.

 

இனி சனிக்கிழமைகளும் பள்ளிகள் செயல்படும்.


.பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதன் காரணமாக, சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு

"கோடைவிடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும்"

"பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும்"

"மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்கள் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும்"

பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பேட்டி

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

12.06.2023 அன்று உலக குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினம் - பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் எடுக்க வேண்டிய உறுதிமொழி...

 12.06.2023 அன்று உலக குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அனைத்து வகைப் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் காலை 11மணியளவில் எடுக்க வேண்டிய உறுதிமொழி...


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Education - Important Exam Dates - June 2023

 

DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS , CHENNAI -6 

HIGHER SECONDARY SUPPLEMENTARY EXAMINATION & DEE EXAM - JUNE 2023 ABSTRACT OF EXAM DATES REVENUE DISTRICT NAME COIMBATORE


School Education - Important Exam Dates - June 2023 ( pdf ) - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

1 முதல் 5 ஆம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்து கால அட்டவணை , மதிப்பீட்டு அட்டவணை மற்றும் அடிக்கடி வினவப்படும் வினாக்கள் ( FAQ ) குறித்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்புதல் - SCERT Proceedings

 எண்ணும் எழுத்தும் சார்ந்த தெளிவுரை


🌷 ஐந்தாம் வகுப்பிற்கு மட்டும் ஜூன் 21 முதல் Baseline survey நடத்தப்படும்


🌷1-3, 4-5 வகுப்பு கால அட்டவணை


🌷 வளரறி மதிப்பீடு (ஆ) FA(b), மாதத்தேர்வு MA, பருவத்தேர்வு SA நடத்த வேண்டிய தேதிகள்


🌷 எண்ணும் எழுத்தும் சார்ந்த அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்


போன்றவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SCERT Proceedings - Download here...



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

IFHRMSஇல் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் Dongle/ DSC குறித்த தகவல்கள் - அவற்றின் வேறுபாடுகள்

 IFHRMSஇல் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் Dongle/ DSC குறித்த தகவல்கள் - அவற்றின் வேறுபாடுகள்...

 நண்பர்களே வணக்கம் 🙏🏻


IFHRMS இல் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும்...🙏🙏🙏


Dongle/DSC சார்ந்த பதிவு இது...


1) dongle என்றால் என்ன?


DSC வைத்துக் கொள்ள பயன்படும் ஒரு device தான் dongle.  (pen drive போன்ற சாதனம்) இதை USB token என்றும் சொல்வார்கள்..


2) DSC என்றால்?


Digital signature certificate...


Paper / hard copy இல் நாம் தான் என உறுதி செய்ய "கையெழுத்து" போடுவது போல..


E forms / digital இல் நாம் தான் என உறுதி செய்ய கண்ணால் பார்க்க இயலாத "digital signature" இது


3) dongle , DSC இரண்டும் ஒன்றா?


இரண்டும் தொடர்புடையது...


ஆனால் வேறு வேறு..


DSC வைத்துக் கொள்ள பயன்படும் ஒரு பிரத்யோக சாதனம் தான் dongle...


4) dongle/ DSC எங்கே வாங்கலாம்?


DSC வழங்க CA எனப்படும் certifying authorities நிறுவனங்கள் உள்ளன எடுத்துக் காட்டாக emuthra....


Dongle ...


Safenet, ePass, போன்ற தனியார் நிறுவனங்கள் வழங்குகிறது .


5) DSC பெறுவது எப்படி?


தனிநபர்/ நிறுவனங்கள் online இல் DSC பெறலாம்..


நாம் "மாவட்ட கருவூலம்" வழியாக online இல் DSC பெறலாம்


6) DSC பெற என்ன தேவை?


Photo


PAN/Aadhar


D.O.B


I'd proof (with photo)


Mobile number 


Email id 


HM Appointment letter/ promotion letter/ finance power letter ( any one)


In person - நேரில் சென்று தான் விண்ணப்பிக்க வேண்டும்... 


(Online verification must)


Process successfully completed எனில்...


Msg வரும்.


பிறகு DSC download செய்து கொள்ளலாம்...


7) DSC எப்படி பார்ப்பது?


அது கண்ணால் பார்க்க இயலாத e signature...


அதை dongle இல் தான் சேமித்து வைக்க இயலும்...


8) dongle யாருக்கு சொந்தம்? பள்ளிக்கா ?


தலைமை ஆசிரியருக்கா ?


எனது இந்த நீண்ட நெடிய பதிவிற்கு காரணம் இந்த கேள்வி தான் 😃


நேரடி பதில்


Dongle பள்ளிக்கு சொந்தம்


அதில் உள்ள DSC அந்த தலைமை ஆசிரியருக்கு சொந்தம் 🤪


9) மாறுதலில் செல்லும் போது என்ன செய்ய?


தலைமை ஆசிரியர் பணி ஓய்வு/ vrs / death. எனில் கட்டாயம்  dongle பள்ளியில் ஒப்படைத்து விட வேண்டும்...


வேறு ஒரு பள்ளிக்கு மாறுதல் எனில்

ஒப்படைத்து விட்டு செல்லலாம்

அல்லது கொண்டு செல்லலாம்... 


10) குழப்பமாக உள்ளதே🤔


DSC பள்ளிக்கு வழங்கப்படுவது இல்லை... அது அந்த DDO க்கு வழங்கப்படுவது..


அதாவது செல்வக்குமார் "x" என்ற பள்ளியில் பணிபுரிந்தாலும் "y" என்ற பள்ளியில் பணிபுரிந்தாலும் அதே "DSC" தான்...


11) அப்படி எனில் dongle கையோடு எடுத்து செல்வதே சிறந்ததா?


தனிப்பட்ட முறையில் நான் " ஆம்" என்பேன்... இது தான் சிறந்தது என்பேன்...


 நீங்கள் எந்தப் பள்ளிக்கு சென்றாலும் IFHRMS இல் பயன்படுத்தலாம்...


12) நான் கொண்டு சென்று விட்டால்...


தற்போதைய பள்ளியில் எப்படி சம்பளம் போடுவார்கள்?


இதை இரண்டு விதமாக பிரித்து பார்க்கலாம்...

அ) உங்கள் பழைய பள்ளிக்கு வேறு ஒரு தலைமை ஆசிரியர் மாறுதலில் வந்து விட்டார் எனில்..


அவர் அவரது முந்தைய பள்ளியில் உள்ள dongle ஐ எடுத்து வந்துவிடலாம்..

IFHRMS இல் approver change மட்டும் செய்தால் போதும்...

இருவரும் treasury செல்ல வேண்டாம்....

பணம் பெற்று வழங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை 👍🏼

ஆ) உங்கள் பழைய பள்ளிக்கு தலைமை ஆசிரியர் மாறுதல் இல்லை...


(பொறுப்பு) தலைமை ஆசிரியர் தான் எனில்?

Incharge எடுப்பவருக்கு 


Dongle, DSC இரண்டும் இருக்காது...


எனவே நீங்கள் செய்ய வேண்டியது...


அவருக்கு " ஒரு empty புதிய dongle" மட்டும் வாங்கி கொடுத்து விடுங்கள் 


Treasury வழியாக அந்த incharge DSC apply செய்து கொள்ளலாம்...

இ) பழைய பள்ளிக்கு வேறு ஒரு பள்ளியில் இருந்து தலைமை ஆசிரியர் பணி மாறுதல் ஆனால் அவர் அவரது dongle ஐ அங்கேயே கொடுத்து விட்டார் எனில்

No problem...


New empty dongle வாங்கி கொண்டால்...


Treasury வழியாக அவரது DSC ஐ அதில் save செய்து கொடுத்து விடுவார்கள்....


13) new empty dongle எங்கே வாங்கலாம்?


Online இல் வாங்கலாம்...

Amazon இல் கூட கிடைக்கிறது 😁

தற்போது safenet dongle demand...

ePass எளிதாக கிடைக்கிறது...

(எந்த brand ஆக இருந்தாலும்  🆗) ...


First time ...

Safenet dongle எனில் install செய்ய safenet software...

ePass எனில்..

ePass software...

அவ்வளவு தான் 😏


அல்லது dongle வாங்க தங்களின் கருவூலத்தை அணுகவும்...


14) IFHRMS வந்ததால் தான் இந்த "dongle DSC" தொல்லை வந்ததா? 😱


Dongle DSC, 


income tax act 2000... ☺️ இன் படி நீண்ட காலமாக இருக்கிறது...


நாம் தான் அதை ரொம்ப லேட்டா பயன்படுத்துகிறோம் 🤣


 15) digital signature என்றால்..


நமது கையெழுத்து bill இல் வருமா?

இல்லை இல்லை...

கையெழுத்து image எதுவும் இருக்காது/வராது...

15 கேள்வி பதில் படித்த பிறகு குழப்பம் அதிகமாகிவிட்டதே😷

எளிதாக நான் புரிந்து கொண்டது...

DSC - உங்களுக்கு சொந்தமான online சாவி..

Dongle - அந்த சாவியை வைக்க பயன்படும் ஒரு பெட்டி...

இந்த பெட்டியில் உங்க சாவியை (DSC) வைக்கலாம்...

மாறினால் 

அதை எடுத்து விட்டு வேறு ஒருவர் சாவியை வைக்கலாம் ...

ஒரே பெட்டியில் (dongle) ஒன்றுக்கு மேற்பட்ட சாவிகளை (DSC) கூட வைக்கலாம்


தகவலுக்காக..


க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி 

 மோ சுப்புலாபுரம்

மதுரை மாவட்டம் 


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கலாம் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு - உயர் கல்வித்துறை

 தமிழக அரசு வழங்கும் அப்துல் கலாம் விருதுக்கு தகுதியானவர்கள், வரும் 30ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.


இது குறித்து, தமிழக உயர்கல்வி துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:


விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல், மாணவர்கள் நலன் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் தமிழகத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு, ஆண்டுதோறும் அரசின் சார்பில் அப்துல் கலாம் விருது வழங்கப்படும்.


சுதந்திர தின விழாவின் போது, விருதுடன், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.


இந்த விருதுக்கு தகுதியானவர்கள், தங்கள் விபரங்கள் மற்றும் உரிய ஆவணங்களுடன், வரும் 30ம் தேதிக்குள் 'ஆன்லைன்' வழியே விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களை, https://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News