கனவு ஆசிரியர் போட்டித் தேர்வு STAGE 2 HALL TICKET DOWNLOAD
பள்ளிப் பதிவேடுகள் அனைத்தும் கணினிமயமாக்குதல் மற்றும் தேவையற்ற பதிவேடுகள் நீக்குதல் - அரசாணையை நடைமுறைப்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்!
அலகு விட்டு அலகு மாறுதல் மற்றும் ஈர்த்து கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் மூதுரிமையை நிர்ணயம் செய்ய கோரிக்கை!
18 வருடங்களாக பதவி உயர்வு இன்றி தவிக்கும் அலகு விட்டு அலகு மாறுதல் மற்றும் ஈர்த்து கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் மூதுரிமையை நிர்ணயம் செய்ய மாண்புமிகு பள்ளி கல்வித் துறை அமைச்சரிடம் அனைத்து பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை
அனைத்து பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டமானது 14.05.2023 அன்று திருநெல்வேலியில் மாநிலத் தலைவர் திரு செல்வராஜ் தலைமையில் கூட்டப்பட்டது. இதில் மாநிலப் பொதுச் செயலாளர் திரு சுந்தரபாண்டியன் , மாநிலப் பொருளாளர் திரு ராஜா முகம்மது , மாநில முதன்மை ஒருங்கிணைப்பாளர் திரு சந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் திரு சங்கர நாரயணன், திரு இராமநாதன் ,திரு குருவிநாயகம், திருமதி இந்துமதி , திருமதி மகராசி , திருமதி செண்பகலதா ஆகியோர் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் பள்ளி கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் பின்வரும் பணப்பலன் இல்லா கோரிக்கையினை நடைமுறைப்படுத்திட வேண்டி அக் கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
2003 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு
தொகுப்பூதியத்தில் பட்டதாரி ஆசிரியர்களாக தொடக்கக்கல்வி இயக்ககம் கீழ் உள்ள
நடுநிலைப்பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டோம்.
நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் போது ஈர்த்துக் கொள்ளப்பட்டும் மற்றும் 2009-இல் அலகு விட்டு அலகு மாறுதல் மூலம் தொடக்கக்கல்வி இயக்ககத்தில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு அதே பணி நிலையில் பட்டதாரி ஆசிரியர்களாக மாறுதல் பெற்றோம். தொடக்கக்கல்வி இயக்ககத்தில் இருந்து பள்ளிக்கல்வித் துறைக்கு வந்த நாள் தான் எங்களது பணி மூப்புக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது இதனால் கடந்த 18 ஆண்டுகளாக எந்தவித பதவி உயர்வும் பெறாமல் அதே நிலையில் பட்டதாரி ஆசிரியர்களாக தொடர்ந்து பணிபுரிந்து வருகிறோம். மேலும் ஒரே பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக 17 வருடங்களாக பணியாற்றியும் அப்பள்ளி தரம் உயர்த்தப்படும் போது பள்ளிக் கல்வித்துறைக்கு ஈர்த்து கொள்ளப்பட்ட நாளினைக் பணியில் சேர்ந்த நாளாகக் கொண்டு வேறு மாவட்டங்களுக்கு பணி நிரவல் செய்யப்பட்டு பட்டதாரி ஆசிரியர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் .
பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்களின் உத்தேச முன்னுரிமைப் பட்டியல் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் நிபந்தனை சட்டம் 2016 விதி 40(2) ன் படி ஒரு பதவியில் பணிமூப்பு நிர்ணயம் செய்யும்போது ஒன்றுக்கும் மேற்பட்ட முறையிலான நியமன முறை இருப்பின் (நேரடி நியமனம், பதவி உயர்வு, கருணை அடிப்படை, துறை மாறுதல் மற்றும் பிற) அப்பதவியில் பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற விதிப்படி 2019ம் ஆண்டு அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் 18258/சி1/இ1/2018 நாள்:26.07.2019 ன் படி தயார் செய்யப்பட்ட முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் விதி 40(2) ன் படி உரிய இடத்தில் எங்களது பெயர்கள் உள்ளன.
மேற்கண்ட செயல்முறைகள் மற்றும் அதன்படி தயார் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் உத்தேச முன்னுரிமைப் பட்டியல் 2019 ம் ஆண்டில் மாண்புமிகு சென்னை உயர் நீதி மன்றத்தில் உயர்திரு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.எனவே பள்ளிக் கல்வி இயக்குநரால் வெளியிடப்பட்ட முன்னுரிமைப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு (முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்) கலந்தாய்வினை நடத்துமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் அரசாணை(நிலை) எண் 48, நாள் 01.03.2023 ன் படி 4 மாவட்டங்களிலிருந்து சென்னை பெருமாநகராட்சியின் கீழ் இணைக்கப்படவுள்ள 139 பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் முதுநிலை தமிழ்நாடு அரசு பணியாளர் பணி விதிச் சட்டம் 2016 ன் படி பாதுகாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால், நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆதிதிராவிட மற்றும் கள்ளர் துறைப்பள்ளிகள் இணைக்கப்படவுள்ளதாகவும் இணைக்கப்படும் ஆசிரியர்களின் மூதுரிமை பாதுகாக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் ஒரே துறையின் கீழ் பணிபுரிந்து பள்ளிக்கல்விக்கு அலகு விட்டு அலகு மாறுதல் மற்றும் ஈர்த்துக் கொள்ளப்பட்டு 18 வருடங்களாக பணி மூதுரிமை இழந்து நிற்கும் 12000 க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களாகிய எங்களுக்கும் மேற்கண்ட அரசாணைகளின் படி பணியில் சேர்ந்த நாள் முதல் மூதுரிமை நிர்ணயிக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். மேற்காணும் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
Click here to join whatsapp group for daily kalvinews update
STUDENT SCHOOL ADMISSION FORMS - PU-PRIMARY, MIDDLE, AIDED, SCHOOLS - 2023-2024 (NEW)
Click here to join whatsapp group for daily kalvinews update
+2 மறு தேர்விற்கு விண்ணப்பம் செய்ய கால அவகாசம்
மேல்நிலை இரண்டாம் ஆண்டு ஜூன் 2023 மறு தேர்விற்கு விண்ணப்பம் செய்ய கால அவகாசம் 23.5.2023 செவ்வாய் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு மே 24, 25, 26 ஆகிய மூன்று நாளில் தட்கல் முறையில் ரூ 1000 கூடுதலாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
Click here to join whatsapp group for daily kalvinews update
பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்க உத்தரவு
பள்ளி திறக்கும் முதல் நாளே மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: வரும் கல்வி ஆண்டு (2023-24)
1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கான பாடநூல்கள் உட்பட அனைத்து கல்வி உபகரணங்களின் தேவைப் பட்டியல் பெறப்பட்டு அதனடிப்படையில் கொள்முதல் பணிகள் முடிக்கப்பட்டன.
தற்போது அனைத்து மாவட்டக் கல்வி அலுவலக விநியோக மையங்களுக்கும் பாடநூல் கழகம் தேவையான உபகரணங்களை அனுப்பியுள்ளது. மாவட்ட விநியோக மையங்களில் பெறப்பட்டுள்ள பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் இதர கல்வி உபகரணங்கள் அனைத்தும் பள்ளி திறப்பதற்கு முன்பாகவே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு பாடநூல்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.இதில் எவ்வித காலதாமதமும் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Click here to join whatsapp group for daily kalvinews update
விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கை: மே 24-ல் மாவட்ட அளவிலான தேர்வு போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் விளையாட்டு விடுதிகளில் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான (7, 8, 9, 11-ம் வகுப்புகள்) மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் மே 24-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உள்ள விளையாட்டரங்குகளில் நடைபெற உள்ளன.
மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை (www.sdat.tn.gov.in) பூர்த்தி செய்து மே 23-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
சென்னை மாவட்ட அளவிலான தேர்வு போட்டி 24-ம் தேதி காலை7 மணிக்கு பெரியமேடு ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும். கூடுதல் விவரங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை ஷெனாய் நகரில் உள்ள அலுவலகத்தில் அல்லது 7401703480 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று சென்னை ஆட்சியர் எஸ்.அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.
Click here to join whatsapp group for daily kalvinews update
EMIS - TC பணி குறித்து மாநில திட்ட இயக்குநரின் புதிய செயல்முறைகள்
Emis இல் TC தொடர்பான பணிகளை முடித்து அவர்களை Common Pool க்கு (Past Student ) அனுப்பிய பின் அதன் தொடர்ச்சியாக கீழ் வகுப்பு மாணவர்களை அடுத்து வகுப்பிற்கு மாற்றம் செய்திடும் பணிகளை 31-05-2023 க்குள் முடிக்க வேண்டும்.
ஜூன் 1 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு புதிய வகுப்பில் வருகை பதிவை ஆன்லைன் மூலம் செய்திட வேண்டும் - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.
Click here to download spd proceedings pdf
Click here to join whatsapp group for daily kalvinews update
அனைத்து ஆசிரியர்களுக்குமான பயிற்சி கால அட்டவணை 2023 - 2024 ( Pdf )
1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான 2023 - 2024 பயிற்சி கால அட்டவணை வெளியீடு.
TEACHER TRAINING CALENDER 2023-24 | Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
அரசு ஊழியர்கள் வீடு கட்ட முன்பணம் உயர்வு.
தமிழக அரசு பணியாளர்களுக்கு, தற்போது வழங்கப்படும் முன்பணம், 40 லட்சம் ரூபாய் என்பது, 50 லட்சம் ரூபாயாகவும், அகில இந்தியப் பணி அலுவலர்களுக்கு வழங்கப்படும், 60 லட்சம் ரூபாய் என்பது, 75 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கான அரசாணையை, வீட்டு வசதித்துறை செயலர் அபூர்வா வெளியிட்டுள்ளார். கட்டுமான செலவு உயர்வால், இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கும், புதிய விதிமுறைகளின்படி முன்பணம் வழங்கப்பட உள்ளது.
Click here to join whatsapp group for daily kalvinews update
FGD for Schools - One Day Training - மாவட்ட வாரியாக தலைமை ஆசிரியர்கள் பெயர்ப் பட்டியல்!
அரசு பள்ளி முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி - தலைமை ஆசிரியர்களுடன் கவனநோக்குக் குழுக் கலந்துரையாடல் - ஒரு நாள் பயிற்சி சார்ந்து உறுப்பினர் செயலரின் செயல்முறைகள்!
இணைப்பு: மாவட்ட வாரியாக தலைமை ஆசிரியர்கள் பெயர்ப் பட்டியல்!
FGD for Schools - Proceedings - HMs List - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
10th Public Exam Result - Direct Link
10th Public Exam Result - Direct Link
10 வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியிடப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியாகும். இந்த தேர்வு முடிவுகளை
இணையதள முகவரிகள் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
தாங்கள்படித்த பள்ளிகள் மூலமும் அறியலாம்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பப்படும்.
Click here to join whatsapp group for daily kalvinews update
10, 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் ஏப்.5-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதேபோல், 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்.6 முதல் 20-ம்தேதி வரை நடத்தப்பட்டது.
இதையடுத்து 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணிகள் ஏப்.15-ல் தொடங்கி மே 4-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் முடிக்கப்பட்டு விட்டன.
இதைத் தொடர்ந்து 10, 11-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19)வெளியிடப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கும், 11-ம் வகுப்பு முடிவுகள் மதியம் 2 மணிக்கும் வெளியாகும். இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரிகள் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தாங்கள்படித்த பள்ளிகள் மூலமும் அறியலாம்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பப்படும்.
Click here to join whatsapp group for daily kalvinews update
3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு (கூடுதல் பணியிடங்கள்) 3 மாத ஊதிய விரைவாணை வெளியீடு!
3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு (கூடுதல் பணியிடங்கள்) 3 மாத ஊதிய விரைவாணை வெளியீடு!
3000 Temporary Teachers Pay Order - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
School Education - Monthly Magazine - April 2023
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - ஏப்ரல் 2023 மாத இதழ்
School Education - Monthly Magazine - April 2023 - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
தலைமையாசிரியர்களுக்கு EMIS Team முக்கிய அறிவிப்பு.
அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் வணக்கம்
நம்ம School நம்ம ஊரு பள்ளி Module-ல் தேவையல்லாத Needs ஐ Delete செய்யும் Option Enable செய்யப்படட்டுள்ளது. இப்பணியினை உடனடியாக மேற்கொள்ளுமாறு தலைமையாசிரியர்களுக்கு கேட்டுக் கொள்ளுப்படுகிறார்கள்.
(school login ---> schools---> click--> namma school namm ooru palli -> Open and delete the unwanted needs )
Click here to join whatsapp group for daily kalvinews update
TNPSC - Department Exam May 2023 - Hall Ticket Published
மே - 2023 துறைத் தேர்வுகளுக்கான தேர்வு கூட நுழைவுச்சீட்டு வெளியீடு.
TNPSC - Department Exam May 2023 - Hall Ticket - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள த/ ஆ, ஆசிரியர்களின் கவனத்திற்கு,
பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள த/ ஆ, ஆசிரியர்களின் கவனத்திற்கு,
தங்கள் individual login ல் Seniority challenge என்ற மெனு வழியாக Seniority எண் பார்த்துக்கொள்ளலாம்.
இதில் ஏதேனும் seniority, priority, ஆகியவற்றில் தவறுகள் இருப்பின் challenge button ஐ அழுத்தி தேவையான விபரத்தை பதிவிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உரிய அலுவலர்கள் அவற்றை சரிபார்த்து approve or reject செய்து seniority ஐ சரிசெய்து விடுவார்கள்.
கலந்தாய்வு அன்று முறையீடு வந்தால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
EMIS team.
Click here to join whatsapp group for daily kalvinews update
தொடக்கப்பள்ளி ஆசிரியராவது எப்படி?
தொடக்கப்பள்ளி ஆசிரியராவது எப்படி?
பட்டய ஆசிரியராக மாறு வதற்குப் பிளஸ் 2-க்கு பிறகு பயில வேண்டிய பட்டயம் Diploma in Teacher Education (D.T.Ed).
ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்குப் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த வரவேற்பு தற்போது இல்லாது போனாலும், ஆண்களைவிட பெண்கள் மத்தியில் இந்தப் படிப்பில் சேருவதற்குப் போட்டி நிலவுகிறது.
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதே இதற்குக் காரணம். இதற்கான டிப்ளமா (D.T.Ed.) படிப்பில் சேர்வதும் எளிது. பிளஸ் 2-வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்றிருந்தால் சேர்க்கைக்குத் தகுதியுண்டு.
கல்வித் தகுதி
1. தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பிற்கு சேர்க்கை பெற விரும்புவோர் மேல்நிலைத் தேர்வில் (Higher Secondary) தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.
2. மேலும், பொதுப் பிரிவினர் (OC) குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண் ( 600 / 1200 அல்லது 300 / 600 ) மற்றும் பிற்படுத்தப்பட்டோர் / பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / ஆதி திராவிடர் / ஆதி திராவிடர் அருந்ததியர் / பழங்குடியினர் (BC / BCM / MBC / SC / SCA / ST ) பிரிவினர் குறைந்தபட்சம் 45 விழுக்காடு (540 / 1200 அல்லது 270 / 600 ) மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.
3. விண்ணப்பதாரர் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் எந்த மொழிப் பாடப்பிரிவிற்கு (தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, உருது) விண்ணப்பிக்கின்றாரோ, அம்மொழியினை +2 வரை மொழிப் பாடத்தில் பகுதி ஒன்றிலோ அல்லது பகுதி இரண்டிலோ கட்டாயமாக பயின்றிருக்க வேண்டும்.
4. வயது வரம்பு: 31.07.2023 அன்று அதிகபட்ச வயது 30க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர், பழங்குடியினத்தவர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது 35 ஆகும். ஆதரவற்றோர் (Orphans), கணவரால் கைவிடப்பட்ட பெண்டிர் மற்றும் விதவைகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும். கலப்புத் திருமணத் தம்பதியினரில் பொது | பிற்படுத்தப்பட்டோர் | மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 31.07.2023 அன்று அதிகபட்ச வயது வரம்பு 32 மற்றும் கலப்புத் திருமணத் தம்பதியினரில் ஆதி திராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர், பழங்குடியினத்தவருக்கு 31.07.2023 அன்று அதிகபட்ச வயது 37 ஆகும்.
5. சிறப்பு இட ஒதுக்கீடு: மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரரின் குழந்தைகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் ஆகியோருக்குச் சிறப்பு இட ஒதுக்கீடு உள்ளது . இதற்கான விவரம் இணையதளத்தில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 'மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்' எனப்படும் 'டயட்/ DIET' மையம் செயல்படுகிறது. இது தவிர்த்து ஏராளமான தனியார் பயிற்சி நிறுவனங்களும் உண்டு. உங்கள் பகுதியில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் குறித்த அங்கீகாரம் உள்ளிட்ட தகவல்களை அருகிலுள்ள 'டயட்' நிறுவனத்தில் உறுதி செய்துகொள்ளலாம்.
இரண்டு வருடப் பட்டயப் படிப்பு முடித்து ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுதி, அதில் பெற்ற 'கட் ஆப்' மதிப்பெண்கள் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணி வாய்ப்பு பெறலாம்.
தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 1,070 இடங்களும், எட்டு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 480 இடங்களும், ஆறு ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 300 இடங்களும் உள்ளன.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதத் தில் வெளியிடப்படும். விண்ணப்பங்கள் www.tnscert.org என்ற இணையதளத்தில் முகவரியில் வெளியிடப்படவுள்ளது. இவ்விணைய தளத்தில் உரிய கட்டணத் தைச் செலுத்தி தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.
கட்டணம் செலுத்துவதற்குத் தங்களது பற்று அட்டை (Debit Card), கடன் அட்டை (Credit Card ) மற்றும் இணைய வங்கிச் சேவை ( Internet Banking) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி செலுத்தலாம். விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப்பிரிவு | பிற்படுத்தப்பட்ட வகுப்பு | மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு ரூ .500 / - , மாற்றுத் திறனாளிகள் / தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ரூ .250 / - நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
விண்ணப்பங்களை Online மூலம் ஒவ்வொரு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் இணையதளத்தில் தங்களது விவரங்களை ஒவ்வொன்றாக உள்ளீடு செய்து, அனைத்து விவரங்களையும் பதிவேற்றியபின் சேமிப்பு (Save) பொத்தானை அழுத்த வேண்டும். பிறகு பணம் செலுத்துவதற்கான தளம் உருவாகும். இத்தளத்தில் பணம் செலுத்திய பிறகுதான் தங்களது விண்ணப்பம் முழுமையாகப் பதிவேற்றம் செய்யப்படும்.
இணையதளத்தில் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். அவர் அளிக்கும் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்த பின்பே அவரது சேர்க்கை உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Click here to join whatsapp group for daily kalvinews update
TNSED Important Announcement
Due to scheduled maintenance activity most of the EMIS web application and mobile application services will not be available from May 15th 11 AM to May 22nd 11 AM. The services which are available will be announced later.
Click here to join whatsapp group for daily kalvinews update