பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 08.05.2023 ( திங்கட்கிழமை ) அன்று வெளியிடப்படுகிறது - தேர்வுத்துறை

 மேல்நிலை இரண்டாமாண்டு ( 2 ) -மார்ச் / ஏப்ரல் 2023. பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 08.05.2023 ( திங்கட்கிழமை ) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படவுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.






Click here for latest Kalvi News 

பள்ளி மேலாண்மை குழு கூட்டத் தீர்மானங்களை கிராமசபை கூட்டத்தின் [01.05.2023] கூட்டப் பொருளாக இணைத்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

 


கிராம சபைக் கூட்டங்களில் பள்ளி வளர்ச்சி , கற்றல் கற்பித்தல் , உட்கட்டமைப்பு , மாணவர் பாதுகாப்பு , பள்ளி இடைநிற்றல் தொடர்பாகப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டத் தீர்மானங்களைப் பகிர்ந்துகொள்வது அவசியமாகும் . எதிர்வருகின்ற 2023 , மே மாதம் 1 - ஆம் தேதி " உழைப்பாளர் தினத்தன்று " நடைபெறவிருக்கும் கிராம சபைக் கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டத் தீர்மானங்களைப் பகிர்ந்து கொண்டு விவாதிப்பது சம்பந்தமாகக் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றிட அறிவுறுத்தப்படுகிறது.


Click here for latest Kalvi News 

பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டிக் குழு - தலைமை ஆசிரியரின் பங்கு

 

பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டிக் குழு (Career Guidance Cell) - தலைமை ஆசிரியரின் பங்கு 

Role of Head Master) (School Level Higher Education Guidance Committee - Role of Head Master - Download here

Click here for latest Kalvi News 

28.04.2023 CEOs & DEOs அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தின் கூட்டப்பொருள்!

 

28.04.2023 அன்று நடைபெற உள்ள  முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தின் கூட்டப்பொருள்!

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மே'23 : பருந்துப் பார்வை!

 தொடக்கக் கல்வித் துறையின் 2022-23-ம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. அதில் இருப்பதும் இல்லாததும் குறித்து பருந்துப் பார்வையாக. . .


Minimum 1Year Service-க்கு டாட்டா!


மாறுதலுக்கு விண்ணப்பிக்க தற்போது பணியாற்றும் பள்ளியில் குறைந்தது ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் கடந்த 4 மாதங்களாக நிருவாக மாறுதல் எனும் பெயரில் பல இலட்சங்கள் செலவு செய்து தென்மாவட்டங்களுக்குள் சென்ற ஆசிரியர்கள் இக்கலந்தாய்வில் கலந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்தமுறை இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதலுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் எவ்வித முறையான ஆணையுமின்றி சமூகநீதிக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட Appointment Seniority மூலம் மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் உட்பட சென்றமுறை மாறுதல் பெற்ற அனைவரும் ஒன்பதே மாதங்களில் மீண்டும் மாறுதல் கோரி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


BT PROMOTION இல்லை!


தொ.க.துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்குக் கலந்தாய்வு நடத்த தேதி அறிவிக்கப்படவில்லை. TET தொடர்பான வழக்கு காரணமாகத்தான் இம்முடிவு எடுக்கப்பட்டிருக்குமாயின் அதுகுறித்த தகவல் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எந்தவிதத் தகவலும் செயல்முறைகளில் இல்லை.


30.01.2020-ல் வெளியான ப.க.து அரசாணை 12-ல் BT பணியிடத்தை முதலில் Promotion மூலமும், பின்னர் Transfer மூலமும், இவ்விரண்டிலும் தகுதியான நபர்கள் இல்லை என்றால் மட்டுமே Direct Recruitment மூலமும் நிரப்ப வேண்டும் என்றுதான் தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை சார்நிலைப் பணி விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்பதால், நேரடியாக TET-ஐ இதில் புகுத்த இயலாது. மேலும் RTE 2009 சட்டமும் BT நேரடி நியமனத்திற்குத்தான் TET தேவை என்று வரையறுத்துள்ளது எனும் போது பதவி உயர்வுப் பணியிடங்களுக்குத் தகுதித் தேர்வுகளைக் கட்டாயமாக்க வேண்டிய அவசியமே இல்லை. இதை மீறி வழக்காடு மன்றம் தலையிடுகிறது என்றால் அரசின் நிலைப்பாட்டில் தெளிவு தேவை. ஆனால், BT PROMOTIONக்கு தேதி வழங்காதது குறித்தோ / BT PROMOTION குறித்தோ எவ்வித குறிப்புமே செயல்முறைகளில் இல்லை எனும்போதே அரசு எத்தகைய தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.


இல்லை! இல்லை!!


❌ இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கான முன்னுரிமை Station Seniorityயா? / Appointment Seniorityயா? என்ற விபரம் வழக்கம்போல இம்முறையும் எழுத்தில் இல்லை.


❌ மலைப்பாங்கான, போக்குவரத்து வசதி குறைந்த, ஆசிரியர் பற்றாக்குறையுள்ள & கற்றலில் பின் தங்கிய ஒன்றியங்களாகக் கடந்தமுறை அடையாளமிடப்பட்ட சிறப்பு முன்னுரிமை ஒன்றியங்கள் (Priority Blocks) தொடர்பான குறிப்புகள் இல்லை.


❌ ஆசிரியர்களுக்கான சிறப்பு முன்னுரிமை (Special Priority) தொடர்பான வரிசை முறைப் பட்டியல் பற்றிய குறிப்புகள் இல்லை. கடந்த ஆண்டின் வரிசை முறையில் முன்னுரிமை வழங்கப்படுமா / மாற்றமிருக்குமா என்பது Seniority List வந்தால்தான் தெரியவரும்.


❌ பதவி உயர்வுக் கலந்தாய்வு நடத்தப்படப்போவது 1.1.22 தேர்ந்தோர் பட்டியல் படியா? 1.1.23 தேர்ந்தோர் பட்டியல் படியா? என்ற விபரம் இல்லை.


❌ நலத்துறைப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையில் இணைத்தது தொடர்பான குறிப்புகளோ, அப்பள்ளிகளுக்கான கலந்தாய்வு குறித்தோ, அதன் காலிப்பணியிடங்கள் காட்டப்படுமா என்றோ குறிப்பிடப்படவில்லை.


மாறுதலுக்கு விண்ணப்பித்தல் & கலந்தாய்வு நடைமுறை :


👉 EMIS Web page-ல் Individual ID வழியே ஏப்.27 முதல் மே.1 மாலை 6:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


👉 ஆசிரியர் பற்றிய விபரங்களில் தவறுகள் இருப்பின் EMIS Web page-ல் School ID வழியே திருத்தம் செய்தபின் விண்ணப்பிக்க வேண்டும்.


👉 இறுதியாக மாறுதல் பெற்றோர் மாறுதல் ஆணையையும், இதுவரை மாறுதலே பெறாதோர் பணி நியமன ஆணையையும் கட்டாயம் Upload செய்ய வேண்டும்.


👉 வழக்கம் போல சிறப்பு முன்னுரிமைக்கான ஆவணங்களைச் சார்ந்தோர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


👉 ஆசிரியரது விண்ணப்பங்களுக்கு HM தனது ID-ல் Approval அளித்து அதனை 3 பிரதிகளில் Print செய்து ஒன்றை ஆசிரியருக்கும் மற்ற 2-ஐ BEO-விற்கும் கூடுதல் ஆவண நகல்களுடன் அளிக்க வேண்டும். BEO தன்னிடம் வரப்பட்ட 2-ல் ஒரு பிரதியை DEO-விற்கு அளிக்க வேண்டும்.


👉 HM விண்ணப்பங்களுக்கு BEO Approval அளித்து அதனை 3 பிரதிகளில் Print செய்து ஒன்றை ஆசிரியருக்கும் மற்ற 1-ஐ DEO-விற்கும் கூடுதல் ஆவண நகல்களுடன் அளிக்க வேண்டும்.


👉 மாவட்ட மாறுதலில் பணியாற்றும் மாவட்டத்தைத் தவிர்த்து பிற மாவட்டங்களை மட்டுமே தேர்ந்தெடுக்க இயலும்.


👉 மாறுதலில் ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே வாய்ப்பு. Resultant Vacancy முறை கிடையாது.


👉 40% மாற்றுத்திறனாளிகளை பணி நிரவல் செய்யக்கூடாது. 


Click here for latest Kalvi News 

பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் மாற்று சான்று - பள்ளிக்கல்வி துறை

 அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், காகித மாற்றுச் சான்றித ழுக்கு பதில், 'டிஜிட்டல்' மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், பள்ளி மாறும்போது மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும்.


அந்த சான்றிதழை வைத்தே, மாணவர்கள் மற்ற பள்ளிகளில் சேருவர். இந்த மாற்றுச் சான்றிதழ்கள், ஆண்டாண்டு காலமாக பதிவேட்டு புத்தகமாக, பள்ளிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.


தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்து உள்ளதால், பள்ளிக் கல்வியில் மாணவர்களின் விபரங்கள், கல்வி மேலாண்மை தளமான 'எமிஸ்' வழியே இணைக்கப்பட்டு உள்ளன.


இதை பயன்படுத்தி, இனிவரும் காலங்களில், மாணவர்களுக்கு டிஜிட்டல் மாற்றுச் சான்றிதழை வழங்குமாறு, பள்ளிகளுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.


இந்த டிஜிட்டல் மாற்றுச் சான்றிதழை, அச்செடுத்து பெற்றோர் பயன்படுத்தலாம். இதனால், போலியான மாற்றுச் சான்றிதழ்கள் பயன்படுத்தப்படாமல் தடுக்கப்படும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Click here for latest Kalvi News 

32 படிப்புகள் அரசு வேலைக்கு தகுதியற்றவை - உயர்கல்வித்துறை

 பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், வரி வசூல், வணிக மேலாண்மை ஆகியன, பி.காம்., படிப்புக்கும்; எம்.ஏ., கூட்டுறவு, மாஸ்டர் ஆப் கார்பரேட் செக்ரட்ரிஷிப் ஆகியன எம்.காம்., படிப்புக்கும்; பி.ஏ., உளவியல், பி.ஏ., சமூகவியலுக்கும், அரசு வேலை பெறுவதற்கு இணையான படிப்பு அல்ல.


எம்.எஸ்சி., பயன்பாட்டு கணிதம், எம்.எஸ்சி., கணிதத்துக்கும்; எம்.எஸ்சி., சுற்றுச்சூழல் அறிவியல், எம்.எஸ்சி., நோய் எதிர்ப்பியல் மற்றும் நுண் உயிரியல் படிப்பு, எம்.எஸ்சி., நுண் உயிரியலுக்கும் இணையான படிப்பல்ல.


எம்.எஸ்சி., ஸ்பீச் லாங்குவேஜ் நோயியல், எம்.எஸ்சி., மறுவாழ்வு அறிவியலுக்கு இணையான படிப்பல்ல.


இவ்வாறு மொத்தம், 32 படிப்புகள் அரசின் வேலைவாய்ப்புக்கான பிரதான படிப்புகளுக்கு இணையானது அல்ல என, அறிவிக்கப்பட்டு உள்ளது.




Click here for latest Kalvi News 

அனைத்திந்திய அளவில் நீட் மாடல் தேர்வு - கட்டணமின்றி எழுத லிம்ரா அழைப்பு

 நீட் தேர்வை எழுதச் செல்லும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவும் லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம், இந்த ஆண்டும் 12 மாடல் தேர்வுகளை, எவ்விதக் கட்டணமும் இல்லாமல் ஆன்லைன் வழியாக நடத்துகிறது.


நீட் தேர்வு வரும் மே 7-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 1,47,581 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றில் உள்ள மொத்த இடங்களில் இட ஒதுக்கீட்டு இடங்கள் போக மீதமுள்ள 4,025 இடங்கள் மட்டுமே நம் தமிழக மாணவர்கள் மட்டுமே போட்டியிட முடியும்.


எனவே, கிடைக்கும் நேரத்தை வீணாக்காமல் அனைத்து வழிகளிலும் தேர்வுக்காக மாணவர்கள் உழைத்து வருகின்றனர். நம் மாணவர்களுக்கு உதவுவதற்காகவே, லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் எந்தக் கட்டணமும் இன்றி, இலவசமாக நீட் மாடல் தேர்வை ஆண்டுதோறும் ஆன்லைனில் நடத்துகிறது.


நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பாடம் நடத்தி பயிற்சி தரும் அனுபவம் உள்ள ஆசிரியர்கள் இத் தேர்வுக்கான கேள்வித் தாள்களை வடிவமைத்துத் தந்துள்ளனர். தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வாக இது இருக்கும். சென்ற ஆண்டு இத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் நீட் தேர்வில் இடம் பெற்றிருந்தன என இத்தேர்வை ஆன்லைனில் எழுதிய மாணவர்கள் கூறி இருந்தனர்.


இந்த இலவச மாடல் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயர், நீட் தேர்வு பதிவெண், பிறந்த நாள், முகவரி மற்றும் மொபைல் எண் தந்து பதிய வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு யூசர் நேம், பாஸ்வேர்ட் தரப்படும். பின்னர் இவர்கள் குறிப்பிட்ட இணையதளம் சென்று, லாக் இன் செய்து தேர்வை எழுதலாம்.


Teachers General Transfer counselling 2023 - 2024 - instruction and schedule

 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கலந்தாய்வு அட்டவணை!



தற்போது அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு செயல்முறைகளானது 2022-23ஆம் கல்வி ஆண்டிற்குரிய மாறுதல் கலந்தாய்வு (நடப்பு கல்வி ஆண்டு) ஆகும். பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரை மாறுதல் கலந்தாய்வு மட்டும் (No Promotion Counselling) அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடக்கக் கல்வித் துறைக்கு மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இரண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது!

Teachers General Transfer counselling 2023 - 2024 - instruction and schedule -Pdf - Download here


Click here for latest Kalvi News 

ENNUM ELUTHUM TRAINING SCHEDULE

 எண்ணும் எழுத்தும் பயிற்சி அட்டவணை!!



Click here for latest Kalvi News 

ENNUM ELUTHUM TIMETABLE

 எண்ணும் எழுத்தும் கால அட்டவணை!!


எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்

 தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் கடந்த 20-ம் தேதி நிறைவடைந்தன. சுமார் 9.2 லட்சம்மாணவர்கள் தேர்வெழுதினர். இதையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணி இன்று (ஏப். 24) தொடங்குகிறது.


இதற்காக தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருத்துதல் பணிகளில் சுமார் 60,000 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.


மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிக ளையும் முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 17-ம்தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Click here for latest Kalvi News 

பள்ளி வாகனங்கள் ஆய்வு: மே மாதத்துக்குள் முடிக்க உத்தரவு

 தனியார் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை ஆண்டுதோறும் ஆய்வு செய்வது வழக்கம். வாகன ஆய்வுப் பணிகளை வருவாய், போக்குவரத்து, கல்வி, காவல் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆண்டு தேர்வு விடுமுறையின்போது மேற்கொள்வர்.


வரும் கல்வி யாண்டை முன்னிட்டு, பள்ளி வாகன ஆய்வுப் பணிகளை மே மாதத்துக்குள் முடிக்குமாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக துறை சார்ந்த உயரதிகாரிகள் கூறியதாவது: பள்ளி வாகன ஆய்வுப் பணிகளை எந்த வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், பள்ளி வாகனங்களின் முன்புறமும், பின்புறமும் கேமராவும், பின்பகுதியில் சென்சார் கருவியும் கட்டாயம் பொருத்த வேண்டும் என கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது.


இதற்கு உயர் நீதிமன்றம் வழங்கிய அவகாசமும் முடிவுற்ற நிலையில், கேமரா, சென்சார் போன்றவை கட்டாயம் பொருத்தியிருக்க வேண்டும். இதனை பின்பற்றும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும். இந்த ஆய்வு தொடர்பான இறுதி அறிக்கையை மே 29-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Click here for latest Kalvi News 

மாவட்ட வாரியாக சிறந்த 3 அரசு பள்ளிகளை தேர்வு செய்ய உத்தரவு

 தொடக்க கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை கல்வி பணியில் முன்னேற்றம் அடையச் செய்யும் விதமாக ஆண்டுதோறும் மாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து, மாவட்ட வாரியாக சுழற்கேடயங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 2021-22-ம் கல்வி ஆண்டில் 114 பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.


அதன் தொடர்ச்சியாக, 2022-23-ம் கல்வி ஆண்டில் சிறந்தபள்ளிகளை தேர்வு செய்ய அந்தந்த மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் தலைமையில் 5 பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியில் இக்குழுவினர் ஆய்வு செய்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மேற்கொண்ட முயற்சி, உள்கட்டமைப்பு வசதி உள்ளிட்ட 15 பிரிவுகளில் தலா 10 மதிப்பெண் என 150 மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும்.


இதில் 135 முதல் 150 வரை, 112 முதல் 135 வரை, 112-க்கு கீழ் என 3 பிரிவுகளில் தர மதிப்பீடு வழங்கி, சிறந்த 3 அரசுப் பள்ளிகளை தேர்வு செய்ய வேண்டும். இப்பணிகளை துரிதமாக முடித்து, பரிந்துரை பட்டியலை வரும் ஏப்.26-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News 

All CEO & DEO (Elementary) Meeting on 28.04.2023 in Chennai - CoSE Proceedings!

 All CEO & DEO (Elementary) Meeting on 28.04.2023 in Chennai - CoSE Proceedings!


Click here for latest Kalvi News 

புதிய EMIS ID பதிவு செய்தல் சார்ந்த வழிகாட்டுதல் குறித்து மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்!

 


மாணவர் சேர்க்கை - புதிய EMIS ID பதிவு செய்தல் சார்ந்த வழிகாட்டுதல் குறித்து மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்!

TNSED EMIS ATTENDANCE NEW APP RELEASED

 

TNSED EMIS ATTENDANCE NEW APP RELEASED


 அனைவரும் ஆசிரியர் மாணவர் வருகை பதிவு செய்ய வேண்டிய புதிய செயலி version  வெளியீடு


DIRECT LINK
👇👇👇👇👇👇👇👇👇👇👇


TNSED Attendance

அரசு & அரசு உதவி பெறும் 🔹தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம் 

🔹 எண்ணும் எழுத்தும் பயிற்சி காரணமாக 1,2,3 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிய மாட்டார்கள் என்பதால்   TNSED Attendance App-இல் Attendance பதிவிடுவதில்   24.04.2023 முதல் 26.04.2023 வரை   பின்வரும்  வழிமுறைகளை பயன்படுத்தவும்.

🔹 For Student Attendance 

 Partially Working என்ற Option-னை Select செய்து எந்தெந்த வகுப்புகள் செயல்படுகிறதோ அதை மட்டும் Select செய்யவும். Reason-இல், Others என்று கொடுக்கவும். 

🔹 Staff Attendance 

🔹 எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு சென்ற ஆசிரியர்களுக்கு  FN & AN Attendance-இல் TR (Training) என்று 3 நாட்கள் பதிவிடவும்.



இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்




Click here for latest Kalvi News 

TNSED Attendance Appல் ( 24-04-2023 முதல் 26-04-2023 வரை) தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் Attendance பதிவிடும் முறை...

 

 

 TNSED Attendance Appல் ( 24-04-2023 முதல் 26-04-2023 வரை) தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் Attendance பதிவிடும் முறை...


அரசு & அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம்


🔹    எண்ணும் எழுத்தும் பயிற்சி காரணமாக 1,2,3ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிய மாட்டார்கள் என்பதால்   TNSED Attendance App-இல் Attendance பதிவிடுவதில்   24.04.2023 முதல் 26.04.2023 வரை   பின்வரும்  வழிமுறைகளை பயன்படுத்தவும்.

🔹 For Student Attendance

 *Partially Working என்ற Option-னை Select செய்து எந்தெந்த வகுப்புகள் செயல்படுகிறதோ அதை மட்டும் Select செய்யவும். Reason-இல், Others என்று கொடுக்கவும். 

🔹 Staff Attendance

🔹 எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு சென்ற ஆசிரியர்களுக்கு  FN & AN Attendance-இல் TR (Training) என்று 3 நாட்கள் பதிவிடவும்.


Click here for latest Kalvi News 

TRB Teachers - Proposed Posting in District Model Schools

 

TRB Teachers - Proposed Posting in District Model Schools


தமிழ்நாட்டில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளில், TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களை மாற்றுப்பணியில் பணிபுரிய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

Model Schools_Teachers Deputation-21.04.2023 - Download here


Click here for latest Kalvi News 

அரசு மாதிரிப் பள்ளிகளில், TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களை மாற்றுப்பணியில் பணிபுரிய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளில், TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களை மாற்றுப்பணியில் பணிபுரிய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.

Model Schools_Teachers Deputation-21.04.2023 - Download here



Click here for latest Kalvi News 

Click here to join whatsapp group for daily kalvinews update  

Breaking News: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - ஆங்கில பாடத்தில் 5 மதிப்பெண்கள் போனசாக வழங்க தேர்வுத்துறை உத்தரவு!!

 


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - ஆங்கில பாடத்தில் 5 மதிப்பெண்கள் போனசாக வழங்க தேர்வுத்துறை உத்தரவு.
தவறாக கேட்கப்பட்ட 3 ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கும், ஒரு 2 மதிப்பெண் கேள்விக்கும் வழங்க உத்தரவு. ஒரு மதிப்பெண் கேள்வி எண்கள் 4, 5, 6 மற்றும் 2 மதிப்பெண் கேள்வி எண் 28க்கும் முழு மதிப்பெண் வழங்க
உத்தரவு.



Click here for latest Kalvi News