எண்ணும் எழுத்தும் | 2023 - 2024 பயிற்சிக்கான Power points , Modules & Time table

 

இம்மாதம் 21,22,23 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள எண்ணும் எழுத்தும் | 2023 - 2024 பயிற்சிக்கான Power points , Modules & Time table


English ppt audio- Click here 


English module 4- Click here 


Maths module - Click here 


Maths ppt audio Videoscribe - Click here 


Tamil PPT AUDIO - Click here 


Tamil Module - Click here 


EE Training Modules-1 - Click here


Preparation Modules - Click here - pdf


EE units Modules - Click here - pdf file


EE - Tamil modules - Click here -pdf file


TLM -1- Click here 

TLM -2- Click here 

TLM -3- Click here 

TLM -4- Click here 

TLM -5- Click here 

Click here for latest Kalvi News 

4 & 5ஆம் வகுப்புகளுக்கு TERM I எண்ணும் எழுத்தும் பயிற்சி மாநில அளவிலான கருத்தாளர் பட்டியல் (ALL DISTRICTS)

 4 & 5ஆம் வகுப்புகளுக்கு TERM I எண்ணும் எழுத்தும் பயிற்சி மாநில அளவிலான கருத்தாளர் பட்டியல்

 (ALL DISTRICTS)...

Ennum ELUTHUM R.P list - Download here


Click here for latest Kalvi News 

4 & 5 ஆம் வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் முதல் பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - SCERT & DEE Proceedings

 

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 

2023 2024 ஆம் கல்வியாண்டில் - 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் சார்ந்து முதல் பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - DIET கல்வியாளர்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்தல் - தொடர்பான செயல்முறைகள்.

EE IV & V STATE LEVEL TRAINING.pdf - Download here

ஜூன் முதல் வாரத்தில் 4,5 வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு


Click here for latest Kalvi News 

நான் முதல்வன் திட்டம் - மாவட்ட அளவிலான உயர் கல்வி வழிகாட்டல் பயிற்சி நடைபெறுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

 


நான் முதல்வன் திட்டம் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் – 10th & 12th வகுப்புத் தேர்வு எழுதிய / எழுதாத / பள்ளி இடைநின்ற மாணவர்கள் தமது கல்வியைத் தொடரத் தகுந்த வாய்ப்பை உருவாக்குதல் - முன்னாள் மாணவர்கள் , பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை வலுப்படுத்த மாவட்ட அளவிலான பயிற்சிகள் - நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

Proceedings for District level training 24.04.2023 to 05.05.2023 revised.pdf




Click here for latest Kalvi News 

கியூட் நுழைவுத் தேர்வு ஜூன் 5ம் தேதி துவக்கம்

 

நாடு முழுதும் உள்ள பல்கலைக்கழகங்களில், முதுகலை படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வு, ஜூன் 5 முதல் 12ம் தேதி வரை நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


நாடு முழுதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர, கியூட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் 'ஆன்லைன்' வாயிலாக கடந்த மாதம் 20ம் தேதி முதல் சமர்ப்பித்து வருகின்றனர். இந்நிலையில், முதுகலை படிப்புக்கான நுழைவுத் தேர்வு தேதிகளை, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:


முதுகலை படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள், வரும் ஜூன் 5 முதல் 12ம் தேதி வரை நடக்கவுள்ளன. தேர்வுகள் காலை, மாலை என இரு வேளைகளில் நடத்தப்படும்.


இது தொடர்பான விபரங்களுக்கு, www.cuet.nta.nic.in என்ற இணையதளத்தை பார்வையிடுமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


முதுகலை படிப்பில் சேர விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஏப்., 19 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது வரும் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Click here for latest Kalvi News 

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., தேர்வு பயிற்சி

 அரசு பள்ளிகளில் படிக்கும், 260 மாணவர்களுக்கு, ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வு பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.


அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு, நீட், கியூட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுக்காக, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், 5,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.


இவர்களில் பலர், ஜே.இ.இ., பிரதான தேர்வில் பங்கேற்றனர்; 260 பேர், ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான நேரடி நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் கருதுகின்றனர்.


எனவே, அந்த மாணவர்களுக்கு, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், உணவு, இருப்பிட வசதி அளித்து, ஜூன் முதல் வாரம் வரை, இலவச பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News 

வீடுகளுக்கே சென்று அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை: முதன்முறையாக தொடக்கம்

 

திருச்சியில் முதன்முறையாக மாணவர்களை அவர்களது வீடுகளுக்கே சென்று பள்ளியில் சேர்க்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.


அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி, துண்டுப் பிரசுரங்கள் வழங்கல் உள்ளிட்ட நிகழ்வுகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.


அந்தவகையில், திருச்சி உறையூர் பாண்டமங்கலம் தெற்கு மாநகராட்சி தொடக்கப் பள்ளி சார்பில் மாணவர்களை அவர்களது வீடுகளுக்கேச் சென்று பள்ளியில் சேர்க்கும் திட்டம் புதிய முயற்சியாக தொடங்கப்பட்டுள்ளது.


இந்த திட்ட தொடக்க விழாவில், கல்வியாளர் எஸ்.சிவகுமார், பள்ளித் தலைமையாசிரியர் டி.லீலாலட்சுமி, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள், இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்கள் என 18 பேர் கொண்ட குழுவினர் வீடுதோறும் சென்று, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை அளித்து, பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில், 20 மாணவ, மாணவிகள் புதிதாக பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.


இத்திட்டம் குறித்து கல்வியாளர் எஸ்.சிவகுமார், 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: பெரும்பாலான கூலித் தொழிலாளர்களுக்கு போதிய நேரம் கிடைக்காததால், அவர்கள் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க காலதாமதம் ஆகிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் வீட்டிலேயே சேர்க்கை திட்டத்தை உருவாக்கினோம். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இத்திட்டத்தின்படி, ஒரேநாளில் 20 குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


மேலும், ரேஷன் கடை அருகே விளம்பர பதாகை வைக்கவும், அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.


இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியர் டி.லீலா லட்சுமி கூறியபோது, “அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் 14 வகையான நலத்திட்டங்களை பெற்றோரிடம் எடுத்துக் கூறினோம். பெற்றோர்களும் ஆர்வத்துடன் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்த்துக் கொண்டனர்” என்றார்.


கரூர் மாவட்டத்தில்... கரூர் கோட்டைமேடு மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் ‘அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.


விழாவில், ஆட்சியர் த.பிரபுசங்கர் பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக, பள்ளிகளில் சேரும் குழந்தைகளுக்கு மாலை அணிவித்து வரவேற்று இனிப்புகள், பாடப் புத்தகங்களை ஆட்சியர் வழங்கினார்.


நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கவிதா, முதன்மைக் கல்வி அலுவலர் கீதா, மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக் கல்வி) மணிவண்ணன், மண்டலக் குழுத் தலைவர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



Click here for latest Kalvi News 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு: மே 17-ம் தேதி முடிவு வெளியீடு

 


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நேற்று நிறைவுபெற்றது. தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளன. தமிழகத்தில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெற்றன.


ஏறத்தாழ 16 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். விடைத்தாள்களை திருத்தும் பணிகள் கடந்த 10-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. அதேபோல, பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த 6-ம் தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவு பெற்றது. இறுதிநாளில் சமூக அறிவியல் பாடத் தேர்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 4,167 மையங்களில் 9.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.


தேர்வு வினாத்தாளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் தவிர்த்து, மற்ற பகுதிகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். பொதுத்தேர்வு முடிந்ததையடுத்து, மாணவ, மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சில பள்ளிகளில் பிரிவு உபச்சார விழாக்கள் நடத்தப்பட்டன.


பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 24-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவு மே 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக கல்வித் துறை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Click here for latest Kalvi News 

அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

 


அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of Enrolling Children in Government Schools)...


  அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of Enrolling Children in Government Schools)...


அரசுப்பள்ளி  நம்பள்ளி....


சேர்த்திடுங்கள் நம் குழந்தைகளை அங்கே...


அரசுப் பள்ளிகளில் 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது 


             அரசு அறிவிப்பு.

✳️LKG முதல்  8ஆம் வகுப்பு வரை .


✳️தெரிந்தவர்கள் புதுப்பித்துக்கொள்க..


✳️ தெரியாதவர்கள் தெரிந்துகொள்க..


✳️அரசுப் பள்ளியில் பயின்றால்...


✳️கட்டணமில்லா கல்வி...


✳️ ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியில்  20% முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.


✳️ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு உயர் கல்வி (மருத்துவம், பொறியியல், வேளாண்மை , சித்த மருத்துவம் , ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம், கலை & அறிவியல் உள்ளிட்ட படிப்புகள்) பயில 


7.5 % முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.


✳️பெண் கல்வி இடைநிற்றலை தவிர்க்க அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவியர்களுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1,000 வீதம் படிப்பு முடியும் வரை வழங்கப்படும்.


✳️6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு இலவச கராத்தே பயிற்சி .


✳️மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500, ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது.


✳️ நலிவடைந்த பிரிவைச்சேர்ந்த மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500 , 


ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000, 


ஏழு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு ரூ 1,500 வழங்கப்படுகிறது.


அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவியர்களுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1,000 வீதம் படிப்பு முடியும் வரை வழங்கப்படும்.


✳️6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு இலவச கராத்தே பயிற்சி .


✳️மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500, ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது.


✳️ நலிவடைந்த பிரிவைச்சேர்ந்த மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500 , 


ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000, 


ஏழு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு ரூ 1,500 வழங்கப்படுகிறது.


✳️விலையில்லா புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கும்...


✳️விலையில்லா  குறிப்பேடுகள்- 3 பருவம்


✳️விலையில்லா சீருடைகள்- 4 செட்.


✳️விலையில்லா புத்தகப்பை.


✳️விலையில்லா காலணிகள்.


✳️வண்ண பென்சில்கள்.


✳️கணித உபகரணப் பெட்டி.


✳️புவியியல்  வரைபட நூல்.


✳️தினந்தோறும்  முட்டையுடன் சத்துணவு.


✳️இலவச பேருந்து பயண அட்டை...


✳️ போட்டிகளில் வெற்றி பெறும் அரசுப்பள்ளி மாணவ மாணவியர் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்...


✳️ அரசுப்பள்ளி மாணவ மாணவியர் வாசிப்பு திறன் வளர்க்க தேன்சிட்டு மாத இதழ்...


✳️ விலையில்லா மிதிவண்டி...


✳️ விலையில்லா மடிக்கணினி...


இன்னும் நன்மைகள் ஏராளம் ஏராளம்....


"அரசுப்பள்ளி வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளம்"


அன்பு பெற்றோர்களே, 


தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பீர்... அவர்களின் வளமான எதிர்காலத்திற்கு அடித்தளமிடுவீர்


Click here for latest Kalvi News 

09.03.2020 க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு தொடர்பான CEO செயல்முறைகள்!!

 


 09.03.2020 க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்காக கருத்துரு இவ்வலுவலகத்தில் பெறப்பட்டது . பார்வை 2 ல் காணும் கடிதத்திற்கிணங்க சென்னையில் சென்று ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது கூடுதல் பிரதிகள் வழங்குமாறு கோரப்பட்டது.

 மீளவும் பார்வை 3 ல் காணும் தொலை பேசிச் செய்தியில் கூடுதல் பிரதி கோரப்பட்டதால் இணைப்பில் காணும் ஆசிரியர்கள் மட்டும் மீளவும் ஏற்கனவே வழங்கிய கருத்துருவினை இரண்டு பிரதிகளில் 24.04.2023 அன்று இவ்வலுவலக ஆ 4 பிரிவு எழுத்தரிடம் தனி நபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு அரசு / நகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


Click here for latest Kalvi News 

காலை உணவு திட்டம் 2023-24 கல்வி ஆண்டு முதல் அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் செயல் படுத்துதல் சார்ந்து SSA SPD அவர்களின் செயல் முறைகள்.!

 

காலை உணவு திட்டம் 2023-24 கல்வி ஆண்டு முதல் அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் செயல் படுத்துதல் சார்ந்து SSA SPD அவர்களின் செயல் முறைகள்.!



SSA SPD Proceeding - Download here...


Click here for latest Kalvi News 

9-ம் வகுப்பு புத்தகத்தில் கலைஞர் ஆற்றிய தொண்டுகள் குறித்த பாடம் இடம்பெறும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

9-ம் வகுப்பு புத்தகத்தில் கலைஞர் ஆற்றிய தொண்டுகள் குறித்த பாடம் இடம்பெறுகிறது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழுக்கு கலைஞர் ஆற்றிய பங்களிப்பு பற்றி செம்மொழியான தமிழ்மொழி என்னும் தலைப்பில் பாடம் என அவர் தெரிவித்தார். 

Click here for latest Kalvi News 

1-3 Std Summattive Assessment - Last Date 27.4.23 - TN EE Mission

 நேற்று server பிரச்சனையால் 1,2,3-ஆம் வகுப்புகளுக்கான Summattive Assessment மதிப்பீட்டு தேர்வு தேதியானது Last Date 27.4.23 வியாழன் வரை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Long absent, CWSN கொடுத்துவிட்டால் மாற்ற இயலாது.

(Long Absent ல் உள்ளவர்களை 27 க்குள்..வருகை தந்து.SA முடித்து விடுங்கள்.நன்றி)

TN EE Mission 

 Click here for latest Kalvi News 

பதவி உயர்வு பெறுவதற்கு TET கட்டாயமில்லை - தொடக்கக் கல்வி இயக்குநர்

 பதவி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமில்லை.


வழக்கம் போல் பழைய நடைமுறைப்படி பதவி உயர்வு பெற தேர்ந்தோர் பட்டியல் ( Panel list ) தயார் செய்யலாம்.

அலுவலர்களுக்கான  GOOGLE  MEET இல் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் அறிவிப்பு.



 மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் இன்று (18.04.2023),  மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க கல்வி),  வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான இணையவழி   (Google meet) கூட்டத்தில் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் எப்போதும் தயாரிப்பது போல் அனைத்து நிலை ஆசிரியர்களையும் முறைப்படுத்தி விதிகளின்படி தயார் செய்யுங்கள்.  பட்டதாரி ஆசிரியர் பதவிஉயர்வு முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கிற போது பணிமூப்பு விதிகளின்படி தயாரிக்க  வேண்டும்.  ஆசிரியர் தகுதி தேர்வு (TET) எவராவது தேர்ச்சி பெற்றிருந்தால் அவர் இடம்பெறும் வரிசைக்கு நேராக ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)   தேர்ச்சி பெற்றவர், என்று குறிப்பு எழுதினால் போதுமானது.

 நீதிமன்றத்தினுடைய மேல்முறையீடு தீர்ப்பு எப்படி வருகிறதோ?.. அதற்குப் பிறகு நாம் என்ன செய்ய வேண்டுமோ?.. அப்படி முறைப்படுத்தி  செய்து கொள்ளலாம்.   ஆகையால் எப்போதும் போல முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

 கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் ஒருவர், பணி  நீட்டிப்பில் இருக்கும் ஆசிரியர்களை ஏப்ரல் 28ஆம் தேதி  விடுவித்திட வேண்டும் என்று  செயல்முறைகள் வந்து கொண்டுள்ளது. அவர்களை கல்வி ஆண்டு முடியும் வரை அனுமதிக்கலாமா?.. என்று இயக்குனர் அவர்களிடம் கேட்டதற்கு அனுமதிக்கலாம், என்று வாய்மொழியாக தெரிவித்துள்ளார்கள்.

24, 25, 26 ஆகிய தேதிகளில் ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு செல்கின்ற போது அந்த வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை.  27, 28 ஆகிய தேதிகளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும்பொழுது அந்த வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்.  என்று கூட்டத்தில்  தெரிவித்துள்ளார்கள்.


 Click here for latest Kalvi News 

சிறந்த பள்ளிகளுக்கான கேடயம் வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

 

2022 - 2023 கல்வி ஆண்டுக்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சிறந்த பள்ளிகளுக்கான கேடயம் வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


Best School 2022 - 2023 Proceedings - Download here



 Click here for latest Kalvi News 

ஹோட்டல் மேனேஜ்மென்ட் நுழைவுத் தேர்வு: மாணவர்களுக்கு இலவச பயிற்சி

 சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு

சென்னை தரமணியில் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு நியூட்ரிஷன் நிறுவனம் செயல்படுகிறது.


இந்நிறுவனத்தில் 12-ம் வகுப்புமுடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவருக்கு பிஎஸ்சி 3 வருட முழுநேர பட்டப்படிப்பு, ஒன்றரைஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டயப் படிப்பு, 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் உணவுதயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர் படிப்பு ஆகியவற்றில் சேர்ந்து படிக்க வழிவகை செய்யப்படும்.


விண்ணப்பதாரர் 10 மற்றும் 12-ம்வகுப்புகளில் குறைந்தபட்சம் 45 சதவீதமதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.


3 வருட முழுநேர பட்டப் படிப்பு (பிஎஸ்சி) பயில தேசிய தேர்வு முகமைமூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில்(என்சிஎச்எம் ஜெஇஇ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் சென்னையில் வழங்கப்படுகிறது. பயிற்சி பெற விரும்புவோர் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் 2023-24-ம்ஆண்டு நடைபெறும் தேர்வுக்கு ஏப்.27-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் விவரங்களுக்கு 044 2524 6344என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


 Click here for latest Kalvi News 

வாட்டி வதைக்கும் வெப்ப அலை பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

 நாடு முழுதும் கோடை வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.


நம் நாட்டில், கோடை வெப்பம் வாட்டி வதைக்கிறது. பெரும்பாலான மாநிலங்களில், 45 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகி வருகிறது.


இதையடுத்து, வரும் 23 வரை, மேற்கு வங்கம், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில், வெப்ப அலை அதிகரிக்கக் கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்நிலையில், வெப்ப அலை எச்சரிக்கை காரணமாக, திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், பள்ளிகளை மூடவும், சில மாநிலங்களில், கோடை கால வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.


இதன்படி, தலைநகர் புதுடில்லியில், மதிய வேளையில் கூட்டங்களை நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.


மேற்கு வங்கத்தில், மலைப் பகுதிகளான டார்ஜிலிங், கலிம்போங் தவிர, மாநிலம் முழுதும் வரும் 24 வரை பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.


இதே போல், வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், வரும் 23 வரை, அனைத்து அரசு பள்ளிகளையும் மூட, முதல்வர் மாணிக் சாஹா உத்தரவிட்டுள்ளார்.


ஒடிசாவில், வெப்ப அலை காரணமாக, பள்ளி, கல்லுாரிகளின் இயங்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


இதன்படி, காலை 6:30 மணி முதல், 11:00 மணி வரை பள்ளி, கல்லுாரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.


பீஹார் தலைநகர் பாட்னாவில், காலை 6:30 மணி முதல், 11:30 மணி வரை அனைத்து பள்ளிகளும் இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.


 Click here for latest Kalvi News 

NMMS - தேசிய வருவாய் வழி, திறன் தேர்வில் தொடர்ந்து சாதிக்கும் மாணவியர்

 தேசிய வருவாய் வழி திறன் தேர்வில், ஜலகண்டாபுரம் அரசு மகளிர் பள்ளி தொடர்ந்து சாதித்து வருகிறது. நடப்பாண்டில், இப்பள்ளியின், 31 மாணவியர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.


தமிழக அரசு, உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு வருவாய் வழி, திறன் படிப்பு உதவித்தொகை தேர்வை பிப்., 25ல் நடத்தியது.


சேலம் மாவட்டத்தில், 705 பள்ளிகளில், 11 ஆயிரத்து, 407 மாணவ - மாணவியர் பங்கேற்றனர். அதன் முடிவு, 15ம் தேதி வெளியானது.


சேலம் மாவட்டத்தில், 495 பேர் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக, ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து மட்டும், 31 மாணவியர் தேர்ச்சி பெற்றனர்.


இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் இத்தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற பெருமையை பெற்றது.


மேலும், ஆறு ஆண்டுகளாக, இத்தேர்வில் இப்பள்ளி மாணவியர் சாதித்து வருகின்றனர். அதன்படி, 95 பேர் இதுவரை தேர்ச்சி பெற்றுள்ளனர்.


நடப்பாண்டு தேர்ச்சி பெற்ற, 31 மாணவியரும், அடுத்த, நான்கு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் தலா, 1,000 ரூபாய் உதவித்தொகை பெற உள்ளனர்.


சாதனை படைத்த ஜலகண்டாபுரம் மாணவியரை, தேர்வுக்கு பயிற்சி அளித்த பட்டதாரி ஆசிரியரான, உதவி தலைமை ஆசிரியர் அருண்கார்த்திகேயன், பொறுப்பு தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பாராட்டினர்.


 Click here for latest Kalvi News