பிளஸ் 2-க்கு பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்? - சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியின் ஆழமான பதில்

 பிளஸ் 2-க்குப் பிறகு படிப்பதற்கு நிறைய படிப்புகள் இருந்தாலும், பள்ளி மாணவர்களுக்கு அதில் அதிக தெளிவு தேவைப்படுகிறது. உயர் கல்வியை எப்படி பார்க்க வேண்டும்? எப்படி அணுக வேண்டும்? அதற்கு எத்தகைய கண்ணோட்டமும் தயாரிப்பும் தேவை? - இந்தக் கேள்விகள் மிகவும் அடிப்படையானவை மட்டுமல்ல; ஆழமானவையும்கூட. இத்தகைய கேள்விகளுக்கு ஆழமாக பதில் அளித்திருக்கிறார் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி.


பிளஸ் டூ தேர்வு எழுதியுள்ள மாணவர்களில் பலருக்கும் அடுத்து என்ன படிப்பது என்பதில் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அத்தகைய மாணவர்களுக்கு உங்கள் வழிகாட்டுதல் என்ன? பொதுவாக அவர்கள் எந்தெந்த படிப்புகளை தேர்வு செய்யலாம் என கூறுவீர்கள்?


“முதலில் தாங்கள் விரும்பும் பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்து படிக்க வேண்டும். பெற்றோர்கள் திணிக்கக் கூடாது. திணிக்கப்பட்டால் மாணவர்களால் முழு மனதோடு படிக்க முடியாது. இதனால், மாணவர்களுக்கு நிறைய பின்னடைவுகள் ஏற்படுகின்றன. எனவே, பிடித்த பாடத்தை படிப்பது என்பது மிகவும் முக்கியம். பெற்றோர்கள் அதை அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, மாணவர்கள் தங்களுக்கு பிடித்ததை படிக்க வேண்டும்.



வணிகவியலில் நிறைய கோர்ஸ்கள் இருக்கின்றன. மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த கோர்ஸ்கள் நிறைய இருக்கின்றன. இவை மட்டுமின்றி, Data Science, Artificial Inteligence ஆகிய பாடங்களும் இருக்கின்றன.


தற்போது ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படிக்கலாம் என யுஜிசி அறிவித்திருக்கிறது. காலையில் ஒரு படிப்பு, மாலையில் ஒரு படிப்பு என படிக்கலாம். மாலையில் படிக்கும் படிப்பை ஆன்லைன் கோர்சாகவும் எடுத்துக்கொள்ளலாம். மெட்ராஸ் ஐஐடியின் BS (Data Science), BS(Electronic System) ஆகிவற்றை மாலையில் படிக்கலாம். மாலையில் படிக்கும் இந்த படிப்புக்கு வயது கட்டுப்பாடு கிடையாது. யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அப்பாவும் மகனும்கூட சேர்ந்துகூட படிக்கலாம். இதில், ஒரு வருடம் மட்டும் படித்துவிட்டு ஃபவுண்டேஷன் சான்றிதழோடு முடித்துக்கொள்ளலாம். 2 வருடங்கள் மட்டும் படித்தால் டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படும். 4 வருடங்கள் படித்தால் பட்டப்படிப்புக்கான சான்றிதழ் வழங்கப்படும். இதை 4 வருடத்தில்தான் முடிக்க வேண்டும் என்பது இல்லை. 6 வருடம் கூட எடுத்துக்கொள்ளலாம்.


இதுமட்டுமின்றி, மாணவர்கள் எந்த கல்லூரியில் படித்தாலும் ஐஐடியில் நடக்கும் வகுப்புகளின் வீடியோக்கள், பாடபுத்தகங்கள், டிஸ்கஷன் ஃபோரம், கேள்வி கேட்டு பதில்களைப் பெறுவது ஆகியவற்றை ஸ்வயம் (https://swayam.gov.in/) என்ற ஒரு வெப்சைட் மூலம் மாணவர்கள் பெற முடியும். ஆண்டுக்கு 40-50 லட்சம் பேர் இதில் பதிவு செய்கிறார்கள். இந்த முறையில் படிப்பவர்களுக்கு நாங்கள் பரீட்சையும் நடத்துகிறோம். அவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் நாங்கள் அவர்களுக்கு கிரேடு கொடுக்கிறோம்.


கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தின் அனுமதியோடு 40% கோர்ஸ்களை இதுபோல் அன்லைனில் படிக்கலாம் என்று AICTE (All India council for Technical education) அறிவித்திருக்கிறது. அப்படி நிறைய மாணவர்கள் மெட்ராஸ் ஐஐடியின் BS(Data Science), BS(Electronic System) படிப்புகளை படிக்கிறார்கள்.”



மாணவர்களைப் போலவே மாணவிகளும் எந்த ஒரு படிப்பையும் தேர்வு செய்ய முடியும் என்றாலும், மாணவிகளுக்கு ஏற்ற படிப்புகள் குறித்து அறிந்து கொள்ள விரும்பும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?


“சுரங்கத் துறை போன்ற சில துறைகள் வேண்டுமானால் பெண்களுக்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம். ஐஐடிஎம்-ஐ பார்த்தீர்களானால் எங்களிடம் 17 துறைகள் இருக்கின்றன. எல்லா துறைகளிலும் மாணவிகள் இருக்கிறார்கள். எனவே, மாணவிகளாலும் மாணவர்களைப் போல் சமமாகப் படிக்க முடிகிறது. நாங்கள் மாணவிகளுக்கு 20 சதவீத இடம் ஒதுக்க வேண்டும். நாங்கள் அதை செய்து வருகிறோம்.”


படிக்கும் காலத்தில் படிப்பைத் தாண்டி மாணவர்கள் எத்தகைய திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்? அதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும்?


“கல்லூரிகளில் மாணவர்கள் பாடம் சார்ந்த அடிப்படைகளை நன்கு தெரிந்து கொள்ள முடியும். அதோடு, அவர்கள் நிறுவனங்களுக்குச் செல்லும்போது அங்கு அவர்களுக்கு ஒரு பிராப்ளம் கொடுக்கப்பட்டால் அதை அவர்கள் எவ்வாறு அப்ரோச் செய்ய வேண்டும் என்பதை நாங்கள் சொல்லிக்கொடுப்போம். படித்து முடித்துவிட்டு நிறுவனங்களுக்குச் செல்லும்போது அங்கு அவர்கள் ஒரு குறிப்பிட்ட மென்பொருள் மூலம் பணிகளை மேற்கொள்வார்கள். அந்த மென்பொருள் மூலம் நாங்கள் சொல்லிக்கொடுக்காவிட்டாலும், அந்த மென்பொருள் என்ன செய்கிறது என்பதை அவர்கள் கற்றுக்கொள்வார்கள். அதோடு, அங்கு சொல்லிக்கொடுப்பது இவர்களுக்கு நன்கு புரியும்.


உயர் கல்வி நிறுவனங்களின் நோக்கம், மாணவர்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்வது; அதோடு, அவர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பினால் அதற்கான அடிப்படையை கற்றுத் தருவது.


மாணவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, அவர்கள் படிக்கும் பாடத்திற்கான ரெபரன்ஸ் புத்தகங்களில் ஏதேனும் ஒன்றை முன் அட்டை முதல் பின் அட்டை வரை முழுமையாக படிக்க வேண்டும். முன் அட்டை முதல் பின் அட்டை வரை வகுப்புகளில் பாடம் நடத்த முடியாது. முக்கியமானதை சொல்லிக்கொடுப்பார்கள். புரியும்படி சொல்லிக்கொடுப்பார்கள். பள்ளி வகுப்புகளைப் போல் இங்கு வகுப்புகள் இருக்காது. பள்ளிகளில் வரி வரியாக சொல்லிக்கொடுப்பார்கள். இங்கு வரிவரியாக சொல்லிக்கொடுக்க மாட்டார்கள். ஏனெனில், அது பொறியல் படிப்புக்கான வழி அல்ல.


ஒரு பாடம் சொல்லிக்கொடுக்கப்பட்ட பிறகு அதில் உள்ள பிராப்ளம்களை மாணவர்கள் தாங்களாகவே சால்வ் செய்ய வேண்டும். பிராப்ளம் சால்விங் ரொம்ப ரொம்ப முக்கியம். இதை செய்யத் தொடங்கிவிட்டால் பொறியியலில் நல்ல நுட்பம் வந்துவிடும். பிராப்ளம் சால்விங் பயிற்சி நன்றாக இருந்தால் வேலை கிடைப்பது எளிதாகிவிடும். வேலை பெறுவதற்காக தனியாக பயிற்சி பெறத் தேவை இருக்காது.


நிறைய கல்லூரி மாணவர்கள் எங்களிடம் வந்து கேட்பார்கள். பிளேஸ்மென்ட்டுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று. நாங்கள் சொல்வது இதுதான், பாடத்தை நன்றாக படித்துக்கொள்ளுங்கள். வேலை தானாக வரும்.”


எம்பிஏ படிப்பு யாருக்கு ஏற்றது? எம்பிஏ படிக்க விரும்புபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?


“நிர்வாகத் திறன் என்பது மிகவும் முக்கியம். சில நிர்வாகத் திறன்களை பிடெக்-லேயே சொல்லிக்கொடுக்கிறோம். இன்றைக்கு நிர்வாகம் என்பது தொழில்நுட்பத்தை சார்ந்ததாக மாறி இருக்கிறது. எனவே, தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் எம்பிஏ படித்தால் அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு, ஒரு சிவில் இன்ஜினியர், எம்பிஏ படித்திருந்தால் அது அவருக்கு இன்னும் சிறப்பாக கைகொடுக்கும். இதேபோல்தான், நிதித்துறையாக இருந்தாலும், வேறு துறையாக இருந்தாலும்.


மேலும், நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் வரத் தொடங்கிவிட்டது. எனவே, பொறியியல் படித்தவர்கள், தொழில்நுட்பம் படித்தவர்கள் எம்பிஏ படிப்பது அவசியமாகி இருக்கிறது.”


வெளிநாடுகளில் படிக்க விரும்புபவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன? அவர்கள் என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்?


“இந்தியாவிலேயே நிறைய படிப்புகள் இருக்கின்றன. இந்தியாவிலேயே படிக்கலாம். ஒருவேளை வெளிநாடுகளில் படிக்க வேண்டும் என்றால் அதில் தவறில்லை. டாப் 50 பல்கலைக்கழகங்களில் பல வெளிநாடுகளில் இருக்கின்றன. அமெரிக்கா மட்டுமல்ல, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தைவான் என பல நாடுகளிலும் சிறந்த பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அந்த பல்கலைக்கழகத்தின் ரேங்கிங்கை கருத்தில் கொண்டு நீங்கள் சேரலாம். அதுபோன்ற பல்கலைக்கழகங்கள் தனியாக நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன. சில பல்கலைக்கழகங்கள் நுழைவுத் தேர்வு இன்றியும் மாணவர்களை சேர்க்கின்றன.


என்னைப் பொறுத்தவரை பிஹெச்டி படிக்க வெளிநாடு செல்லலாம். இந்தியாவிலேயேகூட பிஹெச்டி படிக்கலாம் என்றாலும், வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் படிஹெச்டிக்காக செல்லலாம். மாஸ்டர் டிகிரிக்காக செல்வதைவிட பிஹெச்டிக்காக செல்வது நல்லது.”


மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க உங்கள் டிப்ஸ் என்ன சார்?


“பிடித்த பாடத்தை தேர்ந்தெடுத்திருந்தால் நிச்சயம் படிப்பில் கவனமாக இருப்பார்கள். ஒருவேளை கிடைத்ததை தேர்ந்தெடுத்துவிட்டாலும் பரவாயில்லை. பிடித்த மற்றொரு படிப்பை ஆன்லைனில் படிக்கலாம். ஏனெனில், தற்போது ஒரே நேரத்தில் இரண்டு டிகிரி படிக்க முடியும். கணினி மென்பொறியாளர் என்பது தற்போது பெரிதானதாக கருதப்படுவதில்லை. பொறியாளர் என்பதுதான் முக்கியம் என்ற கட்டாயத்துக்கு நாம் வந்திருக்கிறோம். அதானால்தான் தற்போது எல்லாமே Interdisciplinary education ஆக மாறிக்கொண்டிருக்கிறது.


ஒரு ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டால் அதில் கணினி மென்பொருள் இருக்கிறது. எலக்ட்ரிக் இருக்கிறது. எலக்ட்ரானிக்ஸ் இருக்கிறது. மெக்கானிக்கல் இருக்கிறது. மெட்டலாஜி இருக்கிறது. இப்படி 7-8 சேர்ந்ததுதான் ஒரு சின்ன ஸ்கூட்டரே. வாஷிங் மெஷினை எடுத்துக்கொண்டாலும் இத்தனையும் நாம் பேச முடியும்.


சமூகத்துக்குத் தேவையான ஒரு பொருளை நாம் தயாரிக்க வேண்டும் என்றால், இந்த Interdisciplinary knowledge நமக்குத் தேவைப்படுகிறது. எனவே, இரண்டாவதாக ஒரு பட்டப்படிப்பை படிப்பதற்கான வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.”


சென்னை ஐஐடி-யின் கண்டுபிடிப்புகள், சமூகத்துக்கான பங்களிப்புகள் குறித்து...


“தற்போது நாங்கள் innovation and entrepreneurship-ஐ பெரிதாகக் கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். சமூகத்துக்குத் தேவையான பல்வேறு திட்டங்களை நாங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். Rural Technology Incubater என்று ஒன்று இருக்கிறது. இதன்மூலம் கிராமப்புறங்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.


Centre for innovation என்று ஒன்று வைத்திருக்கிறோம். இதன்மூலம் ஒரு ஐடியாவோடு வந்தால் அதனை டிசைனாக மாற்றுகிறோம். டிசைனை ப்ராடக்டாக மாற்றுகிறோம். ப்ராடக்ட்டை ப்ரோட்டோ டைப்பாக மாற்றுகிறோம். ப்ரோட்டோ டைப்பை அவர்கள் ஸ்டார்ட் அப்பாக எடுத்து நடத்தலாம். இப்படி 300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஐஐடி மெட்ராஸ் மூலம் உருவாக்கி இருக்கிறோம்.


அடுத்ததாக டென் எக்ஸ் என ஒரு ப்ரோக்ராம் செய்திருக்கிறோம். இதன்மூலம் எல்லா Incubater-ஐயும் நாங்கள் சேர்ந்து கொண்டு வருகிறோம். ஒரு கல்லூரியில் Incubater செல் இருக்குமானால் அவர்கள் எங்கள் Incubater-ரோடு சேர்ந்து செயல்படலாம். ஒரு கல்லூரியில் இன்குபேட்டர் இல்லை என்றாலும், அந்த நிறுவனங்களுக்கு நாங்களே நேரடியாக எங்களால் முடிந்த மென்ட்டைார்ஷிப்பையும் நாங்கள் செய்கிறோம்.


இப்படி ஒட்டுமொத்த இன்குபேட்டர் மற்றும் entrepreneurship கான்சப்டை பெரிதாக எடுத்துச் செல்வதற்காக ஐஐடி மெட்ராஸ் நிறைய வேலை செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இரண்டு ப்ராடக்ட்டுகள் குறித்து சொல்கிறேன். ஒன்று செப்டிக் டேங்க் கிளீனர். இது தற்போது வர்த்தக ரீதியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மனிதக் கழிவுகளை மனிதர்களே எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறது. எனவே, அந்த ப்ராடக்ட் தற்போது பல பஞ்சாயத்துக்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


இதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம். வீல் சேரில் வருபவர்கள் நேராக அந்த வாகனத்தில் ஏறி அதனை ஓட்டிச் செல்லலாம்.


செயற்கை கால். ஃபேண்ட் போட்டுக்கொண்டால் செயற்கைக் கால் இருப்பதே தெரியாது. அவர்களால் மற்றவர்களைப் போலவே நடக்க முடியும். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது. இப்படி சமூகத்துக்குத் தேவையானபல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.


மாணவர்கள் தற்கொலைக்கான காரணங்கள் என்னென்ன? இதனை எவ்வாறு தடுப்பது?


“படிப்பு சார்ந்த சிரமங்கள், தனிப்பட்ட சிரமங்கள், நிதி சார்ந்த சிரமங்கள், மருத்துவ பிரச்சினைகள் என இதற்கு நான்கு காரணங்கள் இருக்கின்றன. இந்த நான்குமே கலந்தும் இருக்கலாம். இந்த கோவிட் காலத்தில் மாணவர்களின் சமூக தொடர்பும் குறைந்துபோய்விட்டது. மாணவர்களில் பலர் வீட்டிலேயே இருந்துவிட்டு திடீரென கல்லூரிக்கு வருகிறார்கள். இது சமூகம் சார்ந்த சிரமங்களை ஏற்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனமும் ஒப்புக்கொண்டிருக்கிறது.


மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த செயல்களைச் செய்ய முடிந்தால் அவர்களுக்கு மன அழுத்தம் இருக்காது. இரண்டாவது, இணை திறன் அதாவது ஏதாவது பாடல் பாடுவது, ஆடுவது, இசை இசைப்பது, ஓவியம் வரைவது, போட்டோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு மன அழுத்தம் குறைவாகவே இருக்கிறது. எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சிறியவர்களாக இருக்கும்போதே, ஏதாவது ஒன்றில் ஈடுபாடு கொள்பவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.”


நாட்டின் வளர்ச்சிக்கும் அதன் எதிர்கால இலக்குகளை அடையவும் நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?


“வரும் 2047-ல் இந்தியா வல்லரசாக மாற வேண்டும். இன்றைய மாணவர்கள், இளைஞர்கள் நாளை தலைவர்களாக வர வேண்டும். இதற்கு இந்தியாவில் நிறைய வேலை வழங்குபவர்கள் தேவை. வேலை பார்ப்பவர்கள் தேவை. இதற்கு எல்லோரும் innovation and entrepreneurship-ல் கவனம் கொடுக்க வேண்டும்.


நீடித்த நிலையான வளர்ச்சி என்பது மிகவும் முக்கியமானது. எதிர்காலத்திலும் இதேபோன்ற மின்சாரம் கிடைக்குமா; தண்ணீர் கிடைக்குமா; காற்று கிடைக்குமா; சுற்றுச்சூழல் கிடைக்குமா என்ற கேள்விகள் முக்கியமானவை. நீடித்த நிலையான வளர்ச்சிக்கு இப்படி 17 நீடித்த நிலையான வளர்ச்சிக்கான விஷயங்கள் இருக்கின்றன. நாம் படிக்கும் எல்லா படிப்புமே இந்த நீடித்த நிலையான வளர்ச்சியோடு இணைந்து போக வேண்டும்.


நீடித்த நிலையான வளர்ச்சிக்கான 17 இலக்குகள் குறித்து அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும். குழைந்தைகளுக்கும் எடுத்துக்கூற வேண்டும். இதற்கு ஏற்ப நாமும் யோசிக்க பழக வேண்டும். நீடித்த நிலையான வளர்ச்சிக்காக நாம் பல்வேறு உத்தரவாதங்களை வழங்கி இருக்கிறோம். கரியமில வாயுவை பூஜ்ஜியமாக குறைப்போம் என கூறி இருக்கிறோம். இதை குறுகிய காலத்தில் நாம் அடைய வேண்டுமானால், அரசின் கட்டுப்பாடுகளால் முடியாது. பொதுமக்கள் அனைவரின் பங்களிப்போடு இது நிகழ வேண்டும்.


நான்காவது, நாம் எல்லாவற்றையும் பேட்டர்ன் செய்ய வேண்டும். நமது ஐடியாவை நாம் ப்ரடக்ட் செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அதன் முழுமையான தாக்கம் நமக்கு கிடைக்கும். எனவே, கல்லூரி அளவிலும் சரி , தனி நபர் அளவிலும் சரி தங்களுக்கு கிடைக்கும் ஐடியாவை பேட்டர்ன்செய்ய வேண்டும் என எண்ண வேண்டும். இந்தியா வல்லரசாக மாற இது மிகவும் முக்கியம்.”



 Click here for latest Kalvi News 

விடைத்தாள் திருத்தும் பணி : தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு!!

 விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் வந்தால்தான் அப்பள்ளியின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் போதுமான அளவில் வராததால் தேர்வுத்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


 Click here for latest Kalvi News 

School Education - New Student Admission Form 2023 - 2024

 பள்ளிக்கல்வித்துறை  - புதிய மாணவர் சேர்க்கை விண்ணப்பம்


School Education - New Student Admission Form 2023 - 2024 | Download here


 Click here for latest Kalvi News 

1 - 3ஆம் வகுப்புக்கான ஆண்டு இறுதி மதிப்பீட்டு தேர்வு ( SA ) - தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்னும் தொடங்கப்படவில்லை

 1 - 3ஆம் வகுப்புக்கான ஆண்டு இறுதி மதிப்பீட்டு தேர்வு ( SA ) - தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்னும் தொடங்கப்படவில்லை. விரைவில் சரிசெய்யப்படும் EMIS Team தெரிவித்துள்ளது.

Dear teachers, the team is working on enabling the summative assessment. We will let you know when you an start. Apologies for the delay and thank you for your patience.


 Click here for latest Kalvi News 

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பிரச்சாரம் துவக்கம் - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு!

 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பிரச்சாரம் துவக்கம் - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு!

Press-release-Enrollment-campaign.pdf


 Click here for latest Kalvi News 

தற்போது மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் EE தொகுத்தறி மதிப்பீடு SA Enable செய்யப்பட்டுள்ளது.

 தற்போது மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் EE தொகுத்தறி மதிப்பீடு SA   Enable செய்யப்பட்டுள்ளது. அனைவரும் ஒருமுறை தங்களுடைய TNSED Schools செயலில் Logout செய்துவிட்டு மீண்டும் Loginசெய்தால் தொகுத்தறி மதிப்பீட்டை முடிக்கலாம்.


EE EMIS Team


 Click here for latest Kalvi News 

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க, மாணவர் சேர்க்கைக் கொண்டாட்டம் கொண்டாடுதல் சார்பாக CoSE & DEE ன் இணை செயல்முறைகள்!

 


மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க, மாணவர் சேர்க்கைக் கொண்டாட்டம் கொண்டாடுதல் சார்பாக CoSE & DEE ன் இணை செயல்முறைகள்!

Admission Proceedings - Download here


 Click here for latest Kalvi News 

NMMS 2023 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 15 பிற்பகல் 1 மணிக்கு வெளியீடு.

 

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித்தொகை பெறுவதற்கான தேர்வு ( NMMS EXAMINATION ) . 25.02.2023 அன்று நடைபெற்றது , இத்தேர்வில் 2,22,985 மாணவர்கள் பங்கு பெற்றனர் . இத்தேர்வின் முடிவுகள் 15.04.2023 அன்று பிற்பகல் 1.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது . எனவே இத்தேர்வெழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Results என்ற தலைப்பில் சென்று தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித்தொகை பெறுவதற்கான தேர்வு ( NMMS EXAMINATION ) - முடிவுகள் பிப்ரவரி 2023 என்ற பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து தாங்கள் பெற்ற மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.


மேலும் இத்தேர்விற்கான ஊக்கத்தொகைக்கான தெரிவு செய்யப்பட்ட பட்டியலும் இவ்விணையதளத்திலே National Means Cum Merit Scholarship Scheme Examination என்ற பக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது .  


 Click here for latest Kalvi News 

கனவு ஆசிரியர் 2023 - பங்கேற்காத ஆசிரியர்களுக்கு மறு தேர்வு அறிவிப்பு.

 அன்புள்ள ஆசிரியர்களே , 

கனவு ஆசிரியர் 2023 - ல் பங்குபெற பதிவு செய்த ஆசிரியர்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதல் நிலையை நிறைவு செய்ய இயலாத 8730 ஆசிரியர்களுக்கு மட்டும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிறுவனம் ( TN SCERT ) 18.04.2023 அன்று மாலை 6.30 மணி முதல் 7.15 மணி வரை மறுதேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது.

 மேலும் தகவல் அறிய http://exams.tnschools.gov.in/login என்ற இணையதளத்தில் இந்த 8730 ஆசிரியர்கள் மட்டும் தங்களுடைய 8 இலக்க EMIS பயனர் எண் மற்றும் கடவுச்சொல் உதவியுடன் விவரங்களை அறியலாம்.


இது சார்ந்து ஏதேனும் பின்னூட்டம் , சந்தேகம் அல்லது புகார் இருப்பின் support@tnschools.gov.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.


கனவு ஆசிரியர் 2023 மறுதேர்வு - பங்கேற்பாளர் பட்டியல்.pdf - Download here


எண்ணும் எழுத்தும் | 2023 - 2024 பயிற்சிக்கான Power points , Modules & Time table

 இம்மாதம் 21,22,23 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள எண்ணும் எழுத்தும் | 2023 - 2024 பயிற்சிக்கான Power points , Modules & Time table


English ppt audio- Click here 


English module 4- Click here 


Maths module - Click here 


Maths ppt audio Videoscribe - Click here 


Tamil PPT AUDIO - Click here 


Tamil Module - Click here 


EE Training Modules-1 - Click here


Preparation Modules - Click here - pdf


EE units Modules - Click here - pdf file


EE - Tamil modules - Click here -pdf file


TLM -1- Click here 

TLM -2- Click here 

TLM -3- Click here 

TLM -4- Click here 

TLM -5- Click here 


 Click here for latest Kalvi News 

கிராம பள்ளி மாணவர்களுக்கு மெய்நிகர் உண்மை கல்வி மாதிரி

 கிராமப்புற பள்ளி மாணவர்கள், தொழில்நுட்பங்கள் வாயிலாக கற்றல் திறன் பெறும் 'விர்ச்சுவல்ரியாலிட்டி' கல்வி மாதிரியை, சென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம் உருவாக்கியுள்ளது.


சென்னை ஐ.ஐ.டி., தொழில்நுட்ப கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு, 'விர்ச்சுவல் ரியாலிட்டி' எனும் மெய்நிகர் உண்மை அடிப்படையிலான கல்வி மாதிரியை உருவாக்கும் பணியில், சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


அதாவது, பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான கற்றல், கற்பித்தல் மாதிரிகளை, 'டிஜிட்டல்' தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மேற்கொள்வதாகும்.


இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி முறையானது, மாணவர்களுக்கு அதிவேக மற்றும் அனுபவக் கற்றல் சூழலை வழங்கும். அதனுடன், மாணவர்கள் புரிந்து படிக்கவும் வழி செய்யும்.


அதேபோல், தொழில்நுட்பங்கள் மூலமாக கற்பித்தல் பணிகளை மேற்கொண்டால், மாணவர்களின் கற்றல் வலுப்பெறும்.


மேலும், மாணவர்கள் உயர் கல்விக்கு தங்களை தயார் செய்து கொள்ள உதவியாகவும் இருக்கும். இதன் வாயிலாக, நேரடி வகுப்பறைகளில் உள்ள சிரமங்கள் களையப்படும்.


இதன் துவக்கமாக, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மெரின் சிமிராஜ், அவிஷேக் பாரூய் ஆகியோர் 'மெமரிபைட்ஸ்' எனும் மொபைல் போன் செயலியை உருவாக்கிஉள்ளனர்.


இந்த செயலி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., தளங்களில் செயல்படக்கூடியது. அனைத்து நாடுகளிலும் சமமான, தரமான கல்வியை உறுதி செய்தல் எனும், ஐ.நா., சபையின் இலக்கை அடைய, இந்த திட்டம் உதவும்.


இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வரலாறு, மொழிப் பாடங்கள், அறிவியல் உள்ளிட்ட பாடங்களை பயிற்றுவிக்கலாம்.


இந்த திட்டம், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்கள் இடையே நிலவும் தொழில்நுட்ப இடைவெளியை இணைக்கும் பாலமாக அமையும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


 Click here for latest Kalvi News 

ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் தேர்வு

 ரஷ்யாவில் உள்ள யூரி ககாரின் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட, அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதேபோல் ஆசிரியர், மாணவர்கள் வெளிநாடு செல்லவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


அரசு பள்ளி மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் விதமாக ‘ராக்கெட் சைன்ஸ்’ என்ற இணையவழி பயிற்சி வகுப்பில் தமிழகத்தில் உள்ள, 56 அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 500 மாணவர்கள் பங்கேற்றனர். இரண்டாம் கட்டபயிற்சிக்கு 220 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 130 மாணவர்கள் மூன்றாம் கட்ட பயிற்சிக்கு தேர்வாகினர். நிறைவாக 50 பேர் தமிழக அரசின் ஆதரவுடன் ஜூன் மாதம் ரஷ்யா நாட்டில் உள்ள யூரி ககாரின் விண்வெளி ஆய்வு மையத்தைபார்வையிட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இவர்களில் தாம்பரம் மாநகராட்சி, ஜமீன் பல்லாவரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் ரோஹித், லத்தாஷா ராஜ்குமார், இலக்கியா, முகமது சாதிக், ரக் ஷித் ஆகிய 5 பேரும் அடங்குவர். இதில், ரோஹித் முதலிடம் பிடித்துள்ளார். இதற்காக உழைத்த ஆசிரியை விஜயலட்சுமியை எம்எல்ஏ இ.கருணாநிதி உள்ளிட்டோர் பாராட்டினர்.


வெளிநாடு சுற்றுலா: செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி அளவில் மற்றும் வட்டார, மாவட்ட, மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவர்களின் திறன் கண்டறியப்பட்டது.


இதில் சிறார் திரைப்பட மன்றப் போட்டியில் ஜமீன் பல்லாவரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர் லத்தாஷா ராஜ்குமார், சோழிங்கநல்லூர் அரசு பள்ளிமாணவர் ஆர்.ராகுல் தேர்வு பெற்றனர். அதேபோல் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் குரோம்பேட்டை அரசு பள்ளி மாணவர் ஏ. யுவாஷ், பல்லாவரம் மறைமலை அடிகளார் பள்ளி மாணவி கே.ராஜலட்சுமி தேர்வு பெற்றனர். இந்த 4 மாணவர்களும் வெளிநாடு செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.


மேலும் வெளிநாட்டு கல்வி சுற்றுலாவுக்கு வேடவாக்கம் பள்ளிஆசிரியர் டி.சேகர், வாயலூர் பள்ளிஆசிரியர் முகமது அர்ஷாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று 38 மாவட்டங்களிலும் போட்டிகள் நடத்தப்பட்டு, 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் செங்கை மாவட்டத்தில் இருந்து மட்டும் 4 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


 Click here for latest Kalvi News 

HOW TO UPDATE THE NS - NOP IN EMIS PORTAL

 

HOW TO UPDATE THE NS - NOP IN EMIS PORTAL 

USING SCHOOL LOGIN USER NAME AND PASSOWORD

Download here pdf ...



 Click here for latest Kalvi News 

4,5ஆம் வகுப்புக்கான ஆண்டு தேர்வு வினாத்தாள் & விடைகள் EMIS இணையத்தில் வெளியீடு.

 

4,5ஆம் வகுப்புக்கான ஆண்டு தேர்வு வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


ஆனால் வாட்ஸ் ஆப்பில் பகிரக்கூடாது என தகவல்.

4,5th Term 3 SA Question And Answers - 66 Pages Single file - Download here

வினாத்தாள்கள் மற்றும் அதற்கான விடைக்குறிப்புகளையும் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தயாரித்து பதிவிறக்கம் செய்யத்தக்க வகையில் பின்வரும் இணைப்புகளில் 13.04.2023 இன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


https://emistmschoolsgov.in/login என்னும் URL வழியாகவோ 

அல்லது 

• https://examstnsehoolsgov.in/login என்னும் URI 

வழியாகவோ பள்ளிகள் தங்களது xhool UDISE Login ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . 

* மேற்கூறிய URL ஐ ஆசிரியர்கள் தங்கள் கைபேசியைப் பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


 Click here for latest Kalvi News 

ஏப்ரல் 2023 மாத நுழைவுத் தேர்வுகள் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

 


ஏப்ரல் 2023 மாத நுழைவுத் தேர்வுகள் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

EMIS - பணிமாறுதலுக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது - விரைவில் கலந்தாய்வு!!!

 EMIS இணையதளத்தில் ஆசிரியர்களின் தனிப்பட்ட உள்நுழைவில் (Individual Login) பணிமாறுதலுக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் பணி மாறுதல் கலந்தாய்வுக்கான செயல்முறைகள் வெளியிடப்படும் என தெரிகிறது!



 Click here for latest Kalvi News 

4 & 5 - மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் விடைகளை பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் வெளியீடு.

 

4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வு ( தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு ) நடத்துதல் சார்ந்து அறிவுரை வழங்குதல் தொடக்கக்கல்வி இயக்குநரின் புதிய செயல்முறைகள்...


பார்வையில் குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்தில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு தமிழ் , ஆங்கிலம் , கணக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டிற்கான வினாத்தாள்கள் மற்றும் அதற்கான விடைக்குறிப்புகளையும் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தயாரித்து பதிவிறக்கம் செய்யத்தக்க வகையில் பின்வரும் இணைப்புகளில் 13.04.2023 அன்று பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.


https://emistmschoolsgov.in/login என்னும் URL வழியாகவோ 

அல்லது 

• https://examstnsehoolsgov.in/login என்னும் URI 

வழியாகவோ பள்ளிகள் தங்களது xhool UDISE Login ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . 

* மேற்கூறிய URL ஐ ஆசிரியர்கள் தங்கள் கைபேசியைப் பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .


 Click here for latest Kalvi News 

கோடை விடுமுறைக்குப்பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?

 தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பின், ஜுன் 1 அல்லது 5ம் தேதிகளில் பள்ளிகள் திறப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இம்மாத இறுதியுடன் முடிவடையவுள்ளன.


இதன் பின்னர் மே மாதம் கோடை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனால், பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே எழுந்துள்ளது.


இந்நிலையில், கோடை விடுமுறைக்குப்பின், ஜுன் 1 அல்லது 5-ம் தேதிகளில் பள்ளிகளை மீண்டும் திறக்க கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.




 Click here for latest Kalvi News 

NET தேர்வுக்கு விண்ணப்பிக்க 17 வரை அவகாசம் நீட்டிப்பு

 'நெட்' தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.


பல்கலை மற்றும் கல்லுாரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கு மத்திய அரசின் உதவி பெறவும், 'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுகளை, தேசிய தேர்வுகள் முகமை, ஆண்டுக்கு இருமுறை கணினி வழியில் நடத்துகிறது.


அதன்படி, நடப்பாண்டுக்கான சி.எஸ்.ஐ.ஆர்., நெட் தேர்வு ஜூன் 6 முதல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு, கடந்த மார்ச், 10ல் துவங்கி ஏப்., 10ல் நிறைவு பெற்றது.


இந்நிலையில், பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று, நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்.,17 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. விருப்பமுள்ள பட்டதாரிகள் csirnet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள ஏப்., 19 முதல், 25ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும்.


இது குறித்த கூடுதல் விபரங்களை, https://nta.ac.in/ எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.


ஏதேனும் சந்தேகம் இருப்பின், csirnet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது, 011- - 4075 9000 / 011- - 6922 7700 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று, தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.


 Click here for latest Kalvi News 

அரசுப் பள்ளிகளில் 4, 5-ம் வகுப்புகளுக்கு இறுதி பருவத் தேர்வு: தொடக்கக் கல்வித் துறை வழிமுறைகள் வெளியீடு

 தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பில் 4, 5-ம் வகுப்புகளில் உள்ள தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான 3-ம்பருவ தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள், அதற்கான விடைக்குறிப்புகள் தமிழ், ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை எமிஸ் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.


அவற்றை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நாளைமுதல் (ஏப்ரல் 13) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி எஸ்சிஇஆர்டி வழங்கும் தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள் அல்லது பள்ளிகளில் ஆசிரியர்களே தயாரிக்கும் வினாத்தாள்களை கொண்டு பருவத்தேர்வை நடத்திக் கொள்ளலாம்.


இதுதவிர ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மூலமாக மதிப்பீடு செய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு பிரிண்ட்டர் வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், திருச்சி, சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு பிரிண்ட்டர் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்பட்ட பிரிண்ட்டர்களை பயன்படுத்தி வினாத்தாள்களை பிரதி எடுத்து தேர்வை நடத்த வேண்டும். இதுசார்ந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



 Click here for latest Kalvi News 

1 முதல் 3ம் வகுப்பு வரை வரை... தமிழக அரசு பள்ளி மாணவர்கள் ரெடியா?

 தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இறுதித் தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வரும் ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்து வரும் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய உத்தரவு ஒன்று வந்துள்ளது. 

மதிப்பீட்டு தேர்வுகள்

அதாவது சுருக்க மதிப்பீட்டு தேர்வுகள் (Summative Assessment Test) ஆன்லைனில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் வரும் ஏப்ரல் 17 முதல் 21ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 60 மதிப்பெண்கள் கொண்ட தேர்வாக நடைபெறும். இதற்காக ஆசிரியர்களின் மொபைல் போன்களை பயன்படுத்தி கொள்ளலாம். அதேசமயம் ஆஃப்லைனில் தேர்வுகளை நடத்தவும் ஆசிரியர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

க்யூ-ஆர் கோடு முறை

அதாவது, ஒர்க் புக்கில் மதிப்பீட்டு கேள்வித் தாள்களில் இருக்கும் க்யூ-ஆர் (QR Code) கோடுகளை ஸ்கேன் செய்து மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தலாம். மேற்குறிப்பிட்ட தேர்வுகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கவனிக்கும் திறன், எழுத்தாற்றல், பேசும் திறன், படிக்கும் திறன் ஆகியவை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பரிசோதனை செய்யப்படும்.

என்னென்ன பாடங்கள்

கணக்கு பாடத்தை பொறுத்தவரை எண்களை அடையாளம் காணுதல், பொருத்துதல், புரிந்து கொள்ளும் திறன் ஆகியவை பரிசோதிக்கப்படும். சுற்றுச்சூழல் அறிவியல் பாடத்திற்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகியவற்றுடன் சேர்த்து கேள்விகள் கேட்கப்படும். எஞ்சிய பாடங்களில் இருந்து செயல் திட்டங்கள் அளிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எண்ணும் எழுத்தும் திட்டம்

ஆன்லைன் மதிப்பீட்டு தேர்வில் கொள்குறி எனப்படும் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகளாக கேட்கப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் கடந்த ஆண்டு ’எண்ணும் எழுத்தும்’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, 8 வயது வரையுள்ள அனைத்து மாணவர்களும் எழுத, படிக்க, அடிப்படை கணக்கு போட தெரிந்திருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு வசதி

அதுமட்டுமின்றி மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு நடனம், பாடல்கள், கதை சொல்லுதல், பொம்மலாட்டம் ஆகியவற்றின் மூலம் எழுத மற்றும் படிக்கும் திறன்கள் கற்று தரப்படும். இந்த திட்டம் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஆஃப்லைன் முறை

இந்நிலையில் ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் தேர்வுகளால் நேரம் வீணாவதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே ஆஃப்லைனில் தேர்வுகளை நடத்துவதே சரியாக இருக்கும் எனக் கருதி, அதற்கான ஏற்பாடுகளை செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது



 Click here for latest Kalvi News 

ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள் வரை ஊதிய உயர்வுக்கு அரசு ஊழியர்கள் தகுதியுடையவர்கள்

 ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள் வரை ஊதிய உயர்வுக்கு அரசு ஊழியர்கள் தகுதியுடையவர்கள் 

(பத்திரிக்கை செய்தி)


 Click here for latest Kalvi News