எண்ணும் எழுத்தும் | 2023 - 2024 பயிற்சிக்கான Power points , Modules & Time table

 இம்மாதம் 21,22,23 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள எண்ணும் எழுத்தும் | 2023 - 2024 பயிற்சிக்கான Power points , Modules & Time table


English ppt audio- Click here 


English module 4- Click here 


Maths module - Click here 


Maths ppt audio Videoscribe - Click here 


Tamil PPT AUDIO - Click here 


Tamil Module - Click here 


EE Training Modules-1 - Click here


Preparation Modules - Click here - pdf


EE units Modules - Click here - pdf file


EE - Tamil modules - Click here -pdf file


TLM -1- Click here 

TLM -2- Click here 

TLM -3- Click here 

TLM -4- Click here 

TLM -5- Click here 


 Click here for latest Kalvi News 

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாள் - பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவிப்பு.

  டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதியை பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளை அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடுகிறது. இந்த ஏப்ரல் 14, 2023 அன்று அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் ஆகும்


 Click here for latest Kalvi News 

TNTEU - Time Table for B.Ed/B.Ed(Spl Edn)/M.Ed./M.Ed.(Spl Edn)/B.Sc.B.Ed. and B.A.B.Ed. Degree Examinations, April 2023

 


I am to inform you that the B.Ed. / B.Ed. ( Spl . Edn . ) / M.Ed. / M.Ed. ( Spl . Edn . ) / B.Sc.B.Ed. /B.A.B.Ed . ( Semester ) Degree Examinations , April 2023 are scheduled from 17.04.2023 , as per the Time - Table attached herewith.

TNTEU - Examinations Time Table April 2023 - Download here

 Click here for latest Kalvi News 

தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரியும் இடைநிலை /பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளி கடைசி வேலை நாள் வரை பணிபுரிய உத்தரவு.

 தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரியும் இடைநிலை /பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளி கடைசி வேலை நாள் வரை பணிபுரிய உத்தரவு.

2022-2023ம் கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையில் அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் பணியிமர்த்தப்பட்டு பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுள் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை 2022-2023ஆம் கல்வி ஆண்டின் கடைசி பள்ளி வேலை நாள் முடிய பணியில் தொடர அனுமதிக்கும்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


 Click here for latest Kalvi News 

பள்ளி கல்வித்துறையுடன் ஐ.ஐ.டி., ஒப்பந்தம்

 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க, சென்னை ஐ.ஐ.டி.,க்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும் இடையே, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.


சென்னை ஐ.ஐ.டி.,யை கிராமப்புற மாணவர்கள் உட்பட, அனைத்து மாணவர்களுக்கும் சேர்க்கும் முயற்சியாக, அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம்., என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.


இதன் ஒரு பகுதியாக, அரசு பள்ளிகளைச் சேர்ந்த 250 மாணவர்களுக்கு, ஒரு வாரம் அடிப்படைக் கணிதம் மற்றும் அறிவியல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.


அதேபோல், 250 பள்ளிகளைச் சேர்ந்த, 500 அறிவியல் ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர். அவர்கள் வழியாக, ஒரு லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில், மின்னணு செய்முறை பெட்டகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.


இவற்றை நேற்று, சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.


மேலும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க, சென்னை ஐ.ஐ.டி.,க்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.


இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, 'தமிழக முதல்வரின் திறனறித் தேர்வு' என்ற புதிய திட்டத்தை, முதல்வர் அறிவித்தார்.


இதில், 10ம் வகுப்பு படிக்கும் 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2 முடிக்கும் வரை, ஒவ்வொரு மாதமும், 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். அவர்களுக்கு ஐ.ஐ.டி., போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில், தொடர் பயிற்சிகள் வழங்கப்படும்.


இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், அவர்களின் உயர் கல்வியை தொடரும்போது, ஒவ்வொரு ஆண்டும் 12 ஆயிரம் ரூபாய் வீதம், கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.


இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயநிதி மகேஷ், சுப்ரமணியன், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் காகர்லா உஷா கலந்து கொண்டனர்.


 Click here for latest Kalvi News 

பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு நிறைவு - முடிவுகள் மே 19-ல் வெளியீடு

 பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு நிறைவு பெற்றது. இறுதி நாளில் நடைபெற்ற கணித பாடத்தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை சுமார் 7.5 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இறுதி நாளில் கணிதம், விலங்கியல், வணிகவியல், நர்சிங், ஆடை வடிவமைப்பு உள்ளிட்டபாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இதில் கணிதப் பாடத் தேர்வு மிகக் கடினமாக இருந்ததாகவும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பிளஸ்-2 கணிதபாடத் தேர்வும் கடினமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


பொதுத்தேர்வு முடிந்ததை அடுத்து மாணவ, மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சில பள்ளிகளில் பிரிவு உபசார விழாக்களும் நடத்தப்பட்டன.


பிளஸ்-1 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 15 முதல் மே 4-ம் தேதிவரை நடைபெற உள்ளன. இதில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடஉள்ளனர். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளைமுடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


மாதிரித் தேர்வு: இதற்கிடையே, 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித்தேர்வு அந்தந்த மாவட்ட வாரியாகஅடுத்த வாரம் தொடங்கி நடைபெறஉள்ளது. இந்நிலையில், ஆண்டுஇறுதித் தேர்வுக்கு முன்னதாக 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரித் தேர்வு ஒன்றை நடத்தி முடிக்க வேண்டுமென கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இந்த தேர்வுக்கான வினாத்தாள் பிரத்யேகமாக பள்ளிகளுக்குஅனுப்பப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 Click here for latest Kalvi News 

163 உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 ஆசிரியர்களுக்கு 11.04.2023 அன்று பணிநிரவல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

 163 உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 (Physical Director Grade 1) ஆசிரியர்களுக்கு 11.04.2023 அன்று பணிநிரவல் கலந்தாய்வு நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

CoSE - PD 1 Deployment.pdf - Download here...


PD 1 SURPLUS DETAILS 2022 -2023.pdf - Download here


PD 1 Need And Vacant List 2022 -2023.pdf - Download here


 Click here for latest Kalvi News 

AICTE - புதிய ஆண்டு கால அட்டவணை வெளியீடு

 

பொறியியல் படிப்புக்கான முதலாமாண்டு வகுப்புகள் செப்டம்பர் 15-ம் தேதிமுதல் தொடங்கப்பட வேண்டும் என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.


ஒவ்வொரு கல்வியாண்டும் கல்லூரிகள் திறப்பு, பருவத்தேர்வு நடத்தப்படும் தேதிகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வருடாந்திர கால அட்டவணையை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்டு வருகிறது. அதன்படி வரும் கல்வியாண்டுக்கான(2023-24) கால அட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை ஏஐசிடிஇ தற்போது வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:


தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ சார்பில் அங்கீகார நீட்டிப்புக்கான அனுமதி வழங்கும் பணிகள் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவு பெறும். தொடர்ந்து கல்லூரிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு வழங்குதலை ஜூலை 31-ம் தேதிக்குள் பல்கலைக்கழகங்கள் உறுதிசெய்ய வேண்டும். சேர்க்கை கலந்தாய்வை முடித்து முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 15-ம் தேதிமுதல் தொடங்கப்பட வேண்டும்.


தொலைதூர, திறந்தநிலை மற்றும் இணையவழிப் படிப்புகளைக் கற்றுத்தரும் நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை செயல்பாடுகளில் யுஜிசி வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்வை நடத்துவதற்கான தேதி விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.

 Click here for latest Kalvi News 

தமிழ் மொழியை கற்பிக்க வெளிநாடுகளுக்கு ஆசிரியர்களை அனுப்பிவைப்பு

 தமிழ் மொழியை கற்பிக்க வெளிநாடுகளுக்கு ஆசிரியர்களை அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ் வளர்ச்சி துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 Click here for latest Kalvi News 

10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு" என்ற உதவித் தொகையுடன் கூடிய தேர்வு அறிமுகம் - Press News

 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு" என்ற உதவித் தொகையுடன் கூடிய தேர்வு அறிமுகம் 

தேன்சிட்டு - Then chittu Magazine - April 2023

 Then Chittu Magazine Collections

தேன்சிட்டு - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - ஏப்ரல் 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு.


Then Chittu Magazine Collections

 Then Chittu Magazine Collections


April 2023 - Then chittu Magazine - Download here

March 2023 - Then chittu Magazine - Download here

February 2023 - Then chittu Magazine - Download here

January 2023 - Then chittu Magazine - Download here


 Click here for latest Kalvi News 

SMC Meeting 10.04.2023 - பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகள்

 பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

நாள் - திங்கள் கிழமை

தேதி - 10/04/2023

நேரம் - பிற்பகல் 3.00 மணி முதல் 4.30


பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகள்


3.00-3.05  காணொலிகள் சிறப்பாக செயல்ப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு காணொலிகளை திரையிடுதல்      

*1.Attendance: https://bit.ly/SMCAppAttendance

*2. Planning Part1: https://bit.ly/SMCSDP1

*3. Planning Part 2: https://bit.ly/SMCSDP2

*4. Planning Part3: https://bit.ly/SMCSDP3

*5. Playlist link: https://bit.ly/SMCSupportVideos


3:05-3:15 பள்ளி வளாகத்தை பார்வையிடுதல் 


3:15-3:20 வருகைப் பதிவு  தலைவர் மற்றும் உறுப்பினர்கள்   பெற்றோர் செயலியில்  (TNSED Parent App) பதிவு செய்தல்


3.20-3.25 வரவேற்பு

தலைவர் அனைவரையும் வரவேற்று கூட்டத்தை தொடங்கி வைத்தல்


3.25-3.35 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களின் பங்கேற்பு (மாணவர்களின் எண்ணிக்கை ,  செயல் திட்டம் குறித்து கலந்தாலோசித்தல்)

   

3.35-3.55  திட்டமிடுதலுக்கான கருப்பொருட்கள்


- மாற்றுத்திறனாளி மாணவர்கள் சார்ந்த செயல்பாடு.   


-இடைநின்ற /பள்ளி செல்லா குழந்தைகள்    மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை கண்டறியும் கணக்கெடுப்பு பணி.


- இல்லம் தேடிக் கல்வி - ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்.


- மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி ஆலோசனை


- போக்குவரத்து / பாதுகாவலர் வசதி     

                                       

3.55-4.25

 கூட்டப் பொருள் மீதான விவாதம்


-முன்பே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட, கூட்டப்பொருட்களை கலந்தாலோசித்து உரிய தீர்மானங்களை மேற்கொள்ளுதல்

- பொறுப்பாளர்கள், தொடர்புடையத் துறைகளின் ஒத்துழைப்பு கால அளவு ஆகியவற்றை நன்கு திட்டமிட்டு தீர்மானங்கள் நிறைவேற்றுதல்.

-தீர்மானங்களை பதிவேட்டில் பதிவுசெய்தல் (ம) கையொப்பம் பெறுதல்.


4.25-4.30 - கூட்ட நிறைவு

பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறுதல்.

   

🙏🙏🙏




கல்வி உதவித் தொகை பெற வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

 கல்வி உதவித் தொகை பெறும் தருமபுரி மாவட்ட பள்ளி மாணவர்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2022-23-ம் கல்வியாண்டில் தருமபுரி மாவட்டத்தில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதி திராவிடர் மாணவ, மாணவியருக்கு அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.


இந்த உதவித் தொகையை தொடர்ந்து பெற மாணவ, மாணவியர் தங்களின் வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்.


மேலும், வங்கிக் கணக்கு பயன்பாட்டில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். புதிதாக கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு எண் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பள்ளிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.


முகாம்களில் மாணவர்கள் ஆதார் எண்ணையும், ஓடிபி பெற தொலைபேசி எண்ணையும் அளித்து அஞ்சல் துறை வங்கிக் கணக்கு தொடங்கி பயனடையலாம்.

 Click here for latest Kalvi News 

4 - 9th Std | இறுதி ஆண்டு தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான Link & Download செய்யும் வழிமுறைகள்...

 

4 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய Link & Download செய்யும் வழிமுறைகள்...


இந்தாண்டு முதல் இந்த நடைமுறை மேற்கொள்ள உள்ளனர்... 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு printer கொடுக்கப்பட்டுள்ளன.


இந்த நடைமுறை அனைத்து மாவட்டங்களுக்கும் அறிமுகப்படுத்துமா என்பதை முறையான அறிவிப்பு வந்த உடன் தெரிய வரும்.


Question download Link - Click here


How to Download - Instructions -Pdf - Click here.


 Click here for latest Kalvi News 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவடைந்தது - மே 5-ல் முடிவுகள் வெளியிட நடவடிக்கை

 


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கியது. இத்தேர்வில் 8 லட்சத்து 52 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளில் வேதியியல், புவியியல், கணக்குப் பதிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.


இதைத்தொடர்ந்து விடைத்தாள் மதிப்பீட்டு பணி ஏப். 10-ம் தேதி தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் சுமார் 46 ஆயிரம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர். தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப் படும் என ஏற்கெனவே அறி விக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, மார்ச் 14-ம்தேதி தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வு நாளையுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு ஏப்.6-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

 Click here for latest Kalvi News 

எண்ணும் எழுத்தும் FA(a) மதிப்பெண் உள்ளீடு செய்வதற்கான முழு விளக்கம்

 எண்ணும் எழுத்தும் FA(a) மதிப்பெண் உள்ளீடு செய்வதற்கான முழு விளக்கம்


📱  Login , Activity Set, Record Assessment Detailed Explanation


📌 Activity Set


📝 Record Assesment


குறிப்பு:

Baseline Assessment மேற்கொண்ட போது


📘 அரும்பு நிலையில் இருந்த 1,2,3 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் அரும்பு பிரிவின் கீழ் இடம் பெறும்.


📙 மொட்டு நிலையில் இருந்த 2,3 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் மொட்டு பிரிவின் கீழ் இடம் பெறும்


📗 மலர் நிலையில் இருந்த 3 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் மலர் பிரிவின் கீழ் இடம் பெறும்.


👇👇👇👇👇


 Click here for latest Kalvi News 

April 2023 - School Children Movie - The Kid ( Movie Download Link & Video Description )

 📽️ APRIL மாதம் திரையிட வேண்டிய சிறார் திரைப்படம்

👉 சார்லி சாப்ளின் நடித்த தி.கிட் சிறார் திரைப்படம்

435 MB HD QUALITY உடன் 5 நிமிடத்தில் திரைப்படத்தை DOWNLOAD செய்ய link வீடியோ Description-ல் கொடுக்கப்பட்டுள்ளது.


Click here to download Film link....



 Click here for latest Kalvi News 

ஆசிரியர், அரசு ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஏப்.11ல் தலைமைச் செயலகம் முற்றுகை: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

 

ஆசிரியர், அரசு ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஏப்.11ல் தலைமைச் செயலகம் முற்றுகையிடப்படும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோர்க்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தப்படும். 7,8,9 ஆகிய தேதிகளில் தமிழக எம்.பிக்களிடமும் கோரிக்கை மனு அளிக்கப்படும் என்று ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது.

 Click here for latest Kalvi News 

மாநில கல்விக்கொள்கை இந்த கல்வியாண்டில் அமலுக்கு வர வாய்ப்பில்லை என தகவல்

 மாநில கல்விக்கொள்கை இந்த கல்வியாண்டில் அமலுக்கு வர வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கல்விக்கொள்கை தயாரிக்கும் குழுவிற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மே மாதத்துடன் நிறைவடைகிறது.பணிகள் நிறைவடையாததால் மேலும் 4 மாதங்கள் கால அவகாசம் கேட்க முழு திட்டம் தீட்டியுள்ளது. இதன் காரணமாக 2023-24ம் கல்வியாண்டில் மாநில கல்விக் கொள்கை அமலுக்கு வரத்து என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வரலாம் என தகவல் தெரிவித்துள்ளனர்.   


தமிழ்நாடு இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு கல்விக் கொள்கையை வடிவமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உலகளாவிய கல்வி, இளம் பருவத்தினருக்கான கல்வி, தொழில்நுட்பம் உள்ளிடவற்றை கருத்தில்கொண்டு வடிவமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்வு முறைகளில் சீர்திருத்தம் கொண்டுவரும் வகையிலும், பள்ளிப்படிப்பை முடிப்போர் அனைவரும் உயர்கல்வியை தொடரும் வகையில் கல்விக்கொள்கை அமைய வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புக்கேற்ற பாடத்திட்டத்தை வடிவமைக்கவும் சமத்துவமான கல்வியை  தரும் வகையில் கல்விக்கொள்கையை வடிவமைக்கவும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

அது ஒரு குழந்தை பள்ளிக்கு தயாராவது முதல், பள்ளிக்குள் நுழைவது எப்போது, நுழைந்ததும் வளர்க்க வேண்டியவை, அந்த நிலையில் குழந்தையின் மனவளர்ச்சி, பின்னர் அந்தக் குழந்தை படிக்க வேண்டிய பாடங்கள், எப்படி கற்பிக்கப்படும், எப்படி அவர்கள் மதிப்பிடப்படுவார்கள், என்னென்ன பாடங்கள் எந்தவகுப்பில் இருக்கும், வகுப்புகளின் கட்டமைப்பு, என்ன மொழியில் படிக்க வேண்டும், பொதுத்தேர்வுகள் யாவை, எப்படி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளுக்குள் நுழைவார்கள், கல்லூரிகளில் என்னென்ன பட்டங்கள் எந்த கல்லூரி, மேற்படிப்பு எல்லாம் முடிக்கும் வரையில் என்னென்ன எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சொல்வதே கல்விக்கொள்கை ஆகும்


 Click here for latest Kalvi News 

குழந்தைகள் கல்விக்கு உதவும் மிலியூ கல்விமுறை

சில குழந்தைகளுக்கு பள்ளியில் சேர்க்கும் வயது வரும்போது பேச்சுத் திறன் பாதிக்கப்படும். பேச்சு திக்குதல், பேச்சின் இடையே நாக்கு குழறுதல் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும். இதுபோன்ற பாதிப்புகள் கொண்ட குழந்தைகளுக்கு மிலியூ (Milieu) கல்வி உதவுகிறது. இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம்.


மேலை நாடுகளில் பிரபலமான இந்த மிலியூ கல்விமுறை மூலமாக எல்கேஜி, யூகேஜி பயிலும் மூன்றரை வயது குழந்தைகள் பலர் பலன் அடைந்து வருகின்றனர். ஆட்டிஸம், டிஸ்லெக்ஸியா, திக்குவாய் பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகள் கொண்ட குழந்தைகளுக்கு மிலியூ கல்வி சிறந்த தீர்வாக அமைகிறது. மிலியூ கல்விமுறையில் எழுத்துமூலம் வார்த்தைகள் குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்படுவதில்லை. இதற்கு மாறாக குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகளிடம் காட்டப்பட்டு பாடம் கற்பிக்கப்படுகிறது.


மிதமான கண்பார்வை மற்றும் செவித்திறன் பாதிப்புகொண்ட குழந்தைகளுக்குக்கூட தற்போது மிலியூ கல்வி உதவுகிறது என குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் சிலருக்கு எழுத்துகளை புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படும். இவர்களுக்கு வார்த்தைகளுக்கு பதிலாக பல்வேறு வடிவங்களில் உள்ள பொம்மைகள் காண்பிக்கப்பட்டு பாடம் எடுக்கப்படும். மேலும் எழுத்துக் கல்விக்கு மாற்றாக இவர்களுக்கு நேரடிக் கல்வி அளிக்கப்படும். இதனால் இவர்கள் எளிதில் உலக அறிவை அடைவர். இந்தியா உள்ளிட்ட பல தெற்காசிய நாடுகளிலும் மிலுயூ கல்விமுறை தற்போது பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

Click here for latest Kalvi News 

01.01.2023- நிலவரப் படி -Middle H.M to BEO panel List தயாரித்தல் சார்ந்து - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 



 தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு மூலம் நியமனம் 2023 ஆம் ஆண்டு 01.01.2023 நிலவரப்படி மாநில அளவில் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமை பட்டியல் ( Panel List ) தயார் செய்தல் வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2010 க்கு முன்னர் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியராக பணியில் சேர்ந்து 31.12.2022 க்குள் முழுத்தகுதி பெற்ற ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / மாநகராட்சி நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் விவரங்களை அனுப்பக் கோருதல் சார்பு . -- தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Middle H.M to BEO  panel List DEE Proceedings - Download here

 Click here for latest Kalvi News 

வரும் 6ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு: ‘ஆப்சென்ட்’ மாணவர்களை கண்டறிய மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு

 பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு வரும் 6ம் தேதி தொடங்க உள்ளதை அடுத்து, தேர்வுக்கு வர இயலாத மாணவர்கள் விவரங்களை மாவட்ட வாரியாக திரட்ட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்றுடன் முடிவடைந்தது. பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வு நாளையுடன் முடிவடைய உள்ளன. இந்த இரண்டு தேர்வுகளிலும் 17 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு கடந்த 13ம் தேதி தொடங்கிய  நாள் முதல்  இரண்டு தேர்வுகளுக்கு சுமார் 50 ஆயிரம் மாணவ மாணவியர் தேர்வு எழுத வரவில்லை.


இதற்கான காரணம் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டது. இடைநிற்றல் போன்ற காரணங்களால் மாணவ மாணவியர் தேர்வு எழுத வரவில்லையா, அல்லது தேர்வில் ஆர்வம் இல்லையா என்று கண்டறிய பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி கடந்த 24ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. அப்போதே, பத்தாம் வகுப்பு தேர்வு எழுத பதிவு செய்துள்ள மாணவ மாணவியர் பற்றிய விவரங்களை பெற்றோர் மூலம் கேட்டறியப்பட்டது. மேலும், தேர்வுக்கு பதிவு செய்திருந்தவர்களை கண்டிப்பாக தேர்வில் பங்கேற்க செய்ய வேண்டும் என்று பெற்றோரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. குறிப்பாக பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கு 25 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்கவில்லை என்பதால், செய்முறைத் தேர்வுக்கான இறுதி நாள் மார்ச் 28ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

சென்னையை பொறுத்தவரையில் 1100 மாணவ மாணவியர் பள்ளிகளில் இருந்து இடைநின்றதால் தேர்வுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களில் 650 பேர் தேர்வு எழுத ஆர்வம் உள்ளவர்களாக இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்களைப்போல மேலும் பல மாணவர்களை அடையாளம் காண முடியும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அந்தந்த மாவட்டங்களில்,  பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுத  இயலாத நிலையில் உள்ள மாணவர்களை அடையாளம் காண வேண்டும் என்றும், பள்ளிகளில் இருந்து இடைநின்றவர்களையும் அடையாளம் காண வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களை கண்டிப்பாக தேர்வு எழுத வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும்,  தேர்வுக்கு வர இயலாத மாணவ மாணவியர் குறித்த விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் திரட்டி வருகின்றனர்.


 Click here for latest Kalvi News 

தேர்வுகளுக்குரிய பாடவாரியான , அறைவாரியான வருகைப்பதிவேடு பட்டியல் அனுப்ப தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு.

 மார்ச் / ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் முடிவுற்றதும் அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களிடமும் தத்தமது தேர்வு மையத்தில் நடைப்பெற்ற அனைத்து தேர்வுகளுக்குரிய பாடவாரியான , அறைவாரியான வருகைப்பதிவேடு பட்டியல் ( Hall Wise Attendance Sheet ) மற்றும் பெயர்ப் பட்டியல் ( Nominal Roll ) படிவங்கள் தொகுத்துக் கட்டி தங்களின் அலுவலகத்தில் 06.04.2023 அன்று ஒப்படைக்கும் படி தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

தேர்வு முடிவு தொடர்பாக இவ்வலுவலகத்தில் கோரப்படும் அனைத்து விவரங்களையும் உடனடியாக வழங்கிடும் பொருட்டு உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெறப்பட்ட வருகைப்பதிவேடு மற்றும் பெயர் பட்டியல்களை தனித்தனியாக தேர்வு மைய வாரியாக பிரித்து வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது .


 Click here for latest Kalvi News