2ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அறிமுகம்: சிபிஎஸ்இ முக்கிய அறிவிப்பு

 National Curriculum Framework for the Foundational Stage: நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆரம்ப கல்வி நிலைக்கான பாடத்திட்ட கட்டமைப்பை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை அறிவித்தது. இந்த புதிய கல்விக் கொள்கை, தற்போதுள்ள, 10+2 பாடத்திட்ட முறைக்கு பதிலாக,முறையே 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுக்கேற்ற 5 + 3 + 3 + 4 ஆண்டு பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தியது. 3-8 வயதுக்கு இடையே உள்ளது. அடிப்படை கல்வி நிலையாகும். இதில் 3 ஆண்டுகள் பள்ளிக்கு முந்தைய கல்வியும் (அங்கன்வாடி மையங்கள் மூலமாக கற்றல் நடைபெறும்) 2 ஆண்டுகள் அடிப்படை நிலை I மற்றும் நிலை II கல்வியும் அடங்கும்.

இந்த 8 வயது வரையிலான குழந்தைகளுக்கான தேசியப் பாடத்திட்ட கற்பித்தல் கட்டமைப்பை (National Curriculum Framework for Foundational Stage) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) உருவாக்கியது. கடந்தாண்டு அக்டோபர் மாதம், நாட்டிலுள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்த கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான முதற்கட்டமாக அறிமுகம் செய்தார்.

இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டில், நர்சரி வகுப்பு முதல், இரண்டாம் வகுப்பு வரையில் ஐந்து வகுப்புகளுக்கு இந்த புதிய பாடத்திட்ட கட்டமைப்பை அமல்படுத்தப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது . நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகள் இந்த புதிய கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

புதிய பாடத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட வேண்டிய பாடங்கள் தொடர்பாக NCERT இணையதளத்தில் பாடத்திட்டங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பாடதிட்டங்களை தனியார் பதிப்பகங்கள், பாடபுத்தகங்களாக அச்சிடலாம். இதை பின்பற்றி தனியார் பதிப்பகங்கள், பாட புத்தகங்களை தயாரித்து வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில வாரியாக அந்தந்த மாநில மொழி பாடம், இந்தி , ஆங்கிலம் மற்றும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என 5 பாடங்கள் இடம்பெற்றிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Click here for latest Kalvi News 

SCHOOL - SMC/SNA ACCOUNT NEW UPDATE

 💥SMC/SNA ACCOUNT NEW UPDATE


🟪 PRIMARY


🟢 1.6.1.11.7 என்ற component code -யில் Teacher Appraisal format PINDICS என்ற component name - யில் ₹.10 SNA Account-யில் வரவு வைக்கப்பட்டுள்ளது....


🟨 UPPER PRIMARY


🟢 1.6.1.11.7 என்ற component code -யில் *Teacher Appraisal format PINDICS என்ற component name - யில் ₹.60  SNA Account-யில் வரவு வைக்கப்பட்டுள்ளது....


🟢 F.03.08 என்ற component code- யில் LEP Class IX - XII என்ற component name - யில் ₹.1392 வரவு வைக்கப்பட்டுள்ளது...



▪️LEP - Learning Enhancement Program / Remedial Teaching


இதுபோன்று நமது பள்ளியின் SNA Account- யில் வரவு வைக்கப்படும் தொகை விரவங்களை component code , name wise தெரிந்து கொள்வது எப்படி?


கீழே உள்ள காணொளி யை காணவும்

👇👇👇👇👇👇👇👇👇



Click here for latest Kalvi News 

NMMS - திறன் தேர்வு விடை குறிப்பு வெளியீடு

 

தேசிய வருவாய் வழி தேர்வுக்கான விடைக்குறியீடு வெளியிடப்பட்டு உள்ளது.


எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டத்துக்கான, என்.எம்.எம்.எஸ்., தேர்வு, பிப்., 25ல் நடந்தது.


இதற்கான இறுதி விடைக் குறிப்பை, அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.


இதை, http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Click here for latest Kalvi News 

SSLC பள்ளி மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு - 27.03.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

 

நடைபெறவுள்ள ஏப்ரல் பொதுத்தேர்வெழுதவுள்ள பள்ளி வகுப்பு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை 27.03.2023 பிற்பகல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Click here for latest Kalvi News 

Ennum Ezhuthum Class Room - Inspection Form

 

எண்ணும் எழுத்தும் வகுப்பினை உயர் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ளும்  போது வகுப்பறையில் இருக்க வேண்டிய தகவல்கள்


எண்ணும் எழுத்தும் கள ஆய்வு படிவம்.


Ennum Ezhuthum Class Room - Inspection Form - Download here

Click here for latest Kalvi News 

கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதம் தேதி அறிவிப்பு

 கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான  விவாதம் 31.03.2023 தேதி நடைபெறும் என அறிவிப்பு


Click here for latest Kalvi News 

வினாத்தாள் வெளியாவதை தடுக்க புதிய முயற்சி!

  6 முதல் 12ம் வகுப்பு வினாத்தாள் வெளியாவதை தடுக்க பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கி, தேர்வன்று பள்ளிகளிளேலே பிரிண்ட் எடுத்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சோதனை முறையில் சென்னை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு பிரிண்டர்கள் வழங்கப்பபட்டுள்ளன. வெளி இடங்களில் பிரிண்ட் எடுப்பதன் மூலம் வினாத்தள் லீக் ஆவதை தடுக்க கல்வித்துறை இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.

Click here for latest Kalvi News 

Tamil Nadu Budget 2023 - 2024 Full Details - Tamil PDF

 


தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2023 - 2024 முழு விபரம் ( Pdf )  


 Tamil Nadu Budget 2023 - 2024 Full Details - Tamil PDF - Download here


Click here for latest Kalvi News 

தமிழக பட்ஜெட் 2023 - 2024 | கல்வித்துறைக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

 

எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?


* ஆதி திராவிட நலத்துறை - ரூ. 3,513 கோடி


* உயர்க்கல்வி துறைக்கு ரூ.6,967 கோடி 


* பள்ளிக்கல்வி துறைக்கு ரூ. 40,299 கோடி


தமிழக பட்ஜெட் 2023 - 2024 |  கல்வித்துறைக்கான முக்கிய அறிவிப்புகள் 

* ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், பள்ளி கல்வித்துறை கீழ் கொண்டுவரப்படும்

* பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் புதியவகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி நிதி ஒதுக்கீடு

* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

* ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு தயாராக 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும்

* பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரிக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது

* ரூ. 110 கோடியில் 4,5-ம் வகுப்புக்கும் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது

* 54 அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகள் ரூ. 2,283 கோடியில் திறன்மிகு மையங்களாக உயர்த்தப்படும்

* புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 20 ஆயிரம் மாணவிகள் பயனடைந்துள்ளனர்

* திருச்சி, கோவை, மதுரை, நீலகிரியில் 100 கோடி ரூபாய் செலவில் ஆதி திராவிடர் நல விடுதிகள் கட்டப்படும்

* அனைத்து மாவட்டங்களிலும் ரூ.10 கோடி செலவில் புத்தகத்திருவிழா நடத்தப்படும்


TN BUDGET - EDUCATION ANNOUNCEMENT - Download here pdf


Click here for latest Kalvi News 

எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் பெற்றோர்களுக்கான அழைப்பிதழ்

 எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் பெற்றோர்களுக்கான அழைப்பிதழ்


Ennum Ezhuthum Celebration Invitation - Download here


Click here for latest Kalvi News 

TRB - 4136 கல்லூரிப் பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்!

 

Applications are invited for Direct Recruitment from eligible candidates for the post of Assistant Professors in Tamil Nadu Collegiate Educational Service for Government Arts & Science Colleges and Colleges of Education forthe year 2023-2024


Total Vacancies 4136

Trb notification 18.03.23 - Download here



Click here for latest Kalvi News 

வானவில் மன்றம் ( Vanavil Mandram ) - பிப்ரவரி மாதத்திற்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்ப் பட்டியல்

 

வானவில் மன்றம் (Vanavil Mandram) - பிப்ரவரி மாதத்திற்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்ப் பட்டியல்

 Rainbow Forum - Winners List - Download here...

Click here for latest Kalvi News 

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் விழிப்புணர்வு வாசகங்கள்

 

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் விழிப்புணர்வு வாசகங்கள்..pdf file செய்தியின் கீழ் உள்ளது.... 

எண்ணும் எழுத்தும் வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு,


✏️ எண்ணும் எழுத்தும் கற்றல் கற்பித்தல் முறைகளை செயல்பாடுகள் மூலம் விளக்கி எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்த விழிப்புணர்வை பெற்றோர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பள்ளி அளவில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் என்ற நிகழ்வு 20.3.23 & 21.3.23 ஆகிய தேதிகளில் 1,2 & 3 வகுப்பு மாணவர்கள் பயிலும் அனைத்து பள்ளிகளிலும் நடைபெற வேண்டும்.


✏️இந்நிகழ்வை மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் 20.3.23 அன்றும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில் 20.3.23 மற்றும் 21.3.23 ஆகிய நாட்களில் காலை 9:30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நிகழ்வு அட்டவணையில் உள்ளபடி நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.



 ✏️இது சார்ந்த தகவல்களை 1,2 & 3 வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு உரிய முறையில் தெரிவித்து அவர்கள் அனைவரும் எண்ணும் எழுத்தும் கொண்டாட்ட நிகழ்வு நடைபெறும் நாளில் தங்கள் பள்ளியில் கலந்து கொள்வதை உறுதி செய்திட வேண்டும்.


 ✏️எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளை கையாளும் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையை தாங்கள் செய்த கற்றல் கற்பித்தல் உபகரணங்கள், மாணவர்களின் படைப்புகள் மற்றும் அரசால் வழங்கப்பட்ட TLM ஆகியவை கொண்டு வகுப்பறையை இன்றே (17.3.23) அழகு படுத்த வேண்டும். இதை சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும்


✏️மேலும் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் நடைபெறும் நாளன்று 9:45 மணி முதல் 11 மணி வரை என் மேடை என்ற நிகழ்வு நடைபெறும். இதில் மாணவர்கள் தங்கள் எண்ணும் எழுத்தும் பாடப் புத்தகங்களில் உள்ள பாடல்களை தனியாகவோ குழுவாகவோ ஆடல் பாடல் உள்ளிட்ட செயல்பாடுகளை செய்து பெற்றோர்களை மகிழ்விக்க வேண்டும் . ஆகவே இந்நிகழ்வில் அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் வகையில் ஆடல் பாடல்களுக்கான எண்ணம் எழுத்தும் பாடல்களை

தேர்வு செய்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க சார்ந்த ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 ✏️மேலும் தேநீர் இடைவேளைக்குப் பிறகு நிகழ்வு அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள மூன்று செயல்பாடுகளில் ஏதேனும் ஒரு செயல்பாட்டை பெற்றோர்களுடன் இணைந்து ஆசிரியர்கள் செய்ய வேண்டியுள்ளளதால் அது சார்ந்தும் திட்டமிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Click here -விழிப்புணர்வு வாசகங்கள்..pdf


Click here for latest Kalvi News 

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - நாளை பள்ளிகளில் நடைபெறவுள்ள அடிப்படை எழுத்தறிவு தேர்வுக்கான சில குறிப்புகள்!!!

 

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - நாளை நடைபெறவுள்ள அடிப்படை எழுத்தறிவு தேர்வுக்கான சில குறிப்புகள்!!!

⚘நாள்:19.03.2023

⚘ நேரம்: காலை 10 - மாலை 4 மணி வரை

⚘இடம்: மையம் சார்ந்த பள்ளி

⚘அறை கண்காணிப்பாளர்: தன்னார்வலர்கள்

⚘முதன்மை கண்காணிப்பாளர்: தலைமையாசிரியர்

⚘கற்போர் அனைவரும் 100% தேர்வில் பங்கேற்க வேண்டும்.

⚘பேனாவால் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்.

⚘கற்போர் அனைவருக்கும் வருகை பதிவு தாளில் வருகையை பதிவு செய்ய வேண்டும்.( வருகை பதிவு தாள் வழங்கப்படும்)

⚘கற்போர் விவரங்களை அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும் படிவத்தில் தமிழில் எழுதி,  விடைத் தாள் களுடன் இணைத்து 19.03.2023 அன்று ஒப்படைக்க வேண்டும்

⚘வினாத்தாளில் கற்போர் அவர்களுக்குரிய இடத்தில் கையொப்பம் இடவேண்டும் ( கைரேகை பதிவு செய்ய கூடாது).

Click here for latest Kalvi News 

அரசுப் பள்ளிகளுக்கு நூலகப் புத்தகங்கள் கொள்முதல் செய்த புத்தகங்களின் பெயர் பட்டியல் விவரம் வெளியீடு!!!

 

1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு  வரை அரசுப் பள்ளிகளுக்கு நூலகப் புத்தகங்கள் கொள்முதல் செய்த  புத்தகங்களின் பெயர் பட்டியல் விவரம் வெளியீடு!!!


Library Books List - Download here

Click here for latest Kalvi News 

மாநில அளவில் வானவில் மன்றப் போட்டிகள் நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

 

மாநில அளவில் வானவில் மன்றப் போட்டிகள் நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

CoSE - Vanavi Mandram_ State level _ Competition.pdf - Download here


Click here for latest Kalvi News 

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-23 | இத்திட்டத்தில் பயின்றுவரும் கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு அறிவிப்பு.

 

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாத கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவினை வழங்கிடும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-23 செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயின்றுவரும் கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு 19.03.2023 அன்று நடைபெறவுள்ளது.


NILP 19.03.2023 EXAM GUIDELINES MEETING - REG.pdf - Download here...



Click here for latest Kalvi News 

EMIS NEW UPDATE | STAFF LOGIN PASSWORD CHANGE | OTP METHOD

 EMIS NEW UPDATE | STAFF LOGIN PASSWORD CHANGE | OTP METHOD


ஆசிரியர்கள் ஏற்கனவே உள்ள தங்களது LOGIN PASSWORD - னை (மொபைல் எண்ணின்‌ முதல் 4 இலக்கம் @ பிறந்த வருடம்) OTP முறையில் தங்களுக்கு பிடித்த STRONG ஆன PASSWORD ஆக மாற்றம் செய்து கொள்ளலாம். 


குறிப்பு:

விரைவில் இந்த வழிமுறையை பின்பற்றி ஆசிரியர்கள் தங்களது LOGIN PASSWORD மாற்றம் செய்து கொள்ளலாம்.


தற்போது முயற்சிக்கும் போது மாற்றம் செய்ய முடியவில்லை.


Click here for latest Kalvi News 

பள்ளிகளில் மார்ச் 20 , 21 ஆகிய தேதிகளில் எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடடுவோம் நிகழ்ச்சியினை பெற்றோர்களை அழைத்து கொண்டாட உத்தரவு.

 

மார்ச் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம் - மாவட்டங்களில் பரப்புரை நிகழ்த்துதல் மற்றும் பள்ளிகளில் நிகழ்ச்சி நடத்துதல் - தொடர்பாக - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.



Click here for latest Kalvi News 

அரசுப் பள்ளி பிளஸ்-2 மாணவர்கள் தேசிய நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு: கல்வி அதிகாரிகளுக்கு அறிவுரை.

 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் க.இளம்பகவத், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய காலணி வடிவமைப்பு மற்று்ம் மேம்பாட்டு நிறுவனத்தின் அகில இந்திய நுழைவுத்தேர்வு, ஐஐடி மற்றும் என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜெஇஇ நுழைவுத் தேர்வு, மத்திய அரசு பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான கியூட் நுழைவுத்தேர்வு, நெஸ்ட் நுழைவுத்தேர்வு, சென்னை கணிதவியல் நிறுவன நுழைவுத்தேர்வு என பல்வேறு மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு தற்போது ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.


இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள், நுழைவுத்தேர்வு கட்டணம், கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த தகவல்களை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அங்குள்ள உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு தெரிவிப்பதுடன், அந்த நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவர்களை அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Click here for latest Kalvi News 

‘காலை உணவு’ திட்டத்தால் பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரிப்பு! !!

 பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்திருப்பது, முதல்வரின் காலை உணவு திட்டத்துக்கு கிடைத்துள்ள வெற்றி என்று, ‘தி இந்து’ நாளிதழில் வெளியான செய்தியை குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு முதல்வரின் ‘காலை உணவு’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ் முதல் கட்டமாக, 1.14 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. பிறகு, 2-ம் கட்டமாக மேலும் 56 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.


அப்போது, ‘‘மாணவர்கள், பெற்றோர் மத்தியில் இத்திட்டம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. எஞ்சியுள்ள பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும்’’ என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுவதால், மாணவர்கள் வருகைஅதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் 1,543பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், இவற்றில் 1,319 பள்ளிகளில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது.


அது மட்டுமின்றி, திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் மாவட்டங்களில் ‘காலை உணவு’ திட்டம் செயல்படுத்தப்படும் தொடக்கப் பள்ளிகளில் 100 சதவீத வருகை பதிவாகியுள்ளது.


கிருஷ்ணகிரி (98.5%), கரூர் (97.4%), நீலகிரி (96.8%) மாவட்டங்களிலும் மாணவர் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, 1,086 பள்ளிகளில் 20 சதவீதமும், 22 பள்ளிகளில் 40 சதவீதமும் மாணவர்கள் வருகை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.


இதுகுறித்து தமிழக திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் கூறும்போது, ‘‘காலை உணவு திட்டம் மூலம் தினமும் சராசரியாக 1.48 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். காலை உணவுக்காக மாணவர் ஒருவருக்கு அரசு ரூ.12.71 செலவிடுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.


‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் இதுதொடர்பான செய்தி நேற்று வெளியானது. இந்த செய்தியை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘மாணவர் வருகை அதிகரிப்பு, முதல்வரின் காலை உணவு திட்டத்தின் வெற்றி. மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் அளித்த அறிக்கை அடிப்படையில், ‘தி இந்து’ நாளிதழில் சங்கீதா கந்தவேல் எழுதியுள்ள செய்தி. கல்வி.. திராவிட வேட்கை’ என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.



Click here for latest Kalvi News 

1 முதல் 9 -ம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை -பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

 

பிளஸ் 2 ஆங்கிலப் பாடத்தேர்வில் 50 ஆயிரம் மாணவ, மாணவியர் நேற்று தேர்வு எழுத வரவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வு பயம், மற்றும் உடல்நிலை சரியின்மை காரணமாக பல மாணவர்கள் பள்ளிக்கு வருவதை குறைத்துள்ளதுடன் தேர்வுக்கும் வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது தமிழ்நாட்டில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பின் காரணமாகவும் தேர்வு எழுத வரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ள கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையல், +2 பொதுத் தேர்வு மொழித்தாளை எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.


அதே போல் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் புதுவிதமான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது, தமிழகத்தில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை, கட்டுப்படுத்த மாநில அரசுகள் கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பரவி வரும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பில்  இருந்து பள்ளி மாணவர்கள் பாதுகாக்கும் வகையில் முன்கூட்டியே ஆண்டுத் தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக நேற்று செய்தி வெளியானது. ஆனால் வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 9 -ம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என்றும் வழக்கமான கல்வி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது போலவே தேர்வுகள் நடைபெறும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Click here for latest Kalvi News 

EMIS - இல் மாணவர்களின் பிறந்த தேதி தவறாக இருந்தால் அதனை மாற்றம் செய்து கொள்ள புதிய முறை வெளியீடு

 EMIS - இல் மாணவரின் பிறந்த தேதியில் தவறு இருக்கும் பட்சத்தில் அதனை மாற்றிக் கொள்ள EMIS இணையதளத்தில் புதிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..


அதற்கு  பெற்றோர்களின் தொலைபேசி எண் அவசியம் வேண்டும். காரணம் நாம் மாற்றம் செய்த பின்பு பெற்றோர்களின் தொலைபேசி எண்ணுக்கு  ஒரு OTP செல்லும் அந்த OTP எடுத்து உள்ளீடு செய்தால் மட்டுமே மாற்றம் செய்ய முடியும்....


மாற்றம் செய்யும் வழிமுறை...pdf

👇👇👇👇👇👇👇👇👇👇👇

Click here to download EMIS-pdf 


Click here for latest Kalvi News 

உண்டு உறைவிட திறன்‌ மேம்பாட்டு பயிற்சியில் கலந்துகொள்ள அனைத்து மாவட்ட ஆசிரியர்களுக்கும் SCERT அழைப்பு

 மாநில கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனத்தின்‌ மூலம்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ பணிபுரியும்‌ பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதுமையான கற்பித்தல்‌ முறைகள்‌, சிறந்த மதிப்பீட்டு நுட்பங்கள்‌ மற்றும்‌ கற்பித்தலில்‌ மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான உத்திகள்‌ உள்ளிட்ட பாட தொடர்பான பல்வேறு தலைப்புகளில்‌ பல்வேறு கட்டங்களில்‌ பயிற்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.


பாடக்கருத்துகளில்‌ விரிவுரைகள்‌, அறிவியல்‌ சோதனைகள்‌, செயல்பாடுகள்‌, பயிற்சி பட்டறைகள்‌, களப்பயணங்கள்‌ மற்றும்‌ குழு விவாதங்கள்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌, ஆழமாக சிந்தித்து செயல்படவும்‌, பாடத்தை ஆசிரியர்கள்‌ திறம்பட கற்பிக்க உதவும்‌ வகையிலும்‌, மாணவர்கள்‌ எளிதாக புரிந்துகொள்ளும்‌ வகையிலும்‌, இந்த பயிற்சி பயனுள்ளதாக அமைய வேண்டியும்‌, சிறந்த கல்வி நிறுவனங்களில்‌ பணிபுரியும்‌ திறமை வாய்ந்த மற்றும்‌ அனுபவம்‌ வாய்ந்த கருத்தாளர்களிடமிருந்து கற்றுக்‌ கொள்ளவும்‌, மாநிலத்தின்‌ அனைத்து பகுதிகளில்‌ உள்ள பட்டதாரி ஆசிரியர்‌ தன்னார்வலர்களிடமிருந்து கருத்துக்களை பெற்றிடலாமா என்பதற்கும்‌, மேற்படி கற்றல்‌-கற்பித்தல்‌ பணிகளை ஏப்ரல்‌-2023 முதல்‌ தொடர்ச்சியாக இந்நிறுவனத்தின்‌ உண்டு உறைவிட திறன் மேம்பாட்டு பயிற்சியாக நடத்திடலாமா என்பதற்கும்‌, ஆணை வேண்டப்படுகிறது.


எனவே, அனைத்து மாவட்டங்களில்‌ உள்ள பள்ளிகளில்‌ பணிபுரியும்‌, ஆர்வமுள்ள பட்டதாரி பாட ஆசிரியர்களை இணைப்பில்‌. கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து, பதிவு செய்யுமாறு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ மற்றும்‌ அனைத்து மாவட்ட ஆசிரியர்‌ கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கும்‌ அறிவுறுத்தப்படுகிறது.



Click here for latest Kalvi News 

அரசுப் பள்ளிகளில் மொழிகள் ஆய்வகம் திறப்பு விழா - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு!


அரசுப் பள்ளி மாணவர்களுக்கென தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக , வகுப்பறைக்குள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு விளையாட்டுவழி உரையாடல் தன்மையுடன் மாணவர்களின் மொழித் திறனை வளர்க்க உருவாக்கப்பட்டிருக்கிறது மொழிகள் ' திட்டம். இதை அலைபேசியிலும் கணினியிலும் பயன்படுத்தலாம். இதன் மூலம் குழந்தைகளின் மொழியறிவு வளர்கிறது. கணினி குழந்தைகளோடு பேசி அவர்களை ஊக்குவிக்கிறது.

 எழுத்துக்களில் , வாக்கிய அமைப்பில் , உச்சரிப்பில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டித் திருத்துகிறது. இரு நண்பர்கள் சேர்ந்து விளையாட்டு முறையில் மொழியை கற்றுக்கொள்ளலாம்.

 Press-Invite - Download here

 Click here for latest Kalvi News