பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: பொறை உடைமை
குறள் : 156
ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
பொருள்:
தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் என பொறுமை கடைப் பிடிப்போருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.
பழமொழி :
He who eats crumbs will live a hundred years.
நொறுங்கத் தின்பவன் நூறாண்டு வாழ்வான்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. கண் எனது உடம்புக்கும் மனதிற்கும் வெளிச்சம்.
2. எனவே என் கண் தெளிவானவைகளையும் சரியானவைகளையும் பார்க்க முயற்சிப்பேன்
பொன்மொழி :
ஆர்வம் இல்லாமல் உங்களுக்கு ஆற்றல் இல்லை; ஆற்றல் இல்லாமல் எதுவுமேயில்லை.
பொது அறிவு :
1. கப்பல் படைத்தலைவர் நம் நாட்டில் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
அட்மிரல் .
2. இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண் யார்?
பமீலா தேவி.
English words & meanings :
hammock – a hanging bed between two trees. noun. when I called him he was sleeping in the hammock. வழியிலான தொங்கு மஞ்சம். பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
கொத்தமல்லி தண்ணீரில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. எனவே, அதன் நுகர்வு நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இது எந்த வகையான வைரஸ் தொற்றையும் தவிர்க்க உதவும்.
எடை இழப்புக்கு கொத்தமல்லி தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நீரில் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும் பல கூறுகள் உள்ளன. இதன் விளைவாக, உடலில் கொழுப்பு குறையத் தொடங்குகிறது.
கணினி யுகம்
Ctrl+Z: It is used to get back the deleted item. For example, if you have deleted the data by mistake, you can press Ctrl+Z to retrieve (Undo) the deleted data. Ctrl + P: Prints a note.
மார்ச் 15
ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு 15 ஆம் திகதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் (World consumer rights day) ஆகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு மாதம் 15 ஆம் திகதியை தேசிய நுகர்வோர் உரிமைகள் நாள் (National consumer rights day) ஆகப் பிரகடனப்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன். எப். கென்னடி, அமெரிக்க பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாகவும், நுகர்வோர் உரிமைகள் சட்டம் தொடர்பாகவும் ஆற்றிய முக்கிய உரை 1962 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றது. அவ்வுரையே உலக அளவில் ஒரு நாட்டுத் தலைவர் நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாக ஆற்றிய முக்கிய உரையாகக் கணிக்கப்படுகின்றது. நீதிக்கதை
கருப்பங்கழி!
விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதைப் பார்த்த மற்ற அரசவையினருக்கு தெனாலி மீது பொறாமை ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி, அரசே! எங்களிடம் என்ன குறை? நீங்கள் ஏன் எங்களை விடத் தெனாலிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள்? என்று கேட்டனர். இதற்கு பதில் அரசரின் சிரிப்புத்தான்.
ஒருநாள், தெனாலி விடுப்பில் சென்றிருந்தார். அரசர், அமைச்சர், சேனாதிபதி முதலானோர் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர். பேசிக் கொண்டே ஒரு கிராமத்தை அடைந்தனர். ஓரிடத்தில் விவசாயிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தார் அரசர். அவர்களிடம் சென்று, நாங்கள் வெளிநாட்டினர், உங்களை இந்நாட்டு அரசர் சரியாகக் கவனித்துக் கொள்கிறாரா? என்றார்.
உடனே அனைவரும் அரசரைப் புகழ்ந்தனர். பிறகு அரசர் ஒரு முதிய விவசாயியிடம் அதே கேள்வியைக் கேட்டார். உடனே அவர் சட்டென்று அங்கிருந்து எழுந்து எங்கோ போய்விட்டுப் பிறகு திரும்பி வந்தார். அவர் கையில் ஒரு கருப்பங்கழி! வந்ததும் அதை அவர் இரு கையாலும் உடைத்தவாறு, சகோதரா! எங்கள் அரசர் இதைப் போன்றவர் என்றார். அவரது பதில் அரசருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அமைச்சரைத் திரும்பிப் பார்த்தார். அமைச்சரோ அரசே! அவர் உங்களை அவமானப்படுத்துகிறார். அவர், எங்கள் அரசர் பலவீனமானவர். எவரும் அவரை எளிதில் வீழ்த்தி விடலாம் என்பதைக் குறிக்கக் கரும்பை ஒடித்துக் காட்டினார் என்றார்.
இதைக்கேட்டதும், அரசருக்கு ஆத்திரம் வந்தது. அவர் ஏதோ கூற வந்தார். அப்போது பின்னாலிருந்து தலைப்பாகை கட்டிய ஒருவர் எழுந்து, கோபப்படாதீர்கள் தயாநிதியே! இப்போது கிழவர் கரும்பை உடைத்து, அரசர் கரும்பு போல் மேலிருந்து கசப்பும், இடையில் இனிப்பும் உடையவர் என்பதை உணர்த்தத்தான் இப்படி செய்தார் என்று கூறிக் கொண்டே தனது பொய்த் தாடியை எடுத்தார். அது வேறு யாருமல்ல! தெனாலிராமன்தான்.
அரசே! என்னைக் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், நான் உங்களது பணியாள். என்னால் உங்களை விட்டு எப்படி இருக்க முடியும்? என்றார். அதைக் கண்ட அரசர் சிரித்துவிட்டார். தெனாலியை வாரி அணைத்துக்கொண்டு, நான் உன்னிடம் பிரியம் வைத்திருப்பதற்குக் காரணமே இதுதான் என்று புகழ்ந்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர், ராஜகுரு மற்றும் சேனாதிபதிக்கு அவமானமாகப் போய்விட்டது. அதன்பிறகு அரசவையில் தெனாலியின் மதிப்பு மேலும் அதிகரித்து விட்டது.
இன்றைய செய்திகள்
15.03. 2023
* முன்னாள் மாணவர்களை இணைந்து பள்ளியின் மேம்பாட்டிற்கான செயல்பாடுகள் மேற்கொள்வது தொடர்பாக கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
* தமிழகத்தில் மின்பயன்பாடு அதிகரிப்பு காரணமாக, தினசரி மின்தேவை 17,647 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
* கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் முகக்கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
* டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் - மார்ச் 20ம் தேதி தொடங்குகிறது.
* ரூ.15,000 கோடியில் 200 பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் இறுதிக் கட்ட பரிசீலனை.
* மீண்டும் ஏவுகணை சோதனை - தென் கொரியாவை அச்சுறுத்தும் வடகொரியா.
* சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஒரு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் 20 வருடம் கழித்து மோத உள்ளன.
* இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் - இந்திய வீரர் பிரனாய் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.
* புரோ ஆக்கி லீக்: ஜெர்மனி அணியை மீண்டும் வீழ்த்தியது இந்தியா.
Today's Headlines
* Education Minister Anbil Mahes has appealed to the headmasters to share their views on carrying out activities for the development of the school along with the former students.
* Due to the increase in power consumption in Tamil Nadu, the daily power demand has reached a new high of 17,647 MW. It is expected to increase further in the coming days.
* Due to the increase in the spread of corona infection, it is necessary to wear face mask and observe personal distance: Information of Minister M. Subramanian.
* Farmers strike again in Delhi - March 20 begins.
* Rs 15,000 crore production of 200 BrahMos missiles: Ministry of Defense finalizes final phase
* Missile Test Again - North Korea Threatens South Korea.
* After 20 years, India and Australia will meet in the final of a series organized by the International Cricket Council.
England Open Badminton - Indian player Pranai advances to next round.
Pro Hockey League: India beat Germany again.
Prepared by
Covai women ICT_போதிமரம்