9 மாவட்டங்களில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சோதனை முறையில் ஆண்டுத் தேர்வு நடத்துவதற்கு பிரிண்டர்கள் வழங்கி SPD உத்தரவு.

 இவ்வாண்டு  9 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும் சோதனை முறையிலான ஆண்டு தேர்வுகள் நடத்திட ஏதுவாக 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் எல்காட் நிறுவனம் வாயிலாக பிரிண்டர்கள் வழங்கப்படவுள்ளது எனபது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

 9 மாவட்டங்களில் உள்ள அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் எண்ணிக்கைக்கு பின்வருமாறு வழங்கப்படுகிறது .


SPD Proceedings - Download here...


Click here for latest Kalvi News 

“ஒரு டென்ஷனும் வேண்டாம்” - பொதுத்தேர்வு எழுதும் +2 மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து..!

 நாளை 12ஆம் வகுப்பு தேர்வு தொடங்கவுள்ள நிலையில், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எந்த பயமும் இல்லாமல் எதிர்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மேலும் நீங்கள் படிக்கும் புத்தகத்திலிருந்து தான் கேள்வி வரப்போகிறது. உங்களுக்கு தன்னம்பிக்கையும் மனவுறுதியும் தான் தேவை. அது இருந்தாலே நீங்கள் பாதி வெற்றி பெற்றதாகும்.


தேர்வு என்பது உங்களை பரிசோதிக்க அல்ல. உங்களை உயர்த்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல தான். அதனால் எந்த தயக்கமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள். தேர்வை கண்டு பயம் வேண்டாம். பாடங்களை ஆழ்ந்து புரிந்து படியுங்கள். விடைகளை தெளிவாக முழுமையாக எழுதுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். முதல்வராக இல்லாமல் உங்கள் குடும்பத்தில் ஒருவராக வாழ்த்தி உங்கள் வெற்றிக்காக் காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.


12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tweeter Video Link - Click here...


Click here for latest Kalvi News 

கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

இளநிலை பட்டப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான கியூட் நுழைவுத் தேர்வு மே மாதம் 21 முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.


இதற்கு விண்ணப்பிக்க  நாளை கடைசி தினம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக் கழக மானியக் குழு தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.


 Click here for latest Kalvi News 

Career guidance manual for class 12th students

 

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் கையேடு

12th std Career guidance manual - Download here

Click here for latest Kalvi News 

பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

 பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் தேர்வெழுதும் நேரத்தில் மின்தடை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்னேற்பாடுகள் செய்ய மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்  12-ம் வகுப்புக்கு மார்ச் 13-ம் தேதி, 11-ம் வகுப்புக்கு மார்ச் 14-ம் தேதி, 10-ம் வகுப்புக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்வுகள் தொடக்க உள்ளது. இந்நிலையில், மாணவர்கள் தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதும் போது மின்தடை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு தேவையான உத்தரவுகளையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் நடைபெறும் போது தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்சார துறை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிற நிலையில், மாணவர்கள் தேர்வெழுதும் நேரத்தில் மின்தடை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்னேற்பாடுகள் செய்ய மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.    மேலும், தேர்வு நேரங்களில் வீடுகளிலும் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click here for latest Kalvi News 

மாணவர்களுக்கு வளரறி மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் , வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் பயிற்சி அளித்தல் சார்ந்து SCERT செயல்முறைகள்

 


பள்ளிக் கல்வி - மாநில மதிப்பீட்டுப் புலம் - மாவட்டம் தோறும் 6 முதல் வகுப்பு வரை வளரறி மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் , வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் பயிற்சி அளித்தல் சார்ந்து SCERT செயல்முறைகள் 


தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான " மாநில மதிப்பீட்டுப் புலம் " பார்வையில் காணும் அரசாணை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பார்வையில் காணும் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் கூட்டக்குறிப்பில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கணினி வழி வினாடி வினா நடத்துதல் தொடர்பாக பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.


 Assessment circular - phase 3.pdf - Download here...


Click here for latest Kalvi News 

ஆசிரியர்களுக்கு உண்டு உறைவிட திறன் மேம்பாட்டு பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

SCERT மூலம் அனைத்து மாவட்டத்தில் உள்ள முதுகலை (Zoology, Maths, Chemistry & Botany) ஆசிரியர்களுக்கு உண்டு உறைவிட திறன் மேம்பாட்டு பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

SCERT Training Proceedings - Download here...


Click here for latest Kalvi News 

திங்கட்கிழமை முதல் TNSED Attendance App-இல் Attendance பதிவிடுவதில் பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தவும் - EMIS Team

அரசு & அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம்


📌 திங்கட்கிழமை முதல் அரசுப் பொது தேர்வுகள் தொடங்க இருப்பதால் TNSED Attendance App-இல் Attendance பதிவிடுவதில் பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தவும்.


🛑 For Student Attendance


Partially Working என்ற Option-னை Select செய்து எந்தெந்த வகுப்புகள் செயல்படுகிறதோ அதை மட்டும் Select செய்யவும். Reason-இல், Exam என்று கொடுக்கவும். 

(For example, If Classes-11&12 not working, select Classes 06-10 as working. Mark attendance for those classes.)


🛑 Staff Attendance

📌தேர்வு பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு FN & AN Attendance-இல் OD என்று பதிவிடவும்.


📌Exam Centre பள்ளியாக இருந்து காலை பள்ளி நடைபெறாமல் மதியம் மட்டும் நடைபெற்றால் தேர்வு பணியில் ஈடுபடாத ஆசிரியர்களுக்கு FN Attendance-இல் NA என்றும், AN Attendance-இல் வழக்கம்போல் Present or Absent பதிவிடவும். 

- Team EMIS 


Click here for latest Kalvi News 

TRUST தேர்வு முடிவுகள் வெளியீடு

 TRUST தேர்வு முடிவுகள் வெளியீடு - மாவட்ட வாரியான முடிவுகள் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


ஊரகப் பகுதியில் அதாவது கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு கடந்த 17.12.2022 அனறு வட்டார அளவில்  தேர்வுநடைபெற்றது .

அந்த தேர்வுக்கான தேர்வு முடிவுகள் அனைத்து மாவட்டங்களுக்கும் வெளியிடபட்டுள்ளது

TRUST Result 2023  Nagapattinam  District - Download here


Click here for latest Kalvi News 

பயிற்சி காலத்தில் உள்ள பேராசிரியர்கள், பிஎச்.டி., வழிகாட்டுனராக பணியாற்ற, யு.ஜி.சி., அனுமதி

 பயிற்சி காலத்தில் உள்ள பேராசிரியர்கள், பிஎச்.டி., வழிகாட்டுனராக பணியாற்ற, யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது.


கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள், தங்களின் இரண்டு ஆண்டு பயிற்சி காலத்தில், பிஎச்.டி., வழிகாட்டுனராக செயல்பட முடியாது; பயிற்சி நிறைவடைந்து சான்றிதழ் பெற்றால் மட்டுமே, வழிகாட்டுனராக பணியாற்ற முடியும்.


இந்த விதிமுறையால், பிஎச்.டி. வழிகாட்டுனரின் எண்ணிக்கை குறைந்து, ஆராய்ச்சி படிப்புகளின் எண்ணிக்கையும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.


இப்பிரச்னையை தீர்க்கும் வகையில், பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'உயர் கல்வி நிறுவனங்களில் நிரந்தர பணியில் சேரும் ஆசிரியர்கள், தங்களின் பயிற்சி காலத்திலும், பிஎச்.டி., வழிகாட்டுனராக செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது' எனக் கூறப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News 

நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்துக்கு ஒருநாள் ஊதியத்தை வழங்குகின்றனர் ஐஏஎஸ் அதிகாரிகள்

 

தமிழக அரசின் நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்துக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் ஒருநாள் ஊதியத்தை வழங்குகின்றனர். அரசு பள்ளிகளை மேம்படுத்த தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் ஒருநாள் ஊதியத்தை நன்கொடையாக தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News 

பொது தேர்வு எழுதும் மாணவர்களில் வருகையினை தேர்வு நாட்களில் இணையத்தில் பதிவேற்ற உத்தரவு.

 தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 பொது தேர்வு வரும் 13ம் தேதியும்; பிளஸ் 1 பொது தேர்வு 14ம் தேதியும் துவங்குகின்றன. தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.


இந்நிலையில், தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா சுற்றறிக்கை:


பொது தேர்வு நடக்கும் ஒவ்வொரு நாளும், தேர்வில் பங்கேற்ற மாணவர்கள், 'ஆப்சென்ட்' ஆனவர்கள் உள்ளிட்டோர் விபரங்களை, அரசு தேர்வுத்துறையின், www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில், தேர்வு கண்காணிப்பு பணியில் உள்ள ஆசிரியர்கள் பதிவேற்ற வேண்டும்.


மாற்று திறனாளி சலுகை பெற்றவர்களின் விபரங்களையும், ஒவ்வொரு தேர்வு நாளிலும், இணையதளத்தில் குறிப்பிட வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Click here for latest Kalvi News 

Ennum Ezhuthum - Assessment Schedule 2022 - 2023

 எண்ணும் எழுத்தும் மதிப்பீடு - கால அட்டவணை 

Ennum Ezhuthum - Assessment Schedule 2022 - 2023


Download Schedule here....


Click here for latest Kalvi News 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புன்னகை திட்டம் தொடக்கம்!

 சென்னையில் அரசுப் பள்ளி மாணவர்களின் பல் பாதுகாப்பு திட்டமான புன்னகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புன்னகை திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 


முதல்கட்டமாக 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. மாணவர்களுக்கு ஏற்படும் வாய்வழி தொற்று நோய்களை தடுக்க புன்னகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 1000 இடங்களில் காய்ச்சல் முகாம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் இன்புளூயன்சா எச்3என்2 வகையை சேர்ந்த வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக ஐசிஏஆர் தெரிவித்துள்ளது. காய்ச்சல், தொண்டை புண், இருமல், சளி உள்ளிட்டவை இதன் அறிகுறிகள் ஆகும். எச்3என்2 வைரஸ் கொரோனோ போல வேகமாக பரவும் என்பதால் முகக்கவசம் அணியவும், அடிக்கடி கைகளை கழுவவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ்நாடு அரசும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த சூழலில் நாளை சென்னையில் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Click here for latest Kalvi News 

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களது ஆதார் எண்களை வங்கிக் கணக்குடன் இணைத்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

 NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று , 2022-23 கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புதிதாக விண்ணப்பிக்குமாறும் , மேலும் , 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை ( Renewal application ) புதுப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


 விண்ணப்பங்கள் புதியதாகவோ புதுப்பித்தல் செய்யவோ National Scholarship Portal என்ற இணையதளத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டு 10.01.2023 அன்றுடன் பணிகள் முடிக்கப்பட்டது.

மேலும் , பார்வை 1 இல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு விவரத்தினை புதுடில்லி , மத்திய கல்வித் துறைக்கு உரிய காலத்திற்குள் அளித்திட மாணவர்களுக்கு உரிய தொகை வங்கிக் கணக்கில் சென்றடைய ஏதுவாக மாணவர்களது ஆதார் எண்களை வங்கிக் கணக்குடன் இணைத்திட பள்ளித் தலைமையாசிரியர் மூலம் மாணவர்களை அறிவுறுத்திட  அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் , இதுநாள் வரை பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது . எனவே , மாணவர்களுக்கு உரிய தொகை சென்றடைய ஏதுவாக மாணவர்களின் ஆதார் எண்களை உடன் வங்கிக் கணக்குடன் இணைத்திட உரிய நடவடிக்கை மேற்கெள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Click here for latest Kalvi News 

அரசு மாதிரி பள்ளிகளில் கட்டாயமாக நுழைவுத் தேர்வு கிடையாது: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

 அப்போது தேர்வு முடிந்ததும் இங்க் அடித்து விளையாடுவோம், இப்போது மாணவர்கள் மேசை உடைத்து விளையாடுகிறார்கள், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 8ம் வகுப்பு வரையில் மாணவர்களின் கல்வி நிலை குறித்து சர்வே எடுக்க சொல்லியிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம் பாலக்காடு அருகே, மாமல்லபுரம் அரசு பள்ளியில் மேசை நாற்காலிகளை உடைத்து ஐந்து மாணவ மாணவிகள் அட்டகாசம் செய்துள்ளனர்.


மேசை மற்றும் நாற்காலிகளை உடைத்த 5 மாணவ மாணவிகள் ஐந்து நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், அப்போது தேர்வு முடிந்தது இங்க் அடித்து விளையாடுவோம். இப்போது மாணவர்கள் மேசை உடைத்து விளையாடுகின்றனர். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில், பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அரசு மாதிரி பள்ளிகளில் கட்டாயமாக நுழைவுத் தேர்வு கிடையாது. எட்டாம் வகுப்பு வரையில் மாணவர்கள் கல்வி நிலை குறித்து சர்வே எடுக்க சொல்லி இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.


Click here for latest Kalvi News 

+1 & +2 விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் - அட்டவணை வெளியீடு!!!

+1 & +2 விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் - அட்டவணை வெளியீடு!!!

 DOWNLOAD PDF மதிப்பீட்டு முகாம் - அட்டவணை


Click here for latest Kalvi News 

6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வளரறி மதிப்பீட்டு வினாடி வினா நடத்துவது சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள்

  DSE மாவட்டம் தோறும் வளரறி மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் | வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பயிற்சி அளித்தல் - செயல்முறைகள்


பென்ஷன் இணையதளங்களை ஒருங்கிணைக்கிறது மத்திய அரசு

 மத்திய அரசு ஓய்வூ தியதாரர்களுக்கான, பென்ஷன் இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக, மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.வங்கியாளர்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கம், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இரண்டு நாள் நடக்கிறது. இதை நேற்று துவக்கி வைத்து, மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது: 

ஓய்வூதியதாரர்களுக்கான சேவைகளை சுலபமாக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆயுள் சான்று அளிக்கும் நடைமுறை, 'டிஜிட்டல்' மயமாக்கப்பட்டது.


'மொபைல்போன் ஆப்' வாயிலாகவும் ஆயுள் சான்றை அளிக்கும் வசதி துவக்கப்பட்டது.


தற்போது, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் வாயிலாக சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவதில், ஓய்வூதியதாரர்களுக்கு உள்ள பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில், ஒருங்கிணைந்த ஓய்வூதியதாரர்கள் இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் வழங்கும் ௧௮ வங்கிகளின் இணையதளங்கள் உட்பட, ஓய்வூதியம் தொடர்பான இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.இது ஓய்வூதியதாரர்களுக்கு சிரமம் இல்லாமல், தங்களுடைய சேவைகளை பெறுவதற்கு உதவும்.இவ்வாறு அவர் பேசினார்.


Click here for latest Kalvi News 

சிறார் திரைப்படத் திருவிழா - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு!

 சிறார் திரைப்படத் திருவிழா - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு!


அரசுப் பள்ளி மாணவர்கள் தரமான கல்வி பெறவேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது . கல்வி இணைச் செயல்பாடுகளில் அண்மைக் காலமாக தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் ஈடுபடும் வகையில் பள்ளிக் கல்வித் துறை பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது.

CEO Tranfer & DEO to DEO Promotion G.O. by TN SCHOOL EDUCATION!

 CEO Tranfer & DEO to DEO Promotion G.O. by TN SCHOOL EDUCATION!

பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழுள்ள வகுப்பு III- ஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலருக்கு நிர்வாக நலன் கருதி , அவரது பெயருக்கு எதிரே பணியிட மாறுதல் வழங்கி அரசு குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு ஆணையிடுகிறது.


GO NO : 55 , Date : 08.03.2023 - Download here...



Click here for latest Kalvi News 

NMMS தேர்வுக்கான தற்காலிக விடைக்குறியீடு வெளியீடு - மாற்றம் இருப்பின் 14.03.2023க்குள் தெரிவிக்கலாம்!!!

 25.02.2023 அன்று நடைபெற்ற NMMS தேர்வுக்கான தற்காலிக விடைக்குறியீடு (Tentative Key Answer) www.dge.tn.gov.in வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாற்றம் இருப்பின் 14.03.2023க்குள் தெரிவிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

NMMS 2023 -Tentative Key Answer (MAT&SAT) - Download here


மார்ச் 8 - இன்று உலக மகளிர் தினம் (International Women's Day) - கொண்டாடப்படுவதற்கான வரலாறு!!!

 ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் மாதம் 8 -ம் தேதி கொண்டாடப்படுகிறது. அது வந்த வரலாற்றை சற்று பின்னோக்கி பார்ப்போம். 

வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும். இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டத்திற்கான வெற்றிகள் அவ்வளவு எளிதாக கிட்டவில்லை. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்தான். 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார். அவர்தான் உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். அதுமுதல் உலகின் பல்வேறு நாடுகளிலும் மகளிர் தினக் கொண்டாட்டங்கள் நடைபெற ஆரம்பித்தன.சமீப காலமாகத்தான் இந்தியாவில் மகளிர் தின கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.



Click here for latest Kalvi News 

“நான் முதல்வன்” - போட்டித் தேர்வுகள் பிரிவு தொடக்கம் - செய்தி வெளியீடு எண்‌ : 479 நாள்‌ : 07.03.2023

 " நான் முதல்வன் திட்டம் " - போட்டித் தேர்வுகள் பிரிவு மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு . உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையில் தொடங்கி வைத்தார்.



 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான " நான் முதல்வன் திட்டத்தின் போட்டித் தேர்வுகள் பிரிவு " தொடக்க நிகழ்ச்சி இன்று ( 07.03.2023 ) சென்னை , கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது. " நான் முதல்வன் திட்டத்தின் போட்டித்தேர்வுகள் பிரிவின் கீழ் அரசுத் தேர்வுகளான எஸ்.எஸ்.சி ( SSC ) . ரயில்வே ( RAILWAY ) , வங்கி ( BANKING ) மத்திய ( UPSC ) தமிழ்நாடு அரசுப்பணி ( TNPSC ) , இராணுவம் ( DEFENCE ) போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தமிழ்நாடு முழுவதும் சிறந்த முறையில் பயிற்றுவிக்கும் வகையில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.



மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட பள்ளிப்பார்வை முடிவுகள் [REVIEW MEETING REPORT]

 மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட பள்ளிப்பார்வை முடிவுகள் 

REVIEW MEETING  REPORT - Download here...


Click here for latest Kalvi News 

நீட் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் உயர்வு

 இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியிருக்கும் நிலையில், அனைத்து மாணவர்களுக்கும் நீட் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 உயர்த்தப்பட்டுளள்து.


நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான neet.nta.nic.in இணையதளத்தில், மாணவர்கள் நேரடியாக விண்ணப்பிப்பதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. நீட் 2023ஆம் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 6ஆம் தேதி கடைசியாகும். நீட் நுழைவுத் தேர்வு மே 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழடை நடைபெறவிருக்கிறது.


இந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1600லிருந்து ரூ.1700 ஆக அதிகரிக்கப்பட்டுளள்து. இதர பிறப்டுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.1600 ஆகவும், அதுபோல எஸ்சி/எஸ்டி மற்றும் மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவுக்கு வெளியே வாழும் மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.9,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் மாணவர்கள் ஜிஎஸ்டி மற்றும் செயல்முறைக் கட்டணங்களையும் கூடுதலாக கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


விண்ணப்பிக்கும் மாணவர்கள், தங்களது கல்விச் சான்று உள்ளிட்டவற்றை இணைத்தபிறகு, விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டதற்கான உறுதிச் சான்றை புகைப்படமாக சேமித்து வைத்துக் கொள்வது பயனளிக்கும்.



Click here for latest Kalvi News 

Ennum Ezhuthum - Term 3 - Unit 7 - TLM - Tamil, English, Mathematics

 எண்ணும் எழுத்தும் - பருவம் 3 - அலகு 7 - கற்றல் கற்பித்தல் கருவிகள் - தமிழ், ஆங்கிலம், கணக்கு

 Ennum Ezhuthum - Term 3 - Unit 7 - TLM - Tamil - Download here


Ennum Ezhuthum - Term 3 - Unit 7 - TLM - English - Download here



Click here for latest Kalvi News 

ITK - குறும்படக் கொண்டாட்டம் - மாநில அளவில் வெற்றி பெற்றவர்கள் விபரம் :

 இல்லம் தேடிக் கல்வி - குறும்படக் கொண்டாட்டம் - மாநில அளவில் வெற்றி பெற்றவர்கள் விபரம் :

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் 3 நிமிடத்தில் தங்களது மையத்தில் உள்ள மாணவர்களை வைத்து மொபைல் போன் மூலமாக குறும்படம் எடுத்து ஒன்றிய அளவிலும்,  மாவட்ட அளவிலும் தேர்வு செய்து அனுப்பிய குறும்படங்களில் இருந்து மாநில அளவில் சிறந்த 6 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News 

TNSED SCHOOL mobile app இல் மாணவர்களது நலத்திட்ட விபரங்களை பதிவேற்ற உத்தரவு.

 திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் அரசு / உள்ள நகராட்சி / ஆதிதிராவிடர் / உதவிபெறும் , தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் விபரங்களை ( புத்தகங்கள் , பாடக்குறிப்பேடுகள் , சீருடைகள் . விலையில்லா புத்தகப்பை ) வகுப்பாசிரியர் Login ID மூலம் TNSED SCHOOL mobile app இல் உடனடியாக பதிவேற்றம் செய்ய அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து வகை மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( இடைநிலை / தொடக்கக்கல்வி ) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Click here for latest Kalvi News