மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக் கொடைவிழாவினை முன்னிட்டு 14.03.2023 ( செவ்வாய் கிழமை ) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
14.03.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2023 மே திங்கள் இரண்டாவது சனிக்கிழமை ( 13.05.2023 ) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக் கொடைவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 ( Under Negotiable Instruments Act 1881 ) -இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 14.03.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு , தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என இதன் மூலம் ஆணையிடப்படுகிறது.