முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறை ஆணை வழங்குதல் தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்.

 


மேல்நிலைக்கல்விப்பணி 01.01.2021 நிலவரப்படி வரை உள்ள 01.01.2013 நிலவரப்படி முதல் காலத்திற்கு பதவி உயர்வு மூலமாக கணிதம் , இயற்பியல் , வேதியியல் , தாவரவியல் , விலங்கியல் மற்றும் உயிரியல் UBL முதுகலைப் பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்றவர்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறை ஆணை வழங்குதல் தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள். 


PG Teachers Regularisation Order - Download here

Click here for latest Kalvi News 

TNSED Administrators App - பள்ளிப் பார்வை செயலியினை எவ்வாறு பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது?

 


TNSED Schools - பள்ளிப் பார்வை செயலியினை எவ்வாறு பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது என்பதை கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

TNSED Administrators App - How to Install And use - Video Link - Click here...



Click here for latest Kalvi News 

பள்ளி பார்வை செயலியில் ஆய்வின் போது கேட்கப்படும் தகவல்கள் என்ன? முழுமையான விளக்கம்!!!

 

பள்ளி பார்வை செயலியில் ஆய்வின் போது கேட்கப்படும் தகவல்கள் என்ன? முழுமையான விளக்கம்!!!

* பாடம் கற்பித்தல்

* வகுப்பறை மேலாண்மை

* மாணவர்கள் வருகை

* மாணவர்கள் மதிப்பீடு

* பாடக் குறிப்பேடுகள் சரிபார்ப்பு

* பள்ளி ஆய்வு

* பள்ளி நிர்வாகம்

* பள்ளி கட்டமைப்பு

* மாணவர் மற்றும் ஆசிரியர்கள் பதிவு விவரம்

* பார்வையாளரின் குறிப்புகள் ஏதேனும் இருப்பின் பார்வை அறிக்கை.


Full Details pdf file - Click here...





Click here for latest Kalvi News 

மாதிரிப் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான அடிப்படை தேர்வு (Baseline Assessment) அறிவிப்பு.

 மாதிரிப் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான அடிப்படை மதிப்பீடு (Baseline Assessment) - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 04.03.2023 அன்று நடைபெற உள்ளது - தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலரின் செயல்முறைகள்!



மார்ச் 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் உத்தரவு

 திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டைத்தையொட்டி மார்ச் 13 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 


விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஏப்ரல் 1 ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வழக்கமாக சனிக்கிழமை இயங்கும் அலுவலகங்களுக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News 

SMC - பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 03.03.2023 நடத்த உத்தரவு.

 


அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் , மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்று வருகிறது . மேல்நிலைப்பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறுவதால் மேல்நிலைப் பள்ளிகள் நீங்கலாக தொடக்க / நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மார்ச் 2023 மாதத்திய பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை 03.03.2023 ( வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது .

SMC meeting circular 03.03.2023 -Reg - Download here


03.03.2023 - SMC Meeting Agenda

 


மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி சார்ந்த மார்ச் மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழு கலந்துரையாடல் சிந்தனையில் மாற்றம் ! சமூகத்தின் ஏற்றம் !

Annexure 2 - SMC-CwSN Agenda 03 March.pdf - Download here

பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு

 பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை விரிவான அறிக்கையாக அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு.



புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கு தமிழக அரசின் நிதித்துறை உத்தரவு 

ஊழியர்கள் அளிக்கும் தகவல்கள் நீதிமன்ற வழக்கு, அரசாணைகள் அடிப்படையில் தமிழக அரசு இறுதி முடிவெடுக்கும் - அரசாணை Download here

அரசு ஊழியர்களுக்காக தற்போது நடைமுறையில் உள்ளபுதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு கொண்டு வருவது தமிழக அரசு தீவிர ஆலோசனை 

2004 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அரசு நடவடிக்கை....

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு ஒத்திவைப்பு!

 மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கானது 02.03.2023க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இன்று பிற்பகல் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கு விசாரணைக்கு வந்தது சிலர் தங்களுடைய வாதத்தை எடுத்துரைத்தனர் நாளை மறுநாள் காலை முதல் மீண்டும் வாதம் தொடரும் அதன் பிறகு தீர்ப்பு வெளிவரும்b

10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாள் கசிவு? - எச்சரிக்கும் CBSE

 


மாணவர்கள்  பொய் அறிவிப்புகளை வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டால்.  உரிய சட்ட / குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளது


10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பாடத்திற்கான வினாத்தாள் வெளியானதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்கள் உண்மையில்லை என்று சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது.


இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், "  நடைபெற்று வரும் 2023ம்  கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதாகவும், வினாத்தாள் வைத்திருப்பதாவும் சில சமூக விஷமிகள் யுடியூப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் போலியான அறிவிப்புகள் பரப்பி வருகின்றன. பணம் பறிக்க முயற்சிக்க இவர்களும் மாணவர்கள்/பெற்றோர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.


Click here for latest Kalvi News 

School Morning Prayer Activities - 01.03.2023

  

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 01.03.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல்

 அதிகாரம்: ஒழுக்கம் உடைமை

குறள் எண்: 136

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.

பொருள்:
ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.


பழமொழி :
The early bird catches the worm 

முந்தி முயல்வோர்க்கே முதல் வெற்றி.


இரண்டொழுக்க பண்புகள் :

1. மழை காலத்திற்கு என்று உணவை சேமிக்கும் எறும்பை போல மாணவ பருவத்திலேயே சேமிக்க பழகுவேன். 

2. கனி தரும் மரங்கள் போல மற்றவர்க்கு எப்போதும் பயன் தர முயற்சிப்பேன்.


பொன்மொழி :

ஒருவனை அகந்தை ஆட்கொண்டால் – அழிவு அவன் தலைமுறையையும் ஆட்டுவிக்கும்.


பொது அறிவு :

1. கடித உரைகளை கண்டுபிடித்தவர் யார்? 

 பியர்சன்.

 2. ரூபாய் நோட்டுகளில் கையெழுத்திட்ட ஒரே இந்திய பிரதமர் யார்? 

 Dr. மன்மோகன் சிங்.


English words & meanings :

catheter - a flexible tube inserted into bladder to remove fluid. noun. medicine. சிறுநீர் நீக்க குழாய். பெயர்ச் சொல். மருத்துவம்


ஆரோக்ய வாழ்வு :

சீனாவில் நடந்த ஆய்வில், பிற்பகலில் தூங்குவோருக்கு இருப்பிடம் சார்ந்த விழிப்புணர்வு எப்போதும் சிறப்பாக இருக்கும். அத்துடன் பேசுவதை சரளமாகவும் பேசவும், நினைவாற்றலுக்கும் தொடர்புடையதாக பகல் தூக்கம் விளங்குகிறது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு எடுக்கப்பட்ட அறிவாற்றல் செயல்திறன் சோதனையில் பிற்பகலில் தூங்குவோரே அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி பிற்பகலில் தூங்குவோருக்கு செயல் திறன்கள் அதிகரிப்பு, நினைவாற்றல் அதிகரிப்பு, சிக்கலான சூழ்நிலைக்கு தீர்வு காண்பது, இருப்பிடம் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் சரளமான பேச்சு போன்றவை அதிகமாக காணப்பட்டது. பிற்பகலில் தூங்காதவர்களுக்கு, அவர்களைக் காட்டிலும் இவை அனைத்தும் குறைவாகவே காணப்பட்டது.


  மார்ச் 01 இன்று


பாகுபாடுகள் ஒழிப்பு நாள்

பாகுபாடுகள் ஒழிப்பு நாள் (Zero Discrimination Day)  என்பது ஐநா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும். உலக நாடுகளில் சட்டத்திலும், நடைமுறையிலும்  மனித சமுதாயத்தில் தொடர்கிற பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அறைகூவல் விடுக்கும் நாளாக இது உள்ளது.  இந்த நாள் 2014 மார்ச் 1 அன்று முதன்முதலில் கொண்டாடப்பட்டது. இதை   பெய்ஜிங்கில் ஒரு முக்கிய நிகழ்வுடன் அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி ஐநா எய்ட்ஸ் விழிப்புணர்வு/கட்டுப்பாடு அமைப்பின் (யுனெய்ட்ஸ்) நிறைவேற்று இயக்குனரான மைக்கேல் சிடிப் என்பவரால் தொடங்கப்பட்டது


நீதிக்கதை

நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை

தெனாலிராமன் ஒரு முறை சந்தைக்குச் சென்று ஐம்பது நாணயங்கள் கொடுத்து குதிரை ஒன்று வாங்கி வந்தான். அதில் ஏறி சவாரி செய்யப் பழகிக் கொண்டிருந்தான். அப்போது அரசர் தன் விலை உயர்ந்த குதிரை மேல் ஏறிக் கொண்டு இராமனையும் உடன் வருமாறு அழைத்தார். ராமனும் தன் குதிரை மீது ஏறிக் கொண்டு மன்னருடன் சென்றான். 

அரசரின் குதிரை அழகாக நடை போட இராமனின் குதிரையோ தளர்ந்த நடை போட்டது. இராமா! போயும், போயும் இந்த வற்றிப் போன தொத்தல் குதிரைதானா உனக்குக் கிடைத்தது. இதனை வைத்துக் கொண்டு நீ எப்படி சவாரி செய்யப் போகிறாய்? உடனே ராமனுக்கு ரோஷம் வந்து விட்டது. 
அரசே! இந்தக் குதிரை பயன்படுவது போல உங்கள் குதிரை பயன் படாது. என்று தன் குதிரையைப் பற்றி மிக உயர்வாகப் பேசினான். எப்படிச் சொல்கிறாய்? இதை உன்னால் நிரூபிக்க முடியுமா? முடியும், வேண்டுமானால் பாருங்கள். உங்கள் குதிரையால் செய்ய முடியாததை என் குதிரையைச் செய்ய வைக்கிறேன். அப்படியா சொல்கிறாய்? நூறு பொன் பந்தயம் கட்டுகிறேன் செய் பார்க்கலாம். என்றார். 

இருவரும் பேசியவாறு மெதுவாக வந்து கொண்டிருந்தனர். அப்போது குதிரைகள் இரண்டும் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தன. கீழே பார்த்தால் பயங்கர சுழல். ராமன் சட்டென்று குதிரையை விட்டுக் கீழே இறங்கினான். பாலத்தின் ஓரத்திற்குக் குதிரையைக் கொண்டு சென்றார். அரசர் திகைத்தார். ராமன் தன் குதிரையை நீருக்குள் தள்ளி விட்டுடான். அரசர் பதறினார். 

இராமா!, என்ன இது, ஏன் இப்படிச் செய்தாய்? அரசே! என் குதிரை செய்தது போல உங்கள் குதிரை செய்ய முடியுமா? உங்கள் ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரையால் செய்ய முடியாததை என் குதிரை செய்து விட்டது பாருங்கள். 

ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரை மட்டுமல்ல, அரசரின் நண்பனாகவும் பழகிய அறிவுள்ள குதிரை அது. அதை இழக்க அரசர் விரும்புவாரா? பந்தயத்தில் சொன்னபடி நூறு பொன் நாணயங்களைக் கொடுத்தார். அரசர், இருந்தாலும் ஒரு உயிரைக் கொல்வது தவறில்லையா இராமா? என்றார். அரசர் வருத்தத்தோடு. அரசே! நோய்வாய்ப்பட்டு வயோதியான நிலையில் இருக்கும் இந்தக் குதிரையை யாரும் இனி வாங்க மாட்டார்கள். 

இது இறந்தால் எனக்கு ஐம்பது நாணயங்கள் நஷ்டம். இப்போது எனக்கு நூறு பொன் கிடைத்து விட்டது. அத்துடன் அந்தக் குதிரையைப் பராமரிக்கும் செலவும் இனி இல்லை. குதிரைக்கும் துன்பம் நீங்கி விட்டது. எனவேதான் இப்படிச் செய்தேன். என் குதிரையின் உயிர் நஷ்டம் எனக்கு இரு மடங்கு லாபமாயிற்று. என்றான்.


இன்றைய செய்திகள் - 01.03.2023

* 1.50 கோடி பேர் ஆதாரை இணைக்கவில்லை; இதற்கு மேல் அவகாசம் வழங்கப்படாது: அமைச்சர் செந்தில் பாலாஜி.

* 5 ஆண்டுகளில் இந்தியர்களும் விண்வெளிக்கு செல்வார்கள் என முன்னாள் விண்வெளி ஆராய்ச்சியாளர் வி.கே.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

* நீர்வாழ் உயிரினங்களின் நோய்களை கண்டறிய தேசிய அளவிலான கண்காணிப்பு திட்டம்: மத்திய அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்.

* அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்பது ஆளுநரின் கடமை: உச்ச நீதிமன்றம்.

* நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துவரும் சூழலில், வெப்ப அலையால் ஏற்படும் நோய்கள் குறித்து கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது.

* ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்.

* வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதை தொடர்ந்து, விவசாய உற்பத்தியில் தீவிர மாற்றத்திற்கு அந்நாட்டு அதிபர் கிம் அழைப்பு விடுத்துள்ளார்.

* சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 378 வாரங்கள் முதலிடம் வகித்து ஸ்டெபி கிராஃபின் சாதனையை முறியடித்துள்ளார்.

* சிறந்த ஃபிஃபா வீரர் விருது வென்றார் லயோனல் மெஸ்ஸி.


Today's Headlines

* 1.50 crore people have not linked Aadhaar;  No more time will be given: Minister Senthil Balaji.

*  Former space researcher VK Hariharan has said that Indians will also go to space in 5 years.

 * National Surveillance Program for Aquatic Diseases: Union Ministers Launch

 * Duty of Governor to accept recommendation of Cabinet: Supreme Court.

 * In the context of increasing heat wave across the country, the Central Health Department has written to the state governments to monitor the diseases caused by heat wave.

 * Chinese Foreign Minister arrives in India to participate in G20 summit.

*  Following North Korea's food shortages, President Kim has called for a drastic change in agricultural production.

 * Serbia's Novak Djokovic has topped Steffi Graf's record for 378 weeks at the top of the international tennis rankings.

*  Lionel Messi won the best FIFA player award.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Click here for latest Kalvi News 

School Calendar - March 2023

 மார்ச் - 2023 நாட்காட்டி:


RL LIST:


💥4.3.23-அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள்


💥6.3.23-மாசிமகம்


💥7.3.23-ஷாபே பரஆஅத்


💥24.3.23-இரமலான் நோன்பு தொடக்கம்


அரசு விடுமுறை நாட்கள்:


🌷22.3.23-தெலுங்கு புத்தாண்டு


CRC & TEAM VISIT DAYS:


👉04-03-2023 -- சனி --CRC ( மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்  மாவட்டங்கள் தவிர)


👉04-03-2023 --சனி --மண்டல ஆய்வு -- மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்  மாவட்டங்கள் பள்ளி முழு வேலை நாள்.


👉11-03-2023 -- சனி -- மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்  மாவட்டங்களுக்கு CRC ( மாறுதலுக்கு உட்பட்டது)


👉13-03-2023 -- திங்கள் -- மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்  மாவட்டப் பள்ளிகளுக்கு ஈடு செய்யும்  பொது விடுமுறை.



Click here for latest Kalvi News 

ரூ.200 கோடியில் மாநகராட்சி பள்ளிகள் டிஜிட்டல்மயம்

 


சென்னை மாநகராட்சி பள்ளிகளை ரூ.200 கோடி மதிப்பில் தனியார்நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் நிதி பங்களிப்பில் டிஜிட்டல்மயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாநகராட்சி பள்ளிகளில் 98 ஆயிரத்து 633 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 3 ஆயிரத்து 13 ஆசியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனியார் பள்ளிகளுக்கு நிகராக சென்னை மாநகராட்சி பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளில் டிஜிட்டல் முறையிலான வள வகுப்பறைகள் அமைத்தல், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கற்கும் முறை, நிர்பயா திட்டத்தின்கீழ் பெண்களுக்கான கழிப்பறைகள் அமைத்தல் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் நிறுவுதல் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் ஆகியவை இணைந்து “மாநகராட்சி பள்ளிகளில் முழுமையான மாற்றம்” என்றஅடிப்படையில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு, கற்பித்தல் முறை, ஆசிரியர்களின் பயிற்சி, விளையாட்டு மற்றும் இதர வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இது மாநகராட்சி பள்ளிகளை பல பரிமாணங்களில் முழுமையாக மாற்றும் முயற்சியாகும்.


இப்பள்ளிகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்திட சிட்டிஸ் (CITIIS), நமக்கு நாமே திட்டம், ஸ்மார்ட் சிட்டி, சிங்கார சென்னை 2.0 மற்றும் நிர்பயா திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின்கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ் (CSR Fund) பள்ளிகளில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உறுதுணையாக உள்ளன.


இப்பணிகளின் தொடர்ச்சியாக, மாநகராட்சியின் 10 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வகுப்பறைகளில் ஸ்மார்ட் போர்டு,ஆசிரியர்களுக்கு மடிக்கணினி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய மேசைகள், ஒரு ஆண்டு்க்கு இணைய வசதி, வண்ணமயமான ஓவியத்துடன் கூடிய வகுப்பறைகள் ஆகியவற்றை ரூ.56 லட்சத்து 60 ஆயிரம் செலவில் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.


இப்பணிகளுக்கு ‘டோரண்ட் கேஸ் சென்னை பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் “நமக்குநாமே” திட்டத்தின்கீழ் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியில் ரூ.28 லட்சத்து 87 ஆயிரம் வழங்கியுள்ளது. சென்னையின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் நிதி பங்களிப்புடன் சுமார் ரூ.200 கோடியில் மாநகராட்சிப் பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன.


மாநகராட்சியில் பெருநிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு நிதியுடன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பள்ளி உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளலாம். விருப்பம் உள்ள நிறுவனங்கள் அல்லது பொதுமக்கள், வட்டார துணை ஆணையர்கள் மற்றும் மண்டல அலுவலர்களை தொடர்புகொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கேட்டுகொண்டுள்ளார்.


- எஸ்.கார்த்திகேயன்

Palli Parvai App - எப்போதும் தயார் நிலையில் ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

 

பள்ளி பார்வை செயலி 

தற்போது TNSED Administrators என்ற செயலியில் பள்ளி பார்வை என்ற option மூலம் வகுப்பறை உற்றுநோக்கல் (BRT, DC, DI, BEO, PA, DEEO, CEO, JD, Director வரை) செய்யப்பட உள்ளது. இது சார்ந்த தகவல்கள்.

🔹மேற்கண்ட செயலியில் எந்ததெந்த பள்ளிகள் பார்வையிட வேண்டும் என்ற பட்டியல் வரும்.

🔹பட்டியலில் வரும் பள்ளிக்கு பார்வையிடுபவர் சென்று மேற்கண்ட செயலியில் பார்வையிட வேண்டிய வகுப்பை தேர்வு செய்வார்.

🔹வகுப்பறையில் ஆயத்தப்படுத்துதலிலிருந்து பாடவேளை முடியும் வரை (45 நிமிடம்) முழுமையாக கவனித்து பார்வையிட வேண்டும்.

🔹TLM கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.

🔹ஆசிரியரின் வகுப்பறை கற்பித்தல் எப்படி உள்ளது என்பதை செயலியில் வரும் கேள்விகளுக்கு  பார்வையிடும் அலுவலர் டிக் செய்ய வேண்டும்.

🔹4 line, 2 line, drawing note, maths graph, geometry, subject note இவற்றை  ஆசிரியர் கடைசியாக திருத்தப்பட்ட தேதியை செயலியில் பதிவு செய்ய வேண்டும்.

🔹வகுப்பறை கால அட்டவணையில் நூலகத்திற்கு ஒரு பாடவேளை ஒதுக்கி இருக்க வேண்டும்.

🔹நூலக புத்தகம் மாணவர்கள் பையிலிருந்து எடுத்து  கொடுக்க வேண்டும். புத்தகத்தில் உள்ள கதை, கருத்துகள் கூற தெரிந்திருக்க வேண்டும். கதை, கருத்துகள் இவற்றை ஏதாவது Activity மூலம் வெளிப்படுத்த வேண்டும்.

🔹வகுப்பறையில் அனைத்து  மாணவர்கள் பங்கேற்பு இருக்க வேண்டும்.

🔹எனவே எப்போதும் தயார் நிலையில் ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.


குழந்தைகளின் பள்ளி சேர்க்கைக்கான வயது மாற்றம் குறித்த தலையங்கம்

 ஒன்றாம் வகுப்பில் குழந்தையைச் சேர்ப்பதற்கான வயது இப்போது நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை. உதாரணத்துக்கு, தமிழகம், புதுதில்லி, ராஜஸ்தான், ஒடிஸô, ஆந்திர பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஐந்து வயது நிறைவடைந்தவர்கள் ஒன்றாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆனால், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் மாணவர் சேர்க்கைக்கான வயது ஆறாக உள்ளது. கர்நாடகம், கோவா போன்ற மாநிலங்களில் 5 வயது 10 மாதம் நிறைவடைந்தவர்கள் முதல் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.


அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பில் ஆறு வயது நிறைவடைந்தவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும் என்று அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. அதற்கு முன் சேர்ப்பதனால், குழந்தைகளின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதுடன், உளவியல் ரீதியாகவும் பாதிப்பு ஏற்படக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


குழந்தைகளை சீக்கிரமாக பள்ளிகளில் சேர்ப்பதன் மூலம் அவர்களது பணிக்காலத்தை நீட்டிக்க முடியும் என்கிற தவறான கருத்து நிலவுகிறது. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆறு வயது நிறைவடைந்தவர்கள்தான் ஒன்றாம்  வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டதை எதிர்த்து பெற்றோர்களில் சிலர் உச்சநீதிமன்றத்தை நாடினர்.


"குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் அதீத ஆர்வம் காட்டுகின்றனர். இரண்டு வயதிலேயே தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று பெற்றோர் விரும்புகின்றனர். இதனால் மனரீதியாக குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும்' என்று இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கெüல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு குறிப்பிட்டது கவனத்தில் கொள்ளத்தக்கது. பின்னர், அந்த அமர்வு இந்த மனுக்களை தள்ளுபடி செய்தது.


நகரமயமாக்கல் காரணமாக கிராமங்களில் இருந்து மக்கள் நகரங்களை நோக்கி பெரும் எண்ணிக்கையில் இடம்பெயர்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, நகரமயமாக்கல் பெரும் பாய்ச்சல் எடுக்கும் வரை, புற்றீசல்போல தனியார் பள்ளிகள் பகுதிக்குப் பகுதி முளைக்காத வரை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது ஆறு வயதாகத்தான் இருந்தது. அப்போதெல்லாம் பிறப்புச் சான்று என்பது அதிகம் புழக்கத்தில் இல்லை. பள்ளிகளில் சேர்க்கைக்கு பிறப்புச் சான்று  கட்டாயம் என்பதும் இல்லை. 


அதனால், ஆறு வயதாக இரண்டு-மூன்று மாதங்கள் மட்டுமே இருந்தால் ஆறு வயதாகிவிட்டது என்று கூறி தங்கள் குழந்தைகளைப் பெற்றோர்கள் பள்ளிகளில் சேர்த்துவிடுவார்கள்.


காலப்போக்கில் வாழ்க்கை வசதிக்காக கணவன்-மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தனிக்குடித்தனம் செல்லும் மனநிலை காரணமாக தம்பதிகள் தனியாக வசிக்கத் தொடங்கினர். குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஆள்கள் இல்லாததால், உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதுபோல, இரண்டு வயதிலேயே குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போக்கு அதிகரித்தது.


இதனால் சிறு வயதிலேயே பள்ளி, சிறிது காலம் ஆன பின்பு படிப்பில் போட்டி, அதன் பின்னர் வேலை, வேலை பளு, திருமணம் என அடுத்தடுத்து பரபரப்பான வாழ்க்கையாக நகர (நரக) வாழ்க்கை ஆகிவிட்டது. குழந்தைப் பருவத்திற்கேயுரிய மகிழ்ச்சி என்பது கானல் நீராகிவிட்டது. இப்போது நடைமுறையில் உள்ள 10 + 2 என்பதில் எத்தனை வயதில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது வரையறுக்கப்படவில்லை.


இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், 2020-இல் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கையில் 5+3+3+2 என்ற முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் 5 ஆண்டுகளில் முதல் மூன்று ஆண்டுகள் மழலையர் கல்வி என கூறப்பட்டுள்ளது. இதற்காக, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு என நான்கு கட்ட தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சகம் உருவாக்க உள்ளது. அதில் முதல் பாடத்திட்ட கட்டமைப்பை 2022 அக்டோபரில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது.


முதல் மூன்று ஆண்டுகள் குழந்தைகளுக்கு அங்கன்வாடி, அரசுப் பள்ளிகளில் கற்பிப்பதற்காக 13 மொழிகளில் "ஜாதுய் பிடாரா' (மேஜிக் பாக்ஸ் - மந்திரப் பெட்டி) என்ற கற்றல் உபகரணத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த திங்கள்கிழமை (பிப்ரவரி 20) அறிமுகப்படுத்தி உள்ளார்.


இதில் விளையாட்டுகள் அடங்கிய புத்தகம், புதிர்கள், பொம்மைகள், பொம்மலாட்டம், குழந்தைகளுக்கான கதைகள் அடங்கிய புத்தகம், ஆசிரியர்களுக்கு கையேடு உள்ளிட்ட பலவும் இடம்பெற்றுள்ளன.


அத்துடன் குழந்தைகளின் அடிப்படைக் கல்விக்கு தகுதிவாய்ந்த உரிய பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேவை என்பதால், இதற்கென இரண்டு ஆண்டு பட்டயப் படிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த பட்டயப் படிப்பு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் (எஸ்சிஇஆர்டி) வடிவமைக்கப்பட்டு, அதன் கண்காணிப்பின் கீழ் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களால் நடத்தப்படும்.


மாறிவிட்ட சூழலில், குழந்தைகளை சிறு வயதிலேயே பள்ளிக்கு அனுப்புவது என்பது தவிர்க்க இயலாததாகிவிட்டது. இந்த நிலையில், அவர்களுக்கு கற்றல் என்பது இனிய அனுபவமாக இருக்க இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வரவேற்கத்தக்கதாகும். இதுபோன்ற திட்டங்கள் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் சாத்தியப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.