பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 01.03.2023
School Morning Prayer Activities - 01.03.2023
School Calendar - March 2023
மார்ச் - 2023 நாட்காட்டி:
RL LIST:
💥4.3.23-அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள்
💥6.3.23-மாசிமகம்
💥7.3.23-ஷாபே பரஆஅத்
💥24.3.23-இரமலான் நோன்பு தொடக்கம்
அரசு விடுமுறை நாட்கள்:
🌷22.3.23-தெலுங்கு புத்தாண்டு
CRC & TEAM VISIT DAYS:
👉04-03-2023 -- சனி --CRC ( மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் தவிர)
👉04-03-2023 --சனி --மண்டல ஆய்வு -- மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் பள்ளி முழு வேலை நாள்.
👉11-03-2023 -- சனி -- மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு CRC ( மாறுதலுக்கு உட்பட்டது)
👉13-03-2023 -- திங்கள் -- மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டப் பள்ளிகளுக்கு ஈடு செய்யும் பொது விடுமுறை.
Click here for latest Kalvi News
ரூ.200 கோடியில் மாநகராட்சி பள்ளிகள் டிஜிட்டல்மயம்
சென்னை மாநகராட்சி பள்ளிகளை ரூ.200 கோடி மதிப்பில் தனியார்நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் நிதி பங்களிப்பில் டிஜிட்டல்மயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாநகராட்சி பள்ளிகளில் 98 ஆயிரத்து 633 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 3 ஆயிரத்து 13 ஆசியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனியார் பள்ளிகளுக்கு நிகராக சென்னை மாநகராட்சி பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளில் டிஜிட்டல் முறையிலான வள வகுப்பறைகள் அமைத்தல், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கற்கும் முறை, நிர்பயா திட்டத்தின்கீழ் பெண்களுக்கான கழிப்பறைகள் அமைத்தல் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் நிறுவுதல் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் ஆகியவை இணைந்து “மாநகராட்சி பள்ளிகளில் முழுமையான மாற்றம்” என்றஅடிப்படையில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு, கற்பித்தல் முறை, ஆசிரியர்களின் பயிற்சி, விளையாட்டு மற்றும் இதர வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இது மாநகராட்சி பள்ளிகளை பல பரிமாணங்களில் முழுமையாக மாற்றும் முயற்சியாகும்.
இப்பள்ளிகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்திட சிட்டிஸ் (CITIIS), நமக்கு நாமே திட்டம், ஸ்மார்ட் சிட்டி, சிங்கார சென்னை 2.0 மற்றும் நிர்பயா திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின்கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ் (CSR Fund) பள்ளிகளில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உறுதுணையாக உள்ளன.
இப்பணிகளின் தொடர்ச்சியாக, மாநகராட்சியின் 10 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வகுப்பறைகளில் ஸ்மார்ட் போர்டு,ஆசிரியர்களுக்கு மடிக்கணினி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய மேசைகள், ஒரு ஆண்டு்க்கு இணைய வசதி, வண்ணமயமான ஓவியத்துடன் கூடிய வகுப்பறைகள் ஆகியவற்றை ரூ.56 லட்சத்து 60 ஆயிரம் செலவில் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இப்பணிகளுக்கு ‘டோரண்ட் கேஸ் சென்னை பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் “நமக்குநாமே” திட்டத்தின்கீழ் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியில் ரூ.28 லட்சத்து 87 ஆயிரம் வழங்கியுள்ளது. சென்னையின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் நிதி பங்களிப்புடன் சுமார் ரூ.200 கோடியில் மாநகராட்சிப் பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன.
மாநகராட்சியில் பெருநிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு நிதியுடன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பள்ளி உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளலாம். விருப்பம் உள்ள நிறுவனங்கள் அல்லது பொதுமக்கள், வட்டார துணை ஆணையர்கள் மற்றும் மண்டல அலுவலர்களை தொடர்புகொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கேட்டுகொண்டுள்ளார்.
- எஸ்.கார்த்திகேயன்
Palli Parvai App - எப்போதும் தயார் நிலையில் ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.
பள்ளி பார்வை செயலி
தற்போது TNSED Administrators என்ற செயலியில் பள்ளி பார்வை என்ற option மூலம் வகுப்பறை உற்றுநோக்கல் (BRT, DC, DI, BEO, PA, DEEO, CEO, JD, Director வரை) செய்யப்பட உள்ளது. இது சார்ந்த தகவல்கள்.
🔹மேற்கண்ட செயலியில் எந்ததெந்த பள்ளிகள் பார்வையிட வேண்டும் என்ற பட்டியல் வரும்.
🔹பட்டியலில் வரும் பள்ளிக்கு பார்வையிடுபவர் சென்று மேற்கண்ட செயலியில் பார்வையிட வேண்டிய வகுப்பை தேர்வு செய்வார்.
🔹வகுப்பறையில் ஆயத்தப்படுத்துதலிலிருந்து பாடவேளை முடியும் வரை (45 நிமிடம்) முழுமையாக கவனித்து பார்வையிட வேண்டும்.
🔹TLM கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.
🔹ஆசிரியரின் வகுப்பறை கற்பித்தல் எப்படி உள்ளது என்பதை செயலியில் வரும் கேள்விகளுக்கு பார்வையிடும் அலுவலர் டிக் செய்ய வேண்டும்.
🔹4 line, 2 line, drawing note, maths graph, geometry, subject note இவற்றை ஆசிரியர் கடைசியாக திருத்தப்பட்ட தேதியை செயலியில் பதிவு செய்ய வேண்டும்.
🔹வகுப்பறை கால அட்டவணையில் நூலகத்திற்கு ஒரு பாடவேளை ஒதுக்கி இருக்க வேண்டும்.
🔹நூலக புத்தகம் மாணவர்கள் பையிலிருந்து எடுத்து கொடுக்க வேண்டும். புத்தகத்தில் உள்ள கதை, கருத்துகள் கூற தெரிந்திருக்க வேண்டும். கதை, கருத்துகள் இவற்றை ஏதாவது Activity மூலம் வெளிப்படுத்த வேண்டும்.
🔹வகுப்பறையில் அனைத்து மாணவர்கள் பங்கேற்பு இருக்க வேண்டும்.
🔹எனவே எப்போதும் தயார் நிலையில் ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.
குழந்தைகளின் பள்ளி சேர்க்கைக்கான வயது மாற்றம் குறித்த தலையங்கம்
ஒன்றாம் வகுப்பில் குழந்தையைச் சேர்ப்பதற்கான வயது இப்போது நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை. உதாரணத்துக்கு, தமிழகம், புதுதில்லி, ராஜஸ்தான், ஒடிஸô, ஆந்திர பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஐந்து வயது நிறைவடைந்தவர்கள் ஒன்றாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆனால், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் மாணவர் சேர்க்கைக்கான வயது ஆறாக உள்ளது. கர்நாடகம், கோவா போன்ற மாநிலங்களில் 5 வயது 10 மாதம் நிறைவடைந்தவர்கள் முதல் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பில் ஆறு வயது நிறைவடைந்தவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும் என்று அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. அதற்கு முன் சேர்ப்பதனால், குழந்தைகளின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதுடன், உளவியல் ரீதியாகவும் பாதிப்பு ஏற்படக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளை சீக்கிரமாக பள்ளிகளில் சேர்ப்பதன் மூலம் அவர்களது பணிக்காலத்தை நீட்டிக்க முடியும் என்கிற தவறான கருத்து நிலவுகிறது. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆறு வயது நிறைவடைந்தவர்கள்தான் ஒன்றாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டதை எதிர்த்து பெற்றோர்களில் சிலர் உச்சநீதிமன்றத்தை நாடினர்.
"குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் அதீத ஆர்வம் காட்டுகின்றனர். இரண்டு வயதிலேயே தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று பெற்றோர் விரும்புகின்றனர். இதனால் மனரீதியாக குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும்' என்று இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கெüல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு குறிப்பிட்டது கவனத்தில் கொள்ளத்தக்கது. பின்னர், அந்த அமர்வு இந்த மனுக்களை தள்ளுபடி செய்தது.
நகரமயமாக்கல் காரணமாக கிராமங்களில் இருந்து மக்கள் நகரங்களை நோக்கி பெரும் எண்ணிக்கையில் இடம்பெயர்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, நகரமயமாக்கல் பெரும் பாய்ச்சல் எடுக்கும் வரை, புற்றீசல்போல தனியார் பள்ளிகள் பகுதிக்குப் பகுதி முளைக்காத வரை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது ஆறு வயதாகத்தான் இருந்தது. அப்போதெல்லாம் பிறப்புச் சான்று என்பது அதிகம் புழக்கத்தில் இல்லை. பள்ளிகளில் சேர்க்கைக்கு பிறப்புச் சான்று கட்டாயம் என்பதும் இல்லை.
அதனால், ஆறு வயதாக இரண்டு-மூன்று மாதங்கள் மட்டுமே இருந்தால் ஆறு வயதாகிவிட்டது என்று கூறி தங்கள் குழந்தைகளைப் பெற்றோர்கள் பள்ளிகளில் சேர்த்துவிடுவார்கள்.
காலப்போக்கில் வாழ்க்கை வசதிக்காக கணவன்-மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தனிக்குடித்தனம் செல்லும் மனநிலை காரணமாக தம்பதிகள் தனியாக வசிக்கத் தொடங்கினர். குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஆள்கள் இல்லாததால், உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதுபோல, இரண்டு வயதிலேயே குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போக்கு அதிகரித்தது.
இதனால் சிறு வயதிலேயே பள்ளி, சிறிது காலம் ஆன பின்பு படிப்பில் போட்டி, அதன் பின்னர் வேலை, வேலை பளு, திருமணம் என அடுத்தடுத்து பரபரப்பான வாழ்க்கையாக நகர (நரக) வாழ்க்கை ஆகிவிட்டது. குழந்தைப் பருவத்திற்கேயுரிய மகிழ்ச்சி என்பது கானல் நீராகிவிட்டது. இப்போது நடைமுறையில் உள்ள 10 + 2 என்பதில் எத்தனை வயதில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது வரையறுக்கப்படவில்லை.
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், 2020-இல் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கையில் 5+3+3+2 என்ற முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் 5 ஆண்டுகளில் முதல் மூன்று ஆண்டுகள் மழலையர் கல்வி என கூறப்பட்டுள்ளது. இதற்காக, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு என நான்கு கட்ட தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சகம் உருவாக்க உள்ளது. அதில் முதல் பாடத்திட்ட கட்டமைப்பை 2022 அக்டோபரில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது.
முதல் மூன்று ஆண்டுகள் குழந்தைகளுக்கு அங்கன்வாடி, அரசுப் பள்ளிகளில் கற்பிப்பதற்காக 13 மொழிகளில் "ஜாதுய் பிடாரா' (மேஜிக் பாக்ஸ் - மந்திரப் பெட்டி) என்ற கற்றல் உபகரணத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த திங்கள்கிழமை (பிப்ரவரி 20) அறிமுகப்படுத்தி உள்ளார்.
இதில் விளையாட்டுகள் அடங்கிய புத்தகம், புதிர்கள், பொம்மைகள், பொம்மலாட்டம், குழந்தைகளுக்கான கதைகள் அடங்கிய புத்தகம், ஆசிரியர்களுக்கு கையேடு உள்ளிட்ட பலவும் இடம்பெற்றுள்ளன.
அத்துடன் குழந்தைகளின் அடிப்படைக் கல்விக்கு தகுதிவாய்ந்த உரிய பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேவை என்பதால், இதற்கென இரண்டு ஆண்டு பட்டயப் படிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த பட்டயப் படிப்பு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் (எஸ்சிஇஆர்டி) வடிவமைக்கப்பட்டு, அதன் கண்காணிப்பின் கீழ் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களால் நடத்தப்படும்.
மாறிவிட்ட சூழலில், குழந்தைகளை சிறு வயதிலேயே பள்ளிக்கு அனுப்புவது என்பது தவிர்க்க இயலாததாகிவிட்டது. இந்த நிலையில், அவர்களுக்கு கற்றல் என்பது இனிய அனுபவமாக இருக்க இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வரவேற்கத்தக்கதாகும். இதுபோன்ற திட்டங்கள் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் சாத்தியப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.02.2023
திருக்குறள் :
குறள் : 135
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
பொருள்:
பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது
பழமொழி :
It is no use crying over split milk
முடிந்த காரியத்தை நினைத்து பயன் இல்லை
இரண்டொழுக்க பண்புகள் :
1. மழை காலத்திற்கு என்று உணவை சேமிக்கும் எறும்பை போல மாணவ பருவத்திலேயே சேமிக்க பழகுவேன்.
2. கனி தரும் மரங்கள் போல மற்றவர்க்கு எப்போதும் பயன் தர முயற்சிப்பேன்.
பொன்மொழி :
மணிக்கணக்கில் உபதேசம் செய்வதை விட.. ஒரு கணப் பொழுதாவது உதவி செய்வது மேல்.
பொது அறிவு :
1. தொலைநோக்கியை கண்டுபிடித்தவர் யார்?
கலிலியோ.
2. நீர்ம நிலையில் உள்ள உலோகம் எது?
பாதரசம்.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
தூக்கமானது சரியான நேரத்தில், சரியான அளவில் நமக்கு தினந்தோறும் கிடைக்குமேயானால், உங்களின் மூளையும் சிறந்து விளங்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
தூக்கம் குறித்த புதிய ஆய்வில், வழக்கமாக நாம் எப்போதும் பிற்பகலில் சிறிது நேரம் தூங்குவதால் நமது மூளையை கூர்மையாகவும், விழிப்புணர்வுடனும் வைத்திருக்க முடியும் என தெரிய வந்துள்ளது. பிற்பகல் தூக்கம் சோம்பேறித்தனம் என்று தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பகலில் தூங்கினால் மூளையின் ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பு அதிகரிக்கிறது என்பது உண்மை தான்.
பிப்ரவரி 28
தேசிய அறிவியல் நாள் (National Science Day) இந்தியாவில் பெப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 - ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது.இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.[3]
சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.
நீதிக்கதை
இன்றைய செய்திகள்
வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு
வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க விரும்புவோருக்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 3ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவில், தொழலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் ஓய்வூதியம் பெறுவோருக்கு அதிகபட்ச ஓய்வூதியம் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதற்கு மக்களுக்கு நான்கு மாதங்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, நான்கு மாத கால அவகாசம் மார்ச் 3ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்த நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் இணையதளத்தில், அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 3ஆம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் இந்த அதிக ஓய்வூதியம் பெற தகுதிபெறுவார்கள்?
ஊழியர்கள் மற்றும் முதலாளிகளில், ஊதிய உச்சவரம்பு ரூ 5,000 அல்லது ரூ 6,500 ஐ விட அதிகமாக சம்பளத்திலிருந்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிப்பு செய்தவர்கள்.
வருங்கால வைப்பு நிதி உறுப்பினராக இருந்த போது ஊழியர் மற்றும் முதலாளிகளில் கூட்டு இணைப்பினை பயன்படுத்தாதவர்கள்.
செப்டம்பர் 1, 2014 க்கு முன்பு உறுப்பினர்களாக இருந்த ஊழியர்கள் மற்றும் அந்த தேதியில் அல்லது அதற்குப் பிறகு தொடர்ந்து உறுப்பினர்களாக இருந்தவர்கள் இந்த புதிய திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களாவர்.
அதாவது, ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் இருந்து 12 சதவீதம் தொழிலாளர் சேமநல நிதியாகப் பிடிக்கப்படும். தனியார் நிறுவனங்களில் இதே தொகை ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் என இரு தரப்பினரிடமிருந்தும் பிடிக்கப்படும். இதில் தொழில் நிறுவனங்கள் அளிக்கும் 12 சதவிகிதத்தில் 8.33 சதவிகிதம் தொழிலாளரின் குடும்ப ஓய்வூதியத்துக்காக எடுத்துக் கொள்ளப்படும். ஊழயர்களின் பங்கான 12 சதவிகிதம் மற்றும் தொழில் நிறுவனங்களின் 3.5 சதவிகிதம் சேர்ந்து தொழிலாளர் சேமநல நிதிக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு 8.65 சதவிகிதம் வட்டி தரப்படும்.
இநத் திட்டத்தின் கீழ் பயன்பெறவதற்கான குறைந்தபட்ச ஊதியத் தொகை ரூ.6500ல் இருந்து ரூ.15,000 ஆக கடந்த 2014ல் உயர்த்தப்பட்டது.
மேலும், அடிப்படை ஊதியம் 15 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக பெறும் தொழிலாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள், ஊதிய உச்சவரம்பின்றி, முழு தொகைக்கும் சேர்த்து 8.33 சதவிகித ஓய்வூதியம் செலுத்தலாம். அதாவது ஒருவர் 40 ஆயிரம் ரூபாய் ஊதியமாக பெற்றாலும், 15 ஆயிரம் என்ற வரம்பின்றி, முழு ஊதியத்தையும் கணக்கெடுத்து 8.33 சதவிகிதத்தை ஓய்வூதியத்துக்கு பங்களிக்கலாம்.
எனவே, புதிய அறிவிப்பின்படி, அதிகபட்ச ஓய்வூதியம் பெற பணியாளர்களும், தொழில் நிறுவனங்களும் கூட்டாக விண்ணப்பிக்க அனுமதிக்கும் புதிய நடைமுறை, இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு வேளை, 2014ஆம் ஆண்டு செப்டம்பருக்கு முன்பே அதிக ஊதியம் பெற்றவராக இருந்து, ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்து அதை தொழிலாளவர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நிராகரித்திருந்தால் அவர்கள் மே 3ஆம் தேதிக்குள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
2014ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதிக்கு முன்னர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் சேர்ந்தவர்கள், தற்போது பணியில் இருந்து அதிக ஓய்வூதிய வசதியை பெறாமல் இருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஒருவேளை இவர்களின் விண்ணப்பங்கள் முன்பு நிராகரிக்கப்பட்டிருந்தாலும் கூட மீண்டும் விண்ணப்பிக்கலாம்.